Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 12 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 12 ❤️‍🔥


"அவளை தீண்டவே இருள்கொள்ளும் மேகம் தன் தேகத்தை நிலாமகளின் பாதையாக விரித்ததோ!?"


மாலை தேனீர் அருந்திய பிறகு தான் சென்றாள் ரேணு.அதுவும் எப்படி அழைத்து வந்தனரோ அப்படியே பத்திரமாக திருப்பி அனுப்பி இருந்தனர்.

ரேணுவிற்கு 'ஏகன்' பெயர் மட்டுமே தெரிய அவன் தொழில் பற்றிய எந்த கேள்வியும் ரிதம் முன்பு அவள் வைக்கவில்லை.


ஆனால்,அவன் வீட்டை பார்த்து அவன் உயரம் தெரிந்தாலும்.அதன் அளவு எது என்பதை அறிவதற்கு இக்னேஷிடம் வீடு திரும்பும் வழியில் அவன் பற்றிய தகவல்கள் கேட்டறிந்தாள்.

அவன் பெயர்: ஏகன் சிதம்பரம்

தொழில்: நகை வடிவமைப்பு முதன்மை தொழில் என்றாலும் ;

ஏ எஸ் எனும் நிறுவனம் மூலம்
ஹாண்ட் வாஷ், டிஸ்இன்ஃபெக்டர், ஆன்டி செப்டிக் லிக்விட் போன்ற பல பொருட்களை தயாரிக்கும் நிறுவனமும்,
பியூர் மருத்துவமனையும் அவனுடையது என்றதை அறிந்த உடன் அவளுக்கு தலையே சுற்றியது.


அவளுக்கு மனதுக்குள் ஒரு 'கலக்கம்' இருந்தது.

"இத்தனை உயரத்தில் இருப்பவனை, முதல் மனைவி ஏன் விட்டு சென்றாள்!?" தோன்றினாலும்.

அகரன் அங்கே வளரும் விதம் அவளுக்கு தெளிவாக புரிந்தது.அவன் வளர்வது 'ராஜா வீட்டு கன்றாக' என்பது நன்றாகவே தெரிந்தது.


'கணவன் மூலம் இன்னும் விசாரிக்க வேண்டும்!' என்று முடிவு செய்து கொண்டாள்.

இவள் கேட்டது ஏகன் வரை செல்லும் என்பது தெரிந்தே தான் கேட்டாள் ரேணு.

'ஏனென்றால்!?'

"ரிதமிற்கு கேட்பதற்கு யாரும் இல்லை!" என்ற எண்ணம் அவனுக்கு தோன்றிவிடக் கூடாது அல்லவா அதனால் தான்.

வீட்டில் சென்று இறங்கியது முதல் கணவன் வரும் வரை அவளுக்கு இதே எண்ணவோட்டம் தான்.

"என்ன ரேணு ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க லைட்டை கூட போடாம!?"

வீடு இருளடைந்து இருப்பதை பார்த்து மனைவி இல்லை என நினைத்து தான் வைத்திருக்கும் சாவியால் வீட்டை திறந்தவன்.அவள் உலகை மறந்து யோசனைக்குள் மூழ்கி முத்தெடுப்பதை கண்டவன் கேள்வியால் அவளை நிகழுலகம் கொணர.

அவளோ,"பிரபா எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்!" யோசனைகளுக்கு இடையே கேட்க.

"என்ன புதுசா பெர்மிஷன் எல்லாம் கேட்டுட்டு இருக்க என்ன வேணும்!? சொல்லு செஞ்சிடலாம்!"என்றவாறு தங்கள் அறைக்கு அவன் நுழைய.

அவனை வால் பிடித்துக் கொண்டே தங்கள் அறைக்குள் தானும் நுழைந்தவள்
அவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்ததும் தன் பேச்சை தொடங்கினாள்.

திருமணம் ஆன இந்த இரண்டு ஆண்டுகளில் அவள் அவனிடம் இவ்வாறு கேட்டு வருவது இதுவே முதன் முறை.

எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று எதுவும் கேட்கவே மாட்டாள். அவனாய் முன்வந்து அழைத்து செல்லவேண்டும் என்று நினைப்பவள்.

அப்படி இருக்க இன்று தன் பின்னே குட்டி போட்ட பூனையாக அவள் சுற்றிவர.
அவளை அவ்வாறு சுற்ற விடுவதில் 'இன்பம் கண்டான்' பிரபா.


அறைக்குள் இருந்து வெளியே வந்து,தன் வாகனம் நிறுத்தும் சென்றவன்.

திரும்பி வீட்டிற்குள் வந்து தொலைக்காட்சி பெட்டியை பார்க்க அமர்வது போல போக்குகாட்டி,நேரே சமையல் அறை செல்ல.

அவன் போகும் இடமெல்லாம் வால் பிடித்துக் கொண்டு சென்றாள் பெண்ணரசி.

அவளின் செயல் புன்னகையை கூட்ட சிரித்துக் கொண்டே

"ஏய் ரேணு என்னடி வேணும் உனக்கு எதுக்கு இப்போ என்னை சுத்திவர்ற!?" என்றான்.

பிரபா வாயில் இருந்து 'டி' எனும் வார்த்தை வருவது கடினம்.

அவன் நெகிழ்வான தருணங்களில் மட்டுமே அவ்வாறு அவளை அழைப்பான் என்பதால்; கணவன் முகம் கண்டவள்
அவன் கண்களும் சிரிக்கும் அழகில் ஒரு நொடி மயங்கி நின்றுவிட்டு.

"ஐயோ! நீங்க என்ன ஆளை மயக்க பார்க்கறீங்க நான் சொல்லி முடிச்சுடுறேன் பிரபா அதுவரை சும்மா இருங்க!"

அவள் மயங்கியதற்கு அவனை குறைகூற.

"ஹேய்! ஒன்னுமே பண்ணலமா சும்மாதான இருக்கேன் என்னை பார்த்து சும்மா இருன்னு சொன்னா அப்போ தான் எதையாவது செய்யணும்னு தோனுது!!!"

'மனைவி வாயால் 'மயக்குகிறாய்' எனும் வார்த்தை கேட்ட பின் அமைதி காக்கும் கணவன் யாருண்டு!?'

"இது ரிதம் பத்தினது பிரபா பிளீஸ் கொஞ்சம் விளையாடாம கேளுங்களேன்" கெஞ்சலில் இறங்க

"சரி சொல்லு" சோஃபாவில் அமர.

அவன் அருகே அமர்ந்தவள் ரிதம் இல்லத்தில் நடந்ததை கூறி,வரும் வழியில் இக்னேஷ் கூறிய தகவலையும் கூறி,"ஏகன் பற்றி விசாரிக்க வேண்டும்!" என்று சொல்ல.

"ரேணு அவரு எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா!?" வியந்து போனான் அவன்.

"அப்போ நம்மளால அவரை விசாரிக்க முடியாதாப்பா!?"

'விசாரிக்க முடியாதோ!?' சுணக்கம் அவளிடம்.

"அப்படி யாரு சொன்னது கண்டிப்பா விசாரிக்கலாம். நாளைக்கு ஈவ்னிங் வரும் போது அவரை பத்தி எல்லா டீட்டைலும் உன்கிட்ட குடுக்கறேன்!" என்றவன்
மனைவிக்கு தெளிவு வழங்க.

அவளோ மீண்டும் மீண்டும் தோழியின் வாழ்வை பற்றி எண்ணத்தில் இருக்க.

எழுந்து சென்றவன் மனைவிக்கும், தனக்கும் காஃபி தயார் செய்துகொண்டு வந்தவன் தொலைக்காட்சியில் பாடலை ஒலிக்க செய்து.அமைதியாக அருந்தத் தொடங்க.


அதுவரை நண்பி பற்றிய எண்ணத்தில் இருந்தவள் கையில் காபி வந்ததும் கவனத்தை கணவன் புறம் திருப்பி சிறு மூரல் பூக்க.


அவர்கள் திருமணம் அவள் கல்லூரி படிப்பை முடித்த உடன் முடிவாக.கல்லூரி முடித்த சிட்டுக் குருவியாய் வளையவரும் மாந்தளிர் மாமியார் பேசினாலும் பொறுமையை கையாள்பவள்.

எந்த இடத்திலும் 'நானா!?' 'உன் தாயா!?' என்ற பெரும் மனப்போராட்டத்தை அவனுக்குள் உருவாக்காதவள்.

அவன் அறிவான் 'அவன் தாயின் வாய் கொஞ்சம் சரி இல்லை' என்பதை.தன் அன்னையை எதிர்த்து அவள் பேச முடியாது தவிக்கும் பொழுதுகளில் அவளின் எண்ணங்களை அவனே பேசி அன்னையை அமைதியாக்கி அனுப்பிடுவான்.

அவள் முகத்தில் பூக்கும் இந்த புன்னகைக்காக தானே அவன் மெனக்கிடல் எல்லாம்.

பொழுது கொஞ்சம் கொஞ்சலாய் நகர்ந்தது அங்கே.


பொம்மை தோசை ஊற்றி அகரன் தட்டில் வைத்து அவனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள் ரிதம்.

மதியம் அவனே உணவை முடித்துக் கொள்ள.இரவு உணவை அவனுக்காக கொடுத்திருந்த பேதை மனமெல்லாம், 'ஏகனிடம் தன் விருப்பத்தை அவனிடம் எவ்வாறு கூறப்போகிறோம்!?' என்பதாகவே இருந்தது.

"எனக்கு இன்னும் டெடி தோசை வேணும் ரசகுல்லா!" என்ற சிரான் குரலில் விழித்து அவனுக்காக மீண்டும் தோசை ஊற்றி எடுத்துவர.

மகன் வேண்டும் உணவை கேட்டு வாங்கி உண்பதை காண 'கோடி சுகம்!' ஏகன் மனதில்.


வேல் தாத்தாவிற்கு மாத்திரை எடுத்து கொடுத்து உறங்க செய்துவிட்டு தான் வந்து உணவை முடித்தாள் அவள்.


அவள் உணவை முடிக்கும் வரை ஹாலில் அமர்ந்திருந்த ஏகன் அவளுடன் பேச காத்திருக்க.

அவன் பெற்ற மகனோ,"ரசகுல்லா தூங்கனும்!" என்க.


'என்ன இவன் இவளையே சுத்தி சுத்தி வர்றான்!?' என மகன் செயல் எரிச்சல் மண்டுவதற்கு பதிலாக;

'பிள்ளைக்கு உறக்கம் வந்துவிட்டது.அவன் உறங்கட்டும்!'எனும் பொறுமை வந்தது அவனுக்குள்.

அந்த வகையில் ஏகன் ஒரு 'தாயுமானவனே!'

ரிதம் அகரனை ஏந்திக்கொண்டு அறைக்கு செல்ல ஏகனோ தானும் பின்னோடு சென்றான் தான் பேசவேண்டியதை பேசிடவேண்டிய நோக்கில்.

அகரன் படுத்ததும் உறங்கிவிட.அவனை விட்டுவிட்டு தோட்டம் செல்ல முடியாது
பால்கனி நோக்கி நகர்ந்தாள் ரிதம்.
அவள் செயலின் அர்த்தம் புரிந்து தானும் அவளைத் தொடர்ந்தவன்.

"நம்ம தோட்டத்துக்கே போகலாம் ஒரு முறை அகரன் தூங்கிட்டா திரும்ப எழுதுக்க மாட்டான்!" என்றிட.

"பரவாயில்லை! நீங்க இங்கையே சொல்லுங்க. தூங்குற பிள்ளைய தனியா விட்டுட்டு எங்கையும் போய் பேச வேண்டாம் எதுவா இருந்தாலும் இங்கேயே பேசலாம் சொல்லுங்க"

'நீ என்ன முடிவு பண்ணி இருக்க?"

"எனக்கு....எனக்கு.." என்றவள் இழுக்க

"உனக்கு இதுல ஓகே அப்படித்தானே!" என்றான் அவள் சங்கடம் உணர்ந்து.

அவனை ஒரு கணம் அதிர்ந்து பார்த்தாள். தான் கூற வார்த்தைகள் அற்று தயங்கி நிற்பதை உணர்ந்து 'இவனா' கூறினான்.

'இவன் நல்லவன் தானா!? அல்லது தன் மனதின் பிரேமையா!? அல்லது தாத்தா கூறினார் அல்லவா இருவருக்கும் இடையில் இருப்பது சிறு புரிதலின்மை மட்டுமே என்ற அவரின் வார்த்தைகளா!?'

'எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தன்னை சங்கட நிலையில் நிற்கவிடாது செய்தான்!'

அது மட்டும் அவளின் மனதில் பதிந்தது.


அவன் கேட்டதற்கு இவள் மேலும் கீழுமாக தலையசைக்க.

"சரி! அப்போ இன்னும் நாலு நாள்ல மேரேஜ் ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம். அனௌன்ஸ் பண்றதை அப்பறம் பண்ணலாம்.மேரேஜ் ஆன மறுநாள் தாத்தாக்கு ஆபரேஷன் வச்சுக்கலாம்!" என்றான் அவன்.

"ஆனா அகரன் தாண்டி நமக்கு இடையில ஒன்னுமில்லை வேற எதும் இருக்காது இருக்கவும் கூடாது!"கறாராக கூறினான்.


"கான்ட்ராக்ட் எதுவும் சைன் பண்ணனுமா!?" அவள் உடனே கேட்டிருந்தாள்.

"ச்ச.. ச்ச.. அதெல்லாம் எதும் தேவையில்லை.எனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு ரிதம் மேடம்.நீங்க அப்படி எல்லாம் எங்கேயும் தப்பிச்சு போய்ட முடியாது.அதுதான் உனக்காக உன் தாத்தா வாக்கு குடுத்து இருக்காரே! அவரு வார்த்தையை நீ மீற மாட்ட"

"ஒருவேளை மீறிட்டா!?" எதிர்கேள்வி அவளிடம் இருந்து

"ஒருவேளை நீ வார்த்தையை மீறிட்டா அப்போ இந்த ஏகன் யாருன்னு உனக்கு முழுசா தெரியும்!" என்றான் அவன் உக்ரமாக.


அவன் வார்த்தையின் வெம்மை பெண்ணை தாக்க.

"அப்படி ஏமாத்தற பழக்கம் எனக்கு இல்லை.இப்போ எல்லாம் எதுக்கு எடுத்தாலும் காண்ட்ராக்ட் ஒன்னை தூக்கிட்டு வர்றாங்களே அதுதான் கேட்டேன்!" என்றாள் ரோசமாக

"அந்த சீன் எல்லாம் இங்க இல்ல!" அவன் உரைக்க

"அப்பறம் நான் ஒன்னு சொல்லணும்"

"சொல்லு என்ன சொல்லணும்!?"

"நான் தாத்தாவோட வாக்குக்காக தான் சரின்னு சொல்றேன்.ஆனா அதுகாக நீங்க அட்வான்டேஜ் எடுத்துக்க கூடாது.
முக்கியமா என் சுயமரியாதைக்கு ஒரு பங்கம் வந்தா நான் தாத்தாவை கூப்பிட்டு இங்க இருந்து கிளம்பிடுவேன்.அதையும் நீங்க மனசுல வச்சுக்கோங்க.இதுதான் வேற எதுவும் இல்லை இப்போ சொல்லுங்க!" அழுத்தமாய் உரைத்தாள்.

அவளின் பதில் கடுப்பை கிளப்ப,அவளின் துணிச்சல் முகைக்க தூண்டியது. அதை இதழோடு மடக்கிக் கொண்டு நாளை 'தாத்தாவிடம் பேசலாம்' என்றான் அவன்.

"எதுக்கும் நல்லா யோசிச்சு முடிவு பண்ணுங்க!?" என்றாள் ரிதம்.

"அதெல்லாம் தேவை கிடையாது.ஒரு சொல்! ஒரு முடிவு தான்! அப்போ முடியாதுன்னு சொல்லிட்டு இப்போ சரின்னு சொல்ற பழக்கம் எல்லாம் எனக்கு கிடையாது!" என்றான்.

'அவன் தன்னைத் தான் குத்தி பேசுகிறான்' என்று அவளுக்கு புரிந்தாலும்; அவனிடம் எதிர்த்து வாதிட முடியா நிலை.

அவன் சொல்வது 'உண்மை தானே!'

நேற்று இரவு மாட்டேன் என பிடிவாதமாய் 'மறுத்தது என்ன!?' இன்று இரவு
வந்து சரி என்று 'தலையசைப்பது என்ன!?'

'எல்லாம் தாத்தாவின் வாக்கினால் வந்தது!' என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டே வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

இருவரின் விழிகளில் 'உறக்கம் வருமா!?' என்பது தான் சந்தேகம்.
 
"ஆனா அகரன் தாண்டி நமக்கு இடையில ஒன்னுமில்லை வேற எதும் இருக்காது இருக்கவும் கூடாது!"கறாராக கூறினான்.

இந்த உறுதி என்றென்றும் நிலைக்குமா - இல்ல காலப்போக்கில் மாறிடுமா? :unsure: :unsure: :unsure:
 
இந்த உறுதி என்றென்றும் நிலைக்குமா - இல்ல காலப்போக்கில் மாறிடுமா? :unsure: :unsure: :unsure:
காலம் எதையும் மாற்றும் ஆற்றல் மிக்கது தானே...😊 நன்றிகள் ஊற்றாக💐
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடேய் அடேய் என்னா டா மிரட்டல் உருட்டல் எல்லாம் ஓவரா இருக்கு😤😤😤😤😤.
தம்ப்றீ பொண்டாட்டிங்கிற மந்திரத்தோட பவர் தெரியாம சலம்பாதே அப்பறம் டன்டனக்கா டனக்குனக்கா தான் பாத்துக்க.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடேய் அடேய் என்னா டா மிரட்டல் உருட்டல் எல்லாம் ஓவரா இருக்கு😤😤😤😤😤.
தம்ப்றீ பொண்டாட்டிங்கிற மந்திரத்தோட பவர் தெரியாம சலம்பாதே அப்பறம் டன்டனக்கா டனக்குனக்கா தான் பாத்துக்க.
அதேதான் இப்போ பேசிட்டு அப்பறம் இடிச்சுகிட்டு சுத்தவேண்டியது தான்😂😂😂😂😂
 
ஏகன் தலையில 2 கொம்பு இல்லை 4கொம்பு இருக்குமாட்டுருக்கு........ 🤔ரொம்ப ஓவரா இருக்கு 🤷 கல்யாணம் முடியட்டும் உன்னை பாத்துக்கலாம்.....🤪
 
Top