Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-11

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-11

மறுநாள் கோவில் வெளி பிரகாரத்தில் எட்டு ஊர் தலைவர்கள், மற்றும் ஊர்மக்கள் அனைவரும் ஒன்று கூடினர். அதில் பஞ்சாய்த்து தலைவர் ஒருவர் பேச ஆரம்பித்தார். சபையில இருக்கும் அனைவருக்கும் வணக்கம் இந்த பஞ்சாயத்து இங்க கூடரது, வர ஆடி மாசம் நடக்க இருக்கும் கோவில் திருவிழாக்காக. மூணு வருஷத்து ஒரு முறை நடத்திற நம்ம அம்மன் கோவில் திருவிழா.

இதற்கு எட்டு ஊர் மக்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கிறேன்ங்க. பக்கத்தில் இருந்த மற்றொரு தலைவர் , ”வழக்கமா இந்த பொறுப்ப பூவரசன் தம்பியும் ஊர் இளைஞர்களும் செய்வாங்க இந்த வருஷமும் பூவரசன்கிட்டே ஓப்படைக்கிறோம்”.

”ஏன் எங்க ஊரில் பசங்க பார்த்தா ஆளா தெரியிலையா எப்ப பாரு பூவரசரு தான் தலைவருக்கு கண்ணு தெரியுமோ” என்று துரைபாண்டி கேட்க.

”யப்பா சண்முகவேலு உங்க குடும்ப பகையை இங்க கொண்டு வர கூடாது உன் மச்சான அடக்கு பிரஸிடண்ட் கூற. ” அதை கேட்டு சண்முகவேலு , துரைபாண்டியை முறைத்தான்.

பரதா எழந்து நின்று பேசினான், ”ஐயா எல்லா வேலையும் அவங்க ஆளுங்களே செய்யட்டும். ஆனா இந்த முறை பரிவட்டம் பூவரசனுக்கு தான் கட்டணும் இவ்வளவு நாளா சின்ன பையன் விட்டிட்டிங்க, நியாமா பார்த்தா பண்னையாரு அப்பறம் கோவில் மரியாதை பூவரசனுக்கு தான் சேரனும் ஆனா இதுவரைக்கு அவங்க மாமாவுக்கு கட்டினீங்க, இந்த முறை நாங்க ஒத்துக்க மாட்டோம்”.

”எப்படி பரிவட்டம் கட்டறது, ஓத்தையில தான நிக்கிறான், குடும்பம் , கல்யாணம் பன்னிருக்கனும்”-சண்முகவேலு,

”அப்ப கட்டின பொண்டாட்டிய விட்டுட்டு வேற கட்டிக்கிறாங்களே அவங்களுக்கு மரியாதை உண்டாக்கும். ”

”டேய் வாயை அடக்கி பேசு இல்லைன்னா வாயே இல்லாத பண்ணிடுவேன்” –துரைபாண்டி.

”என்னடா செய்வ மேல கையை வைடா பார்ப்போம்” என்று பூவரசன் கத்த கொஞ்சம் அமைதியா இருங்க பஞ்சாயத்த மதிங்கப்பா.

பூவரசு நீயும் இந்த ஊர் தலைவன், மறந்துட்டு பேசாத, சில கட்டுபாடு வேனும்ப்பா நமக்கு.

”யாருங்க சொன்னது என் தம்பி ஒத்தையில நிக்கிறான்னு, இதோ அடுத்த வாரம் என் தம்பிக்கு கல்யாணம். ஊர் பஞ்சாயத்துக்கு பத்திரிக்கை வைக்கிறேங்க. ”

”அக்கா என்ன இது குரலை குறைத்து பேசினான் ஆனந்தவல்லியிடம். ”

”நீ ஒண்ணும் பேசாதடா, மூணு வருஷம் முடிஞ்சி போச்சி , பத்திரிக்கையும் அடிச்சாசு சொல்லிட்டேன்டா”.

”சரி அப்ப இந்த வருஷம் பரிவட்டம் நம்ம பூவரசணுக்குத் தான், நீங்க என்ன சொல்லுற சண்முகவேலு.”

எனக்கு சம்மந்தம் தாங்க. அப்ப மற்ற ஏற்பாடு பற்றி பேச ஆரம்பித்தார்கள்.

வெளிய வந்த பரதன் சுந்தரியை போனில் அழைத்தான், ”சொல்லு பரதா”,”சக்சஸ் சுந்தரிம்மா , கல்யாண பொண்ணே சீக்கிரம் ஊருக்கு வா. ”

ரொம்ப சந்தோஷம் பரதா நாளைக்கு கார அனுப்பு போனை வைக்கவா.”ம்ம் சரி நான் போய் மாப்பிள்ளைய பார்க்கணும் உங்க வீட்டுக்குதான் போவான். ”

பெரியவீட்டில் , ”அக்கா என்ன செய்யறன் ஏதாவது சொல்றீயா.”

”என்னடா என் தம்பிக்கு நான் செய்வேன் இதுக்குமேல கல்யாணத்த தள்ளி போட நினைச்ச நான் உயிரோடு இருக்க மாட்டேன். ”

”எப்ப பார்த்தாலும் இதையே சொல்லு. ”

அடுத்த நாள் பரதாவும்,பூவரசு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அக்கா பத்திரிக்கையை எடுத்து பேக்கல வை சேலத்துல நம்மக்கூட வியாபாரம் செய்யறவங்களுக்கு பத்திரிக்கை வைக்கனும். சரி டா.

மிளகாயை உலர்த்திக்கொண்டே ,டேய் பூவரசு, சொல்லும்மா ”நம்ம உறவுக்காரங்களுக்கு எல்லோருக்கும் சீலை எடுத்து தரனும்” .

”நான் துணிக்கடையில இருந்து சேலையை எடுத்துட்டு வரச்சொல்லுறேன். நீயும் , அக்காவும் எத்தனை வேனுமோ எடுத்துங்க”.

”அப்பறம் என் மருமவளுக்கு கல்யாணப் பட்டு எடுக்கணும், காஞ்சிபுரம் போகனும் சொல்லுறா .நீயும் வரணுமா கூட”.

”என்னால வர முடியாது. ”

”ஏன்னாம் பாட்டி , தலைவருக்கு என்ன வேலையோ” சுந்தரி ரூமிலிருந்து வெளியே வர,

”எல்லாம் நீ பண்ணுற வேலை எனக்கு தெரியாதா, உடனே கல்யாணம் சொல்லிட்ட தலைக்கு மேல வேலையிருக்கு போடி அப்பால, இவக்கூட ஜோடி போட்டு துணியை வேற எடுக்கணும்மா. ”

”அம்மா” கூப்பிட்டுக்கு கொண்டே உள்ளே நுழைந்தாள் பவித்ரா, ”வாம்மா பவி. ”

”எங்க வீட்டுக்கு பத்திரிக்கை வைக்க மாட்டியாம்மா”.

”வைக்க மாட்டேன் பவி நீதான் நாங்க வேணாம் கல்யாணம் பண்ணிக்கிட்டே, அப்பவே சொல்லிட்டேன் நீ இங்க எப்ப வேணாம் வந்துட்டு போலாம், நாங்க யாரு அங்கிட்டு வர மாட்டோம். ”

”பவி நீ சுந்தரி கூட போய் முகூர்த்த சேலை எடும்மா, அப்படியே உனக்கு, பாட்டி,அக்காவுக்கும் சேர்த்து எடுத்துக்கோ. ”

”சரி மாமா எப்ப கிளம்பறம்”, நாளைக்கு தான்.

”பொம்மி இந்தா 2 இலட்சம் எவ்வளவு ஆகுமோ கணக்கு பண்ணி குடுத்திடு”. வாங்காமல் அவனை பார்த்து முறைத்தாள்.

”இப்ப என்னடி பிரச்சனை உனக்கு , அக்கா அவ எவ்வளவு விலையில் கேட்டாலும் எடு. ”

அய்யோ இவ்வளவு விலைக்கு சேலையா, இன்னா மாமா தண்ணியா செலவு செய்யறாரு என மனதுக்குள் பொருமினால் பவி. பூவரசனோட வரவு , செலவு பவிக்கு தெரியாது, சுந்தரிக்கு மட்டும்தான் தெரியும் ஆடம்பரம் செய்யமாட்டான் பூவரசு.

”நீ வர , இல்லையின்னா சேலையே கட்டாம கல்யாணத்தில உன் பக்கத்தில உட்காருவேன் சுடிதார் போட்டு”.

”பாத்தியாக்கா, உன் மவ எங்கன்னா மதிக்கிறாளா, இவளைப்போய் கட்டி வைக்கிறீயே, அடங்குவாளா ராட்சஸி கத்த ஆரம்பித்தான், ” கண்டுக்காம தட்டில் இட்லியை வைத்து சாப்பிட ஆரம்பித்தாள் சுந்தரி. பேசி முடிச்சிட்டியா நாளைக்கு கார எடுத்துட்டு நீ வர சொல்லி ரூமுக்குள் சென்றாள்.

”இதுக்குத்தான ஆசை பட்ட, பாரு உன் தம்பி அவக்கிட்ட மாட்டிக்கிட்டு” .

”டேய் போடா சும்மா அவள வேறுப்பேத்திட்டு, என்ன சொல்லிட்டா ஆசையா புடவையை செலக்ட் பண்ண சொல்லுறா அதுக்குப்போய் இப்படி சலிச்சிக்கிற”-பரதா

உள்ளே அனைத்தும் கேட்டுக்கொண்டே டிசைனர் பிளவுஸை பார்த்துக்கொண்டிருந்தாள் சுந்தரி.

அடுத்த நாள் இன்னோவாவை வீட்டிற்கு முன்னால் நிறுத்தினான் பரதா பக்கத்து சீட்டில் பூவரசனும் இருந்தான். எல்லோரும் காரில் ஏறி அமர்ந்தார்கள்.பிங்க் நிறத்தில் சில்க் காட்டன் சேலையை கட்டி தலையில் மல்லிப்பூ வைத்து சின்னதா கழுத்தில் செயின் போட்டிருந்தாள். சுந்தரியை கார் கண்ணாடியில் பார்த்தான் பூவரசு நம்மள பார்க்கிறானா பார் எரும என்று சுந்தரி பொரும்பிக்கொண்டே பின் சீட்டில் அமர்ந்தாள்.

காரில் பாட்டை கேட்டுக்கொண்டே பயனித்தார்கள் . ஜவுளிக்கடை வாசலில் கார் நின்றது.அக்கா நீங்க எல்லோரும் சேலையை செலக்ட் பண்ணுங்க நானும், பொம்மியும் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரோம்.

இதை கேட்டு பொம்மி அதிசியமாக பார்க்க, ”முன்னாடி வந்து உட்காரு சொல்லி வண்டியை எடுத்தான். ஏன் நகை எதுவும் போட்டு வரல. ”

”அது வந்து மாமா, சின்னதா எதுவும் இல்லை எல்லாம் பெரிய நகையா இருக்கு , பவிக்கு தீடிர் கல்யாணம் ஆனதால எல்லா நகையும் அவளுக்கு கொடுத்திட்டேன். ”

”ஏன் முன்னாடி சொல்லறதுக்கு என்ன, பணம் உங்கிட்டதான இருக்கு வாங்கிக்க வேண்டியதான இதுக்கூட நான் சொல்லனுமா”.

பெரிய நகைக்கடையில் நிறுத்தினான். சுந்தரி கார் கதவை திறக்க , ”நில்லு ,இப்பவும் ப்ளவுஸ் நாட் போட மாட்டியாடி இப்படியேவா வருவ, எப்பதான் திருந்துவ, ஓழுங்கா கட்டு. ”

”எனக்கு கட்ட தெரியாது சொன்னால்”,

”நீ ஏதோ வில்லங்கமா யோசிக்கிற, திரும்பு சொல்லி அழகாக முடிச்சி போட்டான்”. இருவர் கண்களும் ஒன்றாக பார்த்துக்கொண்டன.

ம்ம் என்னடி அப்படி பார்க்கிற இறங்குடி.கடைக்குள் சென்றார்கள் அனைத்து டிசைனும் பூவரசனே பார்த்தான், நகையை பார்த்து பார்த்து எடுத்தான், சுந்தரி தன் மாமனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

தற்சமயம் 10 பவுணுக்கு நகையை எடுத்தான், அழகான ரூபி நெக்லஸ், பிரேஸ்லெட் , இரண்டு மோதிரம், டிசைனர் வளையல் ஒன்று ,போது மாமா மீதி வீட்டுலே இருக்கு அத மாத்தி எனக்கு பிடிச்ச மாதிரி மாத்திக்கிறேன்.

காரில் வந்தவுடன் போட்டுக்கோ பொம்மி, மாமா இந்த செயின நீ போட்டுக்கோ என்று அவள் கழுத்து செயினை அவனுக்கு போட்டால். எல்லாவற்றையும் அணிந்துக்கொண்டாள்.

”எப்படி மாமா இருக்கு”

அழகாக இருக்குடா. துணிக்கடையில் வந்தவுடன் பவி அவளை பொறாமையாக பார்த்தாள் மாமா அவள எப்படி திட்டுது ஆனா இப்படி பார்த்து பார்த்து செய்தே, நம்ம வீட்டுக்காரன் என்னைய கண்டுக்கிறதே கிடையாது என்று மனசுக்குள் புலம்பினாள்.

பெண்கள் சேலையை பார்க்க, எதிர்ப்பக்கம் தணியே சேரில் அமர்ந்தார்கள் பூவரசணும், பரதாவும். ஒவ்வொரு சேலையையும் தோளில் போட்டு கண்ணாடியில் பார்க்க , அங்கே பூவரசன் முகம் சுளிக்க, அடுத்த சேலையை மேலே வைத்தாள். முகம் மலர , அந்த ரோஸ் வண்ண சேலையை தேர்ந்தேடுத்தாள்.

இதை பார்த்த பரதா ” என்னடா நடக்குது இங்க, ”

”அம்மா இந்த சேலை ஓகேம்மா, சரி போய் பூவரசுக்கிட்ட காமி. ”

”அவங்கிட்ட எதுக்கு காட்டணும் எனக்கு புடிச்சா ஓகே. ”

அவள் மாமாவிடம் சென்றாள். மாமா சேலை எடுக்கனும் வா.

இப்பதான செலக்ட் பண்ண, நீ சின்ன பையன் உனக்கு ஒண்ணும் தெரியாது வரீயா என்கூட , இவர்களை பார்த்து பரதா சிரிக்க. அவளுடன் எழுந்து போனான்.

இப்ப என்னடி உனக்கு, ”அதுவா இது அன்னிக்கு நைட் கட்டற சேலை உனக்கு எது கம்பர்டபுளோ அப்படி எடு”.

”கட்டறது நீ எனக்கு என்ன, ”

”ம்ம் அதுக்குதான் சொன்னேன் நீ சின்னப்பையன் வளர்றனும் தம்பி. ”அடிங்க கடைன்னு பார்க்கிறேன். ”

”பின்ன என்ன மாமா ஃபஸ்ட் நைட் சாரியை எடுக்க சொன்னேன். ”

எடுத்து தரலைன்னா என்ன பண்ணுவே, நான் அப்படியே வருவேன் மாமா.

”பரவாயில்ல, மெல்லிய குரலில் எதுவுமே இல்லாம வந்தாலும் எனக்கு வசதிதான். ”

”என்ன சொன்ன மாமா எனக்கு சரியா கேட்கல, ”

நல்லது , இந்தா இந்த புளு சேலை நல்லாயிருக்கு உதட்டை மடக்கி சிரித்தான். நீ ரொம்ப வளர்ந்திட்டியோ பூவா ,

பிறகு ஹோட்டலில் சாப்பிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தன. டேய் பூவரசு அம்மாவால கால நீட்ட முடியில நீ பின்னாடி வந்து உட்காருடா நான் முன்னாடி உட்காரேன். சரி வா. இறங்கி பின்னாடி சென்றான்.

ஐய்ய்யோ இந்த ராட்சஸி இல்ல இருக்கா என்ன நடக்க போதோ ஆஞ்சிநேயா இதுக்கு எனக்கும் சம்பந்தம் இல்ல.
 
Top