சிதறாத முத்தங்கள் - 21

Advertisement

Sastika

Active member
Member
ei2RT6C97728.jpg
‘காதலரை கண்ட தருணத்தில் ஏற்படும் தன்னிச்சையான மகிழ்ச்சி, அதுவே-’

கண்டவழி உவத்தல்-21


முதிர்ந்த காதலர்களாய் பெருங்கடலும், இரவும் தனிமையின் மடியில் உறவாடிக் கொண்டிருந்தன. காதலியின் சிணுங்கலாய் அலையின் சத்தம் மட்டுமே அந்த நேரத்தை நிரப்பியது. நேற்றைப் போல் இன்று கூடிக்கிடைக்காத ஏக்கத்தில் இளம் காதலர்கள் தேகம் உரசிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

“லாஸ்ட் நைட் ஐ பெல்ட் லைக் எ ட்ரீம் டூ மீ..” கிறக்கமாக அமர் தோளில் சாய்ந்து கொஞ்சினாள்.

“ஹேய்.. கனவு இல்லடி, இங்க பாரு..” கழுத்தில், வயிற்றிலிருந்த நக கீரலை மேல் சட்டை அகற்றி ஆதாரமாய் காண்பித்தான்.

முந்தைய நாள் தாபம் எட்டிப் பார்க்க, “அய்யோ.. அமரா.. ப்ளீஸ்.. என..க்கு..” என்றவளிடம், இடை நுழைந்தான்,

“எனக்கும்.. ரூம்க்கு போகலாமா..” காதலை மொழிபெயர்க்க பரபரவென துடித்தான்.

அமர் வாயில் தப்..தப்.. என இரண்டு அடி போட்டாள், “தப்பு.. தப்பா பேசாத, எனக்கு எம்ப்ரேசிங்கா இருக்குனு சொன்னேன்..”

“சக்கரக்கட்டில.. ப்ளீஸ், அதிகமா ஏங்க வைக்குற..” அருகில் வீற்றிருந்தவளை தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.

“அதுசரி, இந்நேரத்துல துவாரபாலகிகளுக்கு தெரியாம இங்க வந்திருக்கியே, நமக்குள்ள எல்லாம் முடிஞ்சுச்சுனு தெரிஞ்சா..?”

“எதே...” அதிர்ச்சி பெருக கேட்டாள்.

“என்னவிட உனக்குதான் பீலிங் ஜாஸ்தியா இருக்கு போல, எப்ப பாரு அந்த நினைப்பாவே இருக்க. நான் சொன்னது நம்ம கல்யாணம் முடிஞ்சத தெரிஞ்சா என்ன செய்வாங்கனு..?”

“தெரியல, அதுவேற எனக்கு கில்ட்டாவே இருக்கு...”

“ஹா.. ஹா.. அதுவும் அந்த குட்டச்சி மாளவிகாவுக்கு தெரிஞ்சா என்ன முறைச்சே மூணாறுக்கு மூட்டை கட்டிருவா..” சிரிப்புடன் தன்னவளின் வயிற்றை இறுகப் பற்றி தனக்குள் வைத்துக் கொள்ள முனைந்தான்.

“எதுக்கு அவங்கள துவாரபாலகினு கூப்பிடுற?”

“பொதுவா கோவில் கர்ப்பகிரஹத்துல இருக்க சாமிய பாக்கவிடாம, வெளியே இருபக்கமும் துவாரபாலாகிகள் இருப்பாங்க, அதுமாதிரி இந்த அமர் என்கிற பக்தன கடவுள்கிட்ட அண்டவிடாம இவங்க இரண்டு பேரும் இருக்காங்களா.. சோ கால்ட்..” அவளது கழுத்தை தாண்டிய அவனது மென் முத்தத்தின் சிலிர்ப்பில் கழுத்தை பின்பக்கமாக சாய்த்து அவன் தோளில் ஊசலாடினாள்.

“அகி மாமா, அவங்க இரண்டு பேரையும் இருமலர்கள்னு சொல்வாரு..”

“காக்கும் கடவுளையே இஷ்ட பெயர் வச்சு இஷ்டத்துக்கு கூப்பிடுறப்ப, எனக்கு டிஸ்டர்பன்சாவும், உனக்கு பாதுகாப்பாகவும் இருக்கவங்கள எனக்கு அப்படி கூப்பிட தோணுச்சு..” தன்புறமாக திருப்பி இதழ் வழியாக இமை தொட்டு முன்னேறினான்.

தனிமையின் இரவில் லயித்து இருந்தவர்களுக்கு ஓர் கூக்குரல் இடையூறு தந்தது.

“ஐயோ அம்மா..” என்ற பெண்ணின் அலறலும்,

“ப்ளீஸ்.. கொஞ்சம் வேகமா வந்து வண்டியெடுங்க” ஆணின் பயந்த குரலும் கேட்க,

“என்னாச்சுடா யாருக்கோ உதவி தேவைபோல, சீக்கிரம் வா..” ஸ்ரேயா எழுந்து நடக்கத் துவங்க,

“இந்த பக்கம் வா, எப்படியும் கார் பார்க்கிங் இருக்க இடத்துக்குதான் போவாங்க..” குறுக்கு வழியில் இழுத்துச் சென்றான்.

கர்ப்பிணி பெண்ணுடன் காரில் பயணம் செய்தவளுக்கு, அப்பெண்ணின் கதறலும், சிரமமும் கதிகலங்க வைத்தது. அப்பெண்ணை அவசர சிகிச்சையில் அனுமதிக்கும் முன் இவள் மயங்கி சரிந்திருந்தாள்.

மருத்துவனை படுக்கையில் அயர்ந்து உறங்குபவளை ஆராயந்து கொண்டிருந்தான். ஏதோ அவனுக்கு புரிவது போல் தோன்றியது. அவ்வறையில் அவளுக்குத் துணையாக தங்கியிருந்தான், இடையில் சென்று அப்பெண்ணின் பிரசவம் நன்முறையில் நடை பெற்றதையும் தெரிந்து கொண்டு வந்தான்.

அதிகாலையில் கண் முழித்தவள், “அமரா..” என எழுந்து உட்கார்ந்தாள்.

“ஏன்.. ஏன்? இப்படி..? லேபர் பெயின் வந்த பொண்ணே அங்கு கண் முழிச்சு தெம்பா உட்கார்ந்து ஜுஸ் குடிச்சுக்கிட்டு இருக்கு, நீ ஏன்மா கொஞ்ச நேரத்துல அக்கப்போர் பண்ணிட்ட..!”

எதற்கு இங்கே இருக்கிறோம் என விளங்காமல் முழித்துக் கொண்டிருந்தவளை இவனின் கேலி சங்கடபட வைத்திருந்தது.

தலை குனிந்து அமர்ந்திருந்தவளின் தோற்றம் ஏதோ செய்ய, அருகில் சென்றவன் அவள் மோவாய் பிடித்து, “டேக் இட் ஈசி.. இங்க பாரு..”

“பயர் ப்ளை.. என்னோட கண்ண பாரு..” நேரெதிர் பார்க்க செய்தவன்,

“எதையும் யோசிக்காத.. எப்பவும், எது நடந்தாலும் உன்னோட நான் இருப்பேன்.. ஐம் யுவர்ஸ்..” தன் கைகளில் தன்னவளின் வதனத்தை தாங்கியவன் நெற்றியோடு நெற்றி முட்டி, மூக்கோடு மூக்கு உரசி என்றும் நான் உனக்காவன்.. உனக்கானவனாக இருக்கவே விரும்புவதாக நம்பிக்கை தந்தான்.

சில நிமிடங்கள் அவனில் இளைப்பாறியவள், சட்டென தன்னிடம் ஒட்டி இருந்தவனை தள்ளியவள் படபடவென பொறிந்தாள்.

“இடியட் போடா.. எனக்கு உன்ன பிடிக்கல.. பிடிக்கல..” கூறியவளின் கருமணிகள் அங்கும், இங்கும் உலாவியதைக் கண்டான்.

“பிடிக்..கல.. பிடி..க்க்கல..” என்று அழுத்திக் கூறியவளை உற்று நோக்கியவன், ஏதோ வில்லங்கமாக யோசிக்கிறாள்.. என உணர்ந்தான்”

“நீ ஏன்டா.. முன்னாடியே என லைஃப்ல வரல, வந்திருந்தா கண்ணா...” அவள் முடிக்கும் முன்,

“இப்பவும் கண்ணா நம்ம பையன்தான், தேவையில்லாம கண்டத யோசிக்காத..” மறுத்து அவன் தலையசைக்க, தொடர்ந்தாள்.

“அவன் பெயர் கெளசிகன், நான் தேர்ட் இயர் படிக்கும் போது கெளசிகன் பைனல் இயர். இரண்டு பேரும் வேற வேற டிபார்ட்மெண்ட், சோ பார்த்துக்கிட்டது ரொம்ப கம்மி. அவனுக்கு காலேஜ் முழுக்க கேர்ள்ஸ் கிரஷ் அதிகம். படிக்கும் போதே பாடி பில்டரா ஜிம் பாய் மாதிரி சுத்திக்கிட்டு இருபான், அதனாலயே படிக்கிற பொண்ணுங்களோட கண் மொத்தமும் அவன் மேலதான் இருக்கும்., எனக்கு அதுவரைக்கும் கெளசிகன் மேல ஜீரோ இன்ட்ரெஸ்ட், அவனா வந்து லவ் சொல்ற வரைக்கும்.”

“ஹே.. வெயிட்.. வெயிட்.. பிளாஷ்பேக் சொல்ல போறியா..?” என்றவன், சட்டென படுக்கையில் அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.

“எனக்கு தெரிஞ்சு எப்படியும் ரொம்ப லென்தியா போகும் போல, சோ கம்ஃபர்டபிளா உட்காந்துகிறேன்” சவுகரியமாக சீட்டிங்கை போட்டவன், கன்டினியூ என்பதாக கை அசைத்தான். வலிக்காமல் அவன் நெஞ்சில் குத்தியவளை தடுக்காமல் அமைதி காத்தான்.

அவனின் உத்தி புரிந்தது.. தன் இணையாளின் கண்ணில் வலியோ, கண்ணிரோ தென்பட்டால் சர்வ நிச்சியமாக இவன் உடைந்து விடுவான் என்பதால் அவளை சீண்டி போக்கு காட்டுகிறான்.

“ஹலோ.. இத சாக்கா வச்சுக்கிட்டு ஒட்டிக்கிட்டு உட்காரக்கூடாது, ஸ்டே ஒன் ஆர்ம் டிஸ்டன்ஸ்..” மிரட்டல் தொனி தெளிக்க, அவனின் சொல்லிற்கு அடங்கியவளாக, “ஒன் இல்ல.. இலவன் ஆர்ம் தூரத்துல உட்கார்ந்துக்குறேன்..” என தூரம் நகன்றவளை, இழுத்து தன் நெஞ்சோடு அரவணைத்துக் கொண்டான்.

மென்னகை தாங்கி அவனிள் புகுந்தவள், “டேய்.. நான் சொல்லவா வேண்டாமா..?”

“தாராளமா சொல்லு.. உன்னோட கடந்த காலத்துல நடந்தது பத்தி தெரிஞ்சுக்கிற முழு உரிமையும் எனக்கு இருக்கு, ஆனா கண்ணுல சின்னதா நீர் படலம் தெரிஞ்சுச்சு அவ்வளவுதான்..” தன்னிடம் ஒன்றி இருந்தவளை சற்று விலக்கி மிரட்டவே செய்தான்.

“அப்பனா உன் நெஞ்சுல படுத்துக்கிட்டே சொல்றேன், நீ மட்டும் தூங்கிறாம கேளுடா..” நேர்கொண்டு பார்க்காமல் சொல்கிறாளாம்.

“கேக்குறேன்.. ஆனா இடையில காபி ப்ரேக் கொடுப்பதான..! உன் அமரா பாவம், பார்த்து செய்யுமா..” கொஞ்சலாக ஊக்கம் தந்தான்.

“காலேஜே கெளசிகன் பின்னாடி சுத்தும் போது, இவன் எனக்காக அலைஞ்சான். அந்த ஓர் விஷயத்துல விழுந்துட்டேன், அவன பத்தி எதுவுமே தெரிஞ்சுக்காம இருந்தேன். அவன் பைனல் இயர் முடிச்சு ஜாப் போயிட்டான், நானும் ஸ்டடிஸ்ல கான்சன்ட்ரேஷன் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அதிகமா வெளிய போனதுல்ல, அப்ப.. அப்ப.. போன் கான்டேக்ட், ரேரா காபி ஷாப் அவ்வளவுதான் எங்களுக்குள்ள ரிலேசன்ஷிப் போயிக்கிட்டு இருந்துச்சு, நானும் படிப்பு முடிய ஜாப் போயிட்டேன். அப்பவும் எங்க உறவுல எந்த வித்தியாசமும் வரல, திடீர்னு ஓர் நாள் ஆபீஸ் லீவு சொல்லிட்டு, ஓர் இடத்துக்கு வர சொன்னான். நானும் போய் பார்த்தா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணுறதுக்கு எல்லாம் தயாரா இருந்துச்சு, எவ்வளவோ கெஞ்சுனான் நான் ஒத்துக்கல, அவங்க அம்மா வேற பொண்ணோட நிச்சயம் பண்ணிட்டாங்க, இப்ப விட்டா என்னோட சேரவே முடியாதுனு அழுதான். அட்லிஸ்ட் எங்க வீட்டுலயாவது சொல்றேன்னு சொன்னதுக்கு, ஏதேதோ காரணம் சொல்லி கடைசியில என் கால்ல விழுந்து கெஞ்ச ஆரம்பிச்சுட்டான். அவனோட பிடிவாதத்திலையும், என்னோட குற்றவுணர்ச்சியாலயும்தான் கல்யாணம் முடிஞ்சுச்சு..”

“அப்பாடி சொல்லி முடிச்சிட்டியா.. வா.. போய் டீ அடிச்சிட்டு வருவோம்..”

“டேய் எருமை.. இப்பதான் கதையவே ஆரம்பிச்சேன் அதுக்குள்ள முடிஞ்சுச்சான்னு கேக்குற? போ.. உனக்கு என்ன பத்தி தெரிஞ்சுக்க விரும்பமில்ல..”

“மம்ச்ச்ச.. சாரி, நீ ஹேப்பி லைப் வாழ்ந்திருந்தா கண்டிப்பா உன் பிளாஷ்பேக் கேக்குறதுல எந்த பிரச்சனையும் இல்லடி, அதுக்கு அகைன்ஸ்ட்டா நீ சொல்லி... முடியலடி பயமா இருக்கு..” தன் இணையை இறுக்கிக் கொண்டான்.

“அவ்வளவு ஃபீலிங்கெல்லாம் இல்ல, எனக்கு உன்கிட்ட சொல்லணும்னு தோணுது, கேளேன்டா...!”

“என்ன விடமாட்ட, சொல்லும்.. சொல்லி தொலையும்..”

“சிரிச்சுகிட்டே கேளுடா..”

“ஹி..ஹி..”

“அழகுடா.. நீ!” தன் இணையின் இதழை கிள்ளி முத்தம் கொஞ்சி, பிளாஸ்கில் இருந்த டீ-யை ஊற்றி அவனிடம் தந்துவிட்டு, அவளின் கடந்த காலத்தை தொடர்ந்தாள்.

“எங்க அம்மாக்கு தெரிஞ்சு ரொம்ப கோவப்பட்டாங்க, அப்புறம் ஸ்ருதி வந்து அம்மாவ சமாதானம் செஞ்சு வைக்க, கெளசிகன் வீடு பார்த்து வச்சுட்டேன்னு சொல்லி எங்கள கூப்பிட்டு போனான். போய் பார்த்தா குடும்பம் நடத்த தேவையானத எல்லாம் அரேன்ஜ் பண்ணியிருக்கிறத பார்த்து எங்க அம்மாக்கு இருந்த மனஸ்தாபம், கோபம் எல்லாம் குறைஞ்சே போச்சு..”

“நான் என்னமோ நினைச்சேன், அந்த பையன பாரு இத்தன அவசரத்துலயும் நம்ம பொண்ணு கஷ்டப்படக்கூடாதுனு எல்லாம் பார்த்து பார்த்து வாங்கி வச்சுருக்காப்பல, இனி ஸ்ரேயா கஷ்டப்படாம இருப்பா, சுயமா சம்மதிக்கவும் செய்றா அவளப் பத்தி கவலையில்லாம இருக்கலாம்.“ என தாயாக அக்கரையில் கரைந்தார்.

‘எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு, காலையிலதான் கல்யாணம்னு சொன்னதா ஸ்ரேயா சொன்னா, ஆனா வீட்ட பார்த்தா மாசக்கணக்கா பக்காவா எல்லாத்தையும் செட் பண்ண மாதிரி இருக்கு. ஏதோ இருக்கு..!’ என சந்தேகத் துளி விழுந்தது சாஸ்ருதியிடம்.

“வாழ்க்கை அது போக்குல போச்சு, பேயிங் கெஸ்ட் மாதிரி இருந்தோம். மார்னிங் ஆபிஸ் போவான், ஈவுனிங் நான் ஆபிஸ்ல இருந்து வரதுக்கு முன்னாடியே வந்துருவான், நான் உள்ள நுழையவும் ஜிம் போயிட்டு லேட் நைட் வர சாப்பிட தூங்கனு இருக்க வேண்டியது, இப்படியே மூணு, நாலு மாசம் போயிருச்சு. அப்ப.. அப்ப டின்னருக்கு வெளியே கூப்பிட்டு போவான். அப்போதைக்கு இருந்த ஓர் நல்ல விஷயம் என்னோட சம்மளத்த அப்படியே எங்க வீட்டுக்கு கொடுக்க சொன்னதுதான். எனக்கும் பெருசா எந்த எதிர்பார்ப்பும் அந்த வயசுல இல்ல, ஆண் துணை இல்லாம வாழ்ந்த எனக்கு கெளசிகன் இருந்தது நிறைவா தோணுச்சு. என்னோட ஜாப் ரிலேட்ட கத்துக்க எனக்கும் ஸ்பேஸ் நிறைய இருந்துச்சு. என்னோட கவனம் மொத்தமும் அதுல இருந்துச்சு..”

“நான் ஆபீஸ் முடிச்சு வரப்ப வீட்டுக்குள்ள இருந்து கீச்சுனு ஓர் பெண்ணோட குரல் கேட்டுச்சு, தயங்கிட்டே உள்ள போகாம வாசல்ல இருந்து எட்டிப் பார்த்தா, கெளசிகன் அவங்க காலுக்கு கீழ உட்கார்ந்திருந்தான். நான் நிக்கிறத கவனிச்சுட்டு வேகமாக எழுந்து வந்தான்.”

“வா.. ஸ்ரேயா, அம்மா வந்திருக்காங்க..” என்றவன் அவள் கையை பிடித்து உள்ளே அழைத்து சென்று தாய்க்கு அறிமுகம் செய்து வைத்தான்.

“வாடிமா.. அழகு பெத்த பிள்ளையாவுல இருக்க, அதான் என் மகன் மயங்கி பெத்தவக்கிட்ட கூட ஒத்த வார்த்த சொல்லாம கட்டிக்கிட்டான் போல..” ஸ்ரேயாவின் கன்னம் வழித்து பாசமான செய்கையா இருந்துச்சு கெளசிகனின் தாய் அமுதாவிடம்.
‘ஆனா, அவங்ககிட்ட இருந்த வெளிப்பட்ட சொல் எனக்கு வலிக்கணும்னு வந்த மாதிரி இருந்துச்சு. பையன பெத்தவங்க ஏதோ ஆதங்கத்துல சொல்றதா அப்ப பெருசா எடுத்துக்கல்ல..’ இது ஸ்ரேயா.

“இன்னைக்கு என்னமா சமையல்..?” சமையல் அறையில் நுழைந்த அமுதா மருமகளிடம் கேட்டார்.

“வெண்டைக்காய் சாம்பார், உருளைக்கிழங்கு பொரியல் ஆன்ட்டி..”

“எப்ப பாரு சாம்பார், பருப்பு, ரசம்னு இரண்டு நாளா இப்படியே செஞ்சு போட்டா நல்லாவா இருக்கு?” என கேட்டவர், ஸ்ரேயா முகம் சுருங்குவதை கண்டு,

“வயசு பிள்ளைங்க நல்லா கார, சாரமா சாப்பிட்டாதான் உடம்பு பலமா இருக்கும். கெளசிக் எப்பவும் பருப்புனா வெறுப்பாவும், ரசம்னா விஷம்னும் சொல்ற ஆளு, புது பொண்டாட்டி சமைச்சு போடவும் குறை சொல்லாம சாப்பிட்டுறான் போல, எங்க வீட்டுல இரண்டு பசங்களும் கறிசோறு இல்லாம இருக்க மாட்டாங்க..” அமுதா மாமியாராக பேசினார்.

“எனக்கு நான்-வெஜ் சமைக்க தெரியாது, வேணும்னா ஸ்விக்கில ஆர்டர் பண்ணிப்போம். கெளசிக்கும் இதுவரை அசைவம் வேணும்னு கேட்டதுல்ல..” வார்த்தையில் தயக்கம் இருந்தது ஸ்ரேயாவிடம்.

“நீ என்னமா புருஷன மரியாதை இல்லாம பேசிக்கிட்டு இருக்க, என் பெரிய மருமக ஒரு வார்த்தை மரியாத இல்லாம பெரிய பிள்ளய பேசமாட்ட, நம்ம குடும்பத்துக்கு இதலாம் சரியா வராது. மாத்திக்கோ அம்மு..” என்றவரின் கெஞ்சல் வார்த்தையை ஏற்றுக் கொண்டாள்.

“நைட்டுக்கு நானே மட்டன் குருமா, சப்பாத்தி செஞ்சு வச்சுறேன், இப்ப நீ தயாராகி வந்து சாப்பிடு” என்று அவள் அலுவல் கிளம்ப உதவினார் அமுதா. இரவுக்கு அமுதா சொன்னபடியே சமைத்து வைத்திருந்தார்,

“அம்மு.. குளிச்சிட்டியா போய் நீயும், கெளசியும் சாப்பிடுங்க, நானெல்லாம் அப்பவே சூடா சாப்பிட்டேன்” என்றவர் தொலைக்காட்சி தொடரில் மும்ரமாகி இருந்தார்.

சமையல் கட்டிற்கு சென்று பார்த்த ஸ்ரேயாவுக்கு அலங்கோலமான கிச்சனே தென்பட்டது. உணவை முடித்து அறைக்கு சென்றவள் கெளசிகனிடம், “உங்களுக்கு நான்-வெஜ்னா ரொம்ப பிடிக்குமோ..?”

“அப்படியெல்லாம் இல்லையே, ஏன் கேக்குற?”

“உங்க அம்மா சொன்னாங்க, நான்-வெஜ் உங்களுக்கு பிடிக்கும்னு..”

“ஒ.. அம்மாக்கு சாப்பாட்டுல அசைவம் கண்டிப்பா வேணும், அதுக்காக சொல்லி இருப்பாங்க”

அடுத்த தினங்களும் அமுதாவே சமைக்க ஸ்ரேயாவுக்கு அது அன் ஹைஜினிக்கான உணவாக மாறி வாந்தி மயக்கம் என இரு தினங்களில் சோர்ந்து போனாள்.
அமுதா ஊருக்கு கிளம்பவும் கிச்சன் சென்று பார்த்தவளுக்கு அடி பிடித்த பாத்திரங்களும், கப்போர்ட்டில் மூடிய பாத்திரங்கள் நடுவே பழைய பதார்த்தங்கள் பூசனம் பிடித்தும் கிடந்தது. அனைத்து பாத்திரங்களையும் சுத்த படுத்துவதைவிட அதை கடாசிவிட்டு புதிய பாத்திரங்களை வாங்கி அடுக்கி வைத்தாள். இதை அறிந்த கெளசிகனும் பெருசாக அலட்டிக் கொள்ளவில்லை.

“பரவாயில்லடி.. மாப்ள நல்ல பையனா இருக்காங்க, நீ செஞ்சது அவங்க அம்மாவ குறைக் காட்டுற மாதிரி இருந்தும் ஓர் வார்த்தை உன்ன ஒண்ணும் சொல்ல..!” ஸ்ரேயாவின் தாய் மருமகனை மெச்சிக் கொண்டார்.

“நான் என்ன பண்ணாலும் குறையா எதுவும் சொல்றது கிடையாது, ஆனாலும் எனக்கா எதுவும் செய்ய சங்கடமா இருக்குமா.. யாரோ கன்ட்ரோல் பண்ற மாதிரி இருக்கு”

“அது புதுசுல அப்படிதான் இருக்கும் போக போக சரியா போயிரும், நீயும் பக்குவம்மா நடந்துக்கோ, உன் மாமியார் வந்தவங்க உன்ன ஊருக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லலையா?”

“மம்ஹீம்.. சொல்லல, அவங்க கூப்பிடாதது எனக்கும் பெருசா தெரியல மா”

“சம்மந்தியம்மா உங்கள ஏத்துக்கிட்டாங்கள்ள பின்ன என்னவாம்? அடுத்து அவங்க வரப்ப எனக்கு போன் போட்டு சொல்லு, நேர்ல வந்து பார்த்து பேசுறேன் அதான் முறையும் கூட, இல்லாட்டி இதையே காரணமா வச்சு உங்கள ஒதுக்கிறப் போறாங்க”

“அப்படியெல்லாம் செய்ய மாட்டங்கம்மா, கெளசிக்கு ஆறு வயசா இருக்கப்ப அவங்க அப்பா வேற மேரேஜ் பண்ணி போயிட்டாராம், பொம்பள வளர்த்த பிள்ள அதான் தப்பா போயிட்டானு சொந்த, பந்தம் சொல்லி காட்டும்னு சங்கடப் படுறாங்க போல, அதையும் ஓர் நாள் பேச்சு வாக்குல சொல்லிக்கிட்டு இருந்தாங்க..” அமுதாவின் செயலை நியாயப்படுத்த தோன்றியது.

“ஆமா.. பொம்ள தனியா வளர்த்தா இந்த உலகம் என்னயென்ன பேசும்னு எனக்கு தெரியுமே. நல்லவேளை நமக்கு சொந்தகாரங்கனு யாரும் இல்ல..!” என பெரு மூச்சு விட்டார் ஸ்ரேயாவின் அம்மா.


 

Advertisement

Advertisement

Back
Top