Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-54

Advertisement

praveenraj

Well-known member
Member
இருவரும் வேறு வேறு எதிர்பார்ப்பிலும் எண்ணங்களிலும் மீண்டும் பள்ளிக்குத் திரும்பினார்கள். அனேஷியா மற்றும் திவேஷ் வழக்கம் போல் எப்போதாவது அந்த கேங்கில் இணைய விவான், துவாரா, துஷி, யாழ் ஆகிய நால்வரும் அதிக நெருக்கம் ஆனார்கள். அதே நேரம் டேன்ஸ் க்ளாஸ், டேன்ஸ் ப்ராக்டிஸ் என்று அனியும் யாழும் நெருங்கியிருந்தனர். இம்முறை துவாராவிடம் எக்காரணம் கொண்டும் தோற்கக்கூடாது என்று எண்ணி படிப்பில் கடுமையான உழைப்பைச் செலுத்தினாள் அனேஷியா. ஒருமுறை துவாரா, யாழ், துஷி மூவரும் விவானின் வீட்டிற்குச் சென்றிருக்க வழக்கமாக இருக்கும் உற்சாகம் இழந்து காணப்பட்ட துவாராவை தனியே அழைத்துப் பேசினார் லலிதா அம்மா. அப்போது தான் அதுவரை அவன் மனதில் இருக்கும் அனைத்தையும் கொட்டித் தீர்த்தான். அனேஷியா யார் என்றும் எப்படி மீண்டும் தன்னுடைய அன்னையின் குடும்பத்தோடு இணைய முடியும் என்றும் பேசினான். ஒரு தாயாக இருந்து துவாராவின் எண்ணம் லலிதாம்மாக்கு நன்கு புரிந்தது. கூடவே கீர்த்தியும் சற்று வளர்ந்து ஓரளவுக்கு விவரம் தெரிந்து இருந்தாள். அவளுக்கு அவள் அப்பா என்றும் ஸ்பெஷல். துவாரா அவரோடு பேசுவதில்லை என்று தெரிந்தவள் எப்படியாவது அவனைப் பேச வைக்க முயற்சித்தாள். துவாரா தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறைகளுக்கும் ஊருக்குப் போகாமல் இருக்க அவனைப் பார்க்க கீர்த்தியை சாக்காக வைத்து அவர்கள் தந்தை இங்கே வருவார். ஏனோ கீர்த்தியை சின்ன வயதிலிருந்தே லலிதாம்மாக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்கும் ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டார் ஆனால் விவான் கிடைத்ததே அவருக்கு அதிசயம் (அவருக்கு நீண்ட நாட்கள் கழித்து பிறந்தவன் தான் விவான்). அதனால் கீர்த்தி அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் ரொம்ப பெட். அதும் விவானுக்கு கீர்த்தி என்றால் கொள்ளைப் பிரியம். விவான் அண்ணா விவான் அண்ணா என்று வார்த்தைக்கு வார்த்தை அண்ணா போட்டு மழலையில் அழைக்கும் அவளை அவனுக்கு ரொம்ப பிடிக்கும். இப்போதும் துவாரா மற்றும் கீர்த்தி இருவரும் அடிக்கடி கடவுளுக்கு நன்றி சொல்வார்கள். காரணம் அவர்கள் என்றோ செய்த புண்ணியத்தின் பலனாகத்தான் எந்தவித ரத்த சம்மந்தமும் உறவும் இல்லாமலே தங்களை அவர்கள் பெற்றப் பிள்ளைகள் போல் லலிதா அம்மா, ராஜசேகர் அப்பாவும் பார்த்துக்கொள்கிறார்கள். இதேதும் விவானுக்குத் தெரியாது. நாட்கள் அதன் போக்கில் சென்றது.
"அப்புறோம் என்ன ஆச்சு?" என்றாள் நித்யா. அவள் குரலில் ஒலித்தது இன்னதென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு.
"ஆறாவது முதல் எங்களுக்கும் படிப்பு சுமை கூடியது. அதுமில்லாம எல்லோரும் ஓரளவுக்கு மெட்சூர்ட் ஆகியிருந்தோம். எனக்கு என் அப்பா சொன்னது தான் காதுல ஒலிச்சிட்டே இருந்தது. ஒரு நாள் துவாரா என்கிட்ட பேச வந்தான்..." என்றாள் அனேஷியா,"அனேஷியா, அனி நில்லு. எப்படி இருக்க?" என்றான் துவாரா.அவனை திரும்பி ஏளனமாஒரு பார்வைப் பார்த்தாள். அவள் பார்வையின் பொருள் உணர்ந்தவனாக,"ஓ நான் யாருனு சொல்லல தானே ? நான் துவாரகேஷ். உன் அத்தையோட பையன். நாம சின்ன வயசுல ஒன்னா பழகி..."என்று முடிக்கும் முன்னே, "அத்தையா? அப்படி யாரும் எனக்கில்லை" என்றாள் அனேஷியா.அவளைத் தவறாகக் கணித்தவன்,"அனி உன் அப்பா கூட பிறந்தது மூணு பசங்க மட்டும் இல்ல ஒரு பொண்ணும். நான் உன் அப்பாவுக்கு தங்கை பையன்" என்று முடிக்க, "அப்படியா? அப்போ என் அத்தைஎங்க?" என்றாள் சாதரணமாக. துவாராவுக்கு மனம் வலிக்க,"அது அவங்க... அவங்க... இறந்துடாங்க" என்றான்."எப்படி?" என்றாள்
"அது... அது..." என்று திணறினான் துவாரா."நான் சொல்லட்டா?உன் அப்பா உன் அம்மாவை சாரி சாரி என் அத்தையை அடிச்சு கொன்னுட்டார்" என்று வார்த்தையில் விஷம் தடவிப் பேசினாள் அனேஷியா. இதில் அவர் தவறு ஏதுமில்லை. இப்படித்தான் அவள் தந்தை அவளிடம் சொல்லியிருந்தார். அதை அப்படியே ஒப்பித்தாள்.ஏற்கனவே தன் அப்பா தான் தன்னுடைய அம்மாவின் சாவிற்கு காரணம் என்று தீர்க்கமாக நம்பியவன் இப்போது அவளின் வார்த்தைகளில் அதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தினான். அவனால் எதுவும் பேச முடியவில்லை."அதான் உங்க குடும்பத்தோட எந்த உறவும் வேண்டாம்னு சொல்லி நாங்க பிரிஞ்சிட்டோமே?" என்று அவள் சொல்லி ,"இதுவே உன் கிட்ட நான் பேசுறது கடைசியா இருக்கனும்" என்றும் சொல்லிச்சென்றாள்.அதன் பிறகு அவளின் வார்த்தைகள் அவனுள் ஏற்படுத்திய காயத்திற்கெல்லாம் மருந்தாக தன் கவனத்தை தீவிரமாக ஷெட்டிலில் திசை திருப்பினான் துவாரகேஷ். விவானுக்கு படிப்பைக் காட்டிலும் எப்போதும் ஷெட்டில் என்றால் அதீத விருப்பம். அதுவரை தனித்தனியே மட்டும் விளையாடிக் கொண்டிருக்க முதல் முறை அவர்கள் பள்ளியில் டபிள்ஸ் (இரட்டையர் பிரிவு ) டோர்னமெண்ட் ஆரமித்தார்கள். அப்போது தான் u15 எனப்படும் பதினைந்து
வயதிற்கு உட்பட்டோர்க்கான டோர்னமெண்ட் சில மாதங்களில் நடைபெற இருந்தது. அதற்கான பயிற்சியை அவர்கள் பள்ளியில் டோர்னமெண்ட் ஆரமிக்க இருவரும் அதில் சாதிக்க முனைந்தனர். அன்று தொடங்கியது அவர்களின் பேட்மிட்டன் கூட்டணி . ஸ்கூல்,ஜோனல், டிஸ்ட்ரிக்ட் என்று ஸ்டேட் வரை வந்துவிட்டார்கள். அவர்கள் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது நடைப்பெற்ற u17 டோர்னமெண்டில் அவர்கள் தான் சேம்பியன். உண்மையில் அவர்கள் நேஷனல் வரை ரெப்ரெசென்ட் செய்ய வாய்ப்பு வந்தது. ஆனால் துவாராவுக்கு பேட்மிட்டன் மட்டும் வாழ்க்கை இல்லை. அவனுக்கு படித்து நல்ல வேலையில் இருக்கவேண்டும் என்பதும் கனவு. அதனால் அவன் அப்போது பங்கேற்கவில்லை. அதே சமயத்தில் விவானுக்கும் தோள்பட்டையில் ஒரு காயம் ஏற்பட்டு மைனர் ஆப்ரேசன் செய்திருந்தான் (வழக்கமாக விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயம் தான்). அவனும் ரெஸ்ட் எடுக்கவேண்டிய சூழல். கூடவே ஒரே பையன் என்பதால் லலிதாம்மாவும் அவனை தற்காலிகமாக விளையாட்டிற்கு ஓய்வளிக்க சொல்ல அதோடு அவர்கள் கனவும் முடிந்தது. அதன் பின் மீண்டும் கல்லூரியில் அவர்கள் விளையாடினாலும் ஒரு தேர்ந்த ஷெட்டில் பிளேயராக வர வேண்டும் என்ற எண்ணம் அவர்களை விட்டுச் சென்றிருந்தது. அன்றைய துவாரவுடனான உரையாடலுக்கு பிறகு அனேஷியா அவனை மீண்டும் சந்திக்கவே இல்லை. ஒரே சமயத்தில் விளையாட்டு, படிப்பு என்று கவனம் செலுத்த முடியாமல் அந்த டாப் மூன்று ரேங்க் ஸ்டுடென்ட்ஸ் லிஸ்டில் இருந்து துவாரா மிஸ் ஆனான். ஆனாலும் முதல் ஏழுக்குள் வந்துவிடுவான். ஒருவகையில் துவாரா தெரிந்தே விலகியது தான் காரணம். அனேஷியாவுக்கு தன் மீது பொறாமை இருக்கும் என்று என்றோ விவானும் யாழும் சொன்னது நினைவுக்கு வர அவளுடன் படிப்பில் போட்டிப் போடுவதைத் தவிர்த்தான். அனேஷியாவும் அதே சமயத்தில் துவாராவை வீழ்த்த தன்னுடைய டேன்ஸ் பயிற்சிகளை குறைத்துக்கொண்டாள். ஆனால் யாழோ அப்போது தான் இன்னும் தீவிரமாக நடனத்தில் தன் கவனத்தைச் செலுத்தினாள். திவேஷும் படிப்பில் கவனம் செலுத்தினான். ஒருமுறை அனேஷியாவைப் பார்க்க வந்த அவள் அன்னை துவாராவை தனியாகச் சந்தித்தார். பின்னே எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது தன்னுடைய அண்ணன் மகனைக் கண்டு. தன் கணவரின் விருப்பத்திற்காக அவர் துவாராவின் அப்பாவுடனான உறவை துண்டித்துக்கொண்டார். துவாராவின் தந்தை தன்னுடைய பெரியப்பா மகன் தான் என்பதால் அவரும் அந்த உறவுக்காக அதிக முயற்சி எடுக்கவில்லை. வாஞ்சையாய் அவனை கொஞ்சியவர் அவனிடம் ஆறுதலாகப் பேச துவாராவிற்கு அது பெரும் நம்பிக்கை தந்தது. பிரிந்த இரு குடும்பங்களும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று அவரும் விரும்பினார். அதே நேரம் அவருக்கு தன்னுடைய மகளை எண்ணி அதிக அச்சம் உண்டானது. அனேஷியாவின் குணம் அப்படி. மேலும் தன் கணவர் வேறு அவள் மனதில் நஞ்சை வளர்த்துவிட்டார். வழக்கமான பெண்களைப் போல் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் இடையில் சிக்கிக்கொண்டார் அவர். துவாராவும் அவரிடம் அனேஷியா பேசியதை எதையும் காட்டிக்கொள்ள வில்லை. இப்படி ஒவ்வொருவரின் எண்ணமும் ஒவ்வொரு திசையில் இருந்தது. கொஞ்ச நாட்கள் அனேஷியாவின் கோவத்தைக் கூட்டாமல் இருந்தால் அவள் தன்னைப் புரிந்துகொள்வாள் என்று துவாராவும் நம்பினான். அந்த வருடம் பள்ளி ஆண்டுவிழா நடைப்பெற்றது. அழகிய பதுமைகளாக அனியும் யாழும் தங்கள் நாட்டியத்தை அரங்கேற்றினார்கள். அனேஷியா துவாரா இருவரின் இந்த கண்ணாமுச்சி ஆட்டம் அடுத்த வருடமும் தொடர்ந்தது. எட்டாவது படிக்கும் போது விவானின் ஆசைக்காகத் தான் nssல் சேர்ந்தான் துவாரா. ஏனோ விவானுக்கு எப்போதும் படிப்பு மட்டும் சற்று தூரமாகவே இருந்தது. அதுவே எக்ஸ்ட்ரா கரிக்குலர் என்றால் அங்கே முதலில் நிற்பவன் விவானாகத் தான் இருந்தான். துவாரா எல்லாத்தையும் முயற்சிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவன். துஷி மற்றும் திவேஷ் இந்த காலத்தில் படிப்பில் இன்னும் முன்னேறியிருந்தனர். அனேஷியாவும் படிப்பு மற்றும் டேன்ஸ் என்று இரண்டையும் சரியாக கவனம் செலுத்த முடியாமல் டாப் த்ரீயில் இருந்து விலகியிருந்தாள். அப்பப்போ துவாரா அனேஷியாவைப் பார்த்து ஒரு புன்னகையோ இல்லை பேசவோ செய்வான். அப்போதெல்லாம் அனேஷியா அவனைத் துளியும் கண்டுக்கொள்ள மாட்டாள். இதே காலத்தில் அனேஷியாவும் மீண்டும் அந்த கேங்கில் இணைந்திருந்தாள். ஆனால் அவளின் நோக்கமே வேறு. துவாராவுக்கும் விவானுக்கும் ஏதாவது சண்டை மூட்ட தான் அவள் விரும்பினாள். இது அவள் சேர்ந்த கொஞ்ச நாட்களில் விவான், யாழ், துஷி மூவருக்கும் புரியவும் செய்தது. அவ்வருடம் நடந்த u 15 டோர்னமெண்டில் விவான் துவாரா தான் பரிசு வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்திருந்தார்கள். அவர்களுக்குள் ஒற்றையர் போட்டியும் அடிக்கடி நடைப்பெறும். பெரும்பாலும் விவான் தான் வெல்வான். அவனுக்கு பேட்மிட்டன் என்றால் அவ்வளவு பிடிக்கும். துவாரா இயன்ற வரைப் போராடுவான். அவர்கள் என்ன தான் நண்பர்களாக இருந்தாலும் ஒற்றையர் ஆட்டம் என்று வந்தால் இருவரும் பரம விரோதிகள் போல் விளையாடுவார்கள். கிட்டத்தட்ட சமபலம் கொண்டவர்கள் என்பதால் அவர்களின் போட்டி என்றால் ஸ்கூலே வந்து வேடிக்கை பார்க்கும். அனேஷியாவும் கட்டாயம் பார்ப்பாள் ஆனால் துவாரா தோற்க வேண்டும் என்று மனதில் வேண்டியபடியே. துவாராவிற்கு அனேஷியா நாட்டிய உடையில் பயிற்சி செய்வதைப் பார்க்க அவனுள் ஒரு வித சிலிர்ப்பு வந்து அடங்கும். அவளுடைய நளினங்கள் அவனுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அவள் மீது அவன் மனம் செல்லத் தொடங்கியது. இதே காலகட்டத்தில் தான் அனேஷியாவின் மீது இன்னொருவனுக்கும் ஒரு ஈர்ப்பு தோன்றியது. சொல்லப்போனால் அவனுக்கு சிறுவயதிலிருந்தே அனேஷியா என்றால் பிடிக்கும். அதன் அர்த்தம் இந்த வயதில் தான் அவன் உணர ஆரமித்தான். அவன் தான் திவேஷ். இதே காலத்தில் தான் பசங்க நிறைய பேர் சீனியர்ஸ் உட்பட பலர் யாழுக்கு காதல் கடிதங்களை அனுப்பினார்கள். யாழ் குணம் எல்லோருக்கும் தெரியும். அவளிடம் மென்மை, வன்மை இரண்டும் குடிகொண்டிருக்கும். விவானும் இப்போது தான் எலிசபெத் என்னும் பெண்ணின் மீது மையல் கொண்டிருந்தான். அந்த எலிசபெத் தான் அனேஷியாவின் பெஸ்டி. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த துஷ்யந்தையும் தேடி ஒரு சகுந்தலா தேவி இருந்தாள். என்ன இவர்கள் காதலை காவியமாக்க ஒரு காளிதாசன் இல்லாமல் போய்விட்டான். என்ன அந்த 'சகுந்தலம்' போல் இதில் துஷ்யந்த் அவளை மறந்துவிடவில்லை மாறாக எஸ்கேப் ஆகிக்கொண்டே இருந்தான். அவளுக்காக தன்னைத் தூது போகச் சொல்லிக் கேட்க வந்தவளை யாழ் கொஞ்சம் கொஞ்சமாக அறுத்துக்கொண்டு இருந்தாள் (அதாங்க அதை வாங்கித் தா இதை வாங்கித் தா என்று ஏமாற்றிக்கொண்டு இருந்தாள் )."ஏன் துஷி அந்தப் பொண்ணுக்கு எஸ் சொல்லேன்" என்ற யாழை முறைத்தவன்,"நீ தினமும் ஓசியில பப்ஸ், ஜுஸ் சாப்பிட நான் தான் கிடைச்சேனா? ஓடிப்போயிடு" என்று மிரட்டிக்கொண்டு இருந்தான் துஷ்யந்த்.அடுத்த வருடம் அவர்கள் ஒன்பதாவது வகுப்பிற்குச் சென்றனர். அந்த வருடம் நடந்த nss கேம்பிற்கு செல்லும் போது தான் துவாரா சரித்திராவைச் சந்திக்க நேர்ந்தது. ஆனால் அந்த சமயத்தில் தான் அவன் மனதில் அனேஷியா குடிபுகுந்தாள். அதனால் அவன் அனுபவிக்கப் போவதை அப்போது துவாரா அறியவில்லை!
"அப்புறோம் என்ன தான் ஆச்சு?" என்றான் ஹேமா,
"அது, நான் துவாராவைக் கண்டுக்கொள்ளாமல் என் டேன்ஸ் படிப்புனு மட்டும் இருந்தேன். ஒரு நாள் நாங்க எல்லோரும் எங்க ஸ்கூல் கார்டென்ல பேசிட்டு இருந்தோம். அப்போ துவாரா என்னைப் பார்க்க வந்தான்."
"அனேஷியா என் மேல் இன்னுமா உனக்கு கோவம் போகல? என்கிட்டப் பேசு அனி . ஏன் இப்படி அவாய்ட் பண்ற ?"
"நான் ஏற்கனவே உன்னிடம் சொல்லிட்டேன். நமக்குள்ள ஏதுமில்லை. அதும் நம்ம குடும்பத்துக்குள்ள இனி எப்பயும் ஒட்டாது. அவ்வளவு தான்"
"சரி நான் ஒரே ஒரு கேள்வி கேட்கறேன். என் அம்மாவை உங்களுக்குப் பிடிக்குது ஆனா என்னையும் என் தங்கையையும் மட்டும் பிடிக்கல ரைட்?"
"ஆம். ஏன்னா உங்க ரெண்டு பேருக்குள்ளையும் உங்க அப்பாவும் இருக்கார். போதுமா?"
"ஓகே அனி, நான் ஒன்னு சொல்லணும்.
அது... எனக்கு உன்னைப் பிடிச்சியிருக்கு. நான் உன்னை விரும்புறேன்னு நெனைக்கிறேன்" என்றதும் கடும் சினம் கொண்டவள் நெருப்பாய் வார்த்தையை விட்டாள்."எப்படி உங்க அப்பா உன் அம்மாவை கல்யாணத்துக்கு அப்புறோம் அடிச்சு கொன்ன மாதிரி நீயும் என்னைக் கொலைசெய்யவா?" என்றவள்,"என் வீட்டுலயே இதுக்கு சம்மதிக்க மாட்டாங்க. அப்படியே அவங்க சம்மதிச்சாலும் நான் சம்மதிக்க மாட்டேன். நீங்க ஒரு கொலைகார குடும்பம்" என்றவள் அங்கிருந்து சென்றுவிட்டாள். அவளின் இந்த வார்த்தை துவாராவை அதிகம் பாதித்தது.ஆனால் இந்தக் கோவம் எல்லாம் அவன் தந்தையின் மீது சென்றது. அவர் செய்தச் செயலால் இன்று அவனை அவன் அன்னையின் குடும்பம் ஏற்க மறுக்கிறது என்று எண்ணி வெதும்பினான்.ஆனால் துவாரா இவற்றை எல்லாம் அப்படியே தெரியப்படுத்திய இன்னொரு நபர் கீர்த்தி. முதலில் துவாரா அனேஷியா பற்றியும் அன்று அவன் அத்தை (அனியின் அன்னை ) வந்து சென்றது பற்றியும் சொல்ல முதலில் அவளும் தங்களுடைய அன்னையின் குடும்பத்து மீது ஆசைக்கொண்டாள் தான். ஆனால் அதன் பிறகு அவர்கள் எந்த நல்லது கெட்டதுக்கும் இவர்களைச் சந்திக்காமல் சென்றது வரை அவளை பாதித்தது. அவளது திரட்டிக்கு தாய் மாமன் உறவுக்காகச் செய்தி சொல்லியும் அவர்கள் யாரும் எட்டிப்பார்க்காமல் போனது கீர்த்தியை வேறு மாதிரி யோசிக்க வைத்தது. அதாவது அவர்கள் அன்னையின் குடும்பத்துடன் இனி எப்போதும் உறவு பாராட்ட முடியாது என்றும் அவர்கள் யாருக்கும் அதில் உடன்பாடு இல்லையென்றும் அவள் அறிய துவாராவோ அவர்கள் கோவத்தைப் போக்கினால் நிச்சயம் தங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பினான். இருவரும் இரு வேறு மனநிலையில் இருந்தனர். அதன் பிறகு அன்று பள்ளியில் அருகே இருக்கும் மலையில் ட்ரெக்கிங் (மலையேறுதல்) செல்ல முடிவெடுக்க இவர்கள் எல்லோரும் அதில் தீவிரமானார்கள். காலையில் ஏறத் துவங்கி மதியத்திற்குள் சென்று நன்கு சாப்பிட்டு மாலை வரை அங்கிருந்துவிட்டு பிறகு பேருந்தில் மீண்டும் கீழே வருவது தான் திட்டம். அவர்கள் பள்ளியில் ட்ரெக்கிங் பயணம் எப்போதும் நடைபெறும். என்ன அதில் பங்குபெற ஒன்பதாவது வகுப்பிற்கு மேல் உள்ளவர்களுக்குத் தான் அனுமதி.அதனால் துவாரா, விவான், யாழ் ஆகியோர் இந்த நாளுக்காக தவமிருந்தனர் என்றே சொல்லலாம். அட்வென்சர் எனப்படும் சாகசம் சார்ந்ததன் மீது யாழ், விவான் இருவருக்கும் பெரும் இஷ்டம். துவாராவுக்கும் செல்ல வேண்டும் என்று தோன்ற வரமாட்டேன் என்ற துஷியை உருட்டி மிரட்டி அழைத்து வந்தாள் யாழ். இதில் யாழ், துவாரா, விவான் ஆகியோர் மட்டும் nssல் இருந்ததால் இதுபோல் நிறைய முன்னனுபவம் அவர்களுக்கு இருந்தது. மாறாக அனேஷியா, திவேஷ், துஷி ஆகியோருக்கு இது பெரும் சிரமமாக இருந்தது. அன்றும் சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் மலை ஏறத் துவங்கிவிட்டனர். யாழ் விவான் இருவரும் போட்டிப்போட்டு முன்னேறிச் செல்ல துவாரா மற்றவர்களுடன் வந்தான். அவன் அனேஷியாவுடன் எப்படியாவது பேசலாம் என்று நினைக்க அங்கே அவளோ திவேஷிடம் கதையளந்தபடி வந்தாள். அவர்களால் உண்மையில் முடியவில்லை. தடுமாறியபடியே ஏறினார்கள். இதனாலே அவளுடன் மெதுவாகச் சென்றான் துவாரா.துவாரா தன்னையே பார்ப்பதை உணர்த்த அனேஷியா அவனை சற்று அழவைக்க நினைத்து தனியாக வேறொரு பாதையில் சென்றாள். அதை முதலில் கவனிக்காத துவாரா பின்பு உணர்ந்து அவளைத் தேட அங்கே அவள் காணவில்லை. துஷி திவேஷிடம் விசாரித்தவன் அவளைத் தேட இவனும் மாற்று பாதையில் சென்றான். ஆனால் அவளோ இவனுக்கு முன்னாடியே அங்கே வேறொரு பாதையில் அவள் உடமைகளைக் கொட்டிவிட்டு மீண்டும் பழைய வழியில் சேர்ந்து விட்டாள். இதை அறியாதவன் அவளைத் தேடி வந்து அவள் இல்லாமல் போக கீழே அவளது பொருட்கள் எல்லாம் சிதறியிருக்க பயந்தவன் அந்தக் காட்டினுள் அவளைத் தேடிச் சென்றான். (மலை ஏறும் போது குறிப்பிட்ட சில பாதைகளில் மட்டும் தான் செல்ல வேண்டும். வழி மாறிச் செல்லக் கூடாது .அங்கே சில ஆபத்துகள் இருக்கலாம் .) அதற்குள் மலையேறியவர்கள் எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க அனேஷியாவோ எதைப்பற்றியும் கவலை இன்றி சாப்பிட்டாள். முதலிலே சென்ற யாழ் மற்றும் விவான் இருவரும் துவாராவைக் காணாது அவனுக்காகக் காத்திருந்தனர். நேரம் ஆக ஆக பயந்தவர்கள் எல்லோரிடமும் விசாரித்து அவனைத் தேடிச் சென்றனர். அங்கே துவாராவோ அனேஷியாவைத் தேடி அலைந்தான். தங்கள் ட்ரெக்கிங் கைடை (வழிகாட்டுபவர்) கூட்டிக்கொண்டு யாழ் மற்றும் விவான் மீண்டும் சென்று ஒருவழியாக துவாராவைப் பார்க்க அங்கே அவனோ அனேஷியாவுக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ என்று நினைத்து பயந்து அழுதுகொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் விவான் அவனை அடிக்க பிறகு விஷயம் தெரிந்தது. ஏனோ யாழுக்கும் விவானுக்கும் இதை அனேஷியா வேண்டுமென்றே தான் செய்திருக்கக் கூடும் என்று உணர்ந்து அவளைத் தேடி வந்து அடிக்க அது பெரிய கைக்கலப்பில் முடிந்தது. அந்தச் செயலுக்காக அனேஷியா, யாழ், விவான் மூவரும் சஸ்பெண்ட் கூடச் செய்யப்பட்டனர்.அப்போது தான் துவாரா ஒன்றை மனதில் நினைத்தான். இனி எக்காலமும் அனேஷியாவிற்கு அவன் மீது காதலும் வராது ஏன் மனிதாபிமானம் கூட வராது என்று அறிந்துகொண்டான். காரணம் அவர்கள் அன்று மலை ஏறியதும் தான் அந்தப் பகுதியில் கரடி ஒன்று இருப்பதாகச் செய்தி பரவ இதை அறிந்தும் அன்று துவாராவை சிக்கலில் மாட்டிவிடத் துணிந்த அனேஷியாவை யாழ், விவான், துஷி மூவரும் சரமாரியான கேள்விகள் வசைவுகள் கொடுத்து அனுப்பினார்கள். பாவம் அனேஷியா-துவாரா விஷயம் எதுவும் அவர்களுக்குத் தெரியாது. மேலும் அந்தச் சமயம் தான் துவாரா மீண்டும் பள்ளியில் டாப் த்ரீயில் வரத் துவங்கினான். இதற்கும் அடுத்தபடியாக இன்னொரு சம்பவம் நடந்தது. அடுத்த வருடம் பத்தாம் வகுப்பில் பையாலஜி செய்முறை நடைபெற பாட்டனி (தாவரவியல் ) ப்ராக்டிகளுக்காக துவாரா தெர்மோலில் 'வாட்சன் அண்ட் கிரீக் டிஎன்எ மாடல்' (இரட்டைச்சுருள் / double helix) செய்திருக்க, மறுநாள் காலை பிராக்டிகல் நடைபெற இருந்தது. பப்லிக் பரீட்சை என்றதும் அந்த வயதிற்கே உரிய பயத்தில் அவர்கள் சென்று உறங்க, பதினோரு மணிவாக்கில் எழுந்த விவான் அங்கே வைக்கப்பட்டிருந்த துவாராவின் ப்ராஜெக்ட் இரண்டாக உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டான். விவானுக்கு என்ன செய்வதென்று கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. உடனே யாழ், துஷி இருவரையும் எழுப்பி நடந்ததைச் சொல்ல துவாராவை எழுப்பாமலே அவர்கள் மூவருமாக இரவோடு இரவாகவே மீண்டும் அதைச் செய்தனர். மறுநாள் காலையில் துவாராவிடம் சொல்லஅது யாரோட வேலையாக இருக்குமென்று எல்லோருக்கும் தெரிந்தது. விவான், யாழ் இருவரும் அவளுக்கும் அதே தண்டனையைக் கொடுக்க நினைக்க துவாரா தடுத்துவிட்டான். அதன் பிறகு அனேஷியாவை நிரந்தரமாக அவர்களின் குழுவில் இருந்து நீக்கியவர்கள் பனிரெண்டாவது முடிக்கும் வரை நான்கு நபர்கள் கொண்ட குழுவாகவே இருந்தனர். இருந்தும் விவானும் யாழும் அதை சும்மா விடவில்லை. அனேஷியாவை மிரட்ட முதலில் தனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்றவள் பின்பு ஒப்புக்கொண்டாள். அதோடு அவர்கள் உறவு பிரிந்தது. அதன் பிறகும் துவாராவிற்கு அனேஷியா மீது நம்பிக்கை இருந்தது. சொல்லப்போனால் அவளின் இந்தச் செய்கைகளை அவன் ரசித்தான். ஏதோ ஒரு வகையில் தன் அன்னையை இவளும் அதிகம் நேசிக்கிறாள் என்றும் அதனால் தான் இவ்வாறு நடந்துகொள்கிறாள் என்றும் அவன் நம்பினான். ஆனால் நேசத்திற்கும் வன்மத்திற்கும் வித்தியாசம் அவன் அறியவில்லை போலும். ஆனால் அவள் மனதில் அவன் மீதான அந்த தவறான எண்ணம் துளியும் மாறவில்லை. இறுதியாக பனிரெண்டாம் வகுப்பை முடித்ததும் ஒரு முறை அனேஷியாவைச் சந்தித்தான். வழக்கம் போல் அவன்மீது வன்மத்தைக் கொட்டியவளிடம் இருந்து விடைப்பெற்றான் துவாரா. பத்தாவது படிக்கும் போதே யாழ், விவான், துஷி ஏன் திவேவிற்கும் கூட அனேஷியாவின் மீது துவாராவிற்கு இருந்த காதல் நன்கு புரிந்தது. எலிசபெத் கூட தான் விவானை ஒதுக்கினாள், துஷியும் சகுந்தலாவை ஒதுக்கினான். ஆனால் அதில் எதுவும் வன்மமோ தீராக் கோவமோ இருந்ததாக யாரும் அறியவில்லை. ஆனால் துவாரா மீது அனேஷியாவுக்கு இருந்த வெறுப்பை எல்லோராலும் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. என்ன தான் சிறுவயதில் அனேஷியா மற்றும் திவேஷ் இருவரும் தங்களின் நண்பர்களாக அதும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் ஸ்கூல் முடியும் போது துவாரா, விவான், யாழ், துஷி ஆகிய நால்வர் மட்டுமே அதே பழைய நட்போடு அதும் இன்னும் ஆழமான நட்போடு இருந்தனர். இருந்தும் அனேஷியா துவாராவைத் தவிர அனைவரிடமும் சகஜமாகத் தான் பழகுவாள். அதற்கு ஏற்றார் போல் துவா, விவா ஒரே கல்லூரியிலும் யாழ், துஷி ஒரே கல்லூரியிலும் பயின்றனர். அந்தக் காலக்கட்டத்தில் உருவான வாட்ஸ் அப், பேஸ்புக் மூலமாக அவர்களின் அந்த பழைய நட்பு இன்று வரை அப்படியே தொடர்கிறது. pls read 54 continue...
 
சிறு வயதிலேயே அனுவிற்கு அப்படி சொல்லி கொடுத்திருக்கிறார்கள், அவளும் என்ன செய்வாள்?
இன்றே வந்ததற்கு ??
தவறு அவள் மீது மட்டுமில்லை நன்றி
 
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு சும்மாவா சொன்னாங்க குழந்தைகளுக்கு நாம சின்ன வயசுல என்ன சொல்லிக்குடுக்கறமோ அதுதான் வரும்..... இன்னும் என்னால துவா அம்மா வீட்டு மனிதர்களை மன்னிக்க முடியவில்லை...... கதைக்கே இப்படின்னா இது நிஜம்னு வேற சொல்றீங்க...... ரொம்ப பாவம்ங்க......
 
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு சும்மாவா சொன்னாங்க குழந்தைகளுக்கு நாம சின்ன வயசுல என்ன சொல்லிக்குடுக்கறமோ அதுதான் வரும்..... இன்னும் என்னால துவா அம்மா வீட்டு மனிதர்களை மன்னிக்க முடியவில்லை...... கதைக்கே இப்படின்னா இது நிஜம்னு வேற சொல்றீங்க...... ரொம்ப பாவம்ங்க......
these are called hard realities... they are not easy to digest... anyways கதையை கதையா மட்டும் பாருங்க. ரொம்ப டீப்பா போக வேண்டாம். அது தேவையில்லாத மன அழுத்தங்களுக்கு வழிவகுக்கும். நன்றி??
 
Top