Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 5 2

Advertisement

Admin

Admin
Member
பின்பு சந்தானம் எட்டரை மணி வாக்கில் விடை பெற்று சென்றார். அவர் சென்றவுடன் அசோக் பிரதாப்பை இறுக்கமாக வாரி அணைத்துக் கொண்டான். “ஏய் ...சீ...சீ என்னடா இது விடு என்று” தன்னை விடுவித்துக் கொண்டான்.

“ஆமாண்டா… ஆமா நான் கட்டிபிடித்தா பிடிக்குமா…? நீ எதிர் பார்க்கிற குவாலிபிகேஷனே வேறு ஆச்சே…” என்று சொன்ன அசோக்கை “தெரிந்தா சரி தான்” கூறிக்கொண்டே செல்லில் தன் அன்னையிடம் பேசியவாறே தன் ரூமுக்குள் சென்றான்.

மறுநாள் விடியலிலேயே சந்தானம் பிரதாப்பை அழைத்திருந்தார். “பிரதாப் நான் கேசவமூர்த்தியிடம் நான் உன்னை அழைத்து வருகிறேன், என்று கூறியிருக்கிறேன். ஆனால் விஷயத்தை சொல்லவில்லை.இன்று மாலையில் சந்திக்க சம்மதித்து விட்டார்.நாம் மற்றவற்றை நேரில் பேசிக் கொள்ளலாம்.” என்று கூறி செல்லை அணைத்து விட்டார்.

சந்தானம் செல்லை வைத்தவுடன். பிரதாப் சிந்தனையில் ஆழ்ந்தான். எப்படி அவரிடம் பேசுவது என்று தன் மனதில் திட்டம் வகுக்க ஆராம்பித்தான். அந்த யோசனையுடனே அன்று முடிக்க வேண்டிய, சந்தானம் ஒட்டலை வாங்கும் வேலையையும் பார்த்துக் கொண்டான்.

அதுவும் பேசிய விலைக்கு அதிகமாக வாங்குவதை பார்த்து அசோக் ஆச்சரிய பார்வை செலுத்தியதுக்கு “அசோக் சந்தானத்தின் வேலை நமக்கு இத்துடன் முடிந்து விடுவது கிடையாது. அவர் தேவை நமக்கு தேவை!” என்று புன் சிரிப்புடன் கூறினான்.

அசோக் நண்பனை பார்த்து சிரித்துக்கொண்டே ,”என்ன என்னவோ சொல்லுறே …. என்ன என்னவோ செய்யுறே…..” என்று அவனும் ரைமிங்ககா பேசி அவனை கலாய்த்தான்.இவ்வாறே மாலை வரை சென்றது.

சந்தானத்துக்கு தான் பேசியதை விட அதிகமாகவே பிரதாப் விலை கொடுத்தது மிக்க மகிழ்ச்சி ஏற்ப்பட்டது. இதனால் எப்படியாவது பிரதாப் ஆசைப்பட்ட பத்மினியை அவனுக்கு திருமணம் செய்து விட வேண்டும் என்று நினைத்தார்.

அதுவும் இல்லாமல் பிரதாப்புக்கு என்ன குறை அவன் பல தொழிலில் ஈடுப்பட்டிருக்கிறான். அவன் கால் பதித்த அனைத்து தொழிலிலும் கொடிக்கட்டி பறக்கிறான். பிரதாப்பை மாப்பிள்ளையாக அமைய கேசவமூர்த்தி கொடுத்து வைத்திருக்க வேண்டும். தான் அமெரிக்க செல்வதுக்குள் அவர்கள் திருமணத்தை முடித்து வைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்தார்.

பிரதாப் மாலையில் சீக்கிரமாக தன் பங்களா வந்தடைந்தான். முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி ஒரு புன் சிரிப்புடனே அந்த வீட்டின் சமையல்காரான் ராமைய்யாவிடம் “ராமைய்யா ஒரு டீ போட்டு எடுத்து வா “. என்று கூறினான்.

தன் எஜமானின் சிரிப்பு அவன் முகத்திலும் வெளிப்பட்டது. எஜமானின் சிரிப்புக்கு காரணம் தெரியவில்லை என்றாலும் அந்த சிரிப்பு வாடாமல் இருக்க கடவுளிடம் மனு போட்டுக்கொண்டே டீ கலக்க சென்றான்.

ராமைய்யா போட்ட டீயை குடித்துக் கொண்டே சந்தானத்தை செல்லில் அழைத்தான். அந்த பக்கம் சந்தானம் ”நானே இப்பதான் உங்களை கூப்பிடனும்னு நினைத்தேன்” என்று இழுத்தவாறே கூறினார்.

அவர் இழுத்த அந்த ஒரிரு நிமிடத்தில் ஆயிரம், ஆயிரம் யோசனைகள் பிரதாப்பின் மனதுக்குள் வந்து சென்றன. “ஏன் சந்தானம் சார் இன்று அவரை பார்க்க முடியாதுன்னு சொல்லி விட்டாரா” என்று பதட்டத்துடன் வினவினான்.

பிரதாப்பின் பதட்டத்தை பார்த்தே பெண்ணை பைய்யனுக்கு ரொம்ப பிடித்து விட்டது என்று அறிந்துக் கொண்டார். எப்படியாவது இந்த இடத்தை முடித்து வைத்து விட வேண்டும் என்று தன்னுள் கங்கணமே கட்டிக்கொண்டார்.

பின் லைனில் பிரதாப் ஹலோ…. ஹலோ என்ற அழைப்பில் “அதெல்லாம் ஒண்ணும் இல்லே பிரதாப் இப்போ தான் கேசவமூர்த்தியை செல்லில் அழைத்து பேசினேன். அவர் வீட்டுக்கு வருகிறீர்களா என்று கேட்டார். அது தான் உங்களிடம் கேட்டு சொல்லுவதாக சொன்னேன்” என்று கூறியதுக்கு பிரதாப். உடனே சிறிதும் யோசிக்காமல் வீட்டுக்கே வருவதாக சொல்லிவிடுங்க.” என்று கூறி செல்லை அணைத்து விட்டு மகிழ்ச்சியுடன் மாடி ஏறினான்.

தன் ரூமுக்கு வந்ததும் பாத்ரூமுக்குள் நுழைந்து ஷவரின் அடியில் நின்று நிதானத்துடன் நீர் துளிகள் தன் மேல் விழுவதை கண் மூடி அனுபவித்தான். தன் மேல் விழும் நீரின் குளுமை பத்மினியை நினைவு படுத்தியது.

குளித்து முடித்ததும் டவளை மட்டும் கட்டிக் கொண்டு கண்ணாடி முன் வந்து நின்றான். கண்ணாடியில் தன் உருவத்தை மிக நிதானமாக ஒரு முறை பார்த்தான். அவன் எப்போதும் தன் உடலை நேர்த்தியாக பாதுகாப்பான்.

தன்னுடைய ஹார்ட்வொர்க்கிலும் தவறாது ஜாகிங்க்கு செய்வான். பின்பு ஜிம்முக்கு செல்வான். அதனால் அவன் உடல் எப்போதும் ஃபிட்டாகவே இருக்கும். ஏன் ஒரு சமயம் ஆண் மாடல் வரவில்லை. அன்று நிறைய செலவு செய்து செட்டிங் எல்லாம் செய்திருந்தார்கள். அன்று சூட்டிங் நடக்கவில்லை என்றால் நிறைய லாஸ்.

அதனால் அப்போது அந்த விளம்பரத்தின் டைரக்டர் பிரதாப் சார் நீங்களே இந்த விளம்பரத்தில் நடிக்கலாம். அந்த விளம்பர மாடலுடன் நீங்களே இதுக்கு பர்பெக்டா இருப்பீங்க என்று கூறியும் பிரதாப் மறுத்து விட்டான். அவர் அவர் தொழில் அவர்களுக்கு என்று கூறி.

அப்படி பட்டவன் தன்னை அவளுக்கு பிடிக்குமா? என்று திடீர் என்று சந்தேகம் ஏற்ப்பட்டது. அன்று ஒட்டலில் கூட அவள் நம்மை பார்க்க வில்லையே! இல்லை ஏற்கனவே அவள் மனதில் யாராவது ! நோ……. அந்த நினைவே அவனுக்கு வேப்பங்காயாக கசந்தது.

பின் நினைவு வந்தவனாக அன்று பேட்டியில் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் தான் சிறந்தது என்று அன்று அவள் கூறியது நினைவுக்கு வந்தது. பிறகு தான் மனம் சிறிது சமாதானம் ஆனாது.பின் திரும்பவும் கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தை பார்த்தான்.

அவன் எப்போதுமே டிரஸ்ஸில் மிகவும் அக்கறை செலுத்துவான். தன் தொழிலுக்கு டிரஸ்சென்ஸ் மிகவும் முக்கியம். அதுவும் இல்லாமல் அவன் பல தொழில்முறை பார்ட்டிக்கு செல்வான். அவன் எப்போதும் தான் தனித்து தெரியவேண்டும் என்று விரும்புவான்.

அதனாலும் அவன் டிரஸ்சில் ஒரு தனித்துவம் இருக்கும். ஆம் அவன் எப்போதும் கடைகளில் சென்று தன் உடைகளை எடுக்க மாட்டான். தனக்கு என்றே உடை வடிவமைப்பாளர் தனியாக உடையை அமைத்துகொடுப்பார். அவன் அதைத்தான் எப்போதும் அணிவது. அவனின் டிரஸ் சென்சுக்கே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அப்படி பட்டவன் தான் என்ன உடை அணிவது என்று குழம்பிக் கொண்டிருந்தான். ஒன்றை எடுத்து அணிவது பின் அது அவளுக்கு பிடிக்குமா பிடிக்காதா என்ற யோசனையில் அதை களைந்து வேறு ஒன்று உடுத்துவது, என்று இதற்கு என்றே அரை மணி நேரம் செலுத்தினான்.

பின் ஒரு வழியாக ஒரு உடையை தேர்வு செய்து உடுத்திக் கொண்ட பிறகு இந்த கலர் அவளுக்கு பிடிக்குமா? என்று மாபெரும் சந்தேகம் எழுந்தது. அவன் யோசனையுடன் கண்ணாடியை பார்த்துக் கொண்டிருக்கும் போது அசோக்கை அப்போது தான் கண்ணாடியில் கண்டான்.

கண்ணாடியில் இருந்து பார்வையை திருப்பி “நீ எப்போது வந்தாய்? என்று வினாவினான்.”ஏன் கேட்க மாட்ட ஒன் அவறா நான் இங்கேயே தான் இருக்கிறேன். நீ டிரஸ் பண்ணி முடிப்பேன்னு காத்துக்கிட்டு இருக்கேன் நீ எங்கே முடிக்கிற மாதிரியே தெரியலே “ என்று கூறி பெரு மூச்சி விட்டான்.

“ஏண்டா எவ்வளவு தைரியம் இருந்தால் நான் டிரஸ் பண்ணுவதை பார்த்தது இல்லாமல் அதை என்னிடேமே சொல்லுவே”.என்று கண்களில் குறுநகையுடன் வினாவினான்.

“நான் ஏண்டா? பார்க்க போறேன் , என் கண் குருடாவதற்கா! நான் திரும்பி தான் நின்றேன். சரி நீயே டிரஸ் பண்ணி முடிப்ப நாம எதற்க்கு டிஸ்டர்ப் பண்ணனும் என்று வெயிட் பண்ணேன்” என்ற நண்பனிடம் அசோக் இந்த டிரஸ் எனக்கு நல்ல இருக்கா?” என்று வினாவினான்.

அசோக் யோசனையுடன் பிரதாப்பை பார்த்த வாறே! “முதலில் உனக்கு ஒன்றும் இல்லையே” என்று எதிர் கேள்வி கேட்டான்.

“என்னடா சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் கேள்வி கேட்குறே?”

“யாரு? நானா ! நான் சம்மந்தம் இல்லாமல் கேள்வி கேட்கிறேன். உன்னுடைய டிரஸ் சென்ஸ் டெல்லியிலேயே புகழ் பெற்றது. அப்படி பட்டவன் வந்து என் கிட்ட வந்து நல்லா இருக்கான்னு கேட்டா நான் என்ன சொல்வது நீயே சொல்”? என்ற அசோக்கின் பேச்சில் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

பின் மெதுவாக “அசோக் என் டிரஸ் சென்ஸ் மற்றவர்களுக்கு பிடிப்பதை பற்றி இனி மேல் எனக்கு கவலை இல்லை. மினிக்கு பிடிக்குமா? அதுதான் என் கவலை.”என்ற நண்பனை நினைத்து அவனுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

அவன் மற்றவர்கள் பற்றி அவ்வளவாக என்றைக்கும் கவலை பட மாட்டான்.அப்படி பட்டவன் இன்று அவனின் மாற்றம் அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது, காதல் வந்தால் ஒருவனுக்கு இவ்வளவு மாற்றத்தை கொண்டு வர முடியுமா?என்று வியந்து போனான். இன்னும் சிறிது நாளில்… இல்லை இன்னும் சிறிது நேரத்தில் தான் காதலில் விழுந்து அதை உணர்வு பூர்வமாக அனுபவிக்க போகிறோம் என்று தெரியாமல்.

தன் யோசனையில் இருந்து கலைந்து “உனக்கு என்னடா எந்த டிரஸ் போட்டாலும் நல்லா இருக்கும்”என்றுக் கூறிக் கொண்டே அணைத்தான்.

பிரதாப் அசோக்கை பார்த்து சிரித்துக் கொண்டே”இப்போது எல்லாம் நீ நிறைய தடவை என்னை கட்டி கட்டி பிடிச்சுக்கிறே. என்ன விசயம் என்ன கல்யாணத்துக்கு பெண் பார்த்துடலாமா?” என்று கூறி கண்ணாடித்தான்.

“முதலில் உன் பைத்தியத்தை தெளிய வைப்போம். பிறகு என்னுடையதை பார்த்துக்கலாம்.”என்று கூறினான்.

அசோக்கை பார்த்து ”நீயும் என்னோட வரியா”?என்று வினாவினான்.

அசோக் பிரதாப்பை பார்த்து முறைத்த வாறே “ஏண்டா சொல்ல மாட்ட என்ன பார்த்த எப்படி இருக்கு?நான் கிளம்பிட்டு உன்னை கூப்பிட்டு போகலாமுன்னு தான் வந்தேன்.என்ன பார்த்து வரியான்னு அசால்ட்டாக கேட்கிறே.”என்ற நண்பனின் பதிலில் மகிழ்ச்சி அடைந்து அணைக்க போகும் போது தான் கூறியது நினைவு வந்தவனாக சிரித்துக் கொண்டே அவன் முகம் பார்த்தான். அவனும் தன்னையே சிரித்துக் கொண்டு பார்த்திருப்பதை பார்த்ததும் எதையாவது நினைத்துக் கொள்ளடா… என்று அணைத்திருந்தான். இந்த மகிழ்ச்சி பிரதாப்புக்கு நிலைக்குமா…..?
 
ஹா ஹா ஹா
டெல்லியிலேயே டிரஸ் சென்ஸ்-ல
பேமஸ் ஆன ஆளுக்கு தன்னோட
டிரஸ் பத்மினிக்கு பிடிக்குமா
பிடிக்காதான்னு கவலையைப்
பாருங்கப்பா
எது எப்படியிருந்தாலும் பத்மினியை நீ கல்யாணம் செஞ்சு டெல்லிக்குக் கூட்டிட்டுத்தான் போகப் போறே
அப்புறம் என்ன
கவலையை விடு, பிரதாப்
 
Last edited:
:love: :love: :love:

ஆஹா இவனுக்கு பைத்தியம் முத்திடுச்சு போலவே........
பத்மினி எதுவும் negativeவா சொல்லிடக்கூடாது......
அப்புறம் இவனை தெளிய வைக்க முடியாது.......
அசோக் வேற பாவம் :D

போறது அக்கா வீட்டுக்கு........ ஆனால் அவங்களுக்கு யாருன்னே தெரியாது.......
என்ன கொடுமை :cry::cry::cry:

என் அக்கா மகளே பத்மினி :p
 
Last edited:
Top