Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் ❤️‍🔥 2

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் ❤️‍🔥 2


"அம்பலத்து தோன்றும்
அதிசயம் நீயோ....!!!"


கிருஷ்ண லீலா நடைபெறும் அதே கட்டிட வளாகத்தின் பின்புறம் ஏழடுக்கில் எட்டாது நின்றது அந்த கட்டிடம்.

அதன் வாயில் தோரணம் எல்லாம் கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில் இளம் வண்ணங்களால் அலங்கரிக்க பட்டிருந்தது.


இதமாய் வீசும் தென்றல் போல பதமாய் மனதை கவரும் வகையில் அவ்விடத்தின் அழகு இருந்தது.அங்கே பாரம்பரிய நகைகள் வடிவமைப்பு கண்காட்சி மற்றும் ஆபரணம் சூடிய அழகிகள் அணிவகுப்பும் நடைபெற உள்ளது.

அந்த கட்டிடத்தின் வாயில் பிருந்தாவன கட்டிடத்தின் வாயிலை கடந்து தான் நடந்து வர வேண்டும் அவ்வாறு வடிவமைக்க பட்டிருந்தது.

மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் முன்னால் இரண்டும் பின்னால் இரண்டும் புடை சூழ
நடுவே நடுநாயகமாக வந்திருந்தது ரோல்ஸ் ராய்ஸ் போட் டெயில்.

உலகின் விலை உயர்ந்த கார்களில் முதலாக அரசனாக இருக்கும் கார் வெண்ணையாய் வழுக்கிக் கொண்டுவர.

வாயிலில் வந்து தன் நகர்வை நிறுத்தியது.

உள்ளிருந்தவன் இறங்கும் முன் மற்ற கார்களில் இருந்து இறங்கினர் பாதுகாவலர் குழு.

இறங்கி சுற்றத்தை நன்கு ஆராய்ந்து ஆபத்து ஏதும் என்றான பிறகுதான் காரின் கதவை திறந்து விட்டு இரண்டடி நகர்ந்து நின்றார் தலைமை பாதுகாவலர்.

திறந்த கதவின் வழியே பிராடா ஷூவின் பளபளப்பு மிளிர நீண்ட கால்கள் நீண்டு தரையில் பதிய. சீசர் அட்டோலினி சூட்டில் கைகளில் ரோலக்ஸ் ஜஸ்ட் டேட் தன் இருப்பை உரைக்க மஞ்சள் தங்கத்தில் லிண்டா ஃபாரோ மேட்டிஸ் ஏவியேட்டர் சன்கிளாஸ் அவன் இறுகிய முகத்திற்கு மேலும் இறுக்கம் கூட்டும் கண்களை தனக்கு பின்னால் மறைத்து நின்றது.


ஆறடி இரண்டு அங்குலம் கொண்ட ஆண்மகன் அவன் இறங்கி தானும் ஒரு முறை சுற்றத்தை பார்த்து காருக்குள் இருக்கும் யாருக்கோ 'இறங்கலாம்' எனும் விதமாய் சைகை காண்பிக்க.

'குசி' வகை காலணியில் முன்னால் இறங்கியவனின் நகலாய் 'ஜோஹன் ' குளிர் கண்ணாடி அணிந்து இறங்கினான் மூன்று வயதை நெருங்கும் சிறுவன்.

வயது மூன்றை நெருங்கினாலும் பார்ப்பதற்கு ஐந்து வயது சிறுவனாக தெரிந்தான்.

கண்களில் துள்ளல் நிறைவதற்கு பதிலாக கூர்மை விரவிக் கிடந்தது.

"கம் ஆன் அகரன்" என்ற தந்தையின் கணீர் குரலுக்கு

"ஓகே ப்பா" என்றவாறு இறங்கினான் அகர மகிழ்வன்.(மகிழ்வின் முதல்வன்)

மகனுக்கு இப்பெயரை ஆழ்ந்து தேடி சிந்தித்து வைத்தான் தந்தை.பிள்ளை என்றும் மகிழ்வில் முதன்மை பெறவேண்டும் என்று.

தந்தை தன் வேக எட்டுக்களை வைக்க; தந்தைக்கு ஈடாக தானும் தன் எட்டுக்களை நீட்டி வைத்தான் அகரன்.

உள்ளே செல்வதற்கான விழாவின் அழைப்பிதழ் காண்பிக்கப்பட்டு நகைகளின் கண்காட்சி பகுதிக்குள் நுழைய அங்கே வடிவமைக்கபட்டு அலங்கரித்திருந்த நகைகளின் தரம் மற்றும் அமைப்பின் நுணுக்கங்களைக் கண்களாலேயே எடை போட்டவாறு நடந்தான் அவன்.

'மிஸ்டர்.ஏகன்' என்ற அழைப்பில் தன் நடையை நிறுத்தியவன் தன்னை நெருங்க முயன்ற நபரை கண்களாலேயே இரண்டடி தள்ளி நிறுத்தி

"சொல்லுங்க மிஸ்டர். மார்டின்" தன் கணீர் கேட்க.

"இந்த வருஷம் உங்களோட டிசைன் முதல் இடம் வருமா?" என்க

"என்னோட டிசைன் வரலேன்னாலும்; உங்களோடது கண்டிப்பா முதல் பரிசுக்கு போகாது மார்டின்!"


"ஏன் என்னோடது போகாது!?" என்று மார்டின் கோபமாய் வினவ.

"உங்களோட மாடல் போன வருசம் எங்க துபாய் பிரான்ச்ல லான்ச் ஆன பழைய மாடல் மிஸ்டர்.மார்டின்!" என்றவன் திமிராய் நடையை கட்டினான்.

"திமிர் தான் நேர்மையை உடுத்தும் பொழுது கிடைக்கும் இதத்தால் வரும் நிறைவின் வெளிப்பாடு தான் அது!"

கண்காட்சி பகுதியை கடந்து உள்ளே நுழைய நகை அலங்கார அழகிகளின் அணிவகுப்பு நடைபெறும் மேடை தயாராக இருக்க.


அதன் இரு மருங்கிலும் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த நாற்காலிகளில் அவரவர் பெயர் இருந்த இடத்தில் அவரவர் அமர.

'ஏகன் சிதம்பரம்' எனும் பெயரிட்ட நாற்காலியில் அமர்ந்தான் ஏகன்.

அவன் அருகில் வலது பக்கம் அமர்ந்தான் அகரன்.ஏகன் இடது புறம் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தான் இக்னேஷ் ஏகனின் உதவியாளன்,ரசிகன்,வெறியன் எப்படி வேண்டுமானாலும் வைத்துக்
கொள்ளலாம்.

அவனுக்கு முதல் ஏகன் தான்.அவன்மீது மரியாதை கடந்த ஒன்று என்றுமே உண்டு.
இக்னேஷின் 'ஆதர்ஷ குரு' என்றும் ஏகனை கூறலாம்.


அவரவர் உருவாக்கிய நகை குழந்தையை சுமந்து கொண்டு அழகிகள் வலம்வர. வடிவமைப்பாளர்கள் அனைவரும் தங்கள் உருவாக்கிய நகைகளின் அழகை கண்டு ரசித்தனர்.

ஒருவன் மட்டும் மற்றவரின் நகைகள் அவற்றின் நுணுக்கம்,குறைகள்,நிறைகள் என ஒன்றையும் விடாது கணித்து மூளையில் பதித்துக் கொண்டான்.

"எல்லாம் ஏகன் எனும் ஒருவனே!"

மாணிக்க கற்கள் பதித்து நடுவே ஒற்றை கல்லாக இளம்சிவப்பு வண்ண வைரத்தில்
மின்னிய நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்த ஆனால் எடை குறைவான ஏகன் உருவாக்கிய நகை முதலிடம் வகிக்க.

பரிசை தட்டி தூக்கியவனின் நகையை வாங்க அவ்விடத்திலேயே மாந்தர்கள் அவனை நெருங்க.

'க்கும்' ஏகன் தன் குரலை சரி செய்து கொண்டு

இன்னும் சில மாதங்களில் தன் நகைகளின் கண்காட்சி நடைபெறும் என்றும் ; அதில் தன் நகைகள் ஏலம் விடப்படும் என்றும்; அதன் ஒரு பங்கு குழந்தைகள் நலனுக்கு ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட இந்த செய்தி தீயாய் பரவியது.

விழா முடிந்து அவன் வெளியேவர அவனை நோக்கி பெரியவர் ஒருவர் நெருங்க.

அவன் பாதுகாவலர் குழு "அவரின் குறிக்கோள் தவறாக இருக்குமோ!?" என்று அவரை தூக்கிக் கொண்டு தங்கள் இடம் செல்ல முயல.

அவனோ அவரை உற்று நோக்கியவன் 'வேண்டாம்!' எனும் விதமாக தலை அசைக்க.

பெரியவரை ஏகன் அருகே நெருங்க விடாது தள்ளி நிறுத்திவிட்டு நடையைக் கட்ட.

தாத்தா அவர்களின் சிறு நகர்விற்கு தள்ளாடி கீழே விழுந்திருந்தார்.


தன் காரில் ஏறியவன் அருகில் இருக்கும் வந்து சென்றால் தங்கி செல்ல வாங்கிய
தன் இல்லத்திற்கு காரினை விட சொன்னவன் அப்பொழுது தான் பார்த்தான் அருகே மகன் இல்லாததை.

பாதுகாவலர் கவனம் எல்லாம் தாத்தாவின் மீது இருக்க கூட்டத்தில் இருந்து வழி தவறி இருந்தான் பிள்ளை.

இரு விழி நெருப்புக் குழம்பில் 'சிக்கினால் எரித்து விடுவேன்' என்ற அறைக் கூவலுடன் தன் பாதுகாவலர்களை ஏகன் பார்த்திருக்க.

'எங்கே!?' 'எப்படி நடந்தது!?' என்பதே அறியாது தவறு நடந்துவிட அனைவரும் சிறுவனைத் தேடி சென்றனர்.

கிருஷ்ண லீலா ஆரம்பமாக அவரவர் தங்கள் முயற்சிகளை மேற்கொண்டு அழகாக நாடகம் பாட்டு என்று ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காது போட்டிபோட

நிகழ்ச்சியில் அடுத்ததாக ரிதம் குழு பங்கேற்க கிருஷ்ணன் நாகப்படம் மீதில் நர்த்தனம் ஆடியதும்.

ஓர் விரலால் மலையை உயர்த்தி ஓர் குடையின் கீழ் தம் மக்களை காத்த அற்புதம் நடனமாக காண்பிக்கப்பட.

கோபியர் கொஞ்சும் ரமணனனின் திவ்ய லீலைகள் நாடகம் இயற்றப்பட.

"என்னத்தவம் செய்தனை யசோதா!?"

இறைவனை மகனாய் கொண்டு கொஞ்சிட,அவனை தண்டிக்க, அவனின் திருமேனி கொண்ட செவியை செல்லமாய் திருகிட "யசோதா என்ன மாதவங்கள் செய்தாளோ!?" அவளை எண்ணி வியக்கும் பாடலை பத்து வயது சறுமி இசைக்க.

கடைசியாக நான்கு வயது குட்டி ராதை 'ஆயற்பாடி மாளிகையில்' இசைக்க ரிதம் - நிவே குழுவினர் தங்கள் சிறப்பை சிறப்பாய் கொடுத்திருந்தனர்.

பிறகு "சும்மா வா என்ன!?" போட்டிக்கான விளம்பரம் கண்ட நாள் முதல் சிறுவர்களை திரட்டி அவர்களின் திறமைகளை பகுத்தறிந்து.

அதில் சிறப்பான சிலரை தேர்வு செய்து பயிற்சி கொடுத்து

'எதற்காக!?'

எல்லாம் இன்றைக்கு கிடைக்கும் பெரும் பரிசு தொகைக்காகவே இந்த மெனக்கிடல்.

இதில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பரிசு தொகையில் மூன்று பங்காக்கி ஒன்றை சிறுவர்களின் பெற்றோருக்கும்,
மற்றொன்றை நிவேதாவிற்கும்,மூன்றாம் பாகம் தனக்கும் என்ற உடன்படிக்கையின் படி தான் இந்த முயற்சியில் இறங்கினர்.

முடிவுகள் வாசிக்கப்பட ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவராக ரிதம் குழுவினர் பரிசு பொருட்களையும் காசோலைகளையும் குமித்திருந்தனர்.

பரிசு தொகைக்கான காசோலையை பெற்றுக் கொண்டு அனைவரையும் உணவகம் அழைத்து வந்து உணவு உண்ண செய்து நிவேதா உடன் அனுப்பியவள்.


தான் மட்டும் வங்கி சென்று காசோலையை பணமாய் மாற்றி வருவதாக கூறி தங்கள் ஊருக்கு செல்லும் பேருந்தில் அனைவரையும் ஏற்றி விட்டு தன் பயணம் தொடங்கினாள் ரிதம்.

அவர்கள் ஏறிய காரைக்குடி பேருந்து புறப்பட தயராக,தான் செல்ல வேண்டிய பேருந்தை விசாரித்து அதை நோக்கி நடந்தவளின் துப்பட்டாவை யாரோ இழுக்கும் உணர்வு.

"யாரது!?"

உக்ர காளியாக திரும்பியவள் அன்னை பார்வதி ஆனாள்.அவளின் உடையை பிடித்து இழுத்திருந்த சிறுவனின் முகம் கண்டு.

விழியில் கண்ணீர் நிறைய,நுனி மூக்கு கோவை பழமாய் சிவந்து கிடக்க அவளின் சுடிதார் ஷால் முனையை கலங்கிய கண்களுடன் பற்றி நின்ற பிள்ளையை கண்டு

"யார் பிள்ளை இது!?"

"பிள்ளையை தொலைத்து விட்டனரா!?"

"பிள்ளை வழிதவறி வந்தானா!?"

பல யோசனையின் மத்தியில் அவனை கையில் ஏந்தவர.

முதலில் மிரண்டு விழித்தவன் தானாய் அவள் புறம் தன் கரம் நீட்டி தன்னை தூக்க அனுமதி வழங்கினான்.

"யாருடா கண்ணா நீங்க!? ராஜா பிள்ளையா!? கன்னுகுட்டி அப்பா அம்மா எங்க தங்கம்!?" விசாரித்துக் கொண்டே அவன் உடையை ஆராய்ந்தாள்.


முந்திரியும், பாதாமும் கன்னகதுப்பில் மின்னிய கன்னம் கூறியது இவன் 'ராஜா வீட்டு கன்றுக்குட்டி' என்று.

முன்பே அவனுக்கு போதிக்கபட்டிருக்கும் போல.சட்டையில் இருந்த ஒரு அலங்கார அட்டையில் அலுவலகம் ஒன்றின் பெயரும், அழைப்பு எண்ணும் முகவரியும் இருக்க.
அந்த அட்டையை எடுத்து அவளிடம் நீட்டியது.

அதில் இருந்த எண்ணிற்கு அழைக்க

"ஹலோ" என்ற குரலில் எடுத்ததும் பதட்டம் நிறைந்து காணப்பட

சிறுவன் ஒருவன் நின்றிருப்பதையும்; அவன் தான் இந்த எண்ணை அழைக்க கூறினான் என்றும் தகவல் வழங்க.

சிறிது நேரத்தில் அவ்விடம் வந்த ஒருவன் சிறுவனை சுமந்து நிற்கும் பெண்ணைக் கண்டு ஆச்சர்யம் கொண்டவன் மனமார 'நன்றி' நவிழ்ந்தான்.

"உங்களுக்கு தேவை அல்லது எதுவும் உதவி வேண்டும் என்றால் இந்த எண்ணிற்கு அழைப்புவிடுங்கள்" என்று ஒரு விசிட்டிங் கார்டும் கொடுத்து சிறுவனை முன்னால் விட்டு பின்னால் தொடர.

குழந்தையோ இவளை திரும்பிப் பார்த்து கையசைத்து விடைபெற.
பதிலுக்கு தானும் கையசைத்த தாரிகை தன் வேலையை தொடர அவ்விடம் விலகினாள்.

வங்கி வேலையை முடித்து தன் ஊர் சென்று சேர்ந்ததும் பிள்ளைகளின் பெற்றோருக்கும் நிவேதாவிற்கும் கொடுப்பதாக ஒப்புக் கொண்ட பணத்தை பட்டுவாடா செய்து முடித்து தன் இல்லம் வந்தாள் ரிதம்.

தந்தை இல்லாது தன் அன்னையுடன் வாழ்ந்த நிவேதா; அவரும்
இறையடி சேர்ந்த பின் தனியே வசிக்கிறாள்.

அவர்களின் வீட்டின் மேல் தளத்தில் தான் ரிதமும்,வேல் தாத்தாவும் உள்ளனர். அங்கே இவர்கள் வாடகைக்கு குடிபுகுந்து வருடங்கள் பல கடந்தாயிற்று.
 
Top