Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோமதி அருண் அவர்கள் எழுதிய “நினைவே சுவாசக்காற்றாய்”

Advertisement

ஓம் ஸ்ரீ சாயிராம்

இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை உங்களிடம் பகிர்கிறேன் ஆத்தரே.

தாயில்லா பிள்ளையை வளர்க்கும் ஒரு ஆண்மகன்;
பாலியல் கொடுமைகளுக்குப் பலியான ஒரு பெண்;
இவர்கள் அவல நிலையைக் கண்டு பரிதவிக்கும் பெற்றவர்கள்;

எனத் திரும்பும் பக்கமெல்லாம் மனத்தை அழுத்தும் சூழ்நிலைகள் நிரம்பிய கதைக்கருவை இதமான குட் ஃபீல் கதையாக மாற்றும் தனித்தன்மை உங்களுக்கு மட்டும்தான் உண்டு ஆத்தரே.

யாருக்குத்தான் பிரச்சனை இல்லை என்ற ரீதியில் கவலைகளை மறந்து மகிழ்ச்சியில் நனையும் அப்பாவும் மகளும் (டாடி & டாலி). அவர்களுக்கு இணையாக ஏட்டிக்குப் போட்டி பேசி வம்புசெய்யும் ஆச்சிமாவும் கொள்ளை அழகு.

காதல் மனைவியின் நினைவுகளிலிருந்து மீளாத நிலையில், ஆறு வயது மகளின் நலனைக் கருதி திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கும் நாயகன் அவ்யுத், நாயகி அம்ரிதாவைப் பார்ப்பதற்கு முன்னும், பார்த்தக் கணமும், அவள்மேல் காதல் வந்த பின்னும், அவளுக்கு அவன்மேல் காதல் வந்த பின்னும் என ஒவ்வொரு இடத்திலும் தன்னிலை மாறாமல், மகளே பிரதானம் என எண்ணி செயல்பட்ட விதம் அசத்தல்.

குறிப்பாக இந்தக் காட்சிகள் வாரே வாவ்!

1.அம்ரிதாவை மகளுக்கு அறிமுகம் செய்த இடத்தில் அப்பா & மகள் கேள்வி-பதில்கள் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது ஆத்தரே (Episode 9.3 Best of the best episodes. மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

அதுவும் ஆதினியின் பெயர் காரணமும், அவள் தன் வாழ்வில் வந்த தேவதை என அவ்யுதக்கண்ணன் வர்ணித்தப் போதே கண்கள் குளமாகியது என்றாலும், கதையின் பிற்பகுதியில், அவள் அவனிடம் வந்த தருணத்தைப் படிக்கப் படிக்கத் தாரை தாரையாகக் கண்ணீர் வடித்தேன்.

2. ஆதினிக்காகத் திருமணம் என்ற நிலையில், திருமண வைபவங்களை ஓரிரு வரிகளில் சொல்லி முடிச்சுடுவீங்கன்னு நெனச்சேன். ஆனால் நீங்களோ, மூன்று பாகங்கள் கொண்ட அத்தியாயத்தில் அல்லவா விமர்சியாகக் கொண்டாடினீங்க.

‘என்னவள் பரிசுத்தமானவள்!’ என்று அவ்யுதக்கண்ணன் மணமேடையில் உரக்கச் சொல்லி எங்கள் மனத்தைக் கொள்ளைக் கொண்டுவிட்டான்.

வைபவத்தில் வர்ணித்த ஒவ்வொரு சடங்கின் விளக்கமும் சூப்பர். அங்கேயும் ஆதினியின் சந்தோஷத்தை முன்வைத்து நடந்துகொண்ட தம்பதிகளின் நோக்கம் உயர்ந்தது. லிட்டில் கிருஷ்ணா விளையாட்டு சூப்பரோ சூப்பர். எபிலாகில் அது இன்னும் அழகாக இருந்தது.

3. உணர்வுகளில் சிக்கித்தவிக்கும் மனைவிக்கு ஆறுதல் சொல்லும் அந்த நேரத்திலும், மகளைப் பற்றி யோசித்து, அம்மாவிடம் ‘பர்ஸ் எடுத்துக்கொண்டு போனாயா?’ என்று கேட்ட அவ்யுதக்கண்ணனின் அன்பை என்ன நான் சொல்ல!

ஆதினிகுட்டி! “My daddy strongest!”ன்னு உன் கீச்சுக்குரலில் கம்பீரமா சொல்லுடா.

அவ்யுதக்கண்ணனின் கடந்த காலத்தை ‘ராதாவின் நினைவில் எழுதிய நினைவு பெட்டகமாய்’ நிகழ்கால காட்சிகளில் பொருத்தி கதை சொன்னவிதம் அருமையிலும் அருமை.

அந்த நினைவு பெட்டகத்தில் குறிப்பிட்டிருந்த சைக்கிலுக்கு சங்கிலி மாட்டுவது, ட்யூஷன், கட் ஷூவில் காதல் கடிதம், மறைந்திருந்து சைட் அடிப்பது, நண்பன் வீட்டு மொட்டைமாடி என 90ஸ் காலகட்டத்தின் பசுமையான பள்ளிப்பருவத்தைக் கண்முன் நிறுத்திய உங்கள் கற்பனை அழகு.

அதில் இரண்டு விஷயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

1. அவ்யுதக்கண்ணன் தன்னை யாரென்று அடையாளம் காட்டிக்கொள்ளாமல், கடித போக்குவரத்து வைத்திருந்தாலும், தன்னைப்பற்றி அப்பாவிடம் கூறச்சொல்லி ராதாவுக்கு அறிவுறுத்திய அவன் குணம் உயர்ந்தது; அவன் சொல்லும் முன்னரே அதைப்பற்றி தந்தையிடம் சொன்ன ராதாவின் குணம் ஒருபடி மேல்.

அறியாத வயதில் தோன்றும் உணர்வுகளால் சிக்கித்தவித்தும், தவறான முடிவுகள் எடுத்தும் திசைமாறிப்போகும் இளைய சமுதாயத்தினருக்கு நல்வழிகாட்டும் விதமாக அக்காட்சி இருந்தது. பெற்றவர்களை தவிர நம்மேல் அக்கறை காட்டப் பிறிதொருவர் இல்லை என்று ரொம்ப அழகா சொல்லிட்டீங்க.

2. ராதாவை தொலைத்துவிட்டேன் என்ற கண்ணனின் பதிவு. தாளில் எழுத்துக்களைக் கரைத்த அவன் கண்ணீர் துளிகளும், கோபத்தால் குத்திய பேனா முனையும் வாரே வாவ். அவன் மனநிலையை இதைவிட தத்ரூபமாகச் சொல்லமுடியாது என்று தோன்றியது.

என்னவொன்று! சிறு வயதில் பக்குவத்தின் சிகரமாக இருந்த அவ்யுதக்கண்ணன், வளர்ந்த பிறகு சேட்டை செய்யும் மாயக்கண்ணனாக மாறிவிட்டான்.

அம்ரிதாவின் தந்தை பாசம், மனக்குழப்பங்கள், கண்ணனைப் பிடித்திருந்தும் நெருங்க முடியாத தயக்கம், ஆதினியின் பாசத்தை வெல்லும் தவிப்பு என அனைத்தும் வெகு இயல்பாக இருந்தது.

தன்னவனை முறைப்பதும், ஆதினியிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதும், திடீர் முத்தங்களில் திணறுவதும் என அவளது ஒவ்வொரு அசைவும் மிகவும் ரசனையாக இருந்தது.

தொட்டதுக்கு எல்லாம் சீரியசாகும் இவள், நகைச்சுவைக்குப் பெயர்போன குடும்பத்தில் வாக்கப்படுகிறாளே என்று அவள்மேல் பரிதாபம் கொண்டால்…. கத்திக்குத்து வாங்கி வந்த கணவரிடம் சொன்னாளே ஒரு வார்த்தை (Hint! Hint!....ப….. போ…. எ….. போ… ப… எ…) அம்மாடியோ! அம்ரிதாவா இவள் என்று ஆடிப்போயிட்டேன்.

இந்தக் கதையில் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் தேவகி அம்மாதான். மகனின் ஒவ்வொரு அசைவையும் எவ்வளவு நுணுக்கமாகப் புரிந்துவைத்திருக்கிறார் என்று பிரமிப்பாக இருந்தது.

அவ்யுத் சிறந்த தந்தை என்றால், அது தேவகி அம்மாவின் வளர்ப்பின் பிரதிபலிப்பே என்று கூறலாம்.

மகன் மற்றும் பேத்திக்கு இணையாக அவர் கலகலப்பாக கவுன்டர் கொடுத்த ஒவ்வொரு இடமும் அசத்தல்.

அதிலும் கிளைமாக்ஸில் அவர் ஒரு கதை சொல்ல, அதற்கு குருநாதன், ‘மாப்பிள்ளைக்கு கதை சொல்ற திறமை எங்கிருந்து வந்ததுன்னு இப்போதான் புரியுது!’ எனக் கலாய்த்த இடத்தில்,

‘அடேங்கப்பா!' குடும்பமே கலகலப்புக்குப் பெயர்போனவர்கள் என்று தோன்றும் அளவிற்கு அத்தனை ரசனையாக இருந்தது. Hats off to your creativity authorey!!!

கதாபாத்திரங்களுக்குச் செல்லப்பெயர்கள் சூட்டும் உங்கள் தனித்துவத்திற்கு இந்தக் கதையிலும் குறையே இல்லை. டாலி, மி, மிமி, மான்ஸ்டர், மீசைக்காரர் எல்லாமே செம்ம!

மீசைக்காரரின் மீசைப் பற்றிய உணர்ச்சிப்பூர்வமான காட்சியமைப்பு வாவ்.

கதைக்கு அழகூட்டிய தெய்வநாயகம், மீனலோச்சினி மற்றும் விழிப்புணர்வூட்டிய மலர்விழி கதாபாத்திரமும் கதையோடு பாந்தமாகப் பொருந்தி இருந்தது.

சில நாட்களுக்குப் பிறகு கதைமாந்தர்களின் பெயர்களை மறந்தாலும் மறப்பேன். ஆனால் வீராநகர் ஐஸ்க்ரீம் பார்லர் கனவிலும் மறக்க மாட்டேன்.
ஸ்டார்பக்ஸ், காஃபி டே எல்லாத்தையும் அடித்துச் சாப்பிட்டுவிட்டது உங்க வீராநகர் ஐஸ்க்ரீம் பார்லர்.

ஆங்கில வார்த்தைகள் அதிகமாக உள்ள தமிழ் கதைகளை நான் பெரிதும் விரும்பிப் படிப்பதில்லை. எந்த மொழியில் கதை எழுதுகிறோமோ, கூடியமட்டும் அந்த மொழியிலுள்ள வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டுமென்று நினைப்பேன்.

ஆனால் அது என்னமோ தெரியல, இதுவரை உங்களுடைய இரண்டு நாவல்கள் படித்திருக்கிறேன். இரண்டிலுமே அது ஒரு குறையாகவேத் தெரியவில்லை.

ஆதினியின் கள்ளம் கபடமில்லாத உள்ளத்தை, அவளின் ஆங்கிலம் கலந்த மழலை மொழிகள்தான் உணர்த்தியது என்று சொன்னால் அது மிகையாகாது. அம்ரிதாவுக்கு The Wolf & The Shepherd கதை சொல்லியதாகட்டும், எதையும் நேரடியாகக் கேட்க வேண்டுமென்று தாத்தாவிற்குச் சொற்பொழிவு ஆற்றியதாக இருக்கட்டும், அனைத்தும் கொள்ளை அழகு.

ஆத்தரின் தமிழ் புலமையும் வேற லெவல். Milkshake, Cartoon, Autorickshaw எனப் பெரும்பாலான நேரங்களில் Tunglishல் எழுதும் வார்த்தைகளைத் தூய தமிழில் பால்கலவை, கேலிச்சித்திரம், தானி என எழுதி அசத்திட்டீங்க.

தனிமனித ஒழுக்கத்தையும், எதையும் நிமிர்வாக எதிர்கொள்ளும் தைரியத்தையும் பிள்ளைகளுக்குச் சிறு வயதிலிருந்தே கற்றுத்தந்து அவர்கள் நம்பிக்கையின் பாத்திரமாக இருப்பது, பெற்றோரின் தலையாய கடமை என்று பிள்ளைவளர்ப்பின் அவசியத்தை, தெவிட்டாத காதலும், குடும்ப உணர்வுகளும் கலந்து அழகிய கதை தந்த ஆத்தருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
நீங்கள் இப்போட்டியில் வெற்றிபெற என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
@வித்யா வெங்கடேஷ்
ஸோ ஸோ ஹப்பீபீபீபீ வித்யா சிஸ் :love: :love: மறுபடியும் review போட்டதிற்கு மிக்க நன்றி 💕💕

ஆரம்பமே அருமை! கதை கருவை ரொம்ப அழகா சொல்லிட்டீங்க 💞💞💞

உங்களுக்கு மிகவும் பிடித்த நிறைய காட்சிகளை மேற்கோள் காட்டியதிற்கு மிக்க மிக்க நன்றி சிஸ் 💕💕💕💕💕 அவை நீங்கள் எந்தளவிற்கு கதையை ரசித்து படித்தீர்கள் என்பதை கூறுகிறது.. மிக்க மகிழ்ச்சி 💞💞💞 💞💞💞

கண்டிப்பா.. ஆதினி குட்டியை “My Daddy Strongest” னு சொல்ல சொல்லிடுவோம்👍😍

//90ஸ் காலகட்டத்தின் பசுமையான பள்ளிப்பருவத்தைக் கண்முன் நிறுத்திய உங்கள் கற்பனை அழகு// - மிக்க மிக்க நன்றி சிஸ் 💝💝

//அறியாத வயதில் தோன்றும் உணர்வுகளால் சிக்கித்தவித்தும், தவறான முடிவுகள் எடுத்தும் திசைமாறிப்போகும் இளைய சமுதாயத்தினருக்கு நல்வழிகாட்டும் விதமாக அக்காட்சி இருந்தது. // - ரொம்ப சரியா சொல்லிட்டீங்க சிஸ்.. நான் கூற நினைத்த கருத்து சரியான முறையில் வெளிப்பட்டு இருப்பதில் மிக்க மகிழ்ச்சி 😍😍😍

//அவன் மனநிலையை இதைவிட தத்ரூபமாகச் சொல்லமுடியாது என்று தோன்றியது.// - 🙏💞💞

வேற வழி! மாயக் கண்ணனா மாறினா தானே அம்ரி மனதில் இடம் பிடிக்க முடியும்!!! 😆😆

அம்ரிதாவின் மனநிலையை ரொம்ப அழகா எடுத்து கூறி இருக்கிறீங்க 👌💖💖
அம்ரி உங்களுக்கு ஷாக் கொடுதுட்டாளா!!😁

வீரா நகர் ஐஸ்-கிரீம் பார்லர்!!! 😜😍

//ஆத்தரின் தமிழ் புலமையும் வேற லெவல். // - மிக்க மிக்க நன்றி சிஸ் 🙏💞💞

இந்த அருமையான விமர்சனத்திற்கு மிக்க மிக்க நன்றி சிஸ் 🙏💞💞💕💕 கோம்ஸ் ஹாப்பியோ ஹாப்பீபீபீபீபீபீபீபீ 💃💃💃😍😍😍😍

கடைசி para – இந்த கதையில் ஆழமான காதலை சொல்லி இருந்தாலும் சமுதாய கருத்தாக நான் சொல்ல நினைத்தது இதைத் தான் சிஸ்.. குழந்தை வளர்ப்பு, பெண்களுக்கான விழிப்புணர்வு மற்றும் எந்த சூழ்நிலையையும் பெண்கள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்பது தான்.
“எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தை தான்.. நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் வளர்ப்பில் தான்!” – இதை நான் முழுமையாக நம்புகிறேன் சிஸ்.. குழந்தைகளை சரியாக வளர்த்தாலே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நின்று விடும்.

-கோம்ஸ்.
 
Top