Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-57

Advertisement

praveenraj

Well-known member
Member
அதன் பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து புறப்படத் தயாராகினார்கள்.திவேஷ் கிளம்பும் போதே அனைவரிடமும் இன்றைய பிளானை தெரிவித்திருந்தான். முதலில் இங்கிருந்து ஹஜு (hajo) என்னும் இடத்திற்குச் சென்று பிறகு பிரம்மபுத்திரா நதியில் ஒரு உல்லாச கப்பல் பயணம் மேற்கொள்வது என்று முடிவாகியிருந்தது. ஹஜு என்னும் இடம் பழம்பெரும் வழிபாட்டுத் தலமாகும். பிரம்மபுத்திரா நதி கரையில் அமைந்திருக்கும் இத்தலம் ஹிந்து மட்டுமல்லாது முஸ்லீம் மற்றும் பௌத்த மதங்களுக்கும் ஒரு முக்கிய வழிபாட்டு தலமாகத் திகழ்கிறது. எல்லோரும் அங்கே வந்து அத்தலத்தை வழிபட்டுவிட்டுச் சுற்றிப் பார்த்தனர். ஜோடி ஜோடிகளாகப் புகைப்படங்களையும் எடுத்துத் தள்ளினார்கள். இன்று மாலையே அவர்கள் இங்கிருந்து புறப்பட்டு டெஸ்ப்பூர்(tezpur) என்னும் இடத்திற்குச் செல்ல வேண்டும். அசாம் அதிக பரப்பளவு கொண்ட ஒரு மாநிலமாகும். அவர்கள் தற்போதிருக்கும் கௌஹாத்தி அசாமின் மேற்கில் இருக்கிறது. அடுத்து அவர்கள் பார்க்கவிருக்கும் கஜிரங்கா, மஜூலி தீவு, திப்ருகார்க் முதலியவை அஸ்ஸாமின் கிழக்கில் இருக்கிறது. கௌஹாத்தியில் இருந்து அவை இருநூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருப்பதால் அங்கே சென்று வர முடியாது. முதலில் போட்டத் திட்டமே நேராக அங்கே சென்று சுற்றிப்பார்த்து விட்டு பிறகு கௌஹாத்தி வந்து அங்கிருந்து ஊருக்குத் திரும்புவது தான். ஆனால் அனேஷியாவும் துவாராவும் சந்திக்க வேண்டும் என்பதால் இந்தத் திட்டமே மாறியது.
எல்லோரும் அவரவர் ஜோடிகளுடன் இருக்க இங்கே சித்தாரா நேற்று மாலை விவி தன்னிடம் கேட்டக் கேள்விக்கான அர்த்தத்தை அறிந்துகொள்ள காத்திருந்தாள். விவியை அழைத்தவள்,"ஏன் விவி நேத்து அப்படி ஒரு கேள்விக் கேட்ட?" என்றதும் அவள் எதைக் கேட்க வருகிறாள் என்று புரிந்தும் புரியாதவனாய்,"நீங்க எதை கேட்கறீங்க?" என்றான் விவி.
சித்தாரா யோசித்து,"நீங்க திரும்ப காதலிப்பீர்களானு ஏன் கேட்ட?" என்றதும் விவி சற்று மௌனம் காத்தான். பிறகு மெல்லப் பேசினான்,"சித்தாரா நான் வாழ்க்கையில் நிறைய கஷ்டத்தை அனுபவிச்சிட்டேன். எனக்குனு யாருமே இல்ல. எஸ் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் இருக்காங்க தான். ஆனா பேமிலினு சொல்லிக்கத் தான் யாருமில்லை. நான் என்னுடைய தனிமையைப் போக்க எனக்கொரு கம்பேனியன் கிடைக்க மாட்டாங்களானு தான் காத்திருக்கேன். ஆல் ஐ நீட் இஸ் எ ஃப்ரண்ட் எ லவ் எ சப்போர்ட். (எனக்கு வேண்டியதெல்லாம் ஒரு நண்பன் ஒரு காதல் ஒரு துணை தான்) இது மூணும் சேர்ந்த ஒரு பெண்ணைத் தான் தேடிட்டு இருந்தேன். உண்மையிலே கௌஹாத்தி வந்து இறங்கும் வரை எனக்கிந்த எண்ணமெல்லாம் இல்லை. ஆனா நான் எதிர்பார்த்த மாதிரியே நீங்க ஒரு போல்ட் இண்டிபெண்டெண்ட் ஆனப் பொண்ணு. உங்களை மாதிரி ஒருத்தவங்க என் கூட இருந்தா ரொம்பா நல்லா இருக்கும்னு ஃபீல் பண்றேன். கண்டிப்பா எனக்கிந்த லவ் அட் பர்ஸ்ட் சைட் மீதெல்லாம் நம்பிக்கை இல்ல. அதே மாதிரி இந்த ஜாதி, மதம் மேலயும் ஈடுபாடு இல்ல. ஆம் கடவுளைப் பார்க்க அவர் இருக்கும் இடத்திற்குப் போன போது தான் நான் என் குடும்பத்தை இழந்தேன். நிறைய கஷ்டப் பட்டுட்டேன். இன்னைக்கு ஒரு ப்ரொபெஸரா வேலை பாக்குறேன். மாசம் எல்லாம் போக முப்பத்தி அஞ்சாயிரம் கைக்கு வருது. அதுமில்லாம அப்பாவோட சேவிங்ஸ் கொஞ்சம் இருக்கு.என்னோட இன்னொரு வீட்டை வாடகைக்கு விட்டுட்டேன். அண்ட் ஒன் திங்க் கண்டிப்பா உங்களை மதம் மாறவோ இல்லை நீங்க நான் சொல்றதைத் தான் கேட்கணும்னு அந்த ராஜீவ் மாதிரி எல்லாம் நான் உங்களை ரெஸ்ட்ரிக்ட் பண்ண மாட்டேன். நீங்க நீங்களா இருக்கலாம். எஸ் அது தான் எனக்கு உங்ககிட்ட ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க உடனே பதில் சொல்லணும்னு எல்லாம் அவசியம் இல்லை. இந்த டூர் முடியட்டும் நீங்க உங்க ஊருக்குப் போங்க உங்க வேலையைப் பாருங்க. அண்ட் என் ஞாபகம் வந்தா என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இருந்தா மட்டும் நீங்க உங்க சம்மதத்தைச் சொல்லுங்க. எனக்குப் புரியுது, நீங்களே இப்போ தான் ஒரு ஹார்ட்பிரேக்ல (மனவலியில்) இருந்து வெளிய வந்திருக்கீங்க. இதனால தான் நான் நேற்றே சொல்ல வந்து எப்படிச் சொல்றதுன்னு தெரியாம விட்டுட்டேன். இல்லை இதெதுவும் வேண்டாம் நாம கடைசி வரை ஃப்ரெண்ட்ஸாவே இருக்கலாம்னு நெனச்சா ப்ளீஸ் இப்போ நான் இங்க சொன்னதை எல்லாம் இங்கேயே மறந்துட்டுப் போங்க. எனக்கு உங்க நிலை நல்லாப் புரியுது. எந்த முன் பழக்கமும் இல்லாம ட்ரைன்ல என்கிட்ட வந்து பேசுனது, என்னை நம்பி என்கிட்ட உங்க பாஸ்ட் எல்லாத்தையும் சொன்னது, நான் கூப்பிட்டதும் என் ஃப்ரெண்ட்ஸோட இப்போ நீங்க இங்க வந்தது எல்லாம் எனக்கு உங்க மேல் ரொம்ப நல்ல அபிப்ராயம் தந்தது. நீங்க யோசிச்சு உங்க முடிவைச் சொன்னா நான் உங்க வீட்ல வந்து பேசுறேன்" என்றவன் அங்கிருந்து விலகினான். உண்மையில் சித்தாரா இதை எதிர்பார்க்கவில்லை.
..................................................
அதே கோவிலில் மறுபுறம் தியானேஷ் அவனைக் கடந்து சென்ற மிருவை அழைத்தான்."மிரு நான் உன்னுடன் கொஞ்சம் பேசணும்" என்றதும் திரும்பி நின்றவள் பார்வையாலே அவனுக்கு அனுமதியை அளித்தாள்."நான் உன்கிட்ட மனப்பூர்வமான மன்னிப்பு கேட்கறேன் மிரு. கண்டிப்பா நான் உன்கிட்ட நடத்துக்கிட்டதை எந்த விதத்துலையும் நியாயப்படுத்த விரும்பல. இப்போ எனக்கு உன்னுடைய மன்னிப்பும் சம்மதமும் வேண்டும் மிரு" என்றவன்,"நீ ஓகே சொன்னா நான் என் அண்ணாவை உங்க வீட்ல பேசச் சொல்லுவேன்" என்றான்.
"தியா உனக்கு நான் சொல்லவரது புரியலையா தியா? எனக்கு உன் அண்ணா வந்து எங்க வீட்ல பேசறது எல்லாம் வேண்டாம்.உன் அம்மா வந்து என் வீட்ல பேசுவாங்காளா? என் அப்பாகிட்ட உன் அம்மா வந்து பெண் கேட்டு சம்மந்தம் பேசுவார்களா? உன் அம்மாவால நான் என் குடும்பம் ரொம்ப அசிங்கப் பட்டுட்டோம் தியா. உனக்கு அது புரியாது. ஆமாம் உன் அப்பா தான் எங்களுக்கு உதவினார். அவரால் தான் நாங்க இன்னைக்கு இந்த நிலையில் இருக்கோம். நான் இதை எப்பயும் எங்கேயும் மறக்கவும் இல்லை மறைக்கவும் இல்ல. ஆனா பணம் கொடுத்து உதவிய காரணத்துக்காக யாராச்சும் பெண் கொடுப்பார்களா? உண்மையிலே அன்னைக்கு என் அப்பா என் அக்கா கிட்ட உன் அண்ணனை பிடிச்சிருக்கானு கேட்டார். அவளுக்குத் தான் இதுல சம்மதம் இல்ல. காரணம் உன் அம்மா தான். எப்பப் பாரு சிடுசிடுன்னு எதாவது பேசிட்டு குறை சொல்லிட்டு இருக்கற உன் அம்மாவை நினைத்து என் அக்காக்கு பயம். ஆம் அவன் என்னை மாதிரி எல்லாம் இல்ல. ரொம்ப பயந்த சுபாவம். அதனால் தான் என் அப்பா அந்தக் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லல. ஏன் ஒருவேளை உண்மையிலே என் அக்காக்கு உன் அண்ணனைப் பிடிக்காம கூட இருந்திருக்கலாம். அதுக்காக என்ன பிடிக்காதவங்கள கட்டாயப் படுத்தியா கல்யாணம் செஞ்சு கொடுக்க முடியும்? ஒருவேளை அன்னைக்கு மாமாக்காக அப்படியொரு கல்யாணம் செஞ்சு கொடுத்திருந்தா இன்னைக்கு மாமாவும் இல்லாம எப்படி என் அக்கா உன் அம்மா கூடவே இருந்திருக்க முடியும் சொல்லு? அதனால் அவ ஏதாவது தப்பான முடிவு எடுத்திருந்தா? ரெண்டு பேரோட வாழ்க்கை ரெண்டு குடும்பத்தோட நிம்மதி எல்லாமே சுக்குநூறாப் போயிருக்கும்."
"அதை விடு, நான் துவாராவிடம் சொன்னதைக் கேட்டு நீ உன் அம்மாகிட்ட எங்களை பற்றி என்னவெல்லாம் சொல்லியிருக்க? அவங்க துவாராவையும் என்னையும் சேர்த்து என்னென்ன பேசுனாங்கனு உனக்குத் தெரியுமா? ஒருநாள் எதேர்சையா துவாரா வழியில அவங்களைப் பார்க்க அவனை கண்டபடிப் பேசியிருக்காங்க. ஏன் அன்னைக்கு நீ குடிச்சிட்டு வீட்டுக்குப் போனதுக்கு உன் அம்மா எங்க வீடு தேடி வந்து என்னென்ன பேசிட்டுப் போயிட்டாங்கனு தெரியுமா? அவங்களால் அன்னைக்கு எங்க மானம் போய் அந்த விஷயம் என் அக்கா வீட்டுக்கும் தெரிஞ்சு அதனால் சில பிரச்சனை எல்லாம் வந்து ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம் தியா"
"சரி ஒருவேளை நாளைக்கு நானும் நீயும் கல்யாணம் செஞ்சிக்குறோம்னு வெச்சிக்கோ, அதுக்கப்புறோம் என்னைக்காவது ஒரு நாள் துவாராவைப் பார்க்க நேர்ந்து நான் அவன்கிட்டப் பேசுறதைப் பார்த்து எங்களைத் திரும்ப இணைத்து..." என்று அவள் சொல்ல அவளைப் பேசவேண்டாம் என்று தடுத்திருந்தான் தியா.
"என்னால நீ நிறைய ஹர்ட் ஆகியிருக்க மிரு. எனக்கு அது புரியுது. ஆனா நான் பேசுனது எல்லாமே தப்பு தான். கண்டிப்பா இனி அப்படி நான் பேசவே மாட்டேன். என்னை நம்பு மிரு. ப்ளீஸ் எனக்கொரு வாய்ப்பு கொடு ப்ளீஸ்" என்றான்.
"நானும் முதல உன்னையும் தப்பா தான் நெனச்சியிருந்தேன் தியா. ஆனா அன்னைக்கு துவாராவிடம் பேசுனதுக்கு அப்புறோம் தான் உண்மை புரிஞ்சது. கூடவே மாமா எங்களுக்குச் செஞ்சதெல்லாம் தெரிஞ்சது. எனக்கு உன்னை கொஞ்சம் கொஞ்சமாப் பிடிக்கவும் ஆரமிச்சது. அப்போ தான் தியா நீ என்னை ரொம்பவும் காயப்படுத்திட்ட. என் வீட்லையும் என்னை கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்டுட்டே இருக்காங்க. நான் தான் அவங்களுக்கு ஒரு பதில் சொல்ல முடியாம தவிக்கிறேன். இப்பயும் நான் உன்னைத் தான் விரும்புறேன் ஆனா நம்ம கல்யாணம் நடக்க எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு" என்றவள் அவனைப் பார்க்க, புரிந்தவனாக அவளுக்குத் தலையாட்டினான்.
"முதல, எனக்கு உங்க அம்மா வந்து என் வீட்ல பேசணும். அவங்க இதுவரை எங்க குடும்பத்தைப் பற்றிப் பேசுனதுக்கு என் அப்பாகிட்டயும் என் அம்மாகிட்டயும் மனசார வருத்தம் தெரிவிக்கனும். நல்லா கேளு வருத்தம் தான். நான் ஒன்னும் மன்னிப்பு கேட்கச் சொல்லல. அவங்களால என் அக்கம்பக்கத்துல எங்களுக்கு மானமே போச்சு. ஆனா அதுக்காக எல்லாம் நான் எதுவும் கேட்கப் போறதில்லை. எனக்கு அவங்க வந்து பேசணும். ஏற்கனவே நானும் இந்த டூருக்கு வரேன்னு தெரிஞ்சதும் எங்க நான் உன்னை மயக்கிடுவேனோனு ஹாஸ்பிடல் போய் ட்ராமா போட்டவங்க தானே உன் அம்மா? எனக்கு எல்லாம் தெரியும் தியா. ஒருவேளை இப்போ நான் உன்கூட வந்தா, உன் அம்மா என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் இன்னும் என்னவெல்லாம் பேசுவாங்க.பேசுவாங்களா மாட்டாங்களா? நெனச்சுப் பாரு. செகண்ட், கல்யாணத்துக்கு அப்புறமும் நான் எப்போவது துவாராவைப் பார்த்தா அவன் கிட்டப் பேசுவேன். அதுக்கு யாரும் தடை போடக்கூடாது. ரெண்டு பசங்களைப் பெத்துட்டா உன் அம்மா என்ன வேணுனாலும் பேசலாமா என்ன? அதுவே ரெண்டு பெண் பெத்ததால என் அப்பாவும் அம்மாவும் அவங்கச் சொல்றதையெல்லாம் கேட்கணுமா? ஒரு விஷயத்துக்கு எஸ் சொல்ல எங்களுக்கு என்ன உரிமை இருக்கோ அதே தான் நோ சொல்லவும் உரிமை இருக்கு. எங்க நாம நோ சொன்னா ஏதாவது நெனச்சிப்பாங்களோ இல்லை நம்மளை ஏதாவது திட்டிடுவாங்களோனு எல்லாம் நாம பயந்து எஸ் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னா அது வாழும் வரை நரகமா போயிடும். இவ்வளவு தான் தியா என் கண்டிஷன்ஸ். இதுக்கு உனக்கு ஓகேனா சொல்லு நான் உனக்காகக் காத்திருக்கேன். என் வீட்லயும் பேசறேன். இல்லைனா என் வீட்லயும் என் அப்பா அம்மா பாவம். எனக்காக இன்னும் எவ்வளவு தான் கஷ்ட படுவாங்கச் சொல்லு? அவங்க கடமையும் இருக்கு தானே. எனக்கு உண்மையிலே உன்னை கல்யாணம் பண்ணிக்கத் தான் ஆசை. ஆனா சூழ்நிலைனு ஒன்னு இருக்கு இல்ல? எங்களுக்கும் கொஞ்சம் மானம் ரோஷம் எல்லாம் இருக்கு தியா" என்றாள்.
தியா எதுவும் பேசாமல் அமைதியாக யோசித்து,"மிரு எனக்கு ஒருவாரம் டைம் கொடு. ஊருக்குப் போனதும் நானும் அண்ணாவும் பேசி என் அம்மாவை சம்மதிக்க வெச்சி உன் வீட்ல வந்து பேசச் சொல்றேன். என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லு மிரு ப்ளீஸ்" என்றான் தியா.
"உன்னை மன்னிச்சதால தான் இப்போவும் உனக்காகக் காத்திருக்கேன்" என்றவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
*****************
விவி சித்துவுடனும் தியா மிருவுடனும் பேசிக்கொண்டிருக்க அதை தூரத்திலிருந்தபடி மற்றவர்கள் கவனித்தார்கள். வண்டியில் வரும் போதும் சரி இப்போதும் சரி துவாரா சரித்திராவுடனே கதைத்துக்கொண்டிருக்க அனேஷியா, யாழ், திவேஷ், துஷி என்று நால்வரும் ஒன்றாகச் சுற்றிக்கொண்டிருந்தனர். துஷியோ யாழிடம் மன்றாடிக்கொண்டிருந்தான். இதை விட்டால் ரேஷாவுடன் பேச வேற நல்ல சந்தர்ப்பம் கிடைக்காதென்று அவன் யாழ் பின்னாலே சுற்ற யாழோ வழக்கம் போல் அவனை சற்று அலைய விட்டு வெறுப்பேற்றினாள்.அதில் கடுப்பானவன்,"இப்போ பேசலைனா வேற சான்ஸ் கிடைக்காது யாழ். நாம வேற ஈவினிங்கே இங்கேயிருந்து கிளம்பனும்" என்றதும்,"ஏன்டா ஒரு பிரசாதத்தை நிம்மதியா சாப்பிட விட மாட்டியா? இப்போ உனக்கென்ன அவகிட்டப் பேசணும்? டேய் இது கோவில்டா இங்க வேண்டாம்" என்றாள்.
"ஏன் கோவில் தான் மங்களகரமான இடமாச்சே? அதுமில்லாம இங்க தான் அவன் செருப்பு கூட இல்லாம இருப்பா" என்றான். அதில் சிரித்த யாழ்,"டேய் கிட்ட வா நாம அடுத்து மூணு மணிநேரம் கப்பல்ல ட்ராவல் பண்ணப் போறோம். யோசிச்சுப் பாரு கப்பல் நுனியில் அப்படியே டைட்டானிக் ஜாக் ரோஸ் மாதிரி துஷி ரேஷ் எப்படி?" என்றாள்.
"ஏன்டி அப்போ நான் டி கேப்ரியோ மாதிரி செத்துப் போயிடனும்னு ஆசை படுறியா? நோ" என்றான்.
"டேய் அந்தக் குட்டச்சி கொஞ்சம் ஓவரா பிகு பண்ணுவாடா" என்ற யாழை முறைத்த துஷி அவள் தொடையில் ஓங்கி குத்தினான். "அதெல்லாம் தெரியாது எனக்கு நீ அவகிட்டப் பேசனும்" என்று குழந்தை போல் அடம்பிடிக்க,"ஏன்டி கொஞ்சம் அவனுக்கு கருணை தான் காட்டக் கூடாதா?" என்றான் திவே.
"இல்ல மச்சி, இவன் இன்னும் இப்படியே இருக்கான் மச்சி. எதுக்கெடுத்தாலும் என்கிட்டவே வந்து நிற்கறான். இப்படி இருந்தா அந்தப் பொண்ணுக்கு எப்படி இவனைப் பிடிக்கும் சொல்லு? நானும் இப்படி ஏதாவது டகால்டி செஞ்சா கோவத்துல அவனாவே போய்ப் பேசுவான்னு நெனைக்கிறேன் ஹூஹூம்..."
"உன்னால ஆன பிரச்சனையை நீ தானே சால்வ் பண்ணிக் கொடுக்கணும்" என்றான் துஷி.
"ஆமா நான் தான் உங்க ரெண்டு பேரையும் பிரித்து வெச்சேன் பாரு" என்றதும்,"டேய் துஷி அப்போ நீங்க ஒன்னு சேர்ந்திருங்களா?" என்றான் திவே ஆச்சரியமாக.அதில் இன்னும் கோவம் கொண்டவன்,"எங்களுக்குள்ள இருந்த சின்ன விரிசலை பெருசா ஆக்குனதே இவ தான்" என்று மீண்டும் பழைய பல்லவியைப் பாட,
"ச்சே ச்சே ச்சே எப்போப்பாரு நையிநையினு. போறன்" என்று யாழ் எழ,
"ஏன்டி இப்படி அபசகுனமா சொல்ற? போயிட்டு வரேன்னு சொல்லு. வெற்றியோடு திரும்பி வா" என்று அவளை ஆசிர்வதிக்க கடுப்பானவள் எழுந்து பெனாசிர் ஜெஸ்ஸியுடன் உரையாடிக்கொண்டிருந்த ரேஷாவை நோக்கிச் சென்றாள்.
அங்கே நித்யா, விவான், ஹேமா, மௌனி, இளங்கோ, பார்வதி, ஜிட்டு, இதி ஆகியோருடன் சரித்திரா உரையாடிக்கொண்டிருக்க இளாவை மடிமீது வைத்துக்கொண்டிருந்தான் துவாரா.
இங்கே காலையிலிருந்து லோகேஷ், பெனாசிர், இஸ்மாயில், ரேஷா, ஜெஸ்ஸி ஆகியோர் நேற்று நடந்தவைகளையே நினைத்துக்கொண்டிருந்தனர். எல்லோருக்கும் அனேஷியாவின் இந்த நிலை வருத்தத்தைத் தான் தந்தது. ஏன் லோகேஷ் கூட அவளுக்காக அனுதாபம் கொண்டான். ரேஷா அனேஷியாவுக்காக வருத்தப்பட்டாலும் துஷியின் மீது தான் அவள் கவனம் இருந்தது. காலையில் அவளை அழைத்த அவள் அன்னை,"மாப்பிள்ளை வீட்டுல பதில் கேட்டா என்ன சொல்ல?" என்று அவளை நச்சரித்தார். அதோடு இல்லாமல்,"இங்க பாரு ரேஷா எனக்குத் தெரிஞ்சு ரொம்ப நல்ல குடும்பம். தூரத்து சொந்தமும் வேற. ஒரே பையன். விசாரிச்ச வரை ரொம்ப திருப்தி. அவங்க கிட்ட நீ வேலை விஷயமா வெளிய போயிருக்கனு அன்னைக்கே சொல்லிட்டோம் தான். இருந்தும் நாளையோட மூணு நாள் ஆகுது. ஏதாவது முடிவு சொல்லு. நாளை வரை டைம் எடுத்துக்கோ இல்லைனா நாளை மறுநாள் அப்பா கிட்ட ஜாதகம் சரியில்லைன்னு சொல்லி நிராகரிச்சிடலாம்" என்றார். ஏனோ அந்த வார்த்தை அவளுக்கு கசந்தது. அதே நேரம் 'அவன் இன்று வரை தன்னோடுப் பேசவே முயற்சிக்கவில்லையே? அப்போ அவனுக்கும் இதில் விருப்பமில்லையோ?' என்றும் அவள் மனம் குழம்பியது.இதற்கிடையில் பெனாசிர் சொன்னதும் அவளுக்கு நினைவு இருந்தது. யாழ் மீதிருந்த குழப்பமும் துஷியின் கேரக்டர் மீதிருந்த சந்தேகமும் அவளுக்கு ஓரளவுக்கு விலகியே இருந்தது. ஆனாலும் அவனாகப் பேசவே இல்லை என்ற வருத்தமும் அவளை வாட்டியது. அந்த நேரத்தில் தான் யாழ் அங்கே தோன்றினாள்.
பெர்சனலாக நேற்றிரவே ஓரளவுக்கு அறிமுகம் ஆனதால் எல்லோரும் அவளை வரவேற்க அவளோ ஒரு புன்னகை சிந்திவிட்டு, நேராக விஷயத்திற்கு வந்தாள்.
"ரேஷா உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும். ஷல் வீ?" என்றதும் அவள் தலையாட்டி தனியே வந்தாள்.
"ஓகே ரேஷா, நான் யாழினி. துஷ்யந்த்தோட சைல்ட்ஹூட் ஃப்ரண்ட், பெஸ்டி, பிளோஸபர், கைட், நலம்விரும்பி, அண்ட் எப்போதும் அவனுக்கு ஏதாவது டார்ச்சர் கொடுத்து அதுல அவன் கதறுவதைப் பார்த்து ஆனந்தம் கொள்ளும் சின்ன சேடிஸ்ட்டும் கூட. அப்படி நான் செஞ்ச விஷயம் தான் ட்ரைன்ல என்னை அவனோட கேர்ள் ஃப்ரெண்டுனு சொன்னது. யா நாங்க ஒன்னா ஊர் சுத்தியிருக்கோம், விளையாடி இருக்கோம், கதைபேசியிருக்கோம், சாப்பிட்டு இருக்கோம், ஏன் ஒன்னா ஒரே ரூம்ல தங்கியும் இருக்கோம். யா இப்போகூட முந்தா நேத்து ஒரே ரூம்ல தான் இருந்தோம். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒன்னா ஒரே ரூம்ல அதும் ஒரே காட் ஷேர் பண்ணா அவங்க ஹஸ்பண்ட் அண்ட் வைப்பாவோ இல்ல லவ்வெர்சாவோ இல்ல பலான பலான ஆட்களாவோ தான் இருக்கணும்னு அவசியம் இல்ல. எங்களோட ரிலேஷன்ஷிப்பை எங்க பேரெண்ட்சே சரியாப் புரிந்துகொள்ளவில்லைனு நினைக்கும் போது சம் தேர்ட் பெர்சன் லைக் யூ (உன்னைப் போன்ற ஒரு மூன்றாவது நபர்) புரிஞ்சியிருந்தால் தான் ஆச்சரியம். நேத்து சொன்ன மாதிரி நாங்க எல்லோரும் ஹாஸ்டெல்ல படிச்சவங்க. எங்களுக்குள்ள ஆண், பெண் பேதமில்லை. கண்டிப்பா வெளியில் இருந்து பார்க்கும் யாருக்கும் எங்க உறவு தப்பாத் தான் தெரியும். அன்னைக்கு நீ அவனுக்கு போன் பண்ணும் போது கூட நானும் அவனும் எப்போவும் போல எதுக்கோ சண்டை தான் போட்டுட்டு இருந்தோம். இங்க பாரு இவ்வளவு விளக்கம் எல்லாம் எனக்குக் கொடுக்கணும்னு அவசியமே இல்லை. எனக்கு விருப்பமும் இல்லை. ஆனா அந்த லூசு உன்மேல லூசா சுத்துது. நீ விட்டுட்டுப் போனதுக்கு அப்புறோம் அந்தக் கல்யாணத்துல உன்னைப் பார்த்து இன்னைக்கு உங்க மேரேஜ் ப்ரோபோசல் வரை வந்திருக்கு. கொஞ்சமாச்சும் கண்ணைத் திறந்து தெளிவாகப் பார்த்துப் பழகு. எந்த ஒரு விஷயத்தையும் தீர விசாரி. அதுக்கப்புறோம் ஒரு முடிவுக்கு வா. அண்ட் ரொம்ப முக்கியம் அடுத்தவங்களையும் கொஞ்சம் பேச விடு. அவங்க என்ன சொல்ல வராங்கனு கேளு. எந்த ஒரு ரிலேஷனுக்கும் ட்ரஸ்ட் தான் பிரதானம். நம்பிக்கை இல்லாட்டி ஒன்னுமில்லை"
"அவன் யார் கூடப் பேசுனாலோ யாரை பைக்ல கூட்டிட்டு போனாலோ உனக்கு ஏன் பொசெசிவ்நெஸ் வருது? அன்னைக்கு ஏன் ட்ரைன்ல அவனை அடிச்ச? என்கிட்ட எதையோ கேட்க வந்த நான் கேர்ள் ஃப்ரண்டுனு சொன்னதும் உடனே கோச்சிட்டு போயிட்ட. அவன் உன்கிட்டப் பேச வந்தான். அவனுக்கும் சான்ஸ் கொடுக்கல. வாழ்க்கையில பொறுமை ரொம்ப அவசியம். என்னடா இவ பாட்டுக்கு அட்வைஸா சொல்லிட்டு இருக்காளேன்னு நினைக்காத. நாளைக்கு உனக்கும் அவனுக்கும் கல்யாணம் ஆச்சுன்னா சின்ன சண்டைக்கு கூட டிவோர்சுனு நீ போனாலும் போவ. அந்த மாதிரி எல்லாம் நடக்கக்கூடாது. செகண்ட் அவனைப் பற்றி என்ன தெரியணும்னாலும் என்கிட்டக் கேளு. நான் சொல்றேன். ஏன்னா அவனைப் பற்றி அவனுக்குத் தெரிஞ்சதை விட எனக்கு நல்லாத் தெரியும். இந்த இருபத்தி ஏழு வருஷத்துல அவன் பிஜி படிக்கும் போது மட்டும் தான் அவன் கூட நான் இல்ல. அதாவது ரெண்டு வருஷம். ஆனா அப்பயும் வாரத்துக்கு நாலு நாளாச்சு அவனை மீட் பண்ணிடுவேன். ஆமா நீ ஒன்னும் உன் வீட்டுல இந்தக் கல்யாணத்துக்கு நோ சொல்லல தானே?" என்றதும் ரேஷா அவளை கடுமையாக முறைக்க,
"இல்ல நீ தான் எதிலும் அவசரபடுவியே? அதான் கேட்டேன்" என்றதும் ரேஷா திரும்பி நெருப்பாக துஷியை முறைத்தாள். அங்கே இதுவரை அவர்கள் பேசுவதை அவர்களின் முக பாவங்களின் பார்த்துக்கொண்டிருந்த துஷி இப்போது உள்ளுக்குள் பயந்தான்.
"ஆஹா சச்சின் பட விஜய் மாதிரி ஏதாச்சும் நாலஞ்சு பிட்டு சேர்த்துப் போட்டுட்டாளோ? இவ பார்வையே சரியில்லையே?" என்று திவேஷிடம் புலம்பினான் துஷி. இதற்குத் தான் அனேஷியா சற்று சிரித்தாள். பின்னே இவ்வளவு நேரமும் சோகமாகவே இருந்தாள்.
"டேய் துஷி பேசாம நீயே கைல கால்ல விழுந்தாச்சும் சரி செஞ்சு இருக்கலாம் போலயே?" என்று அவனுக்கு பீதியைக் கிளப்பினான் திவேஷ்.
"என்ன முடிவு பண்ணியிருக்க ரேஷா? ஹாம் சொல்ல மறந்துட்டேன் அவன் நல்லவன் வல்லவன், பொய்ச் சொல்லத் தெரியாது. அப்படியே சொன்னாலும் ஈஸியா கண்டுபிடிச்சிடலாம். ஏதாவது திருட்டுத்தனம் செஞ்சா கொஞ்சம் குரலை உயர்த்தி மிரட்டுனா உடனே அப்ரூவர் ஆகிடுவான். முக்கியமா இந்த எக்ஸ்சாம்ல பிட் அடிக்கவோ காலேஜ் கட் அடிக்கவோ பொண்ணுங்களை சைட் அடிக்கவோ எல்லாம் அவனுக்கு வரவே வராது. நல்லா பிளே ஸ்டேஷன் விளையாடுவான். வீட்ல இருக்கும் பெரியவங்கக் கிட்ட அக்மார்க் நல்ல பையனா இருப்பான். முக்கியமா அவங்ககிட்ட எதையும் மறைக்க மாட்டான். ஏதாவது சண்டை பிரச்சனைன்னு வந்தா முதல இடத்தை காலி பண்றவன் அவனாகத் தான் இருக்கும். சாக்லேட் பைத்தியம். இப்போ கூட நீ சாக்லேட் வாங்கித் தரேன்னு சொன்னா என்ன வேணுனாலும் கேட்கும். தண்ணி தம்முனு பேச்சே ஆகாது. இந்த ட்ராபிக், கவர்ன்மெண்ட் ரூல்ஸ் எல்லாம் பெர்பெக்ட்டா பாலோ பண்றவன்" என்று யாழ் சொல்லிக்கொண்டே இருக்க இப்போது திரும்பி யாழை பார்த்தவள் மீண்டும் துஷியைப் பார்த்து இருவரையும் மாறிமாறிப் பார்த்தாள்.
"என்னடா நல்லதா சொல்வானு பார்த்தா இப்படிச் சொல்றாளேனு நினைக்கறியா? உண்மையிலே இதெல்லாம் தான்மா ஒரு நல்ல பையனுக்கான குவாலிட்டிஸ். என்ன ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி பிறந்திருக்க வேண்டியவன் இப்போ பிறந்துட்டான். அவ்வளவு தான். ஆம் முக்கியமான இன்னொரு விஷயம் என்னையும் அனேஷியாவையும் அந்தப் பொண்ணு அதான் நீ பார்த்த ப்ராஜெக்ட் கைட் சொந்தகாரப் பொண்ணு தவிர வேற யார்கிட்டயும் ப்ராம்ப்ட் (முன்னேற்பாடு) இல்லாம பேச வராது. நீ பிரம்மன் கிட்டச் சொல்லிச் செஞ்சாலும் இப்படி ஒருத்தன் சிக்க மாட்டான் பார்த்துக்கோ"
இப்போது திரும்பிப் பார்க்க, அவனோ என்ன பேசிக்கொண்டு இருப்பாள் என்று பயத்தில் நகத்தைக் கடித்து, குறுக்கும் நெடுக்கும் நடத்துகொண்டிருந்தான். சுருக்கமாச் சொல்லனும்னா இந்தப் பயணம் படத்துல வயசு பெண்ணையும் வாழைத் தாரையும் ரொம்ப நாள் வீட்டுல வெச்சியிருக்கக் கூடாதுனு ஒரு டைலாக் சொல்லிட்டு எவ்வளவு நாள் வெச்சியிருக்கணும்னு கூடத் தெரியாதுன்னு ஒருத்தன் சொல்லுவான் பாரு அப்படிப்பட்டவன்" என்றதும் அதுவரை இருந்த நிலைமை போய்,சிரிக்க ஆரமித்து விட்டாள் ரேஷா.
"டேய் மச்சி சிரிக்கிறாடா" என்றான் துஷி திவேஷைப் பார்த்து.
"பின்ன போனது யார் யாழாச்சே? சும்மாவா உன்னைப் பற்றி பிட் பிட்டா போட்டிருப்பா" என்றான்.
"அதானே ஸ்கூல் காலேஜ்ல நான் வாங்குன மார்க்ஸ், மெடல்ஸ், ஷீல்ட்ஸ் என் திறமை எல்லாம் சொல்லியிருப்பானு நெனைக்கிறேன்" என்றான் துஷி. இப்போது திவே அனேஷியாவைப் பார்க்க அவளோ மீண்டும் விழுந்து சிரித்தாள். பின்ன யாழ் என்னவெல்லாம் சொல்லியிருப்பாள் என்று அவர்கள் இருவரும் யூகித்திருந்தனரே?
"டேய் துஷி நீ இருந்தாலும் இப்படி அநியாயத்துக்கு அம்பியா இருக்கக் கூடாது" என்ற திவேக்கு ஹைபை கொடுத்தாள் அனேஷியா.
"ஏன்டா? ஏன் இப்படிச் சொல்றீங்க?"
"மச்சி நாங்க சொல்லல உன்னை கலாய்கிறோம்" என்றான் திவேஷ்.
"இன்னொரு விஷயம் சொல்றேன் உனக்கு நாட் டை கட்டத் தெரியுமா? ஏன்னா அவனுக்குத் தெரியாது" மீண்டும் ரேஷா சிரிக்க இப்போது பெனாசிர், லோகேஷ் இஸ்மாயில் கூட அவர்களையே பார்த்தனர்.
"பட் சிரியசுலி, ரொம்ப ரொம்ப இன்னொசென்ட். ரொம்ப மென் மனது காரன். யோசிச்சு நல்ல முடிவா எடு. வரேன்" என்று விடைபெற்றாள் யாழ். (பயணங்கள் முடிவதில்லை ...)
 
மிகவும் அருமையான பதிவு,
பிரவீன்ராஜ் தம்பி

ஹா ஹா ஹா
சூப்பரான வஞ்சப்புகழ்ச்சியணி
வடிவேலு பாணியில் நல்லாத்தானே போய்க்கிட்டிருந்திச்சு
அப்புறம் ஏன் யாழினி வைச்சு செஞ்சாள்?
துஷி அய்யய்யோ பாவம்
ஹா ஹா ஹா
 
Last edited:
விவியன்.....ஜென்டில்மேன் புரபோசல்..
தியா.....மன்னிப்புடன் கூடிய காத்திருப்பு...
துஷி....அவன் பேசின டையலாக்ஸை விட,அவனுக்காக யாழ் அதிகம் பேசிட்டாள்..
?
 
மூணே பேர் பேசி ஒரு புல் எபியும் முடிச்சிட்டாங்க :p :p :p
யாழ் இவ்ளோ அருமையா துஷிய பத்தி சொல்லி அப்படியே புல்லரிக்க வச்சுட்டமா...... கீப் இட் அப் ???
 
மிகவும் அருமையான பதிவு,
பிரவீன்ராஜ் தம்பி

ஹா ஹா ஹா
சூப்பரான வஞ்சப்புகழ்ச்சியணி
வடிவேலு பாணியில் நல்லாத்தானே போய்க்கிட்டிருந்திச்சு
அப்புறம் ஏன் யாழினி வைச்சு செஞ்சாள்?
துஷி அய்யய்யோ பாவம்
ஹா ஹா ஹா
இல்லை யாழினி கிண்டல் செய்வதைப்போல அவன் பெருமைகளைத் தான் சொன்னாள். அண்ட் இது தான் யாழ்.நன்றி??�
 
Top