Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-41

praveenraj

Well-known member
Member
திபுதிபுவென்று அந்த ரயிலில் விவான் ஓட ஏனோ அதில் பயணித்துக்கொண்டு இருந்த எல்லோரும் ஒருகணம் அதிர்ச்சியாகி அவனைப் பார்க்க, அவனைத் தொடர்ந்து ஜிட்டுவும் ஓட பின்னாலே இளங்கோ,துஷி,செபா,ஹேமா,தியா,விவி என்று பாய்ஸும் ஓட அவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் மௌனி, சித்தாரா ஆகியோரும் ஓட, அங்கே பயணித்தவர்கள் எல்லோரின் முகத்திலும் ஒரு அசௌகிரியத்தைக் காட்டிலும் ஒரு மென் புன்னகை தவழ்ந்தது நிச்சயம். முன்னாலே வந்த மிரு மட்டும் அங்கே சரித்திராவின் தாத்தாவின் மடியில் அமர்ந்திருந்த இளவேனிலைப் பார்த்து அங்கேயே அமர்ந்து விட்டாள். ஆனால் அவளுக்கும் இப்படி எல்லோரும் ஓடுவது ஒரு சிரிப்பைத் தந்தது. இளவேனிலுக்கோ தன் தந்தையை எல்லோரும் துரத்திக்கொண்டு ஓடுவதைப் போல் தோன்ற அவளோ சிணுங்கி,"அப்பா அப்பா" என்று சொல்ல மிரு அவளைத் தூக்கிக்கொண்டு நித்யாவின் கம்பார்ட்மென்டுக்கு வந்தாள்.
'கடவுளே காற்றாற்று வெள்ளம் போல கண்ணை மூடிட்டு ஓடிட்டு இருக்கேன், குறுக்க யாரும் வரமா நீதான் தாயே காப்பாத்தணும்' என்று விவான் ஓட அங்கே நித்யாவின் கம்பார்ட்மெண்டில் வழியை மறைத்துக்கொண்டு நின்ற அனேஷியாவை மோதப் போனவன் லாவகமாக அருகே அமர, கல்யாணம் ஆகி வேலை அதுவிதன்று மாறி எடை போட்டு ஓடமுடியாமல் இழப்பு எடுக்க மூச்சை ஆழமாக விட்டான். இதி, பாரு நித்யா மூவரும் என்னவென்று பயந்தபடிப் பார்க்க பின்னாலே,"டேய் விவானு நீ எங்கப் போனாலும் உன்ன விடமாட்டேன்டா" என்று சவுண்ட் கொடுத்துக் கொண்டே வந்தான் ஜிட்டு. ஏனோ அவனுக்கும் தொப்பை எல்லாம் போட்டுவிட்டதால் ஓடமுடியாமல் அங்கேயே அமர்ந்தான்.
இவர்களின் நடவடிக்கையைப் பார்த்து புரியாமல் விழித்தப் பெண்கள்,"டேய் என்னடா நடக்குது இங்க? ரன்னிங் ரேஸ் விளையாடுற இடமாடா இது?" என்று ஜிட்டுவைத் திட்டினாள் நித்யா.
அவ்வளவு மூச்சி வாங்கியும் தம் பிடித்து,"ஏய் நானா ஓடுனேன்? எல்லாம் உன் புருஷனால தான். அவனை..." என்று முறைத்தான் ஜிட்டு. அதற்குள் பின்னாலே வரிசையாக எல்லோரும் மூச்சு வாங்க ஓடிவர அதில் சித்துவும் மௌனியும் கூட இருக்க,"என்ன நடக்குது இங்க? என்னங்கடா இப்படி பிஹேவ் பண்றீங்க? பேசேஞ்சர்ஸ் யாராவது கம்பளைண்ட் பண்ணா என்ன ஆகுறது?" என்று நித்யா கேட்டதும் மூச்சிரைக்க இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தனர்.
"செமடா மச்சான். இப்போ தான் இந்த டூரே களைகட்டியிருக்கு. காலேஜ் படிக்கும் வரைக்கும் தான் எந்த கவலையும் ரெஸ்பான்சிபிலிட்டியும் இல்லமா ஜாலியா இருந்தோம். இப்போ பாரு வேலை, டார்கெட்ஸ், லோன், இ எம் ஐ, காதல், கல்யாணம், குழந்தை அப்பப்பா எவ்வளவு? இந்த மாதிரி ஜாலியா இடம்,பொருள், ஏவல் மறந்து ஒருத்தனை ஒருத்தன் கலாய்ச்சு ட்ரைனுக்கு கூட மறந்து இதுல நூற்றுக்கணக்கான மக்கள் பயணிக்கிறாங்க என்பதையும் மறந்து, அப்பாடா" என்று மூச்சி வாங்கியபடியே பேசினான் இளங்கோ.
"சரியா சொன்னடா அடிகளே" என்றான் ஹேமா.
"நீங்க சொல்றதைப் பார்த்தா லைப் தெளிந்த நீரோடை மாதிரி ஓடாம ஒரு குட்டை மாதிரி ஒரே இடத்துல நிக்கனும்னு சொல்லுவீங்கப் போல?" என்றாள் இதித்ரி.
"அப்படியில்ல இதி. ஓகே லெட்ஸ் டாக். எல்லோரும் அப்படியே உட்காருங்க. டேய் ஜிட்டு நீ இருக்கும் இடம் எப்பயும் கலகலன்னு தான் இருக்கும். இருந்தும் உன்னால உன் ஆபிஸ்ல என்னைக்காவது யாரவது சிரித்து இருக்காங்களா?" என்றான் இளங்கோ.
"இல்லடா. அங்க ஆபிஸ்ல ஜிட்டு இல்ல ஜிட்டேந்திரன் மேனேஜர். யூ நோ வாட் அங்க நான் ஓரளவுக்குச் சிரித்துப் பேசுவேன்னு எல்லோருக்கும் தெரியும் அதே நேரம் நான் ஒரு டெர்ரர் பீஸ், ஸ்ட்ரிக்ட் மேனேஜர்னு தான் எல்லோருக்கும் நினைப்பாங்க. என்ன வரப்போற கஷ்டமெர்ஸ் கூட என்ன மரியாதையா டெர்ரரா தான் பார்க்கறாங்க. எனக்கும் கூட சின்ன பயம் நாம கொஞ்சம் சிரித்துப் பேசிட்டா என்னைய சிக்கல்ல மாட்டிவிட்டுடுவாங்களோனு பயம். இருந்தும் நான் ஜாலியா தான் இருப்பேன். ஆனா இப்போ உங்க கூட இருக்குறதுல வெறும் 20 % தான்..."
இதை ஹேமா, தியா நம்ப தயாராக இல்லை என்றாலும் மற்றவர்கள் நம்பினார்கள். "கரெக்ட்டா, உண்மை நான் சொன்ன பாயிண்டுக்கு வந்துட்ட. எல்லோரு கூடவும் நாம சிரிச்சுப் பேசலாம் ஆனா நாம் நாமளா இருக்குறது ரொம்ப சில பேருக்கு முன்னால தான்டா. ஏதோ ஒரு காரணம். நீ இவ்வளவு ஜாலினு தெரிஞ்சா நாளைக்கு உன் தலையில எவனாவது மிளகாய் அரைச்சிட்டுப் போயிடுவான் கரெக்ட் தான்"
"நீ சொல்லு நித்யா, உனக்கு ஒரு ட்ரைனிங் டாக்டரா இருந்த காலமும் இன்னைக்கு ஒரு வைஃப்பா, மருமகளா, அம்மாவா இருக்கு காலமும் எப்படி இருக்கு?"
"உண்மை தான். அது சம் குட் ஓல்ட் டேஸ். என்ன தான் அம்மாவும் அப்பாவும் (விவானின் பெற்றோர்கள்) என்ன நல்லா பார்த்துக்கிட்டாலும், லைஃப் அப்படியே இல்ல தானே? நிறைய மாற்றங்கள். இந்த ஆறு ஏழு வருஷம் நான் நிறைய மாறியிருக்கேன். ஆனா இப்போ இந்த ரெண்டு நாள் ட்ராவெல்ல என்னமோ நான் இழந்ததா நினைக்கும் அந்த ஒரு... எப்படிச் சொல்ல நாஸ்டால்ஜிக் (பழைய ஞாபகங்கள்) திரும்ப உணருறேன், எனிஹவ் ஐ லவ் மை லைஃப்" என்று சொன்னவள் விவானைப் பார்த்தாள்.
"இது தான். இதைத் தான் சொல்ல வந்தேன். இது எப்படிப்பட்ட ட்ராவல் தெரியுமா? ரன்னிங் ரேஸ்ல எல்லோரும் ரொம்ப தூரம் ஓடிட்டு அப்படியே ஒரு இடத்துல நின்னு நாம வந்த பாதையை ஒருமுறை திரும்பிப் பார்க்கறதுக்கு சமம். அப்போதான் நமக்கு,'ஓ இதையெல்லாம் கடந்து வந்திருக்கோமா? ஓ இந்த இடத்துல சறுக்கி இருக்கோமா? ஏன் இந்த இடத்துல விழுந்தோம் என்ன காரணம்? எவ்வளவு நேரம் கழிச்சு எழுந்தோம்னு எல்லாம் இப்படி ரியலைஸ் பண்ணனும். இதைப் பண்ணா தான் இனி மேல் திரும்ப ஓடும் போது முன்னாடி பண்ணத் தப்பை திரும்பப் பண்ணாம தப்பிக்க முடியும்"
"கரெக்ட் மச்சான். எல்லோரும் தப்பு பண்ணியிருக்கோம். சிலது தெரிஞ்சு, பலது தெரியாம. நாம கடந்து வந்த பாதையை ஒருமுறை பார்க்கணும். இந்த ஏழு வருஷம் நம்ம லைஃப்ல நடந்த சில விஷயங்கள் அதை மறக்க முடியாம இருப்போமில்ல? அப்படி ஏதாவது ஒரு இன்சிடெண்ட்டை எல்லோரும் ஷேர் பண்ணுங்க. அதாவது அதை நான் செஞ்சியிருக்கக் கூடாதுனு நினைக்கும் மாதிரியானது..."
"சூப்பர்டா. சில சொல்லப்படாத பக்கங்களை இப்போ ஷேர் பண்ணலாம். அதை அதாவது அந்த தப்பை இப்போ எப்படியாவது சரி பண்ண முடியுமாங்கற மாதிரி ஏதாவது..."
எல்லோரும் யோசனையில் மூழ்கினர். அதாவது அப்படி ஒரு சம்பவம் எல்லோரின் வாழ்விலும் நிச்சயம் இருந்தது. பின்னாலே யாழும் வந்தாள்.
யார் ஆரமிப்பது என்று தெரியாமல் இருக்க சித்தாரா தான் ஆரமித்திருந்தாள். அவள் கதை ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரிந்திருந்தது."லைஃப்ல சில முடிவுகளை ஒண்ணுக்கு நூறு முறை யோசித்து எடுக்கணும். அவசரத்துலயும் இல்ல அந்த மொமெண்ட் நமக்கு தர சந்தோசத்துலையும் எந்த முடிவும் எடுக்கக் கூடாது. எஸ் நாம சந்தோசமா இருக்கும் போது எந்த வாக்கும் இல்ல எந்த முடிவும் எடுத்திடக் கூடாதுனு நான் நிறைய படித்திருக்கேன். என் கல்யாண முடிவை நான் அன்னைக்கு ராஜீவ் சொன்ன விஷயத்த எதையுமே யோசிக்காம நான் எடுத்திட்டேன். அஃப் கோர்ஸ் எனக்கு அவனைப் பிடிச்சு இருந்தது தான். ஆனா பிடிச்சதைக் காட்டிலும் இது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகுங்கறதை யோசிக்காம எடுத்துட்டேன். லைஃப்ல ஒரு முக்கியமான முடிவு எடுக்கும் போது ஒண்ணுக்கு ரெண்டு முறை யோசிங்க. எல்லா சினேரியோவும் அவசியம். காதலிச்சது தப்பில்லை, ஆனா தவறான ஆளை காதலிச்சது தான் தப்பு. நான் இன்னும் இந்த சறுக்கல்ல இருந்து முழுசா எழல. ஐ யம் ட்ரையிங்"
"குட். நானும் இதே மாதிரி தான் ஆனா தவறான ஜட்ஜ்மென்டுக்கு வந்துட்டேன். மௌனியை அன்னைக்கு அப்படிச் சொன்னதும் என் அம்மா என்ன அடிக்கும் வரை நான் பண்ணது தப்புன்னே எனக்குத் தெரியில. ஆனா அந்த மொமெண்ட்ல தான் உணர்தேன் என் வார்த்தை எவ்வளவு ஷார்ப்புனு. அது அவளை எவ்வளவு குத்தியிருக்கும்னு ஃபீல் பண்ணேன்"
"கரெக்ட் ஹேமா. நானும் அவசரப்பட்டு சில வார்த்தைகளைப் பேசியிருக்கேன். விவான் உனக்கு ஞாபகம் இருக்கா? அன்னைக்கு நைட் நான் கேட்ட ஒரு கேள்வி, அது உன்ன எப்படி பாதிச்சதுனு நீ அப்பறோம் என்னை அவாய்ட் பண்ண அப்போ தான் புரிஞ்சது. ஐ ரிக்ரெட் (வருத்தம்) பார் தட்" என்றாள் நித்யா.
"என் பிரான்ச்ல ஒருத்தர . ரொம்ப பழக்கம் தான். என்ன நினைத்தாரோ தெரியில திடீர்னு வந்து பாலிசி எடுத்தாரு. நானும் அவர்கிட்ட பலமுறை கேட்டு இருக்கேன். அப்போல்லாம் மறுத்தவர் திடீர்னு அன்னைக்கு வந்து பாலிசி எடுக்குறாரு. யூ நோ வாட் நீங்க சொன்னா நம்ப மாட்டிங்க, அடுத்த ஒருவாரத்துல அவர் இறந்துட்டாரு. ஐந்து லட்சத்துக்கு பாலிசி. அவர் ஹெல்த்தியா தான் இருந்தாரு. எனக்கு இன்னைக்கு வரை அந்த சம்பவம் மனசுல அப்படியே இருக்கும். ஒருத்தருக்கு தான் சாகப்போறோம்னு எப்படியோ தெரிந்து இருக்கு. இத்தனைக்கும் அவர் ஹெல்த்தி ஆன பெர்சன். அவரோட அந்த இன்டியூசன் எனக்கு இப்போ நினைச்சாலும் பிரமிப்பு. அவரு என் வாழ்க்கையிலே மறக்க முடியாத ஒரு பாலிசி ஹோல்டர்" என்று ஜிட்டு சொல்ல எல்லோரும் அமைதியாக இருந்தனர்.
செபா ஆரமித்தான்,"நம்ம லைப்ல சிலர் திடீர்னு வருவாங்க. அவங்களை நமக்கு பிடிக்காம கூட இருக்கும். ஏன்டா இவங்க நம்ம லைப்ல வந்தாங்கனு தோணும். ஆனா உண்மையிலே அவங்க நம்ம வாழ்க்கையை மாற்ற தான் வந்தாங்கனு புரியாம அவங்களை நாம ரொம்ப ஹர்ட் பண்ணிடுவோம். நீங்க எல்லோரும் பேசுனதை இப்படி ஆகிடுச்சேன்னு குறை சொன்னீங்க. ஆனா நான் பேசாததை நினைத்து ஃபீல் பண்றேன். எனக்கு அவளைப் பார்த்ததும் பிடிச்சது. நான் எதிர்பார்த்த மாதிரி தான் அவ இருக்கனும் நினைக்க அவ அப்படி இல்லாம போனது எனக்குப் பிடிக்கல. எனக்கு ரெண்டு முடிவுகள். ஒன்னு அவ எனக்கு வேணும், இன்னொன்னு அவ எனக்கு வேணா. சில முடிவுகளை நாம எதிர்பார்த்திருக்க மாட்டோம். என்னால முடியில. ஐ மிஸ் ஹெர். சில ஆர்க்குமெண்ட்ஸ் அப்படி நடந்திருக்கக் கூடாது. சில கான்வெர்சேஷன்ஸ் அப்படி இருந்திருக்கக் கூடாது. நான் அவளை அன்னைக்கு முதல மீட் பண்ணப் போன சூழ்நிலை அப்படி அமைத்திருக்கக் கூடாது. நான் அவளுக்கு முன்னாடி அந்த ரெஸ்டாரெண்ட் வந்திருக்கணும். நான் அன்னைக்குப் பேசியிருக்கணும். யா ஆப்பர்சூனிட்டிஸ் நெவெர் நாக் டுவைஸ். (வாய்ப்புகள் இரண்டாவது முறை கிடைக்காது) என் பிரச்சனையைச் சொல்லியிருக்கணும். நான் எங்களுக்குள்ள விழுந்க கேப்பை ஃபில் பண்ண ஸ்டெப்ஸ் எடுத்திருக்கணும். சாத்தானா தேவதையானு தெரியாத பரிசை நான் தேவதையா இருக்கும்னு நெனச்சி திறந்திருக்கனும். எங்க சாத்தானா இருக்குமோனு நெனச்சி திறந்ததன் விளைவு..."
செபா இப்படி பேசுவான்னு சிலரைத் தவிர யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த சிலரும் கூட அவன் இவ்வளவு உணர்ச்சி வசப்படுவானு எதிர்பாக்கவில்லை.
என்ன பேசுவதென்று யாருக்கும் புரியாமல் இருக்க ஹேமா ஆரமித்தான்,"ஓகே மச்சி சப்போஸ் உனக்கு ரெண்டாவது வாய்ப்பு கிடைச்சா என்ன பண்ணுவ?"
செபா புரியாமல் விழிக்க, இருந்தும் அவனுக்குள் அந்த ஆசை இருந்தது. அதேநேரம் ஆற்றாமையும் இருந்தது."அதெல்லாம் கிடைக்காது"
"கமான், ஒருவேளை ஓகே ஒரு கற்பனை செய்வோம், இன்னைக்கு தான் நீயும் ஜெஸ்ஸியும் முதல மீட் பண்ணப் போறீங்கனு வெச்சிப்போம். இப்போ இன்னும் கொஞ்ச நேரத்துல நீ ஜெஸ்ஸியைப் பார்க்கப் போகணும். நீ என்ன பண்ணுவ?"
"அவ மேல இருந்த எல்லா கற்பிதங்களையும் மறந்துட்டு அவளை மீட் பண்ணப் போயிருப்பேன்"
"சரி மீட் பண்ணி எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு சொல்லியிருப்பியா? உனக்கு தான் இந்த கல்யாணம் பிடிக்காதே ரைட்?" என்றான்,
"எனக்கு கல்யாணம் பிடிக்காதுன்னு யாரு சொன்னா? பட் எனக்கு நடந்த கல்யாணம் அந்த மாதிரி நடந்திருக்கக் கூடாது"
"ஓ அப்போ இப்போ அவளை மீட் பண்ணியிருந்தா நீ அவளுக்கு ஓகே சொல்லி ப்ரபோஸ் பண்ணியிருப்பனு சொல்லுற ரைட்?"
"பண்ணியிருப்பேன் தான். ஆனா அதெல்லாம் நடக்காதே" என்று அவன் சொல்ல,
"மச்சி நீ வாழ்க்கையில இந்த லைப் சேஞ்சிங் மொமெண்ட் பத்தி என்ன நினைக்கிற?"
"அதெல்லாம் எல்லோருக்கும் நடக்காது"
"டேய் என்னடா நீ தேவதாஸ் மாதிரி நடக்காது, கிடைக்காதுனு... பாஸிட்டிவாவே நினைக்க மாட்டியா?"
"அதற்கு அப்படியொரு மொமெண்ட் நடக்கணும்"
"ஓகே நடத்திடலாம்"
"புரியில?"
"கண்ணை மூடு"
"ஏன்"
"மூடுடா"
அவனும் கண்களை மூடினான்.
"ஓகே நீ இப்போதான் ஜெஸ்ஸியை முதன்முதலா மீட் பண்ணப் போற ரைட்? நல்லா மண்டையில ஏத்திக்கோ"
"ஓகே, விவான் அண்ணா வந்திருக்காக, மாப்பிள்ளை மொக்கைச்சாமி சாரி செபாஸ்டின் வந்திருக்காக மற்றும் நம் நலம் விரும்பிகள் எல்லாம் வந்திருக்காக வாமா மின்னல்" என்று ஹேமா சொல்ல மறுபுறமிருந்து ஜெஸ்ஸி வந்தாள். இங்கே எல்லோரும் ஆர்ப்பரிக்க,"ஓகே. கண்களைத் திறடா செபா" என்று சொல்ல திறந்தவன் முன் நின்றவளை 'கனவா? நிஜமா?' என்று புரியாமல் குழம்பினான் செபாஸ்டின். இப்போது அங்கே கூடியிருந்த நண்பர்கள் பட்டாளம் எல்லோரும் அவர்களையே அமைதியாகவும் ஆவலாகவும் பார்க்க செபாஸ்டின் இன்னும் இந்த ஆனந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்பது ஜெசி உட்பட எல்லோருக்கும் புரிந்தது. கண்களை சிமிட்டாமலே அவன் அவளைப் பார்த்துக்கொண்டு இருக்க அவள் முகத்திலும் ஒரு எதிர்பார்ப்பு பயம் மகிழ்ச்சி இன்னதென்று சொல்ல முடியாத இல்லை வரையறுக்க முடியாத ஒரு உணர்வு. விட்டால் அழுதே விடுவாள் போல் நின்றாள் ஜெஸ்ஸி.
"ஜெஸ்ஸி...நீ?" என்று ஆட்காட்டி விரலை அவள் புறம் நீட்டியவன் சந்தேகமாக அவள் மூக்கைத் தொட இது பிரமை இல்லை என்று புரிந்தவன் அவள் கண்களை நோக்கினான். அதில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது ஆனால் இன்னும் அவை அவளின் இமையைத் தாண்டவில்லை. இன்னும் நம்பாதவனாய்த் திரும்ப அங்கே ஹேமா கையைக் கட்டிக்கொண்டு 'என்ன' என்பதைப் போல் புருவம் உயர்த்தினான். மீண்டும் அவன் ஜெஸ்ஸியைப் பார்க்க அவள் தான் சிலை போலவே அப்படியே நின்றதால் அவனுக்கு இன்னும் மைல்டு குழப்பம் தான்.
ஓங்கி செபாவின் முதுகில் ஒன்றை வைத்தான் ஹேமா."என்னமோ சொன்ன அவளுக்கு ப்ரொபோஸ் பண்ணவேணு? இப்படி சிலை மாதிரி நிக்கற" என்று அவன் சொன்னதும் அதிர்ச்சியிலிருந்து வெளியே வந்தவன் இது கனவல்ல என்றும் இப்படி ஒரு இரண்டாவது வாய்ப்பு நிச்சயம் கிடைக்காது என்றும் அவன் மூளைக்கு உரைக்க மறுகணமே அவளை அணைத்தவன் அவள் கன்னத்தோடு அவன் கன்னம் உரசி அவள் காதுகளில் அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய்,"ஐ யம் சாரி ஜெஸ்ஸி. நான் அன்னைக்கு அப்படிப் பேசியிருக்கக் கூடாது. எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும் என்பதையும் நான் உன்ன லவ் பண்றதையும் நான் உன்கிட்ட சொல்லியிருக்கனும்" என்றவன் ஏதோ தோன்றியவனாய் அவளை விட்டு விலகி அவள் கண்களைப் பார்த்து,"ஜெஸ்ஸி நாம நமக்குள்ள இருந்த எல்லா கோட்டையும் அழிச்சிட்டு முதல இருந்து ஸ்டார்ட் பண்ணலாமா? புதுசா? பிரெஷா?" என்று செபா கேட்க இப்படி ஒரு 'ப்ரோபோசலை' அங்கே யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏன் ஜெஸ்ஸி கூட அவன் இப்படிக் கேட்பான் என்று நினைக்காதவள், இருந்தும் அவன் இப்படி வித்தியாசமாய்க் கேட்டது அவளுக்குள் ஒரு மகிழ்ச்சியைத் தான் தந்தது. மேலும் இப்படி இத்தனை நபர்களின் எதிரில் அவன் கேட்டது அவளுக்கு வெட்கம், பரவசம் எல்லாம் தர நாணத்தில் அவள் முகம் சிவந்தது. அதைப் பொருட்படுத்தாதவன் அவளின் பதிலுக்காகக் காத்திருந்தான். "சொல்லு ஜெஸ்ஸி ஓகேவா?" என்றதும் வெட்கத்தில் அவள் தலையை மட்டும் ஆட்ட,"ஓஓஓ!" என்று ஒரு பெரிய கூவல். ஒரு கணம் அந்த டிரைனே ஒரு ஜெர்க் ஆனது (அதெப்படி ட்ரெயின் ஜெர்க் ஆகும்? இது ஒரு தற்குறிப்பேற்ற அணி. அவ்வளவே!) அப்போது வேகமாக ஜெசியை அங்கிருந்து நகர்த்தியவன் மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று அவளை இறுக்கி அணைத்திருந்தான்.
அவன் அவ்வாறு செய்ததும் ஹேமா இளங்கோ எல்லோரும் தங்கள் கம்பார்ட்மெண்டில் மறைந்து அமர்ந்தனர். யாருக்கும் 'கரடியாக' இருக்க அவர்கள் விரும்பவில்லை. "டேய் ஹேமா எப்படிடா?" என்று ஆச்சரிப்பட்டுக் கேட்டான் ஜிட்டு. ஜிட்டு மட்டுமின்றி அங்கிருக்கும் எல்லோருக்கும் ஆச்சரியம் தான். அப்போது தான் மௌனி அனைத்தையும் சொன்னாள். மௌனி-ஹேமா-விவான் என்று மூவர் போட்டத் திட்டம் என்று தெரிந்தவர்கள் உரிமையாக அவர்களிடம் நன்றி சொன்னாலும் சண்டையும் போட்டனர்."இதை எங்ககிட்டயும் சொல்லியிருக்கலாமில்ல? நாங்களும் ஹெல்ப் பண்ணியிருப்போமில்ல?" என்று கேட்க,"ஏன் இவன் (ஜிட்டு) ஒருத்தன் சொதப்புனது போதாதா?" என்று அமைதியாகக் கேட்டான் ஹேமா. "அதுவும் சரிதான்" என்று அவர்கள் சொல்ல அவர்கள் கம்பார்ட்மெண்டில் இருந்த ஒரு பெண்மணி ரெஸ்ட் ரூம் போக இந்தப் பக்கம் வர இதி தான் சமயோஜிதமாய் அந்தப்பக்கம் போகச் சொல்லவும் இவர்களை முறைத்துக்கொண்டே சென்றார் அவர்.
ஜெஸ்ஸியை இறுக்கி அணைத்திருந்தவன்,"என்னை மன்னிச்சுடு ஜெஸ்ஸி. நான் உன்ன சரியா புரிஞ்சிக்கல. ஒரு பழமொழி சொல்லுவாங்களே முதல் கோணல் முற்றும் கோணல்னு. நமக்குள்ள நடந்த ஃபர்ஸ்ட் மீட்டிங்கே எனக்கு உன்மேல ஒரு பேட் இம்ப்ரெஷன்.அதுக்கப்புறோம் எனக்குள்ள நிறைய நிறைய கன்ஃபூசன். என்னால காலம் முழுக்க என் அப்பா மாதிரியான ஒரு பர்சனாலிட்டி கூட வாழ முடியாதுனு தீர்க்கமான நம்புனேன். இருந்தும் அன்னைக்கு நீ சொன்ன அந்த வார்த்தை 'எதையும் வாழ்ந்து பாக்காம எப்படி முடிவெடுக்க முடியும்'னு நீ கேட்ட அந்த வார்த்தையை நம்பி தான் இந்த கமிட்மென்டுக்கு வந்தேன். என் அம்மா உடம்பு சரியில்லை அப்புறோம் உன் பாட்டி தவறிவிட அப்படியே வேற வேற ஷிப்ட், நான் வரும் போது நீ தூங்குவ நீ வரும் போது நான் கிளம்புவேன். சரி எங்கேயாவது வெளிய போலாம்னு நெனச்சி அன்னைக்கு கூப்பிடத்துக்கு நீ உன் ப்ராஜெக்ட் வேலை இருக்குனு சொன்னதும், நீ சாதரணமாகக் கூடச் சொல்லியிருக்கலாம் ஆனா எனக்கு அப்படிப் படல. நான் உன்கிட்ட இருந்து எனக்கான காதலை எதிர்பார்த்தேன். ஆனா நீ ஒரு ஃப்ரண்டா கூட என் கிட்ட வரல. அப்போ எனக்கிருந்த கோவம், வெறுப்பு எல்லாம் இன்னும் அதிகமாச்சு. நான் உன்ன வெறுத்தேன் அதே நேரம் ஐ லாங்கெட் (longed - எதிர்பார்ப்பு) ஃபார் யுவர் லவ். அதுவும் எனக்குக் கிடைக்காமல் போகவும் கோவம் இந்த டூருக்கு உன்ன கூப்பிட்டும் நீ மறுத்தது" என்று அவன் சொல்லி,"என்னால மட்டும் ஏன் எப்பயும் எல்லோரையும் போல இருக்க முடியறதில்லை?" என்று சொன்னவன் குரலில் அப்பட்டமான கெஞ்சல், கழிவிரக்கம், எதிர்பார்ப்பு தான் தெரிந்தது ஜெஸ்ஸிக்கு. ஒருவகையில் இவனின் இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம் என்ற குற்றயுணர்ச்சி மேலும் செபாவைப் பற்றி அந்தச் சண்டைக்குப் பிறகு அறிந்துகொண்டது எல்லாமும் அவன் மீதான காதலைப் பெருக்கிடத் தான் செய்தது.
ஒன்று அவளுக்குப் புரிந்தது. இங்கே எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலர் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை டிமேன்ட் பண்ணி பெரும் சுபாவம் உடையவர்கள். சிலரோ டிமேன்ட் செய்தாலும் கிடைப்பதை வைத்து அட்ஜஸ்ட் செய்பவர்கள். ஆனால் மூன்றாம் வகையில் இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்கு என்று சில டிமேன்ட்ஸ் இருக்கும். ஆனால் அதை எப்படிக் கேட்பது? கேட்டால் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் மேலும் இப்படிக் கேட்கலாமா? என்று தங்களுக்குள்ளே விவாதம் செய்து இல்லை அதுவாகக் கிடைக்கட்டும் என்று காத்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு அதன் மேல் ஆசை இருக்கும் தான். ஆற்றில் பாதி காலையும் சேற்றில் பாதி காலையும் வைத்துத் திரிவார்கள். ஜெஸ்ஸி முதலாம் ரகம். செபா மூன்றாம் ரகம்.
தன்னை அணைத்துக்கொண்டு இப்படிப் பேசுபவனை நினைக்கையில் அவளுக்குத் தான் வருத்தமாக இருந்தது."செபா சாரி. தப்பு என்மேலையும் இருக்கு. நான் சொன்ன மாதிரி நான் உங்களைப் புரிந்திருக்கணும், உங்களுக்காக டைம் ஸ்பென்ட் பண்ணியிருக்கணும். செபா ஒரே ஒரு கேள்வியென்று..." அவள் நிறுத்த அவன் அவள் கண்களைப் பார்த்தான்.
"உங்களுக்கு என்னைப் பிடிக்கும் தானே?" என்று கேட்டவளுக்குப் பதிலாக இதழ் முத்தம் ஒன்றைக்கொடுத்தவன் அந்த முத்தத்தின் ஆழத்திலும் நீளத்திலும் அவளை அவனுக்கு எவ்வளவு பிடிக்கும் என்ற கேள்விக்குப் பதில் சொல்லிக்கொண்டு இருந்தான். என்னடா இவ்வளவு நேரம் ஆகியும் ஜெசியைக் காணோமே என்று எண்ணி ரேஷாவும் பெனாசிரும் அவளைத் தேடி வந்து அந்த கம்பார்ட்மெண்டில் நுழைய முதலிலே அவர்கள் இருவரும் இருக்கும் கோலம் கண்டு அங்கேயே நின்றனர். இது அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தான் கொடுத்தது. நீண்ட முத்தத்திற்கு ஓய்வு கொடுத்தவர்கள் அப்படியே சாய்ந்து நிற்க ஜெஸ்ஸி எப்படி இங்கே வந்தாள் என்று சொன்னாள். செபாக்கு ஒருபுறம் ஹேமா, விவான் ஆகியோரை நினைத்து மகிழ்ச்சி மறுபுறம் தான் செய்யவேண்டியதை இவர்கள் செய்திருக்கிறார்களே என்ற வருத்தமும் வந்தது."சாரி ஜெஸ்ஸி" என்று அவன் சொல்ல அவளும் சாரி சொல்ல,"எப்பா உங்க சாரியை கொஞ்சம் நிறுத்தறீங்களா?" என்று குரல் வரவும் தான் ஜெஸ்ஸி எட்டிப்பார்க்க அங்கே ரேஷா மற்றும் பெனாசிர் இருவரும் நிற்பதைப் பார்த்து,"வாங்கடி ஏன் அங்கேயே நின்னுட்டிங்க?" என்று கேட்க,
"சென்சார் கட் பண்ணாம சில காட்சிகள் எல்லாம் ஓடிட்டு இருந்தது அதுனால் தான்" என்று ரேஷா சொல்ல ஜெஸ்ஸி மற்றும் செபா இருவரும் எம்பெரஸ் ஆனார்கள். "இப்போ தான் ஜெஸ்ஸி எனக்கு ஹேப்பியா இருக்கு. ப்ளீஸ் அண்ணா இனிமேல் நீங்க ரெண்டு பேரும் இப்போ போல எப்பயும் இருக்கனும்" என்று சொல்ல செபாவும் தலையசைத்தான்.
"என்ன செபா இங்க என்ன சொல்லுது?" என்று அவன் நெஞ்சைத் தொட்டு,"சும்மா ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்லுதா" என்று துஷி சொல்ல யாழ் அவனுக்கு ஹைப்பை கொடுக்க இரண்டு கண்கள் மட்டும் அவர்களை அக்னியாய்ச் சுட்டறிதது. ஹைப்பை கொடுத்தவன் நிமிர அங்கே ரேஷாவைக் கண்டு போச்சுடா என்று யாழை முறைத்தான்.
ஹே மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் செபா இங்க வாங்க என்று அழைத்தாள் நித்யா."அது என்ன எல்லா கோட்டையூம் அழைச்சிட்டு முதல இருந்து ஸ்டார்ட் பண்றது?" என்று கிண்டல் செய்தவள்,"கொஞ்சம் சொன்னீங்கன்னா எங்களுக்கும் உதவியா இருக்கும்" என்று நித்யா வார,"நித்திமா யூ டோன்ட் ஒர்ரி ஆல் டீடெய்ல்ஸ் ஐ நோ. அப்படினா என்னனு நான் சொல்றேன்" என்று விவான் சொல்ல இப்போது மீண்டும் ஒரு ஓ போடப்பட்டது. நித்யா தான் விவானை முறைத்தாள்."அதானே நானும் ஹாலிவுட் படம் பார்த்திருக்கேன், பாலியுட் படம் பார்த்திருக்கேன், கொரியன் சீரியஸ் பார்த்திருக்கேன், கோலியுட் டோலியுட்னு எல்லா படமும் பார்த்திருக்கேன் இப்படி ஒரு பரோபோசல் எங்கேயும் பண்ணதில்லை.சூரி காமெடியை லவ் ப்ரோபோசல் ஆக்கிடீங்களே?" என்று கேட்டான் ஹேமா. இப்படி எல்லோரும் ரவுண்ட் கட்டி கலாய்க்க என்ன செய்வதென்று புரியாமல் திருதிருவென விழித்தனர் ஜெஸியும் செபாவும்.
"நான் கூட எங்கடா பையன் சந்தானம் மாதிரி ஆத்திரமாத்திரமா காதலிக்கிறேன்னு சொல்லிடுவானோனு பயந்தேன். ஆனா இது என்ன புது மாதிரி ப்ரோபோசல்?" என்றான் ஜிட்டு.
சைட் கேப்பில் தன்னை கலாய்த்த ஜிட்டுவை முறைத்தான் செபா.
"ஆமா வெஜ்ஜா நான் வெஜ்ஜா?" என்று கேட்டான் விவான்.
"என்ன டா வெஜ் நான் வெஜ்? புரியில?" என்றான் இளங்கோ.
"சைவ முத்தம் கொடுத்தா ஒத்துப் போக மாட்டேன். சாகசத்தைக் காட்டு செத்துப்போக மாட்டேன். கொஞ்சம் நேரம் என்னைக் கொல்லையா ஐயா" என்று விவான் பாட்டாவே பாட,
"சண்டக்கோழி கோழி இவ சண்டக்கோழி , கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா" என்று துஷியும் பாட அவர்களை ஒரு வழி செய்தனர் எல்லோரும்.
"ஓகே அப்போ நைட் செபா அண்ணா ஜெஸ்ஸி அக்கா ட்ரீட் அப்படித்தானே?" என்றாள் பாரு.
"கரெக்ட் பாரு ட்ரீட் தான்" என்றான் விவி. இப்போது அந்தப் பெண்மணி அங்கே வர,"மேடம் இப்போ போலாம் நீங்க" என்றான் ஹேமா. அவரோ முறைத்து பார்த்துவிட்டுப் போக,"ஏன்டா லூசு இப்போ ஏன் அவங்களைப் போகச் சொன்ன?" என்றான் இளங்கோ.
"இல்லடா அவங்க அப்போவே முறைச்சாங்க அதுதான்..."
"நீ அவங்களை கிண்டல் பண்றனு அவங்க நெனச்சிக்கப் போறாங்கடா" என்று சொல்ல,"பரவாயில்ல எல்லாம் எங்க ஆபிசர் பார்த்துப்பாரு" என்று ஜிட்டுவைச் கைகாட்டினான்.
"வெல்லம் திங்குறவேன் ஒருத்தன் விரல் சூப்புறவன் ஒருத்தனா?" என்று சொல்ல நிறைய கலகலப்புடன் அன்றைய மாலை பொழுது ரம்மியமாகக் கடந்தது. எல்லோருக்குள்ளும் ஒரு நிம்மதி. இந்த கேங்கிலே சேராமல் இருக்கும் சிலரில் ஒருவரை சரிசெய்து விட்டோம். இன்னும் தியா- மிரு பிரச்சனை அண்ட் எல்லாத்துக்கும் மேலே இந்தப் பயணத்தின் காரணகர்த்தாவான துவாரகேஷின் திருமணம் என்னும் பெரிய குண்டு இருக்கிறது என்றாலும் இப்போது அந்தக் கவலையும் ஓரளவுக்கு ஓகே என்று இருந்தது விவானுக்கு. ரேஷா அப்போதே திரும்பிச் சென்றுவிட பெனாசிர் மட்டும் அங்கே இருந்து அனேஷியாவிடம் பேசிவிட்டு கொஞ்சம் அந்த கேங்கோடு அமர்ந்திருந்தாள்.
"செபா இனிமேல் எதுனாலும் ஓப்பனா சொல்லுடா. அப்போதான் எல்லோர்க்கும் புரியும். நீ மனசுல ஒண்ண வெச்சிக்கிட்டு வெளியில ஒண்ணு பேசினா எப்படி எல்லோருக்கும் புரியும் சொல்லு?" (பயணங்கள் முடிவதில்லை...)
 
Top