Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காத்திருந்தேனடி உனது காதலுக்காக!!-14

Advertisement

Miloni

Active member
Member
வீட்டிற்கு வந்து அம்மா கைகளில் அந்த சேலையை கொடுத்தபோது ரொம்பவும் அழகாக இருக்கிறது ஏதுடி எனக் கேட்டாள்.. நிரஞ்சனா நாளை வீட்டிற்கு வரும்போது கட்டி வர சொல்லி கொடுத்தாளாம் அம்மா என்றாள்..

அப்படியா அவளுக்கு நன்றி சொல்லுடி எவ்வளவு அழகான சேலை உண்மையிலேயே அவள் ரசனை உள்ளவள் தான் எனவும் மிதுவை நினைத்து சைதன்யாவிற்கு பெருமையாக இருந்தது..

அதற்கு ஏற்றார்போல் பிளவுஸ் தோடு எடுத்து வைத்தாள்.. மறுநாள் குளித்து முடித்து அம்மா உதவியுடன் அந்த சேலையை கட்டியபோது அவளுக்கே அவளது முகம் வித்தியாசமாக தெரிந்தது..

அவளைப் பார்த்த அவளது பெற்றோருக்கும் பூரிப்பு தான் அருணா அவள் கண்ணம் தொட்டு நெட்டி முறித்தாள்..

எவ்வளவு அழகாய் இருக்கிறாய் என் தங்கம் உனக்கேற்ற ராஜகுமாரன் சீக்கிரம் உன்னைத்தேடி வர வேண்டும் என சொன்ன அருணா அவளது கழுத்தை பார்த்துவிட்டு என்னடி ஒரு செயின் மட்டும் போட்டிருக்கிறாய் இதை போடு என நகைகளை எடுத்துக் கொண்டு வர அவளிடம் இருந்து தப்பிக்க சைதன்யா போராட வேண்டியிருந்தது..

அம்மா எனக்கு இதுவே போதும்மா நான் என்ன கல்யாணத்திற்காக செல்கிறேன்.. ஆமாம் யார் கல்யாணத்திற்கு கூப்பிட்டாலும் நீ வந்துட்டு தான் மறுவேலை பார்ப்பாய் அப்புறம் எப்போது தாண்டி இதெல்லாம் போடப் போகிறாய் உனக்காக பார்த்து பார்த்து வாங்கியது ஆனால் அப்படியே இருக்கிறது..

உன்னுடைய எம்டி வீட்டுக்கு போகப் போகிறாய் அவர்கள் எல்லாம் பெரிய ஆட்கள் இதுபோல எல்லாம் போட்டு போனால் தானே கொஞ்சம் கௌரவமாக இருக்கும்.. அம்மா நமக்காக நம்மை மதித்தால் போதும் இதற்காகவெல்லாம் என்னை யாரும் மதிக்க வேண்டாம் எனக்கு இது தான் பிடித்திருக்கிறது சும்மா தொல்லை பண்ணாதீர்கள்..

கதிரேசன் அவளை அவள் விருப்பத்திற்கு விடு என அதட்டவும் தான் அருணா வாயை மூடினார் அதோடு மகள் இதிலேயே தேவதை போல் இருக்கலாம் அவரும் விட்டுவிட்டார்..
ஆட்டோவில் ஏறி கிருஷ்டிக்கு அழைத்தாள் அவள் நேரடியாக அவர்கள் வீடு செல்லும் தெருவுக்கு வரச்சொன்னாள் அங்கு வந்து அவளையும் ஏற்றி கொண்டு அவன் வீடு போய் சேர்ந்த போது அவளின் கண்கள் சாசர் போல் தெரிந்தது..

ஏனெனில் அந்த வீடு ஜெய்ப்பூர் மாளிகை போல காட்சியளித்தது காம்பவுண்ட் முதல் ஒவ்வொரு இடத்திலும் பணக்கார களை தெரிந்தது.. அவன் பணக்காரன் என தெரியும் ஆனால் இவ்வளவு பெரிய பணக்காரன் என்று எதிர்பார்க்கவில்லை அதனை கண்முன்னால் பார்த்தபொழுது அவளுக்கு தொண்டை அடைத்தது..

தனக்கும் அவனுக்கும் உள்ள உயரம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள உயரம் என புரிந்தது.. இத்தனை நாட்களில் அவனை நேசிப்பதை அவள் உணர்ந்து தான் இருந்தாள்.. அவனும் ஒவ்வொரு செயல்களிலும் அவனை புரியவைத்தாலும் வாய்திறந்து இன்னும் சொல்லவில்லை அவர்கள் வீட்டை பார்த்தபோது சொன்னாலும் இவர்கள் ஒப்புக் கொள்வார்களா என தோன்றியது..

இனி அவனிடமிருந்து தள்ளி தான் இருக்கவேண்டும் ஆசையை வளர்த்துக் கொண்டு சுடும் என தெரிந்தும் நெருப்பில் கை வைத்த கதையாகி விடும் என தனக்குள் ஒரு முடிவெடுத்து கொண்டாள் ஆனால் முடிவு தான் மட்டும் எடுத்தால் போதாது என அவளுக்கு தெரியவில்லை..

சைதன்யாவிற்கு தோட்டம் என்றால் மிகவும் பிடிக்கும் அவர்கள் வீட்டுத் தோட்டம் அகலமாகும் அழகாகவும் சுத்தமாகவும் பராமரிக்கப்பட்டு பார்க்கவே ரம்மியமாக இருந்தது..

கிறிஸ்டி இவளின் மனநிலை புரியாமல் ஒவ்வொன்றையும் பார்த்து பிரமித்து அதனை பற்றி விளக்கிக் கொண்டு வந்தாள் தரையில் இருந்து சாண்டிலியர் விளக்கு வரை அவள் சொல்ல சொல்ல அப்போதுதான் அதனை நன்றாக கவனித்தாள்..

எல்லாம் வெளிநாட்டில் இருந்து வரவழைத்து கட்டியிருப்பார்கள் போல ஒவ்வொன்றிலும் அதன் விலையும் தரமும் நன்றாக தெரிகிறது எனக்கு சொல்லிக் கொண்டிருந்தாள்..
அவர்கள் வரவேற்பறைக்கு சென்றதும் ஒரு வேலையாள் வந்து அவர்களை விசாரித்து அவர்களின் பெயரைக் கேட்டறிந்து வரவேற்பறையில் அவர்களை அமர வைத்து விட்டு உள்ளே சென்றான்..ஆனால் மறுநிமிடமே அவர்கள் வீட்டினர் அவர்கள் இருந்த இடத்திற்கே வந்து அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்..

அவர்களிடம் கொஞ்சம்கூட பணக்காரத் திமிரோ இல்லை வேறு எதுவுமே தெரியவில்லை இவர்களை நினைத்தா பயந்தோம் என அவளுக்கு மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாக கூட இருந்தது..

தாங்கள் அவர்களிடம் வேலை பார்ப்பவர்கள் என தெரிந்தும் வாசலிலேயே வந்து அழைத்துச் சென்றது அவளுக்கு ஆச்சரியத்தை கூட தந்தது எல்லோரிடமும் முதலாளித்துவம் இல்லாமல் சாதாரணமாக பழகுவார்கள் போல என நினைத்தாள்..
அவர்கள் வீட்டு முக்கியமான விருந்தாளிகள் எல்லோரும் வந்து இருந்தார்கள் இவர்களுக்கு தான் அளவெடுக்க வேண்டும் போல என சைதன்யா மனதிற்குள் குறித்துக் கொண்டாள்..

அவர்களை சோபாவில் அமர வைத்து சுற்றிலும் அவர்களது குடும்பத்தினர் விருந்தினர்கள் அனைவரும் அமர்ந்து அவர்களையே பார்த்து தங்களுக்குள் பேசிக்கொண்டனர் சைதன்யாவிற்கும் கிறிஸ்டியனாவிற்கும் சங்கோஜமாக இருந்தது..
சொர்ணம் அவர்களுக்கெல்லாம் டீ கொண்டுவர அனைவரும் எடுத்துக் கொண்டனர்.. எல்லோரும் அவர்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர் மிதுவின் குடும்பத்தைப் பற்றி ஏற்கனவே அவளுக்கு தெரியும்..

சக்கரவர்த்திக்கு ஒரு அண்ணன் ஒரு அக்கா.. மரகதத்திற்கு ஒரு அண்ணன் ஒரு தங்கை..
சக்ரவர்த்தியின் அண்ணனுக்கு இரண்டு மகன்கள்.. அவரது அக்காவிற்கு ஒரே ஒரு மகள் பெயர் வீணா அவள் மட்டும் இன்னும் வரவில்லை..

மரகதத்தின் அண்ணனுக்கு இரண்டு மகன்கள் இரண்டாவது மகனுக்கு தான் நிரஞ்சனாவை திருமணம் செய்வதாக இருக்கிறார்கள்.. மரகதத்தின் தங்கைக்கு ஒரு மகன் ஒரு மகள்..
மிதுர்வன், நிரஞ்சனா, கண்ணன், வீணா இவர்களைத் தவிர மற்ற எல்லோருக்குமே திருமணம் முடிந்துவிட்டது..

மிதுர்வனுக்கும் கூடிய சீக்கிரம் திருமணம் முடிந்துவிடும் என நினைக்கிறோம் என சைதன்யாவை பார்த்து மரகதம் புன்னகைத்தார்.. சைதன்யாவும் கிருஷ்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்..

எங்கள் எம்டி சாருக்கு எப்போது திருமணம் பெண் கிடைத்துவிட்டதா எப்போது திருமண சாப்பாடு போடுவீர்கள் என கிறிஷ்டி பேச்சை மாற்றினாள்.. மரகதத்தின் தங்கையின் பெண் எங்கள் அண்ணனுக்கு ஏற்ற பெண் கிடைத்தால் உடனே கல்யாணம் தான் என சொல்லி சிரித்தாள்..

ஆனால் மரகதமோ உங்கள் அண்ணனுக்கு தேவதை போல் பெண் இருக்கிறது ஆனால் உங்கள் அண்ணன்தான் பிடி கொடுக்க மாட்டேன் என்கிறான்.. அவளுக்கான சர்ப்ரைஸூடன் தான் அவன் காதலை சொல்வானாம் இவன் எப்பொழுது காதலை சொல்லி எப்பொழுது கல்யாணம் செய்து நான் எப்பொழுது பேரப்பிள்ளைகளை பார்ப்பது..

என்ன அவருக்காக ஏற்கனவே பெண் இருக்கிறாளா இவர்கள் யாரை சொல்கிறார்கள் அவர் பிறகு பேசியது அவள் மனதில் நிற்கவில்லை யாராக இருக்கும் என அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள்..

இவர்கள் ஏற்கனவே பெண் பார்த்து வைத்திருக்கிறார்கள் என அவருக்கு தெரியுமா தெரிந்தாலும் இவர்களைப் போன்ற அன்பானவர்களை மீறி அவன் தன்னை ஏற்றுக் கொள்வானா அவள் யோசனையில் இருப்பதை பார்த்த சனா பேச்சை மாற்ற விரும்பினாள்..

அம்மா இப்போதைக்கு அண்ணன் திருமணம் செய்துகொள்ள ஒத்துக் கொள்ள மாட்டான் உனக்கு அந்த ஆசை இருந்தால் பேசாமல் எனக்கு வேண்டுமானால் திருமணம் செய்யுங்கள் சீக்கிரமே பேரப்பிள்ளைகளை பார்க்கலாம் எனக் கூறவும் மரகதம் அவளை முறைத்தாள்..

அவர் முறைத்ததும் தான் அவள் சொன்ன சொல்லின் அர்த்தம் புரிந்து கண்ணன் முகத்தை பார்த்தாள் அவள் அதை பேச்சை மாற்றுவதற்காக கிண்டலாக சொன்னாலேயொழிய உணர்ந்து செல்லவில்லை.. இப்போது கண்ணன் அவளை பார்த்த பார்வையில் அவளுக்கு முகம் சிவந்து போனது.. எல்லோரும் அவர்களை பார்த்து ஓவென கத்தவும் இன்னும் நன்றாக சிவந்தாள்..

சைதன்யா வாய்விட்டு சிரித்தாள் எல்லோரும் சிரிப்பும் கிண்டலுமாக பேசிக்கொண்டிருந்தபோது குறுகுறுப்பை உணர்ந்து திரும்பி பார்த்தால் வாசலில் இவளையே விழி அகலாமல் விழுங்குவதைப்போல பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தான் மிதுர்வன்..
 
Top