Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காத்திருந்தேனடி உனது காதலுக்காக!!- 18

Advertisement

Miloni

Active member
Member
வீணாவிற்கு சைதன்யாவை பார்த்து உள்ளம் கொதித்தது எவ்வளவு சிரத்தை எடுத்து அலங்காரம் செய்து காசை கொட்டி ஆடைகள் அணிந்து எதுவும் அவனை கவரவில்லை ஆனால் ஒரு அன்னக்காவடி அவனைக் கவர்ந்து விட்டாளே பொறாமைத் தீ கனன்றது..

சைதன்யா அங்கு அமர்ந்திருந்த பெண்களுடன் இணைந்து பேசிக்கொண்டிருந்தாள் வீணாவும் அவர்களுடன் அமர்ந்து கொண்டாள்..

எல்லாருடைய ஆடைகளையும் ஒருமுறை சரிபார்த்து விட்டு அவர்களிடமும் காட்டி சம்மதம் பெற்று வீணாவை பார்த்து நீங்களும் உங்கள் உடையின் டிசைனை தேர்ந்தெடுக்கிறீர்களா..

அவளை கோபமாகப் பார்த்து "என்ன" என்னைபோய் உங்களை மாதிரி கழிசடை டிசைனர்களிடம் உடை தைக்க சொல்கிறாயா நான் எப்பொழுதும் டாப் டிசைனர்களிடம் உடை தைத்து தான் பழக்கம் வெடுக்கென சொன்னாள்..

சைதன்யாவும் கிறிஸ்டியும் அவளை முறைத்து பார்க்க நிலைமையை சுமூகமாக்க பேச்சை மாற்றும் விதமாக மாலினி, மிது தம்பி லண்டனில் தான் செட்டிலாகப் போகிறார் என நினைத்தேன் ஆனால் அவர் இங்கேயே கம்பெனி ஆரம்பித்து நல்லவேளையாக நம்முடன் இங்கேயே வந்து விட்டார் அவர் அங்கேயே இருந்து விடுவாரோ என நாங்கள் ரொம்பவும் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தோம்..

ஆமாம் அக்கா அவர் இங்கு வந்தது எல்லோருக்கும் சந்தோஷம் தான் அங்கு உள்ள பிசினசை இப்போது யார் கவனித்துக் கொள்கிறார்கள் என சுதா கேட்க அவருடைய நண்பர் ஜான் தான் கவனித்துக் கொள்கிறார்..

அவ்வளவு ஆசையாக அங்கே கம்பெனி ஆரம்பித்து இங்கே ஏன் வரவேண்டும் முதலிலேயே இங்கேயோ ஆரம்பித்து இருக்கலாமே என தன் சந்தேகத்தை பல்லவி கேட்டாள்..

அதை அவர் யார் கேட்டும் சொல்லவில்லையே என மாலினி கூற உடனே வீணா குறுக்கிட்டு வேறு என்ன காரணமாக இருக்கமுடியும் அங்கே பெண்கள் சகவாசம் அதிகம் இருந்திருக்கும் அதனால் தான் மாமா யாருக்கும் தெரியாமல் பெட்டியை கட்டி உடனே வர சொல்லி இருப்பார்..

இல்லையெனில் காரணம் சொல்வதற்கு என்ன என்னுடைய லண்டன் நண்பர்கள் கூட அதையே தான் சொன்னார்கள் பார்ட்டி பப் என அத்தான் அங்கே இங்கேயென நிறைய தடவை அவர்களே பார்த்து இருக்கிறார்களாம் பெரும்பாலும் பெண்கள் கூட தான் வருவாராம்..

நான் அத்தானை திருமணம் செய்வதாக இருந்ததால் என்னை எச்சரிக்கை செய்வதற்காக சொன்னார்கள் நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை..

இங்கேயே தான் அடிக்கடி நான் பார்த்திருக்கிறேனே எல்லோரும் அத்தான் பின்னாலேயே தானே சுற்றுவார்கள் அங்கே கேட்கவா வேண்டும் மானங்கெட்ட கழுதைகள் வேறு எதற்கு எல்லாம் அத்தானுடைய சொத்துக்காக தான்..

இவர்கள் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் முதலில் வேலைக்கு வருகிற மாதிரி வந்து அப்புறம் வீட்டுக்காரி ஆகிவிடலாம் என்ற நினைப்பு ஆனால் அவர்களுடைய பாச்சாவெல்லாம் அத்தானிடம் பலிக்காது அவருக்கு ஏற்றமாதிரி பணக்கார பெண்ணை தான் அவர் திருமணம் செய்வார்..

அது தெரியாமல் விளக்கை சுற்றும் விட்டில் பூச்சி கதையாக சுற்றுகிறார்கள் என்றாவது ஒருநாள் எவளாவது அவர் என்னை ஏமாற்றி விட்டார் என்று வீட்டு வாசலில் வந்து நிற்கட்டும் அப்போது அவர்களுக்கு வைத்துக் கொள்கிறேன்..

கடைசி வரியை மட்டும் சைதன்யா காதில் விழுகிற மாதிரி அழுத்தி சொன்னாள்..

அவள் சொன்னதை யாரும் ஒத்துக்கொண்டது மாதிரியும் தெரியவில்லை அனைத்தையும் தவறு என்றும் சொல்லவில்லை இந்த பேச்சு பிடிக்காததற்கு அறிகுறியாக எல்லோரும் முகத்தை மட்டும் சுருக்கினார்கள்..

அதை வீணாவும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் ஆனால் அதற்கெல்லாம் அவள் கவலைப்படவில்லை அதை கண்டுகொள்ளாமல் வேண்டுமென்றே தான் சொல்லிக்கொண்டிருந்தாள்..

அவளுக்கு தேவை சைதன்யாவின் ரியாக்சன் அவள் முகம் மாறிய விதத்தில் அவளுக்கு திருப்தி தான்..

சைதன்யாவிற்கு அவள் சொல்வதில் எல்லாம் உண்மை இல்லை என்றாலும் ஏதோ ஒரு சில உண்மைகள் இருக்கிறது என மட்டும் புரிந்தது..

அவள் அவனைப் பற்றி சொன்ன விதத்தில் ஒரு சிறு நெருடல் அவள் மனதில் தோன்றியது நினைத்த மாத்திரத்தில் அவள் முகம் கலங்கியது..

தூரத்திலிருந்து சைதன்யாவின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்த மரகதத்திற்கு அவர்கள் பேசுவது காதில் விழவில்லை என்றாலும் வீணா ஏதோ அவளை குழப்பி இருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது..

அவர் வந்து அனைவரையும் பூஜை தாம்புலம் வாங்கிக் கொள்ளுமாறு அழைத்தார் எல்லோரும் எழுந்து பூஜை அறைக்கு சென்றார்கள்..

வீணாவை பார்த்து விட்டு வேண்டுமென்றே மரகதம் சைதன்யாவை அழைத்து எல்லோருக்கும் தாம்பூலப்பை கொடுக்குமாறு கூற அவள் தயங்கினாள்..

வீணாவோ என்ன அத்தை நம் குடும்பத்தினர் தானே இதையெல்லாம் செய்ய வேண்டும்..

அதற்கு என்ன வீணா சைதன்யாவும் நம் குடும்பத்தில் ஒருத்திதான் எனவும் வீணா முகம் கடுத்தாள்..

அத்தை சரியான ஆள் தான் நான் முன்பு குடும்ப பூஜையில் வெளியாள் எதற்கு என அவளைப்பார்த்து கேட்டதற்கு அப்போது பதில் சொல்லாமல் இப்போது செய்து காட்டுகிறார் இருக்கட்டும் இந்த வீட்டிற்கு மருமகளாக வந்த பின் கிழவியை ஓட ஓட விரட்டுகிறேன்..

மரகதத்தின் பதிலில் மிதுர்வனுக்கு முகத்தில் இளநகை வந்தது சைதன்யாவை பார்க்க அதற்கு மேல் தயங்காது தாம்பூலப்பையை எல்லோருக்கும் எடுத்து கொடுத்தாள்..

அந்த தாம்பூலப் பையில் எல்லோருக்கும் ஆளுக்கு ஒரு புடவை வைத்திருந்தார்கள்..

கடைசியில் மரகதம் இவளுக்கும் கிறிஸ்டிக்கும் தாம்புலப்பையுடன் புடவையும் கொடுத்தார்..

இருவரும் தயக்கமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

மரகதம் ரொம்ப வற்புறுத்தவும் இருவரும் ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் கொண்டனர்..

வீணாவிற்கு தான் இதையெல்லாம் பார்க்க எரிச்சலாக வந்தது ஆனால் எதுவும் பேச முடியாதே..

மித்து அத்தான் சில விஷயங்களை விட்டுக் கொடுத்தாலும் வீட்டினர் யாரையும் அவமானப்படுத்தினால் சீறி எழுந்து விடுவான்..

சைதன்யாவைப்பற்றி வீட்டில் என்ன சொல்லி வைத்திருந்தானோ எல்லோரும் அவளை தாங்கு தாங்கென்று தங்குகிறார்கள் ஆனால் அந்த மட்டிக்கு அது புரியாமல் பேந்த பேந்த விழிக்கிறது..

இதுவும் நல்லதுக்குதான் என வன்மமாக புன்னகைத்துக் கொண்டாள்..

எல்லோரிடமும் அவர்கள் விடைபெற்று வெளியில் கிளம்பும்போது மரகதம் அவளிடம் எப்படி போவீர்கள் இருங்கள் மிதுவை கொண்டு வந்து விட சொல்கிறேன் என அவனை கண்காட்டி அழைத்தார்..

அவனிடம் அவர்களை அழைத்துச் சென்று விடுமாறு சொன்னபோது அவனும் பிகு பண்ணாமல் உடனே கிளம்பினான்..

எல்லோரிடமும் விடைபெற்று காரில் முன்புறம் மிது ஏற அவர்கள் இருவரும் பின்புறம் ஏறிக் கொண்டார்கள்..

முதலில் கிறிஸ்டியின் வீட்டில் அவளை இறக்கி விட்டு கிளம்ப கிறிஸ்டி அவனுக்கு நன்றி சொன்னாள்..

ஒரு தலையசைப்புடன் கிளம்பியவன் சிறிது தூரம் சென்று காரை ஒரு ஓரமாக நிறுத்தினான்..

ஏதோ யோசனையிலேயே வந்த சைதன்யா கார் நிற்பதை பார்க்கவும் என்னவென்று புரியாமல் அவனை பார்த்தாள்..
 
யப்பா அது என்ன வீணாவுக்கு இருப்பது வாயா? இல்லை சுண்ணாம்பு காளவாயா?
இந்த பொசுக்கு பொசுக்குகிறாள்
அடேய் மிது
இப்போ எதுக்கு காரை நிறுத்தினாய்?
லவ்ஸ் டைலாக்ஸ் ஸ்டார்ட்டிங்கா?
 
யப்பா அது என்ன வீணாவுக்கு இருப்பது வாயா? இல்லை சுண்ணாம்பு காளவாயா?
இந்த பொசுக்கு பொசுக்குகிறாள்
அடேய் மிது
இப்போ எதுக்கு காரை நிறுத்தினாய்?
லவ்ஸ் டைலாக்ஸ் ஸ்டார்ட்டிங்கா?
கொஞ்சம் கொஞ்சம்..
 
Top