Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!- 55

Advertisement

praveenraj

Well-known member
Member
பள்ளியின் இறுதி நாள் வரை நடந்ததை எல்லாம் அனேஷியா அங்கிருந்தவர்களுக்குச் சொல்லி முடிக்க எல்லோருக்கும் இப்போது என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் வெகு சிலரைத் தவிர எல்லோரின் முகமும் அனேஷியாவின் மீதான கோபத்தைத் தான் பிரதிபலித்தது. அவனது கல்லூரி தோழர்கள் எல்லோருக்கும் அவன் மீது அன்பும் அனேஷியாவின் குழுவினருக்கு அனுதாபமும் வந்தது. ஏனோ அது வரை நடந்தது மட்டும் தான் சபையில் தெரியப்படுத்தினாள் அனேஷியா. 'அந்த' சம்பவத்தைப் பற்றி அவள் மூச்சைக் கூட விடவில்லை. இரண்டு காரணம், அதைச் சொன்னால் தனக்கு பெரிய அவமானமும் அசிங்கமும் காத்திருக்கு என்று அறிந்தாலும் உண்மையில் அதை அவள் தவிர்க்க காரணம் அதுவல்ல. துவாராவின் ப்ரைவேசி தான் முதல் காரணம். அந்த அவமானத்தை ஏற்படுத்திய அவளுக்கே இத்தனை வருடங்களாக நிம்மதியான உறக்கமும் சிரிப்பும் இல்லாத போது துவாராவின் நிலையை நினைக்கையில் அவளுக்கு கண்ணீர் மட்டும் தான் வந்தது. மணி நள்ளிரவை கடந்து இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது.
யாழ், துஷி, திவே மூவரும் அனேஷியாவை சமாதானம் செய்ய அப்போது தான் அவளுக்கு இன்னும் அழுகை பீறிட்டு வந்தது. உண்மையில் இப்போது அவள் மனம் பயத்தில் நடுங்குகிறது.பின்னே அவளுக்குத் தெரியுமே எப்படியும் இந்நேரம் நடந்தது அனைத்தும் விவானுக்கும் தெரிந்திருக்கும். இன்னும் சற்று நேரத்தில் கொலைவெறியில் தன்னைத் தேடி வருவான் என்றும் அவனை எப்படி எதிர்கொள்வதென்றும் அவளுக்குத் தெரியவில்லை. விவானின் கோவம் பற்றி அனேஷியா அறியாததா? அவன் பழகும் வரை அவ்வளவு இனிமையானவன். ஆனால் கோவம் வந்தால் எரிமலையாக வெடிப்பானே என்று யோசனையில் இருந்தாள்.
மிருவுக்கு இப்போது துவாராவைப் பற்றி நினைக்க அழுகை வந்தது. விவி, நித்யா ஆகியோரும் அழுதனர். மற்றவர்கள் எல்லோரும் அமைதியாக இருக்க,ஜெஸ்ஸி பெனாசிர் இருவருக்கும் இதுவரை கம்பீரமாக மட்டுமே பார்த்து பழகிய அனேஷியாவை இப்படிப் பார்க்கப் பொறுக்காமல் அவளைச் சமாதானம் செய்தனர். லோகேஷிற்கும் கூட அனேஷியா மீது இருந்த கோவம் குறையாவிட்டாலும் ஒரு அனுதாபம் தோன்றியது.
அங்கே துவாராவுடன் சென்ற விவான்,"ஊருக்குப் போறேன்" என்று அடம்பிடித்த அவனைச் சமாதானம் செய்ய முயன்றான் . ஒரு வழியாக அவனை அமரவைத்தவன், "விடுடா அவளைப் பற்றித் தான் தெரியுமே? நீ ஏன் ஃபீல் பண்ற?" என்று ஆறுதல் செய்தவன்,"ஆனா ஸ்கூல்ல நடந்ததுக்கா இன்னும் கோவமா இருக்க?" என்று கேட்க உடல் நடுங்கியவன் விவான் தோளில் சாய்ந்து தேம்பினான். அப்போது தான் நேற்று மாலை கீர்த்தி சொன்னது நினைவுக்கு வர,"டேய் ஸ்கூலுக்கு அப்புறோம் அவளை எங்கேயாவது பார்த்தியா?" என்றதும் மெல்ல திக்கித் திணறி எல்லாமும் சொன்னான். பின்னே நான்கைந்து வருடங்களாக அவன் மனதில் நினைத்து வெதும்பும் விஷயம் அல்லவா? இறுதியாக அனைத்தையும் சொன்னவன் அவமானத்தில் உடல் நடுங்கி கூனிக் குறுக்கினான். விவானால் அதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அவன் கண்கள் கலங்கி,"டேய் துவாரா இங்கப் பாரு என்னைப் பாருடா. நீ நல்லவன் தான். நீ தங்கமானவன்டா. யாரோ ஒருத்தி என்னமோ பண்ணா நீ எப்படிடா தரம் தாழ்ந்துப் போவ? சங்கு சுட்டாலும் வெண்மைடா" என்று முயன்ற அளவுக்கு நண்பனை ஆறுதல் செய்தான். விவானால் அந்த அவமானத்தை நினைக்கக் கூட முடியவில்லை. அதே நேரம் அனேஷியா மீது அவனுக்கு இருந்த ஆத்திரம் வானினும் உயர்ந்து நிலத்தினும் பரந்து உச்சம் தொட்டது. இப்போது விவானுக்கு தானும் இதையே தானே இவனுக்கு ட்ரைனில் செய்தோம் என்று நினைத்து அவனை ஆறுதல் செய்து அவன் மடியில் படுக்க வைத்தான்."துவா துவாரா அவ எல்லாம் ஒரு ஆளே இல்லைடா. நீ..." என்று சொன்னவன் அழுத துவாராவை சமாதானம் செய்யத் தெரியாமல் தவித்தான்.
கோவமாய் எழுந்தவன் துவாராவின் கரத்தைப் பற்றி,"நீ வாடா இன்னைக்கு இருக்கு அவளுக்கு..." என்று இழுக்க,"வேண்டாம் விவான். நான் வரல. நான் போறேன். இந்த விஷயம் இந்நேரம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். என்னால யாரையும் பேஸ் பண்ண முடியாது. நான் போறேன்" என்றான். "அன்னைக்கு கீர்த்தி மட்டும் என்கிட்ட சத்தியம் வாங்கலனா நான் இந்நேரம் ஏதாவது தப்பா முடிவெடுத்திருப்பேன் விவான். நானும் நிறைய கவுன்செல்லிங் போனேன். இப்போ ஓரளவுக்கு பரவாயில்ல ஆனாலும் ரெண்டு மூணு பேருக்கு மேல இருக்குற இடத்துல இருந்தாலே எனக்கு ஒரு மாதிரி இருக்கும். அதும் பொண்ணுங்க இருக்க இடத்துல இருக்கவே பிடிக்கல" என்றான். விவானுக்கு கடந்த சில வருடங்களாக துவாரா தன்னையே தனிமைப் படுத்திக்கொள்கின்ற காரணம் நன்கு விளங்கியது. மேலும் கீர்த்தி அடிக்கடி எதற்காக தன்னிடம் துவாரவைப் பற்றிச் சொல்லி அழுகிறாள் என்பதும் நன்கு விளங்கியது. உடனே அவன் செல் எடுத்தவன் விவியை அழைத்து இங்கே வரச் சொன்னவன் துவாராவுடனே விவியை இருக்கச் சொல்லிவிட்டு அனேஷியாவை ஒரு வழி செய்ய வேண்டும் என்று கிளம்பினான்."டேய் விவா, அவளைப் போகச் சொல்லிடு. இனிமேல் என் கண்ணுல மட்டும் அவ படவே கூடாது. அண்ட் அவளை..." என்று நிறுத்தியவன், "அவளை ஏதும் பண்ணாத..." என்று முடிக்க முறைத்தவன் எதுவும் பேசாமல் சென்றான்.
அழுதழுது சோர்ந்தவளுக்கு தண்ணீர் கொண்டு வந்தாள் ஜெஸ்ஸி. அதைப் பருகியபடி இருந்தவளின் கை தட்டிவிடப்பட அந்த பாட்டில் தரையில் விழுந்தது. விவானின் முகம் இதுநாள் வரை இல்லாமல் கோவத்தில் அக்னி பிழம்பாய்க் காட்சியளிக்க சுதாரிப்பதற்குள் அவளை அறைய முறைப்பட அதற்குள் குறுக்கே வந்த துஷியின் மீது அந்த அடி விழுந்தது. விவானின் இந்த திடீர் தாக்குதலில் மிரண்டவர்கள் அவனை அனேஷியாவிடமிருந்து பிரித்து நிறுத்தினர். இப்போது விவானைப் பார்த்தவள்,"நான் தெரியாம..." என்று முடிப்பதற்குள்,"வாயை மூடு எனக்கிருக்கும் கோவத்துக்கு நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. எப்படிடி இவ்வளவு பண்ணிட்டு உன்னால வாய் கூசமா என்கிட்டப் பொய்ச் சொல்ல முடிஞ்சது?" என்று பொங்க அவனின் குரலில் அங்கிருந்த எல்லோரும் அரண்டனர்.
"விவான், இது தப்பு. அதெப்படி இவளை நீ கை நீட்டலாம்? ஆம்பளைனா என்ன வேணுனாலும்..." என்று யாழ் அனிக்கு வக்காலத்து வாங்க,"என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாத" என்று சொன்னதில் யாழ் அமைதியானாள். கண்களை மூடி கோவத்தைக் கட்டுப்படுத்தியவன் திரும்பி அங்கே நின்ற எல்லோரையும் பார்த்து, "நீங்க எல்லோரும் கொஞ்சம் அந்தப் பக்கம் போங்க. நாங்க கொஞ்சம் தனியாப் பேசணும்" என்றதும் அவன் கோவம் உணர்ந்தவர்களாக யாழ், துஷி, திவேஷ் தவிர்த்து எல்லோரும் விலகிச் சென்றனர். நித்யா அவனை ஒரு பார்வைப் பார்க்க இதுநாள் வரை விவானிடம் இப்படியொரு கோவத்தை அவள் கண்டதே இல்லை என்று வியந்தாள் கூடவே பயப்படவும் செய்தாள்.
"என்ன நெனச்சிட்டு இருக்க நீ? ஒருத்தன் நீ செய்யுறதுக்கெல்லாம் எதிர்வினை செய்யாம இருந்தா என்ன வேணுனாலும் செய்யலாம்னு அர்த்தமா?" என்று உரும, "என்னடா இப்படிப் பண்ற? அவளே அவ பண்ண தப்பெல்லாம் உணர்ந்து..." என்ற திவேஷைப் பார்த்து,"ஓ மேடம் திருந்திட்டாங்க அப்படித் தானே?" என்றவன்,"இவ என்ன பண்ணியிருக்கானு தெரியுமா? பிரச்சனை ஸ்கூலோட முடியல" என்றதும் யாழ் துஷி, திவே மூவரும் உண்மையில் அதிர்ந்து அனேஷியாவைப் பார்க்க அவளோ தலை குனிந்து நின்றாள்."என்னடா ஆச்சு?" என்ற யாழிடம் எப்படிச் சொல்வது என்று குழம்பினான். இறுதியில் வேறு வழியின்றி,"நான் இப்போ சொல்ற விஷயம் நீங்க மூணு பேரும் செத்து சாம்பல் ஆகும் வரை வெளிய தெரிஞ்சதாகக் காட்டக் கூடாது" என்ற நிபந்தனையில் துவாரா சொன்னதைச் சொல்ல இருவர் அதிக அதிர்ச்சியில் உறைந்தனர். திவேக்கு தான் ஏற்கனவே தெரியுமே. ஆனாலும் சற்று அதிர்ந்தான். காரணம், அனி வரப் போகிறாள் என்றதும் ரொம்ப குஷியானவன் பின்பு ஒருநாள் அனேஷியா நடந்த அனைத்தும் அவனிடம் சொல்லி அழுதாள். ஆனாலும் கூட எல்லோரு முன்பும் துவாராவை அடித்தேன் என்று தான் சொல்லியிருந்தாள். எந்த இடத்தில் எப்படி அடித்தாள் என்பது இப்போது விவான் சொன்னதும் தான் முழுவதும் தெரிந்தது. விவான் சொன்னதை எல்லாம் கேட்டதும் திரும்பி அனேஷியாவின் கன்னத்தில் இரண்டு வைத்தாள் யாழ். யாரும் இம்முறை தடுக்கவில்லை. முன்பு அனேஷியா திவேஷிடம் நடந்ததைச் சொன்ன போது கூட ஒரு பெண்ணுக்கு இதுபோல் தொல்லைகள் ஈவ் டீசிங் போன்றவை நடப்பதில் இருந்து தற்காத்துக்கொள்ள தான் முனைந்தாள் என்று சொல்லி துவாராவை சமாளித்து விடலாம் என்று திவேஷ் நினைத்திருந்தான். ஆனால் அனேஷியா செய்தது முழுக்க முழுக்க மூடச் செயல் என்று இப்போது தான் புரிந்தது.
தூரத்தில் நடப்பதையெல்லாம் அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். இவர்களின் பேச்சுகள் கேட்காவிட்டாலும் யாழ் அனியை அடித்ததை எல்லோரும் பார்த்தனர்.
நீண்ட மௌனம். சரி நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம் என்று யோசித்தனர். "ஒழுங்கா நாளைக்கு காலையில பொட்டியைக் கட்டிட்டு ஊருக்குப் போற வழியைப் பாரு. உன் ஒருத்தியால எத்தனை பேருக்கு கஷ்டம்" என்றான் விவான்.
"நான் போயிடுறேன் விவான். ஆனா ஒரே ஒரு தடவை துவாராவைப் பார்த்துப் பேசிட்டுப் போயிடுறேன்" என்றதும்,"லூசாடி நீ? எந்த நம்பிக்கையில அவன் உன்கிட்ட பேசுவானுனு நினைக்கிற? இப்போக்கூட இனி அவன் மூஞ்சியில் முழிக்காதனு தான் சொல்லி அனுப்பினான். நீ கிளம்பு" என்றான். இப்போது அவள் அழ எல்லோரும் அவளைச் சுற்றி அமர்ந்து ஆறுதல் செய்தனர்."புரிஞ்சிக்கோ அனி, எங்களுக்கு துவாரா முக்கியம்" என்றாள் யாழ். அதில் நிமிர்ந்தாள் அனேஷியா. "சாரி டு சே திஸ். எல்லாம் தெரிஞ்ச பின்னும் அவனை விட்டுக்கொடுக்க முடியல. நீயும் முக்கியம் தான். நீ துவாரா வாழ்க்கையில இருந்து விலகிடு அனேஷியா" என்றவள்,"அவனை இனியாச்சும் நிம்மதியா இருக்க விடு. உன்னால அவன் அவனோட அப்பாவை வெறுத்துட்டான். இவங்க ரெண்டு பேர் பேசாததால கீர்த்திக்கு மனவுளைச்சல். இதெல்லாம் தெரிஞ்சு விவான் அப்பா அம்மாக்கும் வருத்தம். விவான், துஷி, திவே நான் எல்லோரும் அடிக்கடி துவாராவை நெனச்சு வருத்தப்படுவோம். அவன் அம்மா இல்லாத அப்போ கூட சந்தோசமா சிரித்தான். ப்ரீயா பேசுனான், பழகுனான். ஆனா இப்போல்லாம் எங்க யார்கூடவும் முந்தி மாதிரி இருக்கறது இல்ல. அவன் ஒருத்தனுடைய வருத்தம் எங்க எல்லோரையும் ஏதோ ஒரு வகையில பாதிக்குது. எங்களுக்கு அவன் சந்தோசமா நிம்மதியா இருக்கனும். நேத்துக்கூட சரித்திரவைப் பற்றி மகிழ்ச்சியா சொன்னான்" என்றதும் அனி நிமிர்ந்து யாழைப் பார்க்க,"எஸ் அவன் அந்தப் பெண்ணை விரும்புறான். அவளோட வாழ ஆசைப்படுறான். நாளைக்கு அந்தப் பொண்ணு இங்க வராலாம். சோ ப்ளீஸ்" என்று யாழ் நிறுத்த அனேஷியாவுக்கு அவள் சொல்ல வருவது புரிந்தது.
"நான் கிளம்பிடுறேன். ஒரே ஒரு தடவை அவனைப் பார்த்துப் பேசணும். ப்ளீஸ் அதுக்கு மட்டும் எப்படியாவது ஏற்பாடு பண்ணுங்க" என்று மன்றாடினாள் அனேஷியா. ஒருவர் மற்றவர் முகத்தைப் பார்த்தனர். எல்லோருக்கும் என்ன சொல்வதென்று புரியாமல் இருக்க,"சரி நான் ஏற்பாடு பண்றேன்" என்றாள் யாழ். மணியைப் பார்க்க அது மூன்றை கடந்திருந்தது."சரி போய் தூங்குங்க. பை" என்றவள்,"அனி என்கூட வந்து தூங்கு" என்று யாழ் தன்னோடு அவளை அழைத்துச் சென்றாள். இப்போது திவேஷ் துஷி, விவான் மூவரும் மற்றவர்களை நோக்கி வந்தனர். என்ன பேசுவதென்று புரியாமல் விழிக்க திவேஷ் தொடங்கினான்,"சாரி கைஸ். இந்த டூரே துவாராவுக்காக அரேஞ் ஆனது தான். சில விஷயம் ரொம்ப பெர்சனல். வெளியில சொல்ல முடியாது. ஹோப் யூ கைஸ் அண்டர்ஸ்டென்ட்." என்றவன் திரும்பி லோகேஷப் பார்த்து,"சாரி ப்ரோ இதனால் தான் உங்களுக்கு பதில் அனி ஹெட்டா வந்தா. ஆக்சுவல்லி துவாராவை வரவைக்க தான் எல்லோரையும் கிளப்பி கூட்டிட்டு வந்தோம். வந்த வேலை அல்மோஸ்ட் முடிஞ்சது. டைம் ஆச்சு எல்லோரும் ரூமுக்கு போங்க" என்றவன்,"நாளைக்கு மதியமா வெளியே போலாம் ஓகே? சாரி ஃபார் தி ட்ரபிள்" என்றவன் துஷியோடு அவன் அறைக்குச் சென்றான்.

கபிள்ஸ் மற்றும் சிங்கிள்ஸ் எல்லோரும் அவரவர் அறைக்குச் செல்ல உறங்கும் இளாவை எடுத்து நித்யா வர விவான் இப்போது அமைதியாக நின்றான். அதை உணர்ந்த மிரு நித்யாவிடமிருந்து இளாவை வாங்கிக்கொண்டு சென்றுவிட விவான் நித்யா இருவரும் அங்கேயே நின்றனர். விவி முன்னரே துவாராவை அழைத்துக்கொண்டு அறைக்குச் சென்றுவிட்டான்.

அவர்கள் எல்லோரும் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். ரேஷாவின் எண்ணம் முழுக்க துஷி - யாழ் ஆகியோரின் நட்பைப் பற்றியே இருந்தது. முதன்முதலில் தன்னுடைய தவறான அபிமானங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு துஷியுடனான முதல் சந்திப்பை நினைத்தாள். செல்போனில் அவள் வீட்டிலிருந்து அனுப்பிய அவனது புகைப்படத்தைக் கண்டு கண்சிமிட்டாமல் அமர்ந்திருந்தாள். தோழியின் நிலை பெனாசிருக்கு நன்கு புரிந்தது. ஆறுதலாக அவளின் தோளைப் பற்றி,"ரேஷு எனக்கென்னவோ நீ தான் அவசரப்பட்டுடியோனு தோணுது. கொஞ்சம் நல்லா யோசி" என்று அறிவுறுத்திச் சென்றாள்.

அனேஷியாவுடன் சென்ற யாழ் அவளிடம் சற்று ஆறுதலாகப் பேச அவளோ குழந்தைப்போல்,"துவா என்னை மன்னிப்பானா? எனக்கிருக்கும் இந்த குற்றயுணர்ச்சிக்கெல்லாம் ஒரு விடிவு கிடைக்குமா?" என்று மீண்டும் மீண்டும் கேட்க யாழுக்கு அவள் மீது கோவம் இருந்தாலும் இப்போது கோவத்தைக் காட்டிலும் கழிவிரக்கம் தான் தோன்றியது. தோழியை சமாதானம் செய்தவள் அவளை உறங்கவைத்து அருகில் அவளும் உறங்கினாள்.

"டேய் திவே, நீ அனியை லவ் பண்ற தானே?" என்று பட்டென உடைத்துக் கேட்ட துஷியை அதிர்ச்சியாகப் பார்த்தான். "சொல்லு லவ் பண்ற தானே?"

"ஹ்ம்ம்" என்று தலையாட்டினான்.

"கண்டிப்பா அனேஷியா ஆசை நிறைவேறாது. துவாரா அவளிடம் பேசுவான்னே எனக்கு நம்பிக்கை இல்லை. இதுல அவன் அவளை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கறதெல்லாம் சான்ஸே இல்லை. அதே நேரம் அனேஷியாவைப் பற்றி எல்லாமும் தெரிஞ்சவன் நீ. இப்பயும் அவளை அதே அன்போட லவ் பண்றியா?"

"துவாராக்கு அனேஷியா பண்ணது எந்த விதத்துலையும் சரியில்லை தான். ஆனா துவாரா விஷயத்தை விடு. நம்ம கிட்ட அவ எப்படிப் பழகுனா? தப்பு அவ மேல மட்டும் இல்லைடா. எல்லாத்துக்கும் முதல் காரணம் அவ அப்பா. அண்ட் கொஞ்சம் யோசி ஸ்கூல் வரை அவ துவாக்கு பண்ணது எல்லாம் தெரிஞ்சு இன்டென்சனலா செஞ்சது. ஆனா அந்த இன்சிடென்ட் கண்டிப்பா ஒரு ஆக்சிடெண்ட். நான் அவளுக்காகப் பேசுறேன்னு நினைக்காத, ஒரு பொண்ணா அவளோட இடத்துல இருந்து யோசி. பிடிக்கலைனு சொல்லியும் அவளை ஒருத்தன் டார்ச்சர் பண்ணியிருக்கான். அன்னைக்கு திடீர்னு அவளை யாரோ பின்னாலிருந்து தொட அவன் தான்னு அவ ரியாக்ட் செஞ்சிட்டா. கண்டிப்பா நான் அவளுக்கு வக்காலத்து வாங்கல.ஜஸ்ட் நடைமுறையைச் சொன்னேன். எத்தனை நியூஸ் ஸ்டோகிங் (stalking - பின்தொடர்வது) பண்றதும் லவ் பண்ணுனு டார்ச்சர் தரதும் மறுத்தா ஆசிட் ஊத்துறது இந்த மாதிரி இன்னும் நிறைய பார்க்கிறோம்? அப்போ ஒரு பொண்ணா அவளோட நிலையில யோசி. நான் திரும்பச் சொல்றேன் அவ பண்ணதை நான் ஜஸ்டிபை பண்ணல, ஆனா அவ சைட்ல இருந்தும் யோசிக்கணும். அதைவிட அவளோட மெண்டாலிட்டி பத்தி யோசி. நாம பண்ணது பெரிய குற்றம்னு தெரிஞ்சு நம்ம மனசாட்சி நம்மை குத்தி கிழிச்சும் அவன் அவளை என்ன பண்ணாலும் சரினு அவன் கிட்ட சாரி கேட்க வந்தா பாரு. தப்பு யாரு வேண்டுனாலும் பண்ணலாம் துஷி. ஆனா அது தப்பு தான்னு இங்க பல பேர் ஒத்துக்கறதே இல்லை. மீறி ஒத்துக்கிட்டாலும் எத்தனை பேர் மனசார அதை சரிப் பண்ண நெனைக்கறாங்க? இருந்தாலும் இதோட பைனல் முடிவு எடுக்க வேண்டியது துவாரா தான். அவளை மன்னிக்கறதும் மன்னிக்காம விடுறதும் அவன் கையில தான் இருக்கு. தூங்குவோமா?"

"ஹ்ம்ம்" என்று துஷி உறங்கினான்.

உண்மையில் நேற்று விவி தன்னிடம் கேட்டதன் பொருளை அறிய நினைத்தாள் சித்தாரா. அதற்குள் ஏதேதோ நடந்துவிட்டது. அதேபோல் தியாவும் மிருவின் முடிவு பற்றிக் கேட்கத் தான் காத்திருந்தான். அதுவும் நடக்காமல் போனது. இருந்தும் எல்லோருடைய மனதையும் அனேஷியாவின் அழுகையும் துவாராவின் கோவமும் தான் ஆக்கிரமித்திருந்தது. எவராலும் இந்தப் பிரச்சனைக்கு முடிவு சொல்ல முடியாமல் இருந்ததை நினைத்து வருந்தினார்கள்.

நித்யா இளாவை மிருவிடம் கொடுத்து அனுப்பியும் அங்கேயே நின்றாள். விவானும் அவளிடம் எப்படிப் பேசுவதென்று புரியாமல் தவித்தான்.'அவளும் எத்தனை முறை தான் தன்னிடம் கேட்டிருப்பாள்? நான் எதையும் அவளிடம் சொல்லாமல் இருந்துவிட்டேனே? என்னை துவாரா அடித்தான் என்று தானே சண்டையே இட்டாள்? ஆனால் அவளை நோகடித்து விட்டோமே?' என்று தவித்தான். இருவரும் தூரமாக நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். நித்யா அங்கிருந்து நகர்ந்து தங்கள் அறையை நோக்கிச் செல்ல விவானும் அவளைப் பின் தொடர்ந்தான்.

விவானின் நிலைமை என்னவென்று நித்யாவும் புரிந்துகொண்டாள் தான். 'துவாராவும் அனேஷியாவும் சந்தித்துக்கொள்ளக் கூடாதென்று அவன் எவ்வளவு மனவுளைச்சல் அனுபவித்திருப்பான்? ஒருவேளை இடையில் துவா அவளைக் கண்டிருந்தால் (துவாரா அனேஷியாவைப் பார்த்தது இவர்களுக்குத் தெரியாது) அவனால் இந்தப் பயணமே தடைப் பட்டிருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை தான். விவானின் நிலையை மூளை ஏற்றுக்கொண்டாலும் மனம் ஏற்கவில்லை. அவன் என்னை அடிப்பான். அதை கேட்க யாருக்கும் உரிமையில்லை என்ற வார்த்தை அவள் நெஞ்சில் வேல் பாய்ச்சி விட்டது. உரிமை இல்லையென்றால் அப்போ நான் யார் அவனுக்கு?' என்று வருந்தினாள் நித்யா. 'அவன் என்னைத் திட்டியிருந்தால் கூடப் பரவாயில்லை இப்படி பிரித்துப் பார்த்துவிட்டானே?' என்ற எண்ணம் நித்யாவை கண்ணீர் விடவைத்தது. அவள் அங்கு நிற்க பிடிக்காமல் தங்கள் அறைக்குள் புகுந்தாள். அவளைப் பின்தொடர்ந்தவன் அறையில் நுழைந்து தாளிட்டு அங்கேயே நின்றான்.

நித்யா கோவமாக ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டு வெளியேற விவான் இன்னும் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தான். அவள் அமைதியாகப் படுக்கப் போக,

"நித்யா, நான் கொஞ்சம் பேசணும்" என்றான்.

"உன் மேல உரிமையில்லாதவங்க கிட்ட நீ எதுக்கு பேசணும் விவான்?" என்றாள் நித்யா. அந்த வார்த்தையே அவனுக்கு அவள் எவ்வளவு காயமடைந்திருக்கிறாள் என்று உணர்த்தியது. அவன் இதுநாள் வரை எதை நினைத்து வருத்தம் கொண்டானோ பயந்தானோ இன்று அது நடந்துவிட்டது. எந்த முடிவும் எட்டப்படாமல் இருவரும் அழுது வேதனையோடு சென்றது அவனுக்கு இன்னும் கஷ்டமாக இருந்தது. துவாராவின் நிலையை இன்னும் விவானால் ஜீரணிக்க முடியவில்லை. அவன் மொத்த தெம்பும் வடிந்துவிட்டதாகவே உணர்ந்தான். இதில் தன் மனையாள் வேறு பாதித்து உள்ளாள் என்று நினைக்கையில் அவனுக்கு வருத்தமாக இருந்தது.

"நித்யா, நீ எவ்வளவு ஹர்ட் ஆகியிருக்கனு என்னால உணர முடியுது. நான் தான் அதுக்கெல்லாம் காரணம். மறுக்கவே இல்லை. ஆனா அதுக்கு முன்னாடி நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு நித்திமா ப்ளீஸ்" என்றான். அவனின் 'நித்திமா' என்ற வார்த்தை அவள் உயிர் வரைப் பாய்ந்து வந்தது. அவன் எப்போதும் நித்யா, நித்து, மேடம் என்று தான் அழைப்பான். ஆனால் அவனின் இந்த ஒவ்வொரு அழைப்புக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அதுவே ரொம்ப குஷியாக இருந்தால் அவளை சீண்ட எண்ணி டி போடுவான் இல்லை பெரிய பொண்ணு என்பான் எப்போதாவது. அவன் ஏதாவது பிரச்சனையில் இருந்தால் தான் நித்திமா என்பான். அவளும் அவன் சொல்லவிருப்பதைக் கேட்க ஆயத்தமானாள்.

"அன்னைக்கு ஒரு நாள் அனேஷியா என்கிட்ட போன் பண்ணி அழுதா. துவாராவை நான் மீட் பண்ணணும்னு கெஞ்சினாள். கூடவே துவாராவுக்கு இது தெரியக் கூடாதுனும் சொல்லிட்டா. எதேர்சையாக நாங்க அதாவது நான், துஷி, யாழ், துவா ஒரு நாள் பேசும் போது அனேஷியா பத்திப் பேச ஆரமிச்சதுமே அவன் எழுந்து போயிட்டான். அப்போ தான் புரிஞ்சது அவங்களுக்குள்ள என்னமோ இருக்குனு. கீர்த்தி வேற அடிக்கடி போன் பண்ணி துவாராவை கல்யாணத்துக்கு சம்மதிக்கச் சொல்லுங்க அப்பாவுடன் பேசச் சொல்லுங்கன்னு கேட்டுட்டே இருந்தா. சரி ஒரு வேளை துவாராவும் அனேஷியாவும் மீட் பண்ணா எதாவது மாற்றம் நடக்குமோனு தான் இந்த டூரையே அரேஞ் பண்ணேன். ஏற்கனவே எனக்கு கொஞ்சம் பயமா இருந்தது. அன்னைக்கு நாம எக்மோர் ஸ்டேஷன்ல சாப்பிடும் போது நான் பாதியில எழுந்து போனேன் பாரு அப்போ தான் அனேஷியா போன் பண்ணி பிளைட் டிக்கட் கடைசியில கிடைக்கல நாங்களும் ட்ரைன்ல தான் வரோம். கூடவே என் கொலீக்ஸும் ட்ரைன்ல போக தான் ஆசை படுறாங்கனு சொல்லிட்டா. அதனால துவாராவை என் கம்பார்ட்மென்டுக்கு உள்ள வராம பார்த்துக்கோடானு சொல்லிட்டா. அப்போ பிடித்தது டென்ஷன். சீட்டிங் எல்லாம் மாத்தி துவாராவையும் அவளையும் மீட் பண்ண விடாம... என்னால முடியல நித்யா. போதாக்குறைக்கு அவனை வேற அடிச்சிட்டேன். நான் ட்ரைன்ல அத்தனை பேர் முன்னாடி அன்னைக்கு அடிக்கும் போதும் அவன் என்னை பதிலுக்கு அடிக்கல. ஏன்னா தப்பு அன்னைக்கு அவன் மேலனு அவனுக்கும் தெரியும். ஆனா இன்னைக்கு அவன் நிலையை யோசிச்சுப் பாரு, நான், இந்த விவான், அவனோட பெஸ்ட் ஃப்ரண்ட் அவனை ஏமாற்றியிருக்கேன்னு அவனுக்கு கோவம். சில விஷயங்கள் வெளிப்படையாகச் சொல்ல முடியாது நித்யா. ஆனா ஒன்னு, இன்னைக்கு நான் அனேஷியாவை துவாரா கண் முன்னாடி நிறுத்தி பெரிய தப்பு பண்ணிட்டேன். நான் இதைச் செஞ்சியிருக்கக் கூடாது. அவ்வளவு தான் சொல்ல முடியும். அவனோட இந்தக் கோவம் நூறு பர்சென்ட் நியாயம். அவன் என்னை அடிச்சது சரி. அதனால் தான் நான் அமைதியா நின்னேன். செகண்ட், உனக்கே தெரியும் துவாரா எனக்கு எவ்வளவு க்ளோஸ்னு. நம்ம குடும்பத்துல அவன் யாருன்னும் உனக்குத் தெரியும். நம்ம வீட்டு ரேஷன் கார்ட்ல தான் அவன் பேரில்லை. அண்ட் எங்க பிரச்சனை அப்போ நீ எப்படி குறுக்க வந்து அவனை அடிக்க கை ஓங்கலாம்? நீயும் உன் ப்ரெண்டும் சண்டை போடும் போது நான் உன் பிரெண்டை அடிக்க முடியுமா? நான் அதை அந்தக் கோவத்துல சொன்னது நித்யா. கோவம்னாலும் அது தப்பு தான். அண்ட் நீ என்னதான் லேட்டா என் லைப்ல வந்திருந்தாலும் என் வாழ்க்கையில உன்னோட இடமெதுனு நான் உனக்கு சொல்ல வேண்டியதில்லை. பைனலி எனக்கு நீ வேணும் நித்யா. நீ பேசு, திட்டு பட் இப்படி யாரோ போல இருக்காத. ப்ளீஸ். யோசிச்சுப் பாரு ஒருவேளை நீ அவனை அடிச்சிருந்தா என்ன ஆகியிருக்கும்? உனக்கும் துவாராவுக்கு இருக்கும் உறவு மொத்தமா உடைஞ்சிருக்கும். நீங்க நல்ல ப்ரெண்ட்ஸ். நீயே சொல்லியிருக்க துவாரா உனக்கொரு நல்ல ஃப்ரண்ட் ,தம்பி மாதிரினு. உனக்கு என்மேல எல்லா உரிமையும் இருக்கு. ஆனா அதுக்காக நீ துவாராவை எப்படி அடிக்கப் போலாம் சொல்லு? உங்களுக்குள்ள சண்டை வந்திருந்தா நானும் அவனும் எப்படி பழகமுடியும் ? அண்ட் அம்மாக்கு துவாராவை எவ்வளவு பிடிக்கும்னு நான் சொல்ல வேண்டியதில்லை. அவங்க எப்படி இதை எடுத்திருப்பாங்க? இல்ல அண்ணி அண்ணினு உன்கிட்ட உரிமையாய்ப் பேசுற கீர்த்தி எப்படி இனி உன்கூடப் பேசுவா? இதெல்லாம் யோசிச்சு தான் நான் அப்படிச் சொன்னேன். உனக்கு கோவம் வந்தா அதுக்கு நான் மட்டும் தான் காரணம். துவாரா மேல எந்த தப்பும் இல்லை. யோசி நித்யா நான் ப்ரெஷ் ஆகிட்டு வரேன்" என்று சென்றான்.

நித்யாவுக்கு இப்போது தான் ஒரு நொடியில் அவள் செய்யவிருந்த பெருந்தவறு புரிந்தது. நேற்று இரவு இளாவை அவனோடு தங்க வைத்ததற்கு தேங்க்ஸ் சொல்லும் போது கூட."சி போ" என்றானே. கூடவே இன்று அனேஷியா சொன்ன பிளாஷ்பேக் எல்லாம் கேட்டவளுக்கு துவாராவின் குணம் இன்னும் நன்றாகப் புரிந்தது. அவள் யோசனையில் இருக்க விவான் வெளியே வந்தான். அவள் யோசிக்கட்டும் என்று எண்ணியவன் அமைதியாகச் சென்று படுக்கப் போக அவனை அழைத்தவள்,"சாரி விவான். அவ்வளவு பேர் முன்னாடி எனக்கு உன்மேல உரிமையில்லைனு நீ சொன்னதும் நான்..." என்று இழுத்தவளின் எண்ணம் புரிந்தது. "சாரி நித்யா" என்று அணைத்தான்.

சண்டைகள் வராமல் இருக்கும் போதே விவான் ஒரு காதல் மன்னன். இதில் சண்டை வேறு இப்போது தான் முடிந்துள்ளது. அப்போ உடனே சமாதான உடன்படிக்கைகள் எல்லாம் கையெழுத்திட வேண்டும் அல்லவா?

காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும்
சின்ன சின்ன தலைக்கனமே
காதல் அதை பொறுக்கணுமே இல்லையெனில்
கட்டி வைத்து உதைக்கணுமே
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே
கன்னத்தில் அடிக்குமடி முத்தத்தாலே வேண்டுமடி
மத்ததெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி
எந்த தேசம் போன போதும் என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே ? (நா . முத்துக்குமார் வரிகள்)


(பயணங்கள் முடிவதில்லை)
 
Dhuva part is so emotional...
விவானின் , அதற்கான கோபமும் intensive ஆ இருந்தது...
கலெக்டர், பொதுவா அனிக்காக பேசினாலும்
அவள் மீது பரிதாபம் வரவில்லை...

பெண்டிங் ல இருக்கிற, மூணு ஜோடிகளின் முடிவும்
இந்த பயணம் முடிவதற்குள் கிளியர் ஆகிடுமா...?

ரிடர்ன் ஜெர்னி, ப்ளைட்டா, இல்லை ரயிலா..?
 
இதில் விவான் நிலை தான் ரொம்ப கஷ்டம்..... திவேஷ் சொல்றது சரின்னாலும், அடிக்கும் second la தெரியுமே....அனி செய்தது தப்பு... ஜிட்டு வரவே இல்லை :cry::cry::cry:
 
விவான் நித்யாவை சமாதானம் செய்த விதம் ??
துவா அனு உறவு முடிந்துபோன கசப்பான சம்பவம், பேச பேச கசப்பின் தன்மை அதிகரிக்கும். பார்க்கலாம் writer என்ன செயிறிங்கன்னு.
Nice update.
 
Dhuva part is so emotional...
விவானின் , அதற்கான கோபமும் intensive ஆ இருந்தது...
கலெக்டர், பொதுவா அனிக்காக பேசினாலும்
அவள் மீது பரிதாபம் வரவில்லை...

பெண்டிங் ல இருக்கிற, மூணு ஜோடிகளின் முடிவும்
இந்த பயணம் முடிவதற்குள் கிளியர் ஆகிடுமா...?

ரிடர்ன் ஜெர்னி, ப்ளைட்டா, இல்லை ரயிலா..?
சிலர் லைஃப் அப்படித்தான். விவான் துவாவோட பெஸ்ட் ஃப்ரண்ட். ஆனால் அது எதேர்சையாக நிகழ்ந்தது. கண்டிப்பா சில கேரெக்டர்ஸ் தவிர்த்து எல்லோருக்கும் ஜஸ்டிபிகேஷன் இருக்கு. பிளைட் தான். திரும்பவும் ட்ரைனா? ?? இன்னும் பத்து அத்தியாயங்களில் முடிந்துவிடும். நன்றி
 
இதில் விவான் நிலை தான் ரொம்ப கஷ்டம்..... திவேஷ் சொல்றது சரின்னாலும், அடிக்கும் second la தெரியுமே....அனி செய்தது தப்பு... ஜிட்டு வரவே இல்லை :cry::cry::cry:
அதொரு உணர்ச்சிவசத்துல செஞ்சது... அடுத்த சில எபிகளில் அவன் வருவான். அவன் வந்தா கன்டென்ட் டைலுட் ஆகிடும்... நன்றி??
 
விவான் நித்யாவை சமாதானம் செய்த விதம் ??
துவா அனு உறவு முடிந்துபோன கசப்பான சம்பவம், பேச பேச கசப்பின் தன்மை அதிகரிக்கும். பார்க்கலாம் writer என்ன செயிறிங்கன்னு.
Nice update.
நன்றி. விவான் காதல் மன்னன் ஆச்சே? ரொம்ப வராது சொல்றேன். நன்றி??
 
Top