Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - நிறைவு பகுதி

Advertisement

எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாம அழகாய் ஒரு காதல் கதை!! ரொம்ப ரொம்ப நல்லாருந்தது ????.
 
லவ்லி கிளைமாக்ஸ்... ????

சேரல், தமிழ்... ???

அழகான கதை dr... ??

என்னைக்கும் அவங்க பேமிலி அந்த பேபிஸ் கூட ஹாப்பியா இருக்கட்டும் ?????

All the best?
 
லவ்லி கிளைமாக்ஸ்... ????

சேரல், தமிழ்... ???

அழகான கதை dr... ??

என்னைக்கும் அவங்க பேமிலி அந்த பேபிஸ் கூட ஹாப்பியா இருக்கட்டும் ?????

All the best?
Thank you so much sis ??
 
ரொம்ப க்யூட்டான ஒரு காதல் கதை!!... ரெண்டு பேருக்குமே ரொம்ப அழுத்தம் தான்!!.. கல்யாணத்துக்கு முன்னாடி வரையும் ஒரு வார்த்தை யார்கிட்டயுமே வாயை திறந்து சொல்லவே இல்ல, கேட்டா சிரிச்சே மழுப்புறது!!!... ஆனால் அதுவும் நல்லா இருந்தது!!!...

நாராயணி போன்ற மனிதர்களை கடைசி வரைக்கும் மாற்ற முடியாது!!... அவர்களுக்கு அவர்களின் எண்ணங்களும், நியாயங்களும் மட்டுமே!!!...

கீதா அக்காவை ரொம்ப ரொம்ப பிடித்தது!!!.. இப்படி ஒரு அக்கா நமக்கு இல்லையேன்னு ஃபீல் பன்ன வச்சுட்டாங்க!!!... சேரலுக்கும் அவங்களுக்குமான உறவு, மோகன் மாமா மேல உள்ள காதல், தமிழ் மேல உள்ள அக்கறை, குமாரை கனித்து அனுப்ப சொன்னது, குழந்தைங்க மேல பாசம், தன்னை குத்தி பேசுற சூழ்நிலையை கூட நிதானமா கையாண்ட பக்குவம், இப்படி அவங்க வந்த எல்லா இடத்துலயும் மொத்தமா மனசை அள்ளிக்கிட்டாங்க!!!...

மோகன் மாம்ஸோட காதலும் சளைச்சது இல்லை!!!... சேரல் கிட்ட எல்லாத்தையும் சொல்லும் ரொம்ப இயல்பா அவங்க காதலை வெளிப்படுத்துனாங்க!!!..

ஜெயராம், பரமசிவம் மாதிரி மனிதர்கள் இருக்கிற வரைக்கும் யாரும் தனியா நின்னுட மாட்டாங்க!!!...

தன் மகன் மாதிரி நினைச்சு அவனை படிக்க வச்சது, அவனை அன்பா பார்த்துகிட்டது, அதுவும் ஸ்கூல் போகும்போது தலை கலைந்து இருந்ததுன்னு சரி பண்ணி விடுறது, கசங்குன சட்டையை போட்டதுக்கு கேட்டது எல்லாமே ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு!!!.. இப்படிலாம் கூட அன்பை காட்ட முடியுமான்னு ரொம்ப வியப்பா இருந்தது!!!...

அவன் கையில ரத்தக்கறை படக்கூடாது, அந்த பாவம் அவனுக்கு போகக்கூடாதுன்னு கடைசி வரைக்கும் அவனுக்கு அரணா இருந்த உறவை என்னன்னு சொல்ல!!...

சாரங்கன் மாதிரி இருக்கிற பசங்கள கொஞ்சம் சரியா வழி நடத்துனா போதும், ரொம்ப சரியா இருப்பாங்க!!!...

குமார் மாதிரியான மனிதர்கள் வாழவே தகுதி இல்லாதவங்க!..

ஊருக்காக ஒவ்வொரு நல்லதையும் யோசிச்சு, அம்மா அப்பா செய்ய முடியாததை செஞ்சு முடிச்சு, காதலையும் கைப்பற்றி கடைசில மனசுல நிறைஞ்சு நின்னுட்டாங்க மொத்த குடும்பமும்!!..

இந்த தொழில் செய்றவங்களை பத்தி நான் பெருசா தெரிஞ்சுக்கிட்டதில்லை, தெரியறதுக்கான வாய்ப்பும் இல்லை, முதல் முறையா உங்க கதையில தான் படிக்கிறேன்!!... அவங்களோட இயல்பான வாழ்க்கையை அதுல இருக்கிற கஷ்டங்களை ரொம்ப யதார்த்தமா, இயல்பா எந்த குறையும் மிகையும் இல்லாமல் சொல்லி இருந்தீங்க!!!..

அவங்க கூட புதுசா வாழ போறவங்க வாழ்க்கையை, அவர்களுடைய எண்ணங்களை, கஷ்டங்களை ரொம்ப யதார்த்தமா தமிழ் மூலமா சொல்லிட்டீங்க!!..

நெஞ்சைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி!!!

எனக்கு சொல்லடி!!..

விஷயம் என்னடி??

இந்தப் பாட்டை இனிமே கேட்கும் போதெல்லாம் எப்பவும் இவங்க ஞாபகமும், இந்த கதை ஞாபகமும் தான் வரும்!!..

உங்க எழுத்து நடை ரொம்ப பிடித்து இருந்தது!!.. இடையில் நீங்க சொன்ன சில விஷயங்கள், சொன்ன விதம் சூப்பர்!!..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் எழுத்தாளரே?
 
Top