Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீயாய் தீரா காதல் பாகம்-3

Advertisement

Thirumathi surendhar

New member
Member
கவின் ஆஃபிஸை சென்று அடைந்தான் காரில் இருந்து இறங்கி அவன் ஆஃபிஸ்க்கு உள் சென்றான்.

சந்துருவும் அவன் பின்னே சென்றான்

நான்கு மாடிகளைக் கொண்டு பிரம்மாண்ட கட்டிட அமைப்பு இருந்தது.

சந்துருவிற்கு வேறொரு வேலை சொல்லிவிட்டு கவின் கான்ஃபரன்ஸ் ரூமுக்கு சென்று கொண்டிருந்தான்.

அங்கு சந்திரசேகர் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார்

போர்ட் ஆஃப் டைரக்டர் ஒருவரான செல்வம் வேறொரு கம்பெனி முதலாளியுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்

செல்வம் " நீங்க ஒன்னும் பயப்படாதீங்க கவின் நான் பார்த்து வளர்ந்த பையன் நான் சொன்னா கண்டிப்பா கேட்டுப்பான் நீங்க பயப்படாம இருங்க எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் " என்று எதிரில் இருந்தவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்

கவின் உள்ளே வரலாமா என்று கேட்டு அந்த அறையில் உள்ளே வந்து அமர்ந்து பின் கைத்தட்டி இரண்டு காபி எடுத்து வா என்று அங்கிருந்த பணி பெண்ணை ஆணையிட்டான்

செல்வம் கவின் நானே உங்ககிட்ட ரூம்க்கு வந்து பேசணும்னு நெனச்சேன் இவர் வந்து தியாகு உங்க அப்பாக்கு ரொம்ப தெரிஞ்சவரு ரொம்ப வருஷமா குளோபல் ஃபண்டிங்ல டீலிங் வைத்திருந்தார் அதான் நம்ம கம்பெனியில கேட்கலாம்னு வந்திருக்காரு " என்று சொல்ல

காபி வந்தது கவின் ஒரு காபியை எடுத்துக்கொண்டு மற்றொரு காபியை தன் அருகில் இருந்த சந்திரசேகரிடம்

" காபி எடுத்துக்கோங்க சார் உங்களுக்காக தான் எடுத்துட்டு வர சொன்னேன் பக்கத்துல ரூம்ல வெயிட் பண்ணுங்க நான் வரேன் " என்று சொல்ல

சந்திரசேகர் அங்கிருந்து எழுந்து சென்றார்

கவின் அந்த இருவரையும் பார்த்து " சொல்லுங்க ஏதோ சொல்லிட்டு இருந்தீங்க " என்று கேட்க

செல்வம் " அதில பா அப்பாக்கு இவர் ரொம்ப நல்லா தெரியும் நீ வேணா அப்பாகிட்ட கேட்டு பாரு அப்பாவே இவர பத்தி நல்லா சொல்லுவாரு இவரு ரொம்ப வருஷமா அப்பா கூட பிசினஸ் பண்ணிட்டு இருந்தாரு இப்ப நம்ம கூட பிசினஸ் பண்ணலாம் என்று வந்திருக்காரு கொஞ்சம் " என்று சொல்ல

கவின் " ஆமாங்க அங்கிள் அப்பா இவரைப் பத்தி சொல்லி இருக்காரு பட் பிசினஸ் ஸ் பிசினஸ் அப்பா சொன்னாரு அவங்க சொன்னாங்க இன்வெஸ்ட்மென்ட் பண்ண முடியாது இல்லையா நம்ம கம்பெனி இப்ப லேட்டஸ்ட் டெக்னாலஜி நோக்கி இன்வஸ் பண்றதா இருக்கோம் இந்த மாதிரி காரு பஸ் இதுக்கெல்லாம் இன்வெஸ்ட் பண்றதா இல்ல எனிவே நைஸ் மீட்டிங் யூ சார் " என்று சொல்லி அவர்களுக்கு கை குடுக்க

தியாகு கோவமாக அங்கிருந்து எழுந்து சென்றான்

கவின் " நீங்க போய் வழி அனுப்பி வச்சிட்டு வாங்க அங்கிள் பாய் " என்று சொல்ல செல்வம் அவர் பின்னால் சென்றார்.

கவின் வெளியே வர சந்திரசேகர் அவன் எதிரில் வந்தார்.

கவின் " நீங்க அனுப்புன ரிப்போர்ட் புல்லா படிச்சேன் சார் நல்லா இருக்கு வர்ஔட் ஆகும் தான் எனக்கும் தோணுது நீங்க ட்ரை பண்ணுங்க நாங்க கண்டிப்பா உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவோம் எங்களுக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு " என்று சொல்ல

சந்திரசேகர் " தேங்க்யூ மிஸ்டர் கவின் யாருமே நம்பல நான் கண்டிப்பா இந்த சாப்ட்வேர் சக்சஸ் புல்லா முடிப்பேன் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு என் மேல நம்பிக்கை வச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ் " என்று சொல்ல

கவின் " போய் வேலையை பாருங்க சார் " என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தான்

செல்வம் அவன் எதிரே வந்து " என்னப்பா கவின் இப்படி அவர் மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்ட அவருக்கு எனக்கும் எத்தனை வருஷம் பழக்கம் தெரியுமா “ என்று கேட்க

கவின் " உங்க ஃப்ரெண்ட் சொந்தக்காரங்களுக்கு எல்லாம் உதவி பண்றதுக்காக நான் இங்க கம்பெனிக்கு தொறந்து வச்சி இல்ல உங்களுக்கு புரியும் நினைக்கிறேன் " என்று சொல்லி அவன் ஆபீஸ் ரூமுக்கு சென்றான்.

கவின் தன் ஆபீஸ் ரூமில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்

சந்துரு கதவைத் தட்டி உள்ளே வந்தான்

சந்துரு " சார் ஈவினிங் இன்வெஸ்ட்மென்ட் மீட்டிங் கூட டின்னர் அரேஞ்ச் பண்ணி இருக்காங்க உங்கள இன்வைட் பண்ணி இருக்காங்க" என்று சொல்ல

கவின் " இல்ல சந்துரு எனக்கு வேலை இருக்கு டைம் இல்ல போர்ட் மெம்பர்ஸ் அட்டென்ட் பண்ண சொல்லிடுங்க " என்றான்

சந்துரு" அண்ணா உங்க ஃப்ரெண்ட் ப்ரொபசரும் கலந்து கொள்கிறாராம் " என்று சொல்ல

சுரேந்தர்" சரி ஓகே நான் அட்டென்ட் பண்றேன் நீங்க மத்த அப்பாயின்மென்ஸ கேன்சல் பண்ணிடுங்க " என்றான்

சந்துரு" ஓகே சார்" என்றான்

கவின் " ஆமா ஈவினிங் எனக்கு என்ன அப்பாயின்மென்ட் இருக்கு " என்று கேட்க

சந்துரு" அந்த ரிப்போர்ட்டர் இன்டர்வியூ இருக்கு சார் " என்றான்

சுரேந்தர்" சரி ஓகே அவங்க கிட்ட சிட்டுவேஷன் எக்ஸ்பிளைன் பண்ணி இன்னொரு நாள் ரீஷெட்யூல் பண்ணுங்க " என்றான்.

கவின் போன் ஒலித்தது அதில் ஒரு பெண் பேசினாள்

" மாமா சாயங்காலம் என்ன பிக்கப் பண்ணி கூட்டிட்டு போறியா வீட்டுக்கு" என்று கேட்க

கவின் " முடியாது " என்றான்

அந்தப் பெண் " நீ என் மாமா தானே கொஞ்சமாவது என் மேல பாசம் இருக்கா? " என்று கேட்க

கவின் " இல்ல இப்ப என்ன அதுக்கு " என்றான்

அந்தப் பெண் அதற்கு " உனக்கு போய் ஃபோன் பண்ணன் பாரு என்ன அடிக்கணும் " என்று சொல்ல

கவின் " நீ ஃபோன் வச்சுட்டு அடிச்சுக்கோ எனக்கு வேலை இருக்கு ஃபோன வை " என்று ஃபோனை துண்டித்தான்

சந்துரு "என்ன சார் உங்க அக்கா பொண்ணா" என்று கேட்க

கவின் " ஆமாம் " என்றான்

" டெய்லி நீங்களே கூட்டிட்டு போய்விட்டு நீங்களே கூட்டிட்டு வரணும்னு ஆசைப்படுறாங்க போல" என்று சந்துரு கேட்க

கவின் அதற்கு " ஏன்யா உன் வேலையை தவிர மத்த எல்லாத்தையும் கவனிக்கிற நீ போய் வேலையை கவனி " என்று சொல்ல

" ஓகே சார் " என்று சந்துரு அந்த அறையை விட்டு வெளியேறினான்.

மாலை பொழுது மெதுவாக புலர்ந்தது அது மழை காலமாக இருந்ததால் வானம் சீக்கிரமே இருள் பூச தொடங்கியது.

மணி 6 அலுவலகத்தை விட்டு ஒருவர் பின் ஒருவருவராக கிளம்பி கொண்டு இருந்தனர்

சுவேதா " சரி வெண்பா நா வரட்டா " என்று கேட்க

அப்போது தான் நேரத்தை பார்த்தால் வெண்பா

" ஓ.. 6 ஆயிடுச்சா சரி நீ கிளம்பு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு " என்று சொல்ல

"சரி பாத்துக்கோ நா கெளப்புறன்" என்று சொல்லி சுவேதா அங்கு இருந்து எழுந்திரிக்க

வெண்பா " ஹச் " என்று தும்மினாள்

சுவேதா " என்ன டி என்ன ஆச்சு " என்று கேட்க

" ஒன்னும் இல்லை டி நேத்து மழைல நனைஞ்சுட்டேன் அதான் லைட் ஆஹ் கோல்டு " என்றாள் வெண்பா

சுவேதா " ஏன் டி இப்படி பன்ற ஒன்னு கண்ணு முழிச்சு வேல பாக்குற இல்லை இப்படி மழையில நனையுற உடம்பு மேல கொஞ்சம் கூட அக்கறையே இல்லை டி உனக்கு " என்று கோபித்துக்கொண்டாள்

வெண்பா " நாம ஒரு கோல்ல இருக்கும் பொது வேற எதுவும் நம்ம கண்ணுக்கு தெரியாது டி " என்று சொல்ல

" வாய் மட்டும் நல்லா பேசு சுவர் இருந்த தான் சித்திரம் வரைய முடியும் உடம்ப பாத்துக்கோ அடலீஸ்ட் உன் கோல்ல ரீச் பண்ணவா ஆச்சு தெம்பு வேணாமா " என்று கேட்டாள் சுவேதா

வெண்பா " சரி சரி அக்ஸ்ப்ட்டட் இனிமே கண்டிப்பா என் உடம்ப பாத்துக்குறேன் போதுமா " என்று கேட்க

சுவேதா " போதாது " என்று அங்கு இருந்து நகர்ந்தாள்

அதை பார்த்த வெண்பா " சரி இப்போ என்ன பண்ண சொல்ற " என்று கேட்க

பிரஸ்ட் எயிட் பாக்ஸில் இருந்து எடுத்த டேப்லெட்டை அவள் மூன் வைத்து " இத சாப்புடு போதும் " என்றாள் சுவேதா

" சரி சாப்புடுறன் " என்று வெண்பா சொல்ல

சுவேதா " மறக்காம சாப்புடு " என்று சொல்லி வீட்டுக்கு விரைந்தாள்

சிறுது நேரம் கழித்து தமிழரசிடம் இருந்து வெண்பாக்கு போன் வந்தது

வெண்பா அதை எடுத்து பேச

தமிழரசி " வெண்பா உனக்கு கார் அனுப்பி இருக்கேன் நீ அதுலயே போய்டு " என்று சொல்லி போனை துண்டித்தாள்

அடுத்த அரைமணி நேரத்தில் வெண்பா அங்கு இருந்தாள்

அந்த அலுவலகமே பரப்பாக இருந்தது அடுத்த பத்து நிமிடங்களில் ஆடிட்டோரியத்தில் ஏதோ மீட்டிங் ஏற்பாடுகள் நடந்து கொண்டுஇருந்தது.

ஒரு மாதம் இங்கு வந்து போனதால் பல பேர் அவளுக்கு பரிச்சையமாக இருந்தனர்

பிரண்ட் டெஸ்கில் சென்று அங்கு அமர்ந்திருந்த பெண்ணிடம் " ஹாய் மீனா " என்று வெண்பா விசாரிக்க

மீனா " இப்போ தான் உன்ன பத்தி யோசிச்சன் என்ன டா ஆள காணோம்னு பரவால்ல நீயும் விடாம ட்ரை பன்ற என்னைக்கு தான் அந்த மகராசன் கண்ண தொரப்பனோ " என்று சொல்ல

வெண்பா " தொறந்துடானே... " என்றாள்

மீனா உற்சாகமாக " அப்படியா அப்பாய்ன்ட்மென்ட் எப்போ " என்று கேட்க

வெண்பா " 7 மணிக்கு " என்றாள்

மீனா அதை கேட்டு " 7 மணிக்கு இங்க மீட்டிங் இருக்கு டைம் கரெக்ட் ஆஹ் ரீசெக் பணிக்கோ " என்று சொல்ல

வெண்பா " சந்துரு சொன்னதா எங்க எடிட்டர் சொன்னாங்க " என்று சொல்ல

மீனா " ஆனா இந்த மீட்டிங் பிரஸ்ட் கேன்சலா இருந்துச்சு ஹாப் ந்வர் முன்னாடி தான் ரீ ஸ்செடுல் பண்ணாங்க அநேகமா உன் அப்பாய்ன்ட்மென்ட் கேன்சல் ஆயிருக்கும்னு நினைக்குறேன் நீ எதுக்கும் சந்துரு பாத்து பேசு " என்றாள்

வெண்பா " அவரு எங்க இருப்பாரு " என்று கேட்க

மீனா " அவரு கொஞ்சம் பிஸி தொ.. இந்த ஆடிட்டோரியும்ல தான் மீட்டிங் நீ அந்த சோபால வெயிட் பண்ணு நா இன்போர்ம் பன்றேன் " என்று சொல்ல

ஒரு நிமிடம் மிகுந்த ஏமாற்றத்தை உணர்ந்தாள் வெண்பா

வெண்பா இன்டெர்வியூ நடக்குமா நடக்காதா என்ற பதட்டத்தில் இருந்தாள்

மீட்டிங்க்காண முக்கியஸ்தர்கள் ஒருவர் பின் ஒருவராக வர தொடங்கினர் அதை பார்த்ததும் அவளுக்கு இருந்த கொஞ்சம் நம்பிக்கையும் உடைய தொடங்கியது

"அப்போ இந்த மாசம் இல்லையா அடுத்த அப்பாய்ன்ட்மென்ட் எப்போ கிடைக்குமோ அட்லீஸ்ட் அதையாவது வாங்கிட்டு போனும் " என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டு இருந்தாள்

-தொடரும்

மறக்காமல் இந்த சேப்டர் பற்றிய கருத்துக்களை கமெண்டீல் பதிவிட்டால் அது என்னை மேலும் வளர்த்துக் கொள்ள உதவும்.....
இந்த கதை பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
 
Top