Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 34 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 34 ❤️‍🔥

"உன் மகிழ்வை
விட வருத்தம்
என்னை கொள்ளும்
ஆயுதமோ ...................!?"



நிவே கோபமாக ஒன்று சொல்ல... ரேணு நிதானமாக ஒன்று சொல்ல... என்று
தீயாய் நடந்து கொண்டிருந்த விவாதத்தில் சிறு இடைவேளையாக வந்தது ரிதமின் கைபேசி அழைப்பொலி.

"அழைத்தது மகனாக தான் இருக்கும்!" என்பது அறிந்தாலும் எடுக்க தான் மனம் வரவில்லை.

சிறுவன் தான் என்றாலும் சீராட்டிய தன்னுடன் செல்லாதே என்று தந்தை சொல்லிய சொல்லை மந்திரமாய் ஏற்று வரமறுத்த கோபம் அவளுக்கு.

"அன்னையா!? தந்தையா!?" என்ற கேள்விக்கு இருவரும் 'தன்னைத் தான் பிள்ளை தேட வேண்டும் என்பது பெற்றோரின் தார்மீக ஆசை அல்லவா!'

அந்த தாயன்பில் சற்று அளவு கூடிவிட இவளும்," மகன் தன்னை விளக்கி தகப்பனை தானே தேடினான்!" என்ற உண்மை மனதை சுட அழைப்பை ஏற்காது போக.

மீண்டும் மீண்டும் வந்த அழைப்பில் ரேணு தான்,
"ஏய் ஏதோ மிஸ் அண்டர்ஸ்ராண்டிங்கா இருக்கும்டி.அதுக்காக எல்லாம் காலை அட்டென்ட் பண்ணாம இருக்காதடி எடுத்து பேசு!" ஊக்கம் அளிக்க.

அடுத்து வந்த அழைப்பை ஏற்க மறுமுனை பேசிய மௌனமே கூறியது "தனக்கு அழைத்தது மகன் அல்ல; தகப்பன்!" என்று.

அவன் பேசாது அமைதி காக்க.இவளும் தன் நிலையில் இருந்து இறங்காது அமைதியாக இருந்து கொண்டாள்.

இதில்,"அவள் மீது சிறு தவறும் இல்லாத போது அவள் எதற்காக இறங்கி வரவேண்டும்!?" என்ற நியாயத்தின் குரல் அது.

மென்மையாக வந்த "ரிதம்..."

எனும் அழைப்பு அவளின் கோபத்தை அசைத்து பார்த்தாலும் வீம்பாய் அமர்ந்திருந்தாள் பேசாது.

ரேணு 'பேசு' என்று சைகை காண்பிக்க அவளின் இரு கரங்களையும் சிறை செய்தாள் நிவேதா.

"இவ வேற!" என்றவாறு தலையில் அடித்துக் கொண்ட ரேணு தன் கைபேசியில் பாடலை ஒலிக்க செய்து அதில் செவிப்பொறியை இணைத்து தன் காதில் ஒன்றும் நிவேதா காதில் ஒன்றும் வைத்து விட.

மௌனமான இரவில் ரீங்காரமிட்ட இசையின் இனிமையில் அமைதியாகி போனாள் நிவேதா.


தோழியர் இருவரும் பாடல் கேட்க சென்றதை கண்டவள் மேலும் அமைதி காக்க

"சாரி டி!" என்று வந்தது உரிமை குரல்.

இது வரை "ரிதம்" என்று மட்டுமே அழைக்கும் அழைப்பு காலையில் திட்டிய போது வந்த 'டி' முதல் முறை என்றால்...
இப்பொழுது ஒலிக்கும் 'டி' உரிமை 'டி'யாக இருந்தது.

"ஹேய் ரிதம் சாரிடீ!" அழுத்தமாய் வந்தது குரல்.

'ஏங்காந்த வேளையில் இப்படி ஏரார்ந்தன் குரல் ஏந்திழையை மயக்க முயன்றால் அவள் எங்கனம் மறுக்க முயல்வது!?'

இருந்தும் வெளிவரத் துடித்த ஆசையை வலி தடைவிதிக்க உள்ளுக்குள் அமிழ்ந்து போனது ஆசை.

"வேண்டாம் எனும் வேளை; வேண்டும் என்று வேண்டி நிற்கும் காதலை எந்த சொல்லில் வார்ப்பது!?"

"இப்போ உனக்கு என்னடி வேணும் சரி சாரி அவன் உன் பிள்ளை தான் உன் பிள்ளை மட்டும் தான்!" என்றிட

"உங்களுக்கு என்னை பார்த்தா எப்படி இருக்கு!? இன்னைக்கு உங்க பிள்ளைன்னு சொல்றீங்க... நாளைக்கு உங்க வீடு,உங்க குடும்பம்னு சொல்லுவீங்க எனக்கு உங்க சங்காத்தமே வேண்டாம் சாமி! உங்களுக்கு குடுக்க வேண்டிய காசை நான் கொஞ்சம் கொஞ்சமா குடுத்துடுறேன்.இனி நீங்க இருக்க பக்கம் கூட நான் வரவே மாட்டேன் பாருங்க!" என்றாள் ரோசமாக.

எல்லாம் இடையில் "அம்மா.....!!!" என்ற ஓசை கேட்கும் வரை தான்.

அவ்வளவு தான் ரிதம் எனும் பெண் புலி, குழம்பு புளியாக மாறியது.

"ஏன் பிள்ள குரல் இப்படி சோகமா இருக்கு!? என் பிள்ளையை நீங்க என்ன சொன்னீங்க!? சொல்லுங்க!" வரிந்து கட்டிக் கொண்டு சென்றாள்.

முதன்முறை அவளை பார்த்த போது இப்படி தான் வரிந்து கட்டிக் கொண்டு வந்தாள். இன்றும் அவ்வாறு அவள் வர.

"ஏய் நான் என்னடி பண்ணினேன்? காலைல இருந்து உன் பிள்ளை அழுதுட்டே இருக்கான்!"

"ஏன் நீங்க என்ன சொன்னீங்க!?"

"நான் என்னத்தடி சொன்னேன்.நீ அவனை விட்டுட்டு போய்ட்டன்னு நினச்சு அவன்
ஒரே அழுகை!"

அப்பொழுது தான் ரிதம் மனதிற்கு "ரேணு ஏன் பொறுமையாக இருக்க கூறினாள்!?" என்பது புரிந்தது.

பெரியவர்கள் இருவரின் புரிதல் இல்லாமைக்கு "சிறு பிஞ்சின் மனதை அல்லவா நொறுக்க பார்த்தனர்!" இருவரும்.

அவன் கூறியது 'தவறு' என்றால் அதற்காக தான் இப்போது எடுத்த முடிவு 'எவ்வளவு பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தும்!' தோழி கூறாது விட்ட மீது பாதியும் புரிந்தது அவளுக்கு.

"என்ன உரிமையா டி போட்டு பேசுறீங்க உங்க காசு உங்க அக்கவுண்ட்கு வரும். இனி என்கிட்ட யாரும் பேச வேண்டாம்!"

முன்பிருந்த கோபம் இல்லாது குரலில் சுருதி குறைந்து இருக்க.

"சாரிடி ரிதம்! இனி என்ன கோபம் இருந்தாலும் இப்படி 'படக்'குன்னு பேசமாட்டேன்.முக்கியமா உன்னது, என்னதுன்னு பிரிச்சு பேசமாட்டேன்டி போதுமா!"

பேசிய பேச்சிற்கு அடிமட்டம் வரை சென்று மன்னிப்பு கேட்டுவிட.

"சரி விடுங்க என் பிள்ளை கிட்ட குடுங்க நான் பேச.இன்னும் பிள்ளையை தூங்க வைக்காம வெட்டி பேச்சு பேசிட்டு இருக்காரு இவரை என்ன சொல்றது!?"

"ஏன் என்னடி அம்மாவும், பிள்ளையும் நாடகம் போடுறீங்களா!?"

"அதெல்லாம் எங்களுக்கு தெரியாதுப்பா!" என்றாள் மனையாள்.

"அவன் என்னடான்னா எங்க அம்மாவை சமாதானம் பண்ணலைன்னா தூங்க மாட்டேன்னு போராட்டம் பண்றான். நீ என்னன்னா நான் அவனை தூங்க வைக்கலைன்னு வம்பு பண்ற... சொல்லி வச்சு பண்றீங்களா ரெண்டு பேரும்?" அழகாய் கோபம் கொண்டான் ஏகன்.

இது போன்ற உரிமை பேச்சுக்களை தானே அவள் அவனிடம் எதிர்பார்த்தாள்.இன்று கிடைக்க பெற புன்னகை அரும்ப பேசினாள்.

அவனும் "காணாத தோட்டத்தின் கவின் மலரை கண்டவன் போல்!" பேசி இருந்தான்.

"சரி பிள்ளைக்கிட்ட குடுங்க!" என்ற அவளின் மிரட்டலுக்கு

"அவன்கிட்ட எல்லாம் குடுக்க முடியாது வேணா ஸ்பீக்கர்ல போடுறேன்!"

"ஹா... இதுநல்ல கதையால இருக்கு.
எனக்கும் என் மகனுக்கும் ஆயிரம் இருக்கும்.நீங்க அதை எல்லாம் கேட்க கூடாது!" என்று செல்லமாய் வீம்பு பிடிக்க.

"ஏன்டி உங்க ரெண்டு பேர் கூட்டுக்குள்ள என்ன சேர்த்துக்கவே மாட்டீங்களா!?" ஏக்கமாய் ஒலித்தது அன்பனின் குரல்.

அது போதாதா ரிதமின் மென் மனதை குளிர்விக்க.

"சரி ஃபோனை ஸ்பீக்கர்ல போடுங்க!" என்று கூற

"அம்மா.." பல நாள் கேட்காத குழந்தையின் குரலை கேட்பது போல் இருந்தது ரிதமின் மனதிற்கு.

"கன்னுகுட்டி இன்னும் தூங்கலையா!? ஜாமுன் என்ன பண்ணுது சாப்ட்டுச்சா!?" கொஞ்சலாய் வந்தது அன்னை மொழி.

"சாப்பிட்டேன்மா நீங்க எப்போ வருவீங்கம்மா!? எனக்கு உங்களை பார்க்கணும் போல இருக்கு!" தேம்பலாக வந்தது அகரன் குரல்.

அவன் குரல் கேட்டு இங்கே அன்னையவள் மௌனமாக கண்ணீர் சிந்தினாள்.

"அம்மா நிவே அத்தை மேரேஜ் முடிஞ்சு வருவேன் கண்ணா.. நீங்க தூங்கலையா?"

"இதோ தூங்க போறேன் ம்மா!" என்றவன் சமத்தாய் உறங்க செல்ல.

"சரி கண்ணா அம்மா காலைல கால் பண்றேன்!" என்றாள்.

அழைப்பை துண்டிக்க செல்வதற்கு முன் அவசரமாய் கேட்டது ஏகன் குரல்.

"என்னை எதுவும் கேட்கலையேடி நீ!"

"ஹா... கேட்பாங்க,கேட்பாங்க.போய் உங்க பொழப்ப பாருங்க. எனக்கு தூக்கம் வருது.
காலைல திட்டுவாராம்.இப்போ வந்து ஒன்னும் தெரியாத மாதிரி பேசிட்டா நாங்க இவருகிட்ட மயங்கிடுவோமா!?"

அவள் பேசுவதை கேட்டுக் கொண்டே தன் அறைக்கு வந்தவன் அவளின் பேச்சை கேட்டதன் அறிகுறியாக பதில் கூறினான்.

"என்கிட்ட நீ மயங்கலையாடி!?"
ஆதூராமாய் ஒலித்தது அவன் குரல்.

"ஆமாம் மயங்கிட்டாலும்! காலைல யோகா செய்றேன் ஓடிடுறது.காலைல சாப்பாடு அப்பறம் ஆபீஸ் வேலைன்னு ஓடிட்டு இருக்காரு இவருகிட்ட தான் மயங்கி கிடக்கமாக்கும். எங்களுக்கு வேற வேலையில்ல !?"

"மயங்கல மயங்கலன்னு சொல்லிட்டே என் டெய்லி வொர்க் செட்யுல் கூட சொல்லுவ போல!" கிண்டலாக வந்தது அவன் குரல்.

"ரொம்ப தான் கனவு காணுறீங்க எனக்கு தூக்கம் வருது. நாளைக்கு நலங்கு வைக்கிற வேலை, பந்தக்கால் நடுற வேலை எல்லாம் இங்க இருக்கு எனக்கு. நான் தூங்க போறேன்பா!" வெட்கத்தை மறைக்க வழி தேடி இதனை கூற.

அவளின் வெட்கம் புரியாதவன் அவளின் வேலை பளுவை மட்டும் புரிந்து கொண்டு "உண்மையா அங்க நிறைய வேலை இருக்குமாடி!?" என்றிட.

"அப்பறம் கல்யாண வேலைன்னா சும்மாவா!"
ரிதம் ராகம் பாட.

"சரி டி அப்போ நீ போய் தூங்கு!" என்றவன் அழைப்பை துண்டிப்பதற்கு முன்பு மீண்டும் ஒரு முறை 'சாரியை' கேட்டுவிட்டே துண்டித்தான்.

தான் பேசுவது தோழியர் கேட்டிருப்பர் என்பதை அறிந்த ரிதம் ரேணுவிற்கு 'நன்றி' கூற.

"ஏன்டி ரிதம் இவளும் நம்ம கூட தானடி சுத்துனா இவளுக்கு எங்க இருந்துடி இந்த ஞானோதயம் கிடச்சுது!?" நிவே கிண்டலாக கேட்க.

"கண்டிப்பா உங்க ரெண்டு பேரையும் விட்டு கல்யாணம் பண்ணி வெளியூர் போனேன் இல்ல அதுல தான் வந்துச்சு இந்த ஞானோதயம்!" தானும் திருப்பி கொடுத்தாள் ரேணு.

"ஓஹோ உன் ரொமான்டிக் மச்சான் குடுத்த வைத்தியத்துல தெளிந்த பைத்தியமா இது!"விடாது நிவேதா கேட்க

"இன்னும் ரெண்டு நாள்ல உனக்கும் வைத்தியம் பார்க்க ஒருத்தர் வருவாருடி அப்போ தெரியும்!"

"ஏய் எனக்கு உன்ன மாதிரி பைத்தியம் எல்லாம் இல்லடி அவன் வந்து வைத்தியம் பார்க்க.நான் தெளிவா தான் இருக்கேன்!" என்றாள் வீம்பாய்.


"இந்த உலகத்துல எந்த பைத்தியம் தான்டி தன்னை பைத்தியம்னு ஒத்துட்டு இருக்கு சொல்லு?அப்போ நீ தெளிவா தான் இருக்க.அதும் தவசி படத்துல வருவாரே ஒருத்தர் 'சாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ் இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா!?' அப்படின்னு அவரோட பெண் வடிவம் நீதான்டி!" என்க.

எப்பொழுதுமே இருவரின் சண்டைக்கு இடையில் செல்வது கிடையாது ரிதம் அமைதியாக வேடிக்கை பார்ப்பதோடு சரி.

"தெரு குழாயில் குடம் வைப்பதில் தொடங்கி... புத்தகம் எடைக்கு போட்டு கிடைக்கும் பணத்தில் தீணி வாங்கி உண்பது வரை!" என்று இருவரும் இதுவரை அடித்துக்கொள்ளாத தலைப்புகளே கிடையாது.

"இந்தியா பாகிஸ்தான் சண்டைக்கு கூட காரணம் கூறலாம். ஆனால்! இவர்களின் சண்டைக்கு 'இதுதான்' என்று ஒரு குறிப்பிட்ட காரணமே இருக்காது!"

இருவரின்,"அடிதடி சண்டையை பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்!" என்பதால் ஓரமாய் அமர்ந்து வேடிக்கை பார்த்திருப்பாள் ரிதம்.

ரேணு என்னதான் பொறுமைசாலி என்றாலும்; நிவேதாவின் முன்பு மட்டும் அவள் பொறுமை புளிய மரம் ஏறிவிடும்.

நெடு நேரம் தோழியரின் அரட்டை கச்சேரி தொடர இடையில் கேட்ட,"ஏய் நிவேதா இப்போ தூங்குறீங்களா இல்லையா!?" என்ற அத்தையின் குரலில் தான் முடிவுக்கு வந்தது.
 
"சாரிடி ரிதம்! இனி என்ன கோபம் இருந்தாலும் இப்படி 'படக்'குன்னு பேசமாட்டேன்.முக்கியமா உன்னது, என்னதுன்னு பிரிச்சு பேசமாட்டேன்டி போதுமா!"

அப்டி வா வழிக்கு, மச்சான்....... :whistle::whistle::whistle::whistle::whistle::whistle::whistle::whistle::whistle::whistle:
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அப்புடி வாடா
அல்டாப்பு ஊஊஊ...
இன்னும் கொஞ்சம் அதிகமா எதிர்பாக்கறேன் டா உன்ற கெஞ்சல் பத்தலை பத்தலை இன்னும் அதிகமாக்கு.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அப்புடி வாடா
அல்டாப்பு ஊஊஊ...
இன்னும் கொஞ்சம் அதிகமா எதிர்பாக்கறேன் டா உன்ற கெஞ்சல் பத்தலை பத்தலை இன்னும் அதிகமாக்கு.
ஆத்தீ.....😳😳😳😳😳😳
 
இவரு பேசுவாராம் பதிலுக்கு ரிதமும் பேசனுமாம்...... முடியாது போடா.....சாரி சொல்லிட்டா முடிஞ்சிடுமா????? அடியே ரிதம் உடனே சமாதானம் ஆகாத..... கொஞ்சம் கெத்து காட்டு 😜
 
இவரு பேசுவாராம் பதிலுக்கு ரிதமும் பேசனுமாம்...... முடியாது போடா.....சாரி சொல்லிட்டா முடிஞ்சிடுமா????? அடியே ரிதம் உடனே சமாதானம் ஆகாத..... கொஞ்சம் கெத்து காட்டு 😜
ரைட்டு... கூட்டம் கூடிருச்சு... ஏகா உனக்கு எதிரா படையே கிளம்பிடுச்சுடா கிளம்பிடுச்சுடா😂😂😂🤣🤣🤣
 
Top