Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை!-3

Advertisement

praveenraj

Well-known member
Member
ஏதேதோ யோசனையில் அமர்ந்திருந்த இமையவர்மனின் செல்போன் சினுங்கவும் அதை எடுத்தவர், அழைப்பது கமலேஷ் என்பதைப் பார்த்து மகிழ்ச்சியுடன், "சொல்லுப்பா..." என்றார்.
"அப்பா வீடியோ சூப்பர்! அண்ணா பழையபடி மாறிடுவாரா?"
"இல்லை..." என்றதும் அதிர்ந்த கமலேஷ்,
"என்னப்பா சொல்றீங்க?"
"பழைய இந்திரன் இல்ல, புதிய இந்திரனா வருவான். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு..."
"எப்படிப்பா உறுதியா சொல்றீங்க?"
"எனக்கென்னவோ அவன் சிந்துஜாவின் தீரனாய் வருவான்னு நம்புறேன்..."
"அப்பா?"
"ஆமா"
"ஆனா அதைப் பார்க்க தான் அவள் இல்லையே..." என்றவனின் குரல் கம்ம அவன் விசும்பினான்.
"போதும் கமலேஷ். இனி சிந்துஜாவைப் பற்றிப் பேசவேணாம்..."
"அப்பா?"
"ஆமா. அவ இருந்தா. இப்போ இல்ல..."
"அதுக்குன்னு?"
"எனக்கு இறந்தவங்களைக் காட்டிலும் இருக்கறவங்க ரொம்ப முக்கியம் கமலா. அவங்களையும் நான் இழக்க தயாரா இல்லை. சீக்கிரம் அவனைப் பழைய படி பிசினஸ்ல இறக்கணும்..."
"ஏம்பா நான் பிசினெஸை ஒழுங்கா பார்த்துக்கறதில்லையா?" என்று ஐயமுற்றான் கமலேஷ்.
சிரித்தவர்,"முட்டாள். இந்த ஆறு மாசமா எனக்கு இருக்குற ஒரே ஆறுதல் நீ தான்டா..." என்று சொல்ல அதில் ஒரு வித விரக்தி நிலையும் இருந்தது. அதை கமலேஷும் புரிந்துகொண்டான்.
அவனுக்கு என்ன பதிலுரைப்பது என்றே தெரியவில்லை. "இருந்தாலும் நான்..."
"உண்மை கமலேஷ். தேங்க்ஸ் டா..."
"ஐயோ அப்பா! என்ன பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க? இப்படியெல்லாம் இனி பேசாதீங்க. இது என் கடமை!"
"சரிங்க பெரியமனுஷனே!" என்று இமையவர்மன் சொல்ல, நீண்ட நாட்களுக்குப் பிறகு மன மகிழ்ச்சியோடு இருக்கும் தன் கணவரையும் உற்சாகம் ததும்பும் பெரிய மகனையும், நம்பிக்கை தரும் இளைய மகனையும் நினைத்து சந்தோசப் பட்டுக்கொண்டார் சகுந்தலா.
.............................................

அறைக்குச் சென்று குளித்து கீழே வந்து காபி பருக அந்த சோபாவில் அமர்ந்த இந்திரன்,'இந்த சோபா என் சிஜாக்கு ரொம்பவும் பேவோரெட்' என்று எண்ணிய வேளையில் மனம் ஸ்ரீயின் முகமும் மனதில் வந்தது. ஏனோ அவன் கண்ணீர் வடித்தான். அவர்கள் இருவரின் இல்லாமை அவனுக்கு வாழ்க்கையின் வெறுமையைக் காட்டியது. அன்று கண்விழித்ததும் நடந்ததை மீண்டும் நினைவுக்கூர்ந்தான்.
"அம்மா!"
"சொல்லு இந்திரா..."
"கார்மேகம் மாமாவைப் பார்க்கணும்..."
சகுந்தளவிற்கு ஏனோ வார்த்தைகள் வரவில்லை.
"இல்ல இந்திரா, அது வந்து..."
"தயவு செஞ்சு ப்ளீஸ்..."
'எப்படிச் சொல்வது?' என்று புரியாமல் அவர் குழம்ப,
பொம்மி தான்,"தம்பி அது வந்து..."
"என்ன பொம்மி ம்மா?"
"அவங்க இங்க இல்ல..."
"புரியல?"
"அது அவங்க அப்பா மாற்றலாகி போய்ட்டாரு..."
"எங்க?" என்றவனின் குரலில் அப்பட்டமான அதிர்ச்சி இருந்தது.
அவர் சகுந்தலாவைப் பார்க்க, அவரோ 'சொல்லு' என்பதைப் போல் சமிக்ஞை செய்ய,
"இப்போ டெக்சாஸ் போயிருக்காங்க ..."
"ஸ்டேட்டஸ் எதுக்கு?" என்றவனுக்கு அர்ச்சனா அங்கே தான் இருக்கிறாள் என்று புரிந்தது.
"எப்போ வருவாங்க?"
"அது..."
"சொல்லுங்க?"
"இங்க இருந்ததையெல்லாம் வித்துட்டு ஊருக்குப் போய்ட்டாங்க. எப்ப வருவாங்கனு சொல்லல?"
அவன் தீர்க்கமாய் அவன் அம்மாவைப் பார்க்க,
"சத்தியமா சொல்லல..."
இறுகிய முகம் மேலும் இறுகியது.
.........................................................................................................


ஏனோ உடனே ஸ்ரீயின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்ற, சிந்தையில் உதித்தவனாய் அவன் லேப்டாப்பை தேடி மாடி ஏறினான். அதை ஆன் செய்தவன் இந்திரன் என்று இருந்தது யூசேரின் நேமுக்கு, பாஸ்வோர்ட் கேட்கப்பட கைகள் அனிச்சையாய் sreelekhamylove என்று டைப் செய்தது. ஏனோ அதை டைப் செய்யும் போதே அவன் கைகள் நடுங்கியது. ஓபன் ஆனதுமே டெஸ்க்டாப் பேக்கிரௌண்டில் அவன் கைகளைக் கோர்த்தபடியே கொஞ்சம் வெட்கம் நிறைய காதலுடன் அவள் அவனைப் பார்க்கும் பார்வை இருக்க, ஏனோ அவன் முகம் மென்மையாகி கைகள் அந்த ஸ்க்ரீனை தொட்டு வருட அவனையும் அறியாமல் அவன் இதழில் குறுநகை தவழ்ந்தது. அத்துடன் கண்களும் கண்ணீர் சிந்தியது.
சில விஷயங்களை நம் வாழ்வில் நடந்து முடிந்தபின்னும் நம்மால் மறக்கவே முடியாது. கடந்து வரவும் முடியாது. இதுவும் அப்படித்தான். உள்ளே பர்சனல் என்ற போல்டேரை ஓபன் செய்ய மீண்டும் கேட்ட அந்த பாஸ்வோர்டில் 301196 என்று அவள் பிறந்தநாளை விடையாகக் கொடுத்தான்.
உள்ளே ஒரு 30 - 50 போல்டெர்கள் இருந்தது. அதிலெல்லாம் 'sli' 'sis' என்று ஒரு வகைகளில் இருக்க sli ஐ ஓபன் செய்தான். அவள் பிறந்த குழந்தையாய் இருந்த புகைப்படம் முதல் அவளின் கடைசிப் புகைப்படம் வரை எல்லாமும் அதில் இருந்தது. அவள் பருவமடைந்த பொழுது எடுத்தது, ஒவ்வொரு வருட பர்த்டே, டூர், காலேஜ் ட்ரிப், iv ட்ரெக்கிங், கெட்டுகெதர், ஐபிஎல் மேட்ச் பார்த்த வேளையில் எடுத்துது என்று பல புகைப்படங்களையும் பார்த்துக் கொண்டிருந்தவன் கண்ணில் இறுதியாக அன்று எடுத்த அவளுடைய கடைசிப் புகைப்படமும் இருந்தது. அவன் போனை கிளவுடுடன் சிங்க் செய்து இருந்ததால் அதில் எடுக்கும் புகைப்படங்கள் உடனே கிளவுட்டில் வந்து ஆட்டோ டவுன்லோட் ஆகி இங்கே சேர்ந்துவிடும். இதும் அப்படி நிகழ்ந்தது தான்.
அந்த மயில் கழுத்து நிற சுடிதாரில் பெரிய ஒப்பனைகள் எதுவும் இல்லாமல் மிக கேண்டிடாய் கையில் ஜூஸோடு உதடுகளைச் சுழித்து, கண்களைச் சுருக்கி தோள்கள் ஒற்றி அவனுடைய கன்னமும் அவளுடைய கன்னமும் முத்தமிடுவதைப்போல் ஒட்டிக்கொண்டு அவளோடு அவன் இருந்தான். அந்தப் புகைப்படத்தில் அவன் கையிலிருக்கும் ஜுஸை அவள் பிடுங்குவதைப் போல் இருக்க அதுதான் அவளோடு அவன் எடுக்க போகும் கடைசிப் புகைப்படம் என்றும் இன்னும் சில மணித்துளிகளில் அவள் மரணிக்கப் போகிறாள் என்றும் தெரிந்திருந்தால் அவன் அவள் கேட்ட போது அந்த ஜூஸை எடுத்திருக்கவே மாட்டான். டைம் மெஷின் மட்டும் அவனிடம் இருந்திருந்தால் உடனே அதை உபயோகப் படுத்தி அந்த நொடியையே மாற்றியிருந்திருப்பானே!
கண்களில் கண்ணீர் வழிய அவன் அழுகிறான். இது அவனவளின் ஆசைகளுள் ஒன்று. ஆண்கள் அழக்கூடாது என்றும் அதும் செல்வச் செழிப்பான இந்திரன் அழவே கூடாதென்றும் சுற்றியிருப்பவர்கள் உசுப்பேத்த அவனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்றுவரை அழுததே இல்லை. அதற்கு அவன் சுபாவமும் ஒத்துழைத்தது. பெரிதாக மகிழ்ச்சி கொள்ளான். அதேபோல் அதிக சினமும் படமாட்டான். அவன் வாய்விட்டுச் சிரிப்பதும் அரிதான ஒன்றுதான். அது அவன் தொழில் நிமித்தமாய் ஏற்படுத்திக்கொண்ட பழக்கம். சிரித்துப் பேசினால் உடனே மயக்கி விடுவார்கள் என்பது அவனை வளர்த்தியவரின் கணிப்பு. எதிலும் கொஞ்சம் அலட்சியம். யாரையும் அவ்வளவாய் மதிக்க மாட்டான். பணக்காரன் என்றே சொல்லி வளர்த்தப்பட்டதால் அதிக பிரெஸ்டிஜ் பார்ப்பான். ஆனால் இன்று கண்ணீர் ஒன்றே அவன் மூச்சாகி விட்டது. உறக்கம் வரவில்லை. சிரிப்பு, மகிழ்ச்சி, உற்சாகம், ஜாலி முதலிய சொற்களை ஏற்கனவே அவன் அகராதியில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். இப்போது அப்பக்கங்கள் முழுவதும் கிழித்தெறியப்பட்டது. இறுக்கம், வெறுப்பு கோவம், வலி, அழுகை இவையெல்லாம் தான் அவன் சொத்துக்கள். வைரத்தைக் காட்டிலும் அவன் மனம் கடினமானது. வைரத்தை வைரத்தால் தானே அறுக்க முடியும்!
அவள் முகத்தினையே பார்த்துக்கொண்டிருந்தவன் அப்படியே உறங்கியும் போனான். ஏனோ இன்று உறக்கம் வந்துவிட்டது . நீண்ட நாட்கள் கழித்து சைக்கிள் ஓட்டியதால் வந்த களைப்பா? இல்லை ஸ்ரீயின் நினைவுகளால் ஏற்பட்ட பாதிப்பா? இல்லை மனதில் யாரோ ஒருத்தியின் மீது ஏற்பட்ட உற்சாக உந்துதலா? எதுவென்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் நித்திரா தேவி அவனை ஆட்கொண்டாள்.
இதையே பார்த்துக்கொண்டிருந்த சகுந்தலா இமைய வர்மன் இருவருக்கும் வருத்தமாக இருந்தாலும் அவனின் இந்த மாற்றங்கள் அவர்கள் மனதை கொஞ்சம் இளகவைக்க அவர்களும் உறங்கச் சென்றனர். இனி தங்கள் புத்திரனை எளிதில் மீட்கவே முடியாது என்று மட்டும் அவர்களுக்குப் புரிந்தது. ஆனால் அதை இருவரும் காட்டிக்கொள்ள வில்லை. கடவுளிடம் எப்படியாவது இந்த இடமாற்றம் அவனின் மனதையும் மாற்றிவிட்டால் நன்று என்று வேண்டிக்கொண்டனர்!
..........................................................

அங்கே அவளும் பல யோசனைகளுடன் ஆழ்ந்திருந்தாள்.
"ஹச் ஹச்..." என்று இருமுறை தும்ப,
"எங்கம்மா போன? ஏன் இப்படி ஜலதோஷம் பிடிச்சது?" என்று அவர் ஆத்திரமாய் வினவ,
அவளிடம் பதிலில்லை. அவளோ திருதிருவென விழித்தாள்.
"கேட்கறேன் தானே சொல்லு தாயி?" என்றவர் அவள் தலையை வருட அது இன்னும் ஈரமாகவே இருந்தது.
"மழையில நனைஞ்சயா?" என்றதும்
அவள் திருதிருவெனவே விழிக்க,
"எத்தனை வாட்டி உனக்குச் சொல்றது?" என்று அவர் கடிந்தார்.
(மழை நல்லது)
"என்ன?"
(மழை நல்லது)
"மழை நல்லதுதான்.அதுக்குன்னு? மழைபெய்யும் போது அருகிலிருக்கும் கிருமிகளும் உள்ள போயிடும்னு உனக்குத் தெரியாதா?" என்றதும்,
அவள் சிரித்தாள்.
அவள் புன்னகையில் இளகியவர், துண்டை எடுத்துவந்து அவளுக்கு துவட்ட, மற்றொருவர் உணவினை எடுத்து ஊட்டினார்.
"சும்மா சும்மா புள்ளைய வையாதீங்க?" என்று அப்பெண்மணி சொல்ல, தனக்கு ஆதரவாக ஒருவர் பேசுகிறார் என்றதும் மகிழ்ச்சியில் அவள் பேச கையெடுக்க,
"ஆமா பெரிய புள்ள! ஏழு கழுதை வயசாகிடுச்சி..." என்றார். அதில் ஒரு நக்கல் கலந்த சிரிப்பு இருந்தது.
மீண்டுமவள் ஏதோ சொல்ல வர,
"நிறுத்து. இப்போ சாப்பிட்டு தூங்கு. எதுனாலும் நாளைக்குப் பேசலாம்..." என்றவர் அவளுக்கு உணவு ஊட்ட அதை உண்டவள் ஊட்டியவரின் மடியிலே படுத்தாள். அவர் வேட்டி ஈரமாகி இருந்தது.
அவள் தலை கோதியவாறு,'கடவுளே இந்த புள்ளைக்கு மட்டும் எப்படியாவது துணை நில்லு!' என்று வேண்டினார் அப்பெரியவர்.
நன்றாக தூங்கியவளுக்கு அப்படியே ஒரு தலையணை கொடுத்து தூங்க வைத்தனர். தாங்கள் வாங்கிவந்த வரம் இப்படி என்றால் யாருதான் அதை மாற்றமுடியும்? என்று எண்ணியவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் அர்த்தமாய்ப் பார்த்தனர்.
இந்த தள்ளாத வயதிலும் தங்களுக்கு இவ்வளவு பெரிய பொறுப்பு வந்துள்ளதே? இதை செம்மையாகவே செய்து முடிக்கவேண்டும் என்ற நிர்பந்தம் அவர்களுக்கு. எல்லாப் பக்கமிருந்தும் அடி வந்தால் என்ன தான் செய்வது? காலங்காலமாய் அட்டகட்டியில் வசிக்கும் பூர்வக்குடி மக்கள் அவர்கள். என்ன தான் அரசாங்கம் பழங்குடியின மக்களுக்கு நிறைய சலுகைகளும் வசதிகளும் கொடுத்தாலும் அதனால் பயனுண்டா என்றால் சொற்பம் என்பது தான் பதில்.
"காப்பாத்து காத்தவராயா! எங்களை இல்ல இந்தப் புள்ளைய!" என்றவர்கள் உறங்கினார்கள்.
காலம் எதையும் குணப்படுத்தாது. மறக்கடிக்காது.
அது வலியோடே எப்படி வாழவேண்டும் என்பதையே கற்றுத்தரும்...
*************************


இந்திரன் சிந்துவைத் தேடி அவள் அறைக்கு வந்து கதவைத் திறக்க அங்கு பெட்டில் முதுகை காட்டியவாறு அமர்ந்திருந்தவளைப் பார்த்ததுமே ஏனோ மனமெங்கும் ஒரு சிலிர்ப்பு எழுந்து அடங்கியது. மெல்ல பூனைபோல் சத்தமேயில்லாமல் கதவைச் சாற்றியவன் அவள் பின்னால் சென்று நின்றுகொண்டான். அவளோ தீவிரமாக தலையை சொரிந்தபடி தன்னுடைய ப்ராஜெக்ட் ஒர்கில் அதிதீவிரமாக இருக்க அவள் முடி சிக்குண்டு கிடந்தது. அவளின் கேசத்தை மென்மையாக வருடிக்கொடுத்த இந்திரன் அந்த சிக்கை எடுக்க முயல அவளோ வந்தது சிந்து என்று எண்ணி,"அப்படித்தான்டி நல்லாப் பண்ணு..." என்றாள்.
இவனோ அடித்தது ஜாக்பாட் என்று அவள் முடியில் இருந்த கையை மென்மையாக அவளின் தோள்பட்டையில் வைத்து இதமாய் அழுத்த,"சூப்பர் டி பரவாயில்லையே உனக்குக் கூடக் கொஞ்சம் ரசனை எல்லாம் இருக்கே?" என்று சொல்ல,
அவன் கைகளை அவளின் தோள்பட்டையிலிருந்து மெதுவாக அவளின் கைகளை நோக்கிச் செலுத்திக்கொண்டே இருந்தவன் அவளின் விரல்களைப் பிடித்தான். அப்போதுதான் அது சிந்துவின் கைகள் இல்லையென்று பார்த்தவள் திடுக்கிட்டு திரும்பி எழ, அவனோ அவளின் முகத்தில் குறிப்பாக அவளின் கண்களில் ஊடுருவிக்கொண்டிருந்தான்.
அவன் பார்வையின் வீச்சம் ஏனோ அவளைத் தடுமாறச்செய்ய அவனோ இன்னும் அவள் கைகளை அவன் கைகளில் சேர்த்துக்கொண்டே தான் இருந்தான். மெல்ல அவளை நோக்கி நெருங்கியவனின் செயல்களை யூகித்தவள், தடுக்கவும் முடியாமல் அதேநேரம் ஒத்துழைக்கவும் முடியாமல் திணறி விலக முயன்று கதவை நோக்கி நகர அவளை அப்படியே சுவற்றில் சாய்த்தான் கள்வன்.
"ஐயோ என்ன பண்றீங்க? சிந்து வந்திடுவா..." என்று அதிர்ந்தவளுக்கு,
"வரட்டுமே..." என்றவன் அவளின் கண்களை கருமமே(கருமம் என்றால் கடமைச் செயல் என்பது தான் பொருள். இந்த வார்த்தை எவ்வாறு தவறாக சித்தரிக்கப் பட்டது என்று புரியவில்லை!) என்று பார்த்துக்கொண்டிருந்தான்.
அது அவளை என்னவோ செய்ய அவளின் இதயம் தான் வெளியே வந்துவிடுமளவுக்கு பயம், த்ரில் ஆகிய உணர்வுகளில் மிதந்தாள்.
அவளின் சிவந்த அதரங்களை நோக்கி குனிந்தவன் ஒருகணம் அவளின் கண்களைப் பார்க்க முயல அவளோ சுக அவஸ்தையில் நெளிந்துக் கொண்டிருந்தாள்.
அவளின் மூடிய விழிகளுக்கு அருகில் அவன் உதடுகளைக் கொண்டுச் சென்றவனின் மூச்சுக்காற்று அவளைத் தீண்ட அந்த மோன நிலையில் இருந்தவளின் அவஸ்தைகளை ரசித்துக்கொண்டிருந்தான் இந்திரன்.
அவளோ,'என்ன இன்னும் ஒன்னும் ஆகவில்லையே?' என்று மெதுவாக ஒற்றைக் கண்ணை மட்டும் அதும் பாதியாக மட்டும் திறந்தாள். உடனே அவன் அதில் மென்மையாக முத்தம் வைக்கவும் உடல் கூச்சத்தில் குறுகிப்போனாள் பேதையவள்.
"ஏய் லேக்கு பேபி! லேக்கு..." என்று ஹஸ்கி வாய்ஸில் அழைக்க அது அவளை இன்னும் என்னவோ செய்தது. மெல்ல கண்களைத் திறந்து அவனைப் பார்த்தாள்.
"எப்போடி எனக்கு ஓகே சொல்லப் போற?" என்றான் இந்திரன்.
அவள் திருதிருவென விழித்தாள்.
"நான் பாவம்டி. என்னை ரொம்பவும் நீ படுத்துற..." என்றவனின் குரலே அவனின் ஏமாற்றங்களைச் சொன்னது.
அவளின் கைகளை எடுத்தவன் அதன் மேற்புறத்தில் மென்மையாக அதேநேரம் அழுத்தமாக முத்தம் வைக்க அது அவளை என்னவோ செய்தது. அவளின் மௌனம் கூடவே அவள் எதிர்க்காததால் மெதுவாக முன்னேறினான். அவள் மணிக்கட்டிலிருந்து இரண்டு இரண்டு இன்ச் இடைவேளை விடுத்து அவனின் உதடுகளால் அவளின் மேனியில் முன்னேறிக்கொண்டிருக்க அவளோ அவனுக்கு கிட்டத்தட்ட ஒத்துழைத்துக்கொண்டிருந்தாள்.
தனிமையில் ஒரு பெண்ணுடன் இப்படி நடந்துகொள்வது தவறென அவன் புத்திக்குத் தெரிந்தாலும் இது அவனின் அவள் என்பதாலும் மேலும் அவளிடமிருந்து சின்னதொரு எதிர்ப்பு கூட வராததால் முன்னேறியவன் அவளின் தோள்பட்டைக்கு வந்துவிட அவளின் கழுத்து வளைவில் முத்திரை பதிக்க மேலும் முன்னேற,
"என்னடா நடக்குது இங்க? நான் வந்துட்டேன்டா..." என்ற குரல் ஒலித்தும் இருவரும் அந்தக் காதல் பித்திலிருந்து வெளியே வரவில்லை. அவன் மீண்டும் மேலே முன்னேறி அவள் கன்னம் நோக்கிப் போக, சிந்துவோ கண்களை மூடினாலும் விரல்களின் இடையில் இதைப் பார்த்துக்கொண்டே இருந்தவள் இவர்கள் நிறுத்துவதைப்போல் அறிகுறியே படாததால் ஹச் என்று வாராத தும்மலை வரவழைத்தாள்.
சத்தத்தில் இருவரும் பிரிய ஸ்ரீக்கு பயத்தில் உடல் எல்லாம் நடுங்கியது. இவன் தான் பெரிதாக அலட்டிக்காமல்,"கதவைத் தட்டிட்டு வரணும்னு மேனர்ஸ் கூட இல்லையா குட்டிமா?" என்றவன் ஸ்ரீயின் புறம் திரும்ப அவள் பார்த்த பார்வையில் அமைதியானவன் இந்திரன். (பின்னே அவனும் சொல்லாமல் தானே வந்தான்?)
"எத்தனை நாளா இந்தக் கூத்து நடக்குது?" என்றாள் சிந்து.
"எது?" என்று பதட்டத்தில் ஸ்ரீ கேட்க,
"ஹ்ம்ம் உங்க ரொமான்ஸ்..."
அவள் மறுப்பாக தலையாட்ட,
"ஆனாலும் சித்திரக் குள்ளிடி நீ. ஃப்ரண்ட் ஓட ஆளு எனக்கு அண்ணன் முறை ஆகணும்னு நீ என் அண்ணனையே உன்னோட ஆளாகிட்ட இல்ல? கேடி பக்கர்..." என்றதும்,
"இல்லடி அது..." என்று ஸ்ரீ மறுக்க முயல,
"இனி எதையும் மறைக்க வேணாம் ஸ்ரீ. எல்லாத்தையும் குட்டிமாகிட்டச் சொல்லிடு" என்றான் இந்திரன்.
அதில் அதிர்ந்த ஸ்ரீ,"எதை?"
"இப்போ நமக்குள்ள நடந்ததை..." என்று இந்திரன் சீரியஸாக சொல்ல,
"நமக்குள்ள என்ன நடந்தது?"
"இப்போ நடந்ததே பேபி?" என்று அவன் கள்ளப்புன்னகை ஒன்றைச் சிந்த,
சிந்துவோ நம்பாத பார்வை ஒன்றை ஸ்ரீயின் மீது செலுத்த அங்கே அவளின் அவனோ அவளின் திண்டாட்டங்களை எல்லாம் காரணத்தோடு ரசித்தான்.
"அப்படிப் பார்க்காத சிந்து. நான் எல்லாம் சொல்லிடுறேன்..."
"அடிப்பாவி அப்போ உண்மையிலே லவ் பண்றீங்களா?"
"லவ்வா?"
"சும்மா நடிக்காத?"
"நிஜமா இல்லை சிந்து. உங்க அண்ணன் தான் நாம கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டார்..."
"எப்போ?"
"நாம டென்த் படிக்கும் போது..." என்று அவள் சாதரணமாய்ச் சொல்ல,
இந்திரனோ போச்சுடா என்று தலையில் கையை வைத்தான்.
"அட கிராதகி! பத்தாவதுல இருந்தா? எத்தனை வருஷமா லவ் பண்றீங்க?"என்று உண்மையிலே சிந்து ஷாக் ஆனாள்.
"குட்டிம்மா நான் சொல்றேன் டா..." என்ற இந்திரனைப் பார்த்து,
"நீ வாயை மூடு டா..." என்றாள் சிந்துஜா.
"குட்டிம்மா நான் அண்ணன் டா..."
"அதுதான்டா கோவம். இவளையெல்லாம் என்னால அண்ணின்னு சொல்ல முடியாது போடா..." என்று உதடு சுழிக்க,
அவள் சொன்னது இருவருக்கும் புரிய அவர்கள் சிரித்தனர்.
"குட்டிம்மா அப்போ ஓகே வா?"
"இங்க பாருடி உன்ன நான் டி போட்டு தான் கூப்பிடுவேன். அண்ணின்னு எல்லாம் கூப்பிட மாட்டேன். அதுமட்டும் இல்லாம நான் தான் உன் நாத்தனார். உன்ன எப்படியெல்லாம் கொடுமை படுத்துறேன் பாரு..." என்று சிந்து சொன்ன தொனியில் இருவரும் சிரித்தனர்.
"போடா எரும நீ கூட என்கிட்ட இருந்து மறச்சிட்ட இல்ல?"
"ஐயோ குட்டிம்மா அப்படியெல்லாம் இல்ல. எனக்கே இப்போதான் ஓகே சொன்னா..."
"இதை என்ன நம்ப சொல்றியா?"
"ப்ரோமிஷா டா..."
"சரி நீ எப்போ ப்ரொபோஸ் பண்ண?"
"அதான் சொன்னாளே நீங்க டென்த் படிக்கும் போது..."
"நீ எப்போடி ஓகே சொன்ன?"
"அவ எங்க சொன்னா?" என்று இந்திரன் அலுத்துக்கொண்டான்.
"அப்போ?"
"இன்னும் அவ ஓகே சொல்லவே இல்லை..."
"இதுக்கும் மேல வேற தனியா ஓகே சொல்லுவாங்களா?"
இருவரும் சிரிக்க,
"ஒழுங்கா ரெண்டு பேரும் எனக்கு ட்ரீட் வெக்கறீங்க. நீ எனக்கு அசைன்மென்ட் எல்லாம் நீ தான் எழுதணும். இது தான் உங்களுக்கு பனிஷ்மென்ட்"
"போடி..." என்று ஸ்ரீ சொல்ல
'எங்கே தெரிந்தால் குட்டிம்மா எதாவது சொல்லுவாளோ என்று பயம் கொண்ட இந்திரனோ சிந்துவின் சம்மதத்துடன் ஸ்ரீயும் மறுக்காமல் இருந்தது' அவனுக்கு இன்னும் மகிழ்ச்சியைத் தர சந்தோஷத்தில் ஸ்ரீயை மீண்டும் முத்தமிட்டான்.
"டேய் நான் இன்னும் இங்க தான்டா இருக்கேன்" என்றாள் சிந்து.
அவளுக்கும் ஒரு முத்தம் வைத்தான். என்ன இரண்டும் முத்தம் தான். இரண்டும் அன்பு தான். ஆனால் ஒன்று தங்கைக்கு இன்னொன்று காதலிக்கு.
"இப்படித் தான் என் முன்னாடி கிஸ் பண்ணுவியா? உனக்கு அறிவே இல்லைடா" என்றாள் சிந்து.
"என் வொய்ப்க்கு நான் முத்தம் தரேன். உனக்கென்ன?" என்றான் இந்திரன்.
"என்னது வொய்ப்பா? உங்க குழந்தைங்க எல்லாம் எங்க டா படிக்குது?" என்று சிந்து மீண்டும் அதிர,
"முறைத்தவன், ஆமா. நான் அவளை லவ்வேரா பார்க்கவேயில்லை. எனக்கு அவ எப்பயும் என் மனைவியா தான் தெரிஞ்சி இருக்கா..." என்று சொல்ல,
"நீ நடத்துடா அண்ணா..." என்றதும் அவன் சிரித்தான்.
"இது வீட்டுல தெரியுமா?"
"ஐயோ இல்லடி!" என்று பதறினாள் ஸ்ரீ.
"அப்படியே பதறுற மாதிரி நடிக்காத டி குட்டச்சி..." என்றாள் சிந்து.
"குட்டிம்மா..." என்று இந்திரன் குரல் உயர்த்த,
"என்ன? உனக்கு மனைவியானாலும் இவ முதல என் ஃப்ரண்ட் தான். தெரிஞ்சிக்கோ..."
"வாடி வேலையெல்லாம் இருக்கு. அதுபோக உன்கிட்ட நிறைய பேசவேண்டி இருக்கு" என்று ஸ்ரீயை சிந்து அழைத்தாள்.
அவன் விடைபெற்றதும் இதுவரை அவர்களுக்குள் நடந்ததை எல்லாம் ஸ்ரீ சிந்துவிடம் சொன்னாள்.
"கேடிடி நீ? உன்னைப் போய் அம்மா நல்லவனு நம்புறாங்க பாரு?" என்று சிந்து கிண்டல் செய்ய,
"என்னை அத்தைக்குப் பிடிக்குமா சிந்து?" என்று ஐயத்துடன் வினவினாள் ஸ்ரீ.
ஏனோ அவளின் கேள்வியிலே தோழியின் பயம் சிந்துவுக்கும் புரிய,
"இதெல்லாம் உனக்கே ஓவெரா தெரியில? சும்மாவே உன்னை மருமக மருமகனு தலையில வெச்சு தாங்குவாங்க. இப்போ சொல்லவா வேணும்? போடி..." என்றாள்.
அனிச்சையாய் அவனின் கைகள் லேகாவைத் தேட கண்கள் மூடியே இருந்த இந்திரன், அந்தப் பெரிய கட்டிலில் கனவெது நிஜமெது என்ற வித்தியாசம் கூடத் தெரியாமல் தேடியவன் உண்மை சுட்டு திடுக்கென விழித்தவனுக்கு இது கனவென்று அவனால் நம்மவே முடியவில்லை. அவனுக்கு பைத்தியமே பிடித்துவிடும் போல் இருக்க டிவியை ஆன் செய்தான்.
"வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம் , வெறும் வாசம் வாழ்க்கை இல்லை
உயிரை வேரோடுக் கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி...
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா..." என்று பாடல் ஒலித்தது.

அவள் இல்லை. இனியும் வரமாட்டாள். இதுதான் நிஜம். இதை ஏற்கப் பழகணும். தவறிழைத்தவன் என்னவோ அவன் ஆனால் தண்டனை மட்டும் என்னவோ ஸ்ரீ மற்றும் சிந்துவிற்கும், தன் தந்தை தாய்க்கும் ஸ்ரீயின் தந்தை கார்மேகத்திற்கும் என்பதில் தான் அவனின் தற்போதைய கோவமெல்லாம். ஆனால் ஒருவரும் அவனை ஏன் இப்படிச் செய்தாய் என்று கேள்வி கேட்கவில்லை. சொல்லப்போனால் அவனை எவ்வளவு பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டுமோ அவ்வளவு பத்திரமாகவே பார்த்துக்கொள்கிறார்கள். இதில் ராஜ உபச்சாரம் வேறு !!! ஆனால் அவனுக்குத் தெரிந்த வரை அவன் நன்றாகத் தான் கார் ஓட்டினான். அந்த கணநேரம் என்ன நிகழ்ந்தது என்று அவனின் மூளையில் இல்லை. யோசிக்கையில் தலை வலி அவனை ஆட்கொண்டது. ( வானிலை மாறும் )
 
Antha vaai pesa mudiyatha ponnuthan heroinaa:unsure::unsure::unsure:
Inthiranala avvalavu seekkiram athilirunthu veli vara mudiyuma???
அது இப்போதைக்கு சொல்ல முடியாதே?� கண்டிப்பா முடியாது... நன்றி?
 
Top