Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் விமர்சனம்

Advertisement

Selvipandiyan

Active member
Member
சரண்யா ஹேமாவின் சூரியனவனின் ஆழ்கடல்.
அந்த வட்டார வழக்கே கதைக்கு ஒரு அழகு!கொஞ்சம் தடுமாறினாலும் கதையின் ஓட்டத்தில் அர்த்தங்கள் தானாய் புரிகிறது!வாப்பெட்டியை சாத்துன்னு படிக்கும் போதெல்லாம் சிரிப்பா வரும்!அழகுப்பாட்டியின்பேச்சுக்கள் இன்னும் மனசில் நிக்குது!மின்னொளி ,ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவன்!அம்மா என்ன சொன்னாலும் சிறுமியாய் தலையாட்டிகிட்டு,அப்பாவை கொஞ்சம் விட்டுக்கொடும்மான்னு சொல்லும் போதே நமக்கு ஓரளவு அவளின் மன நிலை புரியுது!
கூடவே விளையாண்ட சித்தி அம்மாவா மாறியதும்,ஊராரின் பேச்சுக்களும் அம்மாவின் இறப்பும் அவளை தன்னை தானே தனிமைப்படுத்திக்கொள்ள,அதன் முகமூடியாய் வாய் பேச்சின் மூலம் எல்லாரையும் தள்ளி நிறுத்துகிறாள்.வயசுக்கு வரலியான்னு மற்றவர்கள் என்ன பேசினாலும் கண்டுக்காதவள் அருள் பேசியதும் மனம் உடைவதும் வீட்டில் வந்து கத்துவதும்,ராஜாத்தி ஏதோ தான் தான் தன் வாழ்க்கையை அர்ப்பணித்ததாய் நினைக்க, அதை சுக்கல் சுக்கலாய் உடைக்கும் இடத்தில்தான் நமக்கே அவளின் மனது புரிகிறது!அவளாய் பேசும் வரைக்கும் ஒரு புதிராய் தான் தெரிந்தாள்!அருள் அழகாய் அவளை புரிந்து கொண்டான்.இப்படியேஅருள் ஏற்றுக்கொள்ளணும் என அவள் நினைத்தபடியே நடக்கிறான்!தானாய் பெரிய மனுஷியாகி தானே தன்னை காப்பாற்றி,தன் கல்யாணத்தை தானே பேசி...எல்லா கவலையையும் தனக்குள்ளே அடக்கி ஆழ் கடலாய் இருந்தவளை,அருள் மூச்சடக்கி தொட்டு விட்டான்!அக்காவை எப்போ நாத்தனாரானன்னு கேட்கும் ஒரு இடம் போதுமே?!வளையல்கள் கொண்டு வந்து அடுக்குவதும்,தோப்பு வீட்டில் புது புடவை கொடுத்து கட்டி வர சொல்வதும் ராஜாத்தியை விட்டு கொடுக்க முடியாமலும்,இரண்டு பக்கமும் அல்லாடி நிற்கிறான்.
தர்மராஜ் கடைசியில் சாதுவானதும் அன்னம் பிரசவம் பார்ப்பதும் இனிய அதிர்ச்சி!முருகையன் எதுக்கு ஒதுங்கினாரோ?இப்போ மகளை பார்த்து வாயடைத்து நிற்கும் போது பாவமா இருக்கு.
ஊருக்கு முன் தன்னை அசிங்கப்படுத்துவதாய் ராஜாத்தி நினைக்க,ஊரே என்னை அசிங்கப்படுத்தும் போது என்ன செய்தாய் ?ஊரே வேண்டாம் என ஒளி சொல்வது அழகு பாட்டி தவிப்பது,குணசாலியே வாயடைப்பது என இறுதி அத்தியாயங்கள் அணு குண்டு!
 
தேங்க் யூ சோ மச் செல்விக்கா :) :) :)

அருமையான விமர்சனம் :)
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த கதை எல்லாருக்கும் பிடித்ததில். :) :)

ஒரு நிறைவான கதையை குடுத்திருக்கேன்னு திருப்தி :) :)

தேங்க் யூ செல்விக்கா :)
 
Top