Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை!-5

Advertisement

praveenraj

Well-known member
Member
மயக்கத்தில் படுத்திருந்தவனின் கண்கள் மெதுவாக அசைய அப்போது தான் அங்கிருந்த டாக்டர், பீம் பாய்ஸ், சுமதியம்மா, ராசப்பன் ஆகியோருக்கு உயிரே வந்தது. இங்கே அதுவரை அழுதுகொண்டிருந்த சகுந்தலாவின் முகத்தில் ஒரு தெளிவே அப்போது தான் வந்தது. இமயவர்மனும் சற்று நிம்மதி பெருமூச்சை விட, எழில் வேந்தனும் ஆசுவாசம் அடைந்தார்.
மெல்ல கண்களைத் திறந்தவன் தன்னைச் சுற்றி அத்தனை பேர் நிற்பதைக் கண்டு குழம்பினான். தன்னைப் பார்த்து அழும் சுமதியம்மாவிடம்,"என்னாச்சு? ஏன் எல்லோரும் ஒருமாதிரி இருக்கீங்க?" என்றான்.
"தம்பி உனக்கு ஒன்னுமில்லையே? நல்லா தானே இருக்க?" என்பதற்குள் டாக்டர் வந்து அவனை பரிசோதித்தனர். தலையில் எங்கேயாவது வலிக்கிறதா என்றும் உடல் நிலையில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்றும் வினவினார்.
அவனும் ஒன்னுமில்லை என்பது போல் தலையாட்டி பதில் சொல்ல, வெளியே இருந்த ராஜேந்திரன் அவன் கண்முழித்துவிட்டான் என்றதுமே அவசரமாக உள்ளே விரைந்தார்.
"தம்பி உங்களுக்கு எப்படி இருக்கு? ஒன்னுமில்லையே? என்ன நடந்தது? எப்படி மயங்கனீங்க? எப்படி அந்தக் கிளை மேல விழுந்தது? அங்க யாரையாவது பார்த்தீங்களா? சொல்லுங்க தம்பி?" என்று வரிசையாய் வினாக்களை எய்ய,
எதுவுமே புரியாமல் விழித்தவன் இப்படி அடுக்கடுக்கானக் கேள்விகளில் மேலும் கடுப்பானான். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று, அவனுக்கு இதுவரை அடுத்தவரை கேள்விகேட்டு தான் பழக்கமே ஒழிய தன்னை நோக்கி கேள்விகள் வருவதை என்றுமே விரும்பமாட்டான். இரண்டு, அவனே இப்போது தான் கண்முழித்தான். என்ன நடந்தது என்று அவனே இன்னும் யோசித்து தெளிவு பெறவில்லை. இந்த நேரத்தில் தன்னிடம் இப்படிக் கேள்விகளால் துளைத்த ராஜேந்திரனைக் கோவமாகப் பார்க்கவும் அவர் அமைதியானார்.
"இந்திரன், ஹவ் ஆர் யூ ஃபீலிங் நொவ்? ஆர் யூ ஓகே?"
"யா. கொஞ்சம் தலை தான் வலிக்குது..."
"எங்க?" என்று அவர் பதட்டமாக வர,
"இல்ல, இது அந்த வலியில்ல. இவரு இப்படி தொனதொனனு கேள்வி கேட்டதால் வந்த தலைவலி. சுமதியம்மா கொஞ்சம் டீயோ காபியோ கிடைக்குமா?"
"இதோ உடனே கொண்டு வரேன் இந்திரா..."
சுற்றியிருந்தவர்களை எல்லாம் அவன் வெளியேற சொல்ல, உடனே தன் அன்னையிடமிருந்து அழைப்பு வந்து விட்டது.
அவர் முகத்தில் பதற்றத்தைக் கண்டவன்,"மாம், அழாதீங்க. எனக்கு ஒன்னுமில்ல..."
"இந்திரா நீ இங்கேயே வந்திடு இந்திரா..."
"இல்லம்மா நான் கொஞ்சம் தனியா இருக்கனும்..."
"அப்போ நாங்க அங்க வரட்டா? நாளைக்கே வரோம்..."
"எதுக்கு?"
"என்ன கண்ணா இப்படிக் கேட்கற?"
"பின்ன?"
"உன்னைப் பார்க்க தான்..."
"அதெல்லாம் ஒன்னும் வேணாம். அதுதான் 24 மணிநேரமும் என்னை வீடியோல வேவு பார்க்கறீங்களே அது போதாதா?" என்று ஏனோ கோவத்தில் அவரை வார்த்தையால் கிழித்தான்.
"என்ன இந்திரா இப்படிப் பேசுற?"
"எனக்கு... எனக்கு ஒரு மாதிரி இருக்கு. பேசாம நானும் செத்து போயிருக்கலாம். ஏன்டா பொழச்சோம்னு தோணுது..."
"இந்திரா!" என்ற சகுந்தலாவின் குரலில் தீ ஜுவாலைகள் தெரிந்தது.
பின்புதான் அவன் பேசியதன் அர்த்தம் புரிந்து கோவமாக எழுந்தவன் சற்று தடுமாற, அவனை ராஜேந்திரன் தாங்கினார்.
அவனுக்கு அப்போதும் அவ்வளவு கோவம் வந்தது."எல்லோரும் வெளிய போங்க..." என்று கத்தவும்,
என்ன செய்வதென்று புரியாமல் எல்லோரும் அங்கேயே நிற்க,
அருகிலிருந்த ரிமோட்டை எடுத்து அங்கிருந்த கண்ணாடியை உடைந்ததும் எல்லோரும் வெளியேறினார்.
அந்த கேமரா இருந்த திசையைப் பார்த்து பிளவர்வாஷை எடுத்து ஓங்கியவன்,
"தம்பி டீ ரெடி..." என்றபடியே உள்ளே வந்த சுமதியம்மாவைப் பார்த்து சாந்தமானான். அந்த பிளவர் வாசை அப்படியே கீழே போட்டவன் டீ குடித்து, டாக்டரை அழைத்தான்.
உள்ளே வந்தவரிடம்,"ப்ளீஸ் நான் தூங்கணும். ஏதாவது பண்ணுங்க..." என்று கெஞ்ச,
அவனின் மனநிலையை உணர்ந்ததாலோ என்னவோ அவனுக்கு இன்ஜெக்சன் செலுத்தினார்.
அமைதியாக அந்த பெட்டில் படுத்தவனை தூக்கம் தழுவியது.
இங்கே சகுந்தலாவோ அழ, இமயவர்மன் அவரை எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல் தவித்தார்.
நடப்பவைகளை எல்லாம் கண்டு இவர்கள் படும் துயரத்தைப் பார்க்க முடியாமல் குடும்ப டாக்டராகவும் குடும்ப நண்பராகவும் உண்மையிலே தத்தளித்தார் எழில்.
********************
"ஹேய் லேக்கு..."
"ஹ்ம்ம்..." என்றவளின் விழி திருதிருவென முழித்து சுற்றிமுற்றிப் பார்த்தாள்.
"எத்தனை தடவை சொல்றது இப்படி புடவை கட்டிகிட்டு என் முன்னாடி வராதான்னு?" என்று புருவம் உயர்த்தினான் இந்திரன்.
பயத்திலே வார்த்தை வந்தது,"ஏ... ஏன்?"
"நாம ரெண்டுப் பேரும் இன்னும் கன்னிங்களா இருக்கறதுல அப்படி உனக்கு என்னடி பிரச்சனை?" என்று குறுநகை புரிய,
அவள் புரியாமல் புருவம் உயர்த்தினாள்.
அவளைத் தன் கைக்குள் கொண்டுவந்தவன் மெல்ல ஆளத்தொடங்கினான். மெதுவாக அவளின் காது ஜிமிக்கிகளை விரலால் ஆட்டியவன், அவளின் காது மடல்களைக் கடித்து அப்படியே அவளின் கன்னம் வழியாக கழுத்து வளைவுக்குள் வந்தவன் அவளை சூடேற்றி இம்சித்துக்கொண்டிருந்தான். பெண்ணவள் திமிர,"சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு கண்டுக்கொண்டேன்..." என்று பாடி சிரித்தான்.
"ஹஸ் விடுங்க யாராவது வந்திடப்போறாங்க..."
"வரட்டும்..."
"ஐயோ!" என்றவள் எட்டி வாசலைப் பார்த்தபடியே அவனின் கடிகளை வாங்கிக்கொண்டிருந்தாள். அவளின் மீது தன் ஆதிக்கத்தை மெல்லச் செலுத்தினான். கைகள் தானாக இடையைத் தீண்ட அவளுள் பல மாற்றங்கள் ஏற்பட்டது.
"இஜித், விடு யாராவது வரப்போறாங்க..."
அவன் செவிசாய்க்கவில்லை. பின்ன அவனின் கவனமெல்லாம் அவளின் மீதே இருந்தது.
"ஸ்ஸ் விடு..."
அவளின் இந்த ஆனந்த அவஸ்தைகளை அவள் முகத்தில் காணத் தவறவில்லை அக்கள்வன்.
"லேக்கு பேபி..." என்று ஹஸ்கி வாய்ஸில் அழைக்க,
"ஹ்ம்ம்..."
"இப்போ உன் முகத்தை நீ கண்ணாடியில் பார்க்கணுமே?"
அவள் கோவமாக தன் கண்களை உருட்ட,
"நிஜமாடி. பயம் கூடவே காதல் கலந்த ஒரு த்ரில் எல்லாமும் சேர்ந்து உன் முகத்துல ஜொலிக்குது..."
"உனக்கு கிண்டலா போச்சியில்ல?"
"இல்லடி இப்படியே நீ சலங்கை கட்டி நாட்டியம் ஆடுனா எப்படி இருக்கும் தெரியுமா?"
திரும்பியவள் அவனை அவன் நெஞ்சில் கடித்தாள்.
"ஆஹ் கடிக்காதடி..." என்றவன் வழியில் அலற,
அவனைப் பார்த்தவள் மேலும் கடித்து வைத்தாள்.
"லேக்கு கோவமா?"
"........"
"என் லேக்கு பேபிக்கு கோவம் வந்துடுச்சா? ஏன்?"
"பின்ன நீ மட்டும் பார்க்க வேண்டிய நயனங்களை ஊருக்கே காட்டச் சொல்ற?"
"பேபி, நீ பேபி இல்லடி. பாபி மாதிரி பேசுற..." என்று அவன் கண்ணடிக்க,
அவனின் காலை ஓங்கி மிதித்தாள்.
"ஆஹ்..." என்றவன் அவள் முகத்தைத் தூக்கிப் பிடித்து,"உண்மையிலே உனக்கு என்னைப் பிடிக்குமா பேபி?"
அவள் முறைக்க,
"ப்ளீஸ் பேபி சொல்லு..."
"பிடிக்காம தான் இப்படி உனக்கு கோ ஆப்ரேட் பண்றனா?" என்றவளின் வார்த்தையில் அத்தனை கடுமை.
"என் மேல கோவம், வெறுப்பு இல்லையே?"
இம்முறை அவள் அமைதியாக இருக்க,
"சொல்லுமா..."
அவள் தலை கவிழ்ந்தாள்.
அப்படியே அவளை அவன் முகத்திற்கு நேராக தூக்கியவன், அவள் தலையை லூசாக விடாததால்,"நிமிர்ந்து என்னைப் பாருடி..." என்றதும் அவள் நிமிர,
"அப்போ கோவம் இருக்கு?" என்றவன் அவள் பதிலேதும் பேசாததால், அப்படியே அவளின் இதழைக் கவ்வினான்.
அவளின் கண்களில் இருந்து வந்த கண்ணீர் அவன் முகத்தில் விழ, திடுக்கிட்டு அவளை கீழே நிறுத்தினான். பின்னே அவள் இதழை அவன் நெருங்க வேண்டுமாளால் அவளைக் கொஞ்சம் தூக்கித்தான் நிறுத்த வேண்டும். அவளும் அவன் கால் மீதே தான் இவ்வளவு நேரம் நின்றுகொண்டிருந்தாள்.
"நான் செய்யுறது உனக்குப் பிடிக்கலையா லேக்கு?" என்று கேட்டவனின் குரலில் அப்பட்டமான ஏமாற்றம் இருந்தது.
அவள் மௌனமாகவே இருக்க,
"லேக்கு, அப்போ என் தொடுதல் உன்னைத் தொந்தரவு செய்யுதா?" என்று தன் மனதிலிருப்பதை மறைக்காமல் கேட்டான்.
உடனே நிமிர்ந்தவள் இல்லையென தலை ஆட்ட ஆனா கண்களில் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை.
"பின்ன என்னடா?"
"இல்லை... உண்மையிலே உனக்கு என்னை இவ்வளவு பிடிக்குமா என்ன?" என்று ஐயமுடனே வினவினாள்.
அவள் கேள்வியின் அர்த்தம் புரிந்தவன், அவள் கன்னத்தில் இச் வைக்க,
அதை மறுக்காமல் வாங்கியவள்,"அப்புறோம் ஏன்டா அப்படி எல்லாம் பண்ண?" என்றாள்.
எந்தக் கேள்வியை அவனிடம் அவள் கேட்டுவிடவே கூடாது என்று இதுவரை கடவுளையெல்லாம் பிரார்தித்தானோ அதே கேள்வியை இன்று அதும் இப்போது கேட்டுவிட்டடாள். அது அவனைக் குத்தி என்னவோ செய்ய அவளை விட்டு இரண்டடி விலகினான். தலையை நிமிர்ந்து அவளைப் பார்க்கக் கூட அவனுக்குத் துணிவில்லை. தொங்கவிடப்பட்ட தலையுடன் அவன் நிற்க,
அவனின் வேதனை புரிந்தாலும் அவளுக்கு இதற்கான பதில் இப்போது தெரிந்தே தீர வேண்டும் என்பதால் அவள் அவனை விடவில்லை.
அவன் எப்படிச் சொல்வான்? ஏதும் பேசாமல் அவன் முழிக்க,
அவன் சட்டையின் காலரை பிடித்தவள்,"உன்னால நான் எவ்வளவு நாள் தூங்காம அழுத்திருக்கேன் தெரியுமா? இன்னைக்கு வரை அதையெல்லாம் நினைத்தால் பயம் வந்திடும். உடம்பெல்லாம் நடுங்கும். எனக்கு நீ என்னை இப்படி நெருங்கும் போதெல்லாம் அந்த ஞாபகங்கங்கள் தான் டா வரும். இதோ இப்போ கூட கையெல்லாம் நடுங்குது..." என்று அவள் கைகளைக் காட்ட அவன் மனம் சுக்குநூறாக உடைந்தது."எனக்கு பயமா இருக்கு டா. எங்க நீ என்னை மறுபடியும் பழிவாங்க தான்..." என்னும் போதே அவள் அழுது கேவ,
"லேக்கு ப்ளீஸ் மா. பேபி அழாதா..."
"நான் அவ்வளவு கேவலமா?" என்று இதுவரை அவள் மனதை அரித்த கேள்வியைக் கேட்டும் விட்டாள்.
கோவத்தில் அவளை அறைந்தான். இப்போது அவன் கரங்கள் தான் நடுங்குகிறது.
ஆனால் இம்முறை அவள் அழவில்லை. எவ்வித ரியாக்சனும் காட்டவில்லை. அவளையே இமைக்காது பார்த்தான். அவனின் பார்வை வீச்சைத் தாங்க முடியாமல் அவள் திரும்பிச் செல்ல முற்பட,
அவளோ அவனை இப்படிச் சொன்னதற்கும் அவனின் இந்த நிலைக்கும் காரணமானதால் அழுதாள். அவர்களுக்கு பழைய நினைவுகள் அப்படியே வந்து போனது. எதையும் அவள் மறக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவளால் மறக்கமுடியவில்லை.
சந்தோசமாக வந்தவள் இப்படிச் சோகமாக நிற்க, பெரும் மௌனம் நீடித்தது.
சகுந்தலா வந்தார். அவர் கொலுசின் ஓசையே அது அவர் தான் என்று காட்டியது.
ஸ்ரீயைப் பார்த்தவர்,"எப்போடா தங்கம் வந்த?" என்று வாஞ்சையுடன் வினவ,
"இப்... இப்பதான் அத்தை வந்தேன்..."
"வாடா..." என்றதும் அவள் இரண்டடி முன்னே வைக்க,"இரு புடவையில் அழகு ததும்பி வழியுதடி என் தங்கம். என் கண்ணே பட்டுடும் போல இருக்கே?" என்றவர் கைகளால் திருஷ்டி சுத்த, அவளோ சிரித்து வைத்தாள்.
இவள் கண்கள் சிவந்திருப்பதைக் கண்டவர்,"அழுதையா ஸ்ரீ?"
"ஐயோ அதெல்லாம் இல்ல அத்தை..." என்று துரிதமாக அவள் சமாளிக்க,
"என் கண்ணைப் பார்த்துச் சொல்லு..."
"ஐயோ இல்ல!"என்றாள். ஆனால் அவள் நிமிரவே இல்லை.
"அவன் வந்தானா?"
மௌனம் நீடிக்க.
"உன்னைத்தான் கேட்கறேன்..." என்றவரின் குரலில் கடுமை இருந்தது.
அவள் முழித்ததிலே சகுந்தலாவிற்கு எல்லாம் புரிந்தது.
"என்ன சொன்னான்?" என்றவரின் குரலில் கோவம் கொப்பளித்தது.
"ஐயோ அத்தை அவர் எதுவும் சொல்லல..."
"அவனைக் காப்பாற்ற என்கிட்டே பொய்ச் சொல்லாத ஸ்ரீ..."
"சத்தியமா அவர் எதுவும் சொல்லல..."
"அப்போ ஏன் அழற?"
"அம்மா ஞாபகம் வந்தது..." என்று சரளமாக அவளுக்கு வார்த்தையில் பொய் வந்தது.
உடனே அவளை சகுந்தலா அணைத்துக்கொண்டார்.
இங்கிருந்து வெளியேறினாலும் அவர்களின் உரையாடல்களை அவன் கேட்டுக்கொண்டே தான் இருந்தான்.
அவன் உள்ளமும் நெருப்பாய்க் கொதித்தது. கோவம் அதும் அவன் மீதே அவனுக்கு கோவம். என்ன செய்யலாம் என்று யோசிக்க சரியாக சிந்துவும் கமலேஷும் வந்தனர்.
இமையவர்மன் கமலேஷை அழைத்து,"அம்மாவைக் கூப்பிடு கமலா..." என்றார்.
"சரிப்பா..." என்றவன் செல்ல,
"ஏய் கமலா! ஏய் கமலா!" என்று வழக்கம் போல் தன் அண்ணனை சிந்து கலாய்த்தாள்.
திரும்பி சிந்துவை முறைத்தவன்,"அப்பா இவளைப் பாருங்க..." என்று செல்லம் கொஞ்சினான். உடனே அவள்,"தீரண்ணா..." என்றதும் தங்கள் அன்னையை அழைக்கச் சென்றான் கமலேஷ்.
அங்கேயே இருந்தும் ஏனோ சிந்துவின் அழைப்பு அவனை வந்து சேரவில்லை. அவன் மனமெல்லாம் ஸ்ரீயின் கண்ணீரால் சுட்டது. அவனுக்கு இப்போது என்ன செய்ய வேண்டுமென்றே புரியவில்லை. புரியவேயில்லை.'நான் என்ன அனுமாரா என் நெஞ்சைப் பிளர்ந்து காட்ட?' என்று மருகினான்.
யாரோ தன்னைத் தொடுவதை உணர்ந்தவன் நிமிர சிந்துவைக் கண்டவன்,
"என்ன குட்டிம்மா?"
"என்ன ஆச்சு அண்ணா?"
"ஒன்னுமில்லையே டா"
"இல்லை நான் எத்தனை தடவை உங்களைக் கூப்பிட்டேன் தெரியுமா?"
"கொஞ்சம் யோசனையில இருந்தேன் டா..."
"அம்மா எல்லோரையும் கூப்பிட்டாங்க..."
அவன் செல்ல,"தீரண்ணா..."
"என்ன மா?"
"என் ட்ரெஸ்ஸை பற்றி கமெண்ட் பண்ணல?"
அவளும் அதே கலர் ஸரீ கட்டியிருந்தாள் என்று அப்போது தான் கவனிக்கிறான் இந்திரன். அவன் யோசிக்க,
"என்ன அண்ணா ஆச்சு உனக்கு? ஏன் மூட் ஆபாவே இருக்க?"
அதற்குள் உள்ளிருந்து மூன்றாவது முறையாக அழைப்பு வரவும்,"வாண்ணா போலாம்..." என்று அவனை அழைத்துச் சென்றாள் சிந்துஜா.
அங்கே எல்லோரும் நின்று சாமி கும்பிட, தீபங்களை ஏற்ற தொடங்கினர். சகுந்தலா முதலில் செய்ய அவருக்கு அருகிலே ஸ்ரீயும் தீயாய் தீபங்களைப் பற்ற வைக்க, சிந்து தான்,"என்ன டி மேட்ச் பாக்ஸ் இது?" என்று சலிக்க ஒரு மெழுகு வர்த்தியை எடுத்து அவளிடம் நீட்டினாள். அது அவனுக்கும் சுட்டது...
அதற்குள் ஏதோ பாத்திரம் கீழே விழும் சப்தம் கேட்டு திடுக்கிட்டு அவன் விழிக்க அருகே சுமதியம்மா தான் அவன் உடைத்ததையெல்லாம் சுத்தம் செய்துகொண்டிருந்தார். திரும்பியவன் அதைப் பார்க்க அவரோ எங்கே சத்தத்தில் அவனின் தூக்கம் கலைந்ததோ என்று நிமிர அந்நேரம் அவரின் கையை அவன் உடைத்த கண்ணாடியின் துகள் பதம் பார்த்தது.ரத்தம் பீறிட்டு வர துடித்து எழுந்தான் அவன்."சுமதியம்மா என்ன ஆச்சு?"
"ஒன்னுமில்ல இந்திரா. சும்மா..." என்பதற்குள் அவன் அவரின் கையைப் பார்த்தவன் டாக்டரை அழைக்க வந்து முதலுதவி செய்தார். பிராயச்சித்தமாக அவனே அதையெல்லாம் கூட்டினான்.
'இவன் சிறுவயதிலிருந்து தான் கண்ட இந்திரன் தானா?' என்று ஆச்சரியப்பட்டார் சுமதியம்மா.
சுற்றித் திரும்ப அந்த இரவு நேரத்தில் அந்த ஊரெங்கும் அகல் விளக்குகளால் ஜொலிக்கவும் அவன்,"இன்னைக்கு தீபமா?"
"நாளைக்கு தம்பி..."
ரொம்ப வீக் ஆனான் இந்திரன். "சுமதியம்மா எனக்குக் குடிக்க எதாவது தாங்க"
அவர் செல்ல முற்பட,"இருங்க நானே போய்கிறேன். இந்தக் கையைக் கொண்டு நீங்க எப்படிச் செய்வீங்க?"
"பரவாயில்ல இந்திரா..."
அவனும் அவருடன் வந்து டீ போட்டு அமர்ந்தான். அங்கிருந்த நியூஸ்பேப்பரை எடுத்து புரட்ட அவனுக்கு ஸ்பார்க் ஆனது."இன்னைக்கு கல்யாணி பிறந்த நாள் தானே?"
ஆச்சரியப்பட்டவர்,"இன்னைக்கு இல்ல தம்பி நாளைக்கு..."
ஏனோ நீண்ட நாட்கள் கழித்து அவன் முகத்தில் சிரிப்பு தென்பட்டது. அதும் சொற்ப வினாடிகள் தான்.வேகமாய் டீ பருகியவன் வெளியே வந்தான்.
இம்முறை ராஜேந்திரனே அவனின் நிழலாய் வந்தார். இந்திரனுக்கு அது எரிச்சல் தந்தாலும் அவனுக்கும் காரணம் புரிந்தது."சாரி அங்கிள், என்னால தானே நீங்க அப்பாகிட்ட திட்டு வங்கனீங்க? மன்னிசிடுங்க..."
"ஐயோ தம்பி பரவாயில்ல. எங்க போனும் தம்பி?"
"எனக்கு ஒரு பர்த் டே கேக் வாங்கணும்..."
"நீங்க இருங்க நான் பசங்களை அனுப்பி வாங்கிட்டு வரச் சொல்றேன் தம்பி"
"இல்லை, நானே... நானும் வரேன்"
யோசித்தவர் டாக்டரிடம் பேசி நடக்கத் தொடங்கினர். (வானிலை மாறும்)

இதுவரை வந்த எபிகளில் இந்தக் கதை ஏதேனும் புரிகின்றதா? ஏனெனில் இனி வரும் எபிகளில் நிறைய குழப்புவேன். அண்ட் மர்மம்னு சொல்லியிருக்கேன். இது அந்த பீலை கொடுக்கிறதா ? இது எனக்கு புது ஜானர் . நான் இப்போது தான் முயற்சிக்கிறேன் . அதனால் தான் இந்தக் கேள்வி ,,,, கமெண்ட்ஸ் செய்யவும்!
 
இதுவரைக்கும் ஒரு அவுட்லைன் புரியுது...
ஏன், ளதற்கு, யார் என,ற கேள்விகள் வருது...
அப்ப இது மர்ம கதை தான்...
போகப், போக புரியும் என நினைக்கிறேன்...
 
Ithuvarai nallave purinjathu and romba suspensathan irukku.....nallairukku writer ji :love: :love: :love:
மிக்க நன்றி நன்றி நன்றி? எனக்கு இது புதிய ஜானர். அதான் கேட்டேன்...
 
இதுவரைக்கும் ஒரு அவுட்லைன் புரியுது...
ஏன், ளதற்கு, யார் என,ற கேள்விகள் வருது...
அப்ப இது மர்ம கதை தான்...
போகப், போக புரியும் என நினைக்கிறேன்...
வருதா வருதா??? அப்பாடா. நன்றி�
 
Top