Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-06

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-06



நாட்கள் சென்றது, ஹலோ, நாங்க ஸ்கூலிருந்து பேசறோம், சுந்தரியோட மாமாவா நீங்க ,நான் அவ மிஸ் ,உங்கிட்ட பேசனோம் வரீங்களா சார்.

வரேன் மேடம், அப்ப சுந்தரி ஏழாவது படித்துக்கொண்டிருக்கிறாள்.

பூவரசன் நேரே தலைமையாசிரியர் அறைக்குச் சென்றான்.

சார் ஏதாவது ப்ராபளமா வர சொன்னீங்க.

உட்காரு பூவரசன்,நேத்து மிட்டேர்ம் டேஸ்ட் வச்சோம், ஒண்ணுமே எழுதாம பேப்பரை கொடுத்திருக்கா சுந்தரி.வீட்டில ஏதாவது பிரச்சனையா.

அதெல்லாம் ஒண்ணுமில்லையே சார், நான் பேசி பார்க்கிறேன்.

இல்ல நல்லா படிக்கிற பொண்ணு,கிளாஸ் பஸ்ட் எடுப்பா,

இனிமே இந்த தப்பு மாதிரி தப்பு நடக்காம பார்க்கிறேன் சார்,வெளியே வந்தான்.

வரான்டாவில் நின்றிருந்தாள் சுந்தரி தன் மாமாவை மேலிருந்து கீழேவரை ஆராய்ந்து பார்த்தாள்.

மாமா, ஏன் இப்படி சோர்வா இருக்கீங்க, சாப்பிடலியா.

அதுவா பொம்மி மாமாவுக்கு நிறைய வேலையில்லையா அதான் இப்படித் தெரியிறேன். ஸ்கூல் முடிஞ்சிடுச்சியில்ல வா வீட்டுக்கு போலாம்.

சரி மாமா, பேக்கை கொடு.

ஏன்னடா டெஸ்ட் எழுதில, நீ நல்லா படிக்கிறவ தானே.

சாரி மாமா இனிமே ஓழுங்கா எழுதிறேன்.

அடுத்த வாரம் புதன் கிழமை திரும்ப ஸ்கூலிருந்து போன், மறுபடியும் கம்பளைன்.

சாரி சார் சொல்லிச் சென்றான், அடுத்த புதன் கிழமை மறுபடியும் போன் கூட படிக்கும் பையனை அடித்துவிட்டாள் என்று.

சுந்தரியை காரில் வீட்டிற்கு அழைத்து வந்துக்கொண்டிருந்தான்,

டிரைவர் அண்ணா நீங்க சாப்பிட்டு ,ஐஸ்கீரீம் வாங்கிட்டு வாங்க சொல்லி பணத்தை கொடுத்தான்.

டிரைவர் சென்றவுடன்,சுந்தரியை முதுகில் இரண்டு அடிப்போட்டான், அவள் காதைப் பிடிச்சி திருகி என்னைய பார்க்க வாரம் ஒரு பிரச்சனையை செய்வியா எரும மாடு.

என்னடி அப்படி பார்க்கிற

நீதான்டா எல்லாத்துக்கும் காரணம் இன்னோரு வாட்டி என்ன அடிச்ச நான் சும்மா இருக்க மாட்டேன்-சுந்தரி.

வாய பாரு முளைச்சி முனு இலை விடல, என்ன பண்ணுவடி

ம்ம் பூவரசன் கையை பிடித்து கடித்தாள், ஐய்யோ விடுடி வலிக்குது,

நீ என்ன பார்த்து ஒரு மாசம் ஆகுது. அதான் புரியுதா.

எனக்கு வேலையில்லையா உன்னைய பார்க்குறதுதான் வேலையா. சரி பாவம் அந்த பையன ஏன் அடிச்ச.

அந்த பையன் ரொம்ப நாளா கடுப்பேத்தின்னா இன்னிக்குதான் மாட்டனான்.

மாமா அவன் என்னைய பார்த்து குண்டுபூசனி சுந்தரி சொல்லறான். நான் எங்க மாமாகிட்ட சொல்லுவேன் சொன்னதுக்கு, உன் மாமா என்ன பெரிய ஆளா, தில்லு இருந்தா ஒன் டூ ஓன் வரசொல்லறான்.

அப்படின்னா

ஓத்தைக்கு ஒத்தை சண்டைக்கு.

ஆமாம் சின்ன பசங்கிட்ட சண்டை போடறதா பொம்மிம்மா.

அதுக்குதான் நான் அடிச்சேன்.என் மாமா வந்தா உன் தோளை உரிச்சிடுவான் சொன்னே.

இதெல்லாம் வக்கனையா பேசு ரிப்பனை ஓழுங்கா கட்டிறீயா பொம்மி ,முடியெல்லாம் கலைச்சி,பேண்ட் பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுத்து தலையை வாரி விட்டான். இப்பதான் அழகா இருக்க. இவளை பார்த்து குண்டு பூசனி சுந்தரி சொல்லவும்.

அவனை அடிக்க ஆரம்பித்தாள்,போ மாமா.டிரைவர் ஜஸ்கீரம் சுந்தரியிடம் தர. அதை வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள்.

பொம்மி உனக்கு மாமாவ பிடிக்குமா, இல்ல ஜஸ்கீரீம்மா.

ஏன் மாமா இப்போ இந்த கேள்வி

பதில் சொல்லு எது ரொம்ப பிடிக்கும். முழிக்க ஆரம்பித்தாள் அதை பார்த்து சிரித்தான் பூவரசு, இப்படி ஜஸ்கீரமா சாப்பிட்டா குண்டாதான் ஆகுவ

ஜஸ்கீரமை தூக்கி எறிந்தாள், எனக்கு என் பூவாதான் பிடிக்கும்.

ஏய் சாப்பிட்டு எறியலாமில்ல , எனக்கும் குண்டுபூசனி பொம்மிய தான் பிடிக்கும - பூவரசு.

நிஜமாவா பூவா.

ம்ம் இனிமே என் கூட சனி,ஞாயிறு நீ இருப்ப, அந்த இரண்டு நாள் நீயே சாப்பாடு எடுத்துட்டு வந்திடு.

மாமா வண்டி வாங்கி தாங்க, நான் உன்ன வந்து பார்க்க.

நீ சின்ன பொண்ணு வண்டி வேணா சைக்கிள் வாங்கி தரேன். சனி ,ஞாயிறு முழுவதும் பூவரசனோடு வயல் வரப்பு, ரைஸ்மில் என்று சுற்றினாள். பூவரசு வேலையை கண்காணிக்க சுந்தரி நிற்காம விளையாடிக்கொண்டிருந்தாள்.

போதும் பொம்மி சாப்பிட வா. பாவாடையை தூக்கி சொறுக்கி இருந்தாள். அப்படியே ஓடி வர.

பாவாடையை இறக்கிவிடு பொம்மி, பெரிய பொண்ணாக போற, இப்படி கால் தெரியிற மாதிரி உடுப்பு போட கூடாது புரியுதா.

அதுவா சேறாகுமோன்னு தூக்கி சொறுக்கி வச்சேன்.

இப்படியே நாட்கள் சென்றது, ஒரு முறை சுந்தரியும் பூவரசணும் பைக்கில் போவதை பவித்ராவும் அவள் தோழியும் பார்த்தார்கள்.

என்ன பவி, உன் தங்கச்சி எப்ப பார்த்தாலும் மாமா கூடவே சுத்தறா.

அவ மாமா பைத்தியம்,எனக்கு மாமாவ புடிக்காது ரொம்ப கோவக்காரு, எப்ப பார்த்தாலும் திட்டிடே இருப்பாரு.

அப்ப உன் மாமாவ கட்டிக்க மாட்டியா.

இல்ல எனக்கு படிச்ச இன்ஜீனியர் மாப்பிள்ளைய தான் கட்டிக்குவேன். பத்தாவதுமேல் படிக்க மாட்டேன் நின்று விட்டாள் பவித்ரா.

அடுத்த வருடம் எட்டாவது சென்றாள் சுந்தரி, பண்னைவீட்டுக்கு சைக்கிளில் காலையில் மூச்சி வாங்க ஓட்டி வந்தாள்.

மாமா மாமா எங்க இருக்கிங்க,நான் கிச்சனில் டீ போட்டு இருக்கேன்.

ஏன் இப்படி மூச்சி வாங்க வரவ. என்ன விஷியம்.

பூவா எனக்கு ஏதோ நோய் வந்திடுச்சு நான் சாக போறேன் உன்னை யாரு பார்த்துப்பா இனிமே சொல்லி அழ ஆரம்பித்தாள்.

ஏய் லூஸூ ,எதுக்கு அழற

அவள் மாமா காதில் ரகசியமாக கூறினாள், அம்மாகிட்ட சொன்னா பயந்துடுவாங்க அதான் உன்கிட்ட சொன்னேன்.வயிரு வேற பயங்கறமா வலிக்குது தெரியுமா, என் டிரஸ்ஸேல்லாம் பாரு.

அய்யோ பொம்மிம்மா நீ பெரியவள ஆயிட்ட, இது இயற்கையா எல்லா பொண்ணுக்கும் நடக்கும் பயப்படக் கூடாது. இரு நான் மெடிக்கல் வர போயிட்டு வரேன். சிறிது நேரத்தில் நேப்கின் வாங்கி வந்தான்.

தன் அக்காவுக்கு போன் போட்டான். எங்க உன் பொண்ணு சுந்தரி

அவ எங்கடா வீட்டல இருக்கா சைக்கிள் எடுத்திட்டு அங்கதான் வருவா.

என்ன பொண்ண பார்த்துக்கற, உன் பொண்ணு வயசு வந்துட்டா வீட்டுக்கு வா.

என்னடா சொல்லுற.

வரசொல்ல அம்மாவ கூட்டிட்டு வா, நான் நேரம் குறிச்சி வச்சிருக்கேன்.

வீட்டுக்குள் நுழைந்தார்கள் அவள் அம்மாவும் , பாட்டியும்.

அம்மா என்று அழுதாள், பயப்படாத சுந்தரி.

அக்கா அவள பாத்ரூமுக்கு கூட்டிட்டு போ, இந்தா சொல்லி நாப்கினை சுந்தரி கையில் கொடுத்தான்.

பவளத்தாயி , சுந்தரியிடம் ஏய் மக்கு வீட்டில முணு பொம்பளைங்க இருக்கோம், நீ போய் உன் மாமாகிட்ட சொல்லுவியா என்று தலையில் கொட்டினாள்.

போ பாட்டி, நான் பயந்தே போயிட்டேன்.

அவள் முகத்தில் சிருஷ்டி கழித்து, லட்சனமா இருக்கடா, என் மவனை கட்டிக்குவியா.

ம்ம் என்னைய தவிர உன் பையன யாரு கட்டிக்குவா சொல்லி சிரித்தாள்.

அடுத்த நாள் சுந்தரிடம் அறிவுரை சொல்ல ஆரம்பித்தான். பொம்மி இங்க வா, தலை நிறைய பூவை வைத்து பட்டுத்தாவனி உடுத்தி, காலில் கொலுசு போட்டு,கையில் வளையல் நிறைய அணிந்திருந்தாள்

என்ன பூவா சொல்லி ஓடி வந்தாள்.

இனிமே இப்படி ஓடி வரக்கூடாது.

மாமா , நீ எடுத்த டிரஸ் நல்லா இருக்கா, இங்க பாரேன் நிறைய பூ வச்சிட்டாங்க, சிமிக்கி கம்மல் பாரேன், மாமா கொலுசு பாரு எல்லாம் எப்படி இருக்கு.

எனக்கு ஜாலியா இருக்கு மாமா பேசிக்கொண்டே பக்கத்தில் இடித்துக்கொண்டு உட்கார்ந்தாள்.

பொம்மிம்மா, இப்படி இடிச்சிக்கிட்டு உட்கார கூடாது, யாரையும் தொட்டு பேச கூடாது, ஒழுங்கா டிரஸ் பண்ணனும்.அப்பறம் என் கையை பிடிச்சிக்கிட்டே நடக்க கூடாது, பாரு உன் அக்கா மாதிரி இருக்கனும் அமைதியா. அடிக்கடி பண்ணைவீட்டுக்கு வராதே புரியுதா.

ஏன் உன் பார்க்க கூடாது சொல்லற, எனக்கு பெரிய பொண்ணா வேணா, இந்த டிரஸ் நகை வேணா கழட்டி எறிந்தாள்.

பொம்மிம்மா மாமா பேச்சை கேட்க மாட்டியா, நான் வந்து உன்ன பார்க்கிறேன் போதும்மா.

கதையை கேட்ட சங்கரி , அப்ப லவ் எபிசோடே இல்லையா உங்க மாமா மேல லவ் பீலிங்கே வரலையா, சுந்தரி.

வந்துச்சே நான் பத்தாவது படிக்கும்போது......
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

பெற்றோர் பாட்டியை விட சிறுவயதிலிருந்து சுந்தரி பூவரசனைத்தான் பெரிதாக நினைக்கிறாள்
மதிக்கிறாள்
பெரியவளானதையும் அவனிடம்தான் சொல்லுறாள்
இவன்தான் அவளைப் படிக்க வைக்கிறானோ?
அவ்வளவு பாசமா இருந்தவன் சுந்தரியின் மனசு தெரிந்தும் பூவரசன் ஏன் அவளை கல்யாணம் செய்ய மறுக்கிறான்?
படிக்கலைன்னா?
இல்லை சுந்தரியை தன் தம்பிக்கு கட்டி வைக்கும் எண்ணத்துடன் பாக்கியம் கொடுத்த ஸ்க்ரூவில் சண்முகவேலு பூவரசனை மனம் நோக ஏதாவது குத்திப் பேசிட்டானா?
சுந்தரியின் அப்பா என்னவானான்?
பெண்ணை எட்டிக் கூட பார்க்காமல் பாக்கியத்தின் பாச வலையில் சிக்கினவன் வெளியே வரலையோ?
பின்னாடி பொண்ணுக்கு விடாமல் போன் பேசுறவன் இப்போ சின்னதில் சுந்தரியை ஏன் கண்டுக்கலை?
சங்கரி கேட்ட லவ் எபிசொட் சுந்தரி பத்தாவது படிக்கும் பொழுதுதான் வருதா?
ஹா ஹா ஹா
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

பெற்றோர் பாட்டியை விட சிறுவயதிலிருந்து சுந்தரி பூவரசனைத்தான் பெரிதாக நினைக்கிறாள்
மதிக்கிறாள்
பெரியவளானதையும் அவனிடம்தான் சொல்லுறாள்
இவன்தான் அவளைப் படிக்க வைக்கிறானோ?
அவ்வளவு பாசமா இருந்தவன் சுந்தரியின் மனசு தெரிந்தும் பூவரசன் ஏன் அவளை கல்யாணம் செய்ய மறுக்கிறான்?
படிக்கலைன்னா?
இல்லை சுந்தரியை தன் தம்பிக்கு கட்டி வைக்கும் எண்ணத்துடன் பாக்கியம் கொடுத்த ஸ்க்ரூவில் சண்முகவேலு பூவரசனை மனம் நோக ஏதாவது குத்திப் பேசிட்டானா?
சுந்தரியின் அப்பா என்னவானான்?
பெண்ணை எட்டிக் கூட பார்க்காமல் பாக்கியத்தின் பாச வலையில் சிக்கினவன் வெளியே வரலையோ?
பின்னாடி பொண்ணுக்கு விடாமல் போன் பேசுறவன் இப்போ சின்னதில் சுந்தரியை ஏன் கண்டுக்கலை?
சங்கரி கேட்ட லவ் எபிசொட் சுந்தரி பத்தாவது படிக்கும் பொழுதுதான் வருதா?
ஹா ஹா ஹா
[/QUOTE
Ahha how many questions banu ma wait and see the epi, the flash back going poo arasan and sundari love bond both of them feelings are described next epi all r enter the story.
 
Top