Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 33 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 33 ❤️‍🔥

"வார்த்தைகள் எல்லாம்
வடுக்கள் தானோ.....!?"


ஏகன் வார்த்தையின் வீரியம் பொறுக்காது கண்ணில் நீர் வடிய தன் பையில் இருந்த அகரன் உடைகளை மீண்டும் எடுத்த இடத்தில் வைத்துவிட்டு தன் உடைகளை எடுத்து அடுக்கினாள்.

வேறு எந்த பேச்சும் அவனிடம் அவள் வைத்து கொள்ளவில்லை.


அமைதியாக தன் கைப்பையை சுமந்து கொண்டு கீழே சென்றவள் வேறு யாரிடமும் எந்த வார்த்தையும் பேசாது அமைதியாக சென்று வருவதாக கூறியவள் வேல் தாத்தாவையும்
கையோடு அழைத்துக் கொண்டு கிளம்பி இருந்தாள்.

மாமனார்,மாமியார், கதிர் மூவரும் மருத்துவமனை சென்றிருக்க.நேற்று இரவே மூவருக்கும் தகவல் கூறிவிட்டாள்.

"ஏன்மா வேலுவையும் கூப்பிட்டு போற அவனை விட்டுட்டு போகலாம் இல்லையா!?" என்று கேட்ட சிதம்பரம் தாத்தாவிடம்

"இல்லங்க தாத்தா இருக்கட்டும்.தாத்தா இல்லாம என்னால இருக்க முடியாது அதனால நாங்க கிளம்பறோம்!" என்றதோடு முடித்துக் கொண்டவள்.

அகரனுக்கு மட்டும் கையசைப்பை கொடுத்தாள்.அதுவும்சிறுவனின் மனதை நோகடிக்க விரும்பாது.


வாயிலில் நிற்கும் காவலாளி மூலம் ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் சென்றுவிட்டாள்.


சொல்லாது செல்லும் மனைவியை கண்ட ஏகன் மனது பாரம் கூட.மகனை பார்க்க அவனோ,"கண்களில் தேங்கிய நீரும், பிதுங்கிய இதழும், சிவந்த முகமும்!" என்று நின்றிருந்தான்.

அவனுக்கு புரிந்தது எல்லாம்,"தந்தையின் வார்த்தையில் கோபம் கொண்டு தாய் தன்னை விட்டு செல்வதாக தோன்றியது!"

பேரன் முகத்தை அழுத்தமாய் பார்த்த சிதம்பரம் மொட்டை மாடியில் இருக்கும் அறைக்குள் சென்று அடைந்து கொண்டார் அமைதியாக.

"அகரா" என்ற தந்தையின் அழைப்பில் வாயிலை கண் அசையாது பார்த்த பிள்ளை தந்தையை கண்டான்.

அந்த இளங்கன்றின் கண்கள், "உன் தாயுடன் உன்னை சேர்த்த; என் தாயிடம் இருந்து, என்னை பிரித்தாயே!" என்று அவனை கேள்வியால் சுட்டது.

ஏகனின் நொடி நேர கோபமும்,அவசரமும், இயலாமையும் அவனை அவ்வாறு பேசிட தூண்டிட.

சிந்திக்காது அவன் விட்ட வார்த்தைகளுக்கு அவன் கொடுக்க போகும் விலை தான் 'கொஞ்சம் அதிகம்!' என்பது தான் அவனுக்கு புரியாது போனது.


எப்பொழுது மனைவி அவனிடம் சொல்லாது தன் தாத்தாவை மட்டும் அழைத்துக் கொண்டு ஏகன் காரை தவிர்த்து ஆட்டோவில் ஏறினாளோ அப்போதே ஏகன் உயிர் துடிக்க தொடங்கியது.

கால்கள் அசைய மறுத்தாலும் அவனை நம்பி காத்திருக்கும் மக்களுக்காக அவன் தன் வேலையை பார்க்க கிளம்பினான்.

மூடனாய்,முட்டாளாய் மாறி வார்த்தைகளை விட்ட தன் மடத்தனத்தை எண்ணி மனம் நொந்தாலும்.

"எடுத்த செயலை நல்ல முறையில் முடிக்க வேண்டும்!" என்ற நெஞ்சுறுதியும் சேர்ந்தே இருக்க; தன் வேலைகளை கவனிக்க தொடங்கினான்.

"வேலையை விரைவில் முடித்தால் மனைவியை காண முன்பே சென்றுவிடலாம் அல்லவா!" ஆசை வேறு உண்டாக வேலையை முடுக்கினான்.

"யாருடி உன் புள்ள!? அவன் என் புள்ள.அவன் எங்க போகணும் போகக் கூடாதுன்னு நீ சொல்லாத.அவனை எங்க அனுப்பணும்!? எங்க அனுப்ப கூடாதுன்னு!? எனக்கு தெரியும்!"

கணவன் பகர்ந்த வார்த்தைகள் எல்லாம் குத்தீட்டியாய் கன்னியின் உள்ளத்தை தாக்க.

'நங்கூரம்' ஒன்று நெஞ்சில் பாய்ந்த உணர்வு.

திருமணம் ஆகி எப்பொழுது அகரன் அவளை "அம்மா" என்று அழைத்தானோ; அக்கணம் ரிதம் எனும் பெண்,தாய்மை எனும் தயாள குணத்தை சூடிக் கொண்டாள்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாது அவள் வழங்கிய அன்பிற்கு,கணவன் சூட்டிய 'முள் கிரீடம்' வலியை கொடுக்க. ஜன்னல் ஓர இருக்கையின் அந்த புறம் திரும்பிக் கொண்டாள் தாத்தாவிற்கு தெரியக்கூடாது என்பதால்.

"என்ன பாப்புமா தம்பிக்கும் உனக்கும் சண்டையா!?" என்ற தாத்தாவின் வார்த்தையில் கண்கள் உடைப்பை எடுக்க அவரின் மடி சாய்ந்து கொண்டாள் பதுமை.

அதன் பிறகு அவளும் சொல்லவில்லை; அவரும் கேட்கவில்லை.ஊர் சென்று சேரும் வரை பேத்தியின் தலை கோதலை நிறுத்தவே இல்லை அந்த முதிர்ந்த கரம்.

"என்னம்மா ரிதம் எப்படி இருக்க!?" என சிலரும்

"நர்சம்மா எப்படி இருக்கீங்க!?" என்று சிலரும் பல ஆண்டுகள் தங்கி இருந்த மக்கள் அவளையும்;

"வாங்க வேலய்யா உடம்பு சுகம் தானுங்களே!?" என்று தாத்தாவையும் அன்பாய் குசலம் விசாரித்து சென்றனர்.

ஒவ்வொருவரின் கேள்விகளுக்கும் அவரவர்க்கு தகுந்த பதிலை கொடுத்தவாறு தாத்தாவும், பேத்தியும் நிவேதாவின் இல்லம் நோக்கி சென்றிருந்தனர்.


அங்கே இவர்களுக்கு முன்பே வந்து காத்திருந்தாள் போல ரேணு வீட்டின் படியை கூட மிதிக்கவில்லை அதற்குள் வாசலில் பற்கள் அத்தனையும் காட்டி முன்னால் வந்து நிற்க.

நிவேதாவை வெளியில் செல்லக்கூடாது என்று தடை விதித்து உள்ளதால் தன் 'உசைன் போல்ட்' காலை அடக்கிக் கொண்டு உள்ளே இருந்தாள்.

வீட்டின் உள்ளிருந்து வந்த நிவேயின் மாமா அத்தை அவர்களின் பிள்ளைகள் இவர்கள் இருவரையும் வரவேற்க.

சிரித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இதழை விரித்துவிட்டு இருவரும் உள்நுழைய

வேல் தாத்தாவை கண்டு "டார்லிங்" குதித்துக் கொண்டு அவர் அருகே வந்தவள் அவரின் தோளில் சாய்ந்து தூளி ஆட.

அவரும் அன்பாய் அவளின் தலையில் வலகரம் வைத்து வாழ்த்துவதன் அறிகுறியாக சிறு அழுத்தம் கொடுக்க.

நிவே நினைவெல்லாம் தான் மட்டும் தனித்திருக்கும் எண்ணமே நிறைந்திருக்க "தாத்தா வந்தது ஏனோ அவளை ஆசீர்வதிக்க அவள் அன்னையே வந்த உணர்வு!"

'ஏனென்றால்!?'

ரிதம் தான் தாத்தாவை அழைத்து வருவதாக கூறவில்லை அல்லவா. அவரைக் கண்டதும் சொல்ல முடியா நிறைவும் நிம்மதியும்.


"என்னடி தங்ககுட்டி வரலையா!?" என்ற நிவே கேள்விக்கு

"டிராவல் பண்ணது அலுப்பா இருக்குடி நான் கொஞ்சம் தூங்கறேன்!" அவ்வளவுதான் முடிந்தது என்பதாக நகர்ந்திருந்தாள்.


"அந்த ஆங்ரி சாமியார் என்ன பண்ணினான்னு தெரியல!?இவகிட்ட கேட்டாலும் சொல்ல மாட்டா பாவி!" இருவரையும் ஒருங்கே திட்டி தீர்க்க.


"இனி ரிதம் தானாய் மனது வைக்காது; அவளிடம் இருந்து ஒன்றும் வாங்கிவிட முடியாது!" என்பதால் தோழியர் இருவரும் அமைதி காக்க.

இரவு உணவு தயாராகியது அங்கே. எல்லாம் ரிதம் மற்றும் ரேணுவின் கை பக்குவத்தில் தான் தயாரானது.


உணவு முதலில் மாமாவின் குடும்பம் முடித்து கொள்ள.அடுத்து நால்வரும் ஒருங்கே அமர,உணவை விழுங்க முடியாது நீரை பருகி வயிற்றை நிறைத்தவளை கண்டும் காணாதது விட.


எல்லாம் தாத்தா முன் கேள்வி கேட்பது சரியாக இருக்காது என்பதால் அமைதி காத்தனர்.



நிவேயின் மாமா குடும்பத்தில் மாமாவும் அவரின் மனைவியும் ஹாலில் படுத்துக் கொள்ள அவரின் பிள்ளைகள் இருவரும் மாடியில் இருக்கும் அறையில் தங்கி கொண்டனர்.

தாத்தா ஒரு அறையில் தங்கி கொள்ள. பெண்கள் மூவரும் நிவே அறையில் தங்கிக்கொள்வதாக முடிவானது.


தாத்தா உடன் சேர்ந்து அரட்டையில் இருந்த நிவேதா,ரேணுவை அறைக்கு விரட்டி தாத்தாவை உறங்க அறைக்கு அனுப்பி. மீதி இருந்த வேலைகளை முடித்து அறைக்குள் வந்தவள் ஒன்றும் பேசாது மௌனம் கொள்ள.

"என்னடி ரிதம் என்ன ஆச்சு!?" ரேணுவே தொடங்கினாள்

அவ்வளவு தான் ஏகன் கூறிய வார்த்தைகளின் வரி மாறாது ஒப்பித்து விட்டாள்.

"ஏய் அந்த ஆங்கிரி சாமியாருக்கு அவ்வளவு திமிரா? அவனை விடவே கூடாது நீ சொல்லுடி ரிதம் என்ன செய்யலாம்!?" பேட்டை ரௌடி போல கைகளை முறுக்கிக் கொண்டு கிளம்பிய நிவேதாவை


"எங்க ஹால்ல படுத்திருக்க உங்க அத்தையை தாண்டி வாசல்ல கால் வை நான் பார்த்துடுறேன்!" என்றவாறு பிடித்து அமர வைத்தாள் ரேணு.


"அதை ஏன்டி ஞாயபகபடுத்துற இந்த அத்தை தொல்லை பெரும் தொல்லையா இருக்குடி.இதை செய்! அதை செய்! அங்க நிக்காத! இங்க நிக்காத! ஒரே ரூல்ஸ் தான்டி அந்தம்மா.

அந்தம்மா பேச்சுக்கு பயந்தே நான் வீட்டுக்குள்ள இருக்கேனா பாருவேன்!" என்றாள் நிவே வருத்தமாக.

அவளின் வேதனை நட்பூக்களுக்கு புன்னகையை பூக்க செய்ய.

"உன்ன மாதிரி ஒரு ரங்க ராட்டினத்தையும் அடக்க ஆளு இருக்காங்க பாருடி அவங்களுக்கு நம்ம அவார்டே குடுக்கலாம்!"

"என்னடி ரேணு ரொம்ப பேசுற பழசு மறந்துடுச்சா !?"

"என்ன பழசு மறந்தேன் நானு சொல்லுடி சொல்லு!?"

"ஓ..! உனக்கு நான் சொல்லி ஞாபக படுத்தவா.... இதோ இப்ப சொல்றேன் இப்ப சொல்றேன் கேளுடி கேடி கேர்ள். நீ ஒன்னாவது படிக்கும் போது நான் கொண்டுவந்த பார்லே ஜி பிஸ்கட்டை நீ ஆட்டைய போடல!?"

"ஏய்! அதுக்கு பதிலா நான் தான் உனக்கு மறுநாளே ஒரு பிஸ்கட் பாக்கெட்டை கொண்டு வந்து குடுக்கல!"

இருவரும் மாற்றி மாற்றி தாங்கள் செய்த திருட்டு தனங்களை அம்பலமாக்க.

"ஏய் ச்சீ...! நிறுத்துங்கடி சின்ன புள்ளைங்க மாதிரி அடிச்சுட்டு" நடுவே ரிதம் புகுந்து சமாதானம் கூற.

"எங்களை விடுங்க மேடம் நீங்க என்ன முடிவு எடுத்து இருக்கீங்க!?" நிவே வாய் திறந்தாள் தோழியின் மனதை அறிய.

"எனக்கு என்ன செய்றதுன்னு தெரிலடி உண்மையா.இத்தனை நாள் நம்ம வீடு, நம்ம தாத்தா,நம்ம பிள்ளைன்னு தானடி நினைச்சேன்.இப்போ வந்து,'அவன் என் பிள்ளை உனக்கு என்ன உரிமை இருக்கு!?' இப்படி கேட்டா நான் என்ன செய்வேன்!?" குமுறினாள்.

அவளுக்கு மனம் ஆறவே கிடையாது. கேட்டிருந்த இருவருக்கும் ஏகனை ஒரு கை பார்க்கும் வெறியே கிளம்பியது.

ரிதம் மேலும் சொல்லத் தொடங்கினாள். "இன்னைக்கு இப்படி சொல்ற மனுஷன் நாளைக்கு என் வீடு நீ வெளிய போன்னு சொன்னா நான் எங்கடி போவேன்!? சொல்லுங்க...அதுதான் இனி நான் அங்க போகமாட்டேன்.எனக்கு எதுவும் வேண்டாம். அவருக்கு குடுக்க வேண்டிய பணத்தை கொஞ்சம் கொஞ்சமா குடுத்து கூட அடச்சுடுவேன். ஆனா இனி அந்த வீட்டு பக்கம் போக எனக்கு விருப்பமே இல்லடி!" என்க.

"அடியேய் நீ அவனுக்கு பொண்டாட்டி புரியுதா.சட்டப்படி நீங்க புருஷன் பொண்டாட்டி இதுல அவன் உன்னை விரட்டினா நீ வந்துடனுமா சொல்லு!?" நிவே எகிற,ரேணுவோ அமைதியாக இருந்தாள்.

"நீ ஏன் அமைதியா இருக்கடி எதையாவது சொல்லு ரேணு" அவளையும் தனக்கு துணைக்கு சேர்க்க நிவே முயல.

"எனக்கு நீ கொஞ்ச நாள் அமைதியா இருக்கது நல்லதுன்னு தோனுது ரிதம்!"

"ஏய் என்னடி? உன்னை நியாயம் செல்ல கூப்பிட்டா நீ அந்த ஆங்கிரி சாமியாருக்கு வக்காலத்து வாங்குவ போல போடி இவளே!" கோபமாக வந்தது நிவேதாவின் வார்த்தை.


"ஏய் என்ன சொல்ல வர்றேன்னு பொறுமையா கேளுடி!"நிதானமாக அவள் கூற.

"அம்மா தாயே நீ நிதானமா யோசி.நான் அதுக்குள்ள அந்த ஆங்கிரி சாமியாரை மாமியார் வீட்டுக்கு அனுப்ப பார்க்கறேன்!" கோபம் கொப்பளிக்க வீராவேசமாய் பேசினாள் நிவேதா.
 
இத்தனை நாள் நம்ம வீடு, நம்ம தாத்தா,நம்ம பிள்ளைன்னு தானடி நினைச்சேன்.இப்போ வந்து,'அவன் என் பிள்ளை உனக்கு என்ன உரிமை இருக்கு!?' இப்படி கேட்டா நான் என்ன செய்வேன்!?"

Ultimate, Rhythm.......
நியாயமான பயம் இது.....

நீ இன்னும் கொஞ்சம் நிதானமா யோசிச்சு பேசியிருக்கலாம், ஏகன்.....
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ரிதமின் நட்பும் அருமை 🤗 🤗 🤗 🤗 🤗.
இந்த அல்டாப்பு மண்டையன் சொன்னாலும் சொல்லுவான்.
புள்ளைய இல்லைன்னு சொன்னவன் வூடு இல்லைன்னும் சொல்லுவான்.
ரிதமோட பயம் நியாயம் தான்.
நிவே எந்த மாமியார் வூட்டுக்கு அனுப்பப் போறே அந்த வாய் வளந்தவனை😅😅😅😅😅
 
Ultimate, Rhythm.......
நியாயமான பயம் இது.....

நீ இன்னும் கொஞ்சம் நிதானமா யோசிச்சு பேசியிருக்கலாம், ஏகன்.....
அவனோட மண்டகசாயம் அப்பைக்கு அப்போ ஏறி மூளையை பாதிக்கும் போல அதுதான் பக்கி இப்படி பேசறான்🧐🧐🧐🧐🧐
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ரிதமின் நட்பும் அருமை 🤗 🤗 🤗 🤗 🤗.

இந்த அல்டாப்பு மண்டையன் சொன்னாலும் சொல்லுவான்.
புள்ளைய இல்லைன்னு சொன்னவன் வூடு இல்லைன்னும் சொல்லுவான்.
ரிதமோட பயம் நியாயம் தான்.
நிவே எந்த மாமியார் வூட்டுக்கு அனுப்பப் போறே அந்த வாய் வளந்தவனை😅😅😅😅😅
அதெல்லாம் எங்க இருந்து அனுப்ப சும்மா பீலா விடுறா 😂😂🤣🤣
 
ஏகா உனக்கு வேற வேலையே இல்லையா???? எப்பபாறு ரிதத்தை நோகடிக்கிறதுதான் உன் வேலையா????
 
ஏகா உனக்கு வேற வேலையே இல்லையா???? எப்பபாறு ரிதத்தை நோகடிக்கிறதுதான் உன் வேலையா????
அதாங்க பாவி பய... இப்படி எதையாவது பண்ணிடுறான்😥😥😥😥
 
Top