Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-3

Advertisement

praveenraj

Well-known member
Member
"என்ன சொல்றா என் ஏன்ஜல்?"
அவளுக்கென்ன என்றவள் திரும்ப அப்பாவும் பொண்ணும் டிரஸ் மாற்றிவிட்டு ஒருவரைப் போல் இருவரும் கண்ணாடியில் தங்களை ரசித்துக்கொண்டிருக்க கோவம் கொண்டவள், "ஏ எத்தனை தடவ தான் உங்க மொகரகட்டைங்கள கண்ணாடியில் பார்ப்பீங்க?"
"நித்து, அது தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை தொடரும்" - துவாரா
சட்டென இருவரும் மீண்டும் சிரித்துக்கொள்ள,
"அப்பா, அம்மா கிண்டல் பண்றா..." என்றாள் இளவேனில்.
"பண்றா இல்ல டா தங்கம் பண்றாங்க..." என்றான் விவான்.
"பந்தாங்க..." என்றவள் சிரிக்க,
"என் ஸ்வீட் குட்டி" என்று அவன் கொஞ்ச ஏனோ அவளுக்கு வெட்கம் வந்து தலையைக் கவிழ்த்துக்கொண்டாள்.
"என் தங்கத்துக்கு வெட்கம் வந்துடுச்சா?" என்று கொஞ்சியவன், நித்தியிடம், "துவாராவா?"
அவள் ஆம் என்பதைப் போல் தலை ஆட்டவும்,
"கொடு இங்க"
அவள் தர, "டேய் கிளம்பிட்டோம் மச்சான்..."
"வா டா இவரு பெரிய மன்மத குஞ்சு. அதுதான் கல்யாணமே ஆகிடுச்சு இல்ல இன்னும் என்னடா மேக்அப் எல்லாம்?"
"கல்யாணம் ஆகிட்டா சைட் அடிக்கக் கூடாதா என்றவன், வேண்டுமென்றே நித்யாவிற்கு கேட்கவேண்டுமென சப்தமாகச் சொன்னான்.
அவன் தன்னை வம்பிழுக்கிறான் என்று தெரிந்தும் அமைதியாக பேக் எடுத்தாள் நித்யா.
"டேய் ட்ரைன்ல தான் போக போறோம். அதும் நைட் ட்ராவல். இப்போ எதுக்கு மேக் அப் பண்ற?"
"மச்சான் ஆள் பாதி ஆடை பாதி டா."
"வந்து தொலை"
அவன் வைக்க போக அதற்குள், "து மாமா..."
"என் ஏஞ்சல் குட்டி பக்கத்துல தான் இருக்கீங்களா?"
"ஆமா"
"சீக்கிரம் வாங்க டா குட்டி மா. மாமா இங்க வெயிட் பண்றேன்."
"சரி"
போனை வைக்க, செபாஸ்டின் வந்து அந்த கேங்கில் ஐக்கியமானான்.
"டேய் துவாரா எப்படி டா இருக்க?"
"ஐ அம் குட் மச்சான். நீ?
"இருக்கேன்டா" என்று குரல் கம்ம அதைப் புரிந்துக்கொண்ட ஹேமந்த், மிரு, துவாரா மூவரும் அமைதியாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள விவியனும் மௌனியும் ஒன்றும் விளங்காமல் பார்த்தனர்.
ஏனோ அந்த திடீர் அமைதிக்கு யார் முற்றுப்புள்ளி போடுவதென்று என்று காத்திருக்க
ஹேமந்தை அழைத்தான் ஜிட்டு.
அவன் ஸ்பீக்கரில் போட,
"மச்சி இன்னும் 10 நிமிஷம் தான் டா வந்துட்டேன்."
"ஐயோ மச்சான் ட்ரைன் எடுக்க போறாங்க"
"என்னடா சொல்றீங்க? 10 .30 க்கு தானே ட்ரெயின்."
"டேய் 8 .30 டா முட்டாள்."
"என்னது 8 .30 யா" என்று ஜிட்டு அதிர,
சிரித்தவர்கள், "சும்மா சொன்னேன் டா."
"அட #### அறிவு $ $$$ ஏ இல்லையா உனக்கு."
ஏனோ அவன் இப்படி பேச மிருவும் மௌனியும் சற்று அதிர்ந்தாலும் மற்றவர்கள் இன்னும் பலமாய் சிரித்து, "ஐயோ அமிதாப் மாமாக்கு கோவம் வந்திடுச்சு" என்றதும், எல்லோரும் (மிரு மௌனி உட்பட) கலகலவென சிரிக்க,
"இருங்கடா உங்களை வந்து கவனிச்சிக்குறேன்."
"நித்யா வந்துட்டா. அவ இருக்கும் போது எங்களுக்கென்ன கவலை" - மிரு
"அய்யய்யோ அவ சாதரணமாவே என்ன கேவலமா தான் பேசுவா இப்போ லேட்டா வேற வரேனே" என்று புலம்பினான்.
"மச்சான் நீ மைண்ட் வாய்ச்சுனு நெனச்சி சத்தமா பேசிட்ட"
மீண்டும் ஐயோ என்றவன் அழைப்பைத் துண்டிக்க,
சிரித்தவர்களிடம், "யாரு அண்ணா இது?" - மௌனி
"ஏம்மா வருவான் பாரு"
"இவ்வளவு டம்மி பீசா இருக்காரு" -மௌனி
எல்லோரும் இன்னும் பலமாக சிரித்தனர். அவர்களுக்குத் தெரியாது அவன் வரும் போது ஒரு ஏழரையைக் கூட்டிவருனான் என்று.
தந்தையிடம் பேசிமுடித்தவளின் மனம் ஏனோ சொல்ல முடியாத உணர்வுகளில் தத்தளிக்க எல்லாவற்றுக்கும் காரணம் தானே தான் என்பது புரிந்து மனம் உடைந்து காணப்பட்டாள் அனேஷியா. தீதும் நன்றும் பிறர் தர வாரா. ஆம் வாழ்க்கையில் சில தவறுகளை நாம் செய்து முடித்து பிறகு தான் நமக்கு ஞானம் பிறக்கும். அப்போது தான் நாம் செய்ததிற்காக வருந்துவோம். அவசர புத்தியின் காரணமாய் நொடிப்பொழுதில் நாம் செய்யும் தவறுகள் நம் வாழ்க்கையையே திருப்பி போட்டு விடும். இரண்டாவது நம் எல்லோரும் செய்யும் இன்னொரு தவறு ப்ரீஜூடிஸ் (prejudice - தப்பான அபிப்பிராயம்). ஏதேதோ சிந்தனைகளில் உழன்றுக்கொண்டிருந்தவளை பலமுறை அழைத்தும் திரும்பாததால் சப்தமாய் அவளைத் தொட்டு அழைக்க திடுக்கென நினைவுக்கு வந்தவள் அருகிலிருந்த பெனாசிரைப் பார்த்தவள்,
"என்ன?"
"மேம் ஜெசிந்தாவுக்கு பசிக்குதாம்.ரேஷாக்கும் கூட..."
அப்போது தான் மணியைப் பார்த்தவள் 9 ஐ நெருங்க, "சரி போய் சாப்பிட்டு வாங்க. நான் இங்க இருக்கேன்."
"மேம் உங்களுக்கு பசிக்கலையா?"
சிறு புன்னகையை மட்டுமே பதிலாக தந்தவளை என்னவென்று புரியாமல் நின்றவளிடம், "போங்க போய் சாப்பிட்டு வாங்க."
சரி என்றவள் ரேஷா, ஜெசிந்தா உடன் செல்ல ஆயத்தமாக, "இஸ்மாயில் அண்ணா நீங்களும் போயிட்டு வாங்க நான் இங்க இருக்கேன்" என்றாள் அனேஷியா.
"இல்ல மேம்..."
"பரவாயில்லை. யு கைஸ் கேர்ரி ஆன்."
ஓகே என்று நால்வரும் சென்றுவிட அவளோ மீண்டும் தன் கற்பனைக் குதிரையை ஓட்ட முயன்றாள்.

இங்கே ஜிட்டுவிடம் பேசிவிட்டு அந்த அறுவரும் சும்மா கதை அளந்துக்கொண்டும் பின்பு ஜிட்டுவைப் பற்றிய சில கொசுறு தகவல்களும் தந்து சிரித்துக்கொண்டிருந்தனர். இப்படி சொல்வதைக் காட்டிலும் சோகமே உருவாய் இருந்த செபாஸ்டினை ஒருவாறு சமாதானம் செய்ய முயன்றுகொண்டிருந்தனர். இது வேண்டுமானால் உண்மை.
கொஞ்சம் பேசிக்கொண்டிருக்க நித்யா துவாராவை அழைத்தாள்,
"நித்து அப்படியே உனக்கு லெப்ட்ல திரும்பி லாஸ்ட்ல பாரு" என்றவன் அவள் பார்க்க கையைத் தூக்கிக் காட்டினான்.
நித்யா ட்ரொல்லி பேக் இழுத்துவர விவான் இளவேனிலைத் தூக்கிக்கொண்டு வந்தான். ஏனோ இளவேனில் துவாராவைப் பார்த்ததும் ஆர்பரித்தாள்.
"ஹே இவரு தானே விவான்? ஊட்டில இருக்கறவரு" - மௌனிகா
"கரெக்டா கேட்டுட்ட மௌனிகா, அவனே தான்."
"சொன்ன மாதிரியே நித்யாவும் வந்துட்டா இந்த ஜிட்டேன் செத்தான் இன்னைக்கு" என்று மிரு சொல்ல ஏனோ மீண்டும் எல்லோரும் வெடித்துச் சிரித்தனர்.
"என்னப்பா அதுக்குள்ள செலிப்ரசன் மூட் ஸ்டார்ட் ஆகிடுச்சா?" - நித்து
"இல்லையா பின்ன? அதும் நீங்க வந்து இருக்காம போகுமா மேடம்" - ஹேமந்த்
"டேய் இப்படி திடீர்னு மரியாதையெல்லாம் கொடுத்து உச்சாணில தூக்கி வெக்காதீங்க டா. அப்புறோம் விழுந்தா பைசாகுக் கூட தேறாது."- நித்து
அருகே நெருங்கியதும் உடனே துவாராவிடம் தாவ முயன்றாள் இளவேனில்.
"வாங்க வாங்க என் ஏன்ஜெல் வாங்க" என்று பெற்றுக்கொண்டான்.
"ஏ பிள்ளை எங்களையெல்லாம் பார்த்தா உனக்கு மனுஷங்களா தெரியில்லையா? அதென்ன வந்ததும் அவன் கிட்ட மட்டும் ஒட்டிக்குற?" என்று செல்லமாய் இளவேனிலை மிரட்டிக் கொண்டிருந்தாள் மிரு.
அவள் அதட்டலில் சற்று மிரண்டவள் இன்னும் நெருங்கி துவாராவைக் கட்டிக்கொள்ள, "சரி டா ஒன்னுமில்லை... அத்தை சும்மா விளையாடறாங்க டா."
ஏனோ துவாரா சொன்னதும் மெல்ல நிமிர்ந்து மிருவைப் பார்த்தாள் இளவேனில்.
ஏற்கனவே துவாரா - மிருவின் உறவில் சற்று சந்தேகத்தில் இருந்த விவியனுக்கு துவாரா இப்படி மிருவை அத்தை என்று சொன்னதும் அவன் சந்தேகம் பழுத்தது.
அப்புறோம் துவாரா இளவேனிலைச் சமாதான படுத்தி மிருவிடம் தந்தான். பின் அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் கைமாறியவள் எல்லோருடனும் ஒருவாறு ஒட்டிக்கொண்டாள். ஆனாலும் ஹேமந்த்தின் கையில் இருந்தவள் திமிறி மீண்டும் துவாராவிடம் வந்துவிட்டாள்.
மௌனிகா மட்டும் தான் ரொம்ப ஆசையாகவும் வாஞ்சையாகவும் இளவேனிலைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் அங்கிருந்தவர்களில் மௌனிகாவை மட்டுமே இதுவரை பார்த்திடாதவள் அவளிடம் செல்ல மாட்டேன் என்று சிணுங்கிக் கொண்டே இருக்க,
"சரி வாங்க சாப்பிட போலாம் எல்லோரும்..." என்று விவான் அழைக்க,
சரி என்றவர்கள் நல்லவேளையாக வெளியே இருந்த உணவகத்திற்குள் சென்றனர். அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்க போன் செய்தான் தியானேஷ்.
போன் நம்பரை பார்த்த விவான் எழுந்து வெளியே போக, யாரு என்ற செபாவிற்கு தெரியாது என்பதைப்போல உதட்டைச் சுளித்தாள் நித்யா.
இதுவரை நார்மெலாக இருந்த மிரு கொஞ்சம் டென்ஷன் ஆகா, அருகிலிருந்த துவாரா அவள் காதில், "ஒண்ணுமில்ல நான் இருக்கேன்" என்று கையைக் கொண்டு அழுத்தினான்.
உள்ளே மீண்டும் விவான் மட்டும் வர எல்லோரும் சந்தேகமாய் பார்த்தனர். வந்தவன் அமைதியாக சாப்பிட
"யாரு மச்சான்?" - ஹேமந்த்
"எஸ்டேட்ல இருந்து"
"என்னாச்சுடா?"
"என்னாச்சுங்க?"
"நத்திங். சும்மா தான்."
"ஆமா இளங்கோவும் பாருவும் எங்க டா இருக்காங்க?" நித்யா
"ஆமாயில்ல மறந்தே போய்ட்டேன். இருங்க கால் பண்றேன்" - செபா
சீக்கிரம் சாப்பிட்ட விவானின் முகத்தில் ஏனோ ஒரு வித பதற்றத்தைக் கண்ட விவியன் அதை அருகிலிருந்த துவராவிடம் சொல்ல திரும்ப அவனோ அவனுக்கு அருகிலிருந்த மிருவின் கைகளைப் பிடித்து காதில் ரகசியம் பேசிக்கொண்டிருந்தான். இப்போ எப்படி இவனைக் கூப்பிடுவது என்று விவியன் குழம்பி நிற்க, அதற்குள் சாப்பிட்ட விவான் எழுந்து வெளியேறினான்.
"ஏங்க அவ்வளவு தானா? அதுக்குள்ள சாப்பிட்டாச்சா?" என்ற நித்யாவிற்கு,
"எனக்கு போதும்."
"ஏன் என்னாச்சி?"
"நத்திங். ட்ராவல் பண்ணப் போறோமில்ல அதுதான்"
அவன் எழுந்து கைகழுவி வெளியேற உடனே விவியனும் எழுந்தான்.
"அண்ணா என்ன நீங்களும் எழுந்துட்டீங்க?"- மௌனிகா
"இல்லம்மா அவ்வளவு தான்."
மிருதான் சாப்பிடாமலே அமர்ந்திருக்க வற்புறுத்தி சமாதான படுத்தி துவாரா தான் சாப்பிட வைத்துக்கொண்டிருந்தான். அந்த காரியத்தில் கண்ணாக இருந்ததால் அவனால் இப்பொது சுற்றி நடப்பதைக் கவனிக்க முடியவில்லை.
நித்யா சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்த இளவேனிலை கதைச்சொல்லி ஊட்டிக்கொண்டிருந்தாள்.
செபாவும், ஹேமந்தும், மௌனிகாவும் அரட்டை அடித்துக்கொண்டும் நித்யாவை கலாய்த்துக்கொண்டும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். பின்னே ஒரு வாய் உணவினை எடுத்து கெஞ்சி கொஞ்சி மிஞ்சி இளவேனில் வாயருகே கொண்டு சென்றால் அவள் வாயே திறக்கமாட்டாள் பின்பு சலித்து கோவம் கொண்டு அதை அவளே தன் வாயில் விழுங்கிக்கொள்வாள். அந்த செய்கையை தான் மூவரும் சேர்ந்து கலாய்த்துக்கொண்டு இருக்க,
"இரு டி நானும் பார்க்க தானே போறேன். நாளைக்கு உனக்கும் ஹேமந்த்துக்கும் பொறக்குற பிள்ளையை நீங்க எப்படி வளர்த்துறீங்கன்னு" என்று பதிலுக்கு நித்யாவும் சீண்டிக்கொண்டிருந்தாள். செபாவையும் கிண்டல் செய்திருப்பாள் ஆனால் மாலை அவன் சொன்ன காரணத்திற்காகவும் கூடவே எப்போதும் கலகலவென இருக்கும் பையன் இப்போது பெரிதாக எதிலும் நாட்டமில்லாமல் இருப்பதால் அவனை மட்டும் கருணைக் கொண்டு மன்னித்துவிட்டாள்.
விவான் முதலில் வெளியேற அவன் பின்னாலே விவியனும் அவசரமாய் வெளியே வந்தான். வெளியே வந்து கைப்பேசியை எடுத்து காதில் வைக்க, யாரோ அவனை பின்னால் தொட சட்டென அதிர்ச்சியில் திரும்பியவன் ஒரு கணம் மிரள, "ஹே விவான் என்னாச்சி?"
"ஐயோ நீ தானா விவி. பயந்துட்டேன்.""
விவான் ஏதாவது ப்ரோப்ளேமா?"
"இல்லையே இல்லையே" உடனே பதில் வர அதிலே புரிந்தது விவியனுக்கு சம்திங் இஸ் தேர்னு.
"விவான், என்னையும் உங்க ஃபிரண்டா நினைச்சா சொல்லுங்க ப்ளீஸ்" நானும் துவாரா மாதிரிதான். அவன் பாவமாய் பார்க்க
என்னத்தான் பலமுறை விவியனுடன் பேசியிருந்தாலும் பழகியிருந்தாலும் இன்னும் வாங்க போங்க நட்பு தான் விவானுக்கு. விவானுக்கு மட்டுமில்ல இங்கிருக்கும் எல்லோருக்குமே.
"ஓகே, தியானேஷ் தான் போன் பண்ணான்"
"என்னாச்சி?"
"அவன் வர மாட்டேங்கிறான்."
"புரியில"
"அவன் இங்க வரது அவன் அம்மாக்கு தெரிஞ்சிடுச்சி"
"அம்மாக்கு தானே. இதிலென்ன ப்ரோப்லேம்?"
"அவன் மட்டும் வந்தா ஓகே. ஆனா..."
"ஆனா"
"மிருவும் வரான்னு அவங்களுக்குத் தெரிஞ்சிடுச்சி"
"தெரிஞ்சா என்ன இப்போ?"
"உங்களுக்கு எதுவும் தெரியாதா?"
இல்ல என தலையை ஆட்டினான்..
"மிருவும் தியாவும் கசின்ஸ். அதாவது அத்தைப் பொண்ணு மாமா பையன்" மீதி கதையையும் சுருங்கச் சொன்னான்.
"இதுல என்ன?"
"பாஸ் ப்ளீஸ். நிறைய விஷயம் நடந்திருக்கு நடுவுல. நான் அப்புறோம் எல்லாம் டீடெய்லா சொல்றேன்"
"ஓகே. ஆனாலும் இப்போ திடீர்னு வரமாட்டேன்னு சொல்றான்னு"
"அவன் அம்மாக்கு நெஞ்சி வலின்னு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்களாம்."
"ஐயோ!"
"ஷாக்கல்லாம் வேணாம்" அவன் சிரிக்க
"ஏன் சிரிக்கறீங்க?"
"இது நெஞ்சி வலியில்லை, பிரெஸ்டிஜ் வலி, சென்டிமென்டல் பாம் எப்படி வேணுனாலும் வெச்சுக்கலாம்."
விவியனுக்கு இப்போது சிரிக்கவா இல்லை வருத்தப்படவான்னு புரியல. திருதிருவென விழிக்க,
"நீங்க அதுக்கு என்ன பண்ண போறீங்க இப்போ?"
"அதுதான் தெரியில. மச்சான் எதாவது பண்ணுடானு சொல்றான். நான் என்ன பண்ண முடியும் சொல்லுங். நண்பனா கூடவே இருந்தா எல்லோரும் சந்தானமாவே நம்மள வெச்சிக்க பாக்கறானுக. எவனும் நமக்கு சந்தானமா இருக்க மாட்டானுங்க"அவன் அலுத்துக்கொள்ள,
"புரியல?"
"ஹ்ம்ம், இவனுங்களுக்கு ஒண்ணுன்னா என்னைத்தான் முதல்ல நோண்டுவானுக. ஆனா எனக்கு எதாவதுனா ஒரு நாய் வராது, துவாராவைத் தவிர... நம்மள கையாளாவே தான் பாப்பானுங்க"
இப்போ விவியன் சிரிக்க, "என்ன பண்றது?"
"அதுக்கும் கைவசம் ஒரு வழி இருக்கு, இப்போ பாருங்க"
அவன் உடனே தியாவின் அண்ணனுக்கு கால் செய்தான். (ஏற்கனவே நிறைய பேரு இருக்குனு எல்லோரும் கன்பூஸ் ஆகறீங்க சோ நோ நேம் . தியா அண்ணா அவ்வளவு தான்)
அவர் கொஞ்சம் பதட்டப்பட, "அண்ணா நான் விவான் பேசுறேன்."
"சொல்லு டா"
"அம்மாக்கு இப்போ எப்படி இருக்கு?"
"உள்ள பார்க்கறாங்க டா..."
"அண்ணா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றவன் எல்லாவற்றையும் சொன்னான். ஏனெனில் அவன் அம்மா நடிப்பது அவருக்குத் தெரியாது.
"டேய் விளையாடாத"
"அண்ணா சீரியஸ்"
.........
"ஓகே, நீங்க வேணுனா உங்க அம்மா கிட்ட போய் நான் சொல்றதைச் சொல்லுங்க. அம்மா அம்மா இந்தமாதிரி விவான் வைப் நித்யாவோட மாமா ஒருத்தர் பெரிய கார்டியோலாஜிஸ்ட் ஆம . வாங்க உடனே பார்ப்போம்னு. அப்போ புரியும்"
நம்பாதவர், அவனை லயினிலே இருக்கச் சொல்லி அவர் அன்னையிடம் சென்று அனைத்தையும் சொல்ல, திருதிருவென விழித்தவர், "எப்பா எனக்கு இப்போ கொஞ்சம் தேவலையா தோணுது. வேணுனா திரும்ப எப்பயாவது வந்தா போய் பாப்போம்" என்றார்.
"இல்லம்மா, அதெல்லாம் ஒன்னும் வேணாம். தியா அவங்ககிட்ட அப்பொய்ண்ட் மென்ட் வாப்பிகிட்டானாம். போன உடனே ஆப்ரேசன் செஞ்சிடலாம்னு..."
"என்னது ஆப்ரேஷனா?"
"ஆமா அம்மா. இப்படி ஏதாவது அடிக்கடி வலிச்சா ஹார்ட்ல ஏதோ கோலாராம். அதை சரிபண்ண நெஞ்சைச் கிழிச்சி, உள்ள ஒரு பேஸ் மேக்கர் ஒரு கருவியை வெச்சி அதை தெச்சி அப்புறோம்..."
"டேய் டேய் போதும் டா. இது என் உடம்பு. ஒன்னும் பழைய துணியில்ல, கிழித்து தெக்க"
"இல்லம்மா ஒன்னும் பயப்படாத, அப்படியும் சரி ஆகலைனா ஹார்ட்டையே வெளிய எடுத்து"
"டேய் மகனே செத்துடுவேன்டா"
"இல்லமா நீ ஒன்னும் பயப்படாத சிவாஜி படத்துல தலைவருக்கு நின்ன ஹார்டெய்யே ஓட வெச்சிடுவாங்க நீ என்னன்னா"
உடனே எழுந்து அமர்ந்தவர்," நீ வா நாம வீட்டுக்குப் போவோம்"
"அம்மா நீ படுமா. பயப்படாத ஒரு ஊசி போட்டா நீ மயங்கிடுவ அப்புறோம்..."
அவர் தலைதெறித்து ஓடி வெளியே வர, இங்கே அவர்களின் உரையாடல்களை விவானும் விவியனும் கூடவே கான்பேரென்சில் தியாவும் கேட்டு சிரிக்க, தியா அண்ணனுக்கு தான் சிரிப்பைக் காட்டிலும் கோவம் அதிகம் வந்தது. பின்னே அவர் இதுநாள் வரை இதை உண்மையென்று அல்லவா நினைத்திருந்தார். அதும் தந்தையில்லாமல் தனியே இருக்கும் தாயை பத்திரமாக பார்த்துக்கொள்ளுவருக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்த கடும் சினம் கொண்டு இருந்தார்.
"டேய் உனக்கு எப்படி இது தெரியும்?"
"அதுதான் சொன்னேனே"
"தியாவுக்கும் தெரியுமா இது?"
"ஆமாணா"
"இன்னைக்கு இருக்கு என் அம்மாக்கு"
"ஐயோ அண்ணா வேணாம் ப்ளீஸ்"
"என்னடா வேணாம்? நானே ஆபிஸ் முடிஞ்சி டென்ஷனுல வீட்டுக்கு வந்தா இப்படி நாடகமாடி..."
"சரி விடுங்கண்ணா வயசானவங்க ஏதோ புத்திகெட்டு"
"அதெப்படி டா விடமுடியும்? அப்படி நாடகமாடும் அளவுக்கு என்ன அவசியம்?"
அது என்றவன் உடனே தியாவை காலிலிருந்து கழட்டிவிட்டு மேலோட்டமாய் சொன்னான்.
"இதுதானா? நானே இதுக்கொரு முடிவு கட்டுறேன்"
"ஐயோ அண்ணா அதுல ஒரு சிக்கல்"
"என்னடா?"
"அவன் மீண்டும் சொல்ல"
"அப்போ இது எப்படிடா சரி பண்ண?"
"பண்றோம்"
சரி என்று அவர் கால் கட்செய்ய, விவானும் விவியனும் சிரித்துக்கொண்டனர்.
"அப்போ மிருவும் துவாராவும் காதலிக்கலையா?" என்றான் விவி
"என்ன சொல்றீங்க?"
"இல்ல ரெண்டு பேரும் ரொம்ப க்ளோசா..."
"அவங்களுக்குள்ளையும் காதல் இருந்தது."
"இருந்தது?"
"ஆமா இருந்தது. இப்போ இல்ல."
"புரியல?'
"அப்புறோம் சொல்றேன்"
மீண்டும் விவான் ஆழ்ந்த யோசனைக்கு செல்ல, "என்னாச்சி ப்ரோ வாங்க போலாம்"
அவர்கள் மட்டும் தனியாக சென்று விட்டு மீண்டும் ஹோட்டல் உள்ளே வந்தனர். அங்கே ஹேமந்த், மௌனி, நித்யா, மிரு, துவாரா, செபாஸ்டின் ஆகியோர் சாப்பிட்டு முடித்துவிட்டு நடுவில் இளவேனிலை அமரவைத்து அவளிடம் கொஞ்சிக்கொண்டிருந்தனர்.
பேசிக்கொண்டிருக்க உள்ளே விவான் வருவதைக்கண்டவள், "ப்பா ப்பா" என்று கைகளைத்தூக்கி தன்னை தூக்கிக்கொள்ளுமாறு சைகை செய்தவளை வாஞ்சையோடு அள்ளி, முடியினை ஒதுக்கி முத்தம் வைத்தவன், "மம்மம் சாப்பிட்டீங்களா டா அம்மு? அம்மா கொடுத்தாங்களா இல்லை வழக்கம் போலவே அவங்க வாயிலே திணிச்சிக்கிட்டாங்களா?"
"ஹ்ம்ம் என்று அவள் தலையாட்ட , விவானைக் கிள்ளினாள் நித்யா, மற்றவர்கள் பெருஞ்சிரிப்பு சிரித்தனர்.
அவர்கள் அங்கு பேசிக்கொண்டிருக்க திடீரென சிந்தையில் தோன்றியவனாய், "டேய் இளங்கோ - பாரு என்ன இன்னும் காணோம்?" - செபாஸ்டின்
"ஆமா இந்த டென்ஷனுல அதை மறந்துட்டோம்" - நித்யா
"சரி இருங்க அவனுக்கு கால் செய்வோம்" - ஹேமந்த் அவனுக்கு காலும் செய்தான்.
"மச்சான் வந்துட்டே இருக்கோம் டா. இன்னும் 5 மினிட்ஸ் ல இருப்போம்"
"சரி டா. ஒன்னும் அவசரம் இல்ல. பார்த்து மெதுவாவே கூட்டிட்டு வா."
"ஹ்ம்ம்"
"சாப்டிங்களா?"
"இல்ல அவ ட்ரெயின் ஏறி சாப்பிடுறேனு சொன்னா அதுதான்..."
"சரி அப்போ வாங்கி வெச்சுடுறோம் ஓகே வா?"
"மச்சி பேன்ட்ரில வாங்கிக்கலாம் டா"
"நாங்க வெளிய ஹோட்டல்ல தான் இருக்கோம். சோ நோ ப்ரோப்லேம்."
"ஓகே. இட்லி இருந்தா பாரு. இல்லனா இடியாப்பம். அதுதான் அவளுக்கு நைட் செட் ஆகும்"
"ஓகே ஓகே. இடியப்பம் வாங்கிடுறோம். உனக்கு?"
"பரோட்டா,"அதற்குள் அவனை கிள்ளியிருந்தாள் பாரு (பார்வதி)
"ஆஹ்"
"என்னடா?"
"பாரு கிள்ளறறா"
"ஹா ஹா ஹா, சரி சட்டுபுட்டுனு கேபினெட்ல ஒரு டிசசென் எடுங்க. டைம் ஆகுது."
அதற்குள் போனை பிடுங்கியவள், "ஒழுங்கா இடியப்பாமே வாங்கி வைங்க"
"ஓகே. சிஎம் ஒரு முடிவு எடுத்துடீங்க"
"நோ சிஎம். பிஎம் ஆக்கும் நான்"
"ஓ அப்போ புருஷங்க எல்லாம் ப்ரெசிடெண்ட் மாதிரி. சும்மா பெயருக்கு தான் தலைவர். ஆனா முக்கிய முடிவுகளை எல்லாம் பொண்டாட்டிங்க தான் எடுப்பீங்கனு சொல்லு..."
"ஆமா ஆமா... நாளைக்கு மௌனிகா கூட இப்படி தான் இருப்பா"
"அடிப்பாவி. உங்களையெல்லாம் நல்லவங்கனு நம்பி அவளை இங்க கூட்டிட்டு வந்தது தப்பா போச்சே, இங்க என்னடா நா ஒருத்தி சாபம் தரா, நீ வேறயா?"
"நித்யாக்காவா?"
"வேற யாரு அவளே தான்"
"ஹா ஹா ஹா அப்போ நானும் சீக்கிரம் வரேன். இந்த டூர் முடியறதுக்குள்ள மௌனியையும் எங்க அளவுக்கு ட்ரெயின் பண்ணிடுறோம்"
"ஆஹ். அப்போ நானும் விவான், இளங்கோ கிட்ட ட்ரைனிங் எடுத்துடா வேண்டியது தான், எப்படி உங்க கிட்ட இருந்து தப்பிக்கறதுனு"
"மச்சான் இது ஒரு வழிப் பாதை. தப்பிக்க வழியே இல்ல. அது தெரியாம தானே நாங்களே திண்டாடுறோம்" என்று இடையில் இளங்கோ சொல்ல,
"ஹா ஹா ஹா சரியாய் சொன்ன டா இளங்கோ"- விவான்
"வை பிளட் சேம் பிளட்" - இளங்கோ
"டேய் இன்னும் கல்யாணமே ஆகல அதுக்குள்ள நல்லா கிளப்பறீங்க டா பீதியை"- ஹேமந்த்
"ஆரம்பத்துல கொஞ்சம் பயமா தான் இருக்கும். போக போக..."
"சரியாகிடுமா?"- ஹேமந்த்
"இல்ல மச்சான். பழகிடும்னு சொல்ல வந்தேன்"
உடனே போனை மகளிர் அணி தலைவி நித்யா கைப்பற்ற, "என்ன பாரு கொஞ்சம் ஓவரா தான் போறாங்க?"
"ஆமா நித்யாக்கா பயம் போயிடுச்சினு நெனக்கிறேன்"
"ஹா ஹா ஹா அப்போ பயம் காட்டிட வேண்டியது தான். என்ன சொல்ற?"
"ஐ யம் ரெடி"
"நீ ஒர்ரி பண்ணாத மௌனி. நாங்க இருக்கோம்" என்று பாரு நித்து இருவரும் கோரஸாக சொல்ல
ஆண்களும் சிரித்து வைக்க அந்த இடமே கொஞ்சம் கலகலவென மாறியிருந்தது.
ஆனால் செபாஸ்டின் தான் இந்த உரையாடல்களை எல்லாம் கேட்டு கொஞ்சம் ஏக்கம் வருத்தம் எல்லாம் கொண்டான். அவன் எழுந்து ஹேமந்தைப் பார்த்து, "மச்சான் வா டா கொஞ்ஜம் வெளிய போயிட்டு வரலாம்
ஹேமந்த் முழிக்க , பின்னால் நின்றுக்கொண்டிருந்த விவான், துவாரா இருவரும் தலையசைக்க அவர்கள் சென்றனர்.
நித்துவும் மிருவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, மௌனி தான் புரியாமல் விழிக்க
"இவன் ஏன்டா இப்படி இருக்கான்?" - நித்யா
"தெரியலையே என்பது போல் துவாரா உதட்டை பிதுக்க"
"அவ வரா தானே?"- மிரு
"ஆமா. அப்படி தான் சொன்னதா நீ தானே டி சொன்ன, இப்போ இப்படி கேட்குற?"
"இல்ல அப்படி தான் அவ கொலீக் என்கிட்ட சொன்னாங்க"
"வருவா பாப்போம்"
"என்னவோ போ. இதுக்குத்தான் கல்யாணமே பண்ணிக்க கூடாது" என்று துவாரா சொல்ல
இதுவே வேறு யாராவது சொல்லியிருந்தால் இந்நேரம் நித்யா குதுகுதியென குதித்திருப்பாள். ஆனால் இப்போது அவளால் எதுவும் பேச முடியவில்லை. இந்த வார்த்தை துவாராவின் வாயிலிருந்து வருமென அவள் எதிர் பார்க்கவில்லை. அவள் மட்டுமா சுற்றியிருந்த மற்றவர்களில் இருவரைத் தவிர எல்லோரும் அதிர்ந்தனர். விவான், விவியன் இருவரும் இதற்கு ஆச்சரியமோ அதிர்ச்சியோ ஆகவில்லை. பின்னே அவர்ளுக்கு தான் தெரியுமே இவனைப் பற்றி?
விவான் விவியன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
அந்த மௌனத்தைக் கலைக்கும் விதமாய், இளவேனில் சப்தமிட அதற்குள் துவாராவே அவளை சமாதானம் செய்ய வெளியே தூக்கிக்கொண்டு வந்துவிட்டான்.
"இவன் என்னடா இப்படி பேசுறான்?" - நித்யா
உடனே எல்லோருடைய பார்வையும் மிருவின் புறம் திரும்பியது. மிருக்கு தான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முழித்தாள். அது மட்டும் நிச்சயம்.
"சரி அந்த உதவாக்கரை எங்க இன்னும் காணோம்?"- நித்யா தான்.
"யாரு?"- மௌனி
"வேறயாரு ஒன் அண்ட் ஒன்லி மிஸ்டர் ஜிட்டேந்தரா தான் இருக்கும்" விவான்
எல்லோரும் கோரஸாய் சிரித்தனர்.
............................
அங்கே ரேஷா, ஜெசிந்தா, பெனாசிர், இஸ்மாயில் நால்வரும் ஒன்றாக சாப்பிட சென்றனர்.
"இந்த லோகேஷ் ஏன் இப்படி பன்றான்?"
"அப்போ அனேஷியா பண்றது மட்டும் நியாயமா?" என்று ரேஷா சொல்ல உடனே நால்வரும் பின்னால் திரும்பி பார்த்துக்கொண்டனர்.
"ஏய் ஏன் இப்படி பயப்படுறீங்க? அவளுக்கென்ன நம்ம வயசு தானே?"- ரேஷா
"இருந்தாலும் நம்மள விட சுப்பீரியர்" - பெனாசிர் .
"அந்த மாதிரியா நடந்துக்கறாங்க அவங்க?"
எல்லோரும் மௌனமாகினர்.
"பாவம் லோகேஷ் அண்ணா" - ஜெசிந்தா
"இவங்க ஏன் இப்படி பண்றாங்க? அப்படியென்ன லோகேஷ் மேல வெறுப்பு?" பெனாசிர்
"தெரியலையே" - இஸ்மாயில்
"எல்லா விதத்துலையும் நான் இவங்கள அட்மைர் பண்றேன். ஆனா இப்படி லோகேஷ் அண்ணா விஷயத்துல மட்டும் இப்படி நடந்துக்குறது தான் எனக்கு ஒரு மாதிரி இருக்கு" - ரேஷா.
"பாவம் அவன்"
"விடுங்க வாங்க சாப்பிட்டுப் போலாம்"
எல்லோரும் ஒன்றாக சாப்பிட அமர ஏதேதோ எல்லோரும் பேசிக்கொண்டிருக்க, ஜெசிந்தா மட்டும் யாரிடமும் ஒட்டாமல் ஒரு மாதிரி இருந்தாள்.
"ஜெசி ஜெசி..."
"ஆம்"
"என்ன சாப்பிடவே இல்ல?"
"ஆம் சாப்பிடணும்"
பெனாசிர் தான் ஓரளவுக்குத் தெரிந்தவள் என்பதால், "ஜெசி ப்ளீஸ் சாப்பிடு டி.நீயும் இப்படி இருக்காத?"
ஏனோ அவளுக்கு ஏதோ செய்ய சாப்பிட்டாள்.ஆனால் நினைவுகள் எல்லாம் செபாஸ்டின் மீதும் இன்று காலை நடந்தது மீதும் தான் இருந்தது.
இன்று மட்டுமா? இதுவரை அவள் வாழ்வில் நடந்த அனைத்தின் மீதும்...
எல்லோரும் கொஞ்சம் சாப்பிட்டு நிறைய மௌனம் காத்து மீண்டும் செல்ல,
"இந்த பயணம் இப்போ அவசியம் தானா?" - ரேஷா
"ஹேய் என்னடி இது. இன்னும் ஆரமிக்கவே இல்லை. அதுக்குள்ள இப்படி அபசகுனமா பேசுற?"
"இல்ல. கொஞ்சம் யோசிச்சிப் பாரேன். ஒரு பயணம் என்னதான் அபிசியலா இருந்தாலும், கொஞ்சமாச்சும் ஹாப்பியா இருக்கனும். ஆனா இங்க?"
எல்லோருக்கும் அதே நிலை தான்...
என்ன ஆக போகுதோ என்று எல்லோரும் உள்ளே அனேஷியாவிடம் வந்தனர்.
...............................
வெளியேறிய ஹேமந்த் செபாஸ்டின் இருவரும் நிறைய மௌனங்களுடனே சென்று அமர்ந்தனர்.
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
நீண்ட மௌனம்.
செபாவின் கண்கள் மட்டும் கலங்கியிருந்தது.
எதேர்ச்சியாக திரும்பிய ஹேமந்த் அதை கவனித்து விட்டான். அவனுக்கும் செபா அழுவது என்னவோ செய்தது. இருந்தும் கண்டும் காணாமல் அமர்ந்திருந்தான்.(பயணங்கள் முடிவதில்லை...)
 
ஹப்பா...இப்பதான்...யார்,யாரோட pair னு கொஞ்சம் பரியுது..;)
 
Top