Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 13 2

Advertisement

Admin

Admin
Member
பத்மினியும் பிரதாப்பின் பார்வைக்கு பதில் பார்வை பார்த்ததில் நிலமையை புரிந்துக் கொண்ட ஷாலினி ஒ…. அம்மா இதுக்கு தான் மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி இருக்காங்களா…..என்ற நமுட்டு சிரிப்புடன். அசோக்கை பார்த்து …

“அசோக் நீங்க ஏன்…? காரை பார்க் பண்ண இவ்வளவு டைம் எடுத்திங்க…? பார் இவங்க பாவம் இவர்கள் தங்களுக்குள் பேசாமல் நீங்க எப்போ வருவீங்க என்று பார்த்து…. பார்த்து…. கண் கூட பூத்து போச்சீ பாருங்க….?என்று அவர்களை வாரினாள்.

ஷாலினியின் கேலி பேச்சில் பத்மினி என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தாள் என்றால் …பிரதாப் “ஆமாம் ….ஆமாம்…..நானும் போனவங்களை காணவில்லையே என்று பார்த்திருந்ததால் தான் இருவரும் கைய் கோர்த்து வரும் அற்புத காட்சியை என்னால் பார்க்க முடிந்தது.” என்று பதிலுக்கு பிரதாப் அவர்கள் இருவரையும் வாரினான்.

அசோக் மனதுக்குள் இவன் எந்த மனநிலையிலும் ஸ்டடியா தான் இருக்கான் நாம் தான் ஜெர்க் ஆகிடறோம்.என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான். பாவம் கொஞ்ச நேரம் முன் வந்திருந்தால் தன் நண்பனின் நிலை தன் நிலையை விட மோசம் என்று எண்ணி இருப்பான்.

ஆம் அசோக்குக்கும் அதே நிலை தான் இது வரை அவன் தொழில் ரீதியாக மட்டுமே பெண்களின் கை குலுக்கு இருக்கிறானே .தவிற ….தனிப்பட்ட முறையில் பெண்களின் கை கூட அவன் தொட்டது கிடையாது.

ஷாலினியின் இந்த கை தொடுகை அவனை வேறு உலகுக்கே இழுத்து சென்றது.அவன் சஞ்சாரத்தை கேசவமுர்த்தியின் குரலால் தடை பட்டது.பதட்டதுடன்” பத்தூ பாப்பா என்னம்மா ஆச்சீ யார் உன்னை இடித்தது அடி ஒன்றும் பலம் இல்லையே….. “என்று மற்றவர்களுக்கு பதில் சொல்லும் வாய்பே கொடுக்காமல் பேசிக் கொண்டே சென்றார்.

கேசவமுர்த்தியின் குரலால் அசோக்கின் சஞ்சாரம் கெட்டது என்றால் பிரதாப்புக்கு அது வரை இருந்து வந்த இதமான மனநிலை மாறியது.

தந்தையின் குரலை கேட்ட பத்மினி சட்டென்று பிரதாப்பின் அருகில் இருந்து எழுந்து தன் தந்தையிடம் விரைந்து வந்து அணைத்துக் கொண்டாள்.அவளுக்கு சிறு வயது முதலே தாய் இல்லாததால் அனைத்துக்கும் தன் தந்தையையே நாடுவாள். சிறு வலியை கூட பத்மினியால் பொறுத்துக் கொள்ள முடியாது.

ஏன் இப்போது கூட பத்மினி ஷாலினிக்கு ஒன்றாக தானே அடிப்பட்டது.இன்னும் கேட்டால் … பத்மினியை விட ஷாலினிக்கு தான் அதிக சிராய்ப்பு. அவள் அதை ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்ள வில்லை. ஆனால் பத்மினி அடி சிறிது என்றாலும் கூட தான் கவனிக்க படவில்லை என்றதிலேயே அவளின் வலி மேலும் அதிகரித்தது.

அதனால் தான் அப்போது தன் தந்தையை தேடினாள். ஏன் அவள் பெரிய மனிஷியாக ஆகும் போது கூட வேறு யாரிடமும் இதை பகிராமல் தன் தந்தை ஆபீஸில் இருந்து வந்தவுடன் தான் கூறினாள்.வேலைகாரி ஏன் சீக்கிரம் வீட்டுக்கு வந்து விட்டீர்கள் என்று விசாரித்த போதும் ஒன்றும் சொல்லவில்லை.

எந்த விஷயத்தையும் தந்தையுடனே பகிரும் பழக்கம் கொண்ட பத்மினி இப்போதும் அது போலவே தந்தயை ….பார்த்தவுடன் இவ்வளவு நேரம் காதல் மயக்கத்தில் இருந்தவள்… பாசவலையில் வீழ்ந்து விட்டாள்.

தந்தையின் மார்பில் தலை வைத்து “அப்பா… அப்பா… “என்று கூறிக் கொண்டே தன் காயத்தை காட்டிக் கொண்டிருந்தாள். அதனை பார்த்த அசோக்குக்கே வயித்தெரிச்சலாகி விட்டது,

பின் என்ன ?பத்மினியை பார்த்தால் தன் அம்மூவுக்கு தான் காயம் அதிகம் அவளே…. ஒன்றும் சொல்லாமல் மாத்திரையையும் அவளே வாங்கிக் கொண்டு வந்திருக்கிறாள். பத்மினி என்னடனா….என்னவோ மல்டி பிராக்சர் மாதிரி என்னமா...சீன போடுறாங்க பத்மினி மட்டும் தன் நண்பன் பிரதாப்பின் வருங்கால மனைவியாக இல்லாதிருந்தாள். கண்டிப்பாக ஏதாவது சொல்லியிருப்பான்.

அசோக் அந்த கடுப்புடனே பிரதாப்பை நோக்கினான். அங்கு பிரதாப்பின் முகத்தில் அவன் கண்ட கோபத்தை பார்த்து தன் நினைப்பை எல்லாம் தூக்கி போட்டு அவன் அருகில் சென்று “பிரதாப் கண்ரோல் பண்ணு…. இல்லேன்னா நாம் இவ்வளவு கஷ்டப்பட்டது எல்லாம் வீணாக போயிடும்.”என்று கூறியவாறு அவன் கையைய் தன் கையோடு சேர்த்து அவனை சமநிலைக்கு கொண்டு வர முயற்ச்சி செய்தான்.

அசோக்கின் பேச்சில் பிரதாப் இருக்கும் சூழ்நிலையை கருதி தன் முகத்தை சதாரணமாக வைக்க முயற்ச்சி செய்தான்.அது அவனுக்கு கடினமான காரியமே …..ஏன்? என்றால் அவன் யாருக்ககாவும் இது வரை தன்னை நியாயப்படுத்தி காட்டிக் கொள்ள முனைந்தது கிடையாது. அதனால் நான் இப்படி தான் என்று வெளிப்படையாக நடந்து தான் பழக்கம்.

அதனால் அவன் தன் சுபவாத்துக்கு எதிர்பதமாக நடந்துக் கொள்வது என்பது மிக கடினமாக இருந்தது.முயன்று தன்னை நார்மலாக காட்டிக் கொண்டான்.அதுவும் இப்போது அவனின் கோபம் எல்லாம் கேசவமூர்த்தியை விட பத்மினி மீது தான் அதிகம் இருந்தது.

இவ்வளவு நேரம் தன் அருகில் குளிர் நிலவு என அமர்ந்து தனக்கு குளிர்ச்சியை தந்தவள். தன் தந்தையை பார்த்ததும் தன்னை விட்டு சட்டென்று நீங்கி தன் தந்தையின் தோள் சாய்ந்தது தன் மேல் நெருப்பை கொட்டியது போலானது.

அவன் சகஜநிலைக்கு வந்ததும் தன் கவனத்தை பத்மினி கேசவமூர்த்தியிடம் திருப்பினான்.அங்கு பத்மினி அதற்குள் தன் தந்தையிடம் செல்லம் கொஞ்சி முடித்திருந்தாள்.

பின்பு தான் பத்மினி தான் இருக்கும் இடமே நினைவுக்கு வந்தது என்றால் பிரதாப்பின் நிலையை நீங்களே யோசித்து கொள்ளுங்கள்.பின்பு பத்மினி “அப்பா இவர் தான் என்னை ஹாஸ்பெட்டல் அழைத்துக் கொண்டு வந்தார்”என்று கூறினாள்.

ஆனால் தப்பி தவறி கூட தனக்கு அடிபட இவர் தான் காரணம் என்பதை கூற வில்லை.ஷாலினி கேசவமூர்த்தியிடம் “அங்கிள்….”என்று எதையோ கூற வருவதற்குள் ஷாலினியிடம் கண் ஜாடை காட்டி அடக்கினாள்.

ஷாலினியும் என்னடா…. இது உலக அதிசயமாக இருக்கு. பத்மினி தன் தந்தையிடமிருந்து ஒன்று மறைக்கிறாள் என்றால் அவளுக்கு தெரிந்து இது ஒன்று தான்.

பத்மினியின் கண் ஜாடையை ஷாலினி மட்டும் கண்டுக் கொள்ள வில்லை பிரதாப்பும் அதனை பார்த்து விட்டான். அவளின் இந்த செயளால் எரிகின்ற மனதுக்கு பன்னீர் தெளித்தது போல் இருந்தது.

பிரதாப்புக்கு புரிந்து விட்டது.ஷாலினி ஆக்சிடெண்டை தான் கூற வந்தாள் என்றும். அதனை பத்மினி தடுத்தது தன்னை கேசவமூர்த்தி தவறாக நினைக்க கூடாது…. என்று தானே….. தன் தந்தையிடமே மறைத்தாள்.தனக்காக தன் தந்தையிடமே ஒன்று மறைக்கின்றாள் என்றால் தன்னை முக்கியமாக கருதுகிறாள் என்று தானே அர்த்தம்.

அவன் மனதுக்குள் மகிழ்ந்துக் கொண்டு இருக்கையிலேயே...கேசவமூர்த்தி பிரதாப்புக்கு நன்றி தெறிவித்தார்.அந்த நன்றி கூட பிரதாப்புக்கு வெப்பங்காயக… கசந்தது.யார்…?யாருக்கு நன்றி சொல்வது. என் பத்மினியை ஹாஸ்பெட்டல் அழைத்து வந்ததற்கு இவர் எனக்கு நன்றி சொல்வாராமா…..?கூடிய விரைவில் உன்னிடம் இருந்து அந்த உரிமையை பறிக்கிறேன். என்று மனதோடு இதனை சொல்லிக் கொண்டு…

கேசவமூர்த்தியிடம் மறைமுகமாக இதற்கு எல்லாம் ஏன் நன்றி ... இனிமேல் அவள் நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் நான் தானே பொறுப்பு என்று உரைத்தான்.

இதில் உள்ள உள்குத்து அறியாத கேசவமூர்த்தி பிரதாப்பின் பேச்சில் மயங்கி விட்டார்.ஏற்கனவே இந்த ஆஸ்பிட்டலின் டியூட்டி டாக்டர் மூலம் தான் பத்மினியின் விபத்து பற்றி தெரிந்து இங்கு வந்தார்.மேலும் அவர் பிரதாப் பற்றி கூறிய விஷயம்…. தான் பத்மினிக்கு நல்ல மாப்பிள்ளையை தான் நாம் தெர்ந்தெடுத்து இருக்கிறோம் என்று மகிழ்ந்து போனார்.அந்த உணர்ச்சி மிகுதியில் பிரதாப்பின் கை பற்றி கண்டிப்பாக மாப்பிள்ளை என்று உரிமையுடன் அழைத்தார்.

ஆம் இந்த ஹாஸ்பெட்டலில் வேலை பார்க்கும் டாக்டர் கேசவமூர்த்தியின் நண்பர் அவர் மூலமே கேசவமூர்த்திக்கு விஷயம் தெரிந்தது.பிரதாப் பத்மினிக்கு சிகிச்சை மேற்கொள்ளும் போது இஞ்சக்க்ஷன் செலுத்தும் போது பத்மினியோடு பிரதாப் தான் பக்கத்தில் இருந்து “பார்த்து…. பார்த்து….” என்று அழிச்சாட்டியம் செய்துக் கொண்டிருந்தான்.

அந்த டாக்டருக்கு ஏற்கனவே பத்மினியை கேசவமூர்த்தி மகளாக தெரியும். ஆனால் பத்மினிக்கு தான் அவரை தன் தந்தையின் நண்பர் என்று தெரியாது.அதனால் அந்த டாக்டர் விக்டர் பிரதாப்பிடம் “நீங்க என்ன வேண்டும் என்று கேட்டதற்கு…. “எப்போதும் திமிருடன் சொல்வது போல்…. அவரிடமும் ஏன்? சொன்னால் தான் சிகிச்சை அளிப்பீர்களா…” என்று கேட்டான்.

“யாருக்கு வேண்டுமென்றாலும் நான் சிகிச்சை அளிப்பேன். ஆனால் நோயாளியின் அருகில் இருப்பதற்கு நெருங்கிய உறவுக்கு மட்டுமே இங்கு அனுமதி.அதனால் தான் கேட்டேன். இப்போது சொல்லாம் இல்லையா…?” நீங்கள் இவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை…

அப்போதும் தெனவெட்டாக…. “இவள் அருகில் இருப்பதற்கு முழு உரிமையும் உள்ள ஒருவன் என்றால் அது நான் தான். அவள் வருங்காள கணவன். இப்போது நான் அருகில் இருப்பதில் உங்களுக்கு தடையேதும் இல்லையே….”என்று கூறினான்.

பிரதாப்பின் பதிலில் பத்மினியின் மேல் அவன் வைத்திற்க்கும் உரிமையை பார்த்து கேசவமூர்த்தி தன் மகளுக்கு நல்ல மணமகனை தான் தெர்ந்தெடுத்து இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டார். அதனால் தான் டாக்டர் விக்டர் அதனை போன் மூலம் தெரிவித்தார்.பிரதாப் பத்மினிக்காக பதைத்து விட்டான் என்று தெரிவித்தாரே தவிர தனக்கும் பிரதாப்புக்கும் நடந்த உரையாடலை தெரிவிக்க வில்லை.

அப்படி தெரிவித்திருந்தாள்.பிரதாப்பின் தனக்கு மட்டுமே உரிமை என்ற சொல்லிலேயே….இக்கல்யாணத்தை நடத்தி இருக்க மாட்டார். இது தான் விதி என்பதோ…. இன்னாருக்கு இன்னார் என்று எழுதி விட்டாள். அதனை யார்? வந்தாலும் மாற்ற முடியாது.
 
Top