Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 5 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் 5

கேசவமூர்த்தியிடம் அவர் மகளை பிரிப்பதற்கு முதல் படியாக சந்தானத்துக்கு போனில் தன் இருப்பிடம் வர சொன்னார். அதற்கு தகுந்தவாறு அன்று மாலையே அசோக்கும் சென்னை வருவது உறுதியாகி இருந்தது.

பின் சந்தானத்தை அழைத்து ஈவ்னிங் அவர் வருவதை உறுதிப்படுத்திக் கொண்டான்.இந்த வேலையெல்லாம் தன் பாட்டுக்கு செய்துக்கொண்டிருந்தாலும், மனம் பத்மினியிடமே வந்து நின்றது. காலையில் அவளை நேரில் பார்த்ததில் இருந்து அவள் நினைவே.

இந்த எண்ணவோட்டதுடனே பிரதாப் ஏர்போர்ட் வந்து சேர்ந்தான். பிளைட்டும் சரியான நேரத்துக்கு வந்து இறங்கியது. அசோக் பிரதாப்பை அங்கே எதிர் பார்க்கவே இல்லை. அவன் எப்போதும் மற்றவர்களுக்காக அதிகம் தன்னை வருத்திக் கொள்ளமாட்டான்.அப்படிப்பட்டவன் சென்னை டிராப்பிக்கில் வந்து இருக்கிறானா!

அவன் எண்ணவோட்டத்தை தடை செய்வது போல் பிரதாப் அருகில் வந்து” என்ன அசோக் அப்படி பார்க்குறே !”என்ற கேள்விக்கு “இல்லே பிரதாப் நான் உன்னை இங்க எதிர்பாக்கல“ என்ற பதிலில் “ஏன் நீ மட்டும் எனக்காக டெல்லியில் ஏர்போட்டுக்கு வரல்லே !அதே மாதிரி தான் நானும் உனக்காக வந்தேன் ஏன் வரக்கூடாதா?’’ என்ற கேள்விக்கு!

“எப்படி….எப்படி….. இப்போ என்னக்காக வந்திருக்க இதை நான் நம்பணும் “என்ற நண்பனை “நண்பேண்டா’ என்று கூறி கட்டியணைத்துக் கொண்டான். அவன் செயல்களில் இருந்தே அவனுக்கு அந்த பெண்ணை எந்தளவுக்கு பிடித்திருக்கிறது என்று அறிந்துக் கொண்டான். எப்போதும் பிரதாப் தன் உணர்ச்சிகளை அவ்வளவு சீக்கிரம் வெளிக்காட்ட மாட்டான். அவனின் இந்த நடவடிக்கை அவனுக்கு புதிது . அவனுடைய எட்டாவது வயதிலிருந்தே சின்ன வயதுக்குரிய எந்த மகிழ்ச்சியையும் அவன் செயலில் அவன் பார்த்தது இல்லை.

எப்போதும் முகத்தில் ஒரு கடினத்துடனே தான் காணப்படுவான். தனிமையை தான் விருப்புவான், அவன் பேசக்கூடிய ஒரே நண்பன் அவன் தான்.

இவனின் முகத்தில் இருக்கும் இந்த மகிழ்ச்சி எப்போது அவனுக்கு நிலைத்து நிற்க வேண்டும் என்று அந்த நல்ல நண்பன் அவனுக்காக கடவுளை வேண்டிக் கொண்டான். அதே மகிழ்ச்சியுடன் “என்ன பிரதாப் நீ சென்னைக்கு வந்தது ஒட்டலை பேசி முடிக்க அந்த வேலை ஏதாவது முடிஞ்சுதா….?” என்று கிண்டலாக கேட்டான்.

“ம்… அதெல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சீ…” என்ற நண்பனிடம் “அப்போ எது முடியலே…” என்ற எதிர் கேள்விக்கு. “இன்னிக்கு காலையில் அந்த ஒட்டலின் ஒனரிடம் பேசும் போது மினியும் அவள் அப்பாவும் வந்தாருடா” என்ற அவன் பேச்சை இடைமறித்து”ஏய் யார் மினி “ என்ற நண்பனின் கேள்வியில் “தன்னுடைய கைய்யால் தன் காதைய் தடவிய வாரே” அது தாண்டா பத்மினி “ என்று புன்னையுடன் கூறினான்.

அவனின் இந்த மாற்றம் கண்டிப்பாக தன் நண்பனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை எற்படுத்தும் என்று அசோக் நம்பினான். அவன் பார்க்க தான் கடினமாக இருப்பான். ஆனால் அவனின் உள்மனதின் இரக்க சுபாவம் ஒரு சிலருக்கு தான் தெரியும்.தன் தொழிளாளர்களின் குடும்பத்துக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உடனே உதவி செய்வான். அதே மாதிரி அவர்கள் ஏதாவது தவறு செய்தால் தண்டனையும் கடினமாக இருக்கும்.

இந்த நான்கு ஆண்டுகளாகத்தான் பெண்களின் விசயத்தில் சிறு சறுக்கள் அதுவும் அவனின் வசதிக்கு தானே மேல் வந்து விழும் பெண்களிடம் மட்டும் தான்.அவனாக யாரை தேடியும் சென்றது இல்லை.

தன் நண்பனின் வாழ்வில் இந்த திருமணம் அந்த சறுக்கல்களையும் சரி செய்யும் என்றால் அதை விட சந்தோஷம் தான் அவனுக்கு ஏது?

சரி உன் மினி வந்தாங்க அதுக்கு என்ன? என்ற அசோக்கின் கேள்விக்கு…. “நான் எப்படி சொல்றதுன்னு தெரியலடா….” என்ற நண்பனின் இழுத்த பதிலில் “ஏண்டா பொண்ணு நேரில் நல்லா இல்லையா…? அப்படினா வேண்டாம். இந்த சபதம் எல்லாதையும் மறந்துடு….”.என்று சிரித்தவாரே கூறினான்.

அவனுக்கு தெரியும் பிரதாப்புக்கு பெண்ணை பிடித்து விட்டது. இது வேறு விஷயம் என்று அதனால் தான் மகிழ்ச்சியுடன் கூறினான்.நண்பனின் இந்த பேச்சில் அவசரமாக “அதெல்லாம் இல்லை பெண் நல்லா தான் இருக்கா…. கூட திமிரும் அதிகமாகவே இருக்கு,” என்றான்.

ஏன் உன்னிடம் ஏதாவது திமிராக பேசினாளா..? என்ற கேள்விக்கு “எங்கே பேசினா…? பேசினாதான் பரவயில்லையே, பேசுறது என்ன பார்க்க கூட இல்லைடா” என்ற நண்பனின் பதிலிலேயே அவன் மன நிலையை நன்கு அறிந்துக் கொண்டான்.

எப்போதும் பெண்களின் ஆவலானா பார்வையையே பார்த்தவன். தான் விரும்பும் பெண் தன்னை திரும்பி பார்க்க வில்லை என்பதை ஏற்றுக் கொள்வது கடினம், தான் என்று நினைத்தவாரே பிரதாப்பிடம் “நம்மை பார்க்கும் பெண்ணை விட நாம் பார்க்கும் பெண்ணை நம்மை பார்க்க வைப்பதில் தான் வீரமே இருக்கு என்று ஒரு அறிவாளி சொல்லி இருக்கார்” என்றதுக்கு “யார் அந்த அறிவாளி” என்ற பிரதாப்பின் கேள்விக்கு?

“ஏன் என்ன பாத்தா.. அறிவாளியா தெரிய வில்லையா” என்ற அசோக்கின் பதிலில் சிரித்துக் கொண்டே கண்டிப்பாக நீ அறிவாளியாக தான் இருக்க முடியும் ஏன்னா….நீ என் நண்பன் ஆச்சே என்று மகிழ்ச்சியுடன் தோளில் கை போட்ட வாறு கார் பார்க்கிங்கு வந்திருந்தனர்.

இந்த மகிழ்ச்சியுடனே இருவரும் தன் இருப்பிடம் சென்றடைந்தனர். சரியாக எட்டு மணிக்கு சந்தானம் பிரதாப்பின் பங்களா வந்தடைந்தார்.பிரதாப் அவரை பார்த்து “வெல்கம் வெல்கம் “ என்று பணிவுடன் வரவேற்றான். பின் அசோக்கை காண்பித்து இவன் என் நண்பனும், எனக்கு பி.ஏ வும், என்று அறிமுகம் படுத்தினான். பிரதாப்பின் இந்த பணிவு அசோக்கை யோசிக்க வைத்தது.

காராணம் இல்லாமல் பயபுள்ள பணிய மாட்டானே…..என்ன விசயமாக இருக்கும், என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அதற்கு உண்டான பதில் பிரதாப் அடுத்தடுத்து பேசிய பேச்சில் புரிந்தது. “ம் சொல்லு சந்தானம் சார் ஒட்டலை விற்று விட்டு அடுத்து என்ன ஐடியாவில் இருக்கிறீர்கள்.? இதில் என் உதவி ஏதாவது தேவைப்பட்டால் தயங்கவே வேண்டாம். ஏன் என்றால் எனக்கு உங்களை மிகவும் பிடித்து விட்டது. பார்க்க என் தந்தைய் மாதிரியே இருக்கிறீங்க”.என்று கூறினான்.

பிரதாப் பேச்சைக் கேட்டு சந்தானம் மிகவும் மகிழ்ச்சியடைந்து விட்டார். பிரதாப்பின் உயரம் பற்றி அவர் நன்கு அறிந்தவர். அவர் தன்னிடம் இப்படி பேசியதில் அவருக்கு பெருமையாக இருந்தது. பிரதாப்பும் இதைத் தானே அவரிடம் எதிர் பார்த்தான்.

பின் மெதுவாக அடுத்த கேள்வியை கேட்டான். “காலையில் உங்களுடன் வந்தாரே ஆ..ஆ.. அவர் பெயர் என்ன?’என்ற அவன் கேள்வியில் அசோக்குக்கு நிஜமாக இவன் தன் நண்பன் தானா? என்ற சந்தேகமே வந்து விட்டது. ஏன் என்றால் அவன் எப்போதும் நேரிடையாக கேட்டுத்தான் பழக்கம் இந்த புதிய அனுகுமுறையால் அவனுக்கு வியப்பு ! ஏற்பட்டது.

பிரதாப்பின் கேள்விக்கு “ அவர் பெயர் கேசவமூர்த்தி பிரதாப் சார்! ஏன் கேட்கிறீர்கள்? என்ற கேள்வியில் “சற்று தயங்கியவாறே இல்லே காலையிலே அவர் பக்கத்தில் இருந்தது அவர் மகள் தானே?’’ என்ற பிரதாப்பின் இந்த பேச்சால் அனுபவம் மிகுந்த அவருக்கு தன்னை எதற்கு தனியாக அழைத்து பேசவிரும்புகிறான் என்று காலையில் இருந்து தன் மனதில் எழுந்த கேள்விக்கு விடை கிடைத்தது.

பின் மெல்ல சிரித்துக் கொண்டே “ஆமாம் பிரதாப் சார்” என்றதற்கு நீங்க என்னை சும்மா பிரதாப் என்றே கூப்பிடுங்கள் இந்த பார்மாலிடீஸ் எல்லாம் வேண்டாம். என்று கூறிக்கொண்டே தன் நண்பனை பார்த்தான்.இன்னும் எவ்வளவு டைலாக்கு பேசுறியோ பேசு என்று மனதில் நினைத்துக்கொண்டே புன்னைகையுடன் பிரதாப்பை எதிர் பார்வை பார்த்தான்.

தன் நண்பனிடமிருந்து பார்வை திருப்பி சந்தானத்திடம் சென்றது.சந்தானம் சிரித்துக் கொண்டே “ரொம்ப சந்தோஷம் பிரதாப் இவ்வளவு சின்ன வயதில் நீங்க தொழில்லே எவ்வளவு சாதித்து இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். உங்களுடன் இந்த வெற்றிக்கு காரணம் பெரியவர்களிடம் நீங்க செலுத்தும் மரியாதைத்தான்னு எனக்கு இப்போ தெரியுது” என்று கூறி. “சொல்லு பிரதாப் உங்களுக்கு கேசவமூர்த்தியின் பெண் பிடித்து இருக்குன்னு உங்க பேச்சியில் இருந்தே தெரிகிறது.” என்று கூறி பிரதாப்பின் முகம் பார்த்தார். எது இருந்தாலும் அதை பிரதாப்பின் வாயிலிருந்தே வர வேண்டும் என்பது அந்த அனுபவம் மிகுந்தவரின் எண்ணம்.

அவரின் எண்ணம் புரிந்தவனாக அவரிடம் நேரிடையாகவே. “ஆமா சந்தானம் சார் காலையிலே கேசவமூர்த்தியோட பெண்ணை பார்த்தவுடன் எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. அதனால் தான் நான் உங்களை இங்க வரவழைத்தேன். ஆனால் இது மட்டும் இல்லை நான் முதலில் சொன்னது போல் உங்களுக்கு என்ன உதவி தேவை பட்டாலும் என்னிடம் கேட்கலாம். அது இந்த பெண் முடிய வில்லை என்றாலும்….” என்று கூறி தான் மிகப்பெரிய பிஸ்னஸ் மேன் என்று தன் வார்த்தையால் அடித்தான்.

ஆம்… இனிமேல் தான் எதுவும் செய்ய வேண்டியது இல்லை. தானே முன்னிருந்து தன் திருமணத்தை முடித்துக் கொடுத்து விடுவார் என்று அவனுக்கு தெரியும்.அவன் எண்ணத்துக்கு ஏற்ற மாதிரியே “எனக்கு உங்களைப் பார்த்து ரொம்ப சந்தோசமா இருக்குப்பா. அப்புறம் நான் இந்த ஒட்டலை வித்ததே என் மகன் அமெரிக்காவில் இருக்கிறான். அவனுக்கு அங்க பிஸ்னஸ் பண்ண கொஞ்சம் பணம் தேவைப்படுது அதுக்காகத்தான் விற்றேன். இந்த பணத்துடன் நானும் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிடலாம் என்ற ஐடியாவில் இருக்கிறேன் “என்று ஏற்கனவே பிரதாப்புக்கு தெரிந்த விஷயத்தை கூறினார்.

ஆம் பிரதாப் எப்போதும் எதை ஒன்று வாங்கும் போதும் அவர் ஏன்? அதை விற்கிறார்?. அதில் ஏதாவது குளறுப்படி இருக்கிறாதா! என்று ஆராய்ந்தே வாங்குவான். அதன் படி அனைத்து விஷயங்களும் தெரியும்.

ஆனால் அனைத்து விஷயத்தையும் அறிந்துக் கொண்டே புதியதாக கேட்பது போல் கேட்டுக் கொண்டிருந்த பிரதாப்பை அசோக் கிண்டலுடன் நோக்கினான்.

“அப்போ உங்களுக்கு பணம் அவசரமாக தேவைப்பட்டால் சீக்கிரமாகவே நாம ரிஜிஸ்ட்ரேஷன் முடித்திடலாம்.” என்று அவர் வீக் பாயிண்டில் அடித்தான். “சரி பிரதாப் நீங்க சொன்ன மாதிரியே சீக்கிரம் ரிஜிஸ்ட்ரேஷன் முடித்து விடலாம். ஆனால் அதற்கு முன் உங்க விஷயத்தை கண்டிப்பாக முடித்து விட்டு தான் நான் அமெரிக்கா போவேன்.” என்று பிரதாப் எதிர்ப்பார்த்த பதில் தந்தார்.

பிரதாப் அசோக்கை பார்த்து ”அசோக் சீக்கிரம் இவர் வேலையை முடித்து விடு “என்று கூறிக் கொண்டே அவரை டைனிங் ஹாலுக்கு அழைத்து சென்றார்.
 
அட்றா அட்றா
தான் ஒரு பக்கா பிஸினஸ்மேன்னு பிரதாப் ப்ரூஃப் பண்ணிட்டான்
சாய்ச்சுப்புட்டான் மச்சான் சாய்ச்சுப்புட்டான்
சந்தானத்தை சாய்ச்சுப்புட்டான்
 
Last edited:
:love: :love: :love:

ஆடிட்டர் கனவோடு இருக்கும் பத்மினியை அப்புல சிக்கவைக்கிறானே இந்த மாமா.......
இப்போவே மனசு அவ பின்னாடி ஓடிடுச்சு....... இதுல கல்யாணம் பண்ணிட்டு அவ அப்பாவை பழிவாங்குவானாம்.......
பார்த்துடா அவ தான் உன்னை வச்சி செய்வான்னு எனக்கு தோணுது.......

சந்தானம் வாக்கு கொடுத்துட்டார்....... அசோக் வேலையில் வெள்ளைக்காரனாச்சே......
எப்ப கல்யாணம் பிரதாப்???
 
Last edited:
Top