Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 4 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 4❤️‍🔥

"யாருங்காணா மலர்மகள் தேசத்து பாதுகன் நீயோ.....!?"



மூன்று பெண்களுக்கும் பாதுகாப்பு அரணாகவும்,நிவேதாவின் அன்னைக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து காத்தவர் வேல் தாத்தா.


நிவேதாவின் தாய் மரணம் பேரிடியாய் இறங்கிய நேரம் நிவேதாவையும், ரிதம் போல் எண்ணி காத்தவர் தாத்தா தான்.

சில மாதமாய் பொருட்கள் வைத்த இடத்தை மறந்து 'எங்க வைத்தோம்?' என்று தேடி அலைய முதலில் சாதாரணமாக வயதானதால் என்று கடந்த ரிதம்

அவர் தன்னை தன் மகள் ஜானகி; அதாவது ரிதமின் அன்னையாக ரிதமை நினைத்து உருவகித்து பேச தொடங்கிய பிறகு தான் புரிந்தது தாத்தாவின் நிலை.

தான் பணியாற்றும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல.

'வயது முதிர்வு' என்று முதலில் கூறிவிட.

அவர் கொஞ்சம் கொஞ்சமாக தான் யார் என்பதே மறக்க தொடங்க....வீட்டில் இருந்து தாத்தாவை பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை உருவானது.

மனம் தளராது சிறுவர்களுக்கு பாடம் எடுப்பது, நடனம்,நாட்டியம் என்று நிவேதாவின் அன்னை கற்றுத்தந்த கலையை கொண்டு வீட்டின் நிர்வாகத்தை கவனித்து வந்தாள்.


வெளியூர் சென்று தாத்தாவிற்கு மருத்துவம் பார்க்க எண்ணி கொஞ்சம் கொஞ்சமாக அவள் பணம் சேமிக்க.
அதற்காக சேர்ந்தது தான் அந்த கிருஷ்ண லீலா போட்டியும்.


சென்ற வாரம் கணக்குகள் முடித்து வீடு வந்த போது வீட்டில் மயங்கி இருந்தார் தாத்தா.

நிவேதாவின் உதவியுடன் மருத்துவமனை செல்ல அங்கே இருக்கும் தலைமை மருத்துவர் பரிசோதனைக்கு மதுரை செல்லுமாறு கூற.

'உயிரே போனாலும் மதுரை செல்ல கூடாது!' என்ற கொள்கையில் இருந்த ரிதம் தன் தாத்தாவிற்காக மட்டுமே முதன் முறை கலைவிழாவில் கலந்துகொள்ள முன் வந்தாள்.

'விதி மீண்டும் தன்னை அங்கேயே சுற்ற வைக்கிறதே!' கவலை வந்தாலும் ;
அவர் மீது ரிதம் கொண்ட அன்பு அவளை மதுரை மண்ணை மீண்டும் மிதிக்க வைத்தது.மதுரை சென்று பரிசோதனை முடித்து வர.

வேல் தாத்தாவின் அறிக்கையை கண்ட மருத்துவர் பெரிய மருத்துவமனைக்கு, அதுவும் அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனைக்கு தாத்தாவை அழைத்து செல்லுமாறு கூறினார்.

தன் பொருளாதார சூழல் உணர்ந்தவள், 'எங்கே அத்தகைய வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு செல்வது!?' என்று மனம் கலங்க.


அவளின் கவலையை தானே போக்கினார் அம்மருத்துவர்.

"அம்மா ரிதம் என் நண்பன் ஒருத்தன் கோயம்புத்தூர்ல பியூர் ஹாஸ்பிட்டல்ல வேலை பார்க்கிறான்.நான் உனக்கு அவன் மூலமா கொஞ்சம் ஹெல்ப் பண்றேன்மா.
அவன் அங்க இருக்க டாக்டர்ஸ் மூலமா இல்லைனா மேனேஜ்மெண்ட் மூலமா உனக்கு கண்டிப்பா ஸ்டெப் எடுப்பான்மா டோண்ட் வொரி" என்றார் நல்ல குணம்படைத்த அம்மனிதர்.

அவள் வேலையில் 'திறமைசாலி' என்பதை அறிவார் அவர்.அவள் சாமர்தியசாலி என்பதையும் அவர் அறிவார்.

பெண்ணொருத்தி தன் தாத்தாவிற்காக தனியே போராடுவதை கண்டு அவளின் பாசம் புரிந்து தன்னால் ஆன உதவியை செய்ய முன்வந்தார் அவர்.

மூவரும் ஒன்றாக 'கோயம்புத்தூர் செல்லலாம்' என்ற முடிவுக்கு வந்த போது நிவேதாவின் தூரத்து உறவினர் மாமா ஒருவர் மூலம் அவளுக்கு நல்ல வரன் ஒன்று அமைய.

அவளை பெண் பார்க்க இந்த வாரம் வருவதாக கூறி இருந்தனர் மாப்பிள்ளை வீட்டார்.

நல்லவேளையாக நிவேதவின் அன்னை தலைமை செவிலியாக வேலை பார்த்து மகளுக்காக சேமித்திருந்த நகையும், வங்கியில் சேமித்த பணமும் இருக்க.

இந்த சூழலில் நிவேதாவை தன்னுடன் அழைத்து செல்ல முடியாது பிரியும் சூழல் வேறு உண்டாக.

அவள் வாழ்வு 'நலமாக வேண்டும்!' என்ற வேண்டுதலுடன் கோயம்புத்தூரில் இருக்கும் தன் மற்றொரு தோழியான ரேணுவை நம்பி பயணம் தொடர்ந்தாள் ரிதம்.


அன்று எந்த நம்பிக்கையை இழந்து காரைக்குடி வைரவன் பட்டிக்கு இரவோடு இரவாக வந்தனரோ? இன்று இழந்த நம்பிக்கையை கைகொண்டு தன் தாத்தாவை அழைத்துக் கொண்டு கோயம்பத்தூர் செல்கிறாள் ரிதம்.


தாத்தாவிற்கு கையிருப்பில் இருக்கும் பணத்தையும், இன்னும் தேவை இருந்தால் கொஞ்சம் நகை கைவசம் இருக்க அதையும் வைத்து செலவை சமாளிக்க வேண்டும்.


"தான் படித்த செவிலியர் படிப்பிற்கு தகுந்த வேலை ஒன்றை அங்கே தேடிக் கொள்ளும் முனைப்போடு பயணிக்கும் ரிதம் ராகம் சேருமா!?"

கோயம்புத்தூர் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பேருந்து நடத்துநர்,"பஸ் ஸாண்ட் வந்துருச்சு எல்லாரும் இறங்குங்க!" என்ற குரலில் எதிர்காலத்தை எண்ணி கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு பைகளை அள்ளிக்கொண்டு தன் தாத்தா உடன் இறங்கினாள் ரிதம்.



"ரேணு நான் பஸ் ஸ்டான்ட் வந்துட்டேன்டி
நீ வரியா? இல்லைனா எனக்கு அட்ரசை சென்ட் பண்ணு நான் கூட ஆட்டோ பிடிச்சு வந்துடுறேன்" என்க

ரேணுவிற்கு முதலில் அழைத்து தான் பேருந்து நிலையத்தில் வந்திறங்கியதை கூறி காத்திருக்கும் இடத்தையும் கூற.


"அடியே ஆட்டோல எல்லாம் ஏறிடாத அப்பறம் காசை எல்லாம் நீ தானம் பண்ண வேண்டியது தான்.அதனால கொஞ்சம் வெய்ட் பண்ணு.நான் வந்துட்டே இருக்கேன் ரிதம்!" என்றாள் அவள்.

பின் நிவேதாவிற்கு அழைத்து தான் வந்ததை கூற..பைகளுடன்,தாத்தாவை அழைத்துக் கொண்டு வந்து பேருந்து நிறுத்தத்தில் நின்று கொள்ள.

பேருந்து நிறுத்தம் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மசாலா நிறுவனத்தின் பெயர் பதாகை இருக்க.அதனை கண்டவள் மனம் வெதும்பியது.


வெம்பிய மனதை கல்லாக்கி வாகனம் வரும் வழி நோக்கி கண்களை பதித்து சுற்றுப்புறத்தை நோட்டமிட தொடங்க.


தோழியை வெகு நேரம் காக்க வைக்காது வந்தாள் ரேணு.

வரும் போதே 'ரிதம்!' எனும் நெகிழ்ந்த குரலில் அழைத்தவாரு வந்தாள் அவள்.

நிவேதா,ரேணு,ரிதம் மூவரும் மூன்று ரகம்.

நிவேதா சேட்டை என்றால் ; ரிதம் கண்டிப்பானவள்.ரேணு தான் எந்த இடத்தில் எப்படி நடக்க வேண்டும் என்று அறிந்தவள்.முக்கியமாக மூவரில் பெரும்
பொறுமைசாளி அவள் தான்.


"வாடி ரிதம் எப்றீ இருக்க!? தாத்தா எப்படி இருக்கீங்க!?" என்ற நல விசாரிப்பு நிவேதா திருமணம் வரை சென்று, தாத்தாவின் தற்போதைய உடல் நலனை அறிவதில் வந்து நின்றது.

வாகன தரிப்பிடம் வருவதற்காக பேருந்து நிலையத்தை கடக்க.பேச்சு தாத்தாவின் உடல் நலன் பற்றியது என்றதுமே ரிதம் மென்குரலில் தோழிக்கு விளக்கத் தொடங்கினாள்.

வரும் வழியில் காந்திபுரம் அருகே தான் அடுத்த வாரம் மாற உள்ள வீட்டினை காண்பித்தவள் சிறிது நேர பயணத்திலேயே வீடு வந்து சேர.

வீட்டிற்குள் இருவரையும் அழைத்து சென்றாள்.

"உள்ள வாடி", "வாங்க தாத்தா" என்ற வரவேற்புடன்

"என்னங்க வாங்க ரிதம் வந்தாச்சு!" என்ற ரேணுவின் கத்தலில்

"வாம்மா ரிதம்", "வாங்க தாத்தா" என்று அறைக்குள் இருந்து ரேணுவின் கணவன் பிரபாகரன் வர.

"ஆமாம் பிரபா அண்ணா!" என மரியாதையாக கூறியவள்; தயாராக, ரேணு காண்பித்த அறைக்கு தாத்தா உடன் சென்றாள்.

இருவரும் குளித்து கிளம்பி வர பிரபா உணவை முடித்துக் கொண்டு வேலைக்கு கிளம்பி இருந்தான்.

ரேணு ,ரிதம், தாத்தா மூவரும் அமர்ந்து உணவருந்த.

"ரிதம் ரொம்ப டயர்டா இருக்கடி கொஞ்ச நேரம் போய் தூங்கு. அப்போ தான் இன்டர்வியூ போறப்போ கொஞ்சம் ஃப்ரெஷ்ஷா இருக்கும்"

களைப்பை போக்க உறங்குமாரு கூற.

"சரிடி நான் போய் தூங்கறேன் நீயும் அகிலா அம்மாக்கு சொல்லிடு" என்றாள் ரிதம்.

அகிலாண்டம் ரேணுவின் தாய்.

"சரி ரிதம்! இந்த இடத்து பிரச்சனை தான்டி பெரும் பிரச்னையா இருக்கு இல்லைன்னா அம்மா உன் கூட வர்றதா இருந்தாங்க"
தோழியை தனியே பயணிக்க வைத்த வருத்தம் அவள் குரலில்.

"அதெல்லாம் ஒன்னும் கவலை படாத எல்லாம் சரியாகும்!சீக்கிரமா அந்த இடம் நம்ம கைக்கே வரும் பாருடி" என்று தன் கவலையை அடுத்தவர் புறம் திணிக்காது;
மற்றவரின் கவலைக்கு ஆறுதல் கூறும் 'வெள்ளை மனம்' அவளிடம் இருந்தது.


தோழியின் வார்த்தை நம்பிக்கை அளிக்க அவளை உறங்க அனுப்பிவிட்டு தன் வேலையை பார்க்க சென்றாள் ரேணு.


தாத்தாவை கட்டிலில் உறங்கக் கூறிவிட்டு தான் தரையில் படுக்கையை விரித்து படுக்க.

இரவு முழுதும் தூங்காத கண்கள் இரண்டும் எரிச்சலை கிளப்ப படுத்ததும் உறங்கிவிட்டாள்.


மதியம் மூன்று மணிக்கு நிவேதா அழைத்த அழைப்பில் விழித்து எழுந்தாள் ரிதம்.
இன்னும் கண் எரிச்சல் உணர்வு நீங்கவே இல்லாது போக

"என்ன நிவே கால் பண்ணியிருக்க!?" என்றாள் அழைப்பை ஏற்று.

"இவ்வளவு நேரம் நீ காலை எடுக்கவே இல்லையேடி என்ன தூங்கிட்டியா!?"

"ஆமாம் நிவே டயர்ட் அதுதான் தூங்கிட்டேன் !"

"எப்போ டி ஹாஸ்பிடல் போகணும்!?"

"இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பனும் நிவே!"

எதிர்ப்புறம் நிவேதா அடுக்கிய கேள்விகளுக்கு பொறுமையாய் பதில் கூறிய ரிதம் இரவு வந்து அழைப்பதாக அழைப்பை துண்டித்து மருத்துவமனை செல்ல கிளம்பினாள் தாத்தா உடன்.

மாலை ஆறு மணிக்கு ரிதமின் நேர்காணல்
தாத்தாவை அழைத்து செல்லும் அதே மருத்துவமனையில் இருக்க.

இங்கு வருவதற்கு முன்பே ரேணு மூலம் விண்ணப்பித்து இருந்ததால் அதை முடித்த உடன் ஏழு மணிக்கு தாத்தாவிற்கு மருத்துவரை காண பதிவாகி இருந்தது.


ரிதம் தாத்தாவின் மருத்துவ அறிக்கைகள் மற்றும் நேர்காணலுக்கு தேவையான அனைத்தையும் எடுத்துக் கொண்டு பிரபா காரை எடுத்துக் கொண்டு வேலைக்கு சென்றதால் மூவரும் ஆட்டோவில் சென்று இறங்கினர்.


தாத்தாவை ரிதம் நேர்காணல் முடித்து வரும்வரை ரேணுவின் பொறுப்பில் சிறுவர் பூங்காவில் அமர்த்திவிட்டு உள்ளே சென்றாள் அவள்.


"இங்கே தான் அவளின் வாழ்வை மாற்றும் திருப்புமுனை உள்ளதை அவள் அறிவாளா!?"


நேர்காணல் சென்ற போது இவளின் "கல்வி தகுதி போதுமானதாக இருந்தாலும்; அவளுக்கு அனுபவம் இல்லை!" என்று மறுத்துவிட.

அடுத்து,"எங்காவது வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்!" நினைத்து அவ்விடம் விட்டு பூங்காவை நோக்கி நகர.


ரிதமின் எண்ணமெல்லாம் அடுத்த வேலைக்கு ஏற்பாடு செய்வதில் பதிந்து அங்கிருந்து நகர தொடங்கிய நேரம்....
உடல் சுகம் இல்லாததால் ஊசி ஏற்ற நெருங்கிய மருத்துவர் செவிலியர் என இருவரையும் தன் அருகே நெருங்கவிடாது கதறியது 'சின்ன சிட்டு' ஒன்று.


மருத்துவ வளாகம் விட்டு வெளியேற மின் தூக்கி அருகே வந்த ரிதமின் காதுகளில் சிறுவனின் அலறல் கேட்க உள்ளம் பதற..
"என்ன ஆனது!?" என்று பயந்து சத்தம் வந்த அறைக்குள் நுழைய.

சிறுவன் அவன் ரிதமைக் கண்டு இவளோடு ஒட்டிக் கொண்டான்.


குழந்தை ரிதமை விடாது ஒட்டிக் கொண்டதை கண்ட சுற்றி நின்ற இருவரும் வெளியில் நின்ற பாதுகாவலர்களும் அதிர்ந்தனர்.இங்கே நடந்த அதிசயத்தை குழந்தையின் தந்தைக்கு ஒருவன் தெரியப்படுத்த.



தந்தையானவனோ தனக்கு இருந்த வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு 'ஒளியின் வேகத்தில்' மருத்துவமனை நோக்கி வந்திருந்தான்.

எல்லாம் அவன் பிள்ளையின் முகத்தில் தோன்றும் புன்னகையை காணவே இந்த போராட்டம்.அவன்
வாழ்கையின் ஓட்டம் எல்லாமே தன் குடும்பத்திற்காக மட்டும் தான்.

"தன் பிள்ளை யாரை பிடித்து கொண்டுள்ளான் !?"

"யார் அது தன் பிள்ளையின் அபிமானம் பெற்ற பெண்!?"

"அலை அலையாக பல கேள்விகள் அவனுள்!"
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
மசாலா கம்பெனி விளம்பரத்தைப் பாத்து ஏன் ரிதம்
மனசு வெதும்புறா?.
ஒரு வேளை அவளோடதை சார்ந்ததோ?🙄🙄🙄🙄
ஊசி போட அடம் பண்ணற வாண்டு அகரனா இருக்கும்னு நெனைக்கிறேன்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
மசாலா கம்பெனி விளம்பரத்தைப் பாத்து ஏன் ரிதம்
மனசு வெதும்புறா?.
ஒரு வேளை அவளோடதை சார்ந்ததோ?🙄🙄🙄🙄
ஊசி போட அடம் பண்ணற வாண்டு அகரனா இருக்கும்னு நெனைக்கிறேன்.
உங்கள் கண்டுபிடிப்பை பாராட்டி சரோஜா தேவி பயன்படுத்திய நகப்பூச்சு 💅🏻 இனாம் இனாம் இனாம் 📢💤
 
Top