Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை!-7

Advertisement

praveenraj

Well-known member
Member
அந்தக் குழந்தைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு அந்த ஹோட்டல் உள்ளே சென்றவள் அவர்களுக்கு வேண்டிய பேஸ்ட்ரிகளை வாங்கிக் கொடுத்து அப்படியே ஏதேதோ யோசனையில் வெளியே வந்தாள்.
"மாதுக்கா, மாதுக்கா..."
இருமுறை அழைத்தும் செவிசாய்க்காமல் வந்தவளைக் கண்டு அச்சிறுவர்கள் அவளை உலுக்க நிகழ்வுக்கு வந்தாள். அவள் என்ன என்பதைப் போல் சைகை செய்ய,
"அந்த முதலாளி ஏன் ரொம்ப சோகமாவே இருக்காரு?"
"எந்த முதலாளி?" என்று வினவ (மாதுளை பேசுவதாக வருவதெல்லாம் சைகை மொழிகளே!)
"இப்போ பார்த்தோமே அவரு..."
"தெரியவில்லையே?" என்று உதட்டைச் சுளித்தாள்.
"நாளைக்கு கல்யாணி பிறந்த நாளு..." என்றான் ஒருவன்.
"ஆமா சுமதியம்மா வீட்டுக்குpப் போனா நிறைய கேக் மிட்டாய் தருவாங்க..." என்றான் மற்றொருவன். வருடாவருடம் இமையவர்மன் தன் குடும்பத்துடன் வந்து கல்யாணி பிறந்தநாளை ஒரு சாக்காக வைத்து அங்கிருக்கும் குழந்தைகளுக்கு எல்லாம் இனிப்புகளை வழங்குவார்கள்.
"சரி நாளைக்கு அங்க போலாமா?"
இவளும் தலை ஆட்டினாள்.
அந்தப் பசங்களும் அவரவர் வீட்டிற்குச் சென்றனர். மாதுளையும் அவளின் வீட்டிற்குச் சென்றாள். அங்கே அவளின் பாட்டி சமைத்துகொண்டிருக்க வெளியே திண்ணையில் சித்தன் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டவள் ஓடிச்சென்று அவரிடம் அமர்ந்து இன்று நடந்ததையெல்லாம் ஒருவாறு சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் பேசுவது அவருக்கு சரியாக புரியாவிடினும் ஓரளவுக்கு அதை கிரகித்துக் கொள்வார் சித்தன். அவர்களை சாப்பிட அழைக்க இருவரும் சென்று சாப்பிட்டுவிட்டு அப்படியே அவரின் மடியில் தலையை வைத்தவள் உறங்கியும் போனாள்.
...........................................................
இந்திரனிடம் பேசிவிட்டு போனை வைத்த இமையவர்மன் சகுந்தலா இருவரும் குழப்பத்தில் இருந்தனர். இவ்வளவு நாட்கள் இல்லாமல் இன்று ஏன் கதிரவனிடம் பேச விரும்புகிறான் என்று அவர்களுக்கு குழப்பம். அதுமில்லமல் நாளை கல்யாணியின் பிறந்த நாள் என்று இந்திரன் நினைவுப் படுத்தியதும் அவர்களுக்கும் போன வருடம் இந்த நாளின் நினைவு வந்தது. கூடவே சிந்துவும் லேகாவும் நினைவில் வந்தனர்.
அவர் போனை எடுத்து கதிரவனிடம் இந்திரன் பேசச்சொன்னதைச் சொல்லி,"கதிரா!..."
"சொல்லுங்க அங்கிள்..."
"அவன் என்ன பேசுனானு எனக்குத் தெரியணும் கதிரா..."
"அங்கிள், அது..."
"புரியுது கதிரா. நீங்க ப்ரன்ட்ஸ்க்குள்ள ஆயிரம் பேசுவீங்க. ஆனாலும் எனக்கு பயமா இருக்கு..."
"ஐயோ அங்கிள், ஒன்னும் பயப்படாதீங்க. நான் பார்த்துக்கறேன் அண்ட் சொல்றேன்..."
"அன்னைக்கே உன்கிட்ட நிறைய பேசணும்னு நெனச்சேன் கதிரா. உங்க அம்மா வேற இங்கேயே இருந்தாளா அதுனால ஃப்ரீயா பேச முடியில..."
"என்ன சொல்றீங்க அங்கிள்?"
"அது எனக்கு நிறைய விஷயம் தெரியவந்தது கதிரா..."
ஏனோ இமையவர்மன் இப்படி புதிர் போட்டதும் கதிரவனுக்கு அவனையும் அறியாமல் பயம் ஆட்கொண்டது. அது பயமா இல்லை பதற்றமா என்று புரியவில்லை.
"எ... என்ன தெரியவந்தது?"
"அந்த..." என்று ஆரமிக்க அதற்குள் சகுந்தலா வந்துவிட டக்கென பொய் பேச வராததால் இமையவர்மன் அமைதியாக இருந்தார்.
"அங்கிள்? இருக்கீங்களா?"
"ஆம் இருக்கேன் கதிரா. இந்திரன் பேசச் சொன்னான்னு சொல்ல தான் கூப்பிட்டேன். நான் வெக்கறேன்..."
அவர் அழைப்பைத் துண்டித்துவிட்டார். இங்கே கதிரவனுக்கோ தலையெல்லாம் பிய்த்துக்கொள்வது போல் இருந்தது. 'என்னவா இருக்கும்? ஒருவேளை இவருக்கு எல்லாமும் தெரிஞ்சிடுச்சா? ஐயோ கூடாதே!' என்று நினைத்தான்.
அவனுக்கு அழைப்பு வந்தது.
எடுத்தவன் மறுபக்கம் கேட்ட கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வதென்று புரியாமல் தவித்தான். "என்னடா நான் பேசுறதெல்லாம் கேட்குதா இல்லையா?"
"ஆம் கேட்குது..."
"என்ன நடக்குது அங்க?"
"அது இந்திரன் என்னைப் பேசச் சொன்னானாம். அதுதான் சொன்னாரு..."
"என்ன விஷயமாம்? எங்க இருக்கானாம் அவன்?"
"தெரியில..."
"இதை என்னை நம்ம சொல்றீயா? கதிரவா உனக்கு என்னைப் பற்றி முழுசா தெரியும்னு நினைக்கிறேன்..."
"சத்தியமா எனக்குத் தெரியாது.ஆனா எனக்கென்னமோ அவன் அட்டகட்டில தான் இருப்பானான்னு சந்தேகமா தான் இருக்கு. ஏன்னா அந்த இடம் அவ்வளவு சேப் இல்லைனு நிச்சயம் அவருக்கும் தெரிந்திருக்கும். அதுனால தான்..."
"அவன் அங்க தான் இருக்கான்..."
"உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"டேய் அது எல்லாம் தெரியும். சரி சரி அவனுக்கு நீ இன்னொரு நம்பர்ல இருந்து கால் பண்ணு. எனக்கு அவன் என்ன பேசுறானு கேட்கணும்..."
கதிரவனால் மறுக்க முடியவில்லை. அவனும் அவனின் மற்றொரு எண்ணிலிருந்து இந்திரனை அழைத்தான். அழைப்பை எடுத்தவன் மௌனமாய் இருக்க,
"இந்திரா?"
"ஆம்..." என்று வார்த்தைகள் பட்டும் படாமல் வந்தது.
"எப்படி டா இருக்க? ஏன்டா என்கிட்டே இத்தனை நாள் பேசவேயில்லை? நான் உன்னைப்பார்க்க வரலாம்னா கூட என்னால முடியில டா. உன்னை இப்படி அசைவேயில்லாம பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்தது இருக்கு டா. இப்போ எப்படி டா இருக்கு? ஒன்னும் பிரச்சனை இல்லைதானே?"
"ஹ்ம்ம்"
"டேய் எதாவது பேசுடா. எப்படியிருக்க? பிசினஸ் எல்லாம் எப்படி இருக்கு? இந்தமாதிரி ஏதாவது என்கிட்ட கேளுடா ப்ளீஸ்!"
"கதிரவா, எனக்கு நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணணுமே?"
"என்னடா ஹெல்ப்னு எல்லாம் சொல்ற? என்ன செய்யணும்னு சொல்லுடா?"
"ஒரு டிரஸ்ட் ஆரமிக்கணும். உடனே..."
"புரியில?"
"இன்னைக்கு சாயங்காலம் தான் ராஜேந்திரன் அண்ணா கூடப் பேசிட்டு இருக்கும் போது ஒன்னு சொன்னாரு. நான் மட்டும் உயிர் பிழைத்ததுக்கு ஏதேனும் காரணம் இருக்குமாம். சோ இப்போதான் ஸ்பார்க் ஆச்சு. சிந்துக்கு குழந்தைங்க என்றால் ரொம்ப இஷ்டம். அவங்களோட சின்ன சின்ன ஆசைகளை எல்லாம் ரொம்ப ஆவலாய்க் கேட்டு கேட்டு நடைமுறைப்படுத்துவா. அதேபோல ஸ்ரீக்கு டேன்ஸ் மேல எவ்வளவு இன்டெரெஸ்ட்ன்னு நான் சொல்ல வேண்டுய அவசியமில்லை. சோ அவங்க ரெண்டுபேரோட ஆசையும் கனவும் நிறைவேறணும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல, எனக்கு இன்னும் 10 நாளுல ஆரமிக்கணும். அதுக்கான எல்லா ஏற்பாடும் நீ பண்ணிவை. நான் இன்னும் 15 நாளுக்குள்ள வந்திடுவேன்..."
"டேய் நீ நல்லா ரெஸ்ட் எடுக்கணும்னு..."
"நான் ரெஸ்ட் எடுத்த வரை எல்லாமும் போதும். நான் இனி வாழப் போறதே சிந்து ஸ்ரீ கனவுகளுக்கு ஒரு உயிர் கொடுக்க மட்டும் தான். அது முடிஞ்சதும் என் கடமை முடிஞ்சதுனு நினைக்கிறேன்..."
"டேய் என்ன முட்டாள் மாதிரி பேசுற?"
"இல்லை நான் நல்லா தெளிவா தான் பேசுறேன். சொன்னதை மட்டும் செய். நான் மீதியெல்லாம் அப்புறமா சொல்றேன்..."
"டேய் டேய் இந்திரா, அம்மா அங்கிள் பத்தி?"
"அவங்களுக்கு தான் கமலேஷ் இருக்கான் இல்ல?"
"டேய் முட்டாள் @@@ மாதிரி பேசாத?"
"இங்க பாரு நான் சாகவெல்லாம் மாட்டேன். நான் வாழனும். சிந்துவும் ஸ்ரீயும் இல்லாத இந்த உலகத்துல நான் தனியா வாழனும். எனக்கான சாபமே அதுதான். அந்த வலி அந்தக் குற்றயுணர்ச்சி அதோட அப்படியே வாழனும். கொஞ்ச கொஞ்சமா அணுவணுவா துடிக்கணும். அதுதான் எனக்கான தண்டனை..." என்றவன் போனை கட் செய்தான்.
"டேய் டேய் இந்திரா... இந்திரா?"
அதுவரை இவர்களின் உரையாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தவரும் சொல்லாமலே அழைப்பைத் துண்டித்துக்கொண்டார். இங்கே கதிரவன் தான் இதை எப்படி அணுகுவது என்று புரியாமல் திண்டாடினான். 'அண்ட் இப்போது இமையவர்மன் அழைப்பாரே? 'என்ன பேசினான்?' என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவேன்?' என்று வருந்தினான். ஆனால் ஒன்றை ஒன்று கதிரவன் நன்கு புரிந்துகொண்டான். இதுவரை தன்னை மிரட்டி அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தனர் தானாகவே அழைப்பைத் துண்டித்ததை அவன் உணரவில்லை. சிலர் இப்படித் தான் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தூண்டில் புழுவாகவே துடிக்க வேண்டும். அது அவர்களின் விதி. கதிரவன் அந்த ரகம் தான். பாவம்!
அதற்குள் இமையவர்மனே லைனில் வந்துவிட்டார்.
"அங்கிள் அது..." என்றவன் அவன் சொன்னதில் பாதிமட்டும் சொன்னான். டிரஸ்ட் ஆரமிக்க வேண்டும் என்றதை மட்டும் சொன்னவன் மீதியைச் சொல்லவே இல்லை. பின்னே, யான் பெற்ற இன்பமாயின் பெறுக இவ்வையகம் என்று தரலாம். மாறாக, இங்கே நான் ஒருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ! என்று இருப்பவன் எப்படிச் சொல்லுவான்?
அவனையும் அறியாமல் கண்ணீர் வந்தது. இமையவர்மனும் அவனின் சொல்லைக் கேட்டு வருந்தினார். இருந்தும் அவன் 15 நாட்களில் பிசினஸ் செய்ய வருவதாகச் சொன்னது அவருக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது.
"சரி டா கதிரா. நாம ஏற்கனவே டிரஸ்ட் நடத்துறோம் தான். இருந்தும் நீ அதற்கு ஆகவேண்டிய நடைமுறைகளைப் பாரு. சரியா?"
"சரி அங்கிள்..."
அவர் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்து அந்தச் செய்தியை சகுந்தலாவிடம் சொன்னார். அவரும் எல்லாமும் மாறும் என்று நம்பினார். பாவம் விதி நடக்கவிருப்பதை எல்லாம் நினைத்துச் சிரித்தது.
...........................................................................................................................................................
'அவன் கணக்கெல்லாம் காரணமாதான் இருக்கும்' என்று ராஜேந்திரன் சொன்ன இந்த வாக்கியத்தையே நினைத்து நினைத்து குழம்பியவனுக்குத் தான் தன் கடமை என்னவென்று புரிந்தது. இருந்தும் அவனுக்குள் நிறைய குழப்பம் எழுந்தது. சில விஷயங்களை நன்கு கூர்ந்து ஆராய்பவன் இவன். அதே போல் நடந்ததை நன்கு யோசனையும் செய்பவன். செய்தான். அவனால் நினைத்தால் அவனின் தற்போதைய மன அரிப்பை உடனே நிவர்த்திச் செய்திட முடியும் தான். அவன் செய்யவில்லை. செய்யவும் போவதில்லை. சில சமயங்களில் நமக்கு நடப்பதை எல்லாம் நாம் செய்ததிற்கான பலாபலன்களே என்று நினைப்போம் அல்லவா? அந்த நிலையில் தான் இந்திரன் தற்போது இருக்கிறான். ஒருவேளை இப்போதே இதைக் கண்டுபிடித்திருந்தால் அவன் பின்னால் நடக்கவிருக்கும் பல விஷயங்களை முளையிலே கிள்ளி எறிந்திருக்க முடியும். அவன் வாழ்க்கை உடனே மாறியிருக்கவும் செய்யலாம். ஆனால் அவன் அதற்கு விரும்பவில்லை. அதைக்காட்டிலும் அதையெல்லாம் நன்கு உணரும் நிலையில் தற்போது அவனில்லை.
"இதும் கடந்து வாழ வேண்டும்,
என்னிலே,
உடல் உயிர் உன்மனம் ...
அரசியே,
மணம் அடைந்து வாழ வேண்டும்,
நானென்றும் நல் வாழ்வு நினைக்கும் என் மனம்,
மறையாதே என் கனவே, காற்றாக நீ இருப்பாய்...
நீ எந்தன் அருகினில் வா...
take me there
i know this journey ends
oh wake me up
i need to breathe again
i need to
i need to breathe again...(பாடல் வரிகள்...)
******************************

அன்று காலை முதலே வீடு பரபரப்பாக இருந்தது. அதற்கு ஓர் காரணமுண்டு. இன்று ஒரு தொண்டு நிறுவனத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக கலை விழா நடைபெறவுள்ளது. கிளாசிக்கல் டேன்ஸ், சிங்கிங் என்று ஒரு பெரும் விழா. சிறந்த பர்ப்பார்ம்மன்ஸ் செய்பவர்களை கௌரவித்தும் பரிசுகள் வழங்கப்படும். கூடவே யங் டேலேண்ட்ஸ் வெளியே கொண்டு வரும் முயற்சியும் இதில் இருந்தது. அந்த பிரபலமான அரங்கம் எல்லா ஏற்பாடுகளுக்கும் தாங்கி மிளிர்ந்துகொண்டிருந்தது. அதில் ஸ்ரீ, சிந்து நாட்டியப் பயிற்சி பெற்ற பள்ளியிலிருந்து பெஸ்ட் டான்சர்களை கொண்டு ஒரு கிளாசிக்கல் நடனம் அதிலும் ஒரு பியூஷன் (fusion) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. fusion என்பது எல்லா விதமான நடன முறைகளையும் உபயோகப்படுத்துவது ஆகும். ஆனால் ஸ்ரீக்கு இதில் விருப்பமில்லை. அவளுக்கு பரதம் தான் பிரதான விருப்பம். அவள் ஒரு ட்ரைனிட் கிளாசிக்கல் பரதநாட்டியம் டான்சர். இருந்தும் ஒரு புதிய முயற்சிக்காக இன்று பரதநாட்டிய பியூஷன் டான்ஸ் ஆட ஒப்புக்கொண்டாள். இது ஒரு குழு நடனம்.
பரதநாட்டியத்தை ஆரம்பத்தில் சதிராட்டம் என்று தான் அழைத்து வந்தனர். பின்னர் பாரதா என்று அழைத்து பா - பாவம் (pavam இல்லை bhavam) ரா - ராகம், தா - தாளம் என்று இணைத்து பரதநாட்டியம் என்றானது. விழா நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருக்க விழாவைப் பார்க்க தன் தந்தை கார்மேகம் இமையவர்மன் மாமா, சகுந்தலா அத்தை, தோழி சிந்து, நண்பன் கமலேஷ் என்று அனைவரும் வந்து முதலிருக்கையில் அமர்ந்திருந்தனர். எல்லோரையும் பார்த்தாலும் ஏனோ அவள் மனம் வேறொருவரையும் விரும்பியது. ஆனால் அவன் தான் இங்கே இல்லையே? இங்கே என்றால் இந்தியாவிலே இல்லையே. அதனால் அவளுள் ஒரு ஏக்கம், ஒரு கவலை இருந்தும் அதை முயன்று மறைத்தாள். பின்னே நாட்டியம் ஆடும்போது நம்மையும் அறியாமல் நம் முகம் அதைக் காட்டிக்கொடுத்துவிடுமே?அப்றோம் எப்படி பாவங்களை பர்ப்பாரம் செய்ய முடியும்?
முதலில் சில கச்சேரிகள் மற்ற நிகழ்ச்சிகள் என்று நடைபெற்றுக்கொண்டிருக்க இறுதியாக டேன்ஸ் நடைபெற துவங்கியது. நீலமும் ஆரஞ்சும் கலந்த அழகிய பட்டுடுத்தி ஆபரணங்கள் பூட்டி கைகளில் மருதாணி சிவக்க அளவான ஒப்பனைகளில் தேவதையாய் மிளிர்ந்தாள் ஸ்ரீ என்னும் ஸ்ரீலேகா. தன்னைச் சுற்றி ஆறு பேர் நின்று ஆடத் தொடங்கினாலும் வானத்தில் இரவில் லட்சம் கோடி நட்சத்திரங்கள் புடைசூழ்ந்திருந்தாலும் தனியாக மொத்த கவனத்தையும் இழுக்கும் முழுமதியைப் போல மொத்த கவனத்தையும் தன் மீது விழ வைத்திருந்தாள் ஸ்ரீ. தொடங்கியதும் நன்றாக ஆட ஆரமித்தவளால் அடுத்த சில நிமிடங்களிலே நன்றாக ஆடமுடியவில்லை. எப்படி ஆடமுடியும்? தன் முன்னால் ஈராயிரம் கண்கள் வட்டமடித்தும் அசராமல் இருந்தவள் எங்கோ ஒரு மூலையில் இருந்து தன்னை ரசிக்கும் அவ்விரண்டு கண்களுக்குச் சொந்தக்காரனை மட்டும் எளிதில் கடக்கமுடியவில்லை?
இதுவரை எங்கே அவன் காணவில்லை என்று துடித்த மனம் இப்போதோ ஏனடா அவன் வந்தான் என்று நொந்து கொண்டது. பின்னே செய்யும் எந்த விஷயத்திலும் முழு கவனத்துடன் ஈடுபடுபவளால் அவனின் பார்வையைக் கடந்து செல்ல முடியவில்லை. கண்களால் அவனைத் துழாவினாள். எங்கே நடுவில் நின்றாள் தடுமாறிவிடுவோமோ என்று பயந்தவள் ஆடிக்கொண்டே இடத்தை மாற்றி பின் வரிசையில் நின்றாள். இது அவனுக்கு இன்னும் வசதியாகியது. பின்னே அவன் நிற்கும் சைடு தானே இப்போது அவள் ஆடுகிறாள். ஒரு வழியாக பரதம் முடிய ஸ்க்ரீன் மெல்ல விழுந்தது. பலத்த கரகோஷங்கள் எழ அவள் வேகவேகமாய் உடை மாற்ற அங்கே இருக்கும் அவளறைக்குச் சென்று அவனை மனதால் திட்டிக்கொண்டே தாழிட்டுத் திரும்ப அங்கே மந்தகாச புன்னகையில் கைகளை பவ்வியமாகக் கட்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தான் அக்கள்வன். ஒருகணம் திடுக்கிட்டவள் மூச்சை இழுத்து விட்டு,"நீங்க? நீங்க இங்க என்ன பண்றீங்க?" என்றாள் ஸ்ரீ.
"சும்மாவே உன் கண்ணு ஆயிரம் பாஷைகளையும் பாவங்களையும் சொல்லும். இதுல இன்னைக்கு நீ பார்பார்ம் வேற பண்ணுற? எப்படி பேபி அதை நான் மிஸ் பண்ணுவேன்?" என்று புருவம் உயர்த்தினான்.
"ஆனா நீங்க நீங்க லண்டன்ல இருக்கறதா தானே...?" என்று அவள் முடிக்கும் முன்னே,
பாஸ்ப்போர்ட் டிக்கெட் எடுத்து நீட்டினான். வாங்கிப்பார்த்தவள் இதற்காக அவன் இவ்வளவு தூரம் வந்திருக்கிறானா என்று கண்களில் வியப்பும் ஆச்சரியமும் கலந்து காட்ட அவன் மனம் அவளை தாறுமாறாக ரசித்தது.
பின்னே சும்மவே ஸ்ரீ லைக்ஸ் அள்ளுவாள்? இன்னைக்கு பட்டுப்புடவையில் தலையைக் கொண்டையிட்டு காலில் கொலுசு, சலங்கை கட்டி இடுப்பில் ஒட்டியாணம் கழுத்தில் நகைகள், நெற்றிச்சுட்டி தேர்ந்த மடிப்பில் புடவைக் கட்டி, டிவைன் பியூட்டியாக பாரம்பரிய பரதநாட்டிய உடையில் மிளிர்பவளை அவனால் எப்படி ரசிக்காமல் இருக்க முடியும்?
அதும் பர்ப்பார்ம்மென்ஸ் முடித்து வேர்வை சொட்டசொட்ட நின்றாலும் அது அவனுக்கு அவளின் அருகாமையில் அவள் வாசம் நாசி தீண்ட இன்ச் இன்ச்சா அவளை அளவெடுத்துக்கொண்டிருந்தான்.
அவளுக்கு இப்போது பயத்தில் இன்னும் படபடப்பு கூட அவனைப் பார்க்கமுடியாமல் நின்றுக்கொண்டிருந்தாள்.
"லேக்கு, இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமா டி? உன்ன கிட்ட வெச்சிக்கிட்டு இப்படி எட்டி நிக்கவும் முடியில அதேநேரம் உன்னை விட்டு தூரப்போகவும் முடியில... கிட்டத்தட்ட திரிசங்கு சொர்க்கநிலைனு சொல்லுவாங்க பாரு அப்படி இருக்கேண்டி பேபி..." என்று குழைந்தவன் அவளை நெருங்க கதவு தட்டப்பட்டது.
"ஐயோ!" என்று பதறினாள் ஸ்ரீ.
வழக்கம் போலவே அவளின் தவிப்பை அவளின் கண்களால் ரசித்தவன் அமைதியாக அங்கே அமர்ந்தான்.
"எந்திரித்து போங்க..." என்று கிட்டத்தட்ட கெஞ்சினாள்.
அவன் எழுந்து கதவுப் பக்கம் போக,
"ஐயோ அங்கயில்ல..." என்றவள் பாத்ரூமில் அவனைத் தள்ளிவிட்டு கதவைத் திறக்க அங்கே சிந்து, சகுந்தலா இருவரும் தான் நின்றுகொண்டிருந்தனர்.
"என்னடா இன்னமுமா டிரஸ் மாத்தல? சரி கிளம்பு நாம வீட்டுக்குப் போயே மாற்றிக்கொள்ளலாம்..." என்றார் சகுந்தலா.
"ஐயோ இல்லை அத்தை அது..." என்று அவள் திணற அவளின் முழியை வைத்தே ஏதோ சரியில்லை என்று உணர்ந்த சிந்து,"நீ போமா நான் கூட்டிட்டு வரேன்..." என்றவள் கதவை அடைக்க இப்போது இன்னும் பயந்தாள் ஸ்ரீ.
"என்னாச்சி டி? ஏன் டென்ஷனா இருக்க?"
"அது அது... ஒன்னுமில்ல..."
"சரி போய் பிரெஷ் ஆகிட்டு வா போலாம்..."
'ஐயோ உள்ள போனா அவன் என்ன பண்ணுவானோ?' என்று குழம்பி நின்றாள் ஸ்ரீ. 'இந்திரா அவனவன் எடுக்குற முடிவெல்லாம் உனக்கு சாதகமாவே இருக்கே! எப்படி?' என்று மனதிற்குள் இந்திரன் அவனையே மெச்சிக்கொண்டிருக்க,
"போடி டைம் ஆகுது. மசமசன்னு நிக்காதா..." என்றாள் சிந்து.
'ஐயோ இவ கிட்ட எப்படிச் சொல்றது?' என்று திண்டாடியவள்,
"சிந்து... சிந்து..."
"என்ன? வீட்டுக்கே போலாமா? சரி வா..."
"இல்லடி அது..."
மேலும் ஸ்ரீயைச் சிக்கலில் தள்ள இந்திரன் வெளியேறினான். அவனைக் கண்ட சிந்து ஷாக்காகி நிற்க,'ஐயோ இவளை எப்படிச் சமாளிக்கிறது? எதுவும் நடக்கலன்னு சொன்னா இவ வேற நம்பவே மாட்டாளே?' என்று ஸ்ரீ முழிக்க,
"ஏய் ஏய் நீ எப்படி இங்கேயிருந்து வர? ஆமா நீ எப்படி சென்னை வந்த? இது அப்பாக்குத் தெரியுமா?" என்றாள் சிந்து.
அவள் திரும்பி ஸ்ரீயை முறைக்க,
"இரு அம்மாவைக் கூப்பிடுறேன்..." என்று செல் எடுக்க, அதை வெடுக்கென பிடுங்கினாள் ஸ்ரீ.
"குட்டிமா, இங்க பாரு..."
"நீ பேசாதா டா..."
"சொல்றதைக் கேளு..."
"நான் அம்மாவைக் கூப்பிடுறேன். நீயே பேசிக்கோ..."
"சரி கூப்பிடு..." என்றான் சாதாரணமாக.
சிந்து ஸ்ரீ இருவரும் அதிர்ச்சியாகித் திரும்ப,
"கூப்பிடு. எப்படியும் அவங்க இப்படிப் பார்த்த எங்க விஷயத்தை இப்போவே சொல்லிடுறேன். அண்ட் சீக்கிரம் கல்யாணம் வேற செய்யணும். எல்லாம் பேசிடலாம்..." என்றான் கூலாக,
"ஓ நீ சொன்னா உடனே கல்யாணம் செஞ்சி வெச்சிடுவாங்களா? நெனப்புத்தான்..." என்று இந்திரனுக்கு மல்லுக்கட்டினாள் சிந்து.
"அதையும் பார்த்திடலாம்..." என்று அவனே அழைக்க முற்பட, ஸ்ரீயே அவனின் செல்லையும் பிடுங்கினாள்.
"எனக்கு எதுனாலும் ஓகே. என்ன ஸ்ரீ உனக்கு ஓகே வா?" என்றான் இந்திரன்.
அவள் தான் திருதிருவென விழித்தாள்.
"ஸ்ரீ இப்போவே எனக்கு பதில் வேணும் சொல்லு..." என்றான்.
அவள் சிந்துவைப் பார்த்தாள்.
"என்னையேண்டி பார்க்கற? பதில் சொல்லு?"
அவள் அமைதியாகவே இருக்க,
"இவன் உன்னை எவ்வளவு கொடுமை பண்ணியிருக்கான்? உனக்கு எவ்வளவு வலியைக் கொடுத்திருக்கான்? இவனை கல்யாணம் பண்ணணு வை நீ அவ்வளவு தான்..." என்று சிந்து இந்திரனை முறைத்தபடியே சொன்னாள்.
ஸ்ரீ அதிர்ந்து சிந்துவைப் பார்க்க,
"என்ன பார்க்கற? இவன் என் அண்ணன் தான். ஆனாலும் நீ என் பெஸ்டி. எனக்கு உன் சந்தோசம் தான் முக்கியம். நீ வேணான்னு சொன்னா இப்போவே அப்பாவைக் கூப்பிடுறேன்..." என்று சொல்லி செல்லை பிடுங்க போக,
ஸ்ரீ தடுத்தாள்.
"அப்போ உனக்கு இவனைப் பிடிக்குமா?" என்று சிந்து வினவ,
அவள் பதிலுக்காக சிந்து, இந்திரன் இருவரும் காத்திருந்தனர்.
"இப்போ கூடப்பாரு யாருக்கும் தெரியாம உன் ரூம்க்கு வந்து உன்னை எப்படி பழிவாங்குறான்? ஒருவேளை நாங்க வரலைன்னா?" என்று சொன்னது தான் தாமதம்,
"நிறுத்து சிந்து. நீ யாரை தப்பா பேசுற தெரியுமா? அது உன் அண்ணன். அவரைப் போய் எப்படி நீ தப்பா பேசுற?"
"அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் தப்பு தப்பு தான். உனக்கு வேற சின்ன வயசுல இருந்தே அவனைப் பிடிக்காதில்லை?"
"யாரு சொன்னா? பிடிக்காதுன்னு நான் சொன்னேனா?"
"பின்ன அவன் தான் உனக்கு நிறைய..." என்று சிந்து முடிப்பதற்குள்,
"நிறுத்து சிந்து. அது எங்க ரெண்டு பேரு சம்மந்தப் பட்டது. இதுல நீ தலையிட வேணாம்..." என்று ஸ்ரீ உரைக்க,
கோவம் வந்த சிந்து, அவள் போனை பிடுங்கி சென்று," இனிமேல் உங்க விஷயத்துல நான் தலையிட்டேனா ஏன்னு கேளு?" என்று வெடுக்கென வெளியேறினாள்.
ஸ்ரீயையே இந்திரன் பாவமாய்ப் பார்த்தான்.
"நான் டிரஸ் மாத்திட்டு வரேன். இங்கேயே வெய்ட் பண்ணுங்க. நீங்க தான் என்னைக் கூட்டிட்டுப் போகணும். யாரும் இல்லை. சரியா?" என்றாள் ஸ்ரீ.
"ஹ்ம்ம்" என்றவன் அங்கேயே அமர அவள் உடைமாற்ற சென்றதும், செல்போனை எடுத்தவன்,"தேங்க்ஸ் குட்டிம்மா. லவ் யூ..." என்று சிந்துவுக்கு நன்றி உரைத்தான்.
"இங்க பாரு நீ கெஞ்சனத்துக்காகத் தான் இப்படி ஒரு ஐடியா சொன்னேன். மரியாதையா என்னை பலமா கவனிக்கணும். இல்லை அம்மாகிட்ட எல்லாம் சொல்ல மாட்டேன். உன் ஆளுகிட்டயே போட்டுக் கொடுத்திடுவேன் பார்த்துக்கோ?" என்று செல்லமாக ப்ளாக் மெயில் செய்தாள் சிந்துஜா.
"என் தங்கை! டன்..."
"ஆனாலும் இந்தக் குள்ளச்சி இப்படி பொசுக்குன்னு என்னையே மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிடுவான் நான் கொஞ்சம் எதிர்பார்கல டா அண்ணா..."
"நானும் கூடத் தான் குட்டிமா. எனக்கே ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி..."
"எப்படி டா உனக்கு ஓகே சொன்னா? எனக்கே ஆச்சரியம்..."
"எல்லாம் உனக்காக தாண்டி அப்படிப் பண்ணேன்..." என்றவனின் குரல் உண்மையிலே உடைந்திருக்க,"உன்னால தான் அவ என்னை வெறுக்குறா. போடி..."
"நானா உன்னை அப்படியெல்லாம் நடந்துக்கச் சொன்னேன்? எனக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை. இன்னொரு தடவ என்னை குறைசொன்னா பிச்சுப்புடுவேன் டா அண்ணா?"
"ஹ்ம்ம்..." என்றவனின் குரல் கம்மியது.
"தீரா..."
"சொல்லு குட்டிமா..."
"இனி அவ அழக் கூடாது. சப்போஸ் அதுக்கு நீ காரணமா இருந்த நீ இதுவரை பார்க்காத சிந்துவா நான் மாறிடுவேன். எனக்கு உன்னைவிட அவ முக்கியம். ஆமா அவளுக்கப்புறோம் தான் நீ..." என்ற சிந்துவின் குரலில் அவ்வளவு உறுதி இருந்தது.
"சரி டா குட்டிம்மா. ப்ரோமிஸ்..." என்றான் இந்திரன்.
ஏனோ அவனுக்கு இதெல்லாம் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து அவனை வாட்டியது. 'ஆமா சிந்து, நான் தான் அவளைக் கொன்னுட்டேன். நான் நான் உன்னையும் கொன்னுட்டேன். எனக்கு எனக்கு மன்னிப்பே கிடையாது குட்டிமா. நீயும் ஸ்ரீயும் இல்லாம உங்க நினைவுகள் என்னை துரத்தி துரத்தி கொல்லனும். நான் அணுவணுவை துடிக்கணும்...' என்று நினைத்தவன் ஏனோ இன்று மாலை கல்யாணி பிறந்த நாளைக் கொண்டாட கேக் வாங்கிவந்து படுத்தவன் ஏதேதோ எண்ணச் சுழலில் சிக்கித் தவித்தான். தொண்டைக்குள் மீன் முள் மாட்டிக்கொண்டதைப் போல் தான் இந்திரனின் தற்போதைய நிலை இருந்தது. தண்ணீரும் குடிக்க முடியவில்லை, முள்ளை வெளியேவும் எடுக்க முடியவில்லை. இதற்கு நடுவில் மீண்டும் பிசினஸ் செய்ய வருகிறேன் என்று சொல்லிவிட்டான் தான். ஆனால் முன்புபோல் அவனால் சிறப்பாக செய்ய முடியுமா? அவனின் மகிழ்ச்சியாக இருந்த இருவர் தற்போது இல்லையே?
மறக்கவில்லை. மறக்கப்போவதுமில்லை. என் உயிருள்ள வரை சில உறவுகளை... நமக்காக துடித்த, தவித்த உள்ளங்களை... காலம் கடந்தும் நாம் பாதுகாக்க படவேண்டிய பொக்கிஷம் அது!
(வானிலை மாறும் !)
 
இந்த எபிலயும் நிறைய சஸ்பென்ஸ் இருக்கு.. அதப்பத்தி கேக்கக்கூடாது...(கேட்டாலும் சொல்ல மாட்டீங்கன்றது வேற விஷயம்)சொன்னா த்ரில் போய்டும்..... soooo மை விடு தூது ....என்னாச்சு :D :D ? ?
 
இந்த எபிலயும் நிறைய சஸ்பென்ஸ் இருக்கு.. அதப்பத்தி கேக்கக்கூடாது...(கேட்டாலும் சொல்ல மாட்டீங்கன்றது வேற விஷயம்)சொன்னா த்ரில் போய்டும்..... soooo மை விடு தூது ....என்னாச்சு :D :D ? ?
எஸ் கேட்கவே கூடாது. சொல்றேன்? நான் கடந்த சில நாட்களா ரொம்ப பிசி. இந்த அப்டேட் கொடுக்கவே போதிய நேரமில்லை. ஆனா கண்டிப்பா இந்த மாதத்தில் மை விடு தூது தொடங்கிடுறேன்... நன்றி??�
 
நிறைய கேள்விகள் ...பதிலுக்கு வெயிட் பண்ணுவோம்
கண்டிப்பா. சீக்கிரம் சொல்லிடுறேன்... நன்றி?
 
Top