Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை!-11

Advertisement

praveenraj

Well-known member
Member
எத்தனை எத்தனை இழப்புகளைச் சந்தித்து உள்ளாள் அவள். அவளுக்கு அழுதழுது கிட்டத்தட்ட கண்ணீரே வற்றிவிட்டது. அவளால் முடியவில்லை. கதறி அழுது பாரத்தைக் குறைக்கவும் அவளுக்குக் கொடுத்துவைக்கவில்லை. எண்ணமெல்லாம் பழைய நினைவுகளில் சுழன்றது. இந்தத் தள்ளாத வயதிலும் தங்களை நம்பி வந்தவளை எவ்வித முகசுளிப்பும் கொள்ளாமல் ஏன் பாரமாகவும் எண்ணாமல் கண்ணுக்குள் வைத்து தாங்கினார்களே? அவளுக்கும் இங்கே வந்த புதிதில் இந்த இடம் பிடிக்கவில்லை தான். சுற்றிலும் பச்சைப்பசே என்று காடுகளும் விலங்குகளும் சூழ்ந்து அன்றாட தேவை என்று நாம் நினைக்கும் எதையும் அவர்கள் இன்னும் கண்களால் கூடப் பார்த்ததில்லை. இப்படிப்பட்ட வாழ்க்கை அவளுக்கு நிறைய கற்றுத்தந்தது. புதிய இடம் புதிய மனிதர்கள் புதிய சூழல் புதிய வாழ்க்கை முறை என்று அனைத்திலும் அப்பப்பா எத்தனை நிம்மதி? நாம் அன்றாடம் அலைந்து, திரிந்து எதற்கும் பொறுமை இல்லாமல் அவசரமாக சாதித்து விடும் விஷயங்கள் எல்லாம் இங்கே அபூர்வம். இவர்களும் டெலிபோன் செல் போன்என்பதே இப்போது தான் ஓரளவுக்கு பரிச்சயம். இதில் 2g, 3g, 4g, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா... இதெல்லாம் என்னவென்று கூடத் தெரியாது. கிட்டத்தட்ட இவளும் இதையெல்லாம் இல்லாமல் வாழப் பழகிக்கொண்டாள். இப்போது உண்மையில் அநாதை ஆகி விட்டோமே என்று அவளுக்கு கவலை. இந்த உலகத்தைத் தனியாகச் சந்திக்க வேண்டுமே என்றெல்லாம் அவளுக்கு பயமில்லை. ஆனால் உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் இன்னமும் முக்கியத்துவம் கொடுத்து அதற்குப் பிறகு தான் மற்றதெல்லாம் என்று வாழ்ந்து சொல்லிக்கொடுத்த தன் தாத்தா பாட்டி இருவரின் வாழ்க்கை அவளுக்கு உணர்த்திய பாடம் எந்த யூனிவர்சிட்டி சென்று படித்தாலும் அவளுக்குக் கிடைக்காத பொக்கிஷம். அப்படியே எண்ணச் சூழலில் சிக்கியவள் உறங்கியும் போனாள். யாரோ கதவைத் தட்டுவதைப் போல் உணர்ந்தவள் விழித்து, கதவைத் திறக்க அந்தப் பழங்குடியினத் தலைவர் உட்பட சில ஊர் பெரியவர்கள் வந்திருந்தார்கள்.
எல்லோருக்கும் வணக்கம் வைத்தவள் எதையும் சொல்லாது இருக்க அவரே பேச்சை ஆரமித்தார்,
"கண்ணு சித்தன் போனதும் அவன் பொஞ்சாதி போனதும் விதி... அதை யாராலும் மாற்றமுடியாது. யாருமே இல்லாம தான் இங்க வந்த, இப்போ..." என்னும் போதே அவளின் கண்கள் கலங்க,"இப்போயும் உனக்கு யாருமில்லைனு எல்லாம் பயப்படாத. உனக்கு இந்த ஊரு இருக்கு. எல்லாம் நம்ம மக்கா தான். எல்லோரும் ஏதோ ஒரு வகையில உனக்கு மாமன் மச்சான் பெரியப்பன் சித்தப்பன் தான் ஆகணும். நான் கூட உனக்கு பெரிய தாத்தன் தான் ஆகணும். நீ இங்க தாராளமா இருக்கலாம். உனக்கு வேண்டியதை எல்லாம் நாங்க செஞ்சிக் கொடுப்போம். ஆனா நீயோ பட்டணத்துல வளர்ந்தப் பொண்ணு. உனக்கு இங்க எல்லாம் சரிப்பட்டு வருமான்னு தெரியில..."
அவள் இன்னமும் எதையும் சொல்லாமல் இருந்தாள்.
"நான் சுத்திவளச்சியெல்லாம் பேச விரும்பல. நம்ம முதலாளி அம்மா வந்தாங்க இல்ல அவங்க உன்னை அவங்க கூடவே கூட்டிட்டுப் போகனுன்னு சொன்னாங்களாம். இப்போ பாரு இப்போ கூடத் தகவல் கொடுத்தனுப்பி இருக்காங்க. நீ தாராளமா அங்க அவங்க கூடவே தங்கலாமாம். உனக்கு அவங்க கடமை பட்டிருக்காங்கனு கூடச் சொல்றாங்க. நான் என் அனுபவத்துல சொல்றேன் கண்ணு, நம்ம முதலாளி தங்கமானவரு. அந்த அம்மா மகராசி. உன்னை நிச்சயமா நல்ல படியா பார்த்துக்குவாங்க..." என்று சொல்லி சிறிது இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்,
"நான் என் அனுபவத்துல சொல்றேன் கண்ணு. இந்த எஸ்டேட் தோட்டம் எல்லாம் வெள்ளைக்காரன் காலத்துல இருந்து கிடக்கு. அப்போலாம் நம்ம மக்களை மாடாட்டம் வேலை வாங்கி ரத்தத்தை உறிஞ்சிடுவானுங்க. இங்க இருக்கறவங்களை இலங்கை ஆப்ரிக்கானு கடல் கடந்ததெல்லாம் அடிமையா கூட்டிட்டுப் போனானுங்க. அப்புறோம் சுதந்திரம் வந்ததுக்கு அப்புறோம் கூட நாங்க எல்லாம் ஒன்னும் பெருசா வாழ்த்திடல. எல்லோரும் பண முதலைங்க. நம்ம உழைப்பை உறிஞ்சி அதுல வாழுற வாழ்ந்த ஒட்டுண்ணிங்க... ஆனா இந்த 25 வருசமா தான் நாங்க ரொம்ப நிம்மதியா இருக்கோம். இந்த எஸ்டேட்டை இதுக்கு முன்னாடி வெச்சிருந்தவங்க கூட அவ்வளவு மரியாதையாயெல்லாம் நடத்த மாட்டானுங்க. ஆனா நம்ம முதலாளி இருக்காரே உண்மையிலே தங்கமானவரு. நம்ம புள்ளைங்களுக்கு எல்லாம் நல்ல படிப்பு மருத்துவமனை நல்ல வாழ்வாதாரம் கிடைக்க வெச்சவரு. நிச்சயமா நீ அவங்க கூடப் போனா உனக்கு ஒரு விடிவுகாலம் பொறக்கும். நீயும் படிச்சப் பொண்ணு தான். உனக்கு நான் எதையும் சொல்ல விரும்பல. நல்லா யோசிச்சு முடிவெடு... என்னடா எல்லாம் நம்ம சொந்தகாரங்கனு சொல்லிட்டு இப்படி நம்மள துரத்தறாங்களேன்னு எல்லாம் நெனைக்காத புள்ள, நீ நல்லா இருக்கனும். மேலும் இந்த வாழ்க்கை உனக்கு தோதுவராது. நான் அம்முட்டு தான் சொல்லுவேன். இதுக்கு மேல உன் இஷ்டம். யோசிச்சு முடிவெடு. எல்லோரும் ஒரு நாள் போய்த் தான் தீரணும். நான் வரேன் தாயி..." என்றவர் சென்றுவிட இவளோ அவர் சொன்னதையே யோசித்துக்கொண்டிருந்தாள்.
..................................
அங்கே இந்திரன் முன்பு அமர்ந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்த சகுந்தலா அவனை வாஞ்சையாகத் தடவிக்கொடுக்க அவரின் ஸ்பரிசம் பட்டு விழித்தவன் எழுந்து அமர்ந்தான். அவனையே தீர்க்கமாகப் பார்த்தவரிடம்,
"நான் உனக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்கறேன் இல்ல?" என்றான் வேதனை நிரம்பிய குரலில்.
அவனை நெருங்கியவர் அவன் கண்ணைத் துடைத்து,"அப்படியெல்லாம் ஒன்னுமில்ல கண்ணா..." என்றதும்,
"அம்மா அந்தப் பெரியவர்...?" என்று அவன் தொடங்க,
நடந்ததை எப்படிச் சொல்வார்? ஏற்கனவே தன்னால் போன உயிரை எண்ணி துடித்துகொண்டிருப்பவனிடம் மேலும் இதைப் பற்றிச் சொல்ல யோசிக்க, இமையவர்மன் உள்ளே வந்து அவனின் மறுபக்கம் அமர்ந்தார். அவரின் தோளில் சாய்ந்தவன்,"அப்பா நாம நம்ம வீட்டுக்குப் போலாம்..." என்றான்.
"கண்டிப்பா போலாம் கண்ணா. ரெண்டு நாள் போகட்டும். உனக்கு ரொம்ப உடம்பு சோர்வா இருக்காம். கொஞ்சம் ஓய்வு தேவைனு டாக்டர் சொன்னாரு..."
அப்போது சரியாக உள்ளே வந்த சுமதியம்மா," ஐயா அந்தப் புள்ள வந்திருக்கு..." என்றார்.
"எந்த புள்ள சுமதி?"
"சித்தன் பேத்தி..."
ஒருநிமிடம் சகுந்தலா மனதில் சந்தோசம் தோன்ற இருந்தும் அதைமறைத்து அவர் வெளியே செல்ல அவளோ அமைதியாக அந்த பிரமாண்ட வீட்டை பார்த்துக்கொண்டிருந்தாள்.
சகுந்தலாவைக் கண்டதும் அவளோ விரலை ஆட்டி தன்னுடைய சம்மதத்தைச் சொல்லி தலையை அசைக்க, அது அவருக்கும் புரிந்தது. என்னவோ இன்று தன் மகன் உயிர் வாழ இந்தப் பெண் நிறைய விலை கொடுத்து விட்டாளே என்று வருந்தியவர் அவளை அழைத்து அணைத்துக்கொண்டார்.
"இங்க பாரு மா. நீ தைரியமா என் கூட வரலாம். உன்னை நான் என் பொண்ணு மாதிரி பாத்துப்பேன். அந்தக் கவலை உனக்கு வேணாம். நீ என்ன தோணுதோ செய்யலாம். படிக்கலாம் இல்ல ஏதாவது வேலைக்குனா கூட நம்ம பிசினெஸ்ல கூட நீ சேரலாம். புரிஞ்சுதா?" என்று ஆதுரமாய்க் கேட்டவரைப் பார்த்து ஏனோ அவரை அணைத்து கண்ணீர் வடித்தாள். அவளின் உணர்வுகளை எல்லாம் புரிந்தவராய் அவளுக்கு ஆதரவு சொன்னார் சகுந்தலா.
இமையவர்மனும் கீழே வந்தார். அவருக்கு இவளை அழைத்துச் செல்வதெல்லாம் பிரச்சனை இல்லை. இருந்தும் யாரு என்னவென்று தெரியாமல் எப்படி தங்கள் வீட்டில் அனுமதிப்பது என்று யோசித்தவர் தன் காரியதர்சி தாமுவை அழைத்தவர் எதற்கும் இந்தப் பெண்ணைப்பற்றி விசாரிக்கச் சொல்லிவிட்டுச் சென்றுவிட அவளை நாளை மறுநாள் தயாராக இருக்குமாறு சொல்லி அனுப்பிவைத்த சகுந்தலா தாமுவை அழைத்து அவளுக்கும் வேண்டிய ஏற்பாடுகளையும் கவனிக்கச் சொன்னார்.
மறுநாளே அரசல் புரசலாக சில விஷயங்கள் மும்பை தொழிலதிபர்களைச் சென்றடைந்தது. அது இதுவரை பிஸினெஸில் தன்னுடைய ஷேர்/துறை சார்ந்து மட்டும் இயங்கிய வர்மா இண்டஸ்ட்ரீஸ் இப்போது தன் மூல நிறுவனமாகிய வர்மா குரூப்ஸ் (ராஜ வர்மன் தொடங்கியது பின்னர் அது சந்திர வர்மனின் வசமாகிப் போனது) இயங்கும் அனைத்து தொழில்களிலும் மீண்டும் இறங்கப் போகிறதென்ற செய்தி பரவியது.
ராஜவர்மன் அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களையும் நடத்திக்கொண்டிருந்தார். அவருக்கு பிறகு அவரின் பிசினெஸ் ரெண்டாக பிரித்து வியாபாரம் சார்ந்த நிறுவனங்களை எல்லாம் சந்திர வர்மனும், தொழிற்சாலைகள் மற்றும் இதர நிறுவனங்களை எல்லாம் இமையவர்மனும் செய்துவந்தனர். என்னதான் குறிப்பிட்ட வருடங்களுக்கு இருவரும் மற்றவர் சார்ந்த தொழிகளில் இறங்கக்கூடாது என்று ஒப்பந்தம் செய்திருந்தாலும் அந்த ஒப்பந்த காலம் முடிந்தும் கூட இருவரும் அதை மீறாமலே கடைபிடித்துக்கொண்டிருந்தனர். மூல நிறுவனத்தின் பெயரான 'வர்மா' என்னும் அந்த ட்ரேட் மார்க்கை இருவரும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. இப்போதுவரை இமையவர்மன் பிரடக்ஸன் (production - உற்பத்தி) சார்த்த தொழில்களையே செய்துவருகிறார். சர்வீஸ் சார்ந்த மார்க்கெட்டிங் சந்தை தொழில்களை எல்லாம் சந்திரவர்மனின் வசம் இருக்கிறது. இப்போது அதில் தான் இமையவர்மன் காலூன்ற போகிறார் என்று பேச்சுக்கள் அடிபடுகிறது.மேலும் இந்திரன் என்னும் இந்திரஜித் வர்மன் மீண்டும் பிசினஸ் பொறுப்புகளை ஏற்கப்போகிறான் என்றதுமே பிசினெஸ் உலகம் இன்னமும் பரபரப்பானது. அவனின் குணம் அப்படி.யாருக்காகவும் எதற்காகவும் நோ காம்ப்ரமைஸ். ஈவு, இரக்கம் பச்சாதாபம் எதுவும் அவனிடம் கிடைக்காது. ராஜவர்மன் காலத்தில் தொழில் செய்தவர்கள் எல்லாம் ராஜவர்மன் அடுத்து என்ன செய்யபோகிறாரோ என்ற பயத்திலே தான் தொழில் செய்தனர். பின்னர் அதையெல்லாம் சந்திரவர்மன் எடுத்தாலும் அந்த அளவுக்கு தீர்க்கமாக அவர் இறங்கவில்லை. மேலும் அதிகபச்சமாக போட்டிநிறுவனங்களைக் கைப்பற்றி விடுவார் சந்திரவர்மன். அவ்வளவே! ஆனால் இந்திரன் அப்படியே அவனின் தாத்தா பாணியைக் கையாள்வான். போட்டி நிறுவனங்களுக்கு அதிகப்படியான நெருக்கடிகளைக் கொடுத்து அவர்களைத் திக்குமுக்காட செய்து அவர்களாகவே இந்த பிசினெஸை விட்டு விலகிச் செல்லும் அளவுக்கு அவர்களைத் தள்ளிவிடுவான். அதற்காக அவன் எதிரிகளே இருக்கக் கூடாது என்று நினைப்பவன் அல்ல. ஆரோக்கியமான போட்டியைத் தான் எப்போதும் விரும்புவான். தன்னை மையப்படுத்தி நடக்கும் போட்டிகளுக்கு தக்க பதிலடியையும் கொடுத்துவிடுவான்.
இந்த விஷயத்தை இமையவர்மன் தன் வீட்டிலுள்ளவர்களிடம் கூடச் சொல்லவில்லை. கமலேஷுக்கு யாரோ ஒருவர் மூலம் தெரியவர அவன் தன் தந்தையை அழைத்து விஷயத்தைக் கேட்டான்.
"நீ கேள்விப்பட்டது எல்லாம் உண்மைதான் கமலா..."என்று ஒரே வார்த்தையைச் சொல்லி அடுத்த கேள்விக்கு அவர் தாவிவிட அவனுக்கு தன் தந்தையின் இந்தப் புதிய பரிணாமம் வித்தியாசமாய்த் தெரிந்தது. எல்லா விஷயத்திலும் ஜாலி ஆனா டைப் தான் இமையவர்மன். அவர் ஒரு முடிவை அவ்வளவு எளிதில் எடுக்கமாட்டார். ஆனால் எடுத்துவிட்டால் எவர் பேச்சையும் அவர் கேட்கமாட்டார். அதனால் தான் கமலேஷ் தன் தந்தையிடம் அதைப்பற்றி மேற்கொண்டு எதையும் பேசாமல் உடனே தன் அன்னையை அழைத்தான்.
அப்போது தான் சகுந்தலாவுக்கு இதைப்பற்றியே தெரியவந்தது. அவரோ அதிர்ந்து யோசித்தார். எத்தனையோ நெருக்கடி காலங்களில் கூட தன் சகோதரனுக்கு எதிராக எதையுமே செய்யாதவர் இன்று இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது அவருக்கும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியே. பொதுவாக தொழில் சார்ந்த விஷயங்களில் எப்போதும் சகுந்தலா மூக்கை நுழைக்கமாட்டார். அதனால் இப்போது என்ன செய்வதென்று புரியாமல் யோசித்தார். நிச்சயம் இந்த மாதிரி ஒரு முடிவை எடுத்தால் ஏற்கனவே விரிசல் விட்டிருக்கும் இரண்டு குடும்பத்துக்கும் இடையே இது மேலும் சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்று யோசித்தவர் இதை இந்திரனிடம் தான் சொல்ல வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவனின் தற்போதைய நிலைமையில் இதைச் சொல்லலாமா என்று யோசித்தார்.
தங்களோடு மாதுளையும் வரும் விஷயம் வேறு இந்திரனுக்கு இன்னமும் தெரியாது. இந்திரன் யோசனையில் இருக்க கதிரவன் அவனை அழைத்தான்.
*******************
எல்லா வெள்ளிக்கிழமையும் தவறாமல் தன் அத்தையுடன் கோவிலுக்குச் செல்வது லேகாவின் வழக்கம். அன்றும் அப்படித்தான் கோவிலுக்குப் போக ரெடி ஆகி கிளம்பி இந்திரனின் வீட்டிற்கு வந்தாள்.
இங்கே வீட்டிலோ சகுந்தலாவும் இமையவர்மனும் அவருடைய தொழில் முறை நண்பனின் வீட்டுத் திருமணத்திற்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது பார்த்து ஸ்ரீ வீட்டிற்கு வர,"வாடா கண்ணு..." என்று அழைத்தவர் அவளின் கையில் இருந்த கோவில் கூடையைப் பார்த்து அப்போது தான் இன்று கோவிலுக்குப் போக வேண்டும் என்று ஞாபகம் வந்தவராய் தலையில் அடித்து பின் ஸ்ரீயிடம்,
"ஐயோ ஸ்ரீகுட்டி இன்னைக்கு ஒரு முக்கியமான மேரேஜ் போகணும் டா. மாமா இப்போதான் சொன்னாரு. நான் வரமுடியாதே..." என்று சொல்ல, சிரித்தவள்,"பரவாயில்ல அத்தை. நீங்க போங்க நான் ஒரு ஆட்டோ பிடித்து கோவிலுக்குப் போயிட்டு வரேன்..." என்று சொல்ல, ஏனோ சகுந்தலாவிற்கு அது சரியாகப் படவில்லை. பின்னே மாலை நேரம் ஆகிவிட்டதே? அதும் அவளைத் தனியே ஆட்டோவில் அனுப்ப மனம் இல்லை. அப்போது தான் படிக்கட்டிலிருந்து கீழே இறங்கி வந்தான் இந்திரன்.
அவனைப் பார்த்ததும்,"இந்திரா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்..." என்று அவர் சொல்ல அவன் என்ன என்று கேட்கவும், லேகாவை கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதைச் சொன்னார். இந்திரனுக்கு மனமெல்லாம் சந்தோசம் பரவ ஆனந்த தாண்டவம் ஆடும் வேளையில்,
"இல்ல அத்தை பரவாயில்ல. நான் ஆட்டோலையே போயிடுறேன்..." என்று சொல்லி அவர் நகர ஏனோ அவளின் இந்த வார்த்தையும் ஒதுக்கமும் இந்திரனைக் கூர்மையாய்த் தாக்கியது. அவன் முகம் வருத்தத்தில் களை இழந்தது.
சகுந்தலா தான் விடாமல் வற்புறுத்தி அவளை அவனோடு அனுப்பினார். இந்திரன் ஸ்ரீயை விரும்புகிறான் என்ற விஷயத்தை அறியாதவரா சகுந்தலா? ஆனால் லேகாவுக்கு இதில் ஏதோ தயக்கம் இருக்கிறது என்று அவருக்கும் புரிந்தது. இதைக்கண்ட இமையவர்மன் சகுந்தலாவை ஒரு மாதிரி பார்த்தார்.
பதிலுக்கு சகுந்தலாவும் அவரைப் பார்க்க,"சகு நீ பண்றது எல்லாம் சரியில்லை. நல்ல பொண்ணு அவ. அவளைப் போய் இந்திரன் கிட்ட...?" என்று முடிக்கும் முன்னே ஏனோ தன் கணவர் கூற்றில் உள்ள உண்மை சுட்டாலும் தன் மகனைப் பற்றி குறை சொன்னததும் அவரின் தாயுள்ளம் கோவம் கொண்டது. அதை உணர்ந்தவர் அமைதியாக அவ்விடத்திலிருந்து அகன்றார்.
அங்கே வெளியே காருக்கு சென்றவன் அடக்கப்பட்ட கோபத்துடன் அமைதியாக அமர்ந்திருந்தான். வந்தவள் பின்னால் அமர முற்பட,"நான் ஒன்னும் இங்க ட்ரைவர் இல்ல. ஒழுங்கா வந்து முன்னால் உட்காரு..." என்று சொன்னான். இல்லை கிட்டத்தட்ட கர்ஜித்தான். அவன் வார்த்தையில் அவ்வளவு கடுமை பிரதிபலிக்க ஸ்ரீயும் பயந்தவாறே வந்து முன்னால் அமர்ந்தாள்.
பாடல் பாட்டிற்கு ஒலிக்க அவளோ இவன் புறமே திரும்பாமல் இருந்தாள். அவனோ சைட் கண்ணாடியின் ஊடே அவளையே பார்த்துக்கொண்டு வந்தான். இவனும் அவளைப் பார்க்கவைக்க ஹாரன் அடித்தும் பாட்டின் சப்தத்தை உயர்த்தியும் அவளிடமிருந்து எவ்வித பதிலும் இல்லை. அவளின் இந்த ஒதுக்கம் அவனை என்னவோ செய்தது.
மௌனமாகேவ பயணிக்க அதற்குள் கோவில் வந்தது. அந்தக் கோவில் மிகவும் பழமையான கோவில் ஆகும். அதும் ஊருக்கு வெளியே சற்று காட்டுப்பகுதியில் அமைத்துள்ள கோவில். சிறுவயதில் ஒருமுறை இந்திரனுக்கு உடல்நிலை கொஞ்சம் மோசமாக அதை குணப்படுத்த அவன் பெற்றோர் மிகவும் சிரமம் கொண்டனர். அப்போது தான் யாரோ இந்த அம்மன் கோவிலைக் குறிப்பிட்டு இங்கு சென்று மனமார வேண்டினால் நினைத்தது நடக்கும் என்று சொன்னார்கள். அவரும் வந்து வேண்ட இந்திரன் குணமானான். அதிலிருந்து வாரம் தவறாமல் சகுந்தலா இங்கு வந்துவிடுவார். சிந்துவிற்கு இதிலெல்லாம் அவ்வளவு நம்பிக்கையும் ஈடுபடும் கிடையாது. ஆனால் லேகா அப்படி இல்லை. சிறுவயதிலிருந்தே அதிக பக்தி கொண்டவள். சோ அவள் தான் எப்போதும் சகுந்தலாவுடன் வந்து செல்வாள்.
கோவில் வந்து இவன் வண்டியை நிறுத்த, அவளோ இப்போதும் ஏதும் பேசாமலே இறங்கிச் சென்றாள். இந்திரனும் பின்னாலே இறங்கி நடந்தான். நேராக பிரகாரம் சென்று சாமி கும்பிட அவளைக் கண்ட அந்த பூசாரியோ,"என்னம்மா உங்க அத்தை வரலையா?" என்று விசாரித்து விட்டு,"வழக்கம் போல இந்திரன் பெயருக்கு தானே அர்ச்சனை?" என்று வினவ, அவள் பதிலளிக்கும் முன்னே,"இல்லை" என்றவன்,"ஸ்ரீலேகா இந்திரஜித்..." என்று சொல்ல அவருக்கு அது சாதாரணமாகவே தான் தெரிந்தது. ஆனால் அவன் சொன்ன உட்பொருள் அவளுக்கு நன்றாகவே விளங்கியது. பின்னே அவள் பெயரோடு அவன் பெயரையும் சேர்த்து அல்லவா அவன் சொன்னான்? அதும் திருமணமான தம்பதிகளைப் போல் இணைத்து சொன்னானே? அவள் கண்களை மூடி தீவிரமாகவே வேண்டி கண்ணைத் திறந்ததும் கோவில் பூசாரி கொடுத்த குங்குமத்தை வாங்கி அவளுக்கு வைத்துவிட்டான் இந்திரன். இது அவளுக்கு சந்தோசமாகவும் இருந்தது அதே நேரம் வருத்தமாகவும் இருந்தது.
அவள் வந்து கோவில் பிரகாரத்தில் அமர குட்டிபோட்ட பூனையைப் போல் அவளுக்கு பின்னாலே வந்தவன் அமர்ந்து,"ஹே லேக்கு இப்படி புடவைக் கட்டிக்கிட்டு என் முன்னால் வராதனு உனக்கு எத்தனை தடவை சொல்றது? என்னால கண்ட்ரோல் பண்ண முடியில டி. இப்போவே உன்ன கல்யாணம் பண்ணி என்கூடக் கூட்டிட்டுப் போயிடணும்னு தோணுது தெரியுமா?" என்று பேசிக்கொண்டு இருந்தான்.
அவளுக்கும் ஒரு மாதிரி ஆக மௌனமாகவே வீற்றிருந்தாள்.
"எப்போடி எனக்கு ஓகே சொல்லுவ?" என்று அவன் வினவ அவளோ ஏதும் பேசாமல் எழுந்து காருக்கு போனாள். ஏனோ போனவள் பின்னாலே திரும்பி அவனும் வருகிறானா என்று பார்த்தபடியே நடக்க அவளின் காலில் முள்குத்தி விடவும் அவளோ அலறினாள். முன்பு சொன்னதைப்போல அது ஊருக்கு ஒதுக்குபுறமாக காட்டுப்பகுதியில் இருக்கும் கோவில் என்பதால் அங்கு புதர்கள் நிறைய இருக்கும்.
அதில் துடித்தவன் அவளை நெருங்கி,"என்ன ஆச்சு லேக்கு? பார்த்து வரக் கூடாதா? எங்க காலைக் காட்டு..." என்று உண்மையான அக்கறையிலும் தவிப்பிலும் வினவ அவளோ கோவமாய்,"என்ன பண்ண? உங்கக்கூட வந்தாலே எனக்கு எப்பயும் வலியும் வேதனையும் தான் கிடைக்குது. இருந்தாலும் நீங்க கொடுத்த காயம் அளவுக்கெல்லாம் இது இல்ல. இது சின்ன முள்ளு தான்..." என்று வெடுக்கென சொல்லிவிட்டு அவள் காரில் ஏற அவளின் வார்த்தை என்னும் கத்தி தாக்கி இந்திரனுக்குத் தான் கோவமும் வலியும் வந்துவிட்டது. மேலும் அவள் காலை தத்தி தத்தி நடக்க கோவமாய் வண்டியில் எறியவன் எதையும் பேசாமல் வண்டியை ஓட்டினான்.
உள்ளே சென்றதும் அவளுக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது. தற்போது அவளும் எதையும் பேசவில்லை இவனும் எதுவும் பேசவில்லை. பாடலும் ஒலிக்காமல் மௌனத்திலே பயணம் தொடர்ந்தது. அவன் எவ்வளவு கோவமாய் இருக்கிறான் என்று அவன் வண்டியை ஓட்டுவதிலே அவளுக்கும் தெரிந்தது.
வண்டி அவர்களின் வீட்டை நெருங்க,"வெளியவே நிறுத்துங்க. நான் போய்கிறேன்..." என்று அவள் சொல்ல, இவனோ திரும்பி முறைத்துவிட்டு வண்டியை உள்ளே சென்று நிறுத்தினான். அவள் இறங்கி நடக்க முடியாமல் இருக்க அவள் கைப்பிடித்து பத்திரமாக வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். வீட்டில் ஆட்கள் யாருமில்லாததால் (வேலைக்காரர்கள் தான் இருந்தனர்) அவளுக்கு உள்ளே போக தயக்கமாய் இருந்தது. இவனோ அவளை அழைத்துக்கொண்டு நேராக லிப்ட் முன் சென்று அவனின் அறைக்குக் கூட்டிச்சென்றான். அவள் மறுக்கவும் திரும்பி அவளை ஒரு முறை முறைத்ததும் அவள் எதிர்ப்பேதும் காட்டாமல் அடங்கிப்போனாள். என்ன தான் இந்த வீட்டிலே வளர்ந்திருந்தாலும் அவள் இதுவரை இந்திரனின் அறைக்குச் சென்றதில்லை. (அன்று இந்திரனின் பிறந்தநாளுக்கு சீகைக்காய் எடுத்துச் சென்றது இதன் பிறகு நடந்த சம்பவம்). லிப்ட்டில் அவளை அழைத்துக்கொண்டு சென்றவன் அங்கிருந்து அவளைத் தூக்கிச்சென்றான்.
அவளுக்கோ அவன் ஸ்பரிசம் பட்டதுமே எம்பரசிங்கா இருந்தது. அதும் அவன் கையில் அவளை ஏந்தியிருப்பதை நினைக்கையில் அவளுக்குள் சிலிர்த்து அடங்கியது. அவளை பாத் ரூம் கூட்டிச்சென்று காலை நன்றாக கழுவுமாறு சொல்லிவிட்டு அங்கிருந்த சோபாவில் அவளை அமரவைத்து அவளின் காலைத் தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டான்.
அவளுக்கோ அது மிகவும் சங்கடமாய் இருந்தது. அதிலும் அவள் புடவை வேறு அணிந்திருந்ததால் காலை நீட்ட மிகவும் தயங்கினாள். இருந்தும் எதையும் பேசாமல் அவளின் காலைப் பிடித்து முள்ளை எடுக்க முயன்றான்.
லேகா என்ன செய்வதென்று புரியாமல் இருக்க அவனோ அவளின் முள்ளை எடுத்துவிட்டு,"முள்ளை எடுத்தாச்சு..." என்று கோவத்தில் பட்டும் படாமல் சொல்ல என்னவோ சட்டென ஏற்பட்ட உந்துதலில்,"இந்த முள்ளை வேணுனா நீங்க எடுத்திருக்கலாம். ஆனால் என் நெஞ்சில தைத்த முள்ளை யாராலும் எடுக்க முடியாது. ஏன் அதை தைத்த உங்களால் கூட முடியாது..." என்றாள். சாதரணமாக இந்திரனிடம் பேசுவதற்கே யோசித்து தயங்கி பயம் கொள்பவள் இன்றோ அசாத்திய தைரியத்தில் எல்லாமும் துணித்து சொன்னாள். ஏனோ அந்த வார்த்தை இந்திரனை இன்னும் கூர்மையாய்த் தாக்கியது.
அவள் எதிர்பாரா நேரத்தில் அவளின் காலை கையில் ஏந்தி அவள் முன் மண்டியிட்டு அவளின் பாதத்தைப் பிடித்து,"இந்த முள்ளை எடுக்க எப்படி எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தையோ இதே மாதிரி அந்த முள்ளை எடுக்கவும் எனக்கு ஒரு வாய்ப்பு கொடு லேகா. கண்டிப்பா என் காதலால், உனக்கு வலிக்காம மெதுவா நானே எடுப்பேன். ப்ளீஸ்..." என்றவன் அவளின் பாதத்தைப் பிடித்து முத்தமிட்டான்.
ஏனோ அவனின் இந்தச் செய்கையைத் துளியும் எதிர்பாராதவள் அதிர்ச்சியில் உறைந்தாள். அவளுக்குத் தெரிந்து இந்திரன் இதுவரை யாரிடமும் எதற்காகவும் மன்னிப்பு கேட்டிடாதவன். அது தான் அவனின் பிறவி குணம். சிறுவயதில் இருந்தே அதிக செல்லம், கூடவே வசதி வாய்ப்பு என்று சொல்லி சொல்லி வளர்த்தப்பட்டதால் அவன் அப்படித் தான் வளர்ந்தான். இந்திரன் இப்படி மன்னிப்பு கேட்பான் என்றோ இல்லை தன் பாதத்தைப் பிடிப்பான் என்றோ அவள் துளியும் எதிர்பார்க்கவில்லை. ஏனோ இதை நினைக்கையில் தற்போது அவளுக்கும் வலித்தது. அதன் வெளிப்பாடாய் அவள் கண்களும் கலங்கியது. எதையும் பேசாமல் கண்களில் கண்ணீருடன் அவள் எழுந்து வெளியே சென்றாள். இங்கே இந்திரனும் அவள் எவ்வளவு காயப்பட்டிருப்பாள் என்று வருந்தினான்.
மேலும் அவள் காயங்களுக்கு எல்லாம் காரணமான தன் மீதே அவனுக்கு அதிக கோவம் வந்தது. (வானிலை மாறும்...)
 
அம்பானி ப்ரோஸ் ஞாபகம் வர்றாங்க....
சந்திர, இமய வர்மன் பிஸினெஸ் டீலில்...
 
who is Maadula? what did Indiran do to Leka? Kadiravan - a friend or enemy or opportunist?- waiting to know. Nice
உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் கண்டிப்பா பதிலிருக்கு. ஆனா எதுவும் உடனடியாகத் தெரியவராது... நன்றி?�
 
அம்பானி ப்ரோஸ் ஞாபகம் வர்றாங்க....
சந்திர, இமய வர்மன் பிஸினெஸ் டீலில்...
wow எப்படி இப்படி இருக்கீங்க? எனக்கு இந்த போர்சன் எழுத உண்மையிலே அம்பானி கதை தான் இன்ஸ்பைரா இருந்தது. ஆனால் இது அம்பானி கதையல்ல... இதுலயும் சில ட்விஸ்ட் இருக்கு. அதெல்லாம் பிறகு சொல்றேன்... நன்றி?
 
Top