Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை!-4

Advertisement

praveenraj

Well-known member
Member
லண்டனிலிருந்து வந்த விமானத்தில் தரையிறங்கினான் கதிரவன். அவன் இமயவர்மனிடமே கேட்டுவிட்டு தான் நேரடியாக சென்னைக்கு வந்திறங்கிவிட்டான். இந்திரன் கண்விழித்துவிட்டான் என்று கேட்டவுடனேவே இந்தியா வந்திருக்க வேண்டியவன், சில வேலையின் காரணங்களினால் அவனால் இயலவில்லை. இயலவில்லை என்பதைக் காட்டிலும் இதும் ஒருவகையில் அவனின் நண்பனுக்கு காட்டும் விசுவாசம் தான். பின்னே தொழில் வேலை இவைதானே அவனின் மூச்சு. அவனுக்குத் தெரிந்து பிசினெஸ் என்று வந்துவிட்டால் இந்திரனுக்கு மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். அது அவனுக்கு மட்டுமில்லை அவனைச் சார்ந்தவர்களுக்கும் அதே நிலை தான். காலம் எதற்காகவும் நிற்காது. அது யாருக்காகவும் பொறுக்காது. அது பாட்டுற்கு ஓடிக்கொண்டே தான் இருக்கும். இதன் மீது இந்திரனுக்கு ஒரு அபரிதமான நம்பிக்கை உண்டு. அப்பேர்பட்டவன் பேச்சு இன்றி ஒரு ஜடம் போலவும் ஏன் ஒரு பிணம் போலவும் இருப்பதைக் காணப் பிடிக்காதவன் இந்தியாவில் இருக்க விரும்பாமல் லண்டனிலே தங்கிவிட்டான். அதுமட்டுமில்லை இதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. அதைப் பற்றிப் பிறகு பார்க்கலாம். அதற்கு குற்றயுணர்ச்சி பழிவாங்கல் என்று வேறு சொல்லாடல்கள் உண்டு. அவனை வரவேற்க வந்த ஜாகுவார் நேராக ஈசியார் சாலையில் இருக்கும் அந்த பிரம்மாண்ட மாளிகை போன்ற வீட்டிற்குள் நுழைந்தது.
'ஐ ஹவ் ரீச்டு சென்னை. ஆல் இஸ் கோயிங் வெல்' (சென்னைக்கு வந்துவிட்டேன். எல்லாம் நல்ல படியாகவே போகிறது) என்று ஒரு குறுஞ்செய்தியை தன் செல்லிலிருந்து தட்டியவன் வண்டி நின்றதை உணர்ந்து இறங்கினான்.
இறங்கியவன் சுற்றி இருக்கும் அந்தப் பெரிய லானில் யாராவது இருக்கிறார்களா என்று பார்வையிலே துளாவியவன் அப்படியே வீட்டிற்குள் நுழைந்தான். தன்னை அவ்வீட்டின் செக்கூரிட்டி ஒரு மாதிரி பார்ப்பதைக் கண்டும் காணாததைப் போல் சென்றான். வெளியே இருந்த சில பாடி கார்ட்ஸின் கண்களும் அவனையே மொய்த்துக்கொண்டிருந்தது.
அவனைக் கண்டதும் அங்கே சுற்றியிருந்த டாபர் மேனும் ஜெர்மன் ஷெப்பர்டும் குரைக்க இதை எதிர்பாராதவனின் முகத்தில் சிறு அச்சம் வந்து மறைந்தது. நல்ல வேளையாக அவன் கண்களில் கூலர்ஸ் அணிந்திருந்ததால் அது அங்கிருந்த பாடிகார்டஸ்க்கு தெரியாமல் போனது என்று அவன் நினைத்திருக்கக் கூடும். அவர்கள் வெல் ட்ரைனிட் எக்ஸ் மிலிட்டரி ஆபிஸேர்ஸ் என்று அவனுக்குத் தெரியாதே! ஒருவனின் நடையை வைத்தே அவனின் எண்ணங்கள் செயல்கள் முதலிய அனைத்தையும் எடைபோட்டுவிடார்கள் என்று அவன் அறிந்திருக்கவில்லை பாவம்.
கதிரவனைப் பார்த்ததுமே சகுந்தலா உளமாற வரவேற்க, உள்ளே வந்தவன் முதலில் பெரியவர்களின் ஆசியைப் பெற்றான்.
'எப்படி இருக்கிறாய்? வாழ்க்கை எப்படிப் போகிறது? லண்டன் பிசினெஸின் நிலை?' என்று பேச்சு ஒன்றின்பின் ஒன்றாக வர இறுதியில் இந்திரன் மீது விழுந்தது.
கனத்த மௌனம் நீடிக்க கதிரவனே அதற்கொரு முற்றுப்புள்ளி வைத்தான்.
"நான் எவ்வளவு சந்தோஷப் பட்டேன் தெரியுமா?" என்றவனின் மனமெங்கும் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது.
"எங்க கடவுள் என்னை ஒரேயடியாக படுக்க வைத்து விடுவானோ முடக்கிவிடுவானோனு நினைத்தேன். நல்ல வேளை கொஞ்சமே கொஞ்சம் கண்ணைத் திறந்திருக்கான்..." Eஎன்றார் இமையவர்மன்.
"ஐயோ அங்கிள்! உங்க நல்ல மனசுக்கு அப்படியெல்லாம் ஆகாது..."
ஏனோ இதுவரை நன்றாக இருந்தவர் ஒரு விரக்திப் புன்னகை சிந்த,
பேச்சை மாற்றும் விதமாக,"ஆமா அங்கிள் இந்திரன் இப்போ எங்க அட்டகட்டில தானே இருக்கான்?" என்று செய்தி அறிந்துகொள்ளும் பொருட்டு வினவினான் கதிரவன்.
"ஆமாப்பா. அங்க தான் இருக்கான்" என்றவர் இருக்கானில் ஒரு அழுத்தம் தந்தார். அது வெறும் பெயருக்காக உயிரோடு இருக்கிறான். மற்றப்படி ஒன்றுமில்லை என்று பொருள்.
"எப்படி இருக்கான்?"
அந்த வீடியோவை போட்டுக்காட்டினார்கள். அதில் கதிரவனுக்குத் தோன்றிய உணர்வுகளை இன்னதென்று வார்த்தைகளால் வரையறுக்க முடியவில்லை.
கொஞ்சம் மௌனம் நீடிக்க,"சரிம்மா நான் அப்படியே ஊருக்குக் கிளம்பறேன்..." என்ற கதிரிடம்,
"வந்தேன்னாப் பாரு! அதெல்லாம் ஒன்னும் வேணாம் இங்கேயே இரு கதிரா" என்றார் சகுந்தலா.
"இல்லம்மா. நான் வருவேன்னு அம்மா ரொம்ப எதிர்பார்த்திருப்பாங்க..."
"அப்போ நான் அம்மா இல்லையா?"
"ஐயோ! நான் அப்படி சொல்ல வரல..."
"சகு, அவனை விடு. அவன் போகட்டும்..." என்றார் இமையவர்மன்.
"அங்கிள்..."
"சொல்லு கதிரா?"
"லேகா அப்பா?"
மனம் உடைந்தவர்,"யு எஸ்ல போய் செட்டில் ஆகிட்டான்."
அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
"கதிரா, எனக்கு நீ ஒரு உதவி பண்ணணுமே?"
"என்ன அங்கிள் இது உதவினு எல்லாம் பெரிய பெரிய வார்த்தை பேசுறீங்க? ஜஸ்ட் ஆர்டர் மீ..."(உத்தரவு இடுங்கள்!)
"அது எப்படியாவது நீ அவனைத் திரும்ப பிசினஸ்கு கொண்டுவரனும்..."
அவன் அவரைப் பார்க்க,
"என்னடா இவனுக்கு பையனைக் காட்டிலும் பிசினஸ் தான் முக்கியமானு நெனைக்கிறீயா கதிரா?" என்று வெற்றுப் புன்னகை சிந்தினார்.
"ஐயோ! அப்படியெல்லாம் இல்லை அங்கிள். அதும் உங்களைப் போய்..."
"எனக்கு வேற வழி தெரியில கதிரா..."
"அங்கிள், நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டிங்களே?"
"சொல்லுப்பா. நீயும் என் புள்ளை மாதிரி தான்..."
"அது... அவனை இப்போதைக்கு அப்படியே விடுங்க..."
"என்னப்பா?"
"உங்க கஷ்டம் புரியுது. ஆனாலும் அவன் செல்ப் ரியலைசேஷன் ஆகணும். அவனைப் பத்தி உங்களுக்கு நான் சொல்லித் தான் தெரியணும்னு அவசியம் இல்லை..."
"அவன் தினம் தினம் வேதனையில சாவுறான் கதிரா. இங்க பாரு..." என்றவர் கேமரா ஆன் செய்ய, அங்கே அவன் இன்னும் எழாமல் பெட்டிலே படுத்துக்கொண்டிருந்தான்.
"அங்கிள், டைம் இப்போ ஒன்பதுக்கு மேல ஆகுது. அவன் இன்னும்?"
"அவன் வெறும் உயிரோட மட்டும் தான் இருக்கான் டா"
கதிரவன் அவனைப் பார்த்தான்.
அவன் அந்த உடைகளையே மேலும் மேலும் இறுக்கி அணைத்து கண் மூடியிருந்தான். அவன் உறங்கவில்லை என்றும் அவன் விழித்துக்கொண்டு தான் இருக்கிறான் என்றும் அதிலே தெரிந்தது.
"ஆளைப்பாரு எப்படி இருக்கான்னு? நல்லா சதையெல்லாம் போட்டு... ரொம்ப குண்டாயிட்டான். அவன் எவ்வளவு ஹெல்த் கான்சியய்ஸ்னு உனக்குத் தான் தெரியுமே?"
"விடுங்க அங்கிள். அவன் இழப்பு பெரிது..." என்று அவன் முடிக்கும் முன்னே,
"எங்களைய விடவா?" என்றார் சகுந்தலா.
"நிச்சயமாக அம்மா. உங்களுக்கு சிந்து மட்டும் தான். ஆனா அவனுக்கு சிந்து, ஸ்ரீ ரெண்டு பேரு..."
"எனக்கு ரெண்டு இல்ல மூணு. இவனையும் சேர்த்து..." என்றவர் அழுதார்.
கூடவே இமையவர்மனும் கண்ணீர் சிந்த,
"ஐயோ அம்மா, அங்கிள் அழாதீங்க ப்ளீஸ். எனக்கு ஒரு மாதிரி இருக்கு..."
"எனக்கு அவன் இதிலிருந்து வெளியே வரனும் கதிரா. அது போதும்..."
"அங்கிள் அது எப்படினு கண்டு..." (அவன் எதைக் கேட்கவருகிறான் என்று உணர்ந்தவர்) கண்களால் ஜாடை செய்ய அவன் அமைதியானான்.
"விதி" என்று சகுந்தலா சொல்ல இருவரும் திருதிருவென முழித்தனர்.
"நான் வேணுனா அட்டகட்டி போய்ப் பார்க்கட்டுமா?"
"நல்லதுப்பா நீ போன அவன் மாறுவான்..." - சகு
"இப்ப வேணாம் கதிரா..."
"அங்கிள்?"
"அவனா வெளிய வரணும். அப்போதான் 'வாழ்வான்'. புரியுதா?"
"இல்லைங்க கதிர் வேணுனா ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரட்டுமே..." என்றார் சகுந்தலா.
"வேணாம். வேணாம் சகு. லெட் ஹிம் கம் அவுட் ஆப் இட்..."
"அங்கிள் கமலேஷ்?"
"அவன் தான்பா எனக்கு இப்போ ஒரே ஆறுதல். துறுதுறுனு கவலையே இல்லாம இருந்தான். இன்னைக்கு எல்லாமே அவன் தான் பார்த்துக்கறான்..."
"விடுங்க அங்கிள். அதுதான் நானும் வந்துட்டேனே. நானும் கூடப் போய் அவனைப் பார்த்துக்கறேன்..."
"சரிப்பா. அவன் இதுக்கு புதுசு. கொஞ்சம் நீ தான் கூடவே இருந்து நெளிவு சுழிவு எல்லாம் சொல்லிதரனும்..."
"இதை வேற நீங்க எனக்குத் தனியா சொல்லனுமா? விடுங்க நானே பார்த்துக்கறேன்..."
எழுந்தவன் திரும்ப அங்கே சுவற்றில் இருந்த சிந்துவைப் பார்த்தான். ஏனோ அவனையும் அறியாமல் அழுகை வந்தது.
சகுந்தலா, இமையவர்மன் இப்போதெல்லாம் அழுவதில்லை. பின்னே கண்ணீர் எல்லாம் கரைந்து வற்றிவிட்டதே? மேலும் இப்போது அவர்களின் உண்மையான வருத்தம் கோவம் எல்லாம் அவளின் தீரன் மீதுதான்.
ஏனோ அந்தப் புகைப்படத்தையே உற்றுப் பார்த்தவன் மனம் நடுங்க, தண்ணீர் கூடப் பருகாமல் கதிரவன் வெளியே வந்தான்.
'ஆல் சக்சஸ். ஐ வில் டேக் தி ரெஸ்பான்சிபிலிட்டி ஆப் பிசினஸ் சூனேர்.'(எல்லாம் வெற்றி! பிசினஸ் பொறுப்பை நான் விரைவில் ஏற்பேன்!) என்று மீண்டுமொரு குறுந்செய்தியைத் தட்டினான்.
'டன்!' என்று பதில் மெஸேஜ் வந்தது.
அவன் வெளியே வந்து தன்னுடைய வீட்டிற்குச் சென்றான்.
என்னதான் அவன் பெங்களுரு என்றாலும் இங்கே அவனுக்கு ஒரு வீடு உள்ளது.
தங்கள் மகன் எழுவான் என்ற நம்பிக்கையில் அவர்கள் மீண்டும் வீடியோவையே பார்த்துக்கொண்டிருந்தனர். கடந்த இரு தினங்களாக அவர்களுக்கு இதே வேலையாக போய்விட்டது. இரவில் கூட அடிக்கடி அவனைக் கண்காணித்துக்கொண்டே இருந்தனர்.
என்ன நினைத்தானோ திடுமென எழுந்தவன் பெட்டிலிருந்து இறங்கி குளிக்கச் சென்றான்.
தலையில் தண்ணீர் விழுந்தாலும் மனமும் சிந்தையும் இந்திரனுக்கு எங்கோ இருந்தது. கோவம் பீறிட்டு வர ஓங்கி கையைச் சுவற்றில் குத்தினான். வலிக்கவும் கீழே அப்படியே அமர்ந்தான்.
அப்படியே எவ்வளவு நேரம் என்றெல்லாம் தெரியவில்லை தலையில் தண்ணீர் நிற்காமல் கொட்டிக்கொண்டே இருக்க அப்படியே அமர்ந்திருந்தான். எழுந்தவன் உடைமாற்றி கீழே வந்து சாப்பாட்டு மேஜையில் அமரப்போனவன் திடீரென மாறி சாப்பாட்டு தட்டை எடுத்தவன் ஹாலில் இருக்கும் அந்த சோஃபா மீது அமர்ந்தான்.
"சிந்துமாவும் இப்படித் தான்..." என்று அவரையும் அறியாமல் சுமதி அம்மா வார்த்தையை விட கையிலிருந்த உணவு மீண்டும் தட்டிலே விழுந்தது. அதற்கு மேலும் சாப்பாடு தொண்டைக்குழியில் இறங்குமா என்ன? அப்படியே எழுந்தவனைப் பார்த்து,
"தம்பி தம்பி... தெரியாம உளறிட்டேன். சாப்பிட்டு..."
அவன் வெளியே வந்துவிட அங்கிருந்து கீழே எஸ்டேட்டை பார்த்தான். ஏனோ இவ்வளவு கஷ்டத்திலும் நேற்று சந்தோசமாய் எவ்வித கவலையுமில்லாமல் மழையில் ஆடிய அந்த வண்ணமயிலின் நினைவு வர, 'யார் அவள்? எங்கே இருப்பாள்? எப்படி இருப்பாள்?' என்று அறிந்துகொள்ள அவன் மனம் முயன்றது மட்டும் நிச்சயம். அவனுக்கு திடீரென்று இந்த எண்ணம் வந்தது ஏனென்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவளைப்பற்றி அறிய ஆவல் மட்டும் மிகுதியாக இருந்தது.
அப்படியே மனம் போனப் போக்கில் பொடிநடையாக நடக்கத் துவங்கினான்.
"சார் சார் சார்..." என்ற அவனின் பீம் பாய்ஸ் குரல் எதுவும் அவன் செவிகளில் விழவேயில்லை. அவனையே பின்தொடர்ந்து வந்தவர்களில் ஒருவன் அவனின் கையைப் பிடிக்கவும் திரும்பியவனின் முகம் கனலாய்ச் சிவந்திருந்தது. கோவமாகவே அவன் கையைப் பிடித்திருந்த கையைப் பார்க்க அந்த பாடி கார்டு கையை எடுத்துக்கொண்டார். அவன் முன்னேறி நடந்தான்.
"சார் சார் ப்ளீஸ்..." என்று அவன் மீண்டும் பின்தொடர,
திரும்பியவன்,"என்னையை கொஞ்சம் நிம்மதியாவாவது இருக்க விடுங்களேன் ப்ளீஸ்..." என்றான்.
அந்தச் சொல்லும் அந்தக் குரலில் ஒலித்த தொனியும் அதில் தெரிந்த ஒரு கெஞ்சலும் ஏனோ அங்கிருந்தவர்களை ஒரு மாதிரி கட்டிப்போட அவர்கள் அப்படியே நின்றனர். அவனோ அந்த ஒற்றையடிப் பாதையில் கீழே இறங்கினான்.
**********************
அந்த மாதத்தின் பேங்க் ஸ்டேட்மென்ட் வந்திருந்தது. அது சந்தான பாரதியின் பெர்சனல் அக்கௌன்ட் ஸ்டேட்மென்ட். அதிலிருந்து பல லட்சங்கள் எடுக்கப்பட்டிருந்தது. அவரின் நாமினி (nominee) தான் அத்தனையும் வித்டிரா செய்து உள்ளார் என்று அறிந்தவன்,'இத்தனை பெரிய அமௌன்ட் எதற்கு எடுக்கப்பட்டது?' என்று அவரிடம் கேட்கவேண்டும் என்ற எண்ணம் குமரனுக்கு வந்தது. ஆனால் எப்படிப் கேட்பது? என்ன சொல்லிக் கேட்பது? என்று தவித்தான். பின்னே பணம் எடுப்பது அவரின் மகளாச்சே? அவனால் ஒன்றும் செய்ய முடியாது என்று கலங்கினான். அன்றிலிருந்து இன்றுவரை தன்னிடம் பெரியதாக ஒன்றும் பிடிக்கொடுக்காமல் இருக்கும் அவளிடம் என்ன பேசுவது என்று குழம்பினான். ஒருமுறை சந்தான பாரதியே பேச்சுவாக்கில்,"என் பொண்ணை உன்ன மாதிரி ஒரு நல்லவனுக்கு தான் குமரா கட்டிக்கொடுக்கணும்..." என்றுசொன்னார். அவர் எதை மனதில் வைத்து அப்படிச் சொன்னார் என்று அவனுக்கு இன்றுவரை புரியவே இல்லை. இவனுக்கும் அவள் மீது பெரிய ஈடுபாடு எல்லாம் இல்லை தான். வெறும் இரண்டே முறை தான் இதுவரை அவளிடம் திருகுமரன் பேசியுள்ளான். இவ்வளவு நல்ல மனிதனின் மகளா இவள் என்னும் அளவிற்கு தான் அவளின் நடவடிக்கைகள் இதுவரை இருந்திருக்கிறது. அவளை அருகிலிருந்து அவன் கவனித்து இல்லை தான். ஆனால் இப்போதெல்லாம் அடிக்கடி பல லட்சங்கள் அவரின் அக்கௌண்டில் இருந்து எடுக்கப்படுகிறது. என்ன தான் இவ்வளவு பணமிருந்தாலும் பாரதி ஐயா அவரின் சொந்த செலவிற்கென்று மிகச் சொற்பமே எடுத்துக்கொள்வார். அதும் அவ்வளவு சிக்கனமாய்ச் செலவு செய்வார். அவரையே ஒருமுறை கண்கொட்டாமல் பார்த்தவனிடம்,"என்ன குமரா அப்படிப் பார்க்கற? என்னடா இவன் இவ்வளவு கஞ்சனா இருக்கானேனு யோசிக்கிறியா?" என்று சிரித்தபடியே அவர் வினவ இவனோ ஆம் இல்லை என்று இருபக்கமும் தலையை ஆட்ட,"நான் தேவையான செலவை மட்டும் தான் செய்யுறேன். ஆடம்பரம் தான் செய்யுறதில்லை. பிளைட்ல கூட நான் இதுவரை பிசினஸ் கிளாஸ்ல பயணிச்சதே இல்ல. எனக்கு எகனாமி க்ளாஸ் போதும். அதுமாதிரி தான். வா..." என்று அழைத்துச் சென்றார்.
இந்த மாதமும் பல லட்சங்கள் அவரின் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது. அடுத்த முறை தன்னிடம் பேசினால் கண்டிப்பாக இதைப் பற்றிக் கேட்கவேண்டும் என்று குமரன் யோசனையில் இருக்க அப்போது தான் அவனுக்கு அழைப்பு வந்தது. பார்த்தால் மகேந்திரன் தான் அழைத்திருந்தான். எடுத்தவன்,"சொல்லுடா..." என்றான். அவனுடைய சோகமான குரலைக் கண்டவன்,
"என்ன டா வாய்சே சரியில்லை என்ன ஆச்சு குமரா?"
தன்னோடே வளர்ந்தவன் மற்றும் தனக்கு என்று இருக்கும் உறவு என்று குமரனுக்கு இப்படி எல்லாமுமாய் இருப்பது இவன் ஒருவன் தானே? அவனிடம் பெரும்பாலும் குமரன் எதையும் மறைக்க மாட்டான்.
"அதுடா மஹேந்திரா..." என்ற குமரன் தன்னுடைய குழப்பம் அனைத்தையும் சொன்னான்.
"இவ்வளவு தானா? டேய் நல்லா பாரு, இது நம்ம ப்ரொபெஸரோட சொத்து. இதை அவர் பொண்ணு தானே கேட்குது? கொடு. நாம வெறும் கார்டியன் தான். ஏன் டா குமரா உனக்கு ஏதும் இந்த சொத்து மேல ஆசை இருக்கா?" என்று அதிர்ச்சியாகவே கேட்டான்.
"என்ன வார்தைடா பேசுற? கேவலம் இந்தப் பணத்துக்கா நான் ஆசை படுவேன்? நான் என்ன தான் இந்த ஹாஸ்பிடலோட எம்டியா இருந்தாலும் இதுவரை ஒரு டாக்டருக்கான சம்பளம் மட்டும் தான் எடுத்திட்டு இருக்கேன். சில விஷயங்கள் கண்ணு முன்னாடியே தவறா நடந்தும் நம்மால் எதையுமே செய்ய முடியலையேங்கற ஆற்றாமை தான் மஹி..."
"நாம அதுக்கென்ன பண்ண முடியும் சொல்லு?"
"டேய் நீ வேணுனா ஒருமுறை அந்தப் பொண்ணு கிட்டப் பேசிப் பாருடா..." என்று குமரன் முடிக்கும் முன்னே,
"எப்பா சாமி ஆளை விடு. நான் இந்த வம்புக்கே வரல. நீயாச்சும் உன் ஹாஸ்ப்பிடலாச்சு அந்தப் பொண்ணாச்சு..." என்றவன் வேறு கதை பேசிவிட்டு வைத்தான் மகேந்திரன்.
****************
அப்படியே கண்மூடியே படுத்திருந்தான் இந்திரன். அவன் எப்போது விழிப்பான் என்று அனைவரும் ஆவலாகவே காத்துக்கொண்டிருந்தனர். சுமதியம்மாவும் ராசப்பனும் அருகிலே கண்களில் மிரட்சியுடன் இருக்க அருகே பீம் பாய்ஸ் எல்லோரும் வாங்கிய திட்டு மற்றும் கடின வசை சொற்களால் அமைதியாக வெளியே இருந்தனர்.
சகுந்தலாவும் இமையவர்மனும் அந்த அறையையே வீடியோவில் பார்த்துக்கொண்டிருந்தனர். தங்கள் மகன் விழிக்கமாட்டானா என்று ஏங்கி எழில் வேந்தனையே பார்த்துக்கொண்டிருந்தனர். எழிலோ அலைபேசியில் அங்கே அட்டகட்டியில் அனுப்பி வைக்கப்பட்ட மருத்துவ குழு தலைவர் பாசிலை என்ன நடந்தது என்று கேட்டுக்கொண்டிருந்தார். அவரும் அவனை நன்றாகவே பரிசோதித்து விட்டு, எதுவோ இல்லை யாரோ அவன் மண்டையில் தாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். ஏனெனில் பின்மண்டையில் சற்று பலமான கட்டையைக் கொண்டு தாக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது என்றும் ஆனால் ரத்தம் எதுவும் வராததனால் ஒருவேளை ரத்தம் கட்டியிருக்கலாம் என்றும் அதனால் உடனடியாக ஸ்கேன் செய்ய வேண்டுமெனவும் விளக்கிக்கொண்டிருந்தார்.
பாசில் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த எழில் வேந்தன் உடனடியாக அந்த ஸ்கேன் எகுய்ப்மெண்டை அங்கே அனுப்பிவைக்க வேண்டினார். இந்த நிலையில் அங்கிருந்து அழைத்து வரவேண்டாம் என்றும் இதனால் அவனுக்கு மேலும் மனதளவில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்றும் கவலைக்கொண்டார். அதைக் காட்டிலும் இப்போது இங்கே அழும் சகுந்தலா மற்றும் இமையவர்மன் இருவரையும் எவ்வாறு சமாதானம் செய்வதென்று எழில் தவித்தார்.
"அண்ணா, என் பையனுக்கு ஒன்னுமில்ல தானே? அவன் அவன் கண் முழிச்சிடுவான் தானே?" என்றார் சகுந்தலா.
"ஒன்னும் இல்ல சகுந்தலா. சின்னதா அடிபட்டிருக்கு அவ்வளவு தான். அழாத..." என்று அவரைத் தேற்றினார் எழில்.
"அண்ணா அவனை உடனே இங்கேயே கூட்டிட்டு வந்திடலாம் அண்ணா, எனக்கு பயமா இருக்கு..."
"பயப்படாத சகுந்தலா. இந்திரன் கண் முழிச்சிடுவான். கொஞ்சம் பொறு..."
"எனக்கு என்னமோ பயமா இருக்கு அண்ணா..."
"என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? சொல்லு. அப்படி எதாவது ஆபத்துனா நான் இப்போ உன்கிட்ட இப்படிப் பொறுமையா பேசிட்டு இருப்பேனா? ஏதோ மரத்துல இருந்து கிளை தலையில விழுந்ததுனாலும் கூடவே சரியான நேரத்துல முதலுதவி கொடுத்துனாலும் எந்த பயமும் இல்ல..."
இமையவர்மனின் முகமோ இதுவரை இருந்த கவலை ரேகைகள் மறைந்து முகம் உக்கிரமானது. ஏற்கனவே அவன் மயங்கிவிட்டான் என்று தெரிந்ததுமே அங்கிருந்த பீம் பாய்ஸ், பாடி கார்ட்ஸ் எல்லோரையும் வாங்கு வாங்குவென வாங்கிட்டார். சின்ன அடி என்று சொன்னதால் தான் அவர்களை சும்மா விட்டார். இருந்தும் அவன் இன்னும் விழிக்காததாலும் மேலும் அவன் மண்டையில் கிளை விழுந்தது என்பதையும் அவரால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
அதுவரை யோசனையில் இருந்தவர் வேகமாக எழுந்து அங்கிருக்கும் தன் நம்பகமான ஆளான ராஜேந்தரேனை அழைத்தார்.
நம்பரை பார்த்தவர் ராஜேந்திரன் பயபக்தியோடு,"சொல்லுங்க ஐயா" என்றதும்,
"என்னடா புடுங்கிட்டு இருக்கீங்க? உங்களை எதுக்கு வேலைக்கு வெச்சேன்? உன்ன எதுக்கு அங்க அனுப்பினேன்?" என்று காச்மூச்சென கத்தினார்.
"ஐயா தெரியாம நடந்து..."
"வாயை மூடு ராஜா. தெரியாம நடந்ததா இல்லை தெரிஞ்சி பிளான் பண்ணி நடந்ததான்னு எனக்கு இன்னும் ரெண்டு நாளுல எல்லாம் தெரியணும். மவனே என் சந்தேகம் மட்டும் சரியாச்சி, இதுவரை நீங்க யாரும் பார்க்காத இமையவர்மனை பார்க்க நேரும். ஜாக்கிரதை..." என்று கர்ஜித்தார்.
"ஐயா. நான் பார்த்துக்கறேன் ஐயா. நாங்களும் கூட வரோம்னு இவனுங்களும் எவ்வளவோ சொல்லியிருக்கானுங்க. தம்பி தான் ஒருமாதிரி உருக்கமான பேசி எல்லோருடைய வாயையும் அடைச்சிடுச்சாம்..." என்று தயங்கியவாறே ராஜேந்திரன் சொல்ல,
இதுவரை கோவத்தில் தாம் தூமென குதித்த இமையவர்மன் ராஜேந்திரன் சொன்னதைக் கேட்டு சற்று அமைதி காத்தார். "என்ன சொல்ற ராஜா?"
"ஆமாங்கய்யா, இத்தனை வருஷத்துல தம்பியை இப்படிப் பேசி நான் பார்த்ததேயில்லை. ரொம்ப மனம் வருந்தி பணிவா பேசுச்சுங்கையா..."
"சரி ராஜா அநேகமா நாங்க நாளைக்கு வந்தாலும் வருவோம். டாக்டர் ஏதோ ஸ்கேன் செய்யணும்னு மெஷின் கேட்டாரு. சாயுங்காலும் ஹெலிகாப்டர்ல வரும். கொஞ்சம் பார்த்து அங்க வேண்டியதை செய். புரியுதா?"
"சரிங்கய்யா..."
"இனிமேலாவது அந்த தடியனுங்களைப் பார்த்து கவனமா இருக்கச் சொல்லு..."
"ஆங்கையா. கண்டிப்பா இனிமேல் இப்படி ஆகாது..."
"டேய் ராஜா, ஆமா யாரு உங்களுக்கு முதல தகவல் சொன்னது?"
"ஐயா, நான் வந்ததுமே இந்த மாதிரி தம்பி ஒத்தையடி பாதையில போச்சுன்னு சொன்னானுங்க. நான் உடனே பின்னாலே போனேனுங்க. அப்போ யாரோ ஒரு புள்ள தான் என்னைப் பார்த்து தம்பி விழுந்திருந்த இடத்துக்குக் கூட்டிட்டுப் போச்சு..."
"புள்ளையா? யாரது?"
"பேர் தெரியலைங்க ஐயா. ஆனா அந்தப் பொண்ணு வாயையே தொறக்குல..."
"என்னது வாயைத் திறக்கலையா? பின்ன எப்படி?"
"அது ஊமை பாஷையிலே தானுங்க பேசுச்சு, கையை கையை காத்துல ஆட்டி..."
"யாரது புதுசா ஊமை பொண்ணு? வயசென்ன இருக்கும்?"
"ஒரு 20,25 இருகுங்கய்யா..."
"டேய் இருவதா இருவத்தஞ்சா?"
"அது கவனிக்கல..."
"முட்டாள் முட்டாள் உன்னையெல்லாம் நம்பி அனுப்பிச்சேன் பாரு, என்னைச் சொல்லணும்..."
"ஐயா அவசரத்துல ஞாபகமில்லை, ஆனா கல்யாணம் ஆகாத புள்ளை தானுங்க"
"சரி சரி அது யாருனு விசாரிச்சு வை. நான் வந்ததும் பார்க்கணும். சரியா?"
"சரிங்கய்யா. நிச்சயமா..."
"நான் வெக்கிறேன்... கவனமா இருக்கனும்..." என்றவர் அழைப்பைத் துண்டிக்க,
இதுவரை மூச்சை அடக்கியே பேசிய ராஜேந்திரன் சற்று மூச்சை இழுத்து விட்டான். திரும்பி நடந்தவர் வெளியே தேவுடு காத்திருந்த ஒருவனைக் கண்டு,"எல்லாம் உங்களால தான்டா நான் திட்டுவாங்குறேன். இங்க பாருங்க ஐயா நாளைக்கு வருவாரு ஒழுங்கா நடந்துக்கோங்க. முடியலையா வேலையை விட்டு கூட ஓடிடுங்க. சும்மா என் புருஷனும் கச்சேரிக்குப் போறேன்னு கணக்கா இருக்காதீங்க..." என்று அங்கே இமையவர்மனிடம் வாங்கிய திட்டுக்களை இங்கே அவனுக்கு கொடுத்துக்கொண்டிருந்தார் ராஜேந்திரன். அவனும் ராஜேந்திரன் திட்டியதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தான்.(வானிலை மாறும்)
 
Enna bro...ஒரே suspense ah கொண்டு போறீங்க .....:rolleyes::rolleyes::rolleyes: :unsure: :unsure: :unsure:
ஓ அப்போ சஸ்பென்ஸ் feel தருதா? இந்தக் கதையே ஒரு சஸ்பென்ஸ் கதை தானே? சொல்றேன்... நன்றி???
 
புதுசா வந்த கதிரவன் நல்லவனா கெட்டவனா :unsure:
ரொம்ப நாளைக்கெல்லாம் சஸ்பென்ஸ் தாங்க முடியாது கொஞ்சம் சீக்கிரம் சொல்லிடுங்க ப்ளீஸ் :p:p??
 
புதுசா வந்த கதிரவன் நல்லவனா கெட்டவனா :unsure:
ரொம்ப நாளைக்கெல்லாம் சஸ்பென்ஸ் தாங்க முடியாது கொஞ்சம் சீக்கிரம் சொல்லிடுங்க ப்ளீஸ் :p:p??
அது இப்போதைக்கு சொல்ல முடியாது.? இன்னும் இருபத்தி ரெண்டு அல்லது இருபத்தி மூன்று அத்தியாயத்துல கதை முடிஞ்சிடும். இன்னும் ஒரு பத்து எபிசொட் இதுமாதிரி ஸ்லோவா போகும். அதன்பிறகு வேகமெடுக்கும். அப்போ எல்லாம் புரியும்??�� நன்றி...
 
கதை ஸ்லோவா போகலை,,,,மர்மமா போகுது...
கதிரவன் வில்லானா இருப்பானோ....?
இன்னொரு டிராக் சந்தானபாரதி,,,,
காமன் எதிரியோ...?
 
Top