Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை!-9

Advertisement

praveenraj

Well-known member
Member
அன்று மாலையே சகுந்தலா இமையவர்மன் இருவரும் திருமணத்திற்குச் செல்வதற்காக தயாராகிக்கொண்டிருந்தனர். அப்போது சுமதி தான் சகுந்தலாவிடம் தங்கள் இனத் தலைவர் நேற்றே வந்து இந்திரனை அழைத்துச் சென்றதையும் அதற்கு அவனும் வருகிறேன் என்று சொன்னதையும் தெரியப்படுத்த சகுந்தலாவிற்கு இந்த நிலையில் இந்திரன் அங்கே வரவேண்டுமா என்று தோன்றி தயங்க, இமையவர்மன் தான் என்ன செய்வதென்று யோசித்தார். அதற்குள் இந்திரனும் கீழே இறங்கி வந்து," சுமதிம்மா எத்தனை மணிக்கு அங்கே இருக்கனும்?" என்று கேட்க, அப்போது இவனும் வருகிறானா? என்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க அவனோ மீண்டும்,"சுமதிம்மா உங்களைத்தான் கேட்கிறேன், எத்தனை மணிக்கு அங்க போகணும்?"
அதற்கு சுமதியம்மா,"தம்பி பொழுது சாய்ந்ததும் தான் நாங்க பூஜையையே தொடங்குவோம். எப்படியும் ராவு 8 ஆகிடும் தம்பி..." என்று சொல்ல,
"அப்போ 6 மணிக்கெல்லாம் கிளம்பினால் சரியாக இருக்கும்..." என்று அவனுக்குள்ளே சொல்லிக்கொண்டவனாய் மீண்டும் மேலே ஏற, இமையவர்மன் தான் ராஜேந்திரனை அழைத்து பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டும் என்றதும் அவரும் அதற்கேற்ப அனைத்தும் சரிசெய்ய அவரின் முகவாட்டத்தைப் பார்த்த ராஜேந்திரன்,"ஐயா இதுக்கெதுக்கு இவ்வளவு யோசனை? தம்பியை பத்திரமா பார்த்துக்கொள்ள வேண்டியது என் பொறுப்பு. அப்படியே எதுனாலும் என் உயிரைக் கொடுத்தாவது நான் தம்பி உயிரைக் காப்பாத்துவேன்..." என்று சொல்லிச் செல்ல, அதில் கொஞ்சம் கோவமானவர்,"இப்படியெல்லாம் பேசாத டா ராஜா. இனியும் என் வாழ்க்கையில நான் எனக்கு வேண்டிய யாரையும் இழக்க தயாரா இல்லை..." என்று சொல்லி உள்ளே விரைய,பாவம் இன்று நடக்கவிருக்கும் விபரீதங்கள் எதுவும் அவருக்குத் தெரியாதே!
இந்திரனுக்கும் ஏனோ மனமெல்லாம் ஒருவித பரவசத்திலே இருந்தது. காரணம் தான் ஏனென்று அவனுக்குப் புரியவில்லை. சில விடியல்கள் நமக்கு ஒரு வித பரவசத்தைக் கொடுக்கும் அல்லவா? அதாவது இன்று நம் வாழ்வில் ஏதோ முக்கியமான நிகழ்வு நடக்கயிருப்பதாய் ஒரு இண்டூஷன் அவனுக்குள் (intuition - உள்ளுணர்வு) எழுந்தது. ஆனால் அது என்னவென்று தான் அவனுக்குப் புரியவில்லை.
அவன் சில உடைகளை எடுத்து அணிய பாவம் எதுவுமே அவனுக்குப் பொருந்தவில்லை. எல்லாம் மிகவும் இறுக்கமாக இருந்தது. ஒருவழியாக தேடிப் பிடித்து ஒரு உடையை எடுக்க அருகே கிடந்த அந்த உடையைப் பார்த்ததும் அவனுக்கு சிந்துவின் நினைவு வந்தது. அது அவன் பிறந்தநாளுக்கு சிந்து பரிசளித்த உடை.
அன்று இந்திரனின் பிறந்தநாள். அதும் 25வது பிறந்தநாள். அவனின் ஒவ்வொரு பிறந்தநாளும் மிகவும் விமர்சியாகவே கொண்டாடப்படும். பின்னே தவமிருந்து பெற்றவன் தானே இவன்? என்னதான் ஆளாளுக்கு உடையை த் தேர்ந்தெடுத்தாலும் அவன் பெரும்பாலும் இல்லை எப்போதும் அணிவது என்னவோ சிந்து எடுத்துத் தரும் உடை தான். அவன் அன்று காலையே எழுந்து கீழே வந்து ஜாகிங் சென்று அன்னை தந்தையிடம் வாழ்த்துக்களை வாங்கிக்கொண்டு குளிக்கச் சென்றான். அந்நாளில் வீட்டில் கோவிலில் என்று அவனுக்காக தடபுடலாக ஏற்பாடுகள் நடப்பது வழக்கம். நிறைய வேலைகள் இருக்கும். ஸ்ரீ காலையே தன் அத்தைக்கு உதவ வந்துவிட அப்போது அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே மேலேறினான் இந்திரன். அவன் சென்றதும் தான் அவனிடம் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கச் சொல்லவில்லை என்று சகுந்தலாவிற்கு நினைவு வந்தது . மேலும் அவனுக்கு தலைகுளிக்கும் போது மட்டும் அவன் அன்னை வந்து தலையில் நீருற்றி குளிக்கவைக்க வேண்டும். அவன் சென்றதும் நினைவு வந்தவராய் மேல செல்ல எத்தனிக்க அப்போது பார்த்து ஒரு முக்கியமான நபர் வீட்டிற்கு வந்துவிட அங்கிருந்த ஸ்ரீயை அனுப்பி,"அவனை எண்ணெய் தேய்த்து குளிக்குமாறு சொல்லிவிட்டு வா டா தங்கம். அவன் சொல்லலைனா தலைக்குளிக்காமலே வந்திடுவான். கோவிலுக்கு வேற போகணும்..." என்று அவளை மேலே அனுப்ப, ஸ்ரீயோ தயங்கியபடியே எண்ணெய்யை எடுத்துக்கொண்டு மேலே சென்றாள். சென்று அவனைத் தேட அவனோ பாத்ரூமில் இருக்கக்கண்டு எப்படிக் கூப்பிட என்று தயங்கிவாறே கதவைத் தட்ட,
"யாரு ? யாருனு கேட்டேன்?"
"அத்தை எண்ணெய் கொடுக்கச் சொன்னாங்க..." என்று தடுமாறியவாறே சொல்லி முடித்தாள் ஸ்ரீ.
"அம்மாவே சொன்னாங்களா?"
"ஆமா..."
"சரி கொடு" என்று சொல்லி கையை நீட்ட அவள் எண்ணெய் கிண்ணம் தரும்போது அவளையும் உள்ளே இழுத்துக்கொண்டான் இந்திரன். பதறியவள் உணர்ந்து கத்தும் முன்னே கதவையும் சாற்றிக்கொண்டான்.
பயத்தால் அவள் விழி அங்குமிங்கும் அலைபாய, அவன் உதடுகளோ அவள் தொண்டை பகுதியில் மெதுவாக இறங்க, நெளிந்தவள் சுயம் பெற்று அவனைப் பின்னே தள்ளி,"என்ன பண்றீங்க?" என்று குரல் உயர்த்தி கத்த,
"இந்தப் பூனைக்குட்டிக்குள் இருந்து புலியின் உறுமலா?" என்று ஆச்சரியப்பட்டவன் அவளையே பார்க்க அவளோ இப்படி கத்திவிட்டோமே இவனின் எதிர்ப்பு என்னவாக இருக்கும் என்று பயத்தில் இருக்க,
அவன் இரண்டடி முன்னே வரவும் அவளோ,"என்ன பண்றீங்கன்னு உங்களுக்குப் புரியுதா இல்லை புரியலையா?" என்று கத்த,
"நான் என்ன பண்ணேன்? நீ சொன்னேன்னு தான் நான் நெருங்குறேன்..." என்று அசராமல் பதில் சொல்ல,
"நான் சொன்னேனா?"
"ஆமா நீ தானே 'உன்னையே 'தரேன்னு (எண்ணெய் என்னை என்றானது) சொன்னையே? சோ எடுத்துக்கலாம்னு வந்தேன்..." என்று சொல்ல,
'இவனுக்கு இப்படியெல்லாம் கூடப் பேச வருமா?' என்று நினைத்து ஆச்சரியப்பட்டவளுக்கு அப்போது தான் 'அம்மாவா சொன்னாங்கனு' என்று அவன் கேட்ட கேள்வியும் ஞாபகம் வந்தது.
அவளுக்குள்ளயும் சிரிப்பு, நாணம், அந்தச் சிலிர்ப்பு இருந்தும் அனைத்தையும் மறைத்து, இல்லை மறைக்க முயன்று,"என்னையை இல்ல மிஸ்டர் எண்ணெய். ஐ மீன் ஆயில்..." என்று நிறுத்தி ஆழமாகச் சொல்ல,
"ஓ யூ மீன் ஆயில்?" என்று அவன் தெரியாதைப் போல கேட்டவன் அசராமல்,"வழக்கமா அம்மா தானே எனக்கு எண்ணெய் தேச்சுவிடுவாங்க?" என்று அடுத்த குண்டையும் போட்டான்.
அவன் கேட்கவருவது புரிய,"அதெல்லாம் எனக்குத் தெரியாது. அத்தை கொடுக்க சொன்னாங்க நான் கொடுத்துட்டேன்..." என்று விடைபெற முயல,
"லேக்கு, பர்த்டே பாய் விஷ்ஷை நிறைவேத்த மாட்டியா?" என்று அவன் ஏக்கமாய் குழைய,
அவள் திரும்பி முறைத்தாள்.
"நான் என்ன என்னைய குளிப்பாட்டவா சொன்னேன்? ஜஸ்ட் தலைக்கு மட்டும் எண்ணெய் தேய்ச்சு விட்டு சீகைக்காய் போட்டுட்டு நீ பறந்து போயிடலாம்... ப்ளீஸ்..." என்று அவன் பார்க்க,
சின்ன வயதுமுதல் அவனுக்கு சகுந்தலா தான் தலைக்கு தண்ணீர் ஊற்றவேண்டும் என்று அவளுக்கும் மட்டும் தெரியாதா என்ன?
"சரி உட்காருங்க..." என்றவள் புடவையைத் தூக்கிச் சொருகி ஆயத்தமாக, அவன் கண்களோ இனிப்பை மொய்க்கும் ஈயாய் அவனவளின் அங்கங்களை மொய்த்துக்கொண்டிருந்தது. அதை அவள் உணராமலும் இல்லை. இருந்தும் ஒன்றுமே நடவாதது போல் அவள் அவனுக்கு எண்ணெய் தேய்த்து தலைக்கு தண்ணீர் ஊற்றி வேகமாக வெளியேற முயல,
"லேகா, பர்த்டே பாய்க்கு கிபிட் எதுவும் கிடையாதா?" என்று பாவமாய் வினவ,
"என்ன வேணும்?"
"என்ன கேட்டாலும் கிடைக்குமா?" என்று அர்த்தத்துடன் அவளைப் பார்க்க,
சுதாரித்தவள்,"என்னால முடிஞ்சா... எனக்கும் விருப்பமிருந்தா..." என்று அழுத்த,
அவளின் கைகளைப் பிடித்தவன் அவன் கண்களில் வைத்துக்கொண்டு, கிட்டத்தட்ட அவன் குட்டி நாற்காலியில் அமர்ந்து நின்றுக்கொண்டிருக்கும் அவளிடம் யாசகம் போல் வேண்டினான்,
"என் லேகா பேபிகிட்டயிருந்து நான் என்ன கேட்பன்னு உனக்குத் தெரியாதா?" என்றவனின் கண்களில் ஒரு ஏக்கம் இருந்தது. மேலும் அக்கண்கள் கலங்கியது. அது அவன் தலையிலிருந்து கொட்டும் தண்ணீர் அல்ல என்றும் அவன் மனதிலிருந்து ஆத்மார்த்தமாக வரும் வார்த்தைகளின் வெளிப்பாடு தான் அவன் கண்களில் இருந்து வரும் கண்ணீர் என்று அவளுக்கும் தெரிந்தது.
"எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடு ஸ்ரீமா. நான், இதுவரை உனக்கு என்மேல இருக்கும் எல்லா அபிப்ராயத்தையும் மாற்றிக்காட்டுறேன். இப்போ மட்டும் எஸ் சொல்லு லேகா, உன் வாழ்க்கையில கடைசி நொடிவரை ஏன்டா இவனுக்கு நாம எஸ் சொன்னான்னு நீ நினைக்காத மாதிரி உன்கூட வாழ்ந்துக்காட்டுறேன். உன்னைத் துன்புறுத்துன இந்திரனா இல்லாம உன்னை ரட்சிக்கிறவனா, ரசிக்கிறவனா... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியில பேபி, ப்ளீஸ்..." என்று மன்றாடினான்.
அவனின் கண்களையே உற்றுப் பார்த்தவள் அதில் தெரிந்த உண்மையைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தாலும், கொஞ்சம் பயமும் இருக்கத்தான் செய்தது.
"நான்... நான் கொஞ்சம் யோசிக்கணும்..." என்று சொல்லி அவனின் கண்களைப் பார்க்க,
"நல்லா யோசி பேபி, ஆனா சீக்கிரம் பதில் சொல்லு..." என்று அவன் சொல்ல அவள் வேகமாய் அவ்விடத்திரிந்து மாயமானாள். இது அவன் செய்யும் இரண்டாவது ப்ரோபோசல். முதல் ப்ரோபோசல் தான் அவள் பத்தாவது படிக்கும் போதே நடந்துவிட்டது.
இதன் பிறகுதான் அன்று அவள் சிந்துவின் அறையில் இருக்கும் போது உள்ளே சென்று அவளிடம் விளையாடியவன் பின்பு சிந்து வந்ததும் இருவரிடமும் விசாரிக்க அவர்கள் இருவரின் மனதையும் அறிந்துகொண்டாள்.

அப்படியே யோசனையில் இருக்க அவனின் அறைக்கதவு தட்டப்படவும் நினைவுக்கு வந்தவன்,"ஃபைவ் மினிட்ஸ்" என்று சொல்லி வேறு உடையை எடுத்து அவசரமாக மாட்டிக்கொண்டு வெளியேறினான்.
அங்கே சகுந்தலா, இமையவர்மன், ராஜேந்திரன் மூவரும் இவனுக்காகக் காத்திருக்க இவன் மணியைப் பார்த்து வேகமாய் கீழே இறங்கினான்.
"சாரிப்பா லேட் ஆகிடுச்சா?" என்றவனை ஏனோ கடவுளைப் பார்த்தவர்கள் போல் இருவரும் பார்க்க, இத்தனை நாட்களில் அவர்களிடம் இத்தனை தன்மையாக பேசிடவேயில்லை என்று அப்போது தான் அவனுக்கே புரிந்தது. அதற்கு மேல் இங்கே நிற்க பிடிக்காமல் வேகமாய் அவன் காருக்கு போக சகுந்தலா, இமையவர்மன் இருவரும் அளவில்லா சந்தோசம் கொண்டனர். இதில் ராஜேந்திரனுக்கும் சந்தோசமே. காரை பார்த்தவன் அதில் பின்னிருக்கையில் சென்று அமர்ந்தான். அது சகல வசதிகளும் பொருந்திய காராகும். இன் பேக்ட் இது இவன் பேவோரைட் காரும் கூட. எத்தனையோ முறை இதை இவன் ஓட்ட அவன் குடும்பம் மொத்தமும் இதில் அமர்ந்து பயணம் செய்துள்ளது. இதன் மதிப்பே பல கோடிகள் ஆகும். ஒருவேளை இந்தக்காரை அன்று இவன் எடுத்துச்சென்றிருந்தால் அந்த விபத்தில் ஸ்ரீயும் சிந்துவும் உயிர்பிழைத்திருப்பார்களோ என்று இவனுக்குத் தோன்றியது. எல்லாம் விதி என்று நினைத்துக்கொண்டு இருக்க சகுந்தலாவும் இமையவர்மனும் வந்து அருகில் அமர்ந்துக்கொண்டனர். அவர்கள் முகத்திலும் ஒரு சின்ன பொலிவு தென்பட்டது.
காரானது அந்த குண்டும்குழியுமான சாலையில் கொஞ்சம் பயணித்து அந்தக் கோவிலிருக்கும் வனத்தின் அருகே வந்து நின்றது. பழங்குடியினர்களுக்கு ஏது மாடமாளிகை கோவில்? அவர்களுக்கு எல்லாமே காவல் தெய்வம் தானே? அதும் அடர்ந்த காட்டில் அல்லவா இருக்கும்? அங்கிருந்து சுற்றி பாதுகாப்பு ஆட்கள் சூழ ராஜேந்திரனும் தன் பங்கிற்கு தன் இனத்தவர்களைக் கூட்டிக்கொண்டு காட்டுக்குள் நடந்தனர். சற்று அடர்ந்த வனமென்பதால் புலிகள் யானைகள் கூட அவர்களுக்கு முன்னே எதிர்ப்படலாம். ஆனால் அவைகள் அவர்களை எதுவும் செய்யாது. ஏனெனில் மலை வாழ்மக்கள் யாரும் நம்மைப் போல் சுயநலம் மிக்கவர்கள் இல்லையே? நாம் மட்டும் வாழ்ந்தால் போதும், எது எக்கேடோ கெட்டால் என்ன? என்ற எண்ணம் அவர்களுக்கு எப்போதும் இருந்ததில்லை. நம்மைப்போலவே அவைகளும் உயிர்கள் என்றும் இந்த உலகத்தில் வாழ நமக்கு என்ன உரிமைகள் இருக்கின்றதோ அதெல்லாம் அவைகளுக்கும் உண்டு என்று நம்புவார்கள்.
கொஞ்சம் உள்ளே செல்ல தூரமாய் இசைக்கப்படும் இசைக்கருவிகளின் சப்தம் இவர்களை வந்தடைந்ததும் தான் சகுந்தலாவிற்கு கொஞ்சம் நிம்மதி வந்தது. என்னதான் ஏற்கனவே பலமுறை அவரும் இமையவர்மனும் இங்கே வந்திருந்தாலும் இந்திரனுக்கு இதுவே முதல் முறை என்பதால் அவருக்கு இந்த ஐயம். இவர்கள் வருவது அறிந்து அக்குடிமக்கள் எல்லோரும் முன்னே வந்து இவர்களை வரவேற்று இவர்களை தூரமாய் அமரச்சொல்லிவிட்டு அவர்கள் காணிக்கை செய்யவும் பிற சடங்குகள் செய்யவும் ஆயத்தமாகினர். தொலைவில் மணமகளையும் மணமகனையும் தனியே நிற்கவைத்து சில வழிமுறைகளைச் செய்ய அது என்னவென்று ராஜேந்திரன் அவர்ளுக்கு எடுத்துரைத்துக்கொண்டிருந்தார்.
இந்திரன் தான் சில கலவையான மனோநிலையிலே வியாபித்திருந்தான். ஒவ்வொரு சடங்காக நடைபெற்றுக்கொண்டிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சுபநிகழ்ச்சியில் பங்குப்பெறுவதால் இமையவர்மன் சகுந்தலா இருவரும் சற்று மகிழ்ச்சியாக இருந்தனர். ஏதோ ஒரு இனம் புரியாத நிம்மதி அவர்களை ஆட்கொண்டிருந்தது. இந்திரனும் முதலில் கடமைக்கே என்று அமர்ந்திருந்தவன் இப்போது பழங்குடியினரின் பழக்கவழக்கங்களைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான்.
இசைகள் ஒருபக்கம் முழங்க மறுபக்கம் ஆனந்த தாண்டவமிட்டுக்கொண்டிருந்தார் மக்கள். அதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயதுவித்யாசம் இன்றி களிப்படைந்துக் கொண்டிருக்க அக்கூட்டத்தில் ஒரு சிறு பெண் குழந்தை மட்டும் தனியாக வந்து அருகிலிருந்த காட்டுக்குள் சென்றது. இவன் கண்கள் ஏனோ அதை கவனிக்க சரி எதாவது இயற்கை உபாதைகள் கழிக்க சென்றிருப்பாள் என்று இவன் அமைதியாக மீண்டும் அந்த ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். நேரம் ஆகிக்கொண்டே இருக்க அச்சிறுமி மட்டும் மீண்டும் திரும்பவேயில்லை. அதை யாரும் கண்டுகொண்டதாகவே அறிகுறியில்லை. பின்னே எல்லோரும் சந்தோசமான மனநிலையில் இருந்ததால் அவர்கள் மறந்திருக்கலாம் போல என்று நினைத்தான். கிட்டத்தட்ட கால்மணிநேரம் ஆகியும் அவள் திரும்பாமல் இருக்கவே இவன் ராஜேந்திரனை அழைக்கலாம் என்று பார்க்க அவரோ தீவிரமாக தன் தந்தைக்கும் தாய்க்கும் ஏதோ கூறிக்கொண்டிருந்தார். சரி இனியும் தாமதிக்கக் கூடாது என்று நினைத்தவன் எழுந்து அவள் சென்ற திசையில் காட்டுக்குள் நடந்தான். இவன் நல்ல நேரமா இல்லை கெட்ட நேரமோ என்று தெரியவில்லை சுற்றியிருந்த யாருமே இவனை கவனிக்கும் நிலையில் இல்லை. சுற்றி இருட்டாக வேறு இருந்தது.
இவன் அவள் சென்ற தடத்திலே அவளைத் தேடிக்கொண்டு நடந்தது. அவள் பெயர் கூட அவனுக்குத் தெரியாதே?
"ஏ பொண்ணு? பாப்பா?" என்று சொல்லிக்கொண்டே குறிப்பிட்ட தூரம் வரை சென்றும் அங்கு யாரேனும் இருக்கக்கூடிய அறிகுறி ஏதும் இல்லாததால் இவனுள் ஒரு பயம் ஆட்கொண்டது. சரி வெளியே சென்று யாரையாவது அழைத்துவரலாம் என்று அவன் திரும்ப சட்டென யாரோ அவன் பின்னால் நிற்பதைப்போல் உணர்ந்து திரும்ப அங்கே யாருமே இல்லை என்றதும் மீண்டும் முன்னால் அடியெடுக்க எங்கிருந்தோ ஒரு பூமரேங் போல ஒரு கத்தி அவனைக் கடந்து சென்று மீண்டும் அவனை நோக்கி வர லாவகமாக இவன் தப்பிப்பதற்குள் அங்கிருந்த மரங்களின் விழுதை யாரோ பற்றிக்கொண்டு வந்து அவன் முகத்தில் ஏதோ துணியைப் போட்டு மூட, இவன் உணர்வதற்குள் இவனை இரு கரங்கள் மேலிருந்து மேலே நோக்கி தூக்கி கொஞ்ச நேரம் காற்றில் சுற்றிவிட்டு கொஞ்ச தூரம் இழுத்துச் சென்று மீண்டும் கீழே விட்டது.
விட்டவேகத்தில் நிலைக்கொள்ளாமல் தரையில் விழுந்தவன் சுதாரித்து துரிதமாகச் செயல்பட்டு அவன் முகமூடியை விலக்க இப்போது அவன் கிட்டத்தட்ட நடுக்காட்டில் இருப்பதைப்போல் உணர்ந்தான். அவனைச் சுற்றி நாலாப்பக்கமும் வழிகள் இருந்தது. அவன் எவ்வழியே வந்தான் என்பதையே அவன் மறந்திருந்தான். ஆம் அவன் வழியை கவனிதெல்லாம் இங்கு வரவில்லை. அக்குழந்தையைத் தேடிக்கொண்டே கால்போனப் போக்கில் வந்துவிட்டான். அவன் மனம் சொல்லமுடியாத திகிலில் இருந்தது.
சுற்றிமுற்றிப் பார்த்தவன் இப்போது தான் ஒன்றை உணர்ந்தான். அஃதாவது 'ஹி இஸ் பீயிங் ட்ராப்பெட்' (he is being trapped. trap -பொறிவைக்கப் பட்டுள்ளான்) அவன் இதயம் அதிகமாகத் துடித்தது . உடலெல்லாம் வியர்வை பொங்க ஒருவித படபடப்பு, பயம் அவனைச் சூழ்ந்துகொள்ள அவன் காலுக்கு கீழே சரகுகள் அதிகமாக இருந்தது. அது இவன் கிட்டத்தட்ட இந்தக் காட்டின் மிகவும் அடர்த்தியான மையப்பகுதியில் தான் இருக்கிறான் என்று அவனுக்கு உணர்த்தியது. பௌர்ணமி நிலவின் வெளிச்சம் கூட மரங்களின் கிளைகளாலும் இலைகளாலும் மறைக்கப்பட்டு அவ்விடம் இருளில் நிரம்பியிருந்தது.
ஒரு அடியை எடுத்துவைத்ததும் இவன் ஷூ வேறு அந்த சரகில் பட்டு அதிகப்படியான சப்தங்களை ஏற்படுத்த அதில் பறவைகள், வௌவ்வால் முதலியவை அலறியது. அது அவனுக்கு மேலும் திகிலை ஏற்படுத்தியது. அங்கே காட்டில் வாசிக்கும் இசைக்கருவிகளின் சப்தம் கூட இப்போது இவனுக்குக் கேட்கவில்லை. சோ இவன் எவ்வளவு கத்தி கூப்பாடுப் போட்டாலும் யாரும் வரப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம். தூரத்தில் எங்கோ யானை பிளிறும் சப்தம் வேறு இவன் செவியில் மெல்லியதாய்க் கேட்டது.
எவ்வளவு பெரிய முட்டாள்தனம் செய்துவிட்டோம் என்று இவன் மனம் வருந்த, ஏதோ நினைவு வந்தவனாய் அவன் பேண்டை தேடினான். அவனின் செல்போன் தென்பட்டதுமே இவனுக்கு ஒரு நிம்மதி வர பாவம் அதுவும் அதைஅவன் திறக்கும் வரை தான் இருந்தது. நெட்ஒர்க் கவரேஜ் என்பது பெயருக்கு கூட இல்லை. அவனையும் அறியாமல் அவன் மனம் உடல் எல்லாமும் நடுங்கியது. வாழவேண்டுமென்றோ இல்லை சாவைக்கண்டோ அவனுக்கு இதுவரை ஆசை எற்பட்டதில்லை பயமும் தோன்றியதில்லை. ஆனால் இன்று தன் அன்னை பேசியது மட்டும் அவனுக்கு ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது. 'எனக்கு என் பையன் வேணும். அவனையும் இழக்க நான் தயாரா இல்லை' என்ற சகுந்தலாவின் குரல் அவனுக்கு அசரீரித்துக்கொண்டே இருந்தது. பின்னே பிள்ளை வரம் வேண்டி அவன் அன்னை வேண்டாத கோவிலில்லை பார்க்காத மருத்துவரில்லை என்று அவனுக்கும் தெரியாதா என்ன?கிட்டத்தட்ட திருமணம் ஆகி நான்கு வருடங்கள் கழித்து பிறந்தவன் தானே இவன். இவன் கண்ணிமையில் தூசி விழுந்தால் கூட அவர் துடிதுடித்துப் போவாரே? அவன் மீது அவருக்கு அவ்வளவு பாசம்!
இந்தப் பாசமும் இந்த அன்பும் இவனுக்குப் பிறகு கமலேஷ், சிந்து பிறந்தபோதும் கூடத் தொடர்ந்துகொண்டே தானே இருந்தது. ஆனால் எப்போது ஸ்ரீயை சகுந்தலா வளர்க்க ஆரமித்தாரோ அப்போதிருந்து தான் இவனுக்கு தரும் முக்கியத்துவம் குறைவதாய் இந்திரன் உணர்ந்தான். அதனால் சிறுவயதில் இவனுக்கு ஸ்ரீயைக் கண்டாலே வெறுப்பும் வன்மமும் தான் எழும். மேலும் எந்நேரமும் ஸ்ரீ தன் அன்னைமடியிலே தானே இருப்பாள்? அது அவனுக்கு இன்னும் வெறுப்பைத் தர செய்யக்கூடாததெல்லாம் செய்துவிட்டானே? பின்னாளில் அவளைக் காதலிக்கத் தொடங்கியது முதல் அதற்காக அடிக்கடி ஸ்ரீயிடம் அவன் மன்னிப்பும் வேண்டிக்கொண்டே இருப்பான்.(வானிலை மாறும்!)
 
120ல வண்டி போய்ட்டிருக்கும்போது சடன் பிரேக் போட்டா எப்படி இருக்குமோ அப்படி இருந்தது உங்க ஸ்டாப்பிங் :oops: :oops: :oops: :p:p
 
இப்படி காட்டுக்குள் விட்டுவிட்டு , stop பண்ணிடிங்க...
next ud உடனே கொடுக்கவும்...
புது கதை இன்னும் வரல :unsure: :unsure: :unsure:
என்னங்க இது? இப்படியெல்லாம் கொடுத்தா தானே கொஞ்சமாச்சும் த்ரில்ல maintain பண்ண முடியும்? ?? இன்னைக்கு வீட்ல நோன்பு எடுத்தாங்க அதான் மார்னிங் அப்டேட் வரல... புது கதை பிப்ரவரி இறுதியிலிருந்து தொடங்கும். வழக்கமா நான் என் கதையை ஸ்பாட் ரைட்டிங் தான் செய்வேன். அதாவது அப்போவே எழுதி அப்போவே அப்டேட் செய்வேன். இந்தக் கதையை கொஞ்சம் முன்கூட்டியே எழுதி எழுதி அப்டேட் கொடுக்கலாம்னு இருக்கேன். அதான் லேட் ஆகுது. கூடவே நானும் கொஞ்சம் பிசியா இருக்கேன்... நன்றி??
 
நடுகாட்டில மாட்டி இருக்கும் போது...
பிளாஷ் பேக்கா...? :rolleyes::rolleyes:
அது சும்மா? அப்போதானே உங்களை கொஞ்சம் பரபரப்பா வெக்க முடியும்? ?... நன்றி?�
 
120ல வண்டி போய்ட்டிருக்கும்போது சடன் பிரேக் போட்டா எப்படி இருக்குமோ அப்படி இருந்தது உங்க ஸ்டாப்பிங் :oops: :oops: :oops: :p:p
உங்ககிட்ட இப்போ ஒரு டென்ஷன் பரபரப்பு இருக்கு தானே? அதுக்கு தான் இந்த பிரேக்? நன்றி??�
 
Top