HAI FRIENDS HERE WE GO WITH THE SIVAN RATHIRI SPECIAL 18 TH EPISODE ENJOY READING IN UR LEISURE N SHARE UR COMMENTS FOR MY PLEASURE THANKS TO ALL READERS FOR UR GENUINE SUPPORT

அத்தியாயம் 18
அனு நான் பாட்டுக்கு பேசிட்டேயிருக்கேன் நீ பதில் பேசாமல் உட்காரந்திருந்தால் என்ன அர்த்தம்?
கோபத்துடன் உறுமிய தந்தையின் பக்கம் ஆத்திரத்துடன் பார்வையைத் திருப்பினாள் மகள்
சம்மதமில்லைனு அர்த்தம் ஏம்ப்பா. நீங்க என் நிலைமை புரிஞ்சு தான் பேசறிங்களா? அடுத்த வாரம் உனக்கும் பிரசன்னாவிற்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணப் போறோம்னு சொன்னா என்ன அர்த்தம்? நீங்க உங்க மனசுல என்ன தான் நினைச்சிட்டிருக்கிங்க?
படபடவென்று பொரிந்து கொட்டியவளை கோபத்துடன் முறைத்தார் ராஜசேகரன்.
உனக்குத் தான் நம்ம குடும்பத்தின் மானம் மரியாதையில் அக்கறையில்லேன்னா எங்களுக்குமா அக்கறை இல்லாமல் இருக்கும்? விஷயம் வெளியே தெரியும் முன் எதாவது செய்தாக வேண்டுமே. அதற்காக தான் இந்த ஏற்பாடு...
பேஷ் ரொம்ப நல்லாயிருக்குப்பா உங்க ஏற்பாடு... நம்ம குடும்ப மானத்தைக் காப்பாற்ற இன்னொரு குடும்பத்தின் மானத்தில் மண்ணையள்ளிப் போடனுமா? இட்ஸ் நாட் பேஃர் டாடி நீங்க பண்றது கொஞ்சங்கூட நியாயமேயில்லை.
நியாய அநியாயத்தைப் பற்றி நீ பேசாதேடீ இப்படி வாய் கிழிய நியாயம் பொளக்கறியே நீ செஞ்சது மட்டும் ரொம்ப நல்ல காரியமோ?
அது வரையில் பொறுமையை கடைபிடித்த மங்களம் இப்பொழுது பொங்கி எழ, அனுவின் விழிகளில் வென்னீர்கோலம்......
அம்மா நான் பண்ணியது தப்பு தான்னு ஒத்துக்கறேன் ஆனால் அதை மறைக்க மேலே மேலே தப்பு பண்ணிட்டே போகனுமா? ஒரு நல்ல மனுஷரை ஏமாற்றிக் கல்யாணம் பண்ணிக்கறது ரொம்ப பாவம்மா
ராஜசேகரன் கோபத்துடன் குறுக்கிட்டார்
பாவம் புண்ணியத்தைப் பற்றி நீ பேசாதே அனு அதற்கு உனக்கு தகுதியில்லை சாத்தான் வேதம் ஓதுற மாதிரி இருக்கு
அனுராதா அடிபட்ட பார்வையுடன் தந்தையை ஏறிட்டாள்
எனக்கு தகுதியில்லைனு நல்லாவே தெரியும்ப்பா ஆனால் எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லருந்து நீங்க போதிச்ச சில நல்ல விஷயங்களை நான் இன்னும் மறக்கலைப்பா செத்துப்போனா நம்ம பின்னால வரப்போறது சொத்து சுகமொ வீடு வாசலோ இல்லே நாம பண்ற பாவமும் புண்ணியமும் தான் நம்மகூட வரும்னு நீங்க தானேப்பா சொல்லியிருக்கிங்க? நான் ஏற்கெனவே பண்ணிய பாவம் பத்தாதா? மேலும் மேலும் தப்பு பண்ணி என் பாவமூட்டையைப் பெருக்கிக்கனுமா? சொல்லுங்கப்பா?
முழந்தாளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு கதறிய மகளைக் கண்ணீருடன் பார்த்தார் பெற்றவர் அவர் சுதாவைக் காட்டிலும் அனுவின் மீது அதிக ப்ரியம் வைத்திருப்பவர்
என்ன தான் சொல்லு சின்னவளுக்கு இருக்கற பொறுப்புணர்ச்சியும் புத்திசாலித்தனமும் பெரியவ சுதாவுக்கு கிடையாது. பார்த்துட்டேயிரு என் செல்லக்குட்டி அனு பெரிசா எதையோ சாதிக்கப்போறா இந்த ஊரே பார்த்து அசந்து போற மாதிரி..........என்று எத்தனை முறை மனைவியிடம் பெருமையுடன் அளந்திருக்கிறார். அவர் பேச்சை மெய்படுத்துவது போலவே அனுவும் சிறந்த சாப்ட்வேர் தொழில்நுட்ப படிப்பில் நிபுணத்துவம் பெற்று சாதிக்கத் தான் செய்தாள் .ஆனால் மாணவியாய் சாதித்தவள் ஒரு பெண்ணாய் தன் கன்னித்தன்மையை காக்க மறந்து கோட்டைவிட்டு விட்டாளே.
விழிகளில் துளிர்த்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தார் ராஜசேகரன்.
கடைசி முறையாய் கேட்கிறேன். யார் அவன்னு சொல்லு அனு உன் விருப்பப்படியே கல்யாணம் செய்து வைக்கிறேன்
அனு தெரியாது என்று நிதானமாய் தலையசைத்தாள்
ஓ....ஹெல் என் பொறுமையை ரொம்ப சோதிக்காதே அனு திரும்ப திரும்ப தெரியாதுன்னே சொன்னால் என்ன அர்த்தம்? உண்மையிலேயே அது உனக்குத் தெரியாமல் நடந்த ஒரு விபத்தா? இல்லை சொல்ல விருப்பமில்லையா?
அனு மௌனம் சாதித்தாள். கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் ஒன்று விதண்டாவாதம் பண்ணுவது, இல்லை என்றால் மௌனம் சாதிப்பது என்று இந்த இரண்டு காரியங்களை மட்டுமே செய்து கொண்டிருந்த அனுவின் மீது எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. வெட்டிக் கொண்டு எழுந்த கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கினார் ராஜசேகரன்.
ஓகே அவன் யாருன்னு சொல்ல வேண்டாம். அபார்ஷனுக்காவது ஒத்துக்கோ அனு ப்ளீஸ்
நயமாய் கெஞ்சிப் பார்த்தார் ராஜசேகரன்
நோ டாடி ப்ளீஸ் என்னை வற்புறுத்தாதிங்க தப்பு பண்ணிட்டாலும் நான் இப்போ ஒரு தாய் என் குழந்தையை நானே சாகடிக்க எனக்கு எப்படி மனசு வரும்? தப்புக்கான தண்டனையை எனக்குக் கொடுங்கப்பா சந்தோஷமா ஏத்துக்கறேன் ஆனால் என் குழந்தைக்கு கொடுக்காதிங்க என் வயிற்றில் வளரும் ஒரு பாவத்தைத் தவிர வேறு என்ன பாவம் பண்ணியது அது?
அனு...அனும்மா ஏன் இப்படி உன்னையும் கஷ்டப்படுத்திட்டு எங்களையும் கஷ்டப்படுத்தறே
கடவுளே இப்படியரு சோதனை எங்க குடும்பத்துக்கு வரனுமா?
மனதின் புலம்பல் வாய்க்கு வரும்முன் நிதானித்தவர், அனுராதாவை தீர்க்கமாய் பார்த்தார்
லுக் அனு உன்னிடம் எப்படியெல்லாமோ பேசி நிலைமையைச் சமாளிச்சுடலாம்னு பார்த்தேன். நீ எதற்கும் ஒத்து வர மாட்டேன்றே. சரி போனது போகட்டும் இனிமேல் நடக்கறதாவது நல்லதாயிருக்கனும்னா நீ பிரசன்னாவைக் கல்யாணம் செய்துக்க ஒத்துகிட்டே ஆகனும். அதற்கும் மறுத்தேன்னா நிச்சயம் நான் பொல்லாதவனாயிருப்பேன். உன் அப்பாவோட மோசமான பக்கத்தை நீ பார்க்க வேண்டி வரும்.
வார்த்தைகளை அளந்து அதே சமயம் அழுத்தத்துடன் கண்டிப்புடன் ராஜசேகரன் பேச, அனுவோ தன் தீரமானத்திலேயே உறுதியாக நின்றாள்
ஊர்வாயை மூடறதுக்காக நான் என் மனசாட்சியை மறைச்சு வைக்க முடியாதுப்பா என் பிள்ளைக்கு அப்பாவா பிரசன்னாவை அறிமுகப்படுத்தினால் என் மனசாட்சி மட்டுமில்லை அந்தக் கடவுளே என்னை மன்னிக்க மாட்டார்..
ஸ்டாப் டாக்கிங் திஸ் நான் சென்ஸ் அனு.......இப்பொழுது ராஜசேகரனின் குரல் உயர்ந்தது
நீ புத்திசாலின்னு நினைத்தேனே அனு. எப்படி இப்படி புத்தி கெட்டுப் போனாய்? நம்ம குடும்பத்தோட கௌரவம் மரியாதை இதையெல்லாம் யோசிக்காமல் என்ன விவரங்கெட்ட பேச்சு இது?
சாரி டாடி நான் புத்தியுடனும் விவரத்துடனும் தான் பேசுகிறேன் பிரசன்னாவைக் கல்யாணம் பண்ணிகிட்டு வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகுவதை விட கொஞ்ச நாள் ஊர் வாய்க்கு அவலாயிருப்பது தேவலை. இப்போ என்னைப் பற்றி வம்பு பேசும் ஜனங்கள் அப்புறமா வேற ஒரு பெண் என் நிலைமையில் இருந்தால் என்னை மறந்துட்டு அவளைப் பற்றி பேச ஆரம்பிச்சிடுவாங்க. ஆனால் என்னைப் பற்றி நாலு பேர் நாலு விதமாய் பேசுவது உங்க குடும்ப கௌரவத்திற்கு இழுக்குன்னு நீங்க நினைச்சிங்கன்னா நான் இந்த குடும்பத்தை விட்டே போயிடறேன்ப்பா எங்கேயாவது கண் காணாத இடத்திற்கு போயிடறேன்
இன்னியிலிருந்து சுதா மட்டும் தான் உங்க பொண்ணுனு நினைச்சுக்கங்க. உங்க ரெண்டாவது பொண்ணு செத்துப் போயிட்டான்னு தலை முழுகிடுங்கப்பா........
ஆவேசமாய் பேசிய அனு அதையே உறுதியுடன் செயல்படுத்தவும் செய்தாள்.
ஐ ஆம் சாரிப்பா என் முடிவு உங்களுக்கு அதிர்ச்சியாய் தானிருக்கும் ஆனால் எனக்கு இதை விட்டால் வேறு வழி தெரியலேப்பா வர்றேன்
அது வரையில் பிரமை படித்தவள் போல் நின்றிருந்த மங்களம் இப்பொழுது சுயநினைவை அடைந்து கணவரை உலுக்கினாள்.
ஐயோ என்னங்க இது? அவ போறதைப் பார்த்துட்டு நிக்கறிங்களே. .அவளைப் போக வேணாம்னு சொல்லுங்க நான் சொல்றது உங்க காதில் விழலையா? ஐயோ அனு வேண்டாம் நில்லுடி.....
போகட்டும் விடுடீ. என் சின்னப் பொண்ணு செத்துப் போயிட்டான்னு நினைச்சுக்கறேன் வம்பு பேச வர்றவங்க கிட்டயும் அப்படியே சொல்லு..
அப்பாவின் வார்த்தைகள் நெஞ்சில் ஏற்படுத்திய வலியுடன் வெளியேறினாள் அனு.
அனு வெளியேறிய அடுத்த அரை மணியில் வீட்டிற்கு வந்த சுதா பெற்றவர்களிடம் ஒன்றுமே சொல்லாமல் முதலில் குமுறிக் குமுறி அழுதாள். பின் ராஜசேகரன் பதட்டத்துடன் விசாரித்தவுடன் ஆத்திரத்துடன் நிமிர்ந்தாள்.
நான் இனிமேல் அவருடன் இருக்கப் போறதில்லேப்பா.. நிரந்தரமாய் இங்கேயே தங்கலாம்னு வந்துட்டேன் உஷ்...என்ன காரணம்னெல்லாம் கேட்காதிங்கப்பா என்னால பதில் சொல்லமுடியாது
என்னடி இது அவ என்னடான்னா முறை தவறி நடந்ததும் இல்லாமல் அதை சீர் செய்யவும் விடாமல் வீட்டை விட்டுப் போயிட்டா. நீ உன் புருஷனுடன் சண்டை போட்டு கொண்டு இங்கேயே இருக்கப் போறதா சொல்லிகிட்டு வந்திருக்கே உங்க ரெண்டு பேரையும் எந்த கிரகம் பிடிச்சு ஆட்டுதுன்னு தெரியலையே வயசான காலத்தில் எங்க நிம்மதியைக் கெடுக்கனும்னே வந்து பொறந்திங்களா ரெண்டு பேரும்? ஈஸ்வரா......ஏம்ப்பா இப்படி சோதிக்கறே?
மங்களம் அடுத்தடுத்து வந்த அதிர்ச்சிகளைத் தாங்க முடியாமல் வாய் விட்டு அழுது விட்டாள். ராஜசேகரனும் தன் மக்களின் போக்கால் மனமுடைந்து போனார்.
அனுவைப் பற்றிய கவலையை ஒத்தி வைத்து விட்டு சுதாவின் வாழ்க்கையை சீர் செய்ய அவர் முயன்ற பொழுது தான் அக்காவும் தங்கையும் முரட்டுப் பிடிவாதத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்ற உண்மை தெரிந்தது.
பொம்மனாட்டின்றவ நாணல் மாதிரி இருக்கனும் சுதா எல்லாருக்கும் ஏத்த மாதிரி வளைந்து கொடுத்து நடந்துகிட்டா தான் வாழ்க்கை சிறப்பா இருக்கும். புருக்ஷனை அனுசரிச்சு நடந்துக்காதவ பொம்பளையே இல்லை
அம்மாவின் அறிவுரைக்கு எந்த காலத்தில் இருக்கிறாய் அம்மா நீ? என்று அலட்சியமாய் தலையைச் சிலுப்பினாள் மகள்.
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு பொறுமையாயிருக்கற பொண்ணு இல்லே உன் மகள். உன் தாலாட்டை விட சிறுமை கண்டால் பொங்கி எழுவாய் பெண்ணேன்னு பாரதியார் பாட்டை அதிகம் கேட்டு வளர்ந்தவள் நான் ஆணுக்கொரு நியாயம் பெண்ணுக்கொரு நியாயம்ங்கற உன்னுடைய அரதப் பழசான சம்பிரதாயத்தைத் தூக்கி உடைப்பில் போடு நான் தப்பு பண்ணினால் எப்படி அவர் சகிக்க மாட்டாரோ அப்படியே தான் அவர் தப்பு பண்ணினாலும் நான் சகிக்க மாட்டேன்....
அப்படியென்ன உன்னால் சகிக்க முடியாதபடி மாப்பிள்ளை தப்பு பண்ணினார்? உடைச்சு சொன்னாத் தானே எங்களுக்கு விவரம் புரியும். உன்னைப் பற்றி எங்களுக்கு தெரியாதா? மாப்பிள்ளை ஆபீஸ்லருந்து வர கொஞ்சம லேட்டானாலே அவர் பெரிய தப்பு பண்ணிட்ட மாதிரி நீ மூஞ்சியைத் தூக்கி வெச்சுக்குவே. இப்ப என்னத்துக்காக அவரிடம் மல்லுகட்டிட்டு வந்திருக்கே?
பெற்றவளின் பேச்சுக்கு கோபத்துடன் பதில் சொல்ல வாயெடுத்த சுதா சட்டென்று உதட்டை அழுத்திக் கடித்துக் கொண்டாள்
அனு இறுதி வரையில் மறைத்த ஒரு விஷயத்தை அவள் மட்டும் ஏன் வெளியே சொல்ல வேண்டும்? தங்கையே அவளுக்கு சக்களத்தியாகி விட்ட வெட்கக்கேடான விஷயம் வெளியே தெரியாமலேயே இருக்கட்டும்.
ராஜசேகரனால் சுதாவிடமிருந்து உருப்படியாய் எந்த ஒரு தகவலும் வாங்க முடியவில்லை. சரி மாப்பிள்ளையிடமாவது என்ன ஏது என்று விசாரிக்கலாம் என்று போனால் அவன் சுதாவிற்கு மேல் அழுத்தமாயிருக்கிறான்
என்னை எதுவும் கேட்காதிங்க மாமா என்னால எதுவும் சொல்லமுடியாது சொல்ற நிலைமையிலும் நானில்லை......என்கிறான்
ராஜசேகரன் என்ன செய்வார்? ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது சுதா ஹரி இருவரிடமும் விஷயத்தை தான் அவரால் வாங்க முடியவில்லையே தவிர என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க அவருக்கு பிரமாத மூளை தேவைப்படவில்லை.
ஹரி அனு இருவரைப் பற்றியும் யார் பேச ஆரம்பித்தாலும் சுதா பயங்கரமாய் கோபப்படுவதும் அனு இறுதி வரை தன் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று சொல்லாமல் அதை அழிக்கவும் சம்மதிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியதும் ராஜசேகரனின் ஊகத்தை உறுதிபடுத்தின
ரெண்டும் ரெண்டும் நாலு நாலும் நாலும் எட்டு என்று சுலபமாய் கணக்குப் போடத் தெரிந்தவருக்கு அந்த கணக்கை எந்த மகளின் வாழ்க்கையில் வரவு வைப்பது என்ற விபரம் தான் தெரியவில்லை