Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சர்க்கரை மட்டும் கலப்போம் நாம் - 2 .....

Advertisement

ILANTHALIR VENBA

Member
Member
இடம் : சியோல் , தென்கொரியா . . .
பிப்ரவரி , 9 .... 2013 ....
நேரம் : பகல் 12 மணி ..... பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த கடைகளினூடே சுற்றி வந்து கொண்டிருந்தாள் சுடர் ..... நாளை நடக்கவிருக்கும் லூனார் புத்தாண்டுக்கான பரிசுகள் தேடும் வேட்டையில் இறங்கியிருந்தாள் ..... " ஆது வேற.... ரெண்டு நாளா என்னை அந்த ரூம்குள்ள விடாம என்னவோ பண்ணுது....என்ன பரிசு ரெடி பண்ணுதுனு தெரியல ...... கடவுளே..... எப்படியாவது ஆதுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பரிசு என் கண்ணுலே காட்டேன் ...ப்ளீஸ் .." என்று வேண்டிக்கொண்டே அந்த கடைத்தெருவை சுற்றி வந்துகொண்டிருந்தாள் .....
நாளை முதல் சியோலில் நடக்கவிருக்கும் லூனார் புத்தாண்டு பற்றி ...கொஞ்சம் பாப்போமா ????
சுலபமா சொல்லனும்னா ........நம்ம தமிழ் புத்தாண்டு எப்டியோ அதுமாதிரி ...தென்கொரியாவில் லூனார் புத்தாண்டு .... அந்த புத்தாண்டை சியோலல் அப்டினு அவங்க பேச்சு வழக்குல சொல்றாங்க ..... இந்த லூனார் புத்தாண்டு தான் அவங்களுக்கு ஜனவரி புத்தாண்டை விட முக்கியமனதா நினைக்குறாங்க ..... உலகத்தில எந்த மூளையில் இருந்தாலும் அதை பொருட்படுத்தாம ...இந்த புத்தாண்டை குடும்பத்தோட செலவு பண்றதுக்காக அவங்க தாய் மண்ணுக்கு வந்துருவாங்க ....... புத்தாண்டு அன்னைக்கு காலைல நேரமா எழுத்துருச்சு ..... புதுத்துணி உடுத்தி ...அவங்க வீட்ல இருக்க பெரியவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்குவாங்க ..... ( நம்ம ஊருல தான் இதுலாம்னு நினைக்குறவங்க ...பாத்துக்கோங்க ....இதுல ஹயிலைட் என்னனா ..... சப்போஸ் அவங்க வீட்டுல இருக்க தாத்தா பாட்டி இல்லைனா பெரியவங்க யாராவது துணி எடுத்து கொடுத்தா ...அது பிடிக்கலைனாலும் அதைத்தான் உடுத்துவங்களாம் ......) அன்னைக்கு ஸ்பெஷல் சாப்பாடு என்னனா ..... டியோட்குக் .... மண்டுகுக் ..... ( அப்டினா என்னனு தான யோசிக்கிறீங்க ...... டியோட்குக் அப்டினா ரைஸ் கேக் சூப் .....இதுலே பயன்படுத்துற முதன்மையான பொருள் ...பீப் கறி .... ரைஸ் கேக் .... அதுகூட ... மிளகாய் , பூண்டு , வெள்ளை வெங்காயத்தாள் , பெப்பர் , உப்பு சேர்த்து செய்றாங்க .... அடுத்த டிஷ் (dish ) மண்டுக்குக் ....இதுல பயன்படுத்துற முதன்மையான பொருள் ..... ரெடிமேட் டாம்ப்ளிங் (dumpling ) வாங்கி அதுகூட ... வெங்காயம் , சோயா சாஸ் , பெப்பர் , உப்பு , முட்டை மஞ்சள் கரு எல்லாத்தையும் சேர்த்து செய்யுற ரெண்டையும்தான் செஞ்சு சாப்டுவாங்கலாம் ) ....
இதுதாங்க டியோட்குக் ..(ரைஸ் கேக் சூப் )...!
wArHEv31HAqIAe9g9vZ08iT3ueOJKs4mjGDK2Sg64lvKdJHYHBGpYyF4ZykNc1q2wqg2pfKmd1HdRDLy0droytEZ6DqnkQnPjVw9jpaWpcBY-ITqwwEbPYL0vfEGuLtlRmewb8-ikIsV6yt2LSWZYvax_w-t6xW7o25ttFib1DYIJDizwjE-XPmFx0pJob1DsPnBV8Vqrl0J1r7DDhuNRiow1AKPCf5T7A=s0-d-e1-ft

இதுதாங்க மண்டுக்குக்....! ( டம்ப்ளிங் சூப் )
t1f4YfoFQr6KWAPW_H3QIz0GO8hgsyfy4yTGizbeg0xxRgToGTqr-vFsLDau4OBn3465xnL2pcEO0RNIxeNkvH_ZIobYV5dJ9xBBNdXfMVAfIO0WlgLONU1YuoQrJTZANozPFm-r4lHyddow1c4claOYbTjg5N3Y4ZTVntmRA-pjkYuAv7GcYLAtuhHIwRr3h0z0aAs28jTjXQLLLqqJ1kFr-dEn1utJeQ=s0-d-e1-ft

இது எல்லாத்தையும்விட சிறப்பு .... லூனார் புத்தாண்டு அன்னைக்கு அவங்க விளையாட பாரம்பரியமான விளையாட்டு வெச்சிருக்காங்க பா ..... யுட்னோரி (yutnori or yunnori ) ....
qwWXwgZ5X34oFuIsSPB76SHT3zEe63rxQeDpLZBA3uWt_v1TNYmdCdkK0QO6fNFjj0nc1vdmHw7QD12oKL_vrgiN4SR9b7VMK3Oh4ih6q0H_D8tsAH4zhrh7_kzpk7b8o9KGH1Iit7Pg4QP99A4EN3auXNOcTeUW0W-ExHmitS6RkXjWMKyaHfbL2AVu7Ztu4aUMcgpN_56sW2TlCdOmVHZ0b0X-x7Zp_A=s0-d-e1-ft

இப்டித்தாங்க இருக்குமாம் ..... எப்படி விளையாடுறாங்கனு சொல்லனும்னா ....
நம்ம தாயம் விளையாட்டு இருக்குல்ல ...அதே மாதிரித்தான் .....ரெண்டு குழுவாக பிரிஞ்சிக்கணும் .... ஆளுக்கு 4 காய் கொடுப்பாங்க .... அப்புறம் ..உருட்டுறதுக்கு நாலு குச்சி இருக்கும் ...அந்த குச்சில ஒரு பக்கம் மட்டும் சமமா இருக்கும் .... விளையாட்டை ஆரம்பிக்குறதுக்கு இந்த வரைபடம் மாதிரி இருக்கே ..அதுல நாலு ஓரத்துல இருக்க ஒரு புள்ளில ஒன்னை வீடா முடிவு பண்ணனும் .... அங்கேருந்துதான் விளையாட தொடங்கணும் ..... அந்த நாலு குச்சியை தூக்கி போடணும் ...... அதுல இருக்க சமமான பகுதி எத்தனை விழுதோ அதனை புள்ளிகளை தாண்டலாம் ...எந்த பக்கம் வேணுன்னாலும் நகர்த்தலாம் ..... அதுல நாலும் சமமான பகுதியா விழுந்தா நாலு தடவை நகர்த்திட்டு இன்னொரு தடவை உருட்டலாம் ..... 4 குச்சியும் உருளை பகுதி விழுந்துச்சுனா ...5 புள்ளியாக எடுத்துக்கொண்டு இன்னொருதடவை உருட்டுறதுக்கு வாய்ப்பு கிடைக்கும் ...இப்படி யாரு தொடங்குன இடத்துக்கு வந்து முடிக்குறாங்களோ அவங்கதான் வெற்றி ....இதுல ஹயிலைட் பாயிண்ட் ....தாயத்துல எப்படி இன்னொருத்தர் காயை வெட்டுவோமோ அதே மாதிரி இதுலயும் வெட்டுவாங்க ...... கடைசி வித்தியாசம் என்னனா ... இரட்டை காய் இருந்தா நாம வெட்ட மாட்டோம் ...ஆனா , யூட்னோரி விளையாட்டுல ரெண்டையும் வெட்டி வெளியே எடுத்துருவாங்க .... அப்புறம் என்ன ???? மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான் ....
இதுதான் அவங்க பாரம்பரிய விளையாட்டா வெச்சிருக்காங்க .... இதுகூட ...பம்பரம் விடுற விளையாட்டையும் , பட்டம் விடுறதையும் விளையாடுவாங்கலாம் .......
சரி ..... ஆதுவுக்கு பரிசு வாங்க போன சுடர் இன்னும் வராம இருக்கா பாருங்க .... என்ன பண்றானு போய் பாப்போம் வாங்க .....

" ஐயோ ஒன்னு கூட கண்ணுக்கு பட மாட்டிங்குதே கடவுளே .....நீதான்பா எனக்கு நல்ல வழியை காட்டணும் ........." என்று வேண்டிக்கொண்டவரே சுற்றிக்கொண்டு வந்தவளின் கண்களில் பட்டது அந்த பஞ்சுமிட்டாய் கடை ............ கண்களில் இதை பார்க்கும்போது மலரும் ஆதுவின் முகம் வந்து போனது ....நேராக அந்த கடைக்கு சென்றவள் அந்த முதியவரிடம் ...இருக்குற பாக்கெட் எல்லாமே வாங்கனுன்னு எவ்ளோ ஆகும் என்று கேட்டு ...அவளிடம் இருக்கும் பணத்தை உறுதி செய்துகொண்டு அவரிடம் கொடுத்துவிட்டு அனைத்தையும் வாங்கிக்கொண்டு தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வீட்டை நோக்கி நடக்க துவங்கினாள் ..... " ஆது என்ன பண்றான்னு தெரியலையே ? " என்று யோசித்தவாறே ..ஆதுவிற்கு தொலைபேசியில் அழைத்தாள் .....
அங்கு வீட்டையே சுற்றி வந்துகொண்டிருந்தான் நெறி என்கின்ற செந்நெறி தீக்ஷித் .......

"நெஞ்சுக்குள்ள உன்ன வெச்சு ....
நித்தம் நித்தம் காதலிச்சேன் .....
மொட்ட வெயில் சுட்டா கூட ......
உன் தெருவில் தீ குளிச்சேன்கிட்ட தட்ட உன்ன காட்டும் .......
எல்லா சொல்லும் சேகரிச்சேன் ......
மத்ததெல்லாம் வீசிபுட்டு .... !
உன்ன பேச ஆரம்பிச்சேன் .....
வந்தா வேட்டியில கட்டி .......
அடை காப்பேன் .....
நெத்தி கோட்டுல நான் கொஞ்சம்
இடம் கேட்பேன் ......
ஒத்த நிலா கேணிக்குள்ள ....
சிட்டெறும்பு சீனிக்குள்ள ....
என்ன வையேன் மாருகுள்ள ....
வெரட்டாதமத்து வெச்ச மோருக்குள்ள ....
மாட்டிகிட்ட ஈ ய போல .....
உன்ன சுத்தி வாரேன் புள்ள மயக்காத .............!"


அலைபேசியை உயிர்பித்தவள் பேச தொடங்கினாள் ......
ஆது : " ஹே ..... சு குட்டி ...எங்க இருக்க ????? "
சுடர் : " சுடர்ன்னு கூப்பிடுன்னு எத்தனை தடவை கேக்குறேன் ...ஒரு தடவையாவது அப்டி கூப்பிடுவியா ???மாட்டியா ???? "
ஆது : எனக்கு உன்னை அப்டி கூப்பிட பிடிக்கலை ...நீ எங்க இருக்கேனு சொல்லு .....
சுடர் : நம்ம வீட்டுக்குத்தான் வந்துட்டு இருக்கேன் .....
ஆது : இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் இங்க வர்றதுக்கு ????
சுடர் : இன்னும் அரைமணி நேரத்துலே வந்துருவேன் .... நெறி என்ன பண்றான் ??? அவனை ரெடி பண்ணிட்டியா ???? இன்னைக்கு நிறைய வேலை இருக்கும் கடையில .......3 மணிக்குள்ளே அங்க இருக்கணும் ..அவனை சீக்கிரம் ரெடி பண்ணு ......
ஆது : மணி இப்போவே 2 .30 ......நீங்க இங்க வரவே மணி 3 ஆகிடும் .... எப்படி மூணு மணிக்குள்ளே இருக்குறது ????
சுடர் : நீ அவனை கூட்டிட்டு போய்டு ...நான் வீட்டுக்கு வந்து ரெடி ஆகிட்டு வரேன் .....
ஆது : நான் மட்டும் தனியாவா ??? வேண்டாமே நீங்க வந்த உடனே போறேனே ....ப்ளீஸ் ...
சுடர் : ஆது ....புரிஞ்சி நடந்துக்கோ .... நாளைக்கு சியோலல் இருக்கு ..... இன்னைக்கு நம்ம கடைக்கு அவங்க அம்மாவோட வரவங்க எல்லார்க்கும் ஐம்பது சதவிகிதம் ப்ரீ அப்டினு இரு வாரமாக விளம்பரம் பண்றோம் ..... அப்போ வரவங்களுக்கு கொஞ்சமாவது நாம நல்லதை கொடுக்கணும் .... நீ அவனை ரெடி பண்ணி கூட்டிட்டு போ ...நான் வந்துறேன் சரியா ????? அவள் எதுவும் பேசாமல் இருப்பதை கவனித்தவள் .. அந்த அழைப்பையே வீடியோ கால் ஆக மாற்ற ..... அவளது முகத்தை காட்டாமல் வைத்துக்கொண்டிருந்தாள் ஆது .....
ஆது : சரி நான் வைக்கிறேன் ...நீ சீக்கிரம் கடைக்கு வந்திரு ...என்று சொல்லிவிட்டு அவள் அழைப்பை துண்டிக்க ...... மறுபடி ஆது அவளை வீடியோ காலில் அழைத்தாள் .... அழைப்பை ஏற்றவள் சுடரின் முகத்தை பார்க்காது வேறுபக்கம் முகத்தை திருப்பிக்கொண்டாள் ....
ஆது : எதுக்கு எனக்கு சும்மா சும்மா கால் பண்ணி டார்ச்சர் பண்ற ??? என்று எறிந்துவிழ ......
அவளே கால் பண்ணிட்டு அவளே எரிஞ்சு விழுறா ??? என்ன கொடுமை சரவணன் இது ????? சுடர் மனதினுள் ....
சுடர் :எதுக்குமா டென்ஷன் ????
ஆது : ஒன்னும் இல்லை .....
சுடர் : என் பட்டுமா இல்லை ???? இன்னைக்கு மட்டும் தனியா போவியாம் ...நாளைக்கு எல்லாம் நான் வந்துருவேன் ..கோவிச்சுக்காம கெளம்பு டா .....
ஆது : சரி கிளம்புறேன் ,,,...நீ வை ....
சுடர் : சரி வந்துடுறேன் சீக்கிரம் ....
ஆது : ஹ்ம்ம் .....வைக்கட்டுமா ????
சுடர் : வெச்சுக்கோ ......
ஆது : ச்சீ பே ..... லவ் யூ ......
சுடர் : எனக்கு காது சரியா கேக்கலையே ....
ஆது : கேக்காட்டி ரொம்ப சந்தோசம் .... என்று அவள் அழைப்பை துண்டித்துவிட்டாள் ......
அவர்கள் கிளம்பி கடைக்கு சென்றதை உறுதி செய்துகொண்டவள் ..... வீட்டிற்கு சென்று அவன் வாங்கி வந்திருந்ததை வைத்துவிட்டு ..கடையை நோக்கி நடக்க துவங்கினாள் ...... அப்பொழுது ஒரு சிறு பெண் அவளது நண்பனிடம் சண்டையிடுவதை பார்த்தவள் அவளது கடந்த காலத்தை மனக்கண்ணில் காண தொடங்கினாள் ....
அதிகாலை சூரியன் தனது பொற்கரங்களால் இருளை பிரித்தெறிந்து வெளிவந்து கொண்டிருந்தான் .....பிள்ளாநல்லூர் கிராமம் , கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை பசேலென்ற வயல்வெளிகளும் மண்ரோடுகள் மட்டுமே தென்பட்டாலும் சீராக அமைக்கப்பட்டிருந்தது ....சாலையின் இரண்டு பக்கங்களிலும் சீராக புளியமரங்களும் வேப்பைமரங்களும் பனைமரங்களும் நிறைந்திருந்தன .....
அவ்வூர் மக்களில் சிலர் ஒரு கையில் ஏர் , கலப்பையும் மற்றோரு கையில் தூக்கு சட்டியுமாக மாடுகளை வயலை நோக்கி ஓட்டி சென்றுகொண்டிருந்தனர் ..... அந்த காலை வேலையின் பள்ளி செல்லும் சிட்டுகள் அனைவரும் சிறு சிறு குழுக்களாக பிரிந்து பேசிக்கொண்டே பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடையை கட்டியிருந்தனர் .... அப்படி ஓர் குழுவில்தான் அவளும் சென்று கொண்டிருந்தாள் .....
" அடியேய் விழி ..... !! அடியேய் ....!! காதும் புட்டுக்குச்சா ????? கொஞ்சம் நில்லுடி ...நில்லுன்னு சொல்றேன்ல ..... நில்லு புள்ள ..... நில்லுன்னு கேக்குறேன்ல ..என்னனு கேட்டுட்டு தான் போவேன் ....." என்று அவள் பின்னே கெஞ்சிக்கொண்டே சென்றுகொண்டிருந்தான் மாறன் ..... " ஹேய் முட்டைரொட்டி நில்லுடி ....." என்று அவன் கூப்பிட ...சட்டென்று நின்றவள் ..... அப்படியே வேரூன்றி நிக்க ...."ப்ளீஸ் டி ..பேசு டி ...... " என்று கெஞ்சிக்கொண்டே இவளுக்கு முன்பு வந்து நிற்க .... இவனை முறைத்துவிட்டு திரும்பி நடக்க ஆயத்தமானாள் .....இவன் படக்கென்று அவள் கையை பிடித்து அவளை நிற்க வைத்தான் .....
விழி :" சொல்லு மாறா ...உனக்கு என்ன பிரச்சனை ???"
மாறன் : உனக்கு என்ன டி முயலு என்மேல கோவம் ???? அப்படி என்ன இந்த அம்மணிகிட்ட வம்பு பண்ணிப்புட்டேன் ???? கொஞ்சம் சொல்லிட்டு போ டி என் முட்டைரொட்டி .... என்று அவள் கையை பிடித்தவாறே கேட்க ....
விழி : " முதல்ல கையை விடுறீங்களா ??? யாரவது உங்ககூட பேசிட்டு நிக்குறத பாத்துட்டு போய் ...என்ற ஐயன்கிட்டயோ இல்லை ஆத்தாகிட்டயோ சொல்லி கொடுத்துற போறாங்க .....உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன் ...தயவு செஞ்சு என்ற கையை விட்டுபுட்டு பொய் உங்க வேலைவெட்டிய பாருங்க .....
மாறன் : " இங்க இவ்ளோ பேசுறவ ...அன்னைக்கு கை நோக உனக்காக கீத்து குடிசை பின்னுனப்போ என்னை பிடிக்கலேன்னு சொல்லிருக்க வேண்டியதுதானே புள்ள ...... உன்ற பூப்பு விழாவுக்கு நான் கஷ்டப்பட்டு கீத்துபின்னி குடிசை கட்டி சீர் செய்யுவேணாம் ..... அப்போல்லாம் வாயில கொழுக்கட்டையை வெச்சுருக்க மாதிரி சும்மா இருந்துபுட்டு இப்போ வந்து இந்த பேச்சு பேசுறவ ???? அதுலயும் நீ என்னடானா என்னைய யாருனே தெரியாதவன் மாதிரி கூப்பிட கூப்பிட கேக்காம..கொஞ்சம் கூட சட்டையே செய்யாம போறவ ????
அவன் பேசும்பொழுது .... அவனது குரலை காதினுள் நிரப்பு கொண்டிருந்தவள் ..... அவனது பேச்சிற்கு ஏற்ப மேலும் கீழும் ஆடும் புருவங்களையும் நெற்றியில் விழும் சிறு கோடுகளையும் கூர்ந்து கவனித்தவள்..... தீடீரென விழுந்து விழுந்து சிரிக்க துவங்க ...... அவளது இரட்டை ஜடையை பிடித்து இழுத்தவாறு ......." நல்லவேளை டி முட்ட ரொட்டி .... எங்க அந்த பாவாயி கெழவி சொல்லுது.. பூவாயி கிழவி சொல்லுதுனு .... அடக்க ஒடுக்கமா மாறிடுவியோன்னு ரொம்ப பயந்துட்டேன் டி .. அதுலேயும் நீ இப்போ பேசுனது பார்த்து என்னோட மூச்சே நின்றுச்சு ...அப்போதான் உன்னோட கண்ணை பார்த்தேன் ...அதுல இருக்க குறும்ப பார்த்த உடனேதான் கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு ...அதுலேயும் நீ கிளுக்குனு சிரிச்ச உடனேதான் ... எனக்கு என்னோட உசிரே திரும்பி வந்துச்சு புள்ள .....
விழி : " உன் பாட்டி ... அந்த பாவாயி கிழவி என்னை பண்ணுன கொடுமைக்கு அதை உயிரோட விட்டு வெச்சிருக்கேன்னு சந்தோச படு ...கண்டிப்பா அதுக்கு என்கிட்ட இருக்கு டா ஒருநாள் ... வேணுன்னா பார்த்துட்டே இரு ......என்னமா சீன் போட்டுச்சு தெரியுமா மாறா ???? என்கிட்டவந்து இனிமேலாவது பொட்டப்புள்ளை மாதிரி நடந்துக்கோ ... பாவாடை சட்டை போடக்கூடாது ...தாவணி தலைய கட்டி நல்லா இழுத்து சொருவிக்கணும் .....கால் மடிச்சுதான் உக்காரனும் .....பசங்ககூட ஒழுங்கா நடந்துக்கணும் .... தெருவுல அங்க இங்க நின்னு வேடிக்கை பார்க்க கூடாது ....ஆறு மணிக்கு மேல வீட்டை விட்டு எங்கயும் போக கூடாது ...அப்டி இப்டினு ஆயிரம் ரூல்ஸ் பேசுது ..... எல்லாத்தையும்விட முக்கியமா ... காலங்காத்தாலே பச்சை முட்டையும் நல்லெண்ணெயும் தூக்கிட்டு வந்து , என்னை குடி குடினு உயிரை எடுத்தாங்க டா ....உவே ...இப்போ நெனச்சாலும் எனக்கு குமட்டுது ..... இது எல்லாத்தையும் விட போட்டுச்சு பாரு டா ஒரு வெடி .... " இனிமேல் உன்ற வேலைய மட்டும் பாரு ...இந்த பயலுக கூட சேர்ந்து கபடி ஆடுற வேலை எல்லாம் நிறுத்திக்கோ ...." அப்டினு என்கிட்டயே சொல்லுது ....
" அப்போ எனக்கு வந்த கோவத்துக்கு அந்த கிழவியை தூக்கி அடிச்சிருப்பேன் ......"
மாறன் : " ஏன் புள்ள ... நீ எப்போ தளபதி ரசிகர் மன்றத்துல இருந்து பிரிஞ்சிவந்து விஜயகாந்த் ரசிகர் மன்றத்துல சேர்ந்த ??"
விழி புரியாமல் விழிப்பதை பார்த்து ரசித்தவன் ...." ஏன் டி முட்டை ரொட்டி .... வர வர நீ டியூப்லயிட் மாதிரி மாறிட்டே வர டி ....." என்று அவன் கூறி முடிப்பதற்குள் அதன் அர்த்தம் பிடிபட ....... அவள் கீழே குனிந்து கல்லை எடுப்பதற்கு முற்பட அதற்குள் அங்கிருந்து ஓட்டம் பிடித்திருந்தான் ....
மாறன் : " அடியேய் ..முட்டைரொட்டி .. ரொம்ப படிக்காதடி ...அப்புறம் இந்த மாமனை கடிக்க முடியாம போய்ட போகுது ..... "

விழி :" கவலை படாத டா ..என்ன ஆனாலும் நான்தான் உன் கழுத்துல தாலி கட்ட போறேன் ...பாத்துகிட்டே இரு டா ...." என்று அவள் கூறிமுடிக்கும்பொழுது அவன் அங்கு இல்லை ... அப்படி இருந்திருந்தால் பின்னாளில் வரப்போகும் பிரச்சனைகள் எவற்றையுமே இருவரும் கடந்திருக்க தேவை இருந்திருக்காது ....
அவனை பற்றிய சிந்தனைகளோடு பள்ளியை அடைந்தவளின் கவனத்தை அடுத்தடுத்து வந்த பாட வேளைகள் ஆக்கிரமிக்க அன்று அவள் கூறியதன் பொருளை அவளே ஆராயாமல் விட்டிருந்தாள் .....
அவர்களின் அடுத்த சந்திப்பு நிகழ்ந்தது அன்றைய பஞ்சாயத்தில் தான் .....அங்கு நடப்பவற்றை பார்த்து சுடருக்கு பொல்லாத கோபம் வந்தது .... அங்கு வந்திருந்த அனைவரும் மாறனின் தங்கையை சுற்றி நின்று வேடிக்கை பார்க்க ....அவளின் தோற்றம் நலுங்கி இருந்தது .......ஏதோ நடக்க கூடாதது நடந்துவிட்டது என்பதை ஊகித்தவள் .. நேராக மாறனின் தங்கை ஆசையிடம் சென்றாள் .... சுடர்விழியின் சுடர் விடும் கண்களை பார்த்த மாறனிற்கு அதன்பிறகு நடக்க போவதை நினைத்து கண்முன் நிழலாடியது ,.... அவனுக்கு தெரியும் சுடர் விளையாட்டிற்கு கூட ஆசையை விட்டுக்கொடுக்க மாட்டாளென்று .....
நேராக ஆசையிடம் சென்றவள் தனது துப்பட்டாவை உருவி அவளின்மேல் போர்த்தியவள் .....
சுடர் : " சொல்லு ஆசை ...என்ன பிரச்சனை ???? எதுக்கு உன்னை இங்க நிக்கவெச்சு வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க ????" என்று இவள் கேட்ட அடுத்தநொடி சுடரை கட்டிக்கொண்டவள் அன்று மதியம் நடந்ததை கூற துவங்கினாள் .......
காலையில் அம்மா செவ்வந்தியிடம் திட்டுவாங்கிக்கொண்டே கிளம்பினாள் ஆசை ...... அம்மாவிடம் கெஞ்சி கொஞ்சி அன்று அவள் பள்ளியில் நடக்கும் ஆண்டு விழாவிற்கு கிளம்பி கொண்டிருந்தாள் .....
செவ்வந்தி : " ஆசை ..... அந்த சாந்தி மகள் கூடவே பள்ளி கூடத்துக்கு போயிட்டு வெரசா வீடு வந்து சேர்ந்துரு கண்ணு ...... அப்பத்தா வைவாங்க ..... நினைப்புலே வெச்சுக்கோ ....."
ஆசை : " அம்மா ... நான் ஸ்கூல் போகலை அம்மா ... நம்ம ஊரு மாரியம்மன் கோவில் கிட்டக்க இன்னிக்கு கபடி போட்டி நடக்குதுல்ல ....அதை பாக்க போறேன்மா ......"
நடக்கவிருக்கும் விபரீதத்தை யாரும் அறியவில்லை ....
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
இளந்தளிர் வெண்பா டியர்
 
Last edited:
Top