Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 58 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 58 ❤️‍🔥

"என் கண்ணுக்குள்
வைத்தேன்
கதிரொளியே உன்னை.....!!!"

அகரன் ரிதம் காட்டிய ஒற்றையடி பாதை சென்ற வழியிலே ஒடியவன் சிறிது தூரத்திலே சாலையை கண்டுகொண்டான்.

'ஆனால்!'

போக்குவரத்திற்கு சரியான பாதையாக அது இருக்கவில்லை.வாகன போக்குவரத்தும் இருப்பதாக தெரியவில்லை.

அந்த சாலையின் ஓரம் நின்று "வாகனம் எதுவும் வருகிறதா!?" என்று பச்சிளம் பிள்ளையின் கண்கள் சாலையை வெறிக்க.

காத்து காத்து கண்கள் பூத்த நேரம் புத்தொளி பெற்றது கண்கள்.காரணம் சரக்குகள் ஏற்றி செல்லும் 'குட்டி யானை' ஒன்று வர.

சிறுவன் ஓடினான் சாலையின் நடுவே.

யாருமில்லா பாதையில் எங்கிருந்தோ சிறுவன் ஒருவன் ஒடிவருவது கண்டு அரண்டு போன வாகன ஓட்டியோ...
பயத்தில் வண்டியை சற்று முன்பே நிறுத்தி தன்னை வழிமறித்த சிறுவன் நோக்கி கோபமாக சென்றவன் சிறுவன் முகம் பார்க்க.

அதுவோ,"வந்துவிட்டாயா பாதுகாவலா!" என்பதான விழியில் ஒளியுடன் நின்றிருக்க.

தன்னை நிதானித்த வாகன ஓட்டி "என்ன ஆனது!?" என்று விசாரிக்க தொடங்கினார்.

அகரன் நடந்ததை கூறி,பெற்றவனுக்கு தகவல் கூற கைபேசியை கேட்டு வாங்கினான்.

தகப்பனுக்கு நடந்ததை கூறி அழைப்பை துண்டித்த நொடி அகரன் எதையும் யோசிக்காது,"வாகன ஒட்டியின் கரத்தை தன் பிஞ்சு கரத்தால் பிடித்துக் கொண்டு ஓட்டமெடுத்தான் அன்னை அமர்ந்திருக்கும் வேப்பமரம் நோக்கி!"

தொலைவில் இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை கண்டு பதறி ஓடினான் வாகன ஓட்டி.

நேரம் தாழ்த்தாது அவளை கைகளில் ஏந்தியவன்,

"எம்மா தங்கச்சி! கண்ணை தொறம்மா.....எம்மா தங்கச்சி.....!!" என்று

அவளை அழைத்தவாரு ஓடியவனுக்கு பெரும் ஆச்சர்யம் தன்னை பிடித்துக் கொண்டு ஓடிவரும் அகரனைக் கண்டு.

ரிதமை தன் காய்கறி ஏற்றி செல்லும் வாகனத்தின் பின்னால் கிடத்தி,
வாகனத்தை வழியில் சற்று அருகில் இருக்கும் சிறு மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்து செல்ல.

அகரன் பிடித்த விரலைவிடாது இறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அவனை கண்டு வாகன ஓட்டியோ, "தம்பி ஒன்னும் ஆகாது பயப்படாத...!" என்று ஆறுதல் மொழிய.

"ஆகா அகரன் கரம் பிடித்த பாக்யவான் ஆனான் வாகன ஓட்டி.. அவனுக்கும் அது தெரிந்தே இருந்ததோ அதனால் தான் ஆச்சர்யமாக சிறுவன் முகம் பார்த்திருந்தான்!" அவன்.

மீண்டும் ஏகனுக்கு அழைப்பு விடுத்து அவனுக்கு தாங்கள் இருக்கும் மருத்துவமனையின் பெயரைக் கூறிட.

அடுத்த ஒரு மணி நேரத்தில் வந்திருந்தான் ஏகன்.

"உயிர் உருகி... கரைந்து... மிச்சம் கடைசி துளி மட்டுமே... மீந்துகிடக்கும் மனிதனைப் போல சோர்ந்து ஓய்ந்து போய் வந்திருந்தான்!"

ஆனால் கண்களில் மனைவியும், மகனும் இருக்கும் இடம் தெரிந்ததால் சிறு தெளிவு பிறந்தது.

கடந்த ஒரு மணி நேரம் ஓராயிரம் யுகங்களை உண்டு 'ஏப்பமிட்ட' உணர்வு அவனுக்கு...

ஒருவழியாக உயிரை கைகளில் தாங்கிய ஏகன் மருத்துவமனையை அடைந்தான்.

தந்தையை கண்ட தலைமகன் "அப்பா" என்றவாறு ஓடினான் அவனை நோக்கி.

தன்னை அமரும் இருக்கையில் விடாது மடியில் தாங்கி இருந்த வாகன ஒட்டியின் மடியில் இருந்து குதித்து ஓடினான் அகரன்.

அன்னையை தந்தை வரும்வரை 'காக்க வேண்டும்!' என்று வைராக்யத்தோடு தந்தை வரும்வரை கண்ணீரை இழுத்து பிடித்து அப்பனை போல் அழுத்தமாக இருந்தவன்.

பொறுப்பை தந்தை சுமக்க வந்ததும் சுமையை இறக்கும் நோக்கோடு தந்தையின் கால்களை கட்டிக் கொண்டு.

அன்னை இருக்கும் அறையை காண்பித்து "அப்பா,அம்மா...ப்பா...!"என்று அழுதிட.

மகனின் முதல் அணைப்பில் மேனி சிலிர்க்க நின்றவன் மகனை கைகளில் ஏந்தி அவனுக்கு அழுத்தமான அணைப்பை வழங்கி.

தனக்கு அழைப்பு விடுத்தவன் அருகே சென்றான் ஏகன்.

ஏகன் வாழ்வின் முதல் அடி அதுவும் சாதாரண அடியல்ல அது 'சாணியடி!'

'ஆம்!'

"யார் ஒருவன் தன் மகனை தீண்டி அவனின் உடல் நலனைக் குன்ற செய்தான்!" என கூறி.

"நாய் போல் அடித்து வேலையை விட்டு துரத்தினானோ!?"

"கை கால்களை உடைத்து நடக்கவே முடியாது செய்து அனுப்பிவிட்டு.அவன் மீது 'தவறில்லை' என்று அறிந்த பின்பும்;குற்ற உணர்வு இல்லாது அலைந்தானோ!?"

"அதே வாகன ஓட்டுநர் தான் அங்கே அமர்ந்திருந்தார்!"

காத்திருப்போர் இருக்கையில் இருந்தவனை கண்டதும் ஏகன் உடம்பில் ஓடிய இரத்தம் எல்லாம் சுண்டிய உணர்வு.

"அவனுக்கு ஏகன் இழைத்தது எவ்வளவு பெரிய துரோகம்!?"

"ஒரு தவறும் செய்யவில்லை என்று அவன் எவ்வளவு எடுத்துக் கூறியும் கேட்காது அடித்து விரட்ட.... அன்று அவன் பார்த்த ஒற்றை பார்வை எப்பொழுதும் ஏகனை குற்ற உணர்வில் ஆழ்த்தும்!"

"ஆனால்! அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்துவிடுவான் ஏகன்.
இன்று அவ்வாறு கடக்கமுடியுமா என்ன!?"

"எவன் ஒருவனின் வாழ்வை சூனியமாக மாற்றி அடித்து விரட்டி அனுப்பினானோ!? அவன் தான் இன்று ஏகன் எனும் பெரும் மனிதனின் எதிர்காலத்தை காத்து நின்ற தயாளனாக அங்கே அமர்ந்திருக்க!"

அகரன் ரிதமை தீண்டிய பிறகு நம்பிக்கையோடு தீண்டிய 'இரண்டாம் நபர்' எனும் பெரும் பேரை அவனுக்கு வழங்கி இருந்தான் அல்லவா.

ஏகனுக்கும் கிடைக்காத வரத்தை பெற்றிருந்தான் சந்தானம்.

அதுதான் அந்த வாகன ஓட்டியின் பெயர்.

ஒரு நொடி "என்ன பேசுவது!?"என்றே தெரியாது நின்ற ஏகன் இயல்பு குணம் தலைதூக்க

"சந்தானம் என்ன நடந்தது!? டாக்டர் என்ன சொன்னாங்க!?" விசாரணையில் இறங்க.

"சார் டாக்டர் பனிக்குடம் உடஞ்சுடுச்சு குழந்தை பிறக்கபோகுது குடும்பத்து ஆளுங்க கையெழுத்து போடனும் சொன்னாங்க... அதுனால அந்த பொண்ணு என் தங்கச்சி. இது என் தங்கச்சி மகன்னு சொல்லி கையெழுத்து போட்டிருக்கேன் சார்!"

"எதுக்கும் நீங்க என்ன ஆச்சுன்னு கேளுங்க நான் தம்பிய தனியா விட்டுட்டு போகமுடியாம தான் இங்க இருந்தேன்.
அதுதான் நீங்க வந்துட்டீங்க இல்ல இனி பார்த்துக்கோங்க சார் நான் கிளம்பறேன்.
குழந்தை பிறந்ததும் என்ன பிள்ளைன்னு மட்டும் சொல்லுங்க சார்!" என்றவாறு தான் கிளம்ப தயாராக.

"இன்னா செய்தவனுக்கும் நன்னயம் செய்து;சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!" என காட்டிவிட்டான் சந்தானம்.

அவன் "கிளம்புகிறேன்!" என்றதை கண்டுகொள்ளாதவாரு மகனை அவனிடம் விட்டுவிட்டு மருத்துவரை காண ஏகன் செல்ல.

மருத்துவரே ரிதம் இருந்த பிரசவ அறையின் உள்ளிருந்து வெளியே வந்தார்.

"பேஷன்டோட ஹஸ்பன்ட் வந்தாச்சா!?" என்று சந்தானத்தை பார்த்து கேட்க

"இதோ இவரு தாங்க டாக்டர்!" என்று கூறிவிட்டு ஏகன் பற்றி அறிந்ததால் அத்தோடு ஒதுங்கிக் கொண்டான்.

"ஓ நீங்க தானா சார் இன்னும் அறை மணி நேரத்துல பேபி பிறந்துடும் சோ ஃபார்மாலிடிஸ் பாருங்க!" என்றவர் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

அவர் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக ரிதம் அலறும் ஓசையைத் தொடர்ந்து அவளின் கதறலை கடந்த குழந்தையின் முதல் அழுகுரல் கேட்க.

நிம்மதி பெருமூச்சு அங்கிருந்த ஆண்கள் மூவருக்கும்.

சந்தானம், ஏகன்,அகரன் மூவரும் கண்களில் நீரை சுமந்து நிற்க.

அடுத்த சில மணி நேரத்தில் குழந்தையை சுத்தம் செய்து கொண்டுவர.

மற்றுமொரு மகனைக் கண்ட ஏகன் கைகளில் ஏந்த தயங்கி பின்னால் நகர.

"நீ நகர நான் விடுவேனா!?" என்று அவன் கரத்தை தன் பிஞ்சு கரத்தால் பட்டென்று அடித்தான் குட்டி கோவணன்.

மகனுக்கு பரம்பரையாக வரும் எந்த அறிகுறியும் இல்லாததால் மனம் நிறைந்தவன்

"அப்பா லிட்டில் ஜாமுனை நானும் பாரக்கட்டுமா!?" என்ற மகனின் குரலில் பூலோகம் வந்து.

செவிலியரிடம் குழந்தையை முதலில் சந்தானத்திடம் கொடுக்குமாறு கூறிவிட்டான்.

மன்னிப்பு கேட்க வில்லை அவன்.

ஆனால் அவன் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொண்டான்.
'மன்னிப்பு' எனும் வார்த்தை கூட இப்பொழுது கிடைத்த பெரும் பேரில் மடங்கி மறைந்து போகும் அல்லவா.

"என்னிடமா தன் பிள்ளையை கொடுக்க சொன்னான் ஏகன்.அதும் ஏகனா அவ்வார்த்தை கூறினான்!?"என்ற ஆனந்த அதிர்வோடு குழந்தையை கைகளில் ஏந்திக் கொண்டான் சந்தானம்.

சந்தானம் ஆசை தீர கண்டுவிட்டு ஏகனிடம் ஒப்படைக்க மகனை கைகளுக்குள் பொதித்து ரசித்தவன்.

மகனை மார்போடு அணைத்து நெற்றி முத்தம் ஒன்றை நெக்குருகி வழங்கினான்.
அகரன் ஆர்வமாக காத்திருக்க அவனுக்கும் காண்பிக்க.

தன் லிட்டில் ஜாமுன் முன்பு தன் கரத்தை நீட்ட.அண்ணனின் விரலை தன் பஞ்சு விரலால் இறுக்கிக் கொண்டான் ரிதம் பெற்ற வசீகரன்.

அன்னை பிடித்த கரம் இப்பொழுது அவள் ஓய்ந்து கிடக்க அவள் ஈன்ற மகன் வந்து பிடித்து கொண்டான் போல.

"ராமனின்,லட்மணரை போலவே இனிவரும் காலம் இருவரும் ஒன்றாகவே இருப்போம் என்றானோ ரிதமின் இரண்டாம் மகவு....ராமனை ஈன்றது கோசலை...லட்மணனை பெற்றதோ சுமித்ரை....ஆனால் ராமன் பெருமை சொன்னால் அங்கே லட்மணனின் பெருமை கூறாது முடிவுறாது அல்லவா!"

அதுபோல் தான் சின்னவன் குட்டி கரத்தால் தன்னை பிடித்ததை கண்டு அகரன் மனம் கொள்ளா இன்பம் கொண்டது.

ஒருவனை கையில் ஏந்தி மற்றவனை கையில் பிடித்துக் கொண்டு மனைவியைக் காண சென்றான் ஏகன்.

அரை மயக்கமாக இருந்தும் மூத்தவனை முடி முதல் அடிவரை ஆராய்ந்து அவனுக்கு 'ஒன்றும் இல்லை' என்பதை கண்டபின்பு தான் கணவன் முகம் பார்த்தாள் அந்த அன்புத்தாய்.

உற்றவன் முகம் காண அவனோ கோடான கோடி தேஜசுடன் புன்னகை செய்தவன் தன் வலகரத்தை உயர்த்தி மனைவி கவனிக்காத ஒன்றை காண்பித்தான்.

அதுதான்,"அகரன் ஏகனின் கையை பிடித்துக் கொண்டு நின்றது!" அதை காண்பிக்க.

சொல்லமுடியாத மகிழ்வு உவகை உற்சாகம் அனைத்தும் அவளுக்கு.

"எல்லை இல்லா வானம் போல் அத்தனை நிறைவு மனதுள் நிரம்பியது!"

"ஜாமுன்,'லிட்டில் ஜாமுனா!?' 'இல்லை லிட்டில் ரசகுல்லாவா!?'" மகனுக்கே முன்னுரிமை வழங்க

தந்தை கரத்தை விட்டுவிட்டு தாயின் புறம் தாவியவன் நாற்காலியில் அமர்ந்து கொண்டு அன்னையின் கரத்தை பட்டு போல நீவ.

ஏகனுக்கு ஆச்சர்யம்,"தனக்கும் தோன்றாத அனுசரணை எல்லாம் தன் மகன் கற்றறிந்தது எங்கே!?" என்ற கேள்விக்கு;

அவன் கண்முன் படுத்திருந்தாள் "கருணையின் வடிவான பெண் தெய்வம் ஒருத்தி!"

"அன்னையின் முகம் கண்டு அம்மா நம்ம சொன்னது போல நமக்கு லிட்டில் ஜாமுன் தான்மா வந்திருக்கான். அப்பாகிட்ட தூங்கிட்டு இருக்கான் பாருங்க!"

"டேய் இப்போ வேணா ஜாமுன் வந்திருக்கலாம்... ஆனா அடுத்து ரசகுல்லா வராம நான் விடமாட்டேன்!" சபதம் ஏற்க.

என் பசியை ஆற்றிவிட்டு அடுத்தது 'ரசகுல்லாவா!?'அல்லது 'ரசமலாயா!?' பட்டிமன்றம் நடந்துங்களடா 'லகட பாண்டியர்களா' என்று அழுகத் தொடங்கினான் ஏகனின் புதல்வன்.

செவிலி வந்து பிள்ளையை ரிதம் புறம் வாங்கி கொடுக்க.

பிள்ளைக்கு அவள் பசியாற்ற தகப்பனும் மகனும் வெளியே தள்ளப்பட்டனர்.

வெளியில் வந்த ஏகன் இக்னேஷிற்கு அழைப்பை ஏற்படுத்தி அடுத்தடுத்து செய்ய வேண்டிய நடவடிக்கை பற்றி கூறியவன் அமைதியாக சென்று ஒரு இருக்கையில் சாய்ந்தான்.

ரிதம் ஓய்வெடுத்து விழி திறக்க.மகன் ஒரு புறமும் கணவன் ஒருபுறமும் இருக்க.

குழந்தை தொட்டிலில் உறங்கிக் கிடந்தான்.

மனைவி தீண்டல் உணர்ந்து அவள் முகம் பார்த்த ஏகன் வெளியில் சென்று சந்தானத்தை அழைத்து வந்தான்.

அவன் முகம் கண்ட ரிதம்,"அண்ணா நீங்க இங்க என்ன பண்றீங்க.?அன்னைக்கு உங்களுக்கு அந்த தீக்ஷி அடுச்சதுல அடி ரொம்ப அதிகமா!? உங்களை பத்தி இவங்க யாருக்குமே தெரியலை!" என்று அக்கறையாக வினவ,ஏகன் முகம் செத்துவிட்டது.

ஏகன் அன்று நடந்ததையும்; இன்று நடந்ததையும் கூறி; மனைவி இடம் ஏச்சு பேச்சு வாங்கி சந்தானம் வந்து
"இல்லை இருக்கட்டும் மேடம்!" என்று தடுத்ததில் இடைவெளி விட.

"அண்ணா நான் உங்களை எப்படி கூப்பிடுறேன் நீங்க என்ன மேடம்னு சொல்றீங்க.ரிதம்னு சொல்லுங்க!" என்றவாறு தன் உயிரை முழுதாய் மீட்டுக் கொடுத்ததற்கு நன்றிகள் நவிழ.

சிறிது நேரம் பேசியிருந்து விட்டு அவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப இருந்தவனை இனி தன் பிள்ளைகளுக்கு பாதுகாவலனாக நியமித்து கௌரவித்தான் ஏகன்.

அகரனை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றான் சந்தானம்.

'ஏனென்றால்!?'

ஏகன் கண்களில் 'ஏக்கம் தாண்டவம் ஆட' அதை புரிந்து வெளியில் செல்ல.

கணவன் முகம் பார்த்த ரிதம் அவன் கண்களில் கள்ளமும்,காதலும்,ஆசையும், ஏக்கமும்,நிறைவும்,நிம்மதியும் போட்டியிடும் அழகை கண்டவள் விழிகள் சதிராட.

அவள் எண்ணம் அறிந்தவன் பிள்ளையை கைகளில் ஏந்தி அவள் அருகே கிடத்த.

பிள்ளை அப்படியே ஏகனின் நகலாக இருந்தான்.

"கணவன் உறங்கும் போதும் அவன் முகத்தையும்..... அவன் வீட்டில் இல்லாத போது... அவன் புகைபடத்தையும் மட்டுமே 'தான் கண்டிருந்ததன்' கள்ளம் கணவனை உறித்து வைத்து மகனாக வந்த அதிசயத்தை கண்ணார கண்டிருந்தாள்!"

நெற்றி புரண்ட மனைவியின் முடியை ஒதுக்கிவிட்டு கைதவற இருந்த 'பொக்கிஷ பேழை' தன் எதிர்காலத்தை மீட்டுக் கொண்டுவந்த தேவ கன்னிகையை அன்பாய் பார்த்து....அவளின் சிறுத்த நுதலில் ஆசையை தேக்கி முத்தமிட்டான் ஏகன்.

முத்தமிட்ட ஈர இதழின் ஈரத்தோடு துளி கண்ணின்
நீரும் பட்டுத் தெறிக்க.
கணவன் கவலையை புரிந்தவள் அவன் அன்பை ஆத்மார்த்தமாக ஏற்றுக் கொண்டாள்.

கணவன் அழுகையில் அவன் முகம் காண முயல.

"அவனா நிமிருவான்? அழுத்தக்காரன்! முகத்தை அவளின் கழுத்தில் புதைத்துக் கொண்டு சந்தன மணத்தோடு; இன்று அவளின் பால் மணம் மட்டுமல்ல பிள்ளைப்பேற்றில் வந்த பால் மணமும் வீச.ஆசையாய் ஆழ்ந்து அனுபவித்தான்!"
 
Appa varthai illai arumai ❤️ ❤️ ❤️ 🤗 🤗 🤗
 
"உயிர் உருகி... கரைந்து... மிச்சம் கடைசி துளி மட்டுமே... மீந்துகிடக்கும் மனிதனைப் போல சோர்ந்து ஓய்ந்து போய் வந்திருந்தான்!"

ப்பாஹ்..... இவ்ளோ அன்பை காட்ட தெரியுமாடா உனக்கு, ஏகன்?

சாதிச்சுட்டே போ.....
 
Top