Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 7❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 7 ❤️‍🔥


"நாகமணி நீயானால் உன்னை
காக்கும் பாதுகை நான்......!!!"


"இவன் எல்லாம் என்ன ஆளு? 'கொஞ்சம் அழகா' நான் ரசிக்கிற மாதிரி இருந்தான் தான்.ஆனா அதுக்காக எதுவேணாலும் எப்படிவேணாலும் பேசுவானா அவன்!?
என்னை சொன்னான் பொய் சொல்லி
இவனை நடிச்சு ஏமாத்தி பணம் பறிக்க வந்தவன்னு.ஆனா இவனுக்கு கீழ வேலை பார்க்கற எல்லாருமே பிராடா இருப்பானுங்க போல! இவனே பெரிய பிராட் போல அதுனால தான் அடுத்தவங்களையும் அவனை மாதிரியே பிராடுன்னு நினைக்கிறான்.
பிராடு,ஃபோர் டுவென்டி...."

வாயிற்கு வந்தபடி வசவுகளை வாரி வாரி ஏகன் மீதும்,அவனின் சார்பாக வந்த இக்னேஷ் மற்றும் பாதுகாவலன் மீதும் பாரபட்சமின்றி இறைத்துக் கொண்டே நடந்தாள் ரிதம்.

அவளின் ஆத்திரம் என்ன திட்டியும் அடங்கவே இல்லை.அதுவும்,'பிள்ளையை வைத்து அல்லவா தன்னை அழைத்து சென்றுள்ளனர்!' கோபம் என்றால் கோபம் அப்படி ஒரு கோபம்.

காரைவிட்டு மெதுவாக இறங்கிய அகரன் கோபத்தில் திட்டிக்கொண்டே நடந்த நங்கையின் கரம் பிடிக்க.பிஞ்சின் மென் தீண்டலில் சுயம் பெற்று திரும்பி அகரன் முகம் கண்டாள்.

அதில் தான் எத்தனை ஏக்கம். ஏக்கர் கணக்கில் வழிந்த ஏக்கத்தை கண்டு மலை இறங்கினாள் பெண்மையின் மென்மையள்.

பாவமாய் பார்த்த பாலகனை கைகளில் ஏந்திக் கொண்டு மீண்டும் ஏகன் இருந்த காரினை நோக்கி நடையை கட்டினாள்.

எல்லாம்,'அகரன் ஒருவனுக்காக மட்டுமே!' மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

மகனின் செயலைக் கண்டிருந்த ஏகனுக்கு அவன் ஒவ்வொரு பரிணாமும் ஆச்சர்யத்தை கொடுக்க வியந்து பார்த்திருந்தான் மகனை.

ரிதம் கரத்தை மகன் இறுக பற்றியது முதல் அவளின் தாய்மையில் கரைய விரும்பி தோள் சாய்ந்தது வரை கண்ணிமைக்காது கண்டவன் தனக்குள் தீர்மானித்துவிட்டான்.

'உலகில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலை கொண்டது!' என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன்.

தன் எதிரில் நடந்து வருபவளை பற்றி முழு விபரமும் தன் கையகம் இருக்க உறுதி பூண்டான்.மகனின் விலைமதிப்பற்ற மகிழ்விற்காக எதையும் விலை கொடுத்து வாங்கும் அந்த விசித்திர தந்தையவன்.

'எப்படியும் தங்கள் பாஸ் அவளிடம் சென்று பேசப் போவது கிடையாது.நாமே பேசி ஒரு அழைப்பு விடுப்போம்!' என முன்னால் வந்த இக்னேஷ்

"சாரி மேம்! அகரன் நீங்க போனதும் ரொம்ப சேடா இருந்ததால உங்களை பொய் சொல்லி கூப்பிட்டு வரவேண்டியதா போய்டுச்சு சாரி மேம்!!" தன் தவறையும் காரணத்தையும் கூறி மன்னிப்பு வேண்ட.

"மேம் எல்லாம் வேண்டாம்.என் நேம் ரிதம், இதுவே கடைசியா இருக்கட்டும் மிஸ்டர்" என்றவள் தோளில் புதைந்த பாலகனை காருக்குள் அமர்த்த.

அவனோ தாரகையின் கழுத்தை கட்டிக்கொண்டு விடவே விடாது அடம்பிடிக்க.

"உள்ள வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும். ஆனா இங்க இல்ல உன் சேஃப்டிக்கு நான் கேரண்டி!" கடுகடு முகத்தோடு கடுப்படித்தான் ஏகன்.

'ஆனா இவன் மண்டைக்கு நான் கேரண்ட்டி கிடையாதுடா கணேசா!' மனதுள் நினைத்துக் கொண்டு

"ஹலோ! என் சேஃப்டியை பார்த்துக்க எனக்கு தெரியும். எது சொல்றதா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க. என் தாத்தாவும் பிரெண்டும் எனக்காக வெய்டிங்"

முகத்தில் அடித்தாற் போல் கூறிவிட்டாள் கோபத்தூரிகை.

அவனை முதன்முதலில் கண்ட பொழுது தாத்தாவை தள்ளிவிட்டதும்; இன்று பணத்திற்காக வந்து இவன் முன் நடிப்பதாக கூறியதும்; நினைவில் வந்து செல்ல 'படக்'கென்று பேசிவிட்டாள்.

"எனக்கு ஒன்னும் இல்லை.ஆனா பையன் இன்னும் ஈவ்னிங்ல இருந்து சாப்பிடவே இல்ல அவனுக்கு வெளியிடத்து சாப்பாடு ஒத்துக்காது சோ.." பாதியில் நிறுத்த

சிறு தலையசைப்போடு கீழிறங்கி சென்றவள் தாத்தாவை ரேணு உடன் அனுப்ப முயல.

அவரோ இவளை விட்டு துளி நகராது போக.

ரிதம் கூறியதை கேட்ட ரேணு திட்டித் தீர்த்தாள்.... "தெரியாத ஊரில் எப்படி தெரியாத ஒருவனுடன் செவ்வாய்!? நானும் உன்னுடன் வருவேன்!" என நண்பியின் பாதுகாப்பில் அக்கறை கொண்டு அணங்கவள் ஆர்பரிக்க.

"இல்ல ரேணு நான் அவங்களை மதுரையில பார்த்திருக்கேன்" என நடந்ததை விளக்கிய பின் தான் அமைதி அடைந்து தாத்தவையும் பேத்தியையும் அனுப்பினாள் ரேணு.

அதுவும் இக்னேஷ் சத்தியமாக தானே திரும்பி அழைத்து வந்து விடுவதாக கூறிய வாக்குறுதியின் பேரில் செல்லுமாறு விடுத்தாள்.


ரேணுவை வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பிவிட்டு தாத்தாவை அழைத்துக் கொண்டு அவன் காரில் பயணப்பட்டாள் ரிதம்.

ஒரு வழியாக தாத்தாவை அழைத்து வந்து ஏகனின் ரோல்ஸ் ராய்ஸில் ஓட்டுநர் இருக்கையின் அருகே அமரச்செய்ய.

அவரோ ஏகன் முகம் பார்த்து," டேய் தியாகு எப்படிடா இருக்க. இன்னும் அப்படியே இருக்கடா நண்பா.என்னை மறந்துட்டியாடா!?" என்க.

'அது ஒன்று தான் இப்பொழுது ஏகனின் தீரா தலைவலி!' என்றானது.

அவரோ அவர் நண்பனை போல இவனிடம் பேச.தேவைகள் அற்ற வீண்பேச்சு பேச விரும்பாதவன்.வார்த்தைகளையும் எண்ணி எண்ணி பேசுபவன்.என்ன கோபம் வந்தால் தான் எண்ணிக்கை மறந்து அதிகமாக கொட்டிவிடுவான்.மற்றபடி அதிகம் பேசுவது அவன் இயல்பு கிடையாது.


பின் இருக்கையில் அகரனை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்துகொண்டாள் அன்னக்கொடி.

இந்நாளி்ன் இந்த பயணம் வாழ்நாளின் இறுதிவரை தொடரும் பயணமாக மாறப்போவது அறியாது பயணித்தனர் அனைவரும்.


காரின் அமைப்பே கட்டியம் கூறியது அவன் இல்லத்தின் அமைப்பு எவ்வாறு இருக்கும் என்பதை.ஆதலால் பெரிய வீட்டின் முன்பு சென்று கார் வழுக்கி நின்றதை அவள் பெரிதாக கொள்ளவில்லை.

தாத்த்தாவோ," டேய் தியாகு! இது உன்னோட டிசைன் தானடா ரொம்ப நல்லா இருக்குடா.சொன்ன மாதிரியே கட்டிடடா தியாகு ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப சந்தோசம்டா எனக்கு!" உற்சாகம் பொங்க ஏகனிடம் பேசி இருந்தார் வேல் தாத்தா.


நெடு நாட்களுக்கு பிறகு தாத்தாவின் உண்மையான மகிழ்வை கண்ட பேத்தி நெகிழ.இந்த 'இன்புறு முகைக்கு இணை இவ்வையகம் ஆகாது' என்று எண்ணி நடக்க.

வீட்டிற்கு புதிதாக வந்த இருவரையும் வரவேற்கும் விதமாக தலை அசைப்பை கொடுத்து ஏகன் முன்னால் செல்ல இருவரும் அவனை பின் தொடர்ந்தனர்.

அகரன் இன்னும் ரிதம் இடையில் தான் இருந்தான் சமத்து பிள்ளையாய்.

அரசன் கண்ட அரியாசனம் போல் நடுநாயகம் பொருந்திய கூடத்து இருக்கையில் அமர்ந்திருந்தார் எழுபது வயதை கடந்த முதியவர்.

அவரைகண்டதும் வேல் தாத்தா 'தியாகூ' என்ற கூவலுடன் ஓடினார்.

ஏகன் உடன் உள்ளே நுழைந்த இக்னேஷ் எண்ணிக்கொண்டான்,"இவருக்கு தியாகு பைத்தியம் போல. பார்க்கற எல்லாரையும் தியாகு...தியாகுன்னு கூப்பிட்டு ஓடுறாரு!" என்று.

ஏகனுக்கும் ஏன் ரிதத்திற்கும் கூட இந்த 'தியாகு கதை' புரியாத புதிராக இருந்தது.

புதிரின் விடையோ எதிரே திடீரென வந்து நின்ற தன் நண்பன் வேலைக் கண்டு அகமகிழ்வோடு வார்த்தைகள் அற்ற மௌன சிலையாய் நின்றது.

"டேய் வேலு எப்படிடா இருக்க!?"

"நான் ரொம்ப நல்லா இருக்கேன்டா தியாகு!"

'நெடுங்காலமாக தொலைந்த நட்பை புதுப்பிக்கும் நேரமோ!?'

மீண்டும் கிடைத்த நட்பை கண்ட உற்சாக கூத்து பெரியவர்கள் இருவரின் பேச்சில் தெரிந்தது.

வேடிக்கை பார்த்த மூவருக்கும் அதிர்வோடு கூடிய ஆச்சர்யம் தான்.

'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே' என பாடாத குறையாக இருவரும் பேசிக் கொண்டனர்.


ரிதமின் தாத்தா, சிதம்பரம் தாத்தாவின் பாலிய கால நண்பன் மட்டுமல்ல ;அவரின் முதல் நண்பரும் கடைசி நண்பரும் கூட அவரே தான்.

'பூட்டு போட்ட வீட்டை போல' இத்தனை நாள் அமைதியாக இருந்த தாத்தாக்கள் இருவரும் 'கட்டவிழ்ந்த கன்றாய்' உற்சாகமாக பேசி இருந்தனர்.


சுற்றம் மறந்த நிலையில் பேசி இருந்த இருவரில் தெளிந்தது என்னவோ ஏகனின் தாத்தா தியாகன் சிதம்பரம் தான்.

"இவனை எங்கடா பார்த்த ஏகா!?" பேரன் முகம் பார்த்து பூரிப்பாக கேட்க

ஏகன் கூறிய பதிலில் அவனைத் தவிர அனைவரும் அதிர்ந்து நோக்கினர்.

தாத்தா கேட்ட கேள்வியில் ஏகன் மனம் பல கணக்குகளை மனகணக்காய் போட.அதில் வந்த யோசனை அவனுக்கு சரியானதாக மட்டுமல்ல; மகனின் புன்னகையை அவனிடம் தக்கவைக்க ஏதுவாகவும் இருக்க.அதையே தாத்தாவிடம் ஒப்பித்தான்.

"தாத்தா இவளை நான் கல்யாணம் பண்ணிக்க போறேன். இவ என் வுட் பீ. இவளையும் இவ தாத்தாவையும் உங்ககிட்ட இன்றோ குடுக்க கூப்பிட்டு வந்தேன்.ஆனா இவரு உங்க நண்பர்னு எனக்கும் தெரியாது தாத்தா!" என பெரும் குண்டை அசாதாரணமாக மங்கை மண்டையில் மலர் போல் சூட்டினான்.


அவன் இதில், "பெண் மனம் என்ன பாடுபடும்!? அவளின் விருப்பம் என்னவாக இருக்கும்!?" எந்த முன் யோசனையும் இல்லாது தன் பக்க கணக்கீடுகள் மட்டும் சரியாய் இருக்க அவ்வாறு சொல்லிவிட்டான்.


அவன் கூறிய பதிலில் பற்றிக் கொண்டு வந்தது அவளுக்கு.தாக்கம் பொறுக்காது உக்கிரமாக மாறி அவனை விலாச தயாராகிய நேரம்

"ஏன்டா பாப்புமா தாத்தாகிட்ட சொல்லவே இல்லை பாரு.இதையும் கூடவா சொல்ல மறந்து போவ....!" என்று அவளை கிண்டலாக பேசிவிட்டு

"டேய் தியாகு உன் மகனுக்கு தான் என் பொண்ணை குடுக்க முடியலை.ஆனா என் பேத்தி உன் பேரனுக்கு தான்டா இது இந்த வேல் உனக்கு குடுக்குற வாக்கு!"

கண்முன்னே என்ன நடக்கிறது என்று நடப்பது அறியாது தானாய் ஒருபக்கம் வாக்கு கொடுத்திருந்தார் தாத்தா.

"பரவசம்!பரவசம்!"

தன்னை பற்றி, தன் குடும்பம் பற்றி, தன் பரம்பரை பற்றி அறிந்தும் நண்பன் இத்தகைய பதிலை கூறினான் என்றால் அவன் நட்பின் ஆழம் புரிந்தது.என்றும் மடங்கும் வேலின் நட்பில் அன்று போல் இன்றும் 'காகிதமாக' மடங்கினார் சிதம்பரம்.

"என்ன நடக்கிறது!?"


போன்ற சிந்தனை பெரியவர்கள் இருவருக்கும் இல்லாது இனிமையாக கடந்த கால கதைகளை, தங்கள் வாழ்வில் கண்ட கவலைகள், கடந்த சங்கடங்கள் என்று அனைத்தையும் பகிர்ந்திருந்தனர் இருவரும்.


தோட்டத்து கல் இருக்கையில் இருவரும் அமர்ந்து அளவளாவ.குழந்தை உறக்கத்திற்கு தள்ளாட அவனை தோளில் போட்டு தட்டிக் கொடுத்து இருந்தாள் ரிதம்.


எப்பொழுது நேரம் கிடைக்கும் அதனை எதிர்நோக்கி அவனை குத்தி கிழிக்கும் வார்த்தைகளை தனக்குள் கோர்த்துக் கொண்டிருந்தாள் ரிதம்.

எத்தகைய பொய்யை கூறியுள்ளான். இவன் 'கபட நாடகம்' அறியாத தாத்தா வேறு வாக்கை கொடுத்து உள்ளார்.


'விதி ஏன் இப்படி தன்னை சுற்றி சுழற்றி அடிக்கிறது!?'

'ஒரு அடிக்கு பின் சிறு இடைவெளி கூட விடாது தொடர்ந்து
அடித்தால் நான் என்ன தான் செய்வது!?'


அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஆனால் அவளுக்கு 'ஏகன் என்பவனை மட்டும் சும்மா விடவே கூடாது!' என்ற உறுதி மட்டும் மனதில் ஆழமாய் பதிந்தது.
 
"தாத்தா இவளை நான் கல்யாணம் பண்ணிக்க போறேன். இவ என் வுட் பீ. இவளையும் இவ தாத்தாவையும் உங்ககிட்ட இன்றோ குடுக்க கூப்பிட்டு வந்தேன்.

அடப்பாவி..... இவ்ளோ கெட்டிக்காரனா இவன்? எவ்ளோ சிம்பிளா தன்னோட காரியத்தை சாதிச்சுக்கறான்..... இனிதான் சண்டை சூடு பிடிக்கப் போகுது..... :rolleyes::rolleyes::rolleyes:
 
அடப்பாவி..... இவ்ளோ கெட்டிக்காரனா இவன்? எவ்ளோ சிம்பிளா தன்னோட காரியத்தை சாதிச்சுக்கறான்..... இனிதான் சண்டை சூடு பிடிக்கப் போகுது..... :rolleyes::rolleyes::rolleyes:
😂😂😂😂.. நன்றிகள் பிரவாகமாக💐
 
அடப்பாவி என்றாளை நடிக்கிறே பணத்துக்காகன்னு சொல்லிட்டு இப்ப இவனுக்கு வேலையாகனும்னு பொய் பொய்யா பேசறானே.
வண்டில ஏறும் போதே உன்ற மண்டை பத்திரமா இருக்காதுன்னு ரிதம் நெனைச்சா.
இப்ப அதேமாதிரி நடக்கப் போகுது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😆😆😆🤣🤣😆😆😆😆😆😆😆.images-100.jpeg

அப்ப தாத்தாவோட ஆபரேஷன் நடந்திடும் சரியும் ஆகிடுவாரு.
 
அடப்பாவி என்றாளை நடிக்கிறே பணத்துக்காகன்னு சொல்லிட்டு இப்ப இவனுக்கு வேலையாகனும்னு பொய் பொய்யா பேசறானே.
வண்டில ஏறும் போதே உன்ற மண்டை பத்திரமா இருக்காதுன்னு ரிதம் நெனைச்சா.
இப்ப அதேமாதிரி நடக்கப் போகுது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😆😆😆🤣🤣😆😆😆😆😆😆😆.View attachment 8578

அப்ப தாத்தாவோட ஆபரேஷன் நடந்திடும் சரியும் ஆகிடுவாரு.
அவன்தான் விடாதீங்க.... டர்ட்டி பாய் பொய்பொய்யா சொல்லி தாத்தாவை ஏமாத்திட்டான் திருட்டு குட்டி அடிங்க அவனை...💪🏻... நன்றிகள் ஊற்றாக💐
 
வாய் கிழிய அவளை அவ்வளவு பேசிட்டு இப்ப வெக்கமே இல்லாமல் என் வுட் பி யாம்ல 🤦🤦🤦அடேய் உன் மண்டை பத்திரம் டா மங்கூஸ் மண்டையா🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
 
வாய் கிழிய அவளை அவ்வளவு பேசிட்டு இப்ப வெக்கமே இல்லாமல் என் வுட் பி யாம்ல 🤦🤦🤦அடேய் உன் மண்டை பத்திரம் டா மங்கூஸ் மண்டையா🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
அமைச்சரே கோபம் வேண்டாம்😂😂😂... நன்றிகள் ஊற்றாக💐
 
Top