Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிலா ..என்.. வெண்ணிலா-03

Advertisement

lakshu

Well-known member
Member
நிலா ..என்.. வெண்ணிலா-03

எதுக்குடா சிரிக்கிற, சிரிக்கிற மாதிரியா சீன் இருந்தது.

என்ன டா எல்லாம் போட்டு பேசிற, அவ்வளவுதான் சொல்லிட்டேன்.

பின்ன நீ செஞ்சது...முறைத்துக்கொண்டே நிலா கேட்க..

தன் இதழ் விரித்து சிரித்தான். ஈஷ்வர் சிரிப்பதை முதன்முதலாக பார்த்தாள் நிலா. மெய் மறந்து அவனை பார்க்க, இந்த கள்ளமில்லா சிரிப்பில் எந்த தவறும் தெரியிலையே ,ஏன் ஈஷ்வரை தவறாக நினைக்குது இந்த சமுதாயம். .

என்ன அப்படி பார்க்கிற, நீ என்னைய அட்ஜஸ்ட் செய்வதுதான் கஷ்டம். உனக்கு என்னை பத்தி ஒண்ணும் தெரியில. பயங்கறமா நீ சொன்னீயே அந்த X டார்ச்சர் கொடுப்பேன் யோசிச்கோ இந்த கல்யாணம் வேணும்மா,வேண்டாம்மா.

குலைக்கிற ஏதோ கடிக்காது சொல்லுவாங்களே ஈஷ்வர்

புரியுதுல டைம் ஆயிடுச்சு, கீழ எல்லோரும் காத்திட்டு இருப்பாங்க, போலாம் வா ... இருவரும் ஹாலுக்கு வந்தார்கள். ராம், நிலா அருகில் வந்தார்.

நிலாவை பார்த்தார், நிலா தலையை ஆட்ட,ஓகே என்று ஈஷ்வர் சொல்ல. பார்த்திக்கு சந்தோஸம் தாங்கவில்லை.

சரி கிளம்பலாம் அப்பா- ஈஷ்வர்

அதுக்குள் எப்படி போக முடியும்..

அப்போது உள்ளே வந்த ராகவ் ... வா ராகவ் எல்லாம் வாங்கி வந்திட்டியா பார்த்தி கேட்க.

வாங்கி வந்துட்டேன்ப்பா, ராகவ், ஈஷ்வருடைய தோழன். பள்ளியிலிருந்து காலேஜ் வரை இப்போ இவங்க கம்பெனியிலே வேலை..ஈஷ்வருடைய உயிர் தோழன்.

நிலா ,ராகவ் என் பிரண்ட், எங்க பேமிலியில் ஒருத்தன். நிலா தலையை அசைக்க ...என்னடா இங்க ஈஷ்வர் விசாரிக்க.

அண்ணாதான் தங்கச்சிக்கு எல்லாம் செய்யனும் அதான் வந்தேன். இப்படி பேசியதை பார்த்த நிலாவுக்கு ராகவ்வை ரொம்ப பிடித்தது. யாருமில்லாமல் வளர்ந்தவளுக்கு அண்ணா என்ற உறவு பிடித்திருந்தது.

டேய் ஈஷ்வர் மதியம் நிச்சியம் பண்ணலாம் முடிவும் எடுத்திட்டோம். நானும் ராமும்...

அப்பா ... ஈஷ்வர் குறுக்கிட ,நீ கொஞ்சம் அமைதியா இரு ஈஷ்வர் , எங்களுக்கு வேலை நிறைய இருக்கு, ராகவ் ரிங் வாங்கிட்டு வந்திட்டியா.. அப்பறம் பட்டுச்சேலை நம் கடையிலிருந்து எடுத்திட்டு வந்தியா..அடுக்கிக்கொண்டே போனார் பார்த்தி.

எல்லாம் வாங்கிட்டு வந்திட்டேன் ப்பா.

பார்த்தி மதியம் சாப்பாடு பெரிய ஹோட்டல்ல சொல்லனும்பா. மாப்பிள்ளை நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கோ. பரவாயில்ல மாமா.

ஈஷ்வர் நீ ராகவ் கூட போய் பக்கத்தில இருக்கிற நகை கடையில் ஒரு ஆரம், மேட்ச் வளையல் எடுத்திட்டு வாங்க, பொண்ணுக்கு ஈடு செய்யனும், முறைக்காத போடா.

காரை எடுத்துக்கொண்டு புகழ் பெற்ற நகை கடைக்குச் சென்றனர் ஈஷ்வரும், ராகவும்.

ஒரு மணி நேரம் சென்று வீடு திரும்ப, வீட்டிற்குள் டெக்ரெஷன் ஒரு பக்கம் முடிய, அதற்குள் பவன் அவனுடைய பிரண்ட்ஸை செல்லில் அழைக்க அன்று சன்டே என்பதால் அவனுடைய பத்து பிரண்ட்ஸ் வந்துவிட்டார்கள். ஸ்கூல் பிரின்ஸ்பல் பேமலி, சில நெருங்கிய டீச்சர்ஸ் மற்றும் அக்கம் , பக்கம் வீட்டினர் என்று ஐம்பது பேர் மேல் கூடிவிட்டனர்.

ஈஷ்வரும்,ராகவ் பார்த்து திகைத்து நின்றனர். ராகவ் கொஞ்சம் வேலை இருக்கு என்கூட வா விருந்து நடத்திற இடத்தை செட் செய்யனும் , கொஞ்ச நேரத்தில சாப்பாடு வந்திடும். சரிங்க அப்பா என்று பார்த்தியுடன் செல்ல.

ராம் , மாப்பிள்ள வாங்க இந்த ரூமில் ஃபிரஷ் பண்ணிக்கோங்க...சரி மாமா, ரூமிலி நுழைந்தான், என்ன நடக்குதுன்னே தெரியில, இப்படி பரபரப்பா போகுது. தன்நிலையை யோசித்தான். ஐன்னல் வழியே சத்தம் கேட்க அருகில் சென்றான். நம் நிலா தாங்க ஆட்களிடம் வேலை வாங்கிக் கொண்டிருந்தாள். இதை அங்க வைங்க , இங்க டெபிள் போடுங்க என்று.

இவளுக்கு கொஞ்சமாவது பீலிங், இருக்கா இன்னிக்கே நிச்சியம் சொல்லிட்டாங்க, எப்படி இவ நார்மலா இருக்கா. இரண்டுபேரும் யார் என்று இப்பதான் தெரியும்.

அம்மா நிலா நீ போய் ரெடியாகுடா டைம் ஆகுது ராம் பெண்ணின் கையை பிடிச்சு கேட்க. நான் ரெடியாதானே இருக்கேன்.

நிலா என் செல்லமில்ல இந்த பட்டுசேலையை உடுத்திக்கடா, ப்ளீஸ், ப்ளீஸ் நகையை போட்டுக்கோம்மா.

அதெல்லாம் முடியாது சிறுபிள்ளைபோல் திரும்பி நின்றாள். இங்க பாரும்மா மாப்பிள்ள என்ன நினைப்பாரு அதவிட என் நன்பன் பார்த்தி உனக்கு கல்யாணம் பிடிக்கலைன்னு நினைச்சுப்பான். வரவங்க...

போதும் நான் ரெடியாகிறேன்.நிலா கிளம்ப இவர்களின் பாசத்தை பார்த்து ரசித்தான் ஈஷ்வர்.

அனைவரும் ஹாலில் கூடியிருக்க பெற்றவர்கள் இருவரும் தட்டை மாற்றினார்கள். வரும் புதன்கிழமை நம்ம வடபழனி கோவில்ல கல்யாணம் வச்சிருக்கோம் சபையில் அறிவிக்க, நிலாவும், ஈஷ்வரும் இருவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்.பார்த்தி நிலாவிடம் பட்டுசேலை,பூ நகைகள் வைத்த தட்டை கொடுத்தார். ராம் ஈஷ்வருக்கு புது டிரஸ் செயின் பிரேஸ்லெட் வைத்து கொடுத்தார். இதையேல்லாம் செல்லில் பவன் வீடியோ எடுக்க, சுற்றி அவனுடைய பிரண்ட்ஸ் பார்த்துக்கொண்டிருந்தன. இரண்டுபேரும் மாத்திட்டு வாங்க ..

இன்னும் சில நன்பர்கள் ராமின் உறவினர்கள் வந்திருந்தன. அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருந்தார் ராம். சிறிது நேரத்தில் உடையை மாத்திட்டு இருவரும் வந்தனர்.

ராம் திரும்பி நிலாவை பார்த்தார் எத்தனை நாள் தவம், பெண் தணிமரமா நின்று விடுவாளோ , இந்த 24 வயதில் வாழ்க்கை முடிந்துவிடுமோ என்று தூங்காத நாட்கள். இனி என் பெண்ணுக்கு நல்லது தான் நடக்கும் நம்பிக்கை வந்துவிட்டது ராமுக்கு. தங்க தேவதை போல் நடந்து வரும் தன் பெண்ணை பார்த்து கண்கலங்கினார்.

இந்த பக்கம் பார்த்தி , ஈஷ்வர் நிலா பக்கத்தில் ஜோடியாக நிற்பதை பார்த்து என் பையனுக்கு துனை கிடைத்துவிட்டது. எங்க வீட்டு மகாலஷ்மி வந்துவிட்டாள். அவனுடைய வலி இன்றோடு போய்விட்டது. இனி வசந்தம் மட்டுமே என்று கண்ணில் வந்த கண்ணீரை அசால்ட்டா துடைத்துவிட்டார் பார்த்தி நாம்ம நினைத்தது.நடந்துவிட்டது.

ஆனால் இருவர் மனதில் எந்த உணர்ச்சியுமில்லை.

எல்லோரும் கையை தட்ட , பெண் கையை பிடித்தான் ஈஷ்வர் அதுவரை எந்த உணர்வும் அவனுக்குள் இல்லை இதே போல் போன முறை ஒரு பெண்ணுக்கு அனுவித்தோமே. இது நமக்கு புதுதில்ல என்று தோன்ற மோதிரம் அணிவதற்கு முன் நிலாவை பார்த்தான். தலை குனிந்து நின்ற நிலா அவனை நிமிர்ந்து பார்க்க. அவள் கண்கள் ஆயிரம் வார்தைகளை ஈஷ்வருக்கு சொல்லிற்று. கண்களை பார்த்துக்கொண்டே மோதிரத்தை அணிவித்தான் ஈஷ்வர்.

நிலாவும் போட்டுவிட, எல்லோரையும் சாப்பிட அழைத்தார்கள்.

நிலா நல்ல டைப் மச்சான், எனக்கு என்னவோ உண்ணைய நல்லா பார்த்துப்பாங்க நினைக்கிறேன்.

அவகிட்ட நீ பேசினதில்ல பேசி பாரு பார்க்க பாவம் போல இருப்பா, ஆனா சரியான சண்டக்காரி,வாயாடி ஈஷ்வர் ராகவிடம் சொன்னான்.

அனைவரும் கிளம்பி செல்ல மணி 3.00 ஆனது.பார்த்திக்கு இங்கிருந்து செல்ல மணமே வரவில்லை. பார்த்தி வீட்டினர் மட்டும் இருந்தனர்.

மாமா உங்கிட்ட பேசனும் நிலா பார்த்தியை பார்த்து பேச...

சொல்லும்மா..கல்யாணமாயிட்டு அப்பா என்கூடதான் வருவாரு. உங்களுக்கு கஷ்டமாயிருந்தா, நீங்க எல்லோரும் இங்க வந்திடுங்க. எங்க அப்பா தங்க, செலவு செய்வதெல்லாம் என்னுடைய பணமாதான் இருக்கனும்.

ஏன் என்னால உங்க அப்பாவ கவனிக்க முடியாதா, உங்கிட்ட வாங்கிதான் மாமாவ கவனிக்கனும் அவசியமில்ல. அப்படி ஒண்ணு சம்பாரிக்காத ஆளில்லை. நீ எத்தனை பேரை வேண்டுமென்றாலும் கூட்டிட்டுவா ஈஷ்வர் கத்த.

ரொம்ப நன்றி ஈஷ்வர், அப்படியே கமலாக்கா வருவாங்க , இங்க வாங்க என்று தோட்டத்திலிருக்கும் லவ் பேர்ட்ஸ் காண்பித்தாள். நிலா அருகில் வந்தவுடன் கீச் கீச் என்று கத்தியது. இவங்களையும் கூட்டிட்டு வரட்டா.

இவளை பார்த்து முறைக்க, என்ன இப்படி பார்க்கிறீங்க இவங்க இல்லாமல் என்னால் இருக்கமுடியாது.

வேற வீட்டில எலி பூனை,நாய் ஏதாவது இருக்கா சொல்லு கூட்டிட்டு போறேன்.

ம்ம் கார்டனை மிஸ் பண்ணவேன்,

வேனுமுன்னா கிரேன் மூலம் பேத்து எடுத்திட்டு போலாமா நிலா.

உனக்கு என் கஷ்டம் புரியலை ஈஷ்வர், .

நிலா என்ன விளையாட்டு ராம் கடித்துக்கொள்ள.சாரி மாப்பிள்ள அவ சின்னபிள்ள மாதிரி ஏதாவது பேசுவா.

நிலா பார்த்தியிடம்,மாமா ஞாயிறு எங்க வீட்டுல மத்த 6 நாள் உங்கவீட்டில ஓகே வா. விக்கி பவன் கல்யாணம் வரை அவங்க இரண்டுபேரும் வருவாங்க அப்பறம் தேவையில்லை.ஆனா ஈஷ்வர் நீங்க வாழ்நாள் முழுவதும் வரனும். என்ன மாமா, டீல் ஓகேவா.

டபுள் ஓகேம்மா. இது கல்யாணமா இல்ல பிசினஸ் டீலா தெரியிலையே என்று தலையில் அடித்துக்கொண்டான் ஈஷ்வர்.

ராம் நீ என் ரூமுக்கு பக்கத்து ரூமில் தங்கிக்கோ, உடனே வீட்டுக்கு போய் ரெடி செய்யனும்.

விக்கி உடனே ஈஷ்வரிடம் ,பார்த்திங்களா அண்ணா, உனக்கு ஜோடி சேர்க்கிறேன் அதுங்க ஜோடி சேர்ந்திடுச்சு.

ஈஷ்வருக்கு இங்கிருந்து கிளம்பினால் நல்லது என்று தோன்ற, அப்பா கிளம்பலாம்.

இல்ல ஈஷ்வர் எங்களுக்கு வேலையிருக்கு, கோயில்ல மேரேஜ்க்கு சொல்லனும். கொஞ்சம் தெரிஞ்சவங்களை கூப்பிடனும். ம் முக்கியமா டிரஸ் பர்சேஸ் பண்ணனும். ஒரு ஆறு மணிக்கு வரீயா..

எனக்கு வேலையிருக்கு, உங்களுக்கு பிடிச்சதை எடுத்திட்டு வாங்க.

அண்ணா நானும் வரல மூன் கூட இருக்க போறேன். அப்பாக்கூட ஹெல்ப் பண்ணுவேன்னு என்றான் பவன்.

விக்கி, அண்ணா வாங்க நாம்ம போலாம். ஈஷ்வர் நிலாவிடம் நான் வரேன் என்று சொல்லவில்லை, மொத்தத்தில் அவளை பார்க்க கூடவில்லை. அப்படியிருக்கும் ஈஷ்வர்தான் வருங்காலத்தில் தன் மனைவி நிலாவிடம் உரிமை, காதலை வேண்டி நிற்பான். என் காதலை ஏற்றுக்கொள் என்று.

ராமு தான் இதை கவனித்தார், ஆனால் சம்பந்த பட்ட நிலா எந்த எதிர்ப்பார்ப்பு இல்லாமல் நின்றாள்.

பார்த்தி, ராமின் தோளை தட்டி போக போக சரியாகிடும். விட்டுபிடிப்போம் நண்பா, கல்யாணம் ஆயிடுச்சுன்னா பொறுப்பு வந்திடும். மனச போட்டு குழப்பிக்காத.

வீடு வந்து சேர்ந்த ஈஷ்வர் படுக்கையில் விழுந்தான். என்ன என்னவோ நிகழ்ந்துவிட்டது. இன்னோரு வாழ்க்கை எப்படியிருக்குமோ, யோசித்து யோசித்து தலைவலி வந்துவிட்டது ஈஷ்வருக்கு...

அங்கே பவன் நிலாவிடம், மிஸ் சாரி சாரி அண்ணி, அண்ணாகிட்ட போன் நம்பர் வாங்கினீங்களா என்று கேட்க.

எதுக்கு பவன், எந்த விஷியமென்றாலும் அப்பா,மாமா சொல்ல போறாரு.

ஐய்யோ மூன் இப்படி பேசுது... அண்ணி எங்க எல்லார் நம்பரையும் சேவ் பண்ணிக்கோங்க.

சரி பவன் , இந்தா போன் நீயே செஞ்சிக் கொடுத்திடு , நான் இப்போ வரேன் என்று தன் அறைக்கு சென்றாள்.

ஈஷ்வர் நம்பரை சேவ் செய்திட்டு நிச்சியம் பண்ணிய இமேஜை வாட்ஸ் அப்பில் அனுப்பினான். அதில் இருவரும் பக்கத்தில் நிற்கும் போட்டோ. பிறகு எப்படியிருக்கு என்று டைப் செஞ்சான்.

மேசேஜ் செல்லில் வர ஈஷ்வர் யாருது, புது நம்பர் இது, என்று திறந்து பார்க்க, அதில் இருவர் போட்டோ. இவ வேற நேரங்காலம் தெரியாத லூஸூ.திரும்பவும் அதே மேசேஜ் பத்து முறை வர கடுப்பாகி, போன் செய்தான்.

ஈஷ்வர் போன் செய்யவும்,நிலா வெளியே வரவும் சரியாக இருந்தது. அண்ணி உங்க போன்.. என்று பவன் கொடுக்க, அதை உயிர்பித்தாள். ஹலோ, என்று பேசியவுடன். ஏன் இப்படி தொந்தரவு செய்யற.

ஈஷ்வர் என்ன பேசிறீங்க, நானா.

ஆமாம் கொஞ்சம் நிம்மதியா இருக்கவிடு. சும்மா மேசேஜ் அனுப்பிட்டு.

நானா ஒரு நிமிஷம், பவன் உங்க அண்ணாவுக்கு மேசேஜ் சேன்ட் பண்ண...

அது மிஸ், உங்க ரெண்டு பேர் போட்டோ அனுப்பினேன், எப்படியிருக்கு கேட்டேன்.

டேய் நாட்டி, அப்படி செய்ய கூடாது புரியுதா...

சாரி மிஸ். பரவாயில்ல பவன், ஈஷ்வர் சாரி, தெரியாம வந்திடுச்சு. இனிமே எந்த மேசேஜூம் வராது.

ஓ பவன் அனுப்பினான்னா. ம்ம் உங்க எல்லார் நம்பரையும் சேவ் பண்ண சொன்னேன் அதான் செக் பண்ணிருப்பான்.

சரி நான் வைக்கிறேன். ச்சே இவள வேற திட்டிட்டோம்.

, ----- நிலாவை பிடித்தேன்.
 
Top