Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சலசலக்கும் சொந்தங்கள்-அத்தியாயம்5

Advertisement

BelsyPrabhu

Active member
Member
சலசலக்கும் சொந்தங்கள்

அத்தியாயம் 5

நினைத்ததோடு மட்டுமில்லாமல் வெளிப்படையாக வாய்விட்டே கேட்டு விட்டார் கிரேஸ், “ஏன்டி, உனக்கு இப்ப என்னதான் பிரச்சனை, புதுசு புதுசா நோய் வர மாதிரி, உங்களுக்கெல்லாம் டிசைன் டிசைனா யோசன வரும், இப்ப என்ன சொல்ல வர” என்றார் கடுப்பாக.

நிர்மலாவும் சரியாக அம்மாவின் எண்ணத்தைப் புரிந்து, “நா பெருசால்லாம் ஒண்ணும் சொல்ல வரல. அது என்னன்னா…, உங்க அக்கா மகளுக்குனு வாங்கின புடவையும் தாலியும் எனக்கு வேண்டாம், அதான் நாள் இருக்குல, மாத்த சொல்லுங்க”.

இதைக் கேட்ட அப்பாயி, “அடியே, உங்க அம்மாச்சியே போனப் போட்டு புடவையும் தாலியும் வாங்க போகலாம் வாங்கனு கூப்டாங்க. நாம தான் ரூபன் முடிவுக்காக காத்திருந்ததால நீங்களே போய் வாங்குங்கனு சொல்லிட்டோம், சரியா?, உனக்கு எல்லாம் புதுசுதான், போய் அவங்க அவங்க வேலய பாருங்க”.

“அப்ப சரி” என சொன்ன நிர்மலா, வீடும் திரும்பியாயிற்று.

அடுத்தடுத்த நிகழ்வுகளையும் கடந்து, திருமணமும் முடிந்து, மறுவீடும் வந்து, தன் புருஷன் வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறாள்.

இதோ புருஷன் வீட்டிற்கும் வந்தாயிற்று, இது புருஷன் வீடு மட்டுமல்ல, அவள் வீடும் இனி இதுதானே. திருமணமாகி புகுந்த வீடு செல்லும் பெண்கள் பிறந்த வீட்டைப் போல் புகுந்த வீட்டில் இருப்பவர்களையும், தன் உறவுகள் என எண்ணத் தொடங்கினால் பாதி பிரச்சனை வராது, ஏனெனில் பல நேரங்களில் கணவன்-மனைவிக்குள் வரும் சண்டைகளை விட வீட்டில் உள்ளவர்களால் ஏற்படும் பிரச்சனைகளே அதிகம்.

சில சொந்தங்கள் இப்படி என்றால், புகுந்த வீட்டிற்கு வரும் மருமகளை மகளாக பாவிக்காவிட்டால் கூட பரவாயில்லை, ஒரு மனுஷியாக கூட மதிக்காத உறவுகளும் உண்டு.

பொதுவாக பிரச்சனைகளின் ஆணிவேர் எதென்று பார்த்தால், நம்மிடம் நேர்மறை சிந்தனைகள் இல்லாததே எனலாம். சரி, நம்ம நிம்மிக்கு விதி என்ன வைத்திருக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

நிர்மலா காரிலிருந்து இறங்கி தன் வீட்டை நிமிர்ந்து பார்க்கிறாள். முன்னாடி பீட்டர் வீட்டிற்குள் சென்று கொண்டிருக்கிறான். இவர்களிடையே இதுவரை பெரிதாக எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. அதற்காக பேசாமலும் இல்லை. ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவதுண்டு. இப்போதும் அவன் செல்லவும், இந்த உம்மாணாமூச்சி என்ன வானு கூப்பிடாம போறாங்க என மனதில் நினைத்தவள், நீ உன் அம்மா வீட்ல இருந்தப்ப கூப்டியா? என மனசாட்சி இடிக்கவும், வாயை ஸிப் போட்டு மூடிவிட்டு, அவனை பின்தொடர்ந்தாள். உள்ளே வந்தவளிடம் அங்கிருந்த ரோஸ்லின், “வா நிர்மலா, வீட்ல எல்லாரும் நல்லாயிருக்காங்களா?”எனக் கேட்க, அவள் தலையசைக்கவும் “உனக்கு டையடா இருக்கும், உன் ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு” எனவும் இவளும் சென்றாள்.

அறைக்குள் வந்து பால்கனி சென்று நின்றாள், ஏனெனில் அவளுக்கு பால்கனியில் இருந்து தோட்டத்தைப் பார்க்க அவ்வளவு பிடித்திருந்தது. தோட்டமானது, வீட்டிற்கு முன்புறம் இருந்தது. மேலும் அங்கிருந்து பார்த்தால் ரோடும் தெரியும். பீட்டர் குளித்து வெளியே வந்து தலைத் துவட்டி கொண்டிருந்தவன், இவள் அரவம் கேட்டு, “உன்னோட சூட்கேஸ் எங்கயிருக்குனு பாத்தியா?, நா நாளைக்கு கப்போர்ட்டை அஜஸ்ட் பண்ணி தரேன், அப்ப நீ அந்த கபோர்ட்ல உன் டிரஸ அடுக்கி வச்சுக்கோ, இடம் போதுமானு பாரு, இல்லனா வேற கபோர்டுதான் செட் பண்ண சொல்லணும்” எனச் சொல்லி திரும்பினால், நிம்மி பீட்டர் சொல்றதுக்கு முன்னாடியே, உள்ள நுழைந்ததுமே அவள் உடைகளை அடுக்கி வைக்க ஆரம்பித்திருந்தாள், அவன் உடைகளை ஒரு ஓரமாக தள்ளி வைத்து.

பீட்டர், ‘அடிப்பாவி, பெர்மிஷன் கேட்குறதுல்லாம் கிடையாது போல, அட்லீஸ்ட் டிரஸையாவது, ஒழுங்கா தள்ளி வச்சுருக்காளா, அதும் கிடையாது, ஐயோ, நம்ம பாடுதான் திண்டாட்டம் போல’ என நினைத்து அவளை பார்த்து முறைத்தான்.

நிர்மலா, “மீதிய நா அப்பறம் எடுத்து வச்சுக்கறேன்”, எனச் சொல்லி ரெப்ரஷ் செய்ய சென்று விட்டாள். சமையல் வேலை செய்யும் செலின் வந்து, ‘நைட் சாப்பாடு ரெடி, சாப்பிட வரச் சொன்னங்க பெரியம்மா’, எனச் சொல்லி சென்றிருந்தார். இவள் வந்தும் செலின் கூறியதைச் சொல்லி, “வா கீழ போய் சாப்பிட்டு வரலாம்” என்றான்.

டைனிங் டேபிளில் ஏற்கனவே, தாத்தா, அம்மாச்சி, மாமா, அத்தை, பேட்ரிக், ஜென்னி அமர்ந்திருக்க, இவர்களும் போய் சேர்ந்துக் கொண்டனர்.

சாப்பிட ஆரம்பித்ததும் பொன்னுசாமி தாத்தா, “பேத்திக்கு சாப்பாடு பிடிச்சுருக்கா?”

நிர்மலா வாயைத் திறக்காமல் நன்றாக தலையை உருட்டினாள், மனதிற்குள் ‘ஆமா இந்த காஞ்சு போன சப்பாத்திய சாப்பிடதான் மூட்ட முடிச்சயெல்லாம் கட்டுட்டு வந்தனா, ஒருவேள காலைல செய்தத எடுத்து வைக்கிறாங்களோ’ என கவுண்டர் கொடுத்து கொண்டே, ‘அப்படி சாப்பிடற ஆளுங்கள மாதிரி இவங்களெல்லாம் பார்த்தா தெரியலனு’ சாமாதானமும் சொல்லிக் கொண்டாள்.

பிறகு வழக்கம் போல் ஒரு வாரம் கடந்த நிலையில், காலையில் அலாரம் சத்தம் கேட்ட பீட்டர், ‘எங்கிருந்து இந்த சத்தம் வருது, நாம தான் அலாரமே வைக்கலயே’ எனச் சுற்றிப் பார்க்க, நம்ம நிம்மி போன்லேருந்து வருது அது, கடுப்பானவன், ‘அலாரம் அடிக்கறது கூட தெரியாம தூங்கறவ இத எதுக்கு செட் பண்ணறா’, ஆப் செய்து வைத்து விட்டு ஓடப் போய்ட்டான், அதாங்க ஜாக்கிங் போய்ட்டான்.

அரை மணி நேரம் கழிச்சே எழுந்த நிம்மி மணி பார்க்க, அது 6.30 என காட்ட, ‘ஐயோ, டைம் ஆயிடுச்சு, அலாரம் வைச்சோமே, அடிக்கலாயா?, ஓகே, அத அப்பறம் பாக்கலாமுனு’, குளியலறை சென்று விட்டாள்.

இன்று 12 நாட்கள் விடுமுறைக்கு பிறகு, முதல் நாள் வேலைக்கு செல்கிறாள். லேட்டாக போக கூடாது என அவசரமாக கிளம்பி வந்து, சமையல் ஆன்டி செலினிடம் நிம்மி, “சமைச்சுட்டிங்களா ஆன்டி, டிபன் எடுத்து வையுங்க, அப்பறம், மதியம் சாப்பாடு இன்னையிலேருந்து எனக்கும் கட்டிருங்க”.

செலின், “பாப்பா, நீங்க முன்னாடியே சொல்லியிருந்தா, உங்களுக்கு செஞ்சு வைச்சுருப்பேன், இப்ப காலைக்கு மட்டும்தான இருக்கு”.

நிம்மி, “ஏன் மத்தவங்களுக்கு மதியத்துக்கு கொடுத்தனுப்ப மாட்டீங்களா?”.

செலின், “எல்லாரும் வெளிய தான் சாப்பிடுவாங்க, வீட்ல இருக்கவங்களுக்கு மட்டும் தான் மதியத்துக்கு 11 மணி போல சமைப்பேன்”.

நிம்மி, “இன்னைக்கு அட்ஜெஸ்ட் பண்ணிக்கறேன், ஆனா நாளையிலேருந்து நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன், எனக்கு வீட்டு சாப்பாடுதான் மதியத்துக்கு வேணும்”.

செலின், “சரிங்க பாப்பா”.

ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்தார் ஆரோக்கியசாமி, அருகில் அமர்ந்து பீட்டரும் பேட்ரிக்கும் சத்துமாவு கஞ்சி குடித்தனர். பீட்டர் தாத்தாவும், அப்பாயியும் இன்னும் அறையில் இருந்து வெளியே வரவில்லை, பொதுவாக வயதானவர்கள் இரவில் தாமதமாக தூங்குதால், காலையில் எழவும் தாமதாகி விடுகிறது.

காலை உண்ட பிறகு, ஹாலிற்கு வந்த நிர்மலா அங்கிருந்தவர்களைப் பார்த்து, பொதுவாக, “நான் இன்னையிலேருந்து வேலைக்கு போகணும், அதனால போய்ட்டு வரேன்”.

‘அட, இவ இத நம்மகிட்ட முன்னாலேயே சொல்லியிருக்கலாம்ல’ என மனதில் நினைத்த பீட்டரும், ‘இந்த புள்ள வேலை பாக்குதா’ என நினைத்த ஆரோக்கியசாமியும், ‘சரி’ என வாய் திறப்பதற்கு முன், நிர்மலா பேசியதைக் கேட்டவாறு அறையில் இருந்து வந்த செல்லி, “உனக்கு முன்னாடியே எங்ககிட்ட சொல்லனுமுனு தெரியாது, இங்க யாரும் உன் சம்பள பணத்த வச்சுதான் வாழனும் என்ற நிலையில் இல்ல, அதனால நீ வேலைக்கு எல்லாம் போகக் கூடாது” என்றார்.

நிர்மலா, “அதெப்படி என்னை வேலைக்கு போகக் கூடாதுனு சொல்லுவீங்க, அதுக்கு உங்களுக்கு யார் ரைட்ஸ் கொடுத்தா, அது ஒரு பக்கம் இருக்கட்டும், முதல நா, என்ன வேலை, எங்க பாக்குறேனு தெரியுமா?”

செல்லி அலட்சியமாக, “அத தெரிஞ்சுகிட்டு நா என்ன பண்ண போறேன், இங்க இல்லாத காசா, பணமா, நீ வேலைக்கு போகக் கூடாது, அவ்வளவுதான்”.

கைக்கடிகாரத்தைப் பார்த்த நிம்மி, ‘பேசிட்டே இருந்தா வேலைக்கு ஆகாது, அப்பறம் லீவ் விட்டு முதல் நாளே லேட்டா போனா அவ்வளவுதான், வாங்கி கட்டிக்கணும்’ என நினைத்தவள், “எதுவா இருந்தாலும் நா சாயங்காலம் வந்ததும் பேசிக்கலாம், எனக்கு லேட்டாகுது, நா கிளம்பறேன்” என யாரும் மறுத்து கூறும் முன் வெளியே சென்று, ஏற்கனவே தன் அப்பா மூலம் இங்கு கொண்டு வந்திருந்த தன் ஸ்கூட்டி மீதமர்ந்து பறந்தாள்.

பொதுவாக, பெண்கள், வேலைக்கு செல்லவதென்பது, பலக் கோணங்களில் அணுகப்படுகிறது. சில பெண்கள், தங்களின் பின்தங்கிய பொருளாதார சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்வார்கள், என்றாவது, ஒரு நாள் தம் குடும்ப நிலை மாறுவதையே குறிக்கோளாகக் கொண்டிருப்பார்கள்.

சில பெண்கள், தங்களின் திறமையை இவ்வலகிற்கு நிரூபிக்கவே வேலைக்கு செல்வர். சிலரால், சும்மா இருக்கவே இயலாது, ஏதாவது வேலை செய்து கொண்டேயிருப்பர்.

வெளி இடங்களுக்கு சென்று வேலை செய்வது மட்டுமே வேலையாகாது, அனைவரின் அதாவது குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இல்லத்தரசிகளும் வேலையே செய்கின்றனர்.

ஆக வீட்டிலும், நாட்டிலும் இன்றியமையாதவர்களாய் மாறி உள்ள இத்தகைய சாதனை பெண்கள், சில சமயங்களில் விட்டில் பூச்சிகளாய் மாறி பொய்த்து போகும் போது நம் நெஞ்சமும் கனத்துப் போகிறது.

நம்ம நாயகி இன்றியமையாதவளா? அல்லது இல்லையா?

செல்லி, “நீங்களெல்லாம் யாரும் ஒண்ணும் கேட்க மாட்டீங்களா?”.

பீட்டர், “அம்மா, அதான் சாயங்காலம் பேசலாம்னு சொன்னாள, அப்ப பேசிக்கலாம்”.

ஆரோக்கியசாமி, “வேலைக்கு போறதுல என்ன தப்பிருக்கு, போகட்டுமே”.

செல்லி, “அவ என்ன கலெக்டர் உத்தியோகமா பாக்குறா, ஐஞ்சுக்கும் பத்துக்கும் வேலப் பார்ப்பா, நம்ம ஸ்டேட்டஸ் என்னாகுறது”.

பேட்ரிக், “அதான் அவங்க இவினிங் பேசலாம்னு சொல்லியிருக்கதால, வெயிட் பண்ணுங்கம்மா, அப்பவே பேசிக்கலாம்”.

செல்லி, “சரி, நீங்களெல்லாம் இவினிக் சீக்கிரம் வந்தருனும், இல்லனா நா எதுக்கும் பொறுப்பு கிடையாது, பாத்துக்கோங்க”. எனக் கூற, அனைவரும் சாயங்காலத்திற்காக காத்திருக்கலாயினர்.
 
Last edited:
Very nice epi dear.
Day today life problems azhaga solluringa. Ella family lum mamiyar nu vanthal kombum vanthuduthey.
 
Top