ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 22.1

Advertisement

புருசன் இல்லாத பெண்கள
இந்த சமுதாயம் நடந்தற விதம்
எப்பவும் மாறாது
அருமையான வரிகள்
 
நம்
💞💞 கைம்பெண்கள் கடந்து வந்த பாதைகள், ரணம் கொடுக்கும் முட்களை கொண்டு அமைத்திருந்தாலும், மன தைரியம் இருந்தால் தன்னம்பிக்கை கொண்டு எதையும் வெல்லலாம். மயூ கடந்து வந்து விட்டாள்.

வீட்டில் உள்ள பெண் சிங்கத்தை புகழ்ந்தால் ஆணுக்கு அசிங்கம். பக்கத்து வீட்டு சிங்க பெண்களை மட்டும் தான் புகழ்வர்.
நம் பாட்டிமார்கள் கதை எல்லாம் கேட்டால், ரொம்பவும் கஷ்டமாக இருக்கும்!
 
நம்

நம் பாட்டிமார்கள் கதை எல்லாம் கேட்டால், ரொம்பவும் கஷ்டமாக இருக்கும்!
நிறைய பேர் புலம்பி பார்த்து இருக்கேன் சிஸ். வீட்டுக்குள்ள கூட சேர்க்காம நடைப்பதையில் படுக்க வச்சிருக்க கதை கூட உண்டு. கேக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கும். 😔😔😔😔
 
மெய்சிலிர்க்க வைத்த பதிவு. வித்யா சூழ்நிலையில் இருக்கும் யாரும்.... எந்த வயதிலும் கணவரை இழுத்துட்டோம்னு நினைக்கிறதே இல்ல. 😢

ஏன்னா........ அது அப்படி தான்.
இழப்பு நிகழ்ந்த பிறகு, நம்ம பெத்த பிள்ளைகளைத் தவிர வேற யாரும் நமக்கு ஆறுதல் தரமாட்டாங்க.🙅‍♀️

உறவுகள் நம்ம வாழ்க்கைக்கு வழிகாட்டறேனு சொல்லி நம்மை ஏமாத்தி ஏப்பம் விட நினைக்கும் நேரம், எவ்வளவு சாதுவான பெண்ணா இருந்தாலும் பயங்கர கோவம் வரும். அந்த கோவத்தோடு துணிச்சல், தைரியம், தன்னம்பிக்கையும் சேர்ந்து வரும்💁‍♀️.

இந்த இடத்தில் துணிந்து வரமுடியலைனா, காலத்துக்கும் நம்ம அடிமையா இருக்கறதும் இல்லாம, நம்ம பிள்ளைகளும் அடுதவங்களை நம்பித்தான் ஒவ்வொரு விஷயத்திலும் காத்திருக்கும் நிலைமையாகிடும்🥺
 
நிறைய பேர் புலம்பி பார்த்து இருக்கேன் சிஸ். வீட்டுக்குள்ள கூட சேர்க்காம நடைப்பதையில் படுக்க வச்சிருக்க கதை கூட உண்டு. கேக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கும். 😔😔😔😔
இதுல என்ன ஒரு கூத்துனா, எனக்கு நடந்தது.... எனக்கு சடங்கு நடந்த நேரம், அதை எங்க கூடப்பிறந்தவங்க பார்த்தா, அவங்க வாழ்க்கையில் ஏதாவது இழப்பு ஆகிடும்னு எங்க அம்மாவே அவங்களை அவங்க,அவங்க வாழ்க்கை துணை கூட வெளியில் அனுப்பிட்டு, பிறகு வெள்ளைக் கோலத்தை உடனடியாக மாற்ற உடன் பிறந்தவங்க பிறந்த வீட்டு பட்டு கொடுங்கனு சொல்லும் போது எங்க அம்மா வாசல்ல நின்னு எட்டி கொடுத்துட்டு என்னை நேரடியாக பார்க்க கூட இல்லாமல் போனது இந்த நிமிஷம் வரைக்கும் கண்ணை விட்டு மறையலை.
 

Advertisement

Advertisement

Back
Top