மணல்முழுதும் இன்று சர்க்கரையா
கடல்முழுதும் இன்று குடிநீரா
கரைமுழுதும் உந்தன் சுவடுகளா
அலைமுழுதும் உந்தன் புன்னகையா
காகிதம் என்மேல் பறந்ததும்
அது கவிதைநூல் என மாறியதே
ஆலெ ஆலெ ஆலெ ஆலெ
வானவில் உரசியே பறந்ததும்
இந்த காக்கையும் மயில் என மாறியதே...
எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது....