Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 35 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 35 ❤️‍🔥


"கண்டேன்
கதிரொளியை
உன் இரு விழியிலே...!!!"




இரவு உறங்கியது சில மணி நேரம் தான் என்றாலும்; நிறைவான உறக்கமாக இருந்தது மூவருக்கும்.

தன் அலமாரியை திறந்து அதில் மஞ்சள் பையில் சுருட்டி இருந்த திருமண செலவிற்கான பணத்தை தோழியரிடம் நீட்டினாள் நிவேதா.

"எதுக்கு இப்ப குடுக்குறடி என்கிட்ட பணம் இருக்கு நிவே.தாத்தா ஆபரேஷன் தொடங்கி எல்லாத்தையும் அவரே பார்த்துட்டாரு இல்ல. அதுனால நான் சேர்த்த பணம் எல்லாமே என்கிட்ட தான்டி இருக்கு!"ரிதம் மறுக்க.

"இல்ல ரிதம்! இது அம்மா எனக்காக சேர்த்து வச்சது அவங்கதான் கூட இருக்க குடுப்பணை இல்லை.அவங்க பணமாவது எனக்காக செலவாகட்டும்டி வச்சுக்கோங்க!" என்று இருவரின் பொறுப்பில் கொடுத்திருந்தாள் நிவேதா.


நலங்கு வைங்கும் வைபவம் பிரம்ம முகூர்த்தில் இனிதே முடிந்து, காலை எட்டு மணிக்கு மேல் நல்ல நேரம் என்பதால் பெண்கள் மூவரும் மெதுவாக கிளம்ப.


உற்சாகமாக எழுந்து கலகலப்பாக அவ்விடத்தை வைத்திருந்தனர்.இதில் அக்கம் பக்கத்தினர் கூட்டமும் வந்து சேர விழா சிறப்பாய் தொடங்க.


எட்டு பத்துக்கு சரியாக முகூர்த்தக்கால் ஊண்டினர்.எப்படியும் அக்கம் பக்கம் இருந்து ஒரு முப்பது நாற்பது பேராவது வந்திருப்பர் என்பதால் உணவை செட்டியார் உணவு தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் ஒப்படைத்து இருக்க.

காரைக்குடி சிறப்பு காலை உணவுகள் அனைத்தும் அங்கே தயாராக இருந்தது.
வரிசையாக வைக்கப்பட்டிருந்த டேபிளில் பேப்பர் தாள்கள் விரிக்கபட.

அங்கிருக்கும் நபர்களே பரிமாற உணவு வாளியை எடுத்துக் கொண்டு வர.ஒருவர் இலை விரிக்க மற்றவர் நெகிழி தண்ணீர் டம்ளரை வைக்க ஒருவர் குடுவையில் இருக்கும் நீரை டம்ளரில் வரிசையாக இரைக்க.

நெய்யில் குளித்த கேசரி வாயில் வழுக்கிக் கொண்டு சென்று வயிற்றில் 'லபக்'கென்று விழுக பந்தி படு ஜோராக தொடங்கியது.


நலங்கு வைத்து,முகூர்த்தக்கால் ஊன்றி பந்தி முடிந்த சிறிது நேரத்திலே சாமியானா பந்தல் போடப்பட இரண்டு பெரிய ஸ்பீக்கர்கள் வேறு வீட்டு வாயிலில் கட்டப்பட்டிருந்தது.

அதில் "ரஞ்சிதமே.. ரஞ்சிதமே.." என்று பாடல் ஒலிக்க...

உறவில் உள்ள குழந்தைகள் சுற்றம் உள்ள சிறார்கள் என்று அனைவரும் ஒன்று கூடி ஆடத் தொடங்க திருமண கலை வந்தது அவ்வில்லத்திற்கு.


அன்றைய தினம் சில உறவுகளின் வருகை இருக்க.அன்று முதல் திருமண அழைப்பு வரை உணவு வெளியில் இருந்து வந்துவிடும் என்பதால் கல்யாண வேலை மட்டுமே அங்கே இருந்தது.

அதிரசம், முறுக்கு ஆடர் கொடுத்ததை வாங்க செல்வது பொன் வளையல் அணியும் வைபவம் என்று அன்றைய நாளோடு இரண்டு நாள் ஓடி அடைய.


நிற்க நேரமில்லாமல் சுழன்றனர் ரேணுவும், ரிதமும்.வேலை சவட்டி எடுக்கும் அளவிற்கு இருந்தது அங்கே.

திருமணம் என்றால் சாதாரணமா? ஆயிரம் காலத்து பயிரல்லவா!

உணவை கொண்டு வந்து கொடுத்தாலும் பரிமாறும் வேலையுடன்,"யார் உண்டனர்!?" "யார் உண்ணவில்லை!?" "பந்தியில் யாருக்கு என்ன வேண்டும்!?" என்று எந்த குறையும் ஒருவரும் சொல்லிவிடக் கூடாது என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தனர்.

ரிதம் இங்கிருந்து செல்வதற்கு முன்பே நிவேதாவின் நகைகளை புதுப்பித்து சிலவற்றை அழித்து புது வகைகளாக மாற்றி தந்திருந்தாள் என்பதால் இப்பொழுது அந்த வேலை மிச்சமாக.

சீருக்கு பாத்திரம்,மர பொருட்கள் எல்லாம் வாங்க வேண்டும் ரிதம் தன்னால் வரமுடியாது என்று தான் முன்பே ரேணுவை அனுப்பி இருந்தாள்.அவளும் தன் தாய் தந்தையுடன் சேர்ந்து அவற்றையும் வாங்கிவிட.

நிவேதாவின் அத்தை,மாமா இருவருக்கும் எந்த வேலையும் வைக்கவில்லை தோழியர்.

திருமண பந்திக்கு வெகு சிறப்பாக செட்டியார் வீட்டு வகைகள் மட்டுமல்லாது தென் இந்திய உணவு வகைகள், சில வட இந்திய உணவுகள் என்று கைதேர்ந்த ஆட்களை நியமித்திருந்தனர்.

அனைத்திற்கும் நிவேதாவின் தாய் முன்பே சேர்த்து வைத்திருந்த பணம் தான் என்றாலும் அதனை முன்னின்று எடுத்து செய்திட நேர்மையாக ஆட்கள் வெகு சுலபமாய் கிடைக்கமாட்டரே!

நிவேதா,"அன்னை தன் அருகில் உருவமாய் இல்லை என்றாலும் அவரின் ஆன்மா கண்டிப்பாக தன்னை சுற்றி வரும்!" என்ற நம்பிக்கையில் இருக்க.


வேறு எந்த கவலையும் அவளுக்கு இல்லாது 'ஜம்'மென்று நேரத்திற்கு ஒரு அலங்காரத்தில் மின்ன செய்து அழகு பார்த்தனர் தோழியர்.


இரவு எட்டு மணிக்கு பந்தி முடிந்துவிடும் என்பதால் அதன் பிறகு நிவேதாவிற்கு அலங்காரம் செய்து இரவு பன்னிரண்டு மணி வரை 'போட்டோ ஷூட்' நடைபெறும்.

வந்திருக்கும் உறவினர்கள் கூட்டமோ,

"யாரும் பார்க்கட்டும்;யாரும் செய்யட்டும்; எந்த செலவையும் நம் தலையில் கட்டாது இருந்தால் சரிதான்!" என்று ஒரு சாரர் ஒதுங்கிக் கொள்ள.

மற்றொரு சாரரோ," இந்த பொண்ணுங்க காசை தண்ணியா இரைக்குதுங்க நிவேதா.நீ பணத்தை உங்க பெரியப்பா கிட்டயோ மாமா கிட்டயோ கொடுத்திருந்தா இவ்வளவு செலவு வருமாடி!?" என்று கண்டிக்கின்றோம் பேர்வழி என்று பணத்தை சுருட்டிக் கொண்டு செல்ல முன்னால் வந்தனர்.

நிவேதா அனைவரையும் ஒரே பதிலில் அடக்கிவிட்டாள்.

"திடீர்னு அம்மாக்கு முடியலைன்னு பெரியப்பா,மாமான்னு ஃபோன் பண்ணேன் பெரியம்மா.ஆனா அதை எடுக்கத் தான் யாரும் வரலை.ஏன் நீங்க கூட அட்டன்ட் பண்ணிட்டு யாருன்னு கேட்டு 'நான் நிவேதா'ன்னு பேர் சொன்னதும் போன் ஒழுங்காவே கேட்கலைன்னு சொல்லி வச்சுட்டு போய்ட்டீங்க!" என்று பட்டாசாய் பொரிய.

"என்னடி என்கிட்ட எகுறிகிட்டு வர்றவ என்ன இருந்தாலும் சொந்தம் இல்லையான்னு சொன்னா ஏதோ கதை பேசிட்டு வர்றா!?"

"இது ஏதோ கதை இல்ல பெரியம்மா நீங்க எங்க அம்மா முடியாம உயிருக்கு போராடிட்டு இருந்தப்போ கடைசியாக உங்களை பார்க்கணும் சொன்னதால் பண்ணது தான் அந்த கால்.ஒரு உசுரு போற நேரத்துல கடைசியாக கேட்டதை பண்றதுக்கு கூட முடியாம போன நீங்க....இனி அவங்கட்ட குடு, இவங்கட்ட குடுன்னு சொல்லிகிட்டு வராதீங்க.அவங்க செலவு பண்ணி மிச்ச பணம் வருது வரலை அது என் கவலை நீங்க ரொம்ப நல்லவங்க மாதிரி பேசிட்டு வராதீங்க.இப்போ நாலு செவருக்குள்ள நடந்தது அப்பறம் பத்து பேரை கூப்பிட்டு பஞ்சாயத்து வைக்கற அளவு என்னை கொண்டு போய்டாதீங்க!" என்று மிரட்ட.

அந்த பெரியம்மா அத்துடன் மூடிய வாயை திறக்கவில்லை அவளிடம்.

ஆனால் நான்கு சுவருக்குள் நடந்த சம்பவம் கால் முளைத்து,கை முளைத்து அறையைவிட்டு தவழ்ந்து சென்று நிவேதாவை பற்றி ஒன்றுக்கு இரண்டாக உறவினரிடம் உலாவர....

"தங்களிடம் கொடுக்கவில்லையே பணத்தை.அதில் இருந்து தாங்கள் சுருட்ட வழியில்லாது போனதே!" என்ற கவலையில் இருந்த நல்ல உள்ளங்களின் கூட்டம் ஒன்றாகி கதையளக்க.


மாப்பிள்ளை பார்த்து வந்த மாமாவும் அத்தையும் மட்டும், "கல்யாணம் முடியும் வரை கொஞ்சம் அமைதியா இரு நிவேதா யார் வாயிலையும் விழுகாத!" (யாரிடமும் திட்டு வாங்காதே!) என சொல்லி செல்ல.

'சரி' என்பதாய் தலை அசைத்தாள் நிவேதா.


காலை மூன்று மணிக்கு எழுந்த ரேணு குளித்து தயாராக,அவளை தொடர்ந்து ரிதம் தயாராக ஒன்றன் பின் ஒன்றாக உறவினர்கள் தயாராக.

ஆறு மணி அளவில் நிவேதா குளித்து வர அவளுக்காக காத்திருந்தனர் பியூட்டிஷன் பெண்கள்.

சரியாக எட்டு மணிக்கு பெண் அழைப்பிற்கு தயாராக வைரவன் பட்டி 'வளர் ஒளி நாதர்' கோயிலில் திருமணம் முடிந்து அருகே இருக்கும் மண்டபத்தில் வரவேற்பு என்று முடிவாக.


பெண்ணை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு செல்ல வீட்டில் சாமிக்கும் அன்னைக்கும் விளக்கை ஏற்றி கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டு கிளம்பினாள் நிவேதா.

தோழியின் இருபுறமும் நின்று தோள் தாங்கினர் இருவரும்.

மாப்பிள்ளை வீட்டார் அங்கே வந்திறங்க.
மாப்பிள்ளை அழைப்பிற்காக நிவேதாவின் பெரியப்பா மகன்கள் சென்றுவிட.

அந்நேரம் வரிசையாக வந்த காரில் இருந்து மகன் முதலில் இறங்க பின்னாலே இறங்கினான் ஏகன்.

அவன் கண்களில் அவனவளின் 'பிம்பத் தேடல்'.

எங்கும் சிக்காது சுற்றும் சுடரொளியாளை இரு விழியும்,நாற்புறமும் வலைவீச.

"அம்மா.....!!!"

கூவலுடன் ஓடிய மகனை கண்ட ஏகனுக்கு ஏக பொறாமை.

தான் தேடியும் கிடைக்காத பொக்கிஷம் மகனின் குட்டி கண்களில் உடனே விழுந்த கோபம் அது.

ஓடி வரும் பிள்ளையை ஏந்திக் கொண்டு இடுப்பில் இடுக்கிக் கொண்டாள் ரிதம்.

"ஜாமுன் குட்டி எப்படி இருக்கு.அம்மா பார்க்க வந்தீங்களா!?" கொஞ்சல் மொழிய.

"நல்லா இருக்கு ஜாமூன்....ஆமாம்...! அம்மா பார்த்துட்டு அத்தை கல்யாணம் பார்த்துட்டு போக வந்தது ஜாமுன்!" என்றான் மகன்.


இருவரின் எதிரே வந்து நின்ற ஏகன் கோபமாய் நின்றிருந்தான்.

அவளுடன் சமாதானம் ஆகிய நாள் முதல் இன்று வரை ஒரு அழைப்பு கிடையாது; சிதம்பரம் தாத்தாவின் மூலம் மகனுடன் ஏகன் இல்லாத நேரம் பேசுபவள் அவன் அன்னை,தந்தையுடன் கூட அழைப்பில் பேசுபவள். அவனை மட்டும் கிடப்பில் விட்ட கோபம்.இப்பொழுதும் கண்முன் நிற்கும் தன்னை விடுத்து மகனை கொஞ்சினால் என்றாள் மனைவிக்கு 'தன் மீது அன்பு இல்லையா!?' என்ற அழகிய பொறாமை.

"வாங்க அத்தை, வாங்க மாமா, கதிர் வரலையா!?"

குடும்பத்தினரை விசாரித்து உள்ளே அழைத்து சென்று நிவேதாவை காண செய்து ஓரிடத்தில் அவர்களை அமர செய்து மீண்டும் வெளியே வந்தாள்.

"அம்மா ஜாமுன் எப்படி இருக்கேன்!?" தன் சிறிய உருவத்தை ஒரு சுற்று சுற்றி சுழன்று கேட்ட அகரன் கேள்விக்கு

மகனை கண்டு, "அழகு பட்டு ரொம்ப மேன்லியா இருக்கீங்களே அம்மா கண்ணே பட்டுடும் போல இருக்குடா பட்டு. அப்படியே குட்டி ஹீரோ மாதிரி இருக்கே என் கன்னுகுட்டி!" என ஆர்ப்பரித்து கூறி அங்கிருந்து நகர..

தன்னை கடைக்கண்ணால் கூட காணாத மனைவியை கோபமாய் முறைத்தான் கணவனானவன்.

"ஏய் என்னடி கண்டுக்காம போற!?"

"இம்...!!!"

'இம்'காரமிட்டு திரும்பியவள் மேலிருந்து கீழாக ஒரு பார்வை அவனை பார்த்துவிட்டு
"இப்போ கண்டுகிட்டேன்... போகட்டுமா!?" என்க.

"நக்கலா இருக்கா ரிதம் நான் உன்கிட்ட இறங்கி வர்றது!?" சினம் துளிர்க்க கேட்க

"தப்பா பேசுனது நீங்க தானே அப்போ சமாதானம் பண்ணுங்க.முடியாது இன்னும் எனக்கு கோபம் தான் முதல்ல வரும்னா கல்யாணம் முடிஞ்சு பந்திய சிறப்பிச்சுட்டு கிளம்புங்க!" என்றிட.


"அதுதான் அன்னைக்கே பேசிட்ட இல்லடி. வந்த அன்னைக்கே உன்னை சமாதானமும் பண்ணிட்டேன்டி!" தவறு தன் மீது மட்டுமே என்பதால் மட்டுமல்ல;

'காதல் மனம் அவள் இல்லாது இருக்கவிடாது உந்தித் தள்ள மீண்டும் வஞ்சியிடம் வந்து நிற்க!'

"சரி சரி விடுங்க" என்று மீண்டும் நடக்க

"ஏய்!" என்றான்

"என்ன வேணும் எதுக்கு இப்ப நிறுத்துறீங்க!?"

"சொல்லவே இல்ல!"

"எதை சொல்லல!? நிவேதாக்கு கல்யாணம்னு சொல்லிட்டு தானே வந்தேன் அப்பறம் என்ன சொல்லவே இல்ல!?"

"என்ன நக்கலா மகனை மட்டும் பார்த்து அழகா இருக்கான்னு புகழ் பாடின.என்னை ஒன்னுமே சொல்லல!?"

"நீங்களா.......!" என்று முதலில் இழுவையாய் இழுத்து ஏகன் மனதை வெடிக்க செய்த பிறகு

"கொள்ள அழகா இருக்கீங்க போதுமா! உங்க பிள்ளை குட்டி ஹீரோன்னா நீங்க பெரிய ஹீரோ.அவ்வளவு அழகு.பாருங்க கல்யாணத்துக்கு வந்த நிறைய பொண்ணுங்க உங்களைத்தான் பார்க்கிறாங்க!" என்று குளிர்வித்தவள்
வாகனத்தை நிறுத்திவிட்டு வந்த இக்னேஷை கண்டு அவனை நோக்கி நடக்க தொடங்கினாள்.



ஏனோ 'பொது இடம்' என்றும் பாராது பற்களை காட்டி சிரிக்கும் அளவிற்கு மாறியது..... மெலிதாய் வெண்பற்கள் தெரிய சிரித்தவன் முகத்தை பக்கவாட்டில் திருப்பி பிடரி முடியை கோதிக்கொண்டே... தன் வெட்கத்தை,புதிதாய் தோன்றிய கூச்சத்தை மறைக்க பாடுபட்டான் அந்த ஆணழகன்.

சற்றே திரிந்த வானிலை தான் ஏகனின் காதல் மனதில்!!!
 
இந்த ஏகா புதுசா இருக்கானே......
பொண்டாட்டிய தேடுறாறாம்.......
இவரு பொண்டாட்டி இவரை புகழனுமாம்......எப்பா ஏகன் வெக்கப்படுறாரே......😜
இந்த ஏகன் நல்லாயிருக்கார்🥳
பெரியம்மாவுக்கு சிறப்பான சம்பவம் 👏
 
இந்த ஏகா புதுசா இருக்கானே......
பொண்டாட்டிய தேடுறாறாம்.......
இவரு பொண்டாட்டி இவரை புகழனுமாம்......எப்பா ஏகன் வெக்கப்படுறாரே......😜
இந்த ஏகன் நல்லாயிருக்கார்🥳
பெரியம்மாவுக்கு சிறப்பான சம்பவம் 👏
ஆகா... இப்போ தான்டா ஏகா நீ ஸ்கோர் பண்ண ஆரம்பிச்சுருக்க ஐ பிரௌட் ஆஃப் யூடா 😎😎😎😎
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடே‌ய் ஏகா என்னா டா இது.🤭🤭🤭🤭🤭🤭🤭.
இவனைய புகழ்ந்து பேசோனுமாமே ரிதம்.🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣View attachment 8896
சரியான சாணி அடிடா... வாங்கிட்டு கம்முனு வந்துடுடா கண்ணா 😂🤣😂🤣😂🤣
 
"கொள்ள அழகா இருக்கீங்க போதுமா! உங்க பிள்ளை குட்டி ஹீரோன்னா நீங்க பெரிய ஹீரோ.அவ்வளவு அழகு.பாருங்க கல்யாணத்துக்கு வந்த நிறைய பொண்ணுங்க உங்களைத்தான் பார்க்கிறாங்க!"

அச்சச்சோ..... ரிதம் !!!!!


என்னடி இப்டி திடீர்னு அவுட்டாகிட்டே........

🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
அச்சச்சோ..... ரிதம் !!!!!

என்னடி இப்டி திடீர்னு அவுட்டாகிட்டே........

🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
😁😁😁😁 லவ் வந்துட்டா மானம் மரியாதை எல்லாம் கயிறில்லா காத்தாடி...... ஆத்தாடி உண்மைய சொல்லிட்டோமே நமக்கு ஒரு பூசைய யாரும் போட்டுடுவாங்களோ😥😥😥😥
 
வெட்கமா அவருக்கா,அகரனுக்கு வெட்கப் பட கூடத் தெரியுமா. :unsure: :unsure::unsure::love::love:
 
Top