சிதறாத முத்தங்கள் - 19

Advertisement

Sastika

Active member
Member
காதலர்களிடையே மலர்ந்திருக்கும் காதலை கூச்சமின்றி பேசுதல், அதன்பின் அலர் தூற்றுவார்களே என நாணல்’
மடம் தப உரைத்தல் -19


உணவை முடித்தவள் அவனிடம் எதுவும் சொல்லாமல் அமைதியாக வெளியேறி மூச்சை இழுத்து விட்டாள். ஏதோ நெஞ்சின் அழுத்தம், வெளியேறியது போல் ஓர் எண்ணம். அந்த ஏதோ.. அவளது நிராசை பூர்த்தி அடைந்ததால் இருக்கலாம்.

மென்னகையுடன் அவள் செல்வதை ஏறிட்டவன், ஸ்ரேயா பின்னேயே ஸ்வீட்டுடன் கிளம்பினான்.

“ஒய்..” என இருபது அடி தூரத்தில் இருப்பவளை அழைத்தான்.
அவன் அழைப்புக்கு செவி கொடுத்து பின்னே திரும்பியவளின் இரு கைகளும் முதுகை வளைத்து பின்னியிருக்க, தலையை சாய்த்து அவனை ரசித்துக் கொண்டிருந்தாள். அவளின் தோரணையில் சிமிட்டாத பார்வையை அவள் கண்களில் தேக்கி வைத்தான்.


அமர் அருகில் வரவும் இயல்பாக தன் வாயை சிட்டுக்குருவியாக திறந்து காட்டினாள், அதை புரிந்தவனாக கையில் இருந்த இனிப்பை கீற்றாக பிய்த்து வாயில் வைத்து, மீதியை அவன் வாயில் அடைத்தான்.

“ஆம்பள பையன இப்படி குறுகுறுனு பார்க்கலாமா..?” என்றவன் அவளது பார்வையை தவிர்த்து கழுத்தை மெல்ல தேய்த்துக் கொண்டான்.

“டேய்.. வெட்கப்படுறியா../” அவனது நாடி பிடித்து கேட்க,

“இந்த டயலாக் நான் பேசணும், காலக்கொடுமை நீ பேசிக்கிட்டு இருக்க..! ஏன் பசங்க வெட்கப்படக்கூடாதா..? உன் கண் சும்மாவே சுருட்டி சுருக்கு பைக்குள்ள போட்டுக்கும், இப்படி ரொமான்ஸா பார்த்தா கண்டிப்பா என் கன்ட்ரோல நான் மிஸ் பண்ணிருவேன்...” காதல் மொத்தமும் தேக்கி வைத்து சொல்ல, திசை திருப்பலாக,
“என்னோட ஃபுட் ஹேப்பிட் எப்படி தெரியும்..? அதான உனக்கு எப்படி தெரியாம இருக்கும்!” அவள் செல்லும் திசையெங்கும் அவன் பார்வை பதிவதை உணர்ந்து கூறினாள்.


“ஏதோ பசிக்குன்னு சாப்பிட்டு வாழ்ந்திருக்க, அப்படியே பசிச்சா டயட்டுனு சொல்லி நம்பவும், நம்ப வச்சுட்டு இருந்திருக்க. சாப்பிட்ட பிறகும் ஃபுல்பில் இல்லாம ஸ்வீட் சாப்பிடுற ஹேபிட் வந்திருக்கும்.. இட்ஸ் ஜஸ்ட் சோல் சேட்டிஸ்ஃபேக்சன்..”

“மே பீ.. ஆனா..” அவள் முடிக்கும் முன்,

“ஆனா இன்னைக்கு அன்கன்ட்ரோலா சாப்பிட்டவுடனே சோல் சேட்டிஸ்ஃபேக்சன் கிடைச்சு உன்னோட ஸ்வீட்ட மறந்துட்ட!” அவளின் எண்ணத்தை பிம்பமாக காட்டினான்.

அவனிடம் மனம் திறக்க பேராசைப்பட்டாள், “பொண்ணுங்க எவ்வளவு இன்டிபென்டன்டா இருந்தாலும் செல்ஃப் லவ் பண்ணாலும், அவங்க அடி மனசுல ஓர் சின்ன ஏக்கம் இருக்கத்தான் செய்யுது, எக்ஸ்ப்ளோரர் லவ்வுக்கும், கேரிங்க்கும் மனசு பேராசைப்படும்.

சம்டைம்ஸ் நானே யோசிப்பேன் ரொம்ப சில்லியா யோசிக்றோம்னு, ஆனா எப்பவும் சின்ன..சின்ன ஆசையும் மறுக்கப்பட்டவங்களுக்கே அதன் மதிப்பு தெரியும்! வலிக்கவே இல்லனு பாவனை செஞ்சாலும் அடி மனசுல புதைஞ்சு உள்ளுக்குள் நச்சரிக்கும். காதலா ஓர் அணைப்பு, திகட்டாத முத்தம் எப்படி இருக்கும்னு? கேள்வி எனக்குள் எழுந்துக்கிட்டே இருக்கும்” இறுதி வாக்கியத்தை சொல்லும் போது ஓர் நொடி கண்களை மூடி அந்த அழகிய காதலை கற்பனை செய்தாள்.

“அகி மாமா சூப்பரா குக் பண்ணுவாரு கெஞ்சலும், கொஞ்சலுமா அத ஸ்ருதிக்கு ஊட்டியும் விடுவாரு நிச்சயமா பொறாமை இல்ல குட்டியா ஓர் நப்பாசை, ஏக்கம்! விஸ்வாக்கு சமைக்க தெரியாது ஆனாலும் அபிக்காக சமைச்சு கொடுப்பாரு, அந்த பீல் நினைக்கிறப்ப சம் வாட் ஸ்பெஷல் தெரியுமா! அந்த ஸ்பெஷல் பீல் இன்னைக்கு நீ கொடுத்திருக்கடா..! தேங்க்ஸ்..” அவளின் குரலில் கமறல் அல்ல, மிக இயல்பாக பேசினாள். அந்த இயல்பு அவனால் வந்திருக்கலாம்!

“ஐ லவ் யூ சொல்லுவனு பார்த்தா தேங்க்ஸ் சொல்ற..!” என முறைப்பாகக் கேட்டான். அவளது வேதனை புரிந்தாலும், பச்சாதாபம் காட்டினால் அவளிடம் உதை நிச்சயம் என்பதை உணர்ந்து காதலை யாசித்து நின்றான். ஸ்ரேயா காதலை அம்பலப்படுத்திய பின் அமரின் கண்ணிய காதலுக்கு கட்டுப்பாடு விதிப்பது அறிது.!

”கஹோ நோ ப்யர் ஹை.. படத்தில இதே மாதிரி ஓர் பிளேஸ்ல வச்சு கடலிருந்து முத்து கொடுத்து ஹீரோ ப்ரோபஸ் பண்ணுவான், வேணா அது மாதிரி ட்ரை பண்ணு..”

“ஏதே..! ஆழ்கடல் முத்து..! போடீ..”

“நீ போடா..”

“போகாம.. நீ போடீ..” திரும்பி நடந்து செல்பவனை முடிந்த மட்டும் முறைத்தவள், அவனை துரத்தி சென்றாள். ஸ்ரேயா தன்னை நோக்கி விரட்டி வர, இவனது நடை ஒட்டமாக மாறியது. சில நிமிட தாமதத்திற்கு பிறகு ஒருவரை ஒருவர் விரட்டி ஓடியே களைத்துப் போனார்கள்.

அரண்மனை வாழ்வு துறந்து கணவனுடன் காடு சென்ற சீதை அசோகவன இன்னல்களை கடந்து பேரவல் கொண்டது காதலுக்கு மட்டுமே..!

பாஞ்சாலி சபதம் முடிந்து மோட்சம் வேண்டாம், சராசரி பெண்ணாக மறு பிறவியெடுத்து ஒரே ஆணுடன் காதல் வாழ்வு வேண்டும் என பேராசை கொண்டாள்!

பரத்தையர் இல்லம் சென்று வழி தவறிய கணவன் திருந்தி வர, உனக்காக அல்ல என் காதலுக்காக பூம்புகாரை துறந்து வருகிறேன்! என்றாள் கண்ணகி.

ராதையோ இல்வாழ்வை மறுத்து காதல்.. காதல் மட்டுமே போதும்! என கண்ணனுக்காக உருகினாள்.

இதிகாசம் நிகழ்த்தவும், சரித்திரம் படைக்கவும் ஜெனித்த பெண்களே காதல் வாழ்வு வேண்டும் என பேராசையுடன் வாழ்ந்திருக்க, மிக.. மிக சராசரி பெண்ணான ஸ்ரேயாவின் ஏக்கமோ, தவிப்போ இயல்பான நியாயமாகவே இருந்தது. பின்னேரம் வர சில மணி நேரங்களுக்கு முன்பே ஸ்ரேயா கையில் சில சாதனங்களையும் கொடுத்து ஸ்னோர்கலிங் செல்ல அழைப்பு விடுத்தான்.

“பயர் ப்ளை ஸ்னோர்கலிங் போகணும், கம் பாஸ்ட்..” துரிதப்படுத்தினான்.

“ஆல்ரெடி போயிட்டு வந்துட்டேனே..!”

“ஒய்.. அங்க இருக்க கடல் அமைப்பு வேற, இந்த தீவுல இருக்க நில அமைப்பு வேற.. நீ கிளம்பி வா, பல அதிசயங்கள் பார்ப்ப.. ரசிப்ப..! உன் ரசனைய பார்த்து நானும் அனு..அனுவாக ரசிக்கலாம்னு இருக்கேன்..” அவன் சொல்லில் வெட்க கீற்று மெல்ல எட்டிப் பார்க்கவே செய்தது.

“உனக்கு ஆக்சிஜன் எக்யூப்மெண்ட்..?” அவனுக்காக கேட்டாள்.

“எனக்கு பழக்கம்டா.. சோ தேவைப்படாது..” தன் மீதான அவளின் கரிசனையில் கொஞ்சம் சொக்கித்தான் போனான்.

ஏற்கனவே கடல் மேற்பரப்பில் கண்ட டால்பின் உடன் வேறு சில மீன்களை காணவே போகிறோம் என்கிற மனப்போக்கில் அவனுடன் கடலில் இறங்கியவளுக்கு முதல் அதிர்ச்சி, ஆழ்கடலுக்குள் இவளை இழுத்து செல்வான் என்பதே.!

அடுத்து ஆழ்கடலில் தெரியும் மின்மினி ஒளி, ‘அட.. கடல்ல மின்மினி வாழுமா..!’ என்கிற சந்தேகம் அவளுக்கு. ஸ்ரேயாவை கவனித்து வந்தவனுக்கு அவளின் மனபோக்கு புரிந்து ஒளி பரவும் திசை நோக்கி இழுத்து சென்றான். அங்கு தென்பட்ட ஒளி வெள்ளம் நீந்தி சென்றது, அதன்பின்னே தெரிந்தது, அது ஜெல்லி மீன்கள் கக்கும் ஒளி என்று! தொடர்ந்து நீந்த நிலத்தில் பதிந்த பவள பாறைகளில் இருந்து ஒளி பீறிட்டது, அவ்வுலகில் சிறு..சிறு.. மீன்களும் பிரகாசித்தது.

புது விதமாக புவியில் காணும் காட்சியில் வேற்று லோகமாக தோன்ற அவ்விடத்தில் பிரமித்து நின்றாள். அவளின் தோள்களை தன் கையிருப்பிற்கு கொண்டு சென்றவன், கண்களில் இன்னும் தூரம் செல்ல வேண்டும் என்கிற சமிஞ்சை தாங்கி இருக்க, இதற்கே இவன் உபகரணம் இல்லாமல் வந்திருக்கிறான் என்பதும் ஸ்ரேயாவுக்கு விளங்கியது.

ஆழ்கடலில் ஒளிக்கு மின்னும் தன்மை இயற்கையாக உண்டு. இது பெரும்பாலும் ப்ளோர்ஸின் வாயிலாக ஏற்படுகிறது, இன்னும் சில நேரங்களில் பயோலூமினோஸ் மூலமாக நிகழ்கிறது. ஒளி உமிழ லூசிபெரேஸ் என்கிற மூலகூறு தேவைப்படுகிறது. லூசிபெரேசும் ஆக்சிஜனும் சேரும்போது ஒளி ஆற்றலாக வெளிப்படுகிறது. இந்த ஒளிகள் பெரும்பாலும் கடல்வாழ் உயிரினங்களுக்கு எதிரிகளை குழப்புவதற்கும், சூரிய ஒளியுடன் கலந்து வரும் ஒளியில் கலந்து மறைந்து உயிரை காத்துக் கொள்ளவும் பயன்படுகிறது. அதில் சில உயிரினங்கள் இனபெருக்க சிக்னலாக தங்கள் துணையை அழைக்கவும் பயன்படுகிறது.

சிறு பொந்து போன்று வாயில் தெரிய, அதற்குள் நுழைந்து செல்ல, அது மிகப் பெரிய குகையாக இருந்தது. அதில் பல வண்ணங்களில் மீன்கள் கூட்டமாக திரிய, அதை கண்டவளின் விழியும், அகமும் பிரமிப்பின் உச்சிக்கே ஏறியது. அட.. இன்னும் தீரவில்லை என்பதாக கண்ணில் தென்பட்டது இளசிவப்பு நிற ஒளி பரப்பும் செடி, அது ஆதிபவளம் இனசெடி.! தனது பாக்கெட்டிலிருந்து கருவி மூலம் அச்செடியை வெட்டி எடுத்தான். அமர் கையில் ஆதிபவளமும், மற்றொரு கையில் தன்னவளையும் கைப்பற்றிய நொடி உள்ளத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியில் வாழ்வின் மோட்ச நிலை அவனுக்கு!

ஆதிபவள செடியின் சிவப்பு நிறம் பறித்ததும் வெண்மை நிறமாக மாறிவிட அதிசயத்தின் எல்லைக்கே சென்றாள். எவ்வித மன அலைச்சல் இன்றி அவன் இழுப்பிற்கு கடற்கரைக்கு வந்தாள். வெண்மணல் பரப்பி இருந்த நிலத்தைத் தாண்டி சிறு மலை முகடுக்கு சென்றார்கள், குகை போன்ற அமைப்பு மட்டுமே அங்கு, வெயில் படாமல், மழை துளி தெறிக்காமல் இருக்க குடவரை அமைப்பில் குடைந்து அதில் பெண் தெய்வத்தின் சிலை பத்மாசனமிட்டு அமர்ந்த நிலையில் இருந்தது. அமர் பறித்து வந்த மலர் தோற்றத்தில் இருந்த செடியை அம்மன் மடியில் வைக்க, மீண்டும் அது இளஞ்சிவப்பாக மாறியது.

அப்போதே உரைத்தான், “இந்த செடி ஆதிபவளம்! பக்கத்து தீவுல வாழ்ற மக்களுக்கு இந்த பெண் தெய்வமே முதன்மை, அவங்க கூட்டத்தில் ஓர் பொண்ணுக்கு அங்க இருக்க ஆண் பிடிச்சு போனால் அவங்க இரண்டு பேரும் சேர்ந்து வந்து இந்த ஆதிபவள பூவை பறிச்சு அம்மன் மடியில் சேர்க்க முடிஞ்சா அவங்க காதல் அடுத்த கட்டத்துக்கு போய் கல்யாண சடங்கு முடிஞ்சதா டிக்லேர் பண்ணிருவாங்க. இதுல என்ன டிவிஸ்டுனா கடலுக்குள்ள அவங்க சேர்ந்து போய் செடி கிடைக்காட்டி அவங்க ஒண்ணு சேரதுல தெய்வத்துக்கு பிடித்தம் இல்லனு விலகி போயிரணும் என அவன் முடிக்க..” அதிர்ந்து அவனை ஏறிட்டாள்.

ஓய்ந்து போய் வெண் மணலில் கால்களை நீட்டி அமர்ந்தவன் முதுகை பின்னே சாய்ந்து படுத்தான். அவன் அருகில் அமரை போலவே படுத்தவளுக்கு வார்த்தைகள் பூட்டு போட்டு நின்றது. இதுவே போதும் என்று அவள் மனம் மத்தளம் கொட்டியது.

நேத்திரம் மூடி படுத்திருந்தவனுக்கு உள்ளத்தில் மெளனம் பரவிருக்க, ஸ்ரேயாவுக்கோ முரணாக பரவசம் தொற்றிக்கொண்டது. பக்கவாட்டில் தலையை திருப்பி அவனைப் பார்த்தவள், “அமரா..” என்றாள் முதன் முறையாக, அவள் அழைத்தது கனவில் ஒலிப்பது போலிருக்க மெல்ல விரிந்தது இதழ் அவனுக்கு,
“அமரா.. ஐ லவ் யூ..டா..” என்பவளை ஆர்ப்பாட்டம் இன்றி தன்னருகில் இழுத்து புஜத்தில் படுக்க வைத்துக் கொண்டான்.


ஸ்ரேயா காதலை சொல்லும் அந்நொடி அவளை கொண்டாடுவான் என எண்ண, அவனோ எவ்வித ஆர்பாட்டமும் இன்றி அவளைத் தன் கையணைப்பில் நிறுத்திக் கொண்டான். அந்நொடியை உணர்ந்து உவகை கொள்ள சில நிமிடங்கள் தேவைப்பட்டது. ஆனால் அவளுக்கோ அது தேவையற்றது போல், அவன் கழுத்தில் முகம் பதிய செவி தீண்டி உரைத்தாள்.

“ஏன் அமரா..! ஆதிவாசிங்க மரபுப்படி கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் அவங்களுக்குள்ள இண்டிமேசி தப்பா என்ன?” குறும்பு கொப்பளிக்க மென்னகை தாங்கி கேட்டாள் ஸ்ரேயா.

அவனது சித்தம் கலங்க செய்தாள் காதல் மனைவியாக, இதற்கு மேல் அமரனை கட்டுப்படுத்த எந்த சக்தியாலும் முடியாது.!

“ஏய்.. சக்கரக்கட்டி.. ஆர் யூ சுயூர்..” என மலைப்பாம்பாக சுற்றி வளைத்தான்.

“ஆமா டா மடையா..” என தன் மேல் தேகத்தை பரப்பி இருப்பவனின் தலை கோதி முதல் நெற்றி முத்தம் பதித்தாள்.
‘பல கனவுகள்
குவிந்து கிடக்க
தனிமையின் அவஸ்தை நோக
தீராயோ..
என் கள்வனே..!’

கள்வனின் இதயத்தில் மூச்சு வாங்க கண் சொருகி கிடப்பவளின் தேகம் மணலில் நோக வேண்டாம் என இதமாக கையாண்டவன், பின்பு முழுவதுமாக அவளை கைகளில் அள்ளிக் கொண்டான். அறையின் பஞ்சணையில் நெருங்கியவனின் கவனத்தை அவளின் சங்கு கழுத்து செந்நிறமாக மாறி பேரழகோடு ஈர்க்க, அவளை விடுத்து எழுந்து சென்றவன் கண்ணாடிக் குவளையில் சிறை வைத்திருந்த மின்மினி பூச்சிகளை விடுவிக்க அந்த அறை முழுக்க ஒளிர்ந்து பிரகாசித்தது. இருளில் கண்சிமிட்டும் அழகில் மதி மயங்கி ரசித்தாள்.

சிறு பூச்சிக்கும் தனக்கானவளின் உரிமையை தர மறுத்தவன் அவள் கழுத்தில் தொடங்கிய சிறு வெப்ப முத்தங்கள் மூலமாய் இருவருக்கான தேடலை துவங்கி வைத்தான், மென் இடையோ இறுக்கத்தின் அணைப்பில் விம்மி துடிக்க, அங்கு மலர்தலின் வெளியேறும் மணம்போல் அவர்களிடையே அழகான உறவாக மாறியது.

கூடல் கூடுதலான பொழுதுகளை தழுவலில் தழுவிச் செல்ல உடல் முறுக்கி சோம்பல் எடுக்க அவளின் அசைவில் எதாச்சையாக கைபட்டு பொத்தன் ஆனாக கூடாரம் விரிந்து வெட்டவெளியாக காட்சி தந்தது.

உடலை போர்வைக்குள் நுழைத்து கண் முன் விரிந்த ஆழி வெய்யோனுடன் கலந்து பிரகாசித்தது. அதன் பேரழகை படுத்தபடி ரசிப்பவளின் இடையை தன்னோடு இறுக்கி கழுத்தில் முகம் பொதித்து ஸ்ரேயாவுடன் இயற்கையை ஆலிங்கனம் செய்தான் அமர்நாத்.

“அமரா..”

“சக்கரக்கட்டி..”

“ம்ம்.. அம்மரா..” என கொஞ்சினாள்.
அவளின் சிணுங்கலில் துளி.. துளியாக தன்னை தொலைத்துக் கொண்டிருந்தான்.


“இங்கயே இருந்திருவோமா..?” குரல் குழைய, மெய் மறந்து கேட்டாள்.

“அவ்வளவு என்ஜாய் பண்ணியா, சக்கரக்கட்டி..” நேற்றை நிகழ்வு நிழலாட கூசிப் போனாள்.

“ச்ச்சிசீ..”

“இத்தன சீ..யா..வ.. இருந்துச்சு.. அப்ப என் பெர்ஃபார்மன்ஸ் பத்தலனு நினைக்கிறேன்..”

“நினைப்ப.. போடா..” என எழுந்து தயாராகி கிளம்பி நின்றாள். மீண்டும் தூக்கத்தில் லயித்தவன், முற்பகலில் எழுந்து தன்னவளை நாடி சென்றான். அவளோ பெண் தெய்வத்திடம் ஐக்கியமாகி இருந்தாள்.

அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டே கேட்டான், “நீ சொன்னது தான்டி கரெக்ட், இங்கயே இருந்திருவோமா..?”

“இருக்கலாம், ஆனா இப்ப வேண்டாம். நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா நிறைய நாள் வந்து தங்கலாம், அங்க எல்லோரும் தேடுவாங்கடா.. சீக்கிரம் கிளம்பு போகலாம்..” என அவனை துரிதப்படுத்தி, அத்தீவிலிருந்து கிளம்பினாள்.

 
Last edited:
அவன் அம்மாக்கு இவளோட கடந்த காலம் தெரியாது இல்ல 🤔🤔🤔🤔
அவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்களா 🤔🤔🤔
அமர் ரே 😍🥰❤️🙈🙈
 

Advertisement

Advertisement

Back
Top