Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 11

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம் - 11

பிரதாப்பும், அசோக்கும், பெற்றவர்களாக நடிப்பதற்கு பெரியவர்களை ஏற்பாடு செய்து விட்டு வாசுவுடன் ஒரு ரெஸ்டாரண்டுக்கு சென்றனர்.அங்கு உணவு வகைகளை ஆர்டர் செய்து விட்டு பிரதாப் வாசுவை பார்த்து பேச ஆரப்பிப்பதற்கு முன்பே ….

வாசு “ஆமா....நீங்க என்ன தாண்ட நினைச்சிட்டு இருக்கீங்க. நீங்க சென்னை வந்ததே எனக்கு தெரியாது. சரி வந்தது தான் சொல்லலே… ஒரு விஷயத்தை நீங்களா பிளான் போடுவீங்க அதை பத்தி என் கிட்டே ஒன்னும் சொல்ல மாட்டிங்க…திடீர் என்று அசோக் எனக்கு மெசஜ் அனுப்புறான் என்ன வென்று?என் ஒட்டலை நீங்க விலைபேசிட்டு இருக்கிறதாய் யார் கேட்டாலும் சொல்லணும் என்று……”

வாசுவின் பேச்சை முடிப்பதற்குள் இடையில் அவன் பேச்சை நிறுத்திய அசோக் “இப்போ வந்துட்டு அவன் செயல் உனக்கு புரியலேன்னு சொல்ற. அவன் கூடவே இருக்க எனக்கே சில சமயம் அவன் என்ன செய்கிறான் என்று புரிய வில்லை.”என்று அசோக் கூறியதற்கு…

வாசு… “இதை என்ன நம்ப சொல்ற ...அவன் கொடுக்கு தானே நீ… உனக்கு தெரியாம அவன் இது வரை ஏதாவது செய்திருக்கானா…?” அவன் ஆதங்கத்தை கொட்டினான். ஆம் பிரதாப்,அசோக், வாசு, மூன்று பேரும் காலேஜில் ஒன்றாக தான் படித்தார்கள். பிரதாப் அசோக்கிடம் காட்டிய நெருக்கத்தை வாசுவிடம் காட்டியது இல்லை. ஏன் வேறு யாரிடமும் தேவைக்கு அதிகமாக பிரதாப் பேசமாட்டான்.பிறகு தான் தெரிந்துக் கொண்டான் அசோக் பிரதாப்பின் சிறு வயது முதலே பிரண்ட் என்று அதுவும் அசோக் அவன் வீட்டின் கார் டிரைவர் மகன் என்று கேள்வி பட்டதும் அவனுக்கு வியப்பாக இருந்தது.

ஏன் என்றால் அவன் தந்தையும் பிரதாப்பின் தந்தையும், ஒரே பிஸினஸ் லைனில் இருப்பதால் பிரதாப்பின் உயரம் வாசுவுக்கு நன்கு தெரியும். அப்படி உயரத்தில் இருப்பவன் தன் கார் டிரைவரின் மகனுடன் அவ்வளவு தோழமையுடன் இருந்தது...அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

ஏன் தானே தன் தகுத்திக்கு ஏற்றவாறு தான் பழகுவான். இதற்கும் பிரதாப்பின் தகுதிக்கு தான் பாதி அளவு கூட இல்லை என்று அவனுக்கே நன்கு தெரியும். ஏன் முதலில் தகுதி அடிப்படையிலும்,காலேஜில் அனைத்து பெண்களும் பிரதாப்பிடம் பேச முற்ப்பட்டதிலும் தான் அவனே பிரதாப்பின் தோழமையை வலிய சென்று இவனே ஏற்படுத்திக் கொள்ள முனைந்தான்.

மேலும் பிரதாப்பின் இந்த நடவடிக்கையும் சேர்ந்துக் கொள்ள வாசுவுக்கு பிரதாப்பின் மேல் ஒரு ஹீரோ வொர்ஷீப்பே வந்து விட்டது. பாவம் அவனுக்கு தெரியாதது என்ன வென்றால் அசோக்கிடம் மட்டும் தான் பிரதாப் ஏற்ற தாழ்வு பாறாது பழகுவது.மற்ற படி ஸ்டேட்டஸை மெயிண்டென் பண்ணுவதில் வாசுவை விட அவன் பார்ப்பான் என்பது.

அந்த காராணத்துக்காகவும் தான் வாசு வலிய வந்து பேசியும்…. பிரதாப் ஒரு இடைவெளி விட்டே பழகியது. வாசுவிடம் அசோக் பேச போய் தான் இவனும் சிறிது பேசினான். இதை ஏதும் அறியாத வாசு பிரதாப்பிடம் நட்பு ஏற்படுத்திக் கொள்ள, அவனே….. தான் பிரதாப்பிடம் வலிய சென்று பேசினான்.அப்போது கூட பிரதாப் அளந்து தான் பேசுவான்.பிரதாப்பின் மிக நெருங்கிய பிரண்டுனா அது அசோக் மட்டும் தான்.

அசோக் தன்னிடம் கொஞ்சம் அதிகம் பேசியதால் தான் பிரதாப்பும் தன்னிடம் ஒன்று, இரண்டு வார்த்தை அதிகமாக பேச ஆராம்பித்திருந்தான்.அந்த ஆதங்கத்தை தான் இப்போது அசோக்கிடம் கொட்டினான்.

அசோக்குக்கு வாசுவை பற்றி நன்கு தெரியும். அதனால் தான் காலேஜிலேயே வாசுவிடம் தான் பேசி…. பிரதாப்பையும் கொஞ்சம் பேச வைத்திருந்தான்.அதனால் இப்போது வாசு பேசுவதை ஒரு புன் சிரிப்புடன் கேட்டுக் கொண்டான்.

பின் பிரதாப்பும் சிரித்துக் கொண்டே வாசுவிடம்” இப்போது எங்களுக்குள் பிரண்ஷிப்போடு வேறு ஒன்றும் ஓடுகிறது. அது உனக்கு தெரியுமா…?”என்ற பிரதாப்பின் பேச்சில் அசோக் பாய்ந்து வந்து அவன் வாயை தன் கைய்யால் மூடினான்.

அசோக்கின் முகம் விளக்கெண்ணை குடித்தது போல் ஆகி விட்டது. “என்னை சென்னை விட்டு கிளம்புவதற்குள் ஒரு வழி ஆக்காமல் விட மாட்டேன் என்று கங்கணம் ஏதாவது கட்டிக் கொண்டிருக்காயா…?

வாசு இவர்களின் பேச்சை அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தான்.அசோக்கோடு மட்டும் தான் பிரதாப் பேசுவான் என்றாலும்… இப்படி அரட்டை அடித்து எல்லாம் பார்த்தது இல்லை.அதுவும் இப்படி ஒரு கேலி பேச்சை சத்தியமாக பிரதாப்பிடம் எதிர்பார்க்க வில்லை.

வாசுவின் முகபாவத்தை பார்த்தே அவனின் எண்ண போக்கை புரிந்துக் கொண்ட பிரதாப் வாசுவின் மேல் கையை போட்ட வாறு “என்ன வாசு அப்படி பார்க்கிறாய் நானும் மனித பிறவி தான்.ஏன் எனக்கு சிரிக்க தெரியாதா…இப்படி அதிசயமாக பார்க்கிறாய்…?என்று பிரதாப் புன்னையுடன் வாசுவை நோக்கினான்.

வாசு மனதிற்குள் இவனுக்கு என்னவாகி விட்டது என்ன என்னவோ பேசுகிறான். சிரிக்கிறான்… நானும் மனித பிறவி தான் என்கிறான். ஏன் முதலில் இவன் மனித பிறவி இல்லையா… ? இதனை நான் நேரிடையாக கேட்டு விட முடியுமா…?

ஏதோ இப்போது தான் இவன் என்னிடம் கொஞ்சம் அதிக படியாக பேசுகிறான். இதை கூறி அதையும் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.பாவம் அவனுக்கு தெரியாதது என்ன வென்றால்…..பத்மினியுடனான திருமண செயல்களுக்கு வாசுவின் அப்பாவும் வந்தால் கேசவமூர்த்திக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வரும் என்பதே…

இப்பேச்சுகளுக்கு இடையே சர்வர் கொண்டு வந்த உணவை உண்டு முடித்திருந்தனர்.பின் வாசுவிடம்… அசோக்கும், பிரதாப்பும் விடை பெற்று கார் பார்க்கிங் வந்திருந்தனர்.இவன் காரை எடுக்கவும். வாசு தன் காரை எடுக்க வரவும் சரியாக இருந்தது.

பின் பிரதாப் வாசுவிடம் “நான் சொல்ல மறந்து விட்டேன் நாளை உன் வீட்டிற்க்கு வருகிறேன்.எனக்கு திருமணம் நிச்சயமாக உள்ளது.அது விஷயமாக உன் தந்தையின் உதவி தேவை படுகிறது.”

பிரதாப்பின் பேச்சை கேட்ட வாசு “கண்டிப்பாக வா பிரதாப் உன்னை பார்த்தால் அப்பா ரொம்ப சந்தோஷப்படுவார்.”என்று கூறினான்.கூடவே நம் தந்தையின் உதவி தேவை படுவதாக கூறியதில் குழம்பி போனான்.இவர்களின் வசதிக்கு நம்மிடம் எந்த உதவியை இவன் எதிர் பார்க்கிறான்….என்று தலையை பிச்சிக் கொண்டது தான் மிச்சம்.

அதனால் தன் தலையை பிச்சுக் கொள்வதற்கு பதிலாக தந்தையிடமே சொல்லி விடலாம் என்று கருதி… காரை எடுப்பதற்க்கு முன் தன் தந்தயை போனில் அழைத்து பிரதாப் நாளை வரும் விஷயத்தை தெரிவித்தான்.வாசுவின் தந்தை மயில்வாகனம் பிரதாப் தன் வீட்டிற்க்கு வருகிறான் என்று தெரிந்தவுடன் மிக மகிழ்ச்சி அடைந்தார்.மயில்வாகனம் இவ்வளவு சந்தோஷப் படுவதற்கு காரணமும் இருந்தது.இன்று சென்னையில் ஒரு ஓட்டலுக்கு சொந்தகாரனாய் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் பிரதாப்பின் தந்தையே……

ஆம் முதலில் வாசுவின் குடும்பம் டெல்லியில் தான் இருந்தது. வாசுவின் தந்தை மயில்வாகனம் டெல்லியில் ஒரு த்ரீ ஸ்டார் ஒட்டலை நடத்திக் கொண்டிருந்தார்.அப்போது தான் வாசு காலேஜில் பிரதாப் பற்றி தன் தந்தையிடம் கூறிய போது தான் பிரதாப்பின் வசதியை பற்றியே வாசுவுக்கு தெரியும்.

வாசுவின் தந்தை பிரதாப்பின் தந்தையின் மீது மிக மரியாதை வைத்திருந்தார். அதனால் தான் வாசு பிரதாப் பற்றி சொல்லும் போது அவனிடம் நட்பாக இரு என்று சொன்னார்.

வாசு கடைசி வருடம் படிக்கும் போது வாசுவின் தந்தை ஓட்டலில் ஒரு பிரச்சினை ஏற்பட்டது.அங்கு உள்ள தாதாவின் அட்டகாசத்தால் ஓட்டலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.அப்போது பிரதாப்பின் தந்தை தீனதாயாளன் தான் தலையிட்டு மினிஸ்டரின் உதவியுடன் அந்த ஓட்டலை ஒரு நல்ல விலைக்கு விற்று கொடுத்தார்.

அந்த பணத்தை கொண்டே சென்னையில் இந்த ஓட்டலை வாங்கினார்.அதனால் வாசுவின் தந்தை மயில்வாகனத்துக்கு பிரதாப்பின் குடும்பத்தின் மீது மரியாதை கலந்த பாசம் இருந்தது.அதனால் தான் பிரதாப் தன் வீட்டிற்க்கு வருவதாக சொன்னவுடன் மயில்வாகனத்திற்கு சந்தோஷம் பிடிபட வில்லை.

வாசு பிரதாப் வருவதாக சொன்னவுடன் மயிவாகனம் உடனே தன் மனதுக்குள் நாளை இருக்கும் அனைத்து வேலையையும் ஒதுக்கி வைக்க திட்டம் இட்டார். நாளை வரும் பிரதாப்புக்கு ஆவளுடன் காத்திருக்க தொடங்கினார்.

இங்கு பிரதாப் வாசுவிடம் விடை பெற்று காரில் சென்றுக் கொண்டிருக்கும் போது அசோக் பேசுவது எதுவும் அவன் காதில் விழவில்லை.அவன் நினைவில் இருப்பது எல்லாம் பத்மினியே…..காலையில் இருந்து தான் செய்ய வேண்டிய வேலை மிக அதிகமாக இருந்தால் பத்மினியை கொஞ்சம் மறந்து இருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

தன் பெற்றவர்களாக நடிக்க பெரியவர்களை ஏற்பாடு செய்ய வேண்டும். பிறகு இங்கு சந்தானத்தோடு வேறு ஒருவர் தனக்கு ஆதராவாக இருந்தால் நல்லது என்று கருதியதால் தான்… வாசுவிடம் தான் நாளை அவன் வீட்டிற்கு வருவதாக கூறினான். அவனுக்கு தெரியும் மயில்வாகனம் தான் என்ன உதவி கேட்டாலும் தப்பாமல் செய்வார் என்று….

இப்போது அனைத்து வேலையும் ஒரளவுக்கு முடிந்ததும்...திரும்பவும் அவன் நினைவலையில் பத்மினியின் நினைவே.இப்போதே பத்மினியை பார்த்தாக வேண்டும் என்று மனது முரண்டு பண்ணியது.

இப்போதே பத்மினியின் வீட்டிற்க்கு செல்லலாமா….?என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அசோக் “பிரதாப்… பிரதாப்” என்று கத்தி அழைத்தான்.தன் நினைவில் இருந்து வெளி வந்து “ஏண்டா...இப்படி கத்துகிறாய் எனக்கு காது செவிடு இல்லை.ஆனால் நீ இப்படி கத்தி அழைத்தால் கூடிய விரைவில் செவிடு ஆகிவிடுவேன்.”என்று கூறினான்.

“ஏண்டா சொல்ல மாட்ட இவ்வளவு நேரம் காத்து கத்தலா கத்திட்டு இருக்கேன்.கத்தி கத்தியே என் தொண்ட தண்ணீ வத்தினது தான் மிச்சம்.இப்போ மட்டும் உன் செவி மேல் உனக்கு அக்கறை வந்து விட்டது. என்ற நண்பனை ஏதும் சொல்லாமல் பார்த்தவாறே அமர்ந்திருந்தான்.

இவனுக்கு என்ன ஆச்சீ நம்ம சொன்னதுக்கு ஏதும் சொல்லாமல் இருக்கானே பெருசா ஏதாவது பிளான் பண்றானோ…அசோக் யோசித்துக் கொண்டிருக்கும் போதே “பத்மினியை பார்க்க அவள் வீட்டிற்கு செல்லலாமா..?என்று கேள்வி எழுப்பினான்.

அசோக் வேண்டாம் என்ற வகையாக தலை மட்டும் அசைத்தான். “ஏன்… ?ஏன்? வேண்டாம் .உன் ஷாலினி அங்க இருக்க மாட்டா என்று தானே……?

அதற்க்கும் மறுப்பாக அவன் தலை அசைத்ததில் தன் கையை கொண்டு அவன் கழுத்தை நெறுக்க போனான்.அதில் தன் வண்டி தடுமாறியதில் வேகமாக பிரேக் அடித்தும் தன் முன் சென்ற ஸ்கூட்டி மீது மோதி தான் நின்றது.

பிரதாப் வேகமாக தன் வண்டியில் இருந்து இறங்கினான். அது போல் அசோக்கும் இந்த பக்கத்தில் இருந்து இறங்கினான்.இருவரும் தன் வண்டியின் முன் தலை கவிழ்ந்தவாறு வீழ்ந்து கிடக்கும் இருவரின் முன் அமர்ந்தவாறு அசோக்கிடம் வண்டியில் இருக்கும் தண்ணியை கொண்டுவர சொல்லியவாறு…. ஸ்கூட்டியின் பின் அமர்ந்தவாறு வீழ்ந்து கிடந்த பெண்ணை திருப்பினான்.

அப்பெண்ணை பார்த்தவுடன் பதை பதைத்து போய் விட்டான்.ஆம் அப்பெண் வேறு யாரும் இல்லை….ஷாலினி தான்.பின் அமர்ந்தவள் ஷாலினி என்றால்..? வண்டியின் முன் ஓட்டி கொண்டு வந்தவள்……..

 
:love::love::love:

பத்மினி பைத்தியம் முற்றிய பிரதாப்க்காக..

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போதே என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
 
Last edited:
Top