நிறம் மாறிய நேசம் 3

Advertisement

Sarayu R

Member
Member
இதோ அடுத்த பதிவு.

வீட்டுக்கு வந்த ஷ்யாம்
அம்மா பிளீஸ் ஒரு காபிம்மா

செம வேலை.

என்ன வேலை? எல்லாம் தெரியும்
ஃபோட்டோ காட்டு

அம்மா சும்மா இரும்மா.

நீ காட்டலைன்னா காஃபி கிடையாது.

ஐய்யோ அம்மா
ஒரு க்ரூப் ஃபோட்டோ தான்.

ஹம் .....அப்படி வா வழிக்கு.....

போனை குடு.
இல்லை நான் காமிக்கறேன் ......

குடுன்னா குடு கண்ணா.

ஆஹா, க்ரூப் ஃபோட்டோ , அப்பறம் இது என்ன? சுவாமி படமா? ...... படவா....
உன்னை எனக்கு தெரியாதா?

ஷ்யாமா செமையா இருக்காடா.
இது உனக்கு ரொம்ப ஜாஸ்தி தான்.
அந்த கண்ணு, முகத்துல இருக்கற தேஜஸ், கலர்....... சான்ஸே இல்லைடா.

அவ உன்னை பார்த்து ஓகே சொல்லுவாளா? டவுட் தான்....

அம்மா ஒரு அம்மா மாதிரி நடந்துக்கோம்மா........
எனக்கு சரிக்கு சமமாக இருந்தால்.....

காஃபி ம்மா பிளீஸ். பிளீஸ்
காஃபி குடித்ததும் அம்மா மடில படுத்து கொண்ட ஷ்யாமிடம்

சொல்லு ஆபீஸ்ல என்ன நடந்ததுஎன்று சொல்லு.

6 பேர். 3 பாய்ஸ் 3 கேர்ள்ஸ்.
ஷ்யாம் சொல்ல சொல்ல அம்மா உம் கொட்டி கொண்டே இருந்தாள் .

ஒன்னு கண்ணா, நீ அந்த பொண்ணை பார்ப்பது, பழகுவது மற்றவர் தப்பு சொல்லாத மாதிரி இருக்க வேண்டும்.அவ பேரு என்ன?

மீராம்மா.......
மீராவும் உன்னை தப்பா நினைக்கற மாதிரி நடக்காதே!!!!!

உனக்கு தெரியும் கண்ணா. ஆனாலும் அம்மா சொல்லறேன்.

இன்னிக்கு தான் பார்த்து இருக்கிறாய் வேற ஒன்னும் தெரியாது
அனாவசியமாக கனவுகள் வேண்டாம்.
மேனஜர் இன்டர்ன் உறவு மெயின்டெய்ன் பண்ணு.
நடக்க விதி இருந்தால் கண்டிப்பா நடக்கும்.

என்ன ஒரே பாச மழை? நானும் இந்த வீட்டுல ஒரு ஜீவன் தான். ரொம்ப டயர்டா வந்து இருக்கேன். காஃபி கீஃபி ஸ்நாக்ஸ் கிடைக்குமா?.......
கேட்டது கிருஷ்ணா ஷ்யாமின் அப்பா.

ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொண்டு.....நேரம் போனதே தெரியவில்லை.

கண்ணா அப்பா புதுசா ஒன்னும் சொல்ல மாட்டேன். அம்மா சொன்னதை ஞாபகம் வைத்துக்கோ. அவ்வளவுதான்

ஒரு வாக் போகலாமா?.

சாப்பிட்டு முடித்து 3 பேரும் வாக் போய் வந்த பின் ஷ்யாம் தூங்க போ.
நாளைக்கு சீக்கிரம் போகணம் மீட்டிங் இருக்கு என்று சொன்னியே

குட் நைட் ராஜா.

ஷ்யாம் தூங்க போனதும், சுமித்ரா கிருஷ்ணாவிடம்,
ஷ்யாம் சின்ன பிள்ளை இல்லை..... கல்யாண வயது வந்தாச்சு .......
அவனுக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்கு என்று கேட்கணம். எப்பிடி பட்ட பொண்ணு வேணும், பேசணம்
பாவம் இன்னிக்கு ரொம்ப ஒரு மாதிரி இருந்தான். கொழந்தை தானே!!!!!!
இந்த விஷ்வா வேற ஏத்தி விட்டு இருக்கான்.
அந்த பொண்ணு அழகா இருக்கா
ஆனால் ஒரு தடவை பார்த்து பல்ப் எரியரது எல்லாம் சினிமால தான்.
என்ன நான் சொல்லறது சரி தானே?.

சுமி, ஆனா, நம்ம மட்டும் முதல்ல பார்த்து உடனே லவ் பண்ணலையா?.

அது வேற இது வேற. சும்மா அப்பாவா லட்சணமா இருங்கோ.......
சரி மேடம் ......

இப்போ பிள்ளையை விட்டு விட்டு அப்பாவை பார்க்கலாமே.......
திருந்தவே மாட்டியா கிச்சா?.....
போங்கப்பா .......
பிள்ளைக்கு கல்யாண வயசாச்சு. இன்னும் என்ன கொஞ்சல் வேண்டி இருக்கு?

ஹே என்ன? ரொம்பத்தான்......
நாங்களும் ரொமான்டிக் ஹீரோ தான்.
வாடா கண்ணம்மா....... ரொம்ப படுத்தாதே...
அப்பறம் ஒன்னு கண்ணம்மா,
சும்மா அந்த மீராவை பற்றி பேசி ஷ்யாம் மனசுல ஆசையை வளர்க்க வேண்டாம். புரியரதா?....

காலையில் ஷ்யாம் ஜாகிங் முடித்து சீக்கிரமாக ஆஃபீஸ் கிளம்பும் வரை சுமித்ரா அவனிடம் வம்பே செய்யவில்லை. ஷ்யாமுக்கே ஆச்சர்யம்.
அம்மா ஆஃபீஸ் போய்ட்டு வரேன் என்று ஒரு கிஸ் குடுத்து விட்டு கிளம்பினான்.
அம்மா ஏன் ஒண்ணுமே சொல்லவில்லை. நேற்று அந்த மீரா டாப்பிக் பேசி இருக்க கூடாதா?

எண்ணங்கள் அலை மோத கார் பார்க் பண்ணி விட்டு உள்ளே நுழைந்து பார்த்தான். ராஷ்மி தவிர எல்லாருமே ரெடியாகி இருந்தனர்

குட் மார்னிங் கைஸ் .....

குட் மார்னிங் ஷ்யாம்.......

குட் டூ சீ யூ ஆல்.
பந்தாவா இருக்கீங்க.
நைஸ் நைஸ்

கேன்டீன் போய் ப்ரேக் பாஸ்ட், காஃபி சீக்கிரமா முடிச்சா ஜூம் மீட்டிங் போகலாம்.
கம் ஆன் குயிக் கைஸ்.

இன்னும் login அக்சஸ் ரெடி ஆகாததால் கான்பரன்ஸ் ரூம்ல மீட்டிங் ......

குட் மார்னிங் நந்திதா.
Can you start the call?

விஷ்வா இப்போ USல இருக்கார்.இது அறிமுகம் செய்து கொள்ள ஒரு சான்ஸ்.
திரை உயிர் பெற்று சிரித்த முகத்துடன்
விஷ்வா.
ஹை கைஸ் ...
எப்பிடி இருக்கீங்க?
சாரி சீக்கிரமா வர சொன்னதற்கு.

என்னைப் பற்றி:

விஷ்வா சுந்தரம் சிங்கார சென்னை .
அண்ணா ஆதர்ஷ். ஐஐடி மும்பை
ஷ்யாம் சொன்னது போல் ஜார்ஜியா டெக். ரெண்டு பேருக்கும் ஒன்னு போல ஹாபிஸ், interest.

நான் தான் இன்டர்வியூ பண்ணினேன்.
இப்போ 10 நிமிஷம் உங்களை பற்றி, ஃபேமிலி, கோல்ஸ், சென்னைல தங்கி உள்ள இடம், ஆபீஸுக்கு எப்பிடி வரீங்க, blah blah......
சுரேஷ், மீரா,செல்வம்,ராகவி, பாலாஜி சொல்லி முடிக்கவும் ராஷ்மி உள்ளே நுழைந்தாள் புயல் போல.

IAS கோச்சிங் கிளாஸ் இப்போ தான் முடிந்தது. அது தான் லேட்.

அனுமதி பெறவோ, அல்லது லேட் ஆக வந்ததுக்கு ஒரு சாரி கேட்கவோ இல்லை.

ஷ்யாமுக்கு செம கடுப்பு.

Ms. ராஷ்மி, இந்த கோச்சிங் கிளாஸ் தினமும் உண்டா?......விஷ்வா
ஆமாம்.....ராஷ்மி
அப்போ, நேற்று ஷ்யாம் இந்த மீட்டிங் பற்றி சொன்னப்ப சொல்லி இருக்கலாமே.......விஷ்வா.

ஷியாமுக்கு IAS தான் என் aim என்று தெரியுமே. அப்போ கிளாஸ் இருக்கும் என்பது தெரியாதா?.....ராஷ்மி

நாங்க IAS பண்ணலை. அதை பற்றி ஃபுல்லா தெரியாது. தெரியவும் வேண்டாம்..... விஷ்வா

Ms. ராஷ்மி, நீங்க ஒரு இண்டர்ன்.
கம்பெனி ரூல்ஸ் அன்ட்
ரெகுலேஷன்ஸ் எல்லா எம்பிளாயீஸ்ம்
ஃபாலோ பண்ண வேண்டும்.
நேற்று ஷ்யாம் கிட்ட இதை பற்றி சொல்லி இருக்கணம்.


பேசிக் கர்ட்டேசி கூட இல்லாம, லேட்டா வந்ததுக்கு ஒரு சாரி கேட்காம,
நீங்க பேசிகிட்டே போறீங்க.
இது 10 மணில இருந்து 5 மணி வரை உள்ள கவெர்மெண்ட் ஜாப் இல்லை.

இந்த விஷயம் எல்லாம் தெரிந்து தானே நீங்க ஆஃபர் லெட்டர் சைன் பண்ணி இருக்கீங்க.

2 மாசம் ட்ரெயினிங், 6 மாசம் புரோபேஷனரி பீரியட். இது குளோபல் கம்பெனி. நைட் சில சமயம் 9 வரை வேலை இருக்கும். அந்த நேரங்களில் உங்களுக்கு தேவையானவற்றை நாங்க குடுப்போம். உங்க வீடு வரை வந்து இறக்கி விடுவோம். 8மணி நேர வேலை தேவையை பொறுத்து மாறும்.
உங்களின் பாதுகாப்பு எங்களின் பொறுப்பு.
உங்க இஷ்டம் போல வரதுக்கு இது சந்தை இல்லை.
சொல்லாம லீவு போடறது, லேட்டா வரது, ரூல்ஸ் ஃபாலோ பண்ணாம இருக்கறது, கூட வேலை பண்ணும் பிரெண்ட்ஸ்க்கு மரியாதை குடுக்கமா இருப்பது, ...... இது எல்லாம் Red flags .

Hope you understand......


இது ராஷ்மிக்கு மட்டும் இல்லை. எல்லாருக்கும் தான்...... விஷ்வா

இப்போ தான் காலேஜ் முடித்து வாழ்க்கை பாதையில் முதல் படில இருக்கீங்க.
எவ்வளவோ மேடு பள்ளங்கள் வரும். சவால்கள் இருக்கும்......
எதிர் பார்த்தது, பார்க்காதது வரும். வாழ்க்கை என்பது
ரோஜா மலர் படுக்கை இல்லை.

ஆனாலும் முயற்சி செய்தால் முடியாதது இல்லை.

உங்க ப்ரெண்ட் ஆ சொல்லறேன்.

ஷ்யாம்... இந்த மீட்டிங் Thursday
morning 8:00 kku வைத்துக்கலாம்.

Bye guys. Have a great rest of the day.
மீட்டிங்ஐ தடாலென முடித்தான் விஷ்வா.
ஷ்யாம் கொஞ்சம் பிரண்டலி. விஷ்வா வயது, அனுபவம் இதனாலோ அல்லது இயற்கையாகவோ கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்.

ஒரே நிசப்தம்.மௌனம்

15 நிமிஷம் கழித்து ரீஜனல் டீம்ஸ் கூட மீட்டிங் . லஞ்ச் முடிந்து சென்னை ஆபீஸ் டீம் மீட்டிங்.

15 நிமிஷம் கழித்து திரும்ப இங்க வாங்க.

ஷ்யாம் சொல்லி விட்டு அவனுடைய அறைக்கு போக, ஒரு அசாதாரண நிலை அங்கு வந்தது.

விஷ்வா ஷ்யாமிடம் ஃபோனில்
சாரி ஷ்யாம்.
நேற்று நீ அனுப்பிய ரெக்கார்டிங் பார்க்கும்போதே இவர்களின் முக்கியமாக ராஷ்மி பர்சனாலிட்டி புரிந்தது.
நந்திதா அனுப்பிய மின்னஞ்சல், நந்திதாவின் ரிமார்க்ஸ்,
யார் கூடவும் பழகாமல் இருந்தது, மீராவை
டெலிகேட்டாக ஃபீல் பண்ண கேள்வி கேட்டது, உன் கிட்ட அல்லது நந்திதா கிட்ட சொல்லாதது, இன்று லேட்டா வந்தாலும் அதை பற்றி மன்னிப்பு கேட்காதது, ......
சாரி மூடு அவுட்டுடா
அதுதான்......

பரவாயில்லை விஷ்வா. எனக்கும் ஒரு மாதிரி இருந்தது. ஆனா, சின்ன வயது, அனுபவம் இல்லை. அது தான் என்று நினைத்தேன்.

எல்லாம் சரி ஆகும். கவலை படாதே.
குட் நைட்.

இந்த 15 நிமிஷத்துல யாரிடமோ
பேசியபின் ராஷ்மி நந்திதாவிடம் போய் ID, பேட்ஜ், லேப்டாப் எல்லாவற்றையும் திரும்பி கொடுத்து விட்டு வேலையை ராஜினாமா செய்வதாக மின்னஞ்சல் அனுப்பிவிட்டு வெளியேறினாள்.

திகைத்த நந்திதா
ஷியாம் இங்க வர முடியுமா? .

Guys, மீட்டிங் கொஞ்சம் லேட்டா ஸ்டார்ட் ஆகும். ஏதோ problem.

கைஸ் கொஞ்சம் இருங்க. வரேன்

உள்ளே வந்த ஷயாமிடம் நடந்ததை சொல்லி முடிக்கவும் விஷ்வா ஃபோன் வரவும் சரியாக இருந்தது.
இமெயில் பார்த்தேன்.....
இப்பவே இப்பிடி என்றால் IAS ஆனா பாவம் பப்ளிக்.
என்ன கொழுப்பு, திமிரு.
நான் இதை பார்த்துக்கறேன். புத்தி வர வெய்க்கறேன்.

வெயிட்டிங் லிஸ்ட்ல உள்ள நெக்ஸ்ட் 5 பேரு ரெஸ்யூம் எனக்கு அனுப்புங்க. ஷ்யாம் நந்திதா நீங்களும் பாருங்க. உங்க நைட் பேசறேன்.

இது எல்லாம் ஒரு அனுபவம். பாடம்.

ஷ்யாம் ரொம்ப ஃபீல் பண்ண, நந்திதா தான் நிலமையை சமாளித்தாள்.

ஷ்யாம் மீரா இருந்த திசை கூட திரும்பவில்லை.

ஒரு வழியாக ரீஜனல் டீம்ஸ் மீட்டிங் முடிந்து நந்திதா எல்லாருக்கும் சீட், சிஸ்டம் அக்சஸ், பெனிஃபிட்ஸ் சைன் அப், என்று எல்லா பார்மாலிடீஸ் முடித்து லஞ்ச் வந்து விட்டதா என்று பார்த்தாள்.
ஷ்யாம் வந்து சேர, லஞ்ச் வர எல்லாரும் சேர்ந்து சாப்பிட நிலமை சகஜம் ஆனது.
எல்லாருக்கும் ராஷ்மி விஷயம் என்ன ஆயிற்று என்று ஒரு கேள்வி......
கேட்க தயக்கம்

நந்திதாவும், ஷியாமும் ராஷ்மி வேலையை ராஜினாமா செய்த விஷயத்தை சொல்லிவிட்டார்கள்.

சூழ்நிலையை சரியாக ஜோக்ஸ், சினிமா என்று பேசி கொண்டு இருந்தார்கள்.

சென்னை டீம் உடன் நேரில் மீட்டிங். ஒரே ஜாலி. ரொம்ப பிரண்ட்லியாக இருந்தது. நேரம் போனதே தெரியவில்லை.
நந்திதாவும், ஷ்யாமும் 5 பேரிடமும் தனித் தனியாக பேசி கவுன்சலிங் குடுத்தார்கள்.
நாளை காலை 9 மணிக்கு HR ட்ரைனிங். நாளை பார்க்கலாம். ஆனா மற்ற ட்ரைனிங் காலை 8 க்கு ஆரம்பிக்கும்.

உங்களுக்கு ஏதாவது முடியவில்லை, அல்லது பிராபளம் என்றால் எங்க ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு சொல்லுங்க. எங்க cell number உங்க கிட்ட இருக்கா?
இல்லா விட்டால் நோட் it. ஒரு missed call or வாட்ஸ்அப்பில் msg
அனுப்புங்க
ஆனால், ஆபீஸ் சம்பந்தமான விஷயம் எதுவும் வாட்ஸ்அப், SMS, அல்லது இமெயில்ல அனுப்பதீங்க.
கம்பெனில உள்ள கம்யூனிகேஷன் வழில அனுப்புங்க

ஆர் யூ ஆல் ஓகே?
கைஸ் சீ யூ ஆல் டூமாரோ.
 

Advertisement

Advertisement

Back
Top