Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன்! 01 (B)

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
01 (B)

அதுவரை ஒதுங்கி நின்றவர்கள் மேடையை நோக்கி வர, கோகிலாவை தன்னோடு சேர்த்து பிடித்துக்கொண்டார் தங்கம். யாரோ தண்ணீர் கொண்டு வந்துக்கொடுக்க, இறுக்க மூடியிருந்த அவள் அதரங்களை பிரித்து நீரை புகட்டுவதற்க்குள் பெரும்பாடுபட்டனர்.



கிஷோரின் பெற்றோர் பார்வையாளராக மட்டுமே அதுவரை இருக்க, மகனுக்கு அடிப்பட்டதும் அவன்மீதான அவர்கள் கோவம், மனத்தாங்கல் எல்லாம் பின்னுக்கு போய்விட, வலியில் அலறுபவனை கவனிக்கத்தொடங்கினர்.



தங்கம் வந்து பிடித்துக்கொண்ட பின்னும் அடங்காமல் அவள் திமிறிக்கொண்டிருக்க, மேலும் சிலர் வந்து அவளை பிடிக்க வேண்டியதாய் போயிற்று. அவள் கண்களில் கிஷோரின் மீதான வெறுப்பு அப்பட்டமாய் தெரிந்தது.



அடிப்பட்ட வலியை விட எல்லோர் முன்னும் ஏற்ப்பட்ட அவமானம் கிஷோரை வெகுவாய் சூழ, விருட்டென எழுந்தவன், “ஏய் என்னடி ஓவரா ஆடுற?” என்றான் ஆத்திரமாய்.



வலி அவனை வேகமாய் நடக்க விடாது செய்தாலும் அதை பொருட்படுத்தாது அவளை நெருங்கியவன், “வராத மாப்பிள்ளைக்கு, கட்டுன புருஷனை அடிக்குறியா? ஆல்ரெடி நான் உனக்கு நிறைய குடுக்கணும்ன்னு நினைச்சுட்டு இருக்கேன், இப்போ அந்த லிஸ்ட் ஏறிட்டே போகுது!!” என அவன் உறும,



“உன் முகத்தை பார்க்கக்கூட புடிக்கலடா எனக்கு!! உண்மையை சொல்லு என் மாமாவை என்ன செஞ்ச?” என்றாள் அவன் சட்டையை கொத்தாக பிடித்து,



“அவனை நான் என்ன செய்ய போறேன்? ஐ டின்ட் டூ எனிதிங்! ரியாலிட்டி பேஸ் பண்ண முடியாம அவன்தான் எங்கயோ ஓடி ஒளிஞ்சுருக்கான்!” கிஷோர் தன்னை காட்டிக்கொடுக்காமல் சபையில் பேச, “இல்ல, பொய் சொல்ற! மாமா செத்துட்டாருன்னு நீ சொல்லல?” என்று கோகிலா அவனுக்கு மேல் கத்த, “உனக்கு பைத்தியம் தான் பிடிச்சுருக்கு கோகிலா!!” என்றான் கிஷோர்.



‘இந்த பொண்ணு ஏன் பைத்தியம் மாறி நடந்துக்குது?’

‘ஏதோ வியாதி இருக்கும் போல, அதான் அரக்கபறக்க கல்யாணத்தை வச்சு தாட்டிவிடலாம்ன்னு பார்த்துருக்காங்க’

‘ஒரு வேலை இது தெரிஞ்சுதான் இன்பன் தம்பி ஓடிருச்சோ?’



ஊர் வாய் அதன் வேலையை செம்மையாக செய்ய தொடங்கியது.



"உன்னை கொன்னுடுவேன்டா, மரியாதையா சொல்லு, எங்க என் மாமா!??" கோகிலா அடிக்குரலில் கத்த, "கோகிலா, மாப்பிளைக்கிட்ட மரியாதையா நடந்துக்கோ! அவர் இப்போ உன் புருஷன்" ஊரே வேடிக்கை பார்க்க தாலி கழுத்தில் ஏறி முழுதாய் ஐந்து நிமிடங்கள் கூட முடிந்திருக்காத நிலையில் சம்பந்தி வீட்டார் முன்னே இவள் இப்படி நடந்துக்கொள்ள, கோகிலாவை அதட்டினார் செல்லம்.



யார் பேசுவதும் அவள் செவிப்பறையை சென்று சேர்ந்ததை போலவே தெரியவில்லை. கண்கள் கிஷோரை மட்டுமே திண்ணமாய் வெறிக்க, அவளை பிடித்திருந்தவர்களின் பிடி சற்றே தளர்ந்தால் கூட அம்மிக்கல்லை எடுத்து அவன் தலையில் போட்டுவிடும் வேகம், ஆத்திரம் அவளிடம்...!



"அங்கிள், ஐ தின்க் ஷீ நீட்ஸ் அ மெடிக்கல் கன்சல்ட்! ரொம்ப டிப்ரெஷன்ல இருக்காங்க போல!!! லெட்ஸ் டேக் ஹர் டூ தி ஹாஸ்பிடல்!!" கிஷோர் நல்லவனாய் ஷங்கரிடம் சொல்ல, மகளது செய்கையில் அதிர்ந்து போயிருந்தவர், அந்நிலையிலும் தான் தேர்வு செய்திருந்த மாப்பிள்ளையை நினைத்து பூரித்து போனார்.



இதே வேறொருவனாய் இருந்தால் தன்னிடம் குடும்பத்துடன் சேர்ந்து சண்டை அல்லவா போட்டிருப்பான்! இப்படியா தன் மகளின் நலனை வேண்டுவான்? என்று சிலாகித்துக்கொண்டார்.



"செல்லம், கோகிலாவை இழுத்துட்டு வா, முதல்ல இங்கிருந்து போகலாம்" ஷங்கர் குரலுக்கு செல்லம் செயல்பட, கோகிலா அசைந்தாலில்லை.



"நான் எங்கேயும் வரமாட்டேன்... வரவும் முடியாது... முதல்ல இன்பனை எங்க வச்சுருக்கான்னு கேட்டு சொல்லுங்க!!" என்ற கோகிலாவின் குரலில் இம்மியும் கெஞ்சலில்லை, ஆங்காரமும் ஆத்திரமும் மட்டுமே!



"கோகிலா, வளர்ந்த பொண்ணை கை நீட்ட கூடாதுன்னு பார்க்குறேன்! மரியாதையா எங்களோட வா" ஷங்கர் பொறுமையற்ற குரலில் சொல்ல, சத்தியராஜின் பிடியை உதறியிருந்தான் காண்டீபன்.

"கோகிலா இங்கிருந்து வரது இருக்கட்டும்! முதல்ல இன்பனை எங்க வச்சுருக்கீங்கன்னு சொல்லுங்க" என்றான் காண்டீபன்.



“அவன் எங்கயோ ஓடி ஒழிஞ்சதுக்கு எங்களை கேள்வி கேட்டா என்ன அர்த்தம்? நீயும் உங்க குடும்பமும் எங்களை அசிங்கப்படுத்தனும்ன்னே குறியா இருக்கீங்க! இப்படி ஒரு தங்கமான மாப்பிளையை நான் பிடிச்சுருக்கேன்னு உங்களுக்கெல்லாம் பொறாமை! எங்க உயரம் பொருக்காம தான் இப்படி செஞ்சுட்டு இருக்கீங்க! என் பொண்ணை வசியம் செஞ்சு உங்க பக்கம் இழுத்த மாறி என்னையோ என் மாப்பிளையையோ உங்களால ஒன்னும் செய்ய முடியாது! மரியாதையா இடத்தை காலிப்பண்ணுங்க” படபடவென பொரிந்தார் ஷங்கர்.



“உங்கமேல தப்பு இல்லனா எதுக்கு பதட்டப்படனும்? முகூர்த்தம் வரைக்கும் இங்க இருந்தவன், கடைசி நேரத்துல காணாம போய்ட்டான்! உங்க மாப்பிளைக்கும் இன்பனுக்கு நடுவுல தான் போட்டி இருந்துச்சுன்னு எல்லாருக்குமே தெரியும்! அப்போ அவன் காணோம்ன்னா அதை உங்ககிட்ட கேட்காம வேற யார்க்கிட்ட கேட்க முடியும்?” அடக்கப்பட்ட கோவத்துடன் வெகு நிதானமாய் கேட்டான் காண்டீபன்.



“உன் அண்ணனை காணோம்ன்னா அது உங்க வீட்டு பிரச்சனை தம்பி! இப்படி என் பொண்ணுக்கு நல்லது நடக்குற இடத்துல வந்து பிரச்சனை பண்ணாதீங்க” கண்ணை கசக்கிக்கொண்டே சொன்ன செல்லத்திடம் அவன் எதுவும் பேசவில்லை.



வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த கூட்டமும் ஆளாளுக்கு பேச, அதில் சொற்ப சிலர் ஷங்கரின் பக்கம் நின்றனர். ‘என்ன இருந்தாலும் பொண்ணை பெத்தவன்ப்பா!’ என்ற இரக்கம்!



ஊருக்கே நியாயம் சொல்லும் ஒண்டிவீரர் குடும்பத்தில் சச்சரவு! ஒரு வார்த்தைக்கூட ஒண்டிவீரரின் வாய்மொழியாய் வரவில்லை. ஓய்ந்த உருவில் அமர்ந்துவிட்டார். சிவகாமிக்கு கோகிலாவை பார்க்க பார்க்க, பல வருடங்களுக்கு முன்னே கண்ணீரும் கேவளுமாய் மேடையில் தனித்து நின்ற தங்கத்தின் நினைவு வர, ‘எதுவோ தப்பா நடக்கும்ன்னு என் மனசு கடந்து அடிச்சுக்கிச்சே! அதேமாறியே ஆகுதே!’ என விசும்பினார்.



வலுவாய் தாக்கப்பட்ட கால் முட்டியை பிடித்துக்கொண்டே, “அங்கிள், டோன்ட் வேஸ்ட் டைம் ஹியர்! நாம கிளம்பலாம்!” என்ற கிஷோரின் வார்த்தைகளை வேதவாக்கென எடுத்துக்கொண்ட ஷங்கர், “போய்டலாம் மாப்பிளை” என்று பயபக்தியோடு சொல்லிவிட்டு, “ஏய்.. கோகிலா? கிளம்பு” என்றார் அதிகாரமாய்.



கோகிலாவின் ஆங்காரம் நூற்றில் ஒரு பங்கு குறைந்திருக்க, “முடியாது” என்றாள் உறுதியாய்.



“ஒழுங்கா வந்துடு கோகிலா, தேவையில்லாம என்னை கை நீட்ட வைக்காத” கண்ணை மூடி கடுங்கோவத்துடன் சொன்ன ஷங்கரை கண்டு அவளுக்கு சிறிதும் அச்சமில்லை.



மீண்டும், “முடியாது!!” என்றாள்.



அழுகையிலேயே கரைந்த தங்கம், “எல்லாரும் பார்க்குறாங்க கண்ணு! வீட்டுக்கு போய் பேசிக்கலாம்! கிளம்புடா!” என தன்மையாய் சொல்ல, “வாயை மூடு நீ! நல்லவங்க மாறி வேஷம் போட்டு, வேஷம் போட்டே என் பொண்ணை மயக்கி வச்சுருக்கீங்க, இந்த அறிவுகெட்டவளும் இதெல்லாம் நம்புறா!” என்று கத்திய செல்லம் கோகிலாவின் கரம் பிடித்து அவளை மேடையில் இருந்து தரதரவென இழுத்துக்கொண்டு சென்றார்.



இன்னொருவனுக்கு மனைவி என்றானபின் கோகிலாவை என்ன சொல்லி தடுத்து நிறுத்துவது என காண்டீபனுக்கு தெரியவில்லை.



“கையை விடும்மா! எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை!!” பிடித்திருந்த செல்லத்தின் கரத்தை உதறிக்கொண்டே கோகிலா கத்த, இடியென அவள் கன்னத்தில் இறங்கியிருந்தது ஷங்கரின் கரம்!



“ப்பா....!!!” விக்கித்து போனாள் கோகிலா.



“நானும் பொறுத்து பொறுத்து பார்க்குறேன்! ரொம்ப அதிகமா போற! உனக்கு குடுத்த பிரீடம்ம நீ சரியான வழியில உபயோகிக்கல கோகிலா! அமைதியா எங்ககூட வா!!” என்று அவர் உறும,



“முடியாதுப்பா! என்னால இன்பனை தாண்டி யார் கூடவும் வாழ முடியாதுப்பா” என்றாள் மெல்லிய குரலில் அதீத திடத்துடன்.

கிஷோரின் நயனங்கள் உச்சக்கட்ட வெறுப்பை கோகிலாவின் மீது பாரபட்சமின்றி கொட்டியது.

‘நான் தாலி கட்டின பிறகும் நீ அவன் கூட தான் வாழ்வேன்னு சொல்றியா?’ என்ற புகைந்தான் உள்ளுக்குள்.



“இன்னொரு முறை அடிக்க வைக்காத கோகிலா!” என்ற ஷங்கர் ஆழ மூச்செடுத்து முயன்றெடுத்த பொறுமையுடன், “கிஷோர் போட்ட தாலி உன் கழுத்துல இருக்கு! இந்த ஜென்மத்துக்கு கிஷோர் தான் உன் புருஷன்” என்றார்.



“ப்பா! தாலி கட்டுறவன் எல்லாம் புருஷனாகிட முடியாது! தாலிக்கான மரியாதை அதை கட்டுனவனை பொருத்தது. இப்போ என் கழுத்துல தொங்குற தாலி, எனக்கு தூக்குக்கயிரா தான் தெரியுதுப்பா! ஒவ்வொரு விஷயத்தையும் என்னோட விருப்பத்தை கேட்டு கேட்டு செய்யுற நீங்க, இவனை நான் பிடிக்கலன்னு சொல்லியும் எதுக்காகப்பா என்னை கட்டாயப்படுத்துறீங்க?”



‘அட, இந்த புள்ளைக்கு தான் அவனை புடிக்கலையாமே!?’

‘கருப்பா இருந்தாலும் நம்ம இன்பன் லட்சணம் வருமா யாருக்கும்?’

‘புடிக்காத புள்ளையை போய் கட்டிக்கிட்டு என்னமா வாழ்ந்துருவான் இவன்!?’



கிடைத்துவிட்ட புது செய்தியில் புரளி சூடு பிடித்தது.



“கோகிலாவுக்கு இஷ்டம் இல்லனா விட்டுடு ஷங்கர்! போர்ஸ் பண்ணாத!” முதன்முதலாய் பேசினார் சிவகுரு! தன் மகனுடன் வாழ்ந்தாலும் அவள் வாழ்க்கை வீணாகத்தான் போகும் என்று அறிந்து. ஆனால் அவர் அதை சொன்ன கணம், வெடுக்கென திரும்பிய கிஷோரின் முகம், அதில் தெரிந்த ரௌத்திரம், அவர் நெஞ்சுக்கூட்டை அதிர வைக்க அடுத்து எதுவுமே அவர் பேசவில்லை.



பேச்சு அதன் போக்கில் நடந்துக்கொண்டே இருக்க, முற்றிலுமாய் முற்றுப்புள்ளி வைக்க அங்கே வந்து சேர்ந்தனர் காவல் துறை அதிகாரிகள். கிட்டத்தட்ட பத்து பேருக்கு பக்கம் இருப்பர். திடீரென காவல்துறையினரின் வரவு எல்லோரையும் புருவம் நெரிக்க வைக்க, அவர்களை அணுகிய காண்டீபன், “சார், ஏதாவது பிரச்சனையா?” என்றான். ஒருவேளை இன்பன் அனுப்பியிருப்பானோ என்ற எண்ணம்.



அவனுக்கு பதில் சொல்லும்முன்னே, பட்டு வேஷ்டி சட்டையில் பளிச்சென நின்றிருந்த கிஷோர் கண்ணில் பட்டுவிட, “இதோ, இவரை தேடித்தான் இத்தனை தூரம் வந்தோம்” என்ற இன்ஸ்பெக்டர் அவன் அருகே சென்று சட்டை காலரை கொத்தாக பிடித்து இழுத்து வந்தார்.



இதை ஒருவருமே எதிர்ப்பார்க்கவில்லை. சிவகுருவுக்கு போலிஸ் வந்ததற்கான காரணம் தெரியும் என்பதால் அமைதியாய் இருக்க, ஷங்கர் தான் துள்ளினார்.



“ஹெலோ, இன்ஸ்பெக்டர்! என் மாப்பிளை யாருன்னு உங்களுக்கு தெரியுமா? கொஞ்சம்கூட மரியாதை இல்லாம காலரை பிடிச்சு அழைச்சுட்டு போறீங்க? முதல்ல கையை எடுங்க” என்று குரலுயர்த்த, “முதல்ல உங்க மாப்பிள்ளை யாருன்னு உங்களுக்கு தெரியுமா? ஏன் சார், யாரு என்னன்னு கூட சரியா விசாரிக்காம பொண்ணை தூக்கி கொடுத்துடுவீன்களா? ஏற்கனவே பாரின்ல ஓரு பொண்ணுக்கிட்ட தப்பா நடந்துக்கிட்டு போலிஸ் கேஸாகி, அப்பறம் அவங்க அப்பா பெரும்பாடுபட்டு இவனை இங்க கூட்டிட்டு வந்துருக்காரு” என்றிட,

ஷங்கர், “சார், நீங்க வேற யாரோன்னு நினைச்சு என் மாப்பிள்ளையை பத்தி சொல்றீங்க?” என்று அதீத நம்பிக்கையில் சொல்ல,



“எல்லாம் இந்த ஃபிராட பத்திதான் சொல்றேன்! பத்து நாளா இவனை தான் வலை வீசி தேடிக்கிட்டு இருக்கோம், கேடிப்பய இந்த ஊருக்கு வந்து ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுக்க பார்த்துருக்கான்!!” என்றதும்,



“சார், என் மேரேஜ்க்காக தான் நான் இங்க வந்தேன்! நீங்க என்னை தப்பா நினைக்குறீங்க!” என்று சொன்னான் கிஷோர்.



“உன் அப்பன் எங்க? அவனுக்கு போன் போட்டா கொஞ்ச நேரத்துல கூப்புடுறேன்னு சொல்லிட்டு போனையே தூக்கி எங்கயோ வீசிட்டான்! நீங்க போன் எடுக்கலன்னா என்னால உங்களை கண்டுபுடிக்க முடியாதுன்னு நினைச்சீங்களா? ரெண்டு நாளா எல்லார் போன்லயும் உன் மூஞ்சி இருக்கு, எப்படின்னு பார்க்குறியா?” என்று கேட்ட இன்ஸ்பெக்டர் அவர் மொபைலை எடுத்து காட்ட, அதில் இன்பன் அடித்த பேனர் இருந்தது.



“அரிய வகை படிப்பு” என்ற தலைப்பில் இன்பன் வைத்த ‘பிலாப்பி’ கட்டவுட் வைரலாகியிருக்க, அதில் இருந்த கிஷோரின் முகத்தையும், கூடவே இருந்த முகவரியையும் பின்பற்றி உள்ளூர் போலீசின் உதவியோடு அவனை தேடி வந்திருந்தனர் காவலாளிகள்.



இப்போது ஷங்கரின் சுருதி கொஞ்சம் குறைய, “என்ன கேஸ் சார்” என்றார்.



“ம்ம்? போதை மருந்து விற்பனை மற்றும் கடத்தல்!!” என்று அவர் தலையில் இடியை இறக்கினார் இன்ஸ்பெக்டர்.



“இவனும் இவன் பிரண்ட்ஸும் சேர்ந்து பல லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி, அதை பாரின் சாக்லேட்டுங்குற பேருல இல்லீகலா சென்னைல இருக்க பல ஸ்கூல் காலேஜ்ல வித்துருக்காங்க! ரெண்டு மாசமா இவங்க செஞ்சது எங்களுக்கு இன்பார்மர் மூலமா தெரிய வர, இவன் கூட்டாளிங்க எல்லாரையும் பிடிச்சுட்டோம்! இவன் மட்டும் எப்படியோ எங்களுக்கு தண்ணீ காட்டிட்டு வந்துட்டான்!!” என்றார் கோவமாய்.



கிராமத்து திருமணத்திற்கு ஓகே சொல்லி அதிரடியாய் அவன் இங்கே கிளம்பி வந்ததற்காக காரணம் வெளிவந்தது.



“இவனெல்லாம் ஒரு மனுஷன்னு மதிச்சு, கொஞ்சமும் விசாரிக்காம பொண்ண குடுத்து அது வாழக்கையை கெடுக்குறீங்களே!” என்ற இன்ஸ்பெக்டர், “உங்க பொண்ணு வாழ்க்கையை இனியாவது காப்பாத்துங்க!! ஏன்னா இவன் வெளில வர வாய்ப்பே இல்லை! ட்ரக் கேஸுக்கு ஜாமீனே கிடையாது!!” என்றுவிட்டு “இவனை பெத்த நீங்களும் எங்களோட வரணும்! குற்றவாளியை தப்பவிட்ட குற்றத்துக்காக” என்று சொல்ல மறுபேச்சின்றி கிளம்பினர் சிவகுரு தம்பதி.



ஷங்கருக்கு என்ன நடக்கிறதென்றே விளங்கவில்லை. தங்கமென தான் பார்த்த மாப்பிள்ளை மீது அவச்சொல்லா? அவனை இழுத்துக்கொண்டு செல்கின்றனரே? கிஷோரின் மீது தவறிருக்க வாய்ப்பில்லை! தவறில்லை எனில் சிவகுரு ஏன் ஒன்றும் பேசாது அவர்கள் பின் செல்ல வேண்டும்? அப்போது இனி கோகிலாவின் நிலை!???? ஷங்கருக்கு தலை தட்டாமாலை சுற்ற,



“ஒரு நிமிஷம் நில்லுங்க” என்ற கோகிலாவின் கணீர் குரலில் தன்னை சமன் செய்தார் அவர்.



கிஷோரை நெருங்கிய கோகிலா, “என் கழுத்துல தாலி கட்டுனதும் பெருசா ஜெயிச்சுட்டோம்ன்னு நினைச்சியா? ம்ஹும்!! இரண்டு பேருக்கான உறவுங்குறது தாலிலையோ, மோதிரத்துலையோ இல்ல கையெழுத்துலையோ உருவாகிறது இல்லை!! மனசுல இருந்து வரணும்! என் மனசுல இருக்க இன்பன், கட்டுனா மட்டும் தான் இது தாலி! இப்போ இது வெறும் நெக்லஸ், ஆரம் மாதிரி ஒரு கோல்ட் ஆர்னமென்ட், அவ்வளோதான்!!” என்ற கோகிலா,



அடுத்து யாருமே யோசிக்காத, அந்த ஷணத்தில், இரும்பு குண்டென பாரமாய் தன் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலியை ஒற்றை கையால் கழட்டி, துவேஷத்துடன் நின்றிருந்த கிஷோரின் முகத்தில் விசிறியடித்தாள்.

“பொறுக்கிட்டு போ!!” பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்பியவள் ஊரே திறந்த வாய் மூடாது பார்த்துக்கொண்டிருப்பதை பொருட்படுத்தாது அங்கிருந்து நிமிர்வான நடையுடன் விலகிவிட்டாள்.



“சார்..... சார்ர்ரர்ர்ர்ர்.... கொஞ்சம் வண்டியாய் எடுங்க, லாரி போக வழியில்லை” எவனோ ஒருத்தன் கத்த, தூக்கத்தில் இருந்து விழிப்பவன் போல எழுந்த காண்டீபன் நினைவுகளை விலக்கித்தள்ளி, காரை எடுத்துக்கொண்டு இயந்திரகதியில் வேறு இடம் சென்றான், பேரின்பனை தேடி...!!!!


-வருவான்...
 
Top