Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 10 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 10 ❤️‍🔥


"ஓர் வாக்கினில் வாழக்கை - வர்ணம் கொண்டே வாசனை சேர்க்குமா....!?"




தாத்தாவின் புன்னகையில் அவரையே கண்ணிமைக்காது பார்த்திருந்தாள் ரிதம்.

"என்ன தங்கம்!? அங்க பாரு உன் பையன் நீ வந்தா தான் சாப்பிடுவேன்னு உட்கார்ந்து இருக்கான் பாருத்தா அவனுக்கு முதல்ல ஊட்டு!" என்க.

ஏகன்,சிதம்பரம்,வேல் மூவரும் உணவருந்த அவர்களை வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்திருந்தான் அகரன் அவனை அப்பொழுது தான் பார்த்தாள்.

"ஏன்டா ஜாமுன் ஏன் இன்னும் சாப்பிடாம இருக்க!?" அவள் வினவ

'அது.. அது..' தயங்கினான் பிள்ளை.

"சொல்லுடா? கண்ணா என்ன வேணும் சொல்லு?"என்றவாறு அவனை தூக்கி இடுப்பில் வைக்க.

ஒய்யாரமாய் அமர்ந்தவன் "எனக்கு நீங்க சாப்பாடு செஞ்சு தரீங்களா!?" என்றான்.

"அகரன்"என்று தந்தையாய் கண்டிக்க ஏகன் முன்வர

"நீ கேட்டா சரி தான்.ஆனா நான் சமைப்பேன்னு யார் உனக்கு சொன்னது!?"

"இதோ இந்த புது தாத்தா தான் சொன்னாங்க!" பிள்ளை வேல் தாத்தவை கைகாட்டி மொழிய.

மண்டையில் அப்போதுதான் பிரபை அவளுக்கு மணி அடித்தது.

"அவங்க பேரு வேல் உனக்கு தாத்தா. என் பேரு ரிதம்!" என்று முறையாக அறிமுகமாக

"ஓஹ் உங்க நேம் ரிதமா. நான் அகர மகிழ்வன்" தன்னையும் முறையாக அறிமுகம் செய்தான் பிள்ளை.

"ஆனா நீங்க என்ன ஜாமுன்னு கூட கூப்பிடுங்க அதுதான் எனக்கு பிடிச்சிருக்கு!"
உடன் தன் விருப்பமும் பகிர்ந்தான்.

"சரிங்க ஜாமுன் நான் உங்களுக்கு என்ன செய்யட்டும்!?" என்று அவன் பிடித்தம் கேட்க

"எனக்கு இடியாப்பம் வேணும்!" என கேட்க.


இத்தனை நாட்கள் கொடுக்கும் உணவை வாங்கி சாப்பிடும் பிள்ளை.தகப்பன் தன்னிடம் கூட இது வேண்டும்.. அது வேண்டும் என்று இதுவரை அடப்பிடிக்காத மகன்.முதன் முதலாக கேட்டது 'அவள் வேண்டும்' என்றது.இரண்டாவது அவளின் கையால் உணவு.

'இன்னும் அவளிடம் என்ன என்ன மகன் வேண்டி நிற்க போகிறான்!?' என்ற கோபமும் கூட அவனுக்கு துளிர்த்தது.

"அகரா" என்ற ஏகன் கண்டிப்பு குரல் எல்லாம் காற்றில் கரைந்து போனது.

ஏகன் மீதான கோபத்தை பச்சை பாலகனிடம் காண்பிக்க அவள் ஒன்றும் 'கொடுசூரி' அல்லவே.

'ஆதலால்!'

அவனை இடையில் இடுக்கி கொண்டு சமையல் அறை சென்றாள்.
சுத்தம் என்றால் சுத்தம் அப்படி ஒரு சுத்தம்.
துளி கரையும் இல்லாத சிம்னி கூறிவிடும் அந்த சமையல் அறையின் சுத்த அளவீட்டை.அத்தனை சுத்தம் கண்டு அவள் மனம் லயித்தாலும் இது அவன் இல்லம் என்ற ஒன்றே வந்த 'வேலையை மட்டும் பார்' எனும் எச்சரிக்கை வழங்கியது.


அகரனை இடுப்பில் வைத்துக் கொண்டே அனைத்து வேலையும் பார்த்தாலும் அவளின் சிரமம் புரிந்த சிறுவன்
"நான் உங்க கூட நின்னுகட்டுமா!?" என்க.

"ஐயோ அழகி! என்கூட நின்னா தங்க புள்ளைக்கு கால் வலிக்குமே அப்போ என்ன செய்வீங்க கண்ணா!?"

"இல்ல நான் அப்பா போல ரொம்ப ஸ்ட்ராங் என் கால் எல்லாம் வலிக்காது!"

தன் புயங்கள் இரண்டையும் உயர்த்தி தன் பலத்தின் அளவீட்டை காண்பிக்கும் விதமாக நிற்க.

அவனோடு பேசிக்கொண்டே இருபது நிமிடத்தில் இடியப்பமும், தேங்காய் பாலும் செய்து முடித்து அந்த இடத்தை முன்பு இருந்ததை போலவே சுத்தமாக மாற்றிவிட்டு வெளியே வந்தாள்.

அவனுக்கும் தனக்கும் மட்டும் தான் செய்திருந்தாள் என்பதால் சிறுவன் தட்டில்
உணவு பரிமாற.

இப்பொழுது முட்டை முழியை உருட்டி அவளை பார்த்துக் கொண்டே
"ரசகுல்லா எனக்கு ஊட்டி விடுறீங்களா!?" பாவமாய் கேட்க

அவன் கேட்டும் மறுக்கும் மனம் அவளிடம் 'இல்லை' என்பதால் அவன் குருவி வாயை திறந்து கேட்க.

தன் கையில் எடுத்து சூடு போக ஊதி பதமாக அவன் வாயிற்குள் திணிக்க.


'உணவின் சுவையா!? அல்லது ஊர்த்துவையின் கைபக்குவமா!?'

எதுவோ ஒன்று குட்டியை பிடி உணவு இன்று அதிகமாக உண்ணச் செய்திருந்தது.

ஏகன் தன் வேலையை பார்க்க சென்றுவிட அகரன் தன் சிறு வண்டியில் தோட்டம் சுற்றும் வாலிபனாக கிளம்ப.

அதிக மாத்திரை உண்பதால் வேல் தாத்தாவிற்கு கண்கள் உறக்கம் வேண்ட அவர் சென்றுவிட்டார் அறைக்கு.


"அம்மாடி ரிதம்.." என்றவாறு வந்தார் சிதம்பரம் தாத்தா.

"சொல்லுங்க தாத்தா!" என்றவள்

அவர் எதையோ கேட்க வந்திருக்கிறார் எதுவானாலும் அவரே தொடங்கட்டும் என்று அமைதி காக்க.


"உனக்கு உண்மையா ஏகனை பிடிச்சிருக்காம்மா!?" வலையை விரித்து காத்திருக்க

அவளோ வலையில் சிக்க நான் மான் அல்ல ;வலையை கிழித்துக் கொண்டு வெளிவரும் வேங்கை என்று தன் பதிலால் நிரூபித்தாள்.

"உங்க பேரனை எனக்கு ஒரு வாரம் முன்ன தான் தெரியும் தாத்தா!" உண்மையை பட்டென்று போட்டு உடைத்துவிட்டாள்.


அவளின் மனம் திறந்த பேச்சு தாத்தாவை கவர்ந்தது.தன் நண்பனை போல மனதில் பட்டத்தை பேசும் குணம் கண்டு உள்ளம் நெகிழ இருந்தவர் தொடர்ந்தார்.

"ஆனா ஏகன் ஏன்மா அப்படி சொன்னான்!?"

"அது அகரன்காக சொன்னாரு தாத்தா!" அப்போதும் உண்மை தான் அவளிடம்.

"அவன் கேட்டது இருக்கட்டும்மா. ஆனா அவன் கேட்டது பத்தி நீ என்ன நினைக்கிற ரிதம்!?"

"தாத்தா நீங்க இப்படி கேட்டா நான் என்ன சொல்லட்டும்!?"

அவர் பேரனை அவரிடமே குறை சொல்ல சங்கடமாக இருந்தது.அவள் கூறுவது உண்மையாக இருந்தாலும் அவன் தாத்தாவிடமே எவ்வாறு அதனை உரைக்க இயலும் என்று தயங்க

"உனக்கு மனசுல பட்டத்தை சொல்லுமா தாத்தாவும் தெரிஞ்சுப்பேன் இல்ல!"

அவளை அறிய முயல.

"தாத்தா அவருக்கு கொஞ்சம் 'தான்' அப்படின்ற எண்ணம் போல.உனக்கு என்ன தோனுது!? அந்த மாதிரி எல்லாம் கேட்காம கல்யாணம் பண்ணிக்கலாம் சொல்றாரு!"

அவள் மனமே அவளை கேட்டது," ஏன்டி இவளே அப்போ அவன் உன்கிட்ட வந்து பெர்மிஷனா கேட்டா சரின்னு சொல்லிடுவியா!?" என்றிட.

அதை அடக்கிவிட்டு தாத்தாவிடம் பேச தொடங்கினாள்.

"எனக்கு அவர் சொன்னதுல உடன்பாடு இல்லங்க தாத்தா.."

"ஏன்மா அவன் ஏற்கனவே கல்யாணம் ஆனவன் ஒரு பிள்ளைக்கு அப்பன்னு நினைகிறியா!?"


எல்லா திசையிலும் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அவர் கேள்வி கேட்கவே வந்திருப்பது புரிய.

"தாத்தா நான் உண்மைய சொல்லிடுறேன். எனக்கு அவர் பேச்சு வார்த்தை பழக்கம் எதுவுமே பிடிக்கலை!" சிதறு தேங்காய் போட்டு உடைத்தாள்.

அவளின் பேச்சு மனம் சுணங்கினாலும் தன் குடும்பம் தழைக்க செய்ய இவளைவிட வேறு ஒரு பெண் இருப்பதாக அவருக்கு தோன்றவில்லை.

'பேரன் மனம் மாற்றும் மாருதம் அவளே!' என்பதை முன்பே உணர்ந்தார் போல அந்த தீர்க்கதரிசி.

ஏகன் தன் மகனை நினைக்க; தாத்தா தன் பேரன் ஏகனுக்காக அவளிடம் பேசி இருந்தார்.

பெரியவர் மனது அடித்துக் கூறியது இருவருக்கும் இடையில் சிறு புரிதல் இல்லாமை மட்டுமே உள்ளது என்பதை.
ஆதலால் ஏகனை முன்னிறுத்தி பேசினால் பெண்ணவள் மறுக்கலாம்; ஆனால் அகரன் அவனை முன்னிறுத்தி பேசினால் அவள் மறுப்பது கடினம்.

அப்படி அதையும் அவள் மறுத்தாள் எனில் அடுத்ததாக கைவசம் இருக்கவே இருக்கிறது சாதாரண அஸ்திரம் அல்ல 'பிரம்மாஸ்திரம்' ஒன்று.அதுதான் வேல் தாத்தாவின் வாக்கு.

'அதை வைத்தாவது அவளை ஒப்புக்கொள்ள செய்ய வேண்டும்!' என்பதில் மட்டும் பெரியவர் உறுதியாக இருந்தார்.


"அம்மா ரிதம் நீயே பார்த்த இல்லையா. இந்த சின்ன குட்டிக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு போலம்மா.உன்னை விட்டு நகர மாட்டேன்னு நல்லா ஒட்டிகிட்டான் பிள்ளை.அவனுக்காக இதை நீ யோசிக்க கூடாதாம்மா!? இல்ல ஏகன் இரண்டாவது கல்யாணம் நினைக்கறியாமா!? நீ வேணா சொல்லு உங்களுக்கு கல்யாணம் பண்ணி நீயும் அவனும் மட்டும் தனியா இருக்கலாம்மா.நான்,அகரன் யாரும் உங்களுக்கு தொல்லையா இருக்கமாட்டோம்!"

பெண்ணின் மனதின் ஆழம் பார்த்து அடிக்க...

"ஐயோ தாத்தா! நான் அப்படி எல்லாம் யோசிக்கல தாத்தா.எனக்கு அவரு கல்யாணம்... இதெல்லாம் அடுத்த விசயம் தான் தாத்தா.ஆனா அவருக்கும் எனக்கும் ஒத்துபோகாது தாத்தா!" என்றாள் விடாப்பிடியாக.

"ஏம்மா அவனுக்கும் உனக்கும் ஆகாதுன்னு அவனுக்கு தெரியுமாம்மா!?"

"அதெல்லாம் தெரியும் தாத்தா.ஆனா அகரன்காக என்கிட்ட பேசிட்டு இருக்காரு!" அவனை புரிந்தவளாக.

அவனை 'பிடிக்கவில்லை' என்கிறாள்; அவனுக்கும் தனக்கும் ஒத்துப்போகாது என்கிறாள்; ஆனால் அவன் மனம் எதனால் இவளிடம் வந்து நிற்கிறது என்பதை சரியாக புரிந்து வைத்துள்ளாள்.இதைவிட திருமண வாழ்விற்கு 'என்ன வேண்டும்!?'

தாத்தா தன் பிரம்மாஸ்திரம் ஏந்த தயாராகிவிட்டார்.இதில் பெண் அவளின் வாழ்வும் செழிக்கும். அதைவிட தன் 'குலம் விளங்கும்' எனும் சுயநல எண்ணம் அதில் அதிகமாக இருந்தது.

"ரிதம் உன்னை அவன் அகரனுக்காக கல்யானம் பண்ணிக்க முன்வர மாதிரி; நீயும் உன் தாத்தாக்காக அவனை கல்யாணம் பண்ணிக்க கூடாதாம்மா!?"

முன்பு ஆழம் பார்க்க அடித்தவர்,இப்போது குறிவைத்து அடித்துவிட்டார்.


தெளிந்த மனதில் சிறு கல்லை எரிந்துவிட்டார் அவர்.

"தாத்தாவுக்காகவா ஏன் தாத்தாவுக்கு என்ன!?"
பதற்றமுற கேட்க

"அவனுக்கு ஒன்னும் இல்லம்மா.ஆனா அவன் நேத்து எனக்கு குடுத்த வாக்கு இருக்கு இல்ல அதை யார் காப்பத்துவா சொல்லு!?"

"ஆனா தாத்தா...! அது தாத்தா....!"

இந்நேரம் வரை படபட பட்டாசாக வெடித்தவள் இப்போது நீர் பட்ட பட்டாசாக மாறிப்போனாள்.

இதில் அவள் 'ஒப்புக்கொள்ள மாட்டேன்!' என்று சொல்லமுடியாது அல்லவா.அதை தெரிந்து தானே அவரும் இவ்வாறு மடக்கினார்.

"சொல்லுமா ரிதம் என்ன யோசிக்கிற? உன் தாத்தா மூளை சரி இல்லை அதனால அவன் சொன்ன சொல்லு சபை ஏறாதுன்னு
சொல்லப்போறியாம்மா!?" என்க

"ஐயோ! தாத்தா நான் அப்படி நினைக்கல தாத்தா"

சிதம்பரம் தாத்தா சொன்ன சொல்லை பொறுக்காது ரிதமின் கண்களே கரித்துக் கொண்டு வந்தது.

"அப்போ வேற என்னம்மா உனக்கு தயக்கமா இருக்கு!?"

"அவரு குணம் சரி இல்லை தாத்தா" என்றாள் இப்போதும் விடாது.

"அவன் உன்கிட்ட தப்பா நடந்துகிட்டானாமா!?" என்றாரே அவ்வளவு தான்

'ச்ச..ச்ச..'

"இல்லங்க தாத்தா அவருக்கு பணம் இருந்தா எதையும் வாங்கலாம்னு ஒரு எண்ணம்.கோபம் வந்தா வார்த்தை இதுதான்னு இல்லாம பேசுறாரு எனக்கு அது பிடிக்கலை தாத்தா!" என்றாள் விளக்கமாக.

"ரிதம் என் பேத்தியா நினச்சு சொல்றேன்மா அவனுக்கும் உனக்கும் இடைல இருக்கது புரிதலின்மை மட்டும் தான்மா.அது போக போக சரி ஆகிடும்.
ஆனா உன் தாத்தா குடுத்த வாக்கை நீ இன்னைக்கு காப்பாத்தலைன்னா அது உனக்கு மனசை உறுத்தும்மா உன் குணத்தை வச்சு தாத்தா சொல்றேன்.
'ஏன்?' நீ கொஞ்சம் அந்த பிஞ்சு முகத்தையும் யோசிச்சா தாத்தா ரொம்ப சந்தோஷமா இருப்பேன்மா!" என்றார் சிதம்பரம் தாத்தா.

"உன் பதில் என்னன்னு அவன்கிட்ட சொல்லிடும்மா.ரெண்டு பேருமா சேர்ந்து வந்தா தாத்தா கல்யாணத்தை பத்தி பேசிடுறேன். இல்லைனா நீ ஒன்னும் கவலை பட வேண்டாம்மா! வேலோட ஆபரேசன் பத்தி நீ ஒன்னும் கவலை படாதம்மா... அவன் என்னோட வேல்
அவனை நான் பார்த்துப்பேன்.. இதையும் உங்க கல்யாணத்தை பத்தியும் ஒன்னா யோசிச்சு நீ குழப்பிக்க வேண்டாமா..!"

அத்தோடு பேச்சு முடிந்தது என்பதாக அவர் சென்றுவிட்டார்.

இவளோ யோசனையாக தோட்டம் சென்றுவிட்டாள்.
 
💞💞💞💞💞 தாத்தாவும் பேரனும் சேர்ந்து ரிதத்தை குழப்புறாங்க......அவளுக்கும் மனசு இருக்கு 🤷
அதெல்லாம் யார் சிந்திப்பது... தன் பேரன் வாழ்வுடன் ரிதம் வாழ்வும் செழிக்கும் எனும் எண்ணம் தான் சிதம்பரம் தாத்தாவிற்கு... தன் மகன் வாழ்வு மட்டுமே முக்கியம் என்ற எண்ணம் ஏகனிற்கு... அடுத்து என்ன நடக்கும் எனும் எண்ணம் நமக்கு....😂😂😂😂 நன்றிகள் அருவியாய்💐
 
"ரிதம் உன்னை அவன் அகரனுக்காக கல்யானம் பண்ணிக்க முன்வர மாதிரி; நீயும் உன் தாத்தாக்காக அவனை கல்யாணம் பண்ணிக்க கூடாதாம்மா!?"

A very tactful dealing.....
:D:D:D
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடேங்கப்பா என்னாங்க டா இது தாத்தனும் பேரனும் ஒரே விசயத்தை முன்மொழிஞ்சு வழிமொழியறாங்க.
என்ன தாத்தா பாசமா கேக்கறாரு. இவன் வேசமா கேக்கறான்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடேங்கப்பா என்னாங்க டா இது தாத்தனும் பேரனும் ஒரே விசயத்தை முன்மொழிஞ்சு வழிமொழியறாங்க.
என்ன தாத்தா பாசமா கேக்கறாரு. இவன் வேசமா கேக்கறான்.
நல்லவேளை வேல் தாத்தா எதுக்கும் இடையில இப்போ வரல.... வந்திருந்தா நிலைமை என்னவாகும்🤔🤔🤔 தக்காளி தான்
 
Top