Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 37 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 37 ❤️‍🔥

"உயிர்பிரியும் கடை நொடியில்
உணர்கிறேன்
காதலின் வாசமதை......................!!!"



நிவேதாவின் பெரியம்மாவின் உரையாடல் அலைபேசியில் தொடர்ந்தது.


"என்ன மாப்பிள்ளை கிடைக்கிற டெபாசிட் அமௌண்ட்ல சரிபாதி குடுக்குறேன்னு சொல்லி இருக்க எனக்கு அது போதாதா சொல்லு!"

கேட்டிருந்தவனோ,"உனக்கு யாரு குடுப்பா வாப்பட்டி (வாய் அதிகம் பேசுபவர்) கிழவி.
நீ அவங்களை ஏமாத்தி அவளை எனக்கு கட்டி வைக்கிற.நானும் கேட்க யாரும் இல்லாதவ;அதுக்கூட சொத்தும் சேர்ந்து கிடைக்கும் அப்படின்றனால ஒத்துக்கிட்டேன் முட்டாக்கிழவி!" மனதுள் நினைத்துக் கொண்டு

வெளியே,"அதெல்லாம் உங்க பங்கு உங்களுக்கு கண்டிப்பா உண்டு அத்தை நீங்க எதுக்கும் கவலை பட வேண்டாம்.என் வேலைல இருந்து வர்ற சம்பளம் போதும் அத்தை... இப்படி ஒரு நல்ல பொண்ணை பார்த்து வச்சதுக்கு உங்களுக்கு நன்றி அத்தை!" என்றான்.

பனியாய் உருகிவிட்டார் பெரியம்மா,"என் மாப்பிள்ளை மாதிரி நியாயம் பேச யாரால முடியும்!? அதுனால தான் போலீஸ் ஆபீசரா இருக்காப்ள!" என்று வெளியே பெருமை பேசியவரோ உள்ளுக்குள்

"காசு மட்டும் கைக்கு வரட்டும்டா நீ முக்குக்கு முக்கு வச்சிருக்க வள்ளலை எல்லாம் நான் வெளிய சொல்லி உன்னை என்ன பண்றேன் பாருடா!? அப்போ தான் அந்த சின்ன குட்டி என்னை எதிர்த்து பேசினது எவ்வளவு பெரிய தப்புன்னு உணருவா!" என்று எண்ணிக் கொண்டார்.

ஆக "இரண்டும் இரண்டகப்பை; இரண்டகப்பையும் கழண்ட அகப்பை!" என்பதாய் இருவரும் அவர்களுக்கு இடையில் கூட உண்மை இல்லாது கள்ள மனதுடன் சுற்ற.

பெரியம்மாவின் பேச்சை பைரவரை வணங்க வந்த ரேணுவின் கணவன் பிரபா கேட்டுவிட்டு உடனே செய்தி ரிதம் காதிற்கு செல்ல.

ரிதம்,"ஆதாரம் இல்லா பேச்சு சபையில் எடுபடாது!" என்பதால் ஆதாரம் கிடைக்க ரேணுவை முதலில் பெரியம்மா பக்கம் இருக்குமாறு கூறியவள்.

ரேணுவின் கணவனை மாப்பிள்ளை உடனே இருக்குமாறு கூறிவிட்டு... இக்னேஷை ஆதாரம் விரைவில் கிடைக்க வழிவகை செய்திட முடுக்கியவள் வேறு ஒன்றும் பேசாது இறங்க.

ஏகனோ,"ஏய் அப்ப நான் என்னடி செய்யட்டும்!?"

"நீங்க நான் சொல்லாமலே எதையாவது யோசிச்சு இருப்பீங்க உங்களுக்கு நான் சொல்லவா!?" என்க.

"மாப்பிள்ளை வீட்ல வசமானா ஆடா ஏதாவது சிக்கினா அமுக்கிடலாம்!" என்றான் ஏகன்.

ரிதம் ஒரு மாதிரி பார்க்க

"ஏன்டி என்னை இப்படி பார்க்குற!?"

"இல்லை முன் ஜென்மத்துல கசாப்பு கடைல வேலை பார்த்திருப்பீங்களோ பேச்சு எல்லாம் அப்படியே வருது!"

"உனக்கு நக்கலுடி.சரி நீ என்ன பண்ண போற!?"

"நான் நிவேக்கு இங்க இருக்க நிலமைய சொல்லி தயார் பண்ணனும்.அதுதான் நான் அங்க போறேன்"

என்று காரில் இருந்து இறங்க ஒவ்வொருவரும் இறங்கி அவரவர் வேலையை பார்க்க.

இக்னேஷ் மட்டும் தான் அதிக பதட்டத்துடன் இருந்தான்.

'ஏனெனில்?'

மற்றவர் வேலைகளை விட..சரியான நேரத்திற்கு ஆதாரம் 'கிடைக்க வேண்டுமே!' என்ற கவலை அவனுக்கு.

"ஒரு பெண்ணின் வாழ்வு அதில் தான் அடங்கி உள்ளது அல்லவா!"


மாப்பிள்ளை பற்றி விசாரிக்கும் பொறுப்பை இக்னேஷ் நவநீ இடம் ஒப்படைக்க..

நவநீ தான் கூறி இருந்தான்.ஆதாரம் கிடைத்தால் உன் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடுகிறேன் என்று.அவனது அழைப்பிற்காக தான் காத்திருக்கிறான் இப்பொழுது.


இக்னேஷிடமும் நேற்று இரவு வரை ஆதாரம் கிடைக்காததால் காலையில் தான் நடந்த சம்பவங்களைக் கூறி உதவி கேட்க,அவன் உடனே ஒப்புக் கொண்டான்.

"அத்தை கொஞ்சம் அப்படி வர்றீங்களா!?"

மருமகளின் முகத்தில் இருந்த பதட்டம் எதையோ விளக்க... அனுபவசாலியான பெண்மணி கணவனிடம் கண்களால் தான் சென்றுவருவதாக தகவலை கூறிவிட்டு மருமகளை தொடர.

என்னம்மா ரிதம் சொல்லு எதும் பிரச்சனையா? காசு எதும் போதவில்லையாம்மா? ஒன்னும் பிரச்சனை இல்ல உங்க மாமா மூலமா எதையும் பார்த்துக்கலாம்.. இல்லைன்னா இருக்கவே இருக்கான்ல உன் வீட்டுக்காரன் அவன் ஒருத்தன் போதும்மா!" என்றார் பெரியவர்.

அவருக்கு மருமகளையும்,அவள் தோழியரையும் எண்ணி பெருமை பிடிபடவில்லை.

இந்த காலத்தில் இப்படியும் கூட உள்ளனரா பெண்கள் என்றே எண்ணத் தோன்றியது அவருக்கு... அவரின் முந்தைய அனுபவங்கள் யாவும் அவரை அவ்வாறு எண்ணத் தூண்டியிருந்தது.


கோவிலின் உள்ளே சென்ற ரிதம் தன்னுடன் தன் மாமியாரை அழைத்து சென்றவள் மாமியாரின் கேள்வியை கண்டு நெஞ்சு நெகிழ...


"அத்தை! அது பிரச்சனை தான்.ஆனா பணத்துக்கு பிரச்சனை கிடையாது.இது வேற பிரச்சனை....."என்று தொடங்கி நிலையை விளக்க.

அவரும் மருமகளுடன் நிவேதா இருக்கும் அறைக்குள் நுழைய அங்கிருந்த பெண்களை ரிதம் வெளியேற்றினால் தவறாக தோன்றும் என்பதால் மாமியாரின் உதவியை நாட

அவரும்,"எம்மா பொண்ணுங்களா நான் ஒரு டாக்டர்.எனக்கு திடீர்னு ஒரு எமர்ஜென்சி.அதனால கான்.கால்
பேசணும்.வெளிய ஒரே சத்தமா இருக்கு.
இந்த ரூம்ல இருந்து பேசிக்கிறேன்.
கோபப்படாம நீங்க கொஞ்சம் வெளிய இருக்கீங்களா!?"

பதனமாய் பேசி அவர்களை வெளியேற்ற அவர்களும் அவரின் பேச்சில் உண்மை இருப்பதாக நம்பி வெளியே சென்றனர்.

அனைவரும் வெளியேற கதவு அடைக்கபட தோழியையும்,லதாவையும் விசித்திரமாக கண்டாள் நிவேதா.

இப்பொழுது தான் வந்து புடவையும்,
நகையும் கொடுத்து வாழ்த்தி சென்றார்.தோழியுடன் மீண்டும் வந்திருக்கிறார் என்றால் 'ஏதோ காரணம் உள்ளது!' என்பது மட்டும் புரிந்தது அவளுக்கு.

அதுவும் தோழி ஒன்றும் பேசாது லதாவை பேசவிட்டது வேறு உறுத்த....

"ரிதம் என்னடி ஆச்சு எதுக்கு இப்போ கதவை சாத்தின!?" நிலவரம் அறியமுயல..

"பொறுமையா கேளுடி நிவே!" என ஆரம்பித்து தங்களுக்கு தெரிந்தவரை கூற.

அவ்வளவு தான்," என்னடி அந்த அம்மாக்கு எவ்வளவு திமிரு இருக்கும்? எனக்கு தெரியும்டி ரிதம் எந்த கலகமும் பண்ணாம இந்தம்மா வாய்மட்டும் பேசிட்டு சுத்தும் போதே எனக்கு பெரிய சந்தேகம் இருந்துச்சு ஆனா இந்த அளவுக்கு அது சதி பண்ணும்னு நினைக்கல 'பொம்பள சகுனி'டி அது!" நிவேதா எனும் வேங்கை பாரிவேட்டைக்கு கிளம்பியது.

"ஏய் அமைதியா இருடி!"

"இதை கேட்டும் எப்படிடி நான் அமைதியா இருக்கது? சொல்லு!"

"நாங்கள்ளாம் இல்லையாமா நிவேதா. ஆதாரம் இல்லாம உன் கோபப்பேச்சு மட்டும் அங்க எடுபடுமா சொல்லு!?" அதுவரை அமைதியாக இருந்த லதா பேச

அவர் சொல்வதில் உள்ள நியாயமும் அவளுக்கு புரிந்தது.

அதனால் பொங்கிய பால் நீரிட்ட நிலையில் 'புஷ்' என்றாவது போல பெரியவரின் பேச்சிற்கு மதிப்பளித்து நிவேதா அமைதியானாள்.


நல்லவேளை ரேணுவை இங்கே அனுப்பவில்லை இல்லை என்றால் இருவரும் சண்டையிட்டு கட்டி உருண்டு அனைவருக்கும் காட்டி கொடுத்து இருப்பர் என நிம்மதி பெருமூச்சு ஒன்றை எரிந்தாள் ரிதம்.


"இப்போ என்ன செய்யலாம் மேடம்!?" என்று தன்னை அமைதிபடுத்திய அவரிடமே அவள் சரண் புக

"மேடம் எல்லாம் வேண்டாம் அம்மான்னு கூப்பிடு.அங்க வந்து நான் சொல்ற மாதிரி மட்டும் செய் அதுபோதும்!" என்றார் பெரியவர்.

"அவர் என்ன சொன்னாலும் எவ்வாறு செய்வது!?"என தோன்றினாலும் தோழி மீதுள்ள நம்பிக்கையில் நிவேதா 'சரி' என்று தலை அசைத்தாள்.

ஆனால் அவளுக்கு தெரியாது அல்லவா மாமியாரை இவ்வாறு பேசி தோழியை கரைக்குமாரு வேண்டி தானே அவரை ரிதம் அழைத்துக் கொண்டு வந்தது.

வயதில் பெரியவர் என்று நிவேதா ஒருநொடி அமைதி அடைவாள் அதுபோதுமே.


அந்த நம்பிக்கையில் தான் லதாவை அவள் கையோடு அழைத்து வந்தது.அவளின் கணிப்பு தப்பவில்லை சரியாக லதாவின் பேச்சை கேட்டு ஒப்புக்கொண்டாள்.


"ஏன்டி ரிதம் யாருடி அந்த வடை வாயன்!? எனக்கு காட்டு நான் அவனை பார்க்கணும்!" பிடியாய் நின்றாள் நிவேதா.

அவள் 'வடை வாயன்' என்றது அவளுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையை தான் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை அல்லவா 'மக்களே!!!'

அதற்கும் லதாவே இடைபுகுந்து,"இங்க பாரு நிவேதா நீ தான் இன்னும் கொஞ்ச நேரத்துல அவனை பார்க்கமட்டும் இல்ல லெஃப்ட் ரைட்டுன்னு வாங்கப்போற இல்லையா? அதுவரை கொஞ்சம் அமைதியா இரு இல்லைனா உன் பெரியம்மா அலார்ட் ஆகிடுவாங்க!" பக்குவமாய் அவளை அடக்கிவிட்டார்.

மாமியாரின் சாதுர்யம் கண்டு ரிதம் உள்ளம் பூரிக்க அவரை கண்டிருந்தாள்.
எத்தனை பேர் மருமகளின் தோழிக்காக வந்து நிற்பர்.

மருமகளின் வலியை கூட பெரிதாக எண்ணாத மாமியார்கள் வாழும் புவியில் மருமகளின் தோழிக்காக பேசிடும் மாமியார் தனக்கு கிடைத்ததை நினைத்து பெருமை கொண்டாள் மாது.

கோவிலின் கல்யாண மண்டபத்தில் திருமணம் செய்ய ஏற்பாடாக அன்னை வடிவம்மையின் பாதம் வைத்து கொண்டுவரப்பட்ட மாங்கல்யம் மஞ்சளில் நீராடிய தேங்காய் மீது மின்னியது அங்கே.

மாப்பிள்ளை வைத்து செய்ய வேண்டிய சடங்குகள் தொடங்க.பெண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்து செய்யும் சடங்கை தொடர்ந்து 'மாங்கல்ய தாரணம்' என்ற நிலை.

ஆனால் இன்னும் இக்னேஷின் எண்ணிற்கு மின்னஞ்சல் மட்டும் வரவே இல்லை.

"பொண்ண அழைச்சுட்டு வாங்கோ!" என்ற அர்ச்சகரின் ஓசை இவன் நின்ற இடம் வரை ஒலித்தது.

"மாசறு வீணையாய் அழகு பெண் அவள் ஒயிலாய் நடையிட்டு வந்தாலும்... பதட்டமும், கோபமும் சரிவிகிதம் நிறைந்த முகத்துடன் காட்சி தந்தாள்!" நிவேதா.

கண்முன் ஒரு பெண்ணின் வாழ்வு சீரழிவதை காண முடியாது உள்ளம் பதைத்தாலும்; அதையும் தாண்டிய ஏதோ ஒன்றில் உள்ளம் வலித்தது இக்னேஷிற்கு.

"இது என்ன புது வலி!?"

"எதனால் வந்தது!?"

"உடல் நிலையில் ஏன் இந்த மாற்றம்!?"

"இதயம் சம்பட்டி கொண்டு அடிவாங்கிய வலியை அனுபவிப்பது ஏன்!?" என்று இதயத்தின் மீது கைவைத்தவாரு சிந்திக்க.

மின்னஞ்சல் வந்த ஒலி கேட்க எடுத்தான் ஓட்டம் வலிக்கான காரணம் ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால் "அவளை பாதுகாப்பது என் கடமை!" என்று உள்ளம் அடித்துக் கூற.

எந்த வீண் ஆராய்ச்சியும் செய்யாது ரிதமிடம் சென்று ரகசியம் கூற.


நிவேதா கல்யாண மேடை ஏறுவதற்கு முன்பே ரிதம்,"கொஞ்சம் நில்லு நிவே..!" என தடுத்து விட.

கூடி இருந்த கூட்டம்,"இங்கே என்ன நடக்கிறது!?" என்று ஒன்றும் புரியாது பார்த்திருந்தனர்.

பெரியம்மா தான் மீண்டும் வாய் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கியது.

"என்னம்மா ரிதம் எதுக்கு இப்போ
அபசகுணமா தடுக்குற!? போம்மா அங்குட்டு!" விரட்டிட

ரிதமோ,"இருங்க அத்தை! பொறுமையா இருங்க கல்யாணம் பண்ணலாம் தான் ஆனா அதை யாருக்கும்.. யாருக்கும் பண்ணலாம்னு யோசிக்கிறேன்!?"

"என்ன பேச்சு எல்லாம் ஒரு தினுசா இருக்கு!?"

"ஏன் அத்தை உங்களுக்கு தெரியாதா!? நான் எதை சொல்றேன்னு.சரி! உங்களை அப்பறம் பார்த்துக்கலாம் பொறுமையா... இப்போ நான் மாப்பிள்ளை கிட்ட தான் பேசணும்!" என்றிட

மாப்பிள்ளை ஆனவனோ,"நீ யாரு என்கிட்ட பேச!? உன்னை உள்ள புடிச்சு போட எனக்கு ஒரு நிமிஷம் போதும்!" என்றிட

நிவேதாவின் பொறுமை யானை போல் ஆடி அசைந்து கொண்டிருந்தது.


மீண்டும் அந்த மாப்பிள்ளை பேச வருவதற்கு முன்பே,"ஏம்மா நீ இப்படி பண்ணமாட்டியே எதும் பிரச்சனையாம்மா ரிதம்!?" பற்றி அறிந்தவராக நிவேயின் மாமா கேட்டிருந்தார்.

"ஆமாங்க பெரியப்பா இதோ இந்த மாப்பிள்ளை சென்னைல போலீஸ் மட்டும் இல்ல.. முக்குக்கு முக்கு ஒரு பெண்ணோட குடும்பம் ஒன்னு இருக்காம்!" என்றதும்

அவனை மாப்பிள்ளையாக தேர்வு செய்தவருக்கு 'நெஞ்சு வலிப்பது' போன்ற உணர்வு.

"என்னம்மா நீ சொன்னா நாங்க நம்பிடுவோமா!! யாரும்மா நீ!? எங்க இருந்து வந்து யார பத்தி என்ன பேசிட்டு இருக்க!?"

மாப்பிள்ளை வீட்டு மகா ஜனங்களில் ஒருவர் எகிற.

"ஓஹோ! நாங்க யாரா இருந்தா என்ன? இல்ல நாங்க எங்க இருந்து வந்தா உங்களுக்கு என்ன!? உங்கவீட்டு பிள்ளை தப்பு பண்ணீருக்காரு அதை சொல்றோம்!" ரேணு நியாயம் பேச.

"ஏம்மா எங்க வீட்டு பிள்ளை தப்பு பண்ணினா அதை எங்களை தனியா கூப்பிட்டு சொல்லலாம் இல்ல இப்படி சபைல வச்சா சங்கடபடுத்துவீங்க!"

மாப்பிள்ளையின் தந்தை
நல்லவர் வேடமிட்டு நான்கு சுவற்றுக்குள் விசயத்தை முடிக்க பார்த்திருப்பார் போல.

இந்த பக்கம் தோழியர் ஒன்று கூற;அந்த பக்கம் மாப்பிள்ளை வீட்டார் ஒன்று கூற பெரும் கலவரமே மூண்டது.

"நிலவரம்... கலவரம்...!"
 
So unexpected......

இப்போ நிவேதாவின் மணமகனை மாற்றி இன்னொரு t wistகொண்டு வரணும்.....
 
மாப்பிள்ளை தப்பு பண்ணுவாராம் சபையில் சொல்லாமல் தனியா சொல்லனுமாமே....... கொய்யாலே..... நிவே எப்ப சரவெடி வெடிப்பா????????
அப்ப மாப்பிள்ளை பேரு இ என்ற எழுத்தில் ஆரம்பிக்குமோ??🤔🤔🤔🤔🤔
 
மாப்பிள்ளை தப்பு பண்ணுவாராம் சபையில் சொல்லாமல் தனியா சொல்லனுமாமே....... கொய்யாலே..... நிவே எப்ப சரவெடி வெடிப்பா????????
அப்ப மாப்பிள்ளை பேரு இ என்ற எழுத்தில் ஆரம்பிக்குமோ??🤔🤔🤔🤔🤔
ஆஹா....😀😀😀😀
 
Top