தஞ்சை விவசாயி

Advertisement

Vanjulavalli

New member
Member
தஞ்சையில் விவசாய குடும்பம் அண்ணன் தம்பி
அண்ணன் ராமு. தம்பி. தாமு இருவருக்கும் விவசாயம் தான் தொழில் வேறு‌ஒரு‌தொழிலும் தெரியாது.தங்களுக்கு பெற்றோர்கள் கொடுத்த நிலத்தில் விவசாயம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.
அண்ணனுக்கு திருமணம்‌ நடந்தது. மனைவி மங்கா வீட்டிற்கு வந்தவுடன்‌ கணவனின் தம்பியை தன் பிள்ளையாகவே நினைத்தாள்.குடும்ப வேலைகளை அனைத்தையும் பார்த்துக் கொண்டாள்.அண்ணிக்கு பெண்குழந்தை பிறந்தது.ராமுவும் தாமுவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.மங்கா தன் கொழுந்தனுக்கு பெண் பார்த்துக் கொண்டிருந்தாள் .தன் உறவுக்கார பெண்ணையே திருமணம் செய்து வைத்தாள்.பெண் B.E‌ படித்தவள்.முதன்முதலில் தங்கள் குடும்பத்தில் ஒரு படித்த பெண் வருகிறாள். என்பது எல்லோரும் மகிழ்ந்தனர். கமலா வந்தவுடன் மங்கா இருவரும் சண்டை ஏதுமில்லாமல் இருந்தன. ஆனால் கமலா வந்து பத்து நாட்களிலே நான்
வேலைக்கு செல்ல வேண்டும்.நான் படித்தவள் என்றாள்.
மங்கா முதலில் வேண்டாம் என்றாள்‌ பிறகு கமலா படித்தவள். அவள் வேலைக்கு போனால் நன்றாக தான் இருக்கும். என்று அனைவரிடத்திலும் கூறி வேலைக்கு போக சொன்னால்
அவள் காலை ஐந்து மணிக்கு எழுந்து தனக்கு வேண்டியதை செய்து கொண்டு ஆபிஸ் சென்று விடுவாள். பழையபடி மங்கா தான் எல்லா வேலையையும் செய்வாள்.கொழுந்தனுக்கு கல்யாணம் செய்து வைத்தும் நமக்கு ஒரு உதவியும் இல்லையே என்றாள்.
கமலா இரவு ஒன்பது மணிக்குதான் வீடடுக்கு வருவாள். வந்து அறையில் போய் படுத்து விடுவாள்‌கணவன் தான் சாப்பாடு கொண்டு கொடுக்க வேண்டும்.ஏனென்றால் படித்த பெண்ணல்லவா? மங்காவுக்கு உறவுக்கார பெண் என்று நினைத்து திருமணம் செய்தாள் இப்படி இருக்கிறாளே என்று வருத்தம்
மங்காவுக்கு இரண்டாவதும் பெண்குழந்தை பிறந்தது. இப்போது அவளுக்கு வேலை அதிகமாயிற்று கணவனிடம் கூறி வருத்தபடுவாள் அதற்கு அவன் குடும்பம் இப்படிதான் இருக்கும் என்று கூறிச் சென்று விடுவான்.
கமலாவுக்கு ஆண்குழந்தை பிறந்தது அவள் அம்மா வீட்டில் இருக்கிறாள்.நான் வீட்டுக்கு வரமாட்டேன் தனி வீடு பாருங்கள் என்று கணவரிடம் கூறுகிறாள். கணவன் வேண்டாம் நாம் எல்லோரும் ஒன்றாக இருக்கலாம் என்றாள். அது முடியாது என்று கூறிவிட்டாள்.அண்ணனிடம் கூறினான் அண்ணனும் அண்ணியும் தனிக்குடித்தனம் வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை. வருத்தம் தான் மிச்சம். தம்பி தன்னுடைய பாகத்தை பிரித்து கொண்டு சென்றுவிட்டான்.அண்ணனோ இவ்வளவு நாள் உழைத்தும் தம்பி தன் அருகில் இல்லையே என்று வருத்தம்..
‌‌அண்ணன் தன் மனைவி இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தான். தம்பிக்கு அதிக சொத்து இவனுக்கு குறைச்சல் தான் தன் பெண்களை நன்றாகவே படிக்க வைத்தான். கல்யாண வயது வந்தது தம்பியிடம் சென்று பெண்களுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும். என்றான் தம்பி பார்க்கலாம் என்றான்.
அண்ணனுக்கு இரண்டு பெண் தம்பிக்கு இரண்டு ஆண் தம்பி தன் பிள்ளைகளை அமெரிக்கா அனுப்ப திட்டமிட்டிருந்தான்.பணம் பத்தவில்லை தன் அண்ணனிடம் கேட்டான்.அண்ணனனோ தனக்கு பெண்பிள்ளைகள் இருப்பதை மறந்து வீட்டை விற்று பணம் கொடுத்தான்.
இருந்தாலும் பெரியப்பா குழந்தையும்சித்தப்பா குழந்தையும் ஒற்றுமையாக இருந்தனர்.தம்பி பிள்ளைகள் அமெரிக்கா சென்றனர். தன் பெண்களுக்கு எப்படி திருமணம் செய்வது என்று தெரியாமல் புலம்பி கொண்டிருந்தான்.‌ஆனால் அவன் பெண்களோ ஒன்றும் கவலைபடாதே தம்பிகள் நல்ல சம்பாதித்து வந்து எங்களை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைப்பார்கள். என்று கனவு காண்கின்றன. கனவு பலித்ததா? இல்லையா? என்பதை அடுத்த கதையில் பார்ப்போம்.
 

Advertisement

Advertisement

Back
Top