Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 22 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 22❤️‍🔥

"மதி மயக்கும்
மந்திர கோள்
உன்னிரு விழியா.....!?"



விடியல் அன்று விருட்டென்று வந்ததாய் ஓர் மாயை ரிதமின் மனதிற்கு.எழுந்தவள் எப்பொழுதும் போலே கணவன் அறையை நோக்கி ஓர் பார்வை செலுத்தியவாரு தன் யோசனையில் ஆழ்ந்துவிட்டாள்.

இப்பொழுது எல்லாம் மாமியார் லதாவின் பார்வை தங்கள் இருவர் மீதும் சந்தேகமாக படிந்து மீள்வதை அறிந்தும் ஒன்றும் செய்யமுடியாது தவிக்கிறாள்.

அவர் நேரடியாக கேள்விகள் கேட்டிருந்தால் கூட பதில் கூறி விடலாம்.ஆனால் அவரின் பார்வையின் வீச்சுதான் பெண்ணவளை பதட்டத்தில் ஆழ்த்துகிறது.

அன்னை பார்வை மாற்றம்,"ஏகனின் கண்களில் விழுந்ததா!? அல்லது அனைத்தையும் பார்த்தும் பார்க்காதது போல கடக்கின்றானா!? கல்லூலி மங்கன்!"



"அவன் கண்களில் இருந்தும் தப்பக்கூடிய விசயம் என்று ஒன்று உண்டா என்ன!?"



காலை விடியலே அவளின் மனதிற்குள் குழப்பத்தை கொடுக்க.



படுக்கைவிட்டு இறங்காது சிந்தையில் மூழ்கியவள் மன்னவனின் சொர்க்கவாசல் கதவு திறக்கும் ஓசையில் தான் திடுக்கிட்டு விழித்தவாரு நடப்பிற்குள் நுழைய முயல.


காலையில் எப்பொழுதும் முதல் ஆளாக எழுந்து புது மலராய் தோட்டம் சேர்ந்து மலர்களோடு மலர்களாய் கொடியாடும் மங்கை மலர்க்கொடி இன்று படுக்கை கூட விட்டு இறங்காது இருப்பதை கண்டவன் யோசனையோடு கடக்க.

"என்னங்க" என்ற மனைவியின் அழைப்பு அவனை தடுத்து நிறுத்தியது. வார்த்தைகள் இல்லா மௌனம் அவனிடம்.

திரும்பி பெண்ணவளின் உறக்கம் கலைந்தாலும்; குழப்பம் கலையாத முகம் கண்டு மனதிற்குள் 'யோசனை' படிந்தாலும்; அதனை வெளியே காண்பிக்காது 'என்ன?' என்பதாய் அவளை நோக்கி ஒற்றை பார்வை வீசினான்.

அவளோ நீண்ட தயக்கத்திற்கு பிறகு அவனிடம் பேசத் தொடங்கினாள்.

"இப்போ எல்லாம் லதா அத்தை நம்மளை சந்தேகமா பார்க்கிற மாதிரியே இருக்குங்க.எனக்கு அவங்க பார்க்கிறது ஒரு மாதிரி குற்ற உணர்வா இருக்கு வெளிப்படையா கேட்டுட்டா கூட ஏதோ சொல்லி சமாளிக்கலாம்.அவங்க அதையும் கேட்கலை.எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலங்க!?" என்றவாறு தன் மனதின் வார்த்தைகளை வெளியிட்டாள் மன்னன் முன்பு.

தலைவன் அவனோ,"ஏந்திழை அவளின் உணர்வு புரிந்ததா!? அல்லது அவன் மனதில் வேறு எதுவும் திட்டம் தீட்டி இருந்தானா!?" அவனே அறிவான்.

"இனிமே கொஞ்சம் கொஞ்சமா நம்ம ரிலேஷன்ஷிப்பை டெவலப் பண்ணிக்கலாம் ரிதம்!" என்றான் பட்டென்று.

'என்னாது ரிலேஷன்ஷிப்ப டெவலப் பண்றதா!?'

'எந்த வகையில டெவலப் பண்றது!?'

'சும்மா அடுத்தவங்க கண் பார்வைக்காகவா!?'

இல்லைன்னா 'உண்மையாவே அடுத்த கட்டத்தை பத்தி சொல்றானா!?"

கணவனின் பதிலோ மேலும் கொற்றவை அவளை குழப்ப தலைமுடியை பிடித்துக் கொள்ளாதது ஒன்று தான் குறையாகி போனது அங்கே.

அவள் ஏகனின் பதிலை கேட்டு சிந்தை வயப்பட.அவளை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தான் கேள்வன்.


தன் முன் நகர்வு தோன்ற விழித்தவள் மன்னன் நகர்வை உணர்ந்து அவனை சந்தேகமாக பார்த்தவாரு அசையாது நின்றுகொண்டாள்.


அவள் அசையாது நின்றது அவனுக்கு வசதியாக மேலும் நெருங்கியவன் நூலிடைக்கும் 'துளி வெளி' அதிகம் கொண்ட தூரத்தில் நின்றான்.


அந்நேரம் அவன் நாசியை நிறைத்தது என்னவோ உறக்கத்தில் இருந்து எழுந்து குளிக்காது நின்றவள் மேனியில் இருந்து வீசிய ஓர் சுகந்த மணம்.

அது அவளுக்கு மட்டுமே 'சொந்தமான நறுமணம்' தான் என்பதில் அவனுக்கு எள்ளளவும் ஐயம் இல்லை.

'ஏனென்றால்!?'

இவனை கண்டபிறகுதான் அவள் படுக்கையைவிட்டு இறங்கியதை அவனும் கவனிக்கத்தானே செய்தான்.


அதனால் செண்பகப்பாண்டியன் போல் ஒரு பட்டிமன்றம் அங்கே தேவையற்று போனது.

அவளிடம் தோன்றிய மணத்தில் மெல்லிய பால் வாடையும் சேர்ந்து வந்து அவனை இழுக்க அவளை நோக்கி நூலிடை இடைவெளி குறைக்க அவன் முயல பேடை குயில் பின்னோக்கி நகர தன் பாதங்களை உயர்த்த.

அவளின் நகர்வில் சுயம் பெற்று மனதிற்குள் தன்னையே கடிந்து கொண்டவன்.

"இதுக்கு நான் ஒரு சொல்யூஷன் சொல்றேன்.அதுவரைக்கும் நீ கொஞ்சம் பொறுமையா இரு!"

அவள் முகம் நோக்காது வேறு திக்கில் பார்த்து பேசியவாரு அறையை விட்டு வெளியேறிவிட்டான்.

ஆணவனின் முதல் நெருக்கம் கண்டு நெஞ்சில் பூத்த மின்னொளியால் முகம் சிவக்க, கன்னக் கதுப்புகள் சூடேற ஒரு வித மோன நிலையில் நின்றாள் நித்தில புதுமலர்.

காலை இருந்த குழப்பம் எல்லாம் மாறன் நெருக்கமதில் மறைந்து வெட்க மலரை வெடிக்க செய்திருக்க காலை உணவில் அவளின் மன நிலை வெளியாகி இருந்தது.


ரிதம் வந்ததில் இருந்து அதிகம் உணவு உண்ணும் அகரன் கூட என்றைக்கும் உண்பதை விட இன்று அன்னையின் கையால் பிடி உணவு அதிகம் உண்டான்.

மகன் சப்புக்கொட்டி உண்பதை கண்ட ஏகனுக்கும் அவளின் கைகளால் உணவு உண்ணும் ஆசை பெருக்கெடுக்க.


"தன் நிலை எண்ணி தயங்கியவன்; உணவையாவது ருசி பார்க்கலாம் என்றால்; அவள் கேட்ட பொழுதுகள் எல்லாம் 'வேண்டாம்!' என்று முகத்தில் அடித்தார் போல் பதிலை சொல்லிவிட்டு இப்பொழுது வந்து எனக்கும் உணவு வேண்டும்!" என்று கேட்க 'மனம் வராது' அழுத்தமாக அமர்ந்து கொள்ள.

தாத்தா இருவருக்கும் உணவை பரிமாறியவள் நாயகனுக்கும் சேர்த்தே வைத்துவிட்டாள்.

விடியலின் மோகனம் மனதை நிறைக்க அதே எண்ணத்தில் இருந்தவள் மறந்து அவனுக்கும் வைத்துவிட.


சிதம்பரம் தாத்தாவின் "என்னமா ரிதம் இப்படி பண்ணீட்ட!?" என்ற பதட்டமான கேள்வியில் தான் தான்செய்த தவறு புரிய நாயகன் முகத்தை சற்றே பதட்டமுடன் காண.

அவனோ அவளை நோக்கி ஓர் பார்வை வீசிவிட்டு உணவை உண்ணத் தொடங்கிவிட்டான்.


அவன் வேண்டிய உணவு தட்டில் விழுந்து இப்பொழுது வாயில் விழுந்து வயிற்றில் வழுக்கிக் கொண்டு சென்றது.

ஏகனின் ஏக பார்வை அச்சுத மொழியாளை அச்சத்தில் ஆழ்த்தாது காலையின் நினைவை கூட்டியது பாவையவளுக்கு.


முதல் முறையாக வீட்டு உணவை உண்கிறான்.அவனின் சுவை நாளங்கள் எல்லாம் தட்டுகெட்டு தடுமாறி ஆட்டம் போட.ஒரு முறைக்கு இருமுறை உணவை மனைவி பார்த்து பார்த்து பரிமாற வயிறும் மனதும் நிறைய உண்டான்.

ஏகனுக்கு இப்பொழுது தன் மனதை அறியும் 'மாயக்கண்ணாடி' ஒன்று தேவையாய் இருந்தது.

'ஏனென்றால்!?'

அவன் மனதில் அவளை பற்றிய எண்ணங்கள் 'எது!?' என்பதை அவன் அறிந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் அவன் இருந்தான் அதனால் தான்.



"இன்றைய தன் உணர்விற்கு விளக்கம் அளிக்காது அடுத்த வேலை செய்யமுடியாது!"

தெளிவாய் உணர்ந்து கொண்டான் ஏகன்.

திருமணம் ஆகிய நாள் தொடங்கி தன் பார்வை அவள் மீது படிவதை அவனும் அறிவான்.அதனை தடுக்க பிரம்மபிரயத்தனம் செய்து மனதை திசை திருப்பியும்விடுவான்.

'ஆனால்..இன்றோ!'

அவள் அருகாமை தந்த இதமும்,அவளின் பாலும் சந்தனமும் கலந்த ஓர் மணமும் இன்னும் இன்னும் நெருங்க சொல்லி தூண்டியதை தன் மனமும் அனுமதிக்க...

அவளை நோக்கி மேலும் அடி எடுத்து வைத்தவன் ஆழ் மனது மனைவியை முத்தாட கூறியது(!)

'ஆம்!'

ரிதம் மட்டும் அவனைவிட்டு ஒரு அடி பின்னோக்கி நகராது இருந்திருந்தால் அதுதான் நிகழ்ந்திருக்கும் அங்கே.


இதற்கு தீர்வு காணாது அவனால் அடுத்த வேலையில் கவனம் செலுத்த இயலாது என்பதால் வீட்டில் இருந்து கிளம்பியவன் நேரே சென்று நின்றது என்னவோ தன் ஒரே நண்பனான நவநீத்தை நோக்கியதாகவே இருந்தது.


நம் நவநீ ஒரு பிரபல மனோ தத்துவ மருத்துவன் மட்டுமல்ல ஒரு பெரிய ஆராய்ச்சியாளனனும் கூட. அவன் இருக்கும் இடம் நோக்கி வாகனத்தை விரட்ட செய்திருந்தான் ஏகன்.

நடுத்தரமான வீட்டின் கூடத்தில் கிடந்த சோஃபாவில் அரைக்கால் சராயும், கையில்லா பனியனும் அணிந்திருந்த உருவம் ஒன்று... தன் கைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய் பரப்பி காலை 'பப்பரப்பா' என்று விரித்தும் ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தது.

'அது நம் நவநீயே தான்!'


காரில் அமர்ந்திருந்தவாரு இக்னேஷை அவ்வீட்டின் உள்ளே சென்று நவநீதனை குண்டுகட்டாய் தூக்கிக் கொண்டு வருமாறு பணித்தான் ஏகன்.

அதிலும் 'அட் எனி காஸ்ட்!' எனும் அடைமொழி வேறு.

ஏகனின் வாக்கே வேத வாக்காக எண்ணி அவன் இடும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பதில் கச்சிதம் கற்றவர்கள் மட்டுமே அவனிடம் தொடர்ந்து தாக்குபிடிக்க முடியும்.

அதிலும் திறம் பெற்ற இக்னேஷைத் தான் தன் உதவியாளனாக வைத்துள்ளான் ஏகன்.


ஏகன் கொடுத்த வேலையை செய்வதற்கு விரைந்தான் இக்னேஷ்.

தன்னை நோக்கி வரும் வில்லங்கத்தை அறியாது தன்னை மறந்த நிலையில் உறக்கத்தில் இருந்த நவநீத்தை சிறிதாய் தட்டி எழுப்ப முயன்றான் இக்னேஷ்.

ஈயை விரட்டும் பாங்கில் கைகளை அசைத்தவன் உறங்கிட.

துளிர் விடும் கோபத்துடன் சற்று அழுத்தமாய் அவனை உலுக்கிட.இப்போது மெலிதாய் அசைந்து கொடுத்தான்.

அதற்கு மேல் இக்னேஷிற்கு பொறுமை இல்லாது சுற்றும் முற்றும் பார்த்தவன் இதழில் குரூர மூரல் உதிக்க உணவு மேசை மீது இருந்த தண்ணீர் நிரம்பிய குடுவையை எடுத்து அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தவன் மீது கொட்டிக்கவிழ்க்க.


'பதறி எழுவான்' என்று நம்பி காத்திருக்க முகத்தில் இருந்து வழிந்த நீரை நாய் உலுக்குவதை போன்று உலுக்கிவிட்டு மீண்டும் உறங்க.


'அவ்வளவு தான்!'


சினம் சீனத்தின் சுவராக நீள பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த இக்னேஷோ சோஃபாவின் இடைவெளியில் கால்களை நீட்டி ஒரே மிதிமிதிக்க.

விழுந்த மிதியில் தரைக்கு தஞ்சம் புகுந்த நவநீக்கு இடுப்பில் வலி உண்டாக இடுப்பை பிடித்துக் கொண்டே கத்தத் தொடங்கிவிட்டான்.

"டேய் இந்த நவநீ யாருன்னு தெரியுமா!? என் நண்பன் யாருன்னு தெரியுமாடா!? என் வீட்டுக்குள்ளயே நுழைஞ்சு என்னவே அடிக்கிற தில்லு எவனுக்குடா இருக்கு!?"

தூக்க கலக்கத்தில் எதிரில் இருப்பவர் அறியாது காச்மூச்சென்று கத்தியிருந்தான் நவநீ.

"கண்ணத் திறந்து பாருடா பகடா வாயா! உன் நண்பன் தான் உன்ன குண்டு கட்டா தூக்கிட்டு வர சொன்னாரு.அதும்
'அட் - எனி - காஸ்ட்' அப்படின்னு சொல்லித்தான் உள்ளேயே அனுப்பினாரு!" ஏகன் கூறிய வார்த்தைகளின் அச்சுப்பிசகாது இக்னேஷ் கூறிட.

அவனின் கடுகடு குரலில் அதுவரை கண்களை மூடிக்கொண்டு விரல்களை மட்டும் ஆட்டி ஆட்டி நீட்டி முழக்கி பேசியவன் பட்டென்று கண்களை திறந்தான்.

"டேய் சடையா இங்க என்னடா பண்ணுற எப்போ வந்த!?"

இக்னேஷ் தோளில் படர்ந்த அவன் கருகரு முடி மீது எப்பொழுதுமே முன் நெற்றி ஏறிய நவநீக்கு சற்று பொறாமை அதிகமே.


அதனால் மாதம் ஒருமுறை தன் தலைமுடிக்கு என்று தனியே நேரம் ஒதுக்கி பராமரிப்பு செய்து பாதுகாத்துவரும் இக்னேஷை பார்த்து 'சடையா' என்று அழைத்து கேலி பேசுவதில் தான் அவனுக்கு 'ஆத்மதிருப்தி!'

இப்பொழுது 'சடையா' என்பது மாறி.... 'மாடு புடி மாரி மச்சான்' வந்து விட்டது.

எல்லாம் நிவேதாவின் தயவு தான்.



††††††††††******************†††††††††††††



கோயம்புத்தூர் விமான நிலையம் வந்து தரையிறங்கியது அந்த மும்பை விமானம். அதில் இருந்து இறங்கினாள் மாடர்ன் ஹைக்கூ ஒருத்தி.

தோள் வரை புரண்ட கேசம் காற்றில் நடமாட.நெடுநெடு உயரமும், இருந்தும் இல்லாத இடையும் கொண்டவளின் கண்களை கருப்பு கண்ணாடியும் அவளின் முகத்தை முகக்கவசமும் மறைத்திருக்க தன்னை மக்களின் பார்வையில் இருந்து மறைப்பதாக எண்ணி அனைவரின் கவனத்தையும் தன் புறம் திருப்பிக் கொண்டு விரைந்து நடந்திருந்தாள்.

வாயிலில் அவளுக்கென்று பிரத்யேகமாக நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனத்தில் ஏறியவள் ஒரு இடத்தின் பெயரைக் குறிப்பிட.அவ்விடம் நோக்கி பறந்தது வாகனம்.
 
"இனிமே கொஞ்சம் கொஞ்சமா நம்ம ரிலேஷன்ஷிப்பை டெவலப் பண்ணிக்கலாம் ரிதம்!" என்றான் பட்டென்று.

என்ன ?????!!!!!


அப்டியே ஒரு கணம் நின்னுட்டேன்...... டண்டணக்காவை ஆரம்பிக்க போறானோன்னு....

அதானே பார்த்தேன்.... இது ஏகன் இல்லியா - லேசுல மடிஞ்சுருவானா என்ன......

🥸🥸🥸🥸🥸🥸🥸🥸🥸🥸🥸🥸
 
அடப்பாவி ஒரு மனுஷன் நிம்மதியா தூங்கறது பொறுக்கலையாடா உங்களுக்கு.
டேய் ஏகா எதுக்குடா இத்தனை அலப்பறை பண்ணறே..
நவிய வான்னு சொன்னாவே வந்திருப்பானே.

தொரை குப்பறவுழுதாலும் மீசைல மண்ணெட்டலையாம்🤭🤭🤭🤭🤭
 
என்ன ?????!!!!!

அப்டியே ஒரு கணம் நின்னுட்டேன்...... டண்டணக்காவை ஆரம்பிக்க போறானோன்னு....

அதானே பார்த்தேன்.... இது ஏகன் இல்லியா - லேசுல மடிஞ்சுருவானா என்ன......

🥸🥸🥸🥸🥸🥸🥸🥸🥸🥸🥸🥸
நீ ஒரு நாயகனா உதயமாகிட்ட ஏகா😁😁😁😁
 
அடப்பாவி ஒரு மனுஷன் நிம்மதியா தூங்கறது பொறுக்கலையாடா உங்களுக்கு.
டேய் ஏகா எதுக்குடா இத்தனை அலப்பறை பண்ணறே..
நவிய வான்னு சொன்னாவே வந்திருப்பானே.

தொரை குப்பறவுழுதாலும் மீசைல மண்ணெட்டலையாம்🤭🤭🤭🤭🤭
இப்போ...இப்போ தான் அவன் நாயகனா உதயமன்னு பட்டம் கொடுத்தேன்... அதுக்குள்ள பாருங்க பட்டம் கட்டின நூல் அறுந்த மாதிரி மொக்கை வாங்கிட்டான் பையன்😥😥😥😥
 
Top