Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-45

Advertisement

praveenraj

Well-known member
Member
மௌனியுடன் அறைக்குள் சென்ற ஹேமா குளிக்க ஆயத்தமாக மௌனியோ உடனே பெட்டில் சரிய நினைக்க அவளை லாவகமாகத் தடுத்தவன்,"ஹேய் அழுக்கு மூட்டை ஒழுங்கா குளித்து முடிச்சிட்டு தூங்கு" என்றான்.

"அதெல்லாம் முடியாது. ரொம்ப குளிருது. நெவெர். எனக்கு உறக்க உறக்கமா வருது" என்று மீண்டும் பெட்டில் சரிய அவளை விடுவேனா என்று இழுத்து பாத் ரூமில் தள்ளி வெளியே பூட்டியவன்,"இப்போ நீ குளிச்சிட்டு வந்தாலே ஒழிய உன்னால தூங்க முடியும் போடி"என்றவன்,"உன்னைய கட்டிக்கிட்டு இன்னும் என்னனென்ன பார்க்க வேண்டியிருக்கோ?" என்று அவன் சலிக்க அவளோ உள்ளே இருந்து அவனைத் திட்டிக்கொண்டு இருந்தாள்.

ஹேமாவின் வீட்டில் இருந்து அழைப்பு வர எடுத்து பேசியவன் ஹரிணியிடமும் கொஞ்சம் பேசிவிட்டு வைத்தான்.

குளித்து முடித்து டவல் இல்லாமல் அவளோ முழித்து ஹேமாவை அழைத்தாள். இவனோ அதற்கும் அவளைத் திட்டிவிட்டு டிரஸ் முதற்கொண்டு எடுத்துக் கொடுக்க அவளோ ரெடி ஆகி வெளியே வந்து உடனே பெட்டில் சரிய தலையில் அடித்துக்கொண்டவன் அவனும் ரெடி ஆகி வந்து உறங்கினான்.

இது இவர்களுக்குள் புதியது இல்லை. அங்கே பெங்களூரில் ஒன்றாக வேலை செய்த போதும் தாங்கள் காதல் பரிமாறிக்கொண்ட போதும் இப்படித்தான் வாராவாரம் மௌனியை தன் அறைக்கோ இல்லை தன்னுடைய வீட்டிற்கோ அழைத்து வருவான். மௌனி தான் கும்பகர்ணனுக்கே டப் பைட் கொடுக்கும் ஆளாச்சே? வந்ததும் பெட்டில் சரிந்து விடுவாள். அவளை எழுப்பி ரெடி ஆகச் சொல்லி சாப்பாடு கொடுத்து மீண்டும் தூங்க வைத்துவிடுவான். அவளோடு பலமுறை ஒரே அறை ஏன் ஒரே கட்டில் என்று ஷேர் செய்திருந்தும் இருவரும் தீவிர 'கைப்புள்ளையின் சிஷ்யர்களாக' தான் வாழ்ந்து வருகின்றார்கள். அதென்ன கைப்புள்ளையின் சிஷ்யர்கள்? 'இந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வர மாட்டேன். பேச்சு பேச்சா தான் இருக்கனும்" என்பது தான் அது.

அது மட்டும் இல்லாமல் மௌனியிடம் பழகியத்திலிருந்து ஒன்றை ஹேமா நன்கு அறிந்திருந்தான். அது மௌனி குடும்பம் என்னும் சூழலை அதிகம் மிஸ் செய்கிறாள் என்றும் சோ தங்களுக்குள் திருமணம் முடிந்த பிறகு தான் 'எல்லாம்' என்றும் அவன் உறுதியாக இருப்பது அவளும் அறிவாள் தான். அவளுக்கு ஹேமா என்றால் கொள்ளைப்ரியம். அலாதி நம்பிக்கை. பின்னே யாருமில்லாமல் இருந்தவள் இன்று ஒரு பேமிலி, ஃப்ரண்ட்ஸ் என்று இருக்க அவன் தானே காரணம்? அதை விட அவன் தன் மீது காட்டும் அந்த அன்பையும் காதலையும் நிறையமுறை ஃபீல் செய்திருக்கிறாளே? இப்போதும் கூட ஓர் குழந்தைப் போல தூங்கும் அவளை ரசிக்கத்தான் செய்கிறான். நெருங்கி அவளை அணைக்க அவள் காதில் மெதுவாக "மௌனி" என்றதும் அவளோ பாதி தூக்கத்தில் "ஹ்ம்ம்" கொட்ட அவன் மூக்கை அவள் கன்னத்தில் வைத்து நுகர,

"சோப் போட்டுத்தான் குளிச்சேன். நம்பு" என்று சொல்லி உறங்கும் அவளை இன்னும் நெருக்கி அணைத்து அவளை தன்னுடைய கைச் சிறையில் வைத்துக் கொண்டான்.

*************

மணி காலை ஒன்பதை நெருங்க விழித்த இளவேனில் நித்யாவை எழுப்பியதும் அவளை குளிக்க வைத்து அதற்குள் ரிசார்ட்டில் உணவுக்கு ஆர்டர் கொடுக்க அங்கே ஒவ்வொருவராய் எழுந்தனர். மௌனி, ஹேமா தவிர எல்லோரும் சாப்பிட வந்தனர். ஆனால் ஒரே நேரத்தில் இல்லை. விட்டு விட்டு ஆளுக்கொரு நேரத்தில் வந்தார்கள். மீண்டும் எல்லோரும் தூங்கச் செல்ல நிறைய நபர்கள் மதியம் தங்களை எழுப்பக் கூடாது என்று சொல்லிவிட்டே சென்றனர்.

அப்போது தான் விவி மற்றும் துவாரா இருவரும் வந்தார்கள். அவர்கள் அங்கேயே சாப்பிட்டு விட வந்ததும் சென்று உறங்கினார்கள்.

சாப்பிட வரும் போதே ஜிட்டு தியாவைப் பார்த்ததும் நெட்டி முறித்து,"ஐயோ ரொம்ப களைப்பா இருக்கே!" என்று பில்ட் அப் தர சரியாக பின்னால் வந்த இதி தொண்டை செரும,"அது ட்ராவல் செய்தோமில்ல அதனால தான்" என்று சமாளித்வன்,"என்ன கைஸ் எல்லோரும் எப்படி இருக்கீங்க?" என்று வேண்டுமென்றே செபாவைப் பார்த்து கேட்டுச் சென்றான்.

மிருவும் சித்துவும் வந்து சாப்பிட, ஏனோ இம்முறை அவளைப் பார்க்காமல் தூரம் நின்றான் தியா. சித்துவிற்கும் மிரு தியாவின் ப்ராப்லம் நன்கு புரிந்தது.'நம்ம திறமையை இன்சல்ட் பண்ற மாதிரியோ இல்லை நம்மள சந்தேக படுறதோ தான் இங்க ரொம்ப அவமானம் செய்யும் விஷயம்' என்ற உண்மையை உணர்த்தவளுக்கு மிருவின் நிலை நன்கு விளங்கியது.

மாலை நான்கு மணிக்கு அனைவரும் வந்து விட வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது.

*****************

அங்கிருந்து வந்த துவாராவும் விவியும் சென்று ஓய்வெடுக்க ஏனோ விவி தான் துவாவைக் கேள்விக் கேட்டான்."மச்சி எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. நீ இப்படி பழைய படி மாறியிருக்கிறதும் அந்தப் பொண்ணுகூட நீ ரொம்ப ரொம்ப நார்மலா ஜாலியா இருக்கடா. எனக்கும் இது தான் வேணும். அப்பாவிடம் பேசப் போறியா? சொல்லவே இல்லை?" என்றான் கிண்டல் தொனியில்."எந்த மரத்துல உட்கார்ந்து கிடைச்சது இந்த ஞானம்?" என்றான்.

துவாரா முறைக்க,

"என்னடா முறைப்பு? நாங்க எல்லாம் எத்தனை முறை சொல்லியிருப்போம். அந்தப் பொண்ணு மிரு சொன்னதும் மாறிட்ட? இப்போ சரித்திராவுக்காக மாறியிருக்க... பசங்க சொல்றதை என்னைக்குடா கேட்டிருக்கீங்க? சரி இப்போவாது ஞானம் வந்ததே. வேதாளம் திரும்ப முருங்கை மரம் ஏறாம இருந்தா சரி. நான் தூங்கறேன்" என்று சென்றான்.

உண்மையில் நிறைய விஷயம் குறிப்பாக இந்தப் பயணம் தான் அவனை மாற்றியது. ட்ரைனில் பார்த்த அந்த தம்பதியர்கள், சரித்திராவின் தந்தையைப் பற்றி அறிந்துக்கொண்டது, மிரு பேசியது, கீர்த்தி பேசியது எல்லாம் தான் காரணம். இருந்தும் இவனுக்கு தன் தந்தையின் மீது இவ்வளவு வெறுப்பு வரக் காரணம் 'அவள்' தான். அவளே அவள். அவள் கேட்ட அந்தக் கேள்வி,"எப்படி உங்க அம்மாவை உங்க அப்பா அடிச்சு கொன்ன மாதிரி என்னையும் நீ கொல்ல பிளான் பண்ற இல்ல? நெவெர்" என்றாள் அந்த பதினேழு வயது பெண்.

சில வார்த்தைகளை நாமாகப் பேசுவதைக் காட்டிலும் சிலர் தூண்டி விட்டால் (ஸ்பார்க் செய்து விடுதல், ஏற்றி விடுதல்) நாம் இன்னும் தீவிரமாக இருப்போம் தானே? அப்படித்தான் அவள் இவனுக்குச் செய்ததும். அவளை இந்த மாதிரி பேச வைத்ததிற்கு வேறு காரணம் இருக்கு. அது ஒரு வேகத்தோடு கூடிய கோவம். நம் வாழ்க்கையில் சிலர் சொன்னதையே பிடித்துக் கொண்டு இறுதி வரை இருப்போம் தானே? நாம் சிறிதேனும் யோசித்துப் பேசியிருந்தால் இது நடந்திருக்காது என்று நமக்கே புரியும்.

மனம் ஏதேதோ செய்ய உடனே கீர்த்தியை அழைத்து சரித்திராவை விரும்புவது முதல் அவன் முட்டாள்தனம் வரைப் பேசினான். கீர்த்திக்கு இன்று தான் மனம் மிக லேசாக இருந்தது.'அண்ணா மாறுவானா?' என்று ஐயமுற்றவள் அவனின் இத்தகைய மாற்றத்தை எண்ணி அதிசயத்தாள்.

****************

சித்துவிற்கு இப்போது மனம் அமைதியாக இருந்தது. இப்படித்தான் இந்தப் பயணம் இருக்கும் என்று அவள் எண்ணவில்லை. ஷி இஸ் ஹேப்பி. விவியைத் தொடர்புக்கொண்டு அவனுடன் பேசினாள்.

இளவேனில் அதற்கு மேல் தூங்காமல் நித்யா மற்றும் விவானின் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு இருந்தாள். அவளுக்கு ஏற்கனவே இரண்டு நாட்கள் ஓடியாடாமல் இருந்தது ஒரு மாதிரி இருக்க அங்கே விவானை விளையாட அழைத்தாள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நித்யா முடியாமல் குரூப்பில் மெசேஜ் தட்டினாள்."யாராவது இளவேனிலைப் பார்த்துக்கொள்ள முடியுமா?" என்று பதிப்பிக்க பாவம் யாரும் அதைப் பார்த்ததாகக் கூடத் தெரியவில்லை. கதவு தட்டப்பட்டது. இளவேனிலை அழைத்துச் செல்ல துவாரா தான் வந்திருந்தான்.ஏனோ நித்யாவிற்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது. பின்னே அவள் இப்போது தான் தூங்கலாம் என்று இருக்க இளா அவள் பொறுமையைச் சோதித்துக்கொண்டு இருந்தாள். இதில் அருகில் என்னமோ தனக்கும் இந்த உலகத்திற்கும் சம்மந்தமே இல்லாதது போல் உறங்கும் விவானைக் கண்டால் அவளுக்குப் பொறாமையாவும் எரிச்சலாகவும் இருந்தது. இளவேனிலும் துவாராவும் அந்த ரிஸார்ட்டை அங்கும் இங்கும் சுற்றி வந்தனர்.

**************

அங்கே அனேஷியா அண்ட் கோ தங்கள் வேலையில் தீவிரமாக இருந்தனர். அங்கிருக்கும் மலைவாழ் மக்களைப் பேட்டி காணச் சென்றனர். அவர்களின் விருப்பு வெறுப்புகளைச் சேகரிக்கவும் சென்றனர். (இவர்கள் வேலையைப் பற்றி தெரிய இந்த கதையின் முதல் அத்தியாயத்தைப் பார்க்கவும்)

'அஸ்ஸாமிஸ்' தான் அசாம் மாநிலத்தின் மொழி. இது இந்திய அரசியலமைப்பில் எட்டாவது அட்டவணையில் (eighth schedule - இந்தியாவின் உத்தியோகபூர்வ /ஆட்சிபூர்வ மொழிகளின் பெயரைக் கொண்டது. மொத்தம் 22 மொழிகள்) இருக்கிறது.

'போடோ' என்னும் மொழியும் அங்கு பிரபலம். அதை அசாம், மேகாலயா மாநிலத்தில் ஓரிரு இடங்களில் பேசுகிறார்கள். இதுவும் எட்டாவது அட்டவணையில் வரும் மொழி தான்.

பழங்குடியின மக்களின் எண்ணங்கள், தேவைகள், வாழ்வாதாரங்கள் எல்லாம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய காரணிகளைக் கணக்கிடுவது தான் அனேஷியா குழுவின் வேலை. திவேஷின் உதவியுடன் இதற்கான பெர்மிஷன் வாங்கி நடைபெறுகிறது.

இவர்கள் இங்கே வந்ததின் நோக்கம் இது தான். ஆனால் அஸ்ஸாமில், அசாம் என்று மட்டுமில்லாமல் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அது என்னவென்றால் பகல் பொழுது விரைவிலே தொடங்கிவிடும். அதாவது சூர்ய உதயம் காலை நான்கு முப்பத்துக்கே நடந்துவிடும். அதும் இப்போது அவர்கள் இருக்கும் நவம்பர் மாதத்தில் மாலை நான்கரைக்கே சூர்யன் அஸ்தமித்தும் விடும். இது எப்படி சாத்தியம்?

பூமி உருண்டை என்றும் அதில் விழும் சூரியனின் ஒளி இடத்திற்கு இடம் மாறுபடும் என்றும் எல்லோருக்கும் தெரியும். பூமி மேற்கிலிருந்து கிழக்கில் சுற்றுகிறது என்றும் அதனால் ஒருபுறம் பகல் மறுபுறம் இருள் என்று இருக்கிறது. நாம் சிறுவயதில் 'சன் ரைஸஸ் இன் தி ஈஸ்ட்னு' படிச்சோமில்ல? ஆனால் உண்மையில் சூரியன் அதே இடத்தில் தான் இருக்கிறது. பூமி தான் சூரியனை மேற்கிலிருந்து கிழக்கில் சுற்றுவதால் நமக்கு கிழக்கில் சூரியன் உதிக்கவும் மேற்கில் மறையவும் செய்கிறது. சூரியனின் ஒளி எல்லா இடத்திலும் ஒன்று போல் விழுவதில்லை. அப்போது இடத்திற்கு இடம் நேரம் மாறுபடும் தானே? இதைத் தீர்க்க utc என்னும் முறையில் உலகின் நேரத்தை கணக்கிடுகிறார்கள். பூமி வட்டமாக இருப்பதால் அதை longitude (வடக்கு முதல் தெற்கு வரை இருக்கும் மாயக் கோடுகள்) என்னும் முறையில் கிழக்கே 180 டிக்ரீயும் மேற்கே 180 டிக்ரீயுமாக பிரித்து இருக்கிறார்கள். ஒரு நாளில் 24 மணிநேரம் என்பதால் சூரியன் இந்த 360 டிக்ரீயை ஒரு நாளில் கவர் செய்வதால் ஒரு மணிநேரத்திற்கு 15 டிக்ரீ கடக்கிறது.(360 / 24 = 15)

இந்தியாவின் மொத்த longitude (அதாவது மேற்கே குஜராத்தில் இருந்து கிழக்கே அருணாச்சல பிரதேசம் வரையான அளவு) 29 டிக்ரீ. அப்படியென்றால் இந்தியாவின் கிழக்கும் மேற்கும் இரண்டு மணிநேர வித்தியாசம் கொண்டது.

நிச்சயமாக நான் மேலே கொடுத்த விளக்கம் அநேக நபர்களுக்கு புரிந்திருக்காது. சிம்பிளா சொல்றேன் ஒரு பந்தை எடுத்துக்கோங்க. அதுல ரெண்டு எண்டும் ரெண்டு புள்ளி (b,a) வைத்து உங்க இடது கையில் வெச்சுக்கோங்க. இப்போ ஒரு டார்ச் எடுத்து வலது கையில் வெச்சி ஆன் பண்ணுங்க. டார்ச் ஒளி உங்க கையில இருக்கும் பந்தில் இருக்குற ஒரு புள்ளியில் (a) மட்டும் தான் விழும். நீங்க பந்தைச் சுத்துனா மறுபக்கம்(b) அந்த டார்ச் ஒளி படும் போது a இருட்டாகும். இப்போ அந்த பாய்ண்ட் a அருணாச்சல பிரதேசம், b குஜராத் என்று வைத்துக்கொண்டால் aவில் காலையில 4 மணிக்கு சூரியன் வந்தால் bயில் ஆறு மணிக்கு தான் சூரிய ஒளி வரும். அப்போ a ல மாலை 4 மணிக்கு சூரியன் மறைந்தால் bல ஆறுமணிக்கு தான் அஸ்தமிக்கும். நம்ம ஊரு சென்னை ரெண்டுக்கும் நடுவுல இருக்கு (longitute கோடுகள் படி) அதாவது ஐந்து மணிக்கு நடக்கும். ஆங்கிலேய ஆட்சியில இந்தியாவிற்கு ரெண்டு டைம் ஜோன் இருந்தது. ஒன்னு பாம்பே டைம் இன்னொன்னு கல்கத்தா டைம். ஆனா ரயில்வேஸ் ரெண்டுக்கும் நடுவுல மெட்றாஸ் டைம்னு ஒன்னு வெச்சு இருந்தாங்க.

இந்தியாவோட அஃபிசியல் டைம் என்றழைக்கப்படும் ist மிர்சாபூரில் (உத்தர பிரதேஷ்) போகும் longitude ஐ வெச்சி கணக்கிடுறார்கள். அப்படிப் பார்க்கும் போது தான் இன்று ஜூலை 10 சென்னைல 05 48 க்கு சூரியன் உதயம் நடந்திருக்கு. இடாநகர், அருணாச்சல பிரதேஷ் தலைநகர்ல 04 28 க்கு நடந்திருக்கு. அதுவே காந்திநகர்,குஜராத்தில் ஆறு மணிக்கு நடந்திருக்கு. இன்றைய அஸ்தமனம் வந்து மாலை 06 15, 06 39, 07 29 என்று முறையே நிகழும்.

இதுல பெரிய நடைமுறை சிக்கல் என்னவென்றால் அனைவருக்கும் பொதுவான அலுவலக நேரம் ஒன்பது முதல் ஐந்து தான். இது இந்த மூன்று இடத்திற்கும் நிறைய சிக்கல் தரும். குளிர் காலத்தில் இன்னும் சீக்கிரம் சூரிய அஸ்தமனம் ஆகிவிடும் என்பதால் இந்த நடைமுறை சிக்கலைத் தவிர்க்க இந்தியாவுக்கும் இரண்டு டைம் ஜோன் வேண்டுமென்று நிறைய கருத்துக்கள் உலவுகிறது. ஏன் உயர்நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்தார்கள். ஆனால் இன்னும் அது அங்கீகரிக்கப்படவில்லை. இந்தியாவிலே அஸ்ஸாமில் 'சாய் பாகன் டைம்'னு ஒன்னும் இருக்கு. அது இந்திய நேரத்தைக் காட்டிலும் ஒரு மணி நேரம் முன்னே இருக்கும்.

ரஷ்யாவுல மட்டும் மொத்தம் பதினோரு டைம் ஜோன் இருக்கு!
1921

....................................................................

பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையை எல்லாம் பார்க்கும் போதும் கேட்கும் போதும் அனேஷியா குழுவுக்கு நிறைய ஆச்சரிங்கள் இருந்தது. லன்ச் பிரேக் வந்ததும் எல்லோரும் சாப்பிட அமர்ந்தனர். அனேஷியாவுடன் ஓரளவுக்கு ஜெஸ்ஸி ஒட்டியிருந்தாள். இது ரேஷா உட்பட அனைவருக்கும் நன்கு தெரிந்தது.

எல்லோரும் இங்குள்ள கிளைமேட் மட்டும் மக்களின் பழக்கவழக்கங்கள் நேரம் முதற்கொண்டு எல்லாவற்றையும் பற்றிப் பேசினார்கள்.

லன்ச் பிரேக்கில் பெனாசிர், லோகேஷ் இருவரும் சற்று சோர்வாகத் தெரிய,"சாரி கைஸ். எனக்கும் புரியுது. நமக்கு வேற ஆப்சன் இல்ல. ஐம்பத்தி ஐந்து மணிநேரம் ட்ராவல் செஞ்சு இப்படி அவசரமா வேலைக்கு கூப்பிட்டது எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. என்ன இருந்தாலும் நம்ம வேலை இது தானே?"என்று இழுக்க லோகேஷ் தவிர எல்லோரும் அவளுக்கு ஒரு புன்னகை தந்தனர்.

அப்போது திவேஷ் அவளை அழைத்து விசாரிக்க மற்றவர்களிடம் திரும்பி,"இந்த டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் நம்ம மேடத்தோட ஃப்ரண்டாம். எவ்வளவு பெரிய ஃப்ரண்ட் எல்லாம் வெச்சியிருக்காங்கனு பாருங்க" என்று மெச்சினாள்.

அனைவரும் அதைப் பற்றி பேச உடனே பேச்சு ஜெஸ்ஸியின் பக்கம் தாவியது."சரி சரி உன் சங்கதி என்ன ஆச்சு?" என்று எல்லோரும் அவளை வார,

"கைஸ் ஒரு விஷயம் தெரியுமா? செபாவும் நம்ம தங்கி இருக்கும் ரிஸார்ட்ல தான் இருக்காரு. ஆனா வேற ப்ளாக்" என்று நிறுத்தி நிறுத்திச் சொன்னாள்.

காலையில் செபாவுடன் பேசினாளே அப்போது தான் இதை கண்டுபிடித்தாள். ஆனால் அவனிடம் அதைக் காட்டிக்கொள்ளாமல் இருந்ததை ஜெஸ்ஸி சொல்ல,

"ஓ அப்போ சர்ப்ரைஸா?" என்று பெனாசிர் இழுக்க,

பெனாசிரின் காதில் ரேஷா எதையோ சொல்ல பெண்கள் இருவரும் இன்னும் பலமாகச் சிரித்தனர்.

"ஏன் என்ன மேட்டர்?" என்ற ஜெஸ்ஸியை இருவரும் மர்மமாகப் பார்த்து புன்னகைக்க,

"என்ன?"

"அப்போ இன்னைக்கு அரேஞ் பண்ணிடலாம்" என்றாள் ரேஷா,

"எதை?"

ஏனோ இவர்களின் பேச்சு லோகேஷிற்கும் புரிந்து அவனும் சிரிக்க,

"எதை? எதுக்கு எல்லோரும் இப்படிச் சிரிக்கறீங்க? என்ன விஷயம்?" என்றாள் சற்று கோவமாக,

"அதை நாங்க எப்படி எங்க வாய்ல சொல்வோம்?" என்று இழுக்கும் நேரம் அனேஷியா அங்கு வந்தாள்.

"என்னனு இப்போ சொல்றீர்களா இல்லையா?" என்று கேட்க

"என்ன விஷயம்?" என்றாள் அனேஷியா.

இப்போது பெனாசிர் அனேஷியாவின் காதில் சொல்ல எல்லோரும் சிரித்தனர்.

"இப்போ என்ன மேட்டருனு சொல்லலைனா நான் கிளம்பறேன்" என்றததும்,

"அப்போ நீயும் என்கூடத் தங்க மாட்ட தானே?" என்றாள் அனேஷியா,

"நான் உங்ககூடத் தானே இருக்கேன் என்றதும்

"ஃபர்ஸ்ட் நைட்னா பையனும் பெண்ணும் சேர்ந்து தானே போகணும்? பையன் மட்டும் கொண்டாட முடியுமா என்ன?" என்று சீரியஸாக கேட்பது போல் கேட்ட அனேஷியா உட்பட எல்லோரும் இப்போது ஜெஸ்ஸியைப் பார்க்க ஏனோ ஜெஸ்ஸியின் முகம் சிவந்தது.

"வந்தா உன்னை மாதிரி வரணும். வேலைக்கு வேலையும் ஆச்சு ஹனிமூனுக்கு ஹனிமூனும் ஆச்சு. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா" என்ற ரேஷாவுக்கு ஹைபை தந்தாள் பெனாசிர்.

"அப்போ உடனே பேச்சிலர்ஸ் பார்ட்டி வெய். இப்போவே இங்கேயே... நாளைக்கு எல்லாம் உன்கிட்ட கேட்க முடியாது" என்றான் லோகேஷ்.

இதற்கு மீண்டும் அந்த டேபிள் ஆர்ப்பரிக்க சுற்றியிருந்த எல்லோரும் அவர்களைத் திரும்பி ஒரு கணம் பார்த்தனர்.

இனியும் அங்கு இருந்தால் தன்னை ஒரு வழி செய்து விடுவார்கள் என்று எண்ணியவள் அங்கிருந்து நைசாக எஸ் ஆனாள்.

அனேஷியா உடனே நித்யாவிற்கு அழைத்தாள். அவள் தான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் போன் எடுக்காமல் போக மாலை சொல்லிக் கொள்ளலாம் என்று கூட்டத்தைக் கலை த்தனர்.

.........................................................................................................

துவாராவுடன் கொஞ்ச நேரம் ஓடியாடிய இளவேனில் களைப்படைந்து விட அவளைத் தன்னோடு அழைத்துச் சென்று ஜூஸ் கொடுத்து அவளுக்கு கதை சொன்னான். ஓடியாடிய களைப்பில் அப்படியே அவளும் தூங்கிவிட துவாராவும் தூங்கினான்.

மதியம் கடந்து விட பசியெடுத்தால் தியா மற்றும் செபா இருவரும் சாப்பிடக் கிளம்பினார்கள். அங்கே யாழுக்கு பசியெடுக்கவும் தூங்கிக்கொண்டிருந்த துஷியை ஒரு வழி செய்து அழைத்து வந்தாள்.

அப்போது அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த தியா மற்றும் செபாவைக் கண்டு அங்கு சென்று அமர்ந்தனர். தியா மிரு பற்றி அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்ததால் கொஞ்சம் ஆறுதல் செய்தனர். காலையில் ஜிட்டு தங்களை கேலி செய்ததை தியா சொல்ல அவனுக்கு ஒரு பதிலடி தந்தே தீர வேண்டும் என்று எண்ணினார்கள் இவர்கள்.

தூங்கிக்கொண்டு இருந்த விவானுக்கு அழைப்பு வந்து விழிக்க எடுத்துப் பேசியவன் அறையில் இளவேனிலைக் காணாது நித்யாவை எழுப்பினான். இருந்தும் டோர் உள்ளே லாக் ஆகியிருந்தால் ஒரு நம்பிக்கை அவனுக்கு துளிர்விட்டது. நித்யாவும் விழித்து விஷயத்தைச் சொல்ல அப்போது தான் நார்மல் ஆனான் விவான். ஒரு திடீர் பயம் அவனைச் சூழ்ந்து விட்டது. மூச்சை இழுத்து விட்டவன் நித்யாவை நெருங்கிப் படுத்தான்.

அவனைக் கூர்ந்து கவனித்தவள்,"விவான் எதுக்கு இவ்வளவு பதட்டம்? நீ ஏதோ குழப்பத்துல இருக்கனு தெரியுது. ஒருவேளை என்னால முடிஞ்சா நான் ஹெல்ப் பன்றேன்னு"சொல்ல அவளை அணைத்தவன் ஒரு முத்தமிட்டதும் திவேஷிடமிருந்து விவானுக்கு அழைப்பு வந்தது. அனைவரையும் ரெடியாக இருக்குமாறு சொன்னவன் அருகே இருக்கும் ஒரு எஸ்டேட்டை பார்வையிடச் செல்லலாம் என்றான். இது விவானுக்கு ஒன்றும் புதியதில்லை தான். இருந்தும் இங்கே எப்படி இருக்கிறது என்று பார்க்க அவனும் ஆசைப்பட்டான்.

"என்ன?" என்ற நித்யாவிற்கு,"ரெடி ஆகணுமாம். வா குளிப்போம்" என்று சொல்லி கண்ணாடிதான். "உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி. நான் குளிச்சிட்டேன் நீ மட்டும் போய் குளி" என்று துரதியவள் இளவேனிலைத் தேடி வந்தாள்.

.......................................................................................

அவர்கள் நால்வரும் சாப்பிட அப்போது விவான் அவர்களுக்கு மெசேஜ் செய்தான். எல்லோரும் குளித்து விட்டு தான் சாப்பிட வந்ததாகச் சொன்னார்கள். மிருவும் சித்துவும் கூட தயாராகி வந்து சாப்பிட்டனர். அப்படியே இளங்கோ பார்வதியும் வந்துவிட இன்னும் இதி - ஜிட்டு மற்றும் ஹேமா மௌனி மட்டும் வராமல் இருக்க, இளங்கோ ஹேமாவுக்கு அழைத்தான். அவனோ மறுநாள் போருக்காக ராவணன் கும்பகர்ணனை எழுப்ப முயன்றது போல் அரும்பாடு பட்டு மௌனியை எழுப்பினான்.

எழுந்தவள்,"என்ன ஆச்சு?" என்று கேட்க அங்கே ஹேமாவோ சோர்ந்துப் போய், "முடியல என்னால முடியல... இப்படியாடி தூங்குவ? இடியே விழுந்தாலும் எழ மாட்டாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன் ஆனா இப்போ தான் பார்க்கறேன். வா எல்லோரும் நமக்காகத் தான் வெய்ட்டிங்காம்" என்றான்.

வாரிச் சுருட்டி எழுந்தவள் ரெடி ஆக,"அப்போ சாப்பாடு இல்லையா?" என்றதும் , தலையில் அடித்துக் கொண்டவன்,"உன்னைய போய் பட்டினியா நான் கூட்டிட்டுப் போவேனா? வா எல்லோரும் சாப்பிடுறாங்க நாமும் போவோம்" என்று அழைத்தான்.

இறுதியாக ஜிட்டு மற்றும் இதித்ரி ஆகியோரும் வர தன்னை கலாய்க்க ஒரு கூட்டமே தயாராக இருப்பதைத் தெரியாமல் கெத்தாக ஸ்டைலாக வந்தான் ஜிட்டு.

தன்னை தியா பார்ப்பதைத் தெரிந்து இதியின் கையைப் பிடித்தபடி வந்து அவர்களை வெறுப்பேற்றினான் ஜிட்டு.

வந்தவன்,"என்ன இங்க பயங்கரமா கருக்குற வாசம் வருது ஓ பாய்ஸ் ரெண்டு பேரும் இங்க தான் இருக்கீங்களா? அப்போ ஓகே ஓகே" என்று செபா தியாவை கலாய்த்து அங்கே அமர்ந்தான் ஜிட்டு.

கலகலப்பு படத்தில் சிவாவும் விமலும் மாட்டிக்கொள்ள அப்போ அவர்களைப் பார்த்து எள்ளலாகச் சிரிக்கும் 'அமிதாப் மாமா' இளவரசு போல் எள்ளி நகைத்தான் ஜிட்டு. (பயணங்கள் முடிவதில்லை...)
 
இந்தியாவிலே நேர வேறுப்பாடு, இப்பதான் தெரிந்து கொண்டேன்,...
ஆனால், அந்த இரவு, பகல் பந்து, ஸ்கூலில் படித்தது....ஞாபகம் வந்தது.
sleepy epi ithu....:p
 
Super author ji. Tq for information you shared 4 us.
Unngada kathayoda speciality ye lots of info about the kathakalam alla.
Very nice, you gave good food for our brain appetite too.tq ji.
நன்றி. எனக்கும் கதையோடு தகவல் கொடுக்கப்பிடிக்கும். நன்றி??
 
Intha time zone patri enakkum theriyathu bro.. Thanks for your information.... Kathaiyoda niraiya GK yum theriyuthu.. :) :) :) ? ? ?
நன்றி. இதெல்லாம் கதை நகர்வுக்கும் அவசியம்... அசாம் பற்றி நிறைய பார்ப்போம்... ??
 

Advertisement

Top