HERE WE GO WITH THE 4TH EPISODE HAPPY READING IN LEISURE FRIENDS N DONT FORGET TO SHARE UR COMMENTS FOR MY PLEASURE THANKS TO ALL READERS
அத்தியாயம் 4
என்ன ஹரி அதற்குள் என்னை மறந்து விட்டீர்களா? இல்லை நான் தான் அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மாறி விட்டேனா?
சிரித்துக் கொண்டே அருகில் நெருங்கியவளை ஹரி இப்பொழுது இனம் கண்டு கொண்டான்.
அவள் அனுராதா. செல்லமாய் வீட்டினர் கூப்பிடுவது அனு. சுதாவின் செல்லத் தங்கை
அடையாளம் தெரியாமல் என்ன அனு? இந்த இருட்டில் சரியாகத் தெரியவில்லை. அதுவும் நீ சுதாவைப் போல சுவாதீனமாக ஹரி என்று பெயர் சொல்லி கூப்பிடவும் ஒரு நிமிஷம் ஒன்றும் புரியவில்லை.
ஹரிபிரசாத் சமாதானம் சொல்லவும், அனு போச்சுடா என்று பொய்யாய் அலுத்துக் கொண்டாள்.
நான் உங்களை அத்தான்னு கூப்பிட்டப்போ, நீங்க தான் பீ சிவிலைஸ்ட் அனு. கால் மீ பை நேம்னு கட்டளை போட்டிங்க. இப்ப என்னடான்னா இப்படி சொல்றிங்க? அப்போ நான் உங்களை பழைய மாதிரியே அத்தான்னு கூப்பிடவா?
குறும்பாய் கண்களை அகல விரித்து அனு பாவனையுடன் கேட்ட தினுசில் ஹரி வாய் விட்டு சிரித்து விட்டான்.
அம்மா தாயே. நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கறேன். நீ பெயரைச் சொல்லியே கூப்பிடு. என்ன ஒண்ணு ஏகவசனத்தில் டேய் ஹரின்னு கூப்பிடாமல் இருந்தால் சரி.
அவனுடைய பேச்சில் அனுவும் கலகலவென்று சிரித்து விட்டாள். அவளுக்குப் பின்னே ஓடியது ஹரியின் பார்வை.
நீ தனியாகவா அனு வந்திருக்கிறாய்?
இல்லே ஹரி என் ப்ரெண்ட்ஸோட வந்திருக்கேன். அவங்கல்லாம் உள்ளே படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆமா நீங்க ஏன் தனியா வந்திருக்கிங்க? அக்கா வரலை?
அனுவின் கேள்வியில் ஹரியின் முகத்துச் சிரிப்பு மாயமாய் மறைந்தது. அதைக் கண்டு கொண்ட அனுவும் தப்பு பண்ணிய உணர்வில் உதட்டைக் கடித்துக் கொண்டாள். ஹரி பேசவில்லை. ஆனால் அவன் பார்வை ஆயிரம் பேசியது. உனக்குத் தெரியாதா அனு என்று குமுறியது. அனு அவனுடைய சோகப் பார்வையில் நெகிழ்ந்து போனாள்.
ஐ ஆம் சாரி ஹரி. வாஸ்தவத்தில் அந்த இழப்பு உங்களுக்கும் சேர்த்துத் தான்ங்கறதை அக்கா ஏனோ உணரவே மாட்டேன்றா. இல்லேன்னு ஆகிப் போன ஒரு விஷயத்திற்காக ஏங்கி கவலைப்படறதில் என்ன பிரயோஜனம் இருக்கு? டாம் சில்லி ஆஃப் ஹர்...
அனு இதைக் கொஞ்சம் கோபத்துடனேயே சொல்ல, ஹரிபிரசாத் சூழ்நிலையின் இறுக்கத்தைத் தளர்த்த சிரித்தான்
இதை உங்கக்கா கிட்ட சொல்லிப் பாரு உன்னை அடிக்க வருவா. என்னை விடச் சின்னவ எனக்கே அடவைஸ் பன்றியான்னு உனக்கு ஒரு டோஸ் கூட நிச்சயம் கிடைக்கும்.
ஆஹா...அனுபவப்பட்டவர் சொன்னால் அதில் அர்த்தம் இல்லாமல் போகுமா? அடிக்கடி அக்காவிடம் டோஸ் வாங்கி அத்தானுக்கு பழக்கமோ?
அனு குறும்புச் சிரிப்புடன் இதைச் சொல்ல, ஹரியும் முறுவலித்தான்.
உனக்கு கல்யாணமாகட்டும் அனு அதற்குப் பின் உன் கணவரிடம் விசாரித்துப் பார்த்தால் தானே தெரியும். டோஸ் கொடுப்பதில் நீ உன் அக்காவிற்கு சளைத்தவளா இல்லை இளைத்தவளா என்று.
விழிகளில் உள்ளடக்கிய சிரிப்புடன் ஹரி பேச, அனு அவனை ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தாள். அவனை உற்சாகப்படுத்த எண்ணி அவள் பேச, அவனோ அவளையே வாருகிறானே. நம்ம மாப்பிள்ளை ஒரு ப்ராக்டிக்கல் ஹென்டில்மேன் என்று அப்பா அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் உண்மை தானென்று புரிந்தது. இன்றைக்கும் இழப்பையே எண்ணி எண்ணி அழுது கொண்டிருக்கும் அக்காவிற்கும் இழப்புகளையும் இயல்பாகவே எடுத்துக் கொள்ளும் அத்தானுக்கும் இடையே இருந்த குணவேறுபாடு அனுவை அசத்தியது.
அவளுடைய வெறித்த பார்வையில் தெறித்த அர்த்தங்களைப் புரிந்து கொண்டவனாக ஹரி சிரித்தான்.
வெல் என்னால எப்படி இப்படி இருக்க முடியுதுன்னு பார்க்கறியா அனு? சிம்பிள். இழப்புகளை இயல்பா எடுத்துக்கோன்னு எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லருந்து உபதேசம் பண்ணிய அப்பா இன்று உயிரோடு இல்லாமலிருக்கலாம். ஆனால் அவர் உபதேசம் என் மனதில் வேதவாக்காய் பதிந்து போய் விட்டது. வாஸ்தவத்தில் யாருமே இழப்புகளை எண்ணி ரொம்ப நாள் ஏங்கிக் கொண்டிருப்பதில்லை. நானும் அப்படித் தான் அப்பாவின்
மறைவையோ இல்லை எங்க குழந்தையின் சிதைவையோ எண்ணி நான் கவலைப்படலே ஆனல் சுதா இந்த துக்கத்திலிருந்து மீண்டு மறுபடியும் கலகலப்பா சந்தோஷமாய் மாறனும் நான் ஆறுதல் சொல்லி அவ காயம் ஆறப்போறதில்லே. காலம் தான் அவ மனக்காயத்திற்கு மருந்து போடனும். ஆனல் அதுவரை காத்திருக்கிற பொறுமை எனக்கில்லாமல் போயிடுமோன்னு தான் நான் பயப்படறேன்..
ஹரிபிரசாத்தின் விழிகளில் உண்மையிலேலே நம்பிக்கையின்மையும் பயமும்
வெளிப்படையாகத் தெரிய அனு அவசரமாக சொன்னாள்.
நீங்க பயப்பட வேண்டிய அவசியமே இல்லை ஹரி. அக்கா கண்டிப்பா மாறிடுவா அதுவும் சீக்கிரமே மாறிடுவா. எனக்கு நம்பிக்கை இருக்கு.
நூற்றுக்கிழவி நீ சொன்னா சரி தான் அனு. நானும் நம்ப முயற்சி செய்கிறேன்.
சிறு புன்சிரிப்புடன் சொன்ன ஹரியின் விழிகளில் சட்டென்று குறும்பு மிதந்தது.
உன்னுடன் படத்திற்கு வந்திருப்பது கர்ல்ப்ரெண்டா பாய் ப்ரெண்டா அனு? நான் தெரிஞ்சுக்கலாமா ?
கடவுளே இத்தனை நேரம் சீரியஸாகப் பேசிய ஹரியும் இப்பொழுது விடலைப்பையனின் குறும்புடன் அவளை சீண்டிப் பார்க்கும் ஹரியும் ஒரே ஆள் தானா?
அனுவிற்கு நம்புவதற்கு சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு அவன் பாணியிலேயே பதில் சொன்னாள்.
என்னுடைய ஒரே பாய் ப்ரெண்ட் நீங்க தான் ஹரி..
இஸிட்? ஐ ஆம் ஹானர்ட் மேடம். ஆனால் இதை தப்பி தவறி கூட உன் அக்காவிடம் சொல்லி விடாதே. உன்னை உண்டு இல்லை என்று ஒரு வழி பண்ணி விடுவாள்.
இப்பொழுது இருவருமே சேர்ந்து கலகலவென்று சிரிக்க, அனு சுற்றுப்புறம் புரிந்து தன் சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
அப்போ நான் கிளம்பறேன் ஹரி உள்ளே என் சினேகிதி என்னைத் தேடுவா.
ரைட்...நானும் புறப்படறேன் அனு. அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள். எப்பவாவது ப்ஃரீயாயிருந்தால் வீட்டுப்பக்கம் வாயேன். சுதாவிற்கும் கொஞ்சம் ஆறுதலாயிருக்கும் ப்ளீஸ் அனு.......
கண்டிப்பா வர்றேன் ஹரி. இதை நீங்க சொல்லனுமா? அக்காவிற்கு இந்த மாதிரி சமயங்களில் துணையிருக்க வேண்டியது என்னுடைய கடமை. ஸோ.. நிச்சயமா வருவேன். சீ யூ ஹரி...
கையசைத்து விட்டு தியேட்டரினுள்ளே புகுந்தவளைப் பார்த்து பதிலுக்கு கையசைத்துவிட்டு கார் நிறுத்துமிடம் நோக்கி நடந்தான் ஹரி.
அனுவிடம் இருக்கும் இந்தக் குறும்பும் சிரிப்பும் துள்ளலும் முன்பு சுதாவிடமும் இருந்தவை தான், இப்பொழுதோ அவையெல்லாம் போன இடம் தெரியவில்லை.
ஒரு ஆழமான பெருமூச்சுடன் காரைக் கிளப்பினான் ஹரிபிரசாத்.