Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிலா ..என்.. வெண்ணிலா-01

Advertisement

lakshu

Well-known member
Member
நிலா ..என்.. வெண்ணிலா-01
டிங்...டிங் ஸ்கூல் பெல் அடித்தது. சென்னை புறநகரில் பரப்பரப்பான ரோட்டில் அந்த பள்ளி அமைந்திருந்தது. பதினோராம் ஏ பிரிவு வகுப்பின் வெளியே நின்றான் பவன்.
என்ன பவன் கிளாஸ்க்கு வரல.
இல்லடா ரவி, அண்ணா இரண்டு நாளா வரல, இன்னிக்கு வந்தாதான் கிளாஸ்குள்ள விடுவேன் சொல்லிட்டா மூன்.

அதுக்குதான் சொன்னேன் அவனுங்க கூட சேராத கேட்டியா. இப்ப மூன்கிட்ட மாட்டிக்கிட்ட.

அண்ணா வந்தா அவ்வளவு தான் என்ன பண்ணுவாரு, பயமாயிருக்குடா. இந்த மூன் வேற கூட்டிட்டு வந்தாதான் சொல்லுது.

பசங்க திட்டுற இந்த மூன் தாங்க இந்த கதையோட நாயகி, நிலா என்கிற வெண்ணிலா. இந்த பள்ளியின் கணக்கு டீச்சர்

ஆமாம் என்ன விஷியம் சொல்லிட்டியா பவன்.இல்லடா மச்சான் அதற்குள் கிளாஸ் டீச்சர் வர ரவி உள்ளே சென்றான்.

பவன் நீ ஸ்டாப் ரூமில் இரு உங்க பேரேன்ட்ஸ் வந்த பிறகு வா. சரி மிஸ் என்று தலையை ஆட்டிவிட்டு சென்றான்.வகுப்பில் உள்ள பெண்கள் அவனை பார்க்க பவனுக்கு எரிச்சல் உண்டானுது. இந்த அண்ணா இன்னும் வரல. மணி காலை 11.00 இரண்டு பீரியட் சென்றது.
அந்த பள்ளி வளாகத்தில் தன் பிளாக் நிற ஹாடி காரை நிறுத்திவிட்டு.உள்ளே சென்றான். அங்கே இருக்கும் ஆபிஸ் ரூமில் ஐம் ஈஷ்வர் பவனோட பிரதர். மேக்ஸ் டீச்சரை பார்க்கனும்.
ஒரு நிமிஷம் சார் என்று போனில் கிளார்க் பெண், நிலாவை அழைத்து பேசினாள். பிறகு சார் கிளாஸ் முடிய பத்து நிமிஷம் இருக்கு,முடிச்சுட்டு வராங்கலாம்.
ஷீட் , எனக்கு மீட்டிங் இருக்கு,நான் சீக்கீரம் போகனும்.28 வயது ஆண்மகன நல்ல உடல் வாக்கு ,கண்களில் கூலர்ஸ் போட்டிருந்தான், தெலுங்கு பட நாயகன் லெவல்ல இருப்பான் நம்ம ஹூரோ அலை அலையான தலை மூடி , கண்களின் கூர்மை கோவமாக உட்கார்ந்திருந்தான் சேரில். சிறிது நேரத்தில் அவனை பேரேன்ட்ஸ் மீட் செய்யும் ரூமிற்கு அனுப்பினார்.

அங்கு சேரில் உட்கார்ந்திருந்தாள் நிலா. லைட் கீரினில் காட்டன் புடவை உடுத்திருந்தாள். மாநிறம். கலையான முகம். உள்ளே நுழைந்த ஈஷ்வர் டெபிள் அந்த பக்கம் சேரில் அமர்ந்தான். என்ன ஸ்கூல் இது இப்படிதான் அன் டைம்மில வர சொல்லுவீங்களா. எங்களுக்கு வேலையில்ல. ஈஷ்வர் வந்தவுடனே கத்த.
அவள் அமைதியாக அவனை பார்த்தாள் அண்ணன் பக்கத்தில் நின்றான் பவன்.
இது யாரு என்று பவனை நோக்கி கேட்க.

எங்க அண்ணா... மெதுவாக சொன்னான்.
ம்ம் கேட்கல,
அண்ணா இவருதான். அண்ணிக்கு வந்தது எங்க டிரைவர் அண்ணா.

ஈஸ்வர் பவனை பார்த்து முறைக்க தலையை குனிந்துக்கொண்டான் பவன்.

சார் உங்களை 9.00 மணிக்கு வர சொன்னோம் , நீங்க வந்தது லேட், எங்க வேலைதான் கெடுது,

அவளை பேச விடாது எதுக்கு கூப்பிட்டிங்க அத சொல்லு சும்மா டைம் வேஸ்ட் பண்ணிட்டு.

சுர்ன்னு கோவம் ஏறியது நிலாவுக்கு, எதுக்கு கூப்பிட்டோம், உங்க பையனைப் பத்தி பேசறதுக்கு. வெட்டி கதை பேச இல்ல.

சரி சொல்லுங்க, ரேங் ஷீட்டில் அப்பாதான் சைன் பண்ணுவார்.

என்ன மனுஷன், தம்பி எப்படி படிக்கிறான் கேட்கவில்ல, சார் 11 படிக்கிறான் கொஞ்சம் கூட படிப்பில கவணமில்ல, கணக்கில சிங்கள் டிஜிட் , உங்க அப்பாகிட்ட சொன்னா நோ யூஸ். ஆனா போன வாரம் லவ் லட்டர் கொடுக்கிறான் இந்த வயசில...

இடியட் டீச்சருக்கு போய் லவ் லட்டர் கொடுப்ப.....
நிலா ஈஷ்வரை முறைத்துக் கொண்டே எனக்கில்ல, அவன் கூட படிக்கிற பொண்ணுக்கு.

அந்த பொண்ணு ஏதாவது கம்பளைன் பண்ணிச்சா மிஸ்...

நோ, அவன் கொடுக்கிறத நான் பார்த்தேன்...

அந்த பொண்ணுக்கே எந்த பிரச்சனையில்லாத போ நீ ஏங்க குதிக்கிறீங்க...

அனைத்தையும்
கேட்டுக்கொண்டே தலையை குனிந்துக் கொண்டிருந்தான் பவன் , நல்லா மாட்டினாங்க நம்ம மூன், எங்க அண்ணாகிட்ட. ஐயோ வீட்டில என்ன செய்வானோ தெரியில சாமி என்னை காபாத்து.

லுக் மிஸ்டர்... எங்க ஸ்கூல் ஸிரிட்... உங்க தம்பி இப்பதான் சேர்ந்திருக்கான்..ஒழுக்கம் ரொம்ப முக்கியம்.. பத்தாத ஏதோ பாக்கு வேற போடுறான்... பசங்களை சரியா வளர்க்கனும். ஒழுக்கத்தை சொல்லி கொடுக்கனும்.

மிஸ் சாரி... அண்ணாகிட்ட இப்படி பேசாதீங்க மிஸ் ... தப்பு என்மேல.

கேட்டுக்கொண்டே இருந்த ஈஷ்வர் ப்ளார் என்று பவனை அடித்தான், அந்த ரூமில் யாரும் இல்லதான் தீடீரென்று பவனை அடித்தது, நிலாவுக்கு ஒரு மாதிரி ஆயிட்டு. அவளும் ஏழுந்து நிற்க.

இந்த டீச்சர் முன்னால நிக்கவச்சி, இந்த சின்ன பொண்ணு கேள்வி கேட்கிற அளவுக்கு நான் உன்னைய சரியா வளர்க்கல.

என்ன செஞ்சீங்க, இப்படியா அடிப்பிங்க...இது ஸ்கூல், மேணர்ஸ் இல்ல... அவன் இப்படி பொறுப்பில்லாம ஆனதுக்கு காரணம் நீங்க தான்... இனிமே உங்கள கூப்பிட மாட்டேன் நான் பார்த்துக்கிறேன் அவனை...

என் தம்பியை பார்த்துக்க எனக்கு தெரியும், ஸ்கூல் கொடுக்கிற சம்பளத்திற்கு வேலையை பாரு.

எதுக்கு இப்படி பேசிறீங்க..மிஸ்டர்..அவளை முறைத்துக்கொண்டே, இனிமே இப்படி செய்ய மாட்டான்.. இப்படிதான் பேரன்ட்ஸ் கிட்ட பேசுவீங்களா, நான் உங்க பிரின்ஸ்பால பார்க்கிறேன்.

தாராளாம போய் பாருங்க... தப்பெல்லாம் இவர் செஞ்சிட்டு நம்மளை எப்படி பார்த்திட்டு போகுது பாரு. பவன் கோ டூ த கிளாஸ்...

பிரின்ஸ் பால் அறையில், மேடம் அந்த மேக்ஸ் மிஸ். சரியில்ல எப்படி பிகேவ் பண்ணாறாங்க, அவங்க வார்ன் பண்ணுங்க , எங்கிட்ட சாரி கேட்க சொல்லுங்க...

சாரி சார் அது முடியாது..

அப்படியா நான் கரஸ்பாண்ட் கிட்ட போவேன்.

அவங்கதான் இந்த ஸ்கூல் கரஸ்பாண்ட் ஸார், மேக்ஸ் மிஸ் ஒண் மன்த் லீவ் அதான் இவங்க எடுத்தாங்க..

அதான் அவளுக்கு அந்த திமிர் ப்ளடி...என்று மனசிற்குள் நினைத்தான் ஈஷ்வர் என்கிற மகேஷ்வரன். M.D of Eswar groups... காலையில் அவன் அப்பா பார்த்திபன் போன் பண்ணி சொல்லி மீட்டிங் கேன்சல்,நிலா முன்னாடியிருந்தான், அந்த கோவத்தின் வார்த்தைகள் தான் இவை.

மதியம் லன்ச் பிரேக்கில் , என்ன பவன் உங்க அண்ணா வந்தாராமே, நம் நவின் சொன்னாடா, சூப்பரா இருந்தாராம், அவன் சன்னல் வழியே பார்த்தானாம். என்னடா சொன்னாரு நம்ம மூனுக்கிட்ட.

இரண்டும் முட்டிக்கிச்சுடா. செம சண்டை ஆனா எனக்கு வீட்டில இன்னிக்கு இருக்கு மச்சான். அந்த பாக்கு சாப்பிட்ட விஷியத்தை போட்டுக் கொடுத்துச்சு மச்சான்.

டேய் அது தப்புதானே பவன். ஆமாம் , ஆனா அவனுங்க வற்புறுத்தியதால் ஒருடைம் போட்டேன் மாட்டினேன். அப்பறம் எங்க டிரைவரை செட் செஞ்சது வரை...இரண்டு வாய் சாப்பிட்ட பிறகு , எனக்கு சாப்பிடவே பிடிக்கல, மச்சான் எங்க அண்ணனை நம்ம மூன் கட்டிகிட்டா எப்படியிருக்கும்...

உனக்கு ஏன்டா இந்த ஆசை, தினமும் சண்டைதான் போடும்...

இல்ல ரவி...ஈஷ்வரை நல்லா பார்த்துப்பாங்க. இவங்க ஜோடி பொருத்தம் நல்லா இருந்தது.

ஆனா உங்க அண்ணா ஏற்கனவே மேரேஜ் ஆனவங்கதானே... பெல் அடிக்க கிளம்பினர் கிளாஸிற்கு..

மாலை ஆறு மணிக்கு, பெஸன்ட் நகர் கடற்கரை , திட்டில் பார்த்திபன் கடற்கரையை வெறித்து பார்த்துக்கொண்டு இருக்க, அவர் பக்கத்தில் ஸ்வீட் கார்னை கொறித்துக் கொண்டே ராம்மூர்த்தி, பார்த்திபனை பார்த்தார்.

என்ன பார்த்தி ஏன் அமைதியா இருக்க, நாம்ம நினைச்ச மாதிரி எல்லாம் நடக்குமா ராம். இருவரும் பால்ய நன்பர்கள் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பீச்சில் சந்தித்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை மணி ஆறு ஆனால் இவர்கள் சந்திக்குமிடம் பீச் தான்.

என்ன ராம் யொசிக்கிற.வரும் ஞாயிற்கிழமை உன் பொண்ண பார்க்க வரதா அப்பாயின்மண்ட் கொடுத்திருக்கான் என் மவன், அவன் ஏதாவது பேசி உன் பொண்ணு மனதை கலைசிடுவானோ பயமாயிருக்குடா.

இங்க மட்டும் என் வாழுது, நான் பெத்தது இருக்கே, பேசியே தெறிக்க விட்டிருவா.இதுங்களுக்கு எப்ப கல்யாணம் பண்ணறது எப்படி செய்யறது , ஜென்னி வந்திடும் போல ...

இல்லடா பாதி கிணறு தாண்டிட்டோம் , இன்னும் கொஞ்சம் தானே. எல்லாத்தையும் சொல்லிட்டியாடா.

ம்ம் நீ என் பெண்னை பற்றி சொல்லிட்டியா பார்த்தி...
சொல்லிட்டேன் ராம். இவன் எப்படி எடுத்துப்பான் தெரியில, நான் செத்துடுவேன் மிரட்டிதான் சம்மதம் வாங்கிருக்கேன். சரிடா நாளை மறுநாள் என்ன நடக்குது பார்ப்போம்.

அன்று இரவு, ஈஸ்வர் ஹாலில் சோபாவில் உட்கார்ந்திருக்க நம்ம பவன் அவன் பக்கத்தில் நின்றிருந்தான். உள்ளே பார்த்திபன் நுழைய. அப்பா என்று கூப்பிட்டான் ஈஷ்வர்.

ஏதோ உங்களுக்கு தெரிஞ்ச ஸ்கூல் சொல்லி சேர்த்தீங்க. அங்க ஒர்க் பண்ணவங்களே சரியில்ல, என்ன ஸ்கூல் இது ஒரு 2000 பேர் படிப்பாங்க அவ்வளவுதான் அதுக்கே அந்த பொண்ணு இந்த ஆட்டம் ஆடுது.

சரியா விசாரிக்க மாட்டிங்களாப்பா.
இல்ல ஈஷ்வர் நல்ல ஸ்கூல்தான் , இவன் என்ன செஞ்சான் கேளு, அப்ப தெரியும்.

நான் யாருப்பா அவனை கேட்க அவங்க அண்ணா இதோ நம்ம டிரைவர் வரதன் தானே அவரே கேட்பாரு என்ன வரதா.

சார் என்னை மன்னிச்சிடுங்க , சார் தம்பி சும்மாதான் கூப்பிட்டு போச்சு, அப்பறம்தான் விஷியமே தெரிஞ்சது சார்.
கிளம்புங்க, உனக்கு புள்ளக்குட்டியிருக்குன்னு தான் இப்ப வேலைக்கே வச்சிருக்கேன். இல்ல .
சாரி சார் என்று வரதன் கிளம்ப.

அண்ணா தப்பு என்மேலதான் இனிமே...

என்னடா இனிமே என் முன்னாடி பேசவே பயப்படுவாங்க. உன்ன சரியா வளர்க்கலன்னு சொல்லுது அந்த பொண்ணு.

யாருப்பா அது ...

ம்ம் இவங்க மேக்ஸ் டீச்சர், ராம்மூர்த்திக்கிட்ட சொல்லனும் அந்த மேக்ஸ் டீச்சரை பத்தி மனதில் நினைத்தார்.இங்க பாருங்க உங்க கடைக்குட்டி பவன் , கூட படிக்கும் பொண்ணுக்கு லவ் லட்டர் கொடுத்தானாம்.

எனக்கு கல்யாணம் செய்ய ஆசைப்பட்டீங்களே, பேசாம இவனுக்கு கல்யாணம் செஞ்சி வைய்யுங்க. கல்யாண ஆசை வந்திடுச்சு தம்பிக்கு. பார்த்திபன் பவனை முறைக்க.

என்னடா இதெல்லாம் படிக்கிற புள்ள செய்யற காரியமா....

அண்ணா தப்புதான் என்னை மண்ணிச்சுடு நான்...

உங்கிட்ட நான் பேசல
... இவனே இப்படிருக்கான் உங்க இரண்டாவது பையன் புள்ள குட்டியோட வந்திட போறான்.
ஏன்டா பெரியவனே இப்படி பேசற. பின்ன எப்படி பேச சொல்லிருங்க குடும்பத்தை பத்தி கவலையிருக்கா இவங்களுக்கு. இதுல எனக்கு இன்னோரு கல்யாணம் ச்சே...

கடைசில இவன் இங்க வந்துதான் நிற்பான் என்று ஏற்கனவே யோசித்திருந்தார் பார்த்திபன். இரு அப்பாக்களின் கவலையே முதல் கல்யாணம் செய்ய இல்லைங்க, இவங்களுக்கு மறுமணம் செய்வதைப் பற்றிதான்.

அதே நேரம் காபி டே வில் , ராஷ்மி பீளீஸ் நான் சொல்லறதை கேள், நீ நான் பேசறதையும் கேள் விக்கி , நரசிம்மனின் இரண்டாவது பையன் விக்கி, இன்ஜீனியர் மூன்றாம் ஆண்டு படிக்கிறான். நம்ம ராஷ்மியை கடந்த மூனு மாசமா பிக்கப் செஞ்சிட்டு இருக்கான்.

விக்கி, எனக்கு இன்டரஸ்ட் இல்ல. முதல்ல படிப்பு முடிப்போம். எங்க வீட்டில இதெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க. நாங்க மிடில் கிளாஸ் உங்க லவல் இல்ல....
--------- நிலாவை பிடித்தேன்

பிப் 14 இந்த நாவலை ஆரம்பித்திருக்கேன் பிரண்ட்ஸ், எதிர்ப்பார்ப்பு இல்லாத காதல், கொஞ்சம் டிபரண்ட் கதை களம். இதுவரை நீங்க கொடுத்த ஆதரவும், இந்த கதைக்கும் தருவீங்க நினைக்கிறேன்...
உங்கள்
lakshu
 
Last edited:
Wow...super sis nejamave idhu romba different ta irukku sirinchide padichen... eshwar kovakara paiyana irukanga...marumanamaa enna nadandhuchu... sis therinchikka aarvama irukken
 
உங்களுடைய "நிலா.. என்..
வெண்ணிலா"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
Top