Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை!- 16

Advertisement

praveenraj

Well-known member
Member
"அப்போ நாளை மறுநாள் நடக்கவிருக்கும் பங்கசனுக்கு நீ ரெடியா?"

"அஸ் ஆள்வேய்ஸ்..." என்றவன் பாலை அடிக்க,

"இந்திரா, அது..." என்று இழுத்தவன் நிறுத்த,

"நீ ஏன் நம்ம கம்பெனியை விட்டுட்டு வெளியில வேலை செய்யுறியாமே?"

"இல்ல டா நாம ஆரமிச்ச அந்த ஸ்டார்ட் அப்பை தான் பார்க்கறேன்..."

"ஏன்டா அதுல அவ்வளவு வேலையெல்லாம் இல்லையே டா?"

"இல்ல இந்திரா..."

"என்ன டா யாருக்கும் தெரியாம ஏதாவது ரகசிய பிசினெஸ் பண்றியா?" என்று வினவ ஏனோ வழக்கத்தைக் காட்டிலும் அதிகம் படபடப்புடன் காணப்பட்டான் கதிரவன்.

"அப்படி எதாவது பண்ண..." என்று நிறுத்தியவன் கடைசி பந்தையும் அடித்துவிட்டு, "கேம் ஓவர்..." என்று உதடு சுளிக்க,

"அதெல்லாம் இல்லைடா. நம்ம பிசினஸ் விட்டா எனக்கென்ன டா தெரியும். நான் என்ன பண்ணப்போறேன்?"

"அப்போ ஒழுங்கா என்கூடவே வந்து நம்ம கம்பெனில ஜாயின் பண்ற ஓகே?"

"உன் பேச்சுக்கு அப்பீல் இருக்கா என்ன? ஓகே..."

இந்திரன் சென்று அந்த பிரமாண்ட அறையின் கௌச்சில் அமர கதிரவனும் வந்து அமர்ந்தான். இன்டெர்காமில் ஜூஸ் கொண்டுவரச் சொல்லிவிட்டு அமைதியாக இருந்தான்.

"இந்திரா இனி தான் நீ ரொம்ப கேர்புல்லா இருக்கனும். ஏன்னா நீ திரும்ப வந்தது நிறையபேருக்குப் பிடிக்கல. சோ எங்க போனாலும் என்ன பண்ணாலும் எனக்கு இன்பார்ம் பண்ணனும் நீ. எனக்குத் தெரியாம நீ எதுவும் செய்யக்கூடாது. புரிஞ்சுதா?" என்று சீரியஸாய் கதிரவன் பேச,

"சாவு கிட்ட வரை போயிட்டு வந்துட்டேன் டா. வாழ்க்கையில எல்லாமும் இழந்த ஒரு ஃபீல். சத்தியமா இப்போ இந்த பிசினெஸ், இந்த ஊரு எல்லாமே அப்பா அம்மாக்காக மட்டும் தான். இனி அவங்களுக்காக மட்டும் தான் வாழ்வேன்... நடைபிணமா..." என்று முடிக்க,

"டேய்..."

"சரிடா நீ போ. போய் அந்த ஸ்டார்ட்டப்பை நிர்வகிக்க ஒரு நல்ல ஆளைப் பாரு. நான் பொறுப்பெடுக்கும் அன்னைக்கே உனக்கும் ஒரு போஸ்டிங் என்ன மிஸ்டர் gm ஓகே வா? நான் அப்பா கிட்டப் பேசிடுறேன்..."

"டேய் எனக்கெதுக்கு டா போஸ்ட் எல்லாம்?"

"அப்போ போர்டு மெம்பெர் ஆகிடுறியா?"

"அதெல்லாம் ஷேர் ஹோல்டர் தான் இருக்கனும். என்ன சாருக்கு பிசினெஸ் எல்லாம் மறந்திடுச்சா?"

"அப்போ ஷேர் ஹோல்டர் ஆக்கிடலாம்..."

"மச்சான் எனக்கு இந்த சின்ன சின்ன போஸ்டிங் எல்லாம் வேணாம். பெருசா எதாவது?" என்று அவன் விளையாட்டாய்ச் சிரிக்க,

"அப்போ பேசாம நீ ceo ஆகிடுறியா?"

"உனக்கெந்த ஆட்சேபனையும் இல்லைனா... நான் ரெடி..." என்று சொல்லி சிரிக்க,

"அப்போ எனக்கடுத்து நீ தான் ceo..."

"எப்போ 60 வயசுலையா?"

"கொஞ்ச நாள் பொறு ஆகிடலாம்..." என்று அவனும் சிரித்துக்கொண்டே சொல்ல,

"டேய் இந்திரா? என்ன சொல்ற?" என்று அதிர்ந்தான் கதிரவன்.

"பிசினெஸ் பண்ணனும் ஜெயிக்கனும் பதவினு எல்லா மோகமும் எப்பயோ போயிடுச்சி. சரி அதை விடு. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும். நாளை மறுநாள் பாப்போம்..." என்றான் இந்திரன்.

"ஹ்ம்ம் சரிடா" என்று சொல்லி கதிரவன் விடைபெற்றவன் அப்போது வெளியே லானில் இருந்த மாதுளையை நோட்டமிட்டபடியே போனான்.

"என்ன கதிரா உன் தோஸ்த் வந்ததும் எங்களையெல்லாம் மறந்துட்ட போல?" என்ற சகுந்தலாவிற்கு,

"ஐயோ அம்மா, அப்படியெல்லாம் இல்லை. ஏதோ ஞாபகம்..."

"சரி கதிரா இங்க வா..." என்றவர் அவனோடு கொஞ்சம் நடந்தவர் மாதுளையை விட்டு தூரம் வந்து,"எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனுமே..."

"என்ன அம்மா இது ஹெல்ப்னு எல்லாம் சொல்றிங்க. ஜஸ்ட் ஆர்டர் மீ. சொல்லுங்க என்ன பண்ணனும்?"

"அந்தப் பொண்ணுக்கு நம்ம பிசினெஸ்ல ஒரு வேலை வேணும். கிடைக்குமா?"

"அது நான் எப்படிம்மா? எல்லாம் அங்கிள் இல்ல தாமோ அங்கிள் கிட்டச் சொன்னா பரவாயில்லை..."

"ஏன்டா gm ஆகிட்ட. உன்னால முடியாதா?"

"அம்மா?"

"எல்லா போஸ்டும் போட்டாச்சு. உங்க அங்கிள் நாளைக்குச் சொல்லுவார். கொஞ்சம் எனக்கும் எதாவது பார்த்து பண்ணு கதிரா..." என்று அவர் சிரிக்க,

"இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்ல? வர்மா குருப்ஸ்ல செகண்ட் லார்ஜெஸ்ட் ஷேர்ஹோல்டரான மிச்செஸ் சகுந்தலா இமையவர்மன் என்கிட்ட ஹெல்ப் கேட்கறீங்க? சரி நான் அங்கிள் கிட்டப் பேசிட்டு..."

"அவரு பாருடா எல்லாத்துலயும் சந்தேகப்படுறார். எங்கேயும் பிசினெஸ் மூளை தான். நீதான் கொஞ்சம்..."

"டன் ராஜமாதா!"

"அப்படியே இன்னொரு உதவி..."

"என்னம்மா?"

அவன் கையைப் பிடித்துக்கொண்டார்,"எனக்கு பழைய இந்திரன் வேணும் டா. அவன் முகத்துல நான் சந்தோசம் பார்க்கணும். ஸ்ரீ இன்னும் என் மனசுல தான் இருக்கா எப்பயும் இருப்பா. அதுக்குன்னு அவனுக்கு கல்யாணமே பண்ணாம இருக்க முடியுமா? எப்படியாவது ஒரு வருஷத்துக்கு உள்ள அவன் மனசை நீ தான் கொஞ்சம் கொஞ்சமா மாத்தணும் கதிரா... உன்கிட்டச் சொல்ல என்ன? எனக்கு கெட்ட கெட்ட கனவா வருது. இவன் தனியா யாருமில்லாம கூட ஏதோ ஒரு குழந்தை அழும் சப்தம் வேற. பயமா இருக்கு டா கதிரா..."

"இந்தக் காலத்துல போய் கனவு அது இதுனு?"

"உன்கிட்ட நான் கொஞ்சம் தனியா பேசணும்..."

"சொல்லுங்கம்மா?"

"இப்போ வேணா நானா சொல்லியனுப்புறேன். அப்போ வா..."

"என்னம்மா விஷயம்?"

"நான் சொல்லும் போது என் கூட வா..."

"சரிம்மா நான் வரேன்." என்று நகர்ந்தவன்,

'பிளான் சக்சஸ்' என்று போட்டு தம்ப்ஸ் அப் குறியை அசோக் சௌனிக்கு அனுப்பினான்.

இப்போது அவனுக்கு தருணிடமிருந்து அழைப்பு வந்தது.

இவன் வண்டி வெளியே போக சரியாக தாமுவின் வண்டி உள்ளே வந்தது.

கோவமாய் காரில் எறியவன் உள்ளே தாமுவின் கார் வருவதைப் பார்க்க அப்போது அவனுக்கு தருணிடமிருந்து அழைப்பு வந்தது.

"சொல்லு..."

"சார் சாரி சார்..."

"இதுக்குத் தான் கூப்பிட்டயா?"

"இல்ல சார் ஒரு முக்கியமான விஷயம்..."

"என்ன?"

"நாங்க உங்ககிட்டப் பேசிட்டு நீங்க போன் வெச்சதும் குகன் பசிக்குதுனு சொன்னானா..."

"நிறுத்து. யாருடா அவன் குகன்?"

"சார் என் அசிட்டேன்ட் சார்..."

"நீயே ஒரு அசிஸ்டன்ட் உனக்கொரு அசிஸ்டண்டா?"

"சார் கொஞ்சம் மரியாதை கொடுத்தா நல்லா இருக்கும் இல்ல...?"

"இல்லைனா என்ன? பாரு ஒழுங்கா சீக்கிரம் சொல்லிட்டு வெச்சிடு. நானே செம கோவத்துல இருக்கேன்..."

"ஓகே சார். நாங்க சாப்பிட போன இடத்துல ஒருத்தனைப் பார்த்தோம். அவன் யாருன்னா நீங்க சொன்ன ஆளைப் பின்தொடர்ந்து போன அப்போ அவரு அவன் கூடப் பேசிட்டு இருந்தான். அதை நாங்க நோட் பண்ணோம்..."

"எவ்வளவு நேரம் மீட் பண்ணாங்க அவங்க ரெண்டு பேரும்?"

"அதையேன் சார் கேட்கறீங்க? முட்டுச்சந்துல வண்டி நிற்க இவரு இறங்கி பிஸ் அடிக்க அங்க போக அப்போ அவனும் பிஸ் அடிக்க வந்தான். பக்கம் பக்கம் நின்னு பிஸ் அடித்தானுங்க சார். ஆனா எனக்கென்னவோ அவங்க ரகசியமா மீட் பண்ணாங்கன்னு தோணுது சார்..."

"ஐயோ பாஸ் அப்போ நீங்க முழுசா பார்க்கலையா? அவன் அவருகிட்ட ஒரு கவரைக் கொடுத்தான் பாஸ்..." என்றான் குகன்.

"என்னடா சொல்ற? இதை ஏன் நீ என் கிட்டச் சொல்லல?"

"நீங்க பார்த்திருப்பீங்கனு நெனச்சேன் பாஸ்" என்றான் குகன்.

"டேய் என்ன டா கொடுத்தான் அவன்?" - கதிரவன்

"அது ஏதோ கவர் நிறைய பேப்பர்ஸ் ஒரு பைல், அப்றோம் ஒரு கீ செயின் மாதிரி ஒன்னு..." என்றான் குகன்.

"கீ செயினா? அது கீ செயினா எல்லாம் இருக்காது டா?" - தருண்.

"டேய் முட்டாளுங்களா அது கீ செயின் இல்லைடா பென் ட்ரைவ் டா" என்றான் கதிரவன்.

"இருக்கலாம் சார். ஆனா ரெண்டுபேரும் ஒரு வார்த்தையும் பேசிக்கல. பிஸ் அடிச்சாங்க பரிமாறிக்கிட்டாங்க வந்து கார்ல ஏறிட்டாங்க..."

"டேய் இப்போ அவன் எங்க இருக்கான்?"

"யாரு சார்?"

"அதெல்லாம் கொடுத்தானே அவன்?"

"அவன் சாப்பிட்டு இருக்கான் எங்களுக்கு எதிர் டேபிள்ல..."

கொஞ்ச நேரம் தீர்க்கமாய் யோசித்தவன்,"டேய் நீங்க ரெண்டுபேரும் முதல்ல அங்கேயிருந்து எஸ் ஆகுங்கடா..." என்றான் கதிரவன்.

"சார் நாங்க அவனை பாலோ பண்ணிடுறோம் ஒன்னு பிரச்சனையில்லை..." என்ற தருணிடம்,

"டேய் அறிவுக்கெட்ட முண்டங்களா! நீங்க அவனை பாலோ பண்ணல அவன் தான் உங்களை பாலோ பன்றான். முதல அங்கேயிருந்து கிளப்புங்க..."

"என்ன சார் சொல்றீங்க?"

"அவன் ஆளு கொஞ்சம் குள்ளமா கருப்பா இருக்கானா?"

"ஆமா சார் உங்களுக்கு எப்படி?"

"அவன் பிரபல டிடெக்டிவ் ஏஜென்சி ஹெட் தயாளன் டா வெண்ணைங்களா..."

"சார் என்ன சொல்றீங்க? இவரு தான் தயாளனா? நிறைய கேள்விப்பட்டிருக்கேன்..." என்ற தருணிற்கு,

"முதல்ல கிளம்புங்க. என் நம்பேரை டெலீட் பண்ணுங்க நானே உங்களைக் கூப்பிடுறேன். அதுவரை என்னைக் கூப்பிடவேணாம்..."

"சார்..."

"உங்களுக்கான பணம் வந்துசேரும். வைங்க. சீக்கிரம் கிளம்புங்க..."

வடையை வாயில் வைத்திருந்த குகன் அவனைப் பார்க்க அவன் ஒரு புன்னகை செய்வதுபோல் தெரிய உடனே தருணும் குகனும் எஸ் ஆனார்கள்.

"பாஸ் பாஸ் அப்போ அவரு உங்களை விடப் பெரிய ஆளா?"- குகன்

"ஆமாண்டா..."

"அப்போ நீங்க டம்மி பீஸா?" என்ற குகனை முறைத்தான் தருண்.

"அப்போ நான் அவரு கிட்டயே போய் அசிஸ்டன்ட்டா சேர்ந்துக்கிட்டா?"

"அதுக்கு நீ உயிரோட இருக்கனும் முதல..."

"சும்மா சொன்னேன் பாஸ். அப்படி எதயும் செஞ்சிடாதீங்க. நான் பாவம். எனக்கு வேற அடுத்த மாசம் பொண்ணு பார்க்கப் போறாங்க..."

"ஏன்டா பொண்ணு தானே பார்க்கப் போறாங்க? என்னமோ கல்யாணம் மாதிரி சீன போடுற?"

"அது கிட்டத்தட்ட கல்யாணம் மாதிரி தான் பாஸ். ஏன்னா அது என் மொறைப்பொண்ணு."

"உனக்கெல்லாம் கல்யாணமாடா"

"ஏன் பாஸ் நானெல்லாம் கல்யாணம் செய்யக் கூடாதா?"

"வந்து கார்ல ஏறுடா வெண்ணை..." என்று சொல்ல இருவரும் காரில் ஏறினார்கள்.

மெல்ல சாப்பிட்டு முடித்த தயாளன் ஒருவனுக்கு அழைத்து,"டேய் இந்த புது டிடெக்டிவ் ஏஜென்சி ஒன்னு இருக்கே என்னது அது?" என்று வினவ,

"எது சார்?" என்று மறுமுனையில் விஜய் கேக்க,

"அதுதான் டா அந்த அருணோ தருணோ எவனோ நடத்துறானே?"

"தருண் சார்..."

"ஹ்ம்ம் அவனுங்க பெரிய பருப்புனு நெனச்சிட்டு என்னையே பாலோ பண்ணிட்டு இருக்கானுங்க. கொஞ்சம் என்னனு பாருங்க..."

"ஓகே சார். நம்ம ரபீக்கை அனுப்பலாமா சார்?"

"அவன்தான் இதுக்கு கரெக்ட்டா இருப்பான். நல்லா பாருங்க அவனுங்க என்ன எதுக்கு பாலோ பண்ணானுங்க, யாருக்காக இதைச் செய்யுறானுங்க என்ன மேட்டரு எல்லாம் எனக்குத் தெரியணும். சரியா?"

"எஸ் சார்..."

"நாளைக்குள்ள..."

"கண்டிப்பா..."

அங்கே கதிரவனுக்கு இன்னும் பிபி ஏறியது. 'முட்டா பசங்க முட்டா பசங்க! இவனுங்க எல்லாம் ஒரு டிடெக்டிவ் ஆளுன்னு இவனுங்களைப் போய் ரெகமண்ட் பண்ணான் பாரு அந்த நிகில். கொஞ்சத்துல நான் காலி...' என்று யோசித்தவன் நிகிலுக்கு அழைத்தான்.

"சொல்லு மச்சான், என்ன மேட்டரு?"

"@#$%^&"

"டேய் டேய் டேய் கொஞ்சம் நிறுத்து டா ப்ளீஸ்..."

"நீயெல்லாம் ஒரு ஆளுன்னு உன்கிட்டப் போய் உதவி கேட்டேன் பாரு! என்னைச் சொல்லணும்..."

"என்னனு சொல்லுடா முதல..."

"அந்த ரெண்டு உதவாக்கரை பசங்க கொஞ்சத்துல என்னை மாட்டிவிட்டு இருப்பானுங்க" என்றவன் எல்லாம் சொல்ல.

"டேய் கதிரவா அவனுங்க ஆளு தான் பார்க்க கோமாளிங்க மாதிரி இருப்பானுங்க ஆனா செம ஷார்ப். நம்பு..."

"டேய் பார்த்தது தயாளன் டா..."

"சில் மச்சி. எப்படியும் இந்நேரம் அவன் ஆளு ஒருத்தன் தருணையும் குகனையும் பாலோ பண்ண ஆரமிச்சு இருப்பான். லீவ் இட் நான் பார்த்துக்கறேன்..."

"டேய் என் பேரு வெளிய வரக்கூடாது டா..."

"செத்தாலும் வராது டோன்ட் ஒர்ரி..."

"கால் மீ" என்று உடனே மெசேஜ் செய்தான் அவன்.

**************************

நேராக வீட்டிற்குள் சென்ற காரிலிருந்து தாமோ கீழே இறங்கினார். அவரைக் கண்டதும் சகுந்தலா சிரிப்போடு,"வாங்க அண்ணா..." என்று அழைக்க,

"தம்பி வீட்டுல தானே இருக்கு?" என்று கேட்டார்.

"மேல அவன் ரூம்ல இருப்பான். என்ன விஷயம்?" என்றதும் சிரித்தார் தாமோ.

"என்கிட்டயே ரகசியமா? இருங்க அவனுக்கு போன் பண்ணிக் கேட்கறேன்..." என்று அவனுடன் பேசியவர் அவரை மேலே போகச் சொல்ல அங்கே இந்திரன் அவருக்காகக் காத்துக்கொண்டு இருந்தான்.

"தம்பி..."

"வாங்க அங்கிள். ப்ளீஸ்..."

"கொஞ்சம் பேபேர்ஸ்ல சைன் வேணும்..."

"கொடுங்க..." என்றவன் வாங்கி கையெழுத்திட,

"தம்பி படிக்காமலே கையெழுத்து போடக்கூடாது..."

"அது மத்தவங்க கொடுத்தா. ஆனா நீங்க கொடுத்தா எதுலயும் நம்பி கையெழுத்து போடலாம்..."

"நானுன்னு இல்ல, யாராயிருந்தாலும் படிக்கணும். படிங்க" என்று அவர் சொல்ல இவன் படித்துமுடித்துவிட்டு கையெழுத்திட்டான்.

"ஓகேவா அங்கிள்?"

"தம்பி உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்..."

"சொல்லுங்க..."

"அது..." என்று யோசித்தார்.

"யோசிக்கவே வேணாம். பட்டுனு சொல்லுங்க..."

"கதிரவன் நடவடிக்கை எதுவும் சரியில்ல. என் காதுக்கு எல்லாம் தப்பா தான் வருது. ஆனா எந்த ஆதாரமும் கிடைக்கல. சோ..." என்றதும் அவன் சிரித்தான்.

"என்னை நம்பலையா தம்பி?"

"நான் அப்படிச் சொன்னேனா அங்கிள்?"

"அப்போ?"

"ஹி இஸ் அண்டர் ஸ்கேனர் (அவன் கவனிக்கப்படுகிறான்)"

"தம்பி..."

"அங்கிள். நான் வேணுனா ஒரு பணக்காரரோட பையனாவும் பேரனாவும் இருக்கலாம். ஆனா நான் தொழில் கத்துக்கிட்டது சாரி சாரி எனக்கு தொழில் சொல்லிக்கொடுத்தது ஒரு சாணக்கியன். சாணக்கிய தர்மம் எனக்கு முழுசும் அத்துப்படி..."

அவர் அவனையே பார்க்க,

"என்ன அங்கிள் அப்படிப் பார்க்கறீங்க? ஓ அந்த சாணக்கியன் பேரு சொல்லல இல்ல? மிஸ்டர் தாமோதரன்..." என்றான் இந்திரன்.

அவருக்கு உள்ளம் குளிர்ந்தது."தம்பி இந்த ஆறு மாசத்துல நிறைய நிறைய தப்புகள் நடக்குது. எல்லாம் நானும் கண்டும் காணாமல் இருக்கேன். என்ன பண்ண? அப்பா வேற அந்த நிலையில இருக்கும் போது எனக்கு அவருகிட்ட எதையும் சொல்ல முடியல. அப்றோம்..." என்று நிறுத்தியவர் அவனையே பார்க்க,

"புரியுது அங்கிள். வர்மா குரூப்ஸ அழிக்க நிறைய குழிகள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ரைட்?"

"நீ சீக்கிரம் கம்பெனிக்கு வா இந்திரா. சாரி வாங்க இந்திரன் சார். எனக்கு கதிரவனுக்கு gm பதவி கொடுத்ததுல துளியும் உடன்பாடில்லை..."

"அங்கிள் ப்ளீஸ். இந்த சார் எல்லாம் வேணாம். நான் எப்பயும் உங்களுக்கு அதே இந்திரன் தான். அண்ட் இந்த gm எல்லாம் சும்மா பெயருக்குத் தான். எப்படியும் நீங்களும் நானும் கையெழுத்து போட்டா தான் வர்மா குரூப்ஸ்ல இருந்து ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியும். அண்ட் திருடன் கிட்டயே சாவிக்கொத்தைக் கொடுப்பது தான் சாலச்சிறந்தது. சோ டோன்ட் ஒர்ரி..." என்று அவரையே தீர்க்கமாகப் பார்த்தான்.

"முதல்ல நீ பதவியை எடு. பிறகு எல்லாமே சொல்றேன். அவனைப் பிடிக்கணும்னா என்னைக்கோ பிடிச்சிருப்பேன். ஆனா நீயோ சாரோ திரும்ப கம்பெனிக்கு வரும் வரை அவனே இருக்கணும்னு தான் இவ்வளவு நாள் விட்டு இருக்கேன்..."

"கண்டிப்பா அங்கிள். நான் இருக்கும் வரை இந்த சாம்ராஜ்யத்தை ஒன்னு செய்ய விடமாட்டேன்..."

"சரி பார்ப்போம். வரேன் இந்திரா..."

"அங்கிள்" என்று அழைத்தவன் நிறுத்தி,"தேங்க்ஸ்..." என்றான்.

"எதுக்கு?"

"இந்த சாம்ராஜ்யத்தின் அரணாக, ராஜவிசுவாசியாக இருக்கீங்களே அதுக்கு..."

"இது என் கடமை தம்பி. நிறைய சரிசெய்யனும்..."

"ஹ்ம்ம்..."

தாமோ சென்றுவிட இந்திரன் யோசனையில் ஆழ்ந்தான். அவர் சொன்ன எல்லா விஷயங்களையும் யோசித்துக்கொண்டு இருந்தான். 'இரட்டை வேடம் போடுபவர்கள் தான் எத்தனை இழிவானவர்கள்? நல்லதோ கெட்டதோ தன் குணத்தைச் சொல்லிவிட வேண்டும். அது பாம்பாக இருந்தாலும் சரி நாயாக இருந்தாலும் சரி ஆனால் இந்த பச்சோந்தி போல் மட்டும் இருக்கவே கூடாது' என்று நினைத்தான்.

வெளியேறிய தாமோ நேராக இமையவர்மன் அறைக்குச் சென்று அவரிடமும் சில கையெழுத்துக்களை வாங்கிவிட்டு கொஞ்சம் பேச,

"தாமோ எதுக்கு கதிரவனுக்கு பதவி வேணாம்னு சொல்ற?"

"அதில்ல சார். அவனுக்கு என்ன தெரியும்? படிப்படியா கத்துக்கிட்டுமே. அதை விட்டுட்டு எதுக்கு எடுத்ததுமே? அதான்..."

"டேய் தாமோ உன்கிட்டச் சொல்ல என்ன? இந்திரன் திரும்ப பழைய படிவரணும்னா கதிரவன் துணை நமக்கு ரொம்ப அவசியம். போதாக்குறைக்கு நான் பார்த்து வளர்ந்த பையன்டா கதிரவன். அவனைப் போய் சந்தேகப் படுறியா?"

"யாரா இருந்தாலும் சந்தேகம்னு வந்துட்டா சரிபார்த்திடணுமில்ல?"

"சரி, உன் வழிக்கே வரேன். அவனை நீ நோட் பண்ணு. அவனை நான் சந்தேகப்பட்டா நான் இந்திரனையே சந்தேகப் படுறதுக்கு சமம்..."

"ஆயிரம் இருந்தாலும் இந்திரன் வேற கதிரவன் வேற. நான் அதுல தெளிவா இருக்கேன்..."

"உன்ன மாத்த முடியுமா? போடா தாமோ..." என்றதைக் கேட்டு சிரித்துக்கொண்டே சென்றார் தாமோதரன்.

**********************

இந்திரனுக்கு அடிப்பட்ட விஷயம் தெரிந்ததிலிருந்து ஸ்ரீ மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளானாள். அவளையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. அவளுக்கு இந்திரனை மிகவும் பிடிக்கும். ஆனால் அவன் சிந்துவை மட்டும் பாசமாக நடத்துவதும் தன்னைக் கண்டாலே முறைத்துக்கொண்டு போவதைப் பார்க்க அவளுக்கு அழுகை தான் வரும். ஆனால் அதன்பின் அவன் செய்த நடவடிக்கைகளால் அவனைக் கண்டாலே அவளுக்குள் ஒரு பயம் வரும். அதனால் அவன் இருக்கும் பக்கமே வர மாட்டாள். பின்பு அவன் ஹாஸ்டல் சேர்ந்ததும் அதன் பின் தன்னிடம் காதல் சொன்னதும் இன்றுவரை தன் சம்மதத்திற்காகக் காத்திருப்பதும் அதன் ஊடே,'நான் மாறிவிட்டேன் ஸ்ரீ' என்பதைச் சொல்லாமல் தன் ஒவ்வொரு செயலிலும் உணர்த்திக்கொண்டே இருப்பதையும் ஸ்ரீயும் அறிவாள் தான்.

*********************


அங்கே திருக்குமரன் தன் நண்பனின் மூலம் ஐராவதியைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்தவன்,"எனக்கு அந்தப் பெண்ணைப் பற்றிய டீடெய்ல்ஸ் எல்லாம் வேணும். அதிலும் குறிப்பா அவ எதுக்கு இவ்வளவு பணம் செலவு பண்றா? யாருக்கு பண்றா? போன்ற எல்லாமே எனக்கு வேணும். சீக்கிரமா அட் தி சேம் டைம் ரகசியமா..." என்று கூறி வைத்தவன் நிமிர்ந்து அங்கே மாட்டப்பட்டிருந்த சந்தான பாரதியின் புகைப்படத்தைக் கண்டு,"சார் உங்க லட்சியம் ஒன்னு நிறைவேற போகுது. நீங்க கனவு கண்ட அந்த லோ-காஸ்ட் ஜெனிரிக் மெடிசின் அதைப் பற்றிய ரிசெர்ச் எல்லாம் முடியும் தருவாயில் இருக்கு. ஆனா நீங்க கடைசியா அட்டென்ட் பண்ண லெபோரேட்டரி மீட்டிங்ல இந்த மெடிசின்ஸ் பற்றிய api (active pharmaceutical ingredients-ஒரு மருந்தின் அத்தியாவிசிய மூலக்கூறு என்றழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, காய்ச்சலுக்கு பேராசிட்டமால் மாத்திரை உபயோகிக்கிறோம் என்றால் அந்த பேராசிடமாளில் இருக்கும் n - acetyl -para amino phenol அல்லது acetaminophen என்பது தான் அந்த மாத்திரையின் api. அதோடு ஒன்றிரண்டு மாற்றங்களைச் செய்து தான் tylenol, calpol, dolo என்று வெவ்வேறு நிறுவனங்கள் தங்கள் மாத்திரையைத் தயாரிக்கிறார்கள். பேராசிடமாலே ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு தான். எல்லா மாத்திரையின் நோக்கமும் காய்ச்சலைக் குறைப்பது தான். அதேபோல் எல்லாவற்றிலும் அந்த api ஒன்று தான். தங்களின் பிராண்டிற்கு ஏற்ப சிறிது வேறுபாடுகள் கூட்டி பெயரை மாற்றி விற்கிறார்கள். நீங்க டாக்டர் எழுதிக்கொடுத்த ப்ரிஸ்க்ரிப்ஷனை எடுத்துக்கொண்டு மருந்தகங்களுக்குச் சென்றால் அதே காம்பினேஷனில் வேறு ஒன்றைத் தருவார்கள் தானே? அதற்கு இது தான் காரணம். எல்லாவற்றிலும் ஒரே api தான். ஓரளவுக்கு api பற்றிப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறன். இல்லையென்றாலும் பரவாயில்லை பிறகு விளக்குகிறேன்) டீடெய்ல்ஸ் அடங்கிய அந்த பைல் நீங்க தான் எடுத்திட்டுப் போனீங்க. அது இப்போ எங்க தேடியும் கிடைக்கல. உங்கப் பெண்ணைக் கேட்டாலும் அவங்க அதெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு சொல்றாங்க. நானோ மஹேந்திரனோ அந்த ரிசர்ச்ல உங்க கூட இல்ல. ஜீவா டாக்டரையும் கேட்டுட்டேன். யாருக்குமே தெரியில. இப்போ அதை மீண்டும் உருவாக்க திரும்ப ரிசர்ச் பண்ணனும் ஆனா அப்படியே பண்ணனாலும் உடனே கிடைக்கிறது சாத்தியமில்லை. இதற்கு நடுவுல உங்கப் பொண்ணு வேற தப்பான வழியில போயிடுவாங்களோனு பயமா இருக்கு. நானும் உங்க வீடு லாக்கர் ஹாஸ்பிடல்லனு ஒரு இடம் விடல. எங்கேயும் காணோம். இதெல்லாம் நீங்க காடு மலைன்னு அலைந்து பழங்குடியின மக்களின் கேள்வி அறிவை கொண்டு அவங்களோட மூலிகையை எல்லாம் எடுத்துவந்து ஆராய்ச்சி செய்து இன்னைக்கு தீர்க்கவே முடியாதுனு சொல்லுற அந்த வியாதிக்கு மருந்து கண்டுபிடிச்சே தீருவேன்னு அடம்பிடிசீங்க. அதும் அதைக் குறைந்தவிலையில் எல்லோருக்கும் கிடைக்கும் படியும் செய்யணும்னு சொன்னீங்க. யாரும் எதிர்பார்க்காம நீங்க பாதியிலே இப்படிப் போயிட்டீங்க. இதுல என்மேல வேற உங்க பொறுப்பை ஒப்படைச்சிட்டிங்க. பார்ப்போம்..." என்றவன் அமைதியாக அமர்ந்திருந்தான். (வானிலை மாறும்!)
 
சந்தானபாரதி ஆராய்ச்சி, மாதுளை எதாவது
கனெக்ட் இருக்குமா...?
கதிரவனின் இரட்டை வேடம், இந்திரனுக்கு தெரிந்துவிட்டது.

திருக்குமரன்,இந்திரன் சந்திப்பு இருக்குமா...?
 
Top