Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிலா..என்..வெண்ணிலா-04

Advertisement

lakshu

Well-known member
Member
நிலா..என்..வெண்ணிலா-04

தந்தை இருவரும் கல்யாண ஏற்பாடுகளை செய்தனர். புதன் காலை நல்ல நேரத்தில் வடபழனி முருகன் கோவிலில்,ராம்,பார்த்தி, பவன், விக்கி,ராகவ் பக்கத்தில் நிற்க மேலும் ராமின் சொந்தங்கள் சிலர் இருக்க, ஈஷ்வர் நிலாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு தாலியை கட்டினான். அதுவரை தலைகுனிந்து அமர்ந்திருந்த நிலா தலையை நிமிர்த்தி ஈஷ்வரை பார்த்தாள், அந்த பார்வை அவனுக்கு ஆயிரம் வார்த்தைகள் சொன்னது . ஆனால் ஈஷ்வருக்கோ அந்த கண்களின் மொழி புரியவில்லை.

ஆனால் , அவள் ஏதோ எதிர்பார்க்கிறாள் என்று புரிந்துக்கொண்டான். தன் மனையாளப் பார்த்து கடவுளிடம் வேண்டிக்கொண்டான். கடைசிவரை இவள் என்னுடன் வாழ வேண்டும் என்று.
பெற்றோர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். பிறகு முருகனை வேண்டி சன்னிதானத்தை சுற்றி வந்து அனைவரும் இருக்கும் இடத்தில் நிற்றனர்.

தீடிரென்று, புயல்போல் உள்ளே வந்தான் முரளி, அவள் மனைவி வைஷ்னவி தூரத்தில் நிற்க, “என்ன ஈஷ்வர் புதுக்கல்யாணம், சொல்லவேயில்ல”, முரளி நக்கலாக கேட்க, ஈஷ்வர் தலையை திருப்பிக்கொண்டான். பார்த்தி முரளியை பார்த்து முறைக்க.

“அழைக்காத விருந்தாளியா வந்துட்டேனா ஈஷ்வர்”.

“பாத்துப்பா இந்த பெண்ண மூனு மாசத்தில அனுப்பிடுவீயா”, இதை பார்த்துக்கொண்டே இருந்த நிலா,” என்ன இப்படி சொல்லிட்டீங்க அண்ணா, உங்க பேருகூட எனக்கு தெரியாது, இரண்டு வருஷம் கழிச்சு உங்க மடியில வச்சி எங்க பிள்ளைக்கு காது குத்தலாம் இருக்கேன் , நீங்க மூனு மாசத்தில போக சொல்லுறீங்களே அண்ணா”.

நிலா இப்படி பேசவும், “ஈஷ்வர் ஆ ஆ என்று சத்தமா சிரித்தான்”. ச்சே என்று தன் மனைவியை இழுத்துக் கொண்டு வெளியே சென்றான் முரளி.

ஏதோ தொழில் விரோதிப்போல நக்கல் செய்கிறான் என்று நினைத்து ஈஷ்வரிடம் முரளி பற்றி கேட்கவில்லை நிலா. பவன் மணமக்கள் ஒரு காரில் டிரைவர் ஒட்டிவர.இன்னோரு காரில் மற்றவர்கள் வந்தனர். பவன் நிலாவிடம்,
” அண்ணி ஹாப்பி மேரிட் லைப் வாழ்த்த” , “தேங் யூ” என்றாள் நிலா. காரில் பவன் பாட்டைபோட அதில்” நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நானங்கள் என் கண்ணிலே” பாட்டு வர.

“பவன்”, என்று ஈஷ்வர் கத்தினான் அமைதியா வரமாட்ட, “சாரி அண்ணா தெரியாத வந்திடுச்சு “சொல்லி நிறுத்த போனான்.

பவன் பாட்டை நிறுத்தாதே, எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு நிலா சொல்ல. ஈஷ்வர் முகத்தை சுளித்தான். ஏன் ஈஷ்வர் நாலு நிமிஷம் பாட்டு கேட்கட்டும். வீடு வரை அவனுக்கு போர் அடிக்காதா, நீ கேளு பவன், சவுண்ட் கொஞ்சம் குறைச்சிக்கோ அமைதியாக கூறினாள்.
நிலா வீட்டில் அனைவரும் மதியம் விருந்தை உண்டனர். மாலை பள்ளியிலிருந்து அங்கு பனிபுரியும் அனைவரும் வந்திருந்தினர். மணமக்களை வாழ்த்தி கிப்ட் கொடுத்தார்கள்.

இரவு ஈஷ்வர் வீட்டில் டின்னர், ராம் அன்றே பார்த்தி வீட்டில் தன் இருப்பிடத்தை மாற்றினார். முதலிரவு, ரூமில் அலங்கரிக்க வேணாம் என்று ஈஷ்வர் தன் தந்தையிடம் கட்டளையிட. பூக்கள் அலங்காரம் இல்லாமல் நீட்டாக இருந்தது ஈஷ்வர் ரூம்.

கட்டலில் காலை நீட்டி டீ சார்ட், ட்ராக் அணிந்து செல்லில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தான் நம்ம ஈஷ்வர். கமலாம்மா நிலாவை அலங்கரித்து தலையில் பூ வைத்தார். பிறகு “அழகா இருக்க பாப்பா” என் கண்ணே பட்டுட்டும். கையால் திருஷ்டி எடுத்தார்.

நிலா தன் அப்பா,மாமனாரிடம் ஆசிர்வாதம் வாங்கினாள்.
ராம் “நல்லாயிருடாம்மா, என் செல்லம் நல்லாயிருப்படா. பழையதை மறந்து புது வாழ்க்கையை ஆரம்பிக்கனும் நிலா. மாப்பிள்ளை மனச புரிந்து நடந்துக்கோ. சரி டைம் ஆயிடுச்சு நீ போம்மா”. தன் பெண்ணை கண்கலங்க பார்த்தார்.

“டேய் ராம் , என் பையன் நிலாவை நல்லா பார்த்துப்பான்டா. வா தூங்கலாம் காலையிலே எழுந்தது டயர்டா இருக்க வா”.

ரூமின் கதவை தட்டிவிட்டு கையில் பால் சொம்புடன் உள்ளே சென்றாள் நிலா. ரூமை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள். என்னவோ திருவிழா வந்த மாதிரி வேடிக்கை பார்க்குது பார். ஒரு அச்சம் ,நாணம் அப்படி ஏதாவது இருக்கா இவளுக்கு ஈஷ்வர் நினைத்தான்.

“என்ன சுத்தி பார்த்திட்டியா” ,

“ ம்ம் பரவாயில்ல ஈஷ்வர் ரூம கீளினா வச்சிருக்க”. அவன் அருகில் வந்தாள், “ஆங் ஈஷ்வர் இந்தா பால் கொடுக்க மறந்திட்டேன்”.

வாங்கி டெபில் மேலே வைத்தான் ஈஷ்வர். கட்டலுக்கு அந்த பக்கம் போய் உட்கார்ந்தாள் நிலா. சிறிதுநேரம் அமைதியாக இருந்தன, ஈஷ்வர் உனக்கு என்ன தோனுது பழைசு ஞாபகம் வருதா.

“இல்ல உனக்கு எப்படியிருக்கு , எனக்கு எதுவும் தோனல தூக்கமா வருது. அப்பறம் நான் உங்கள ஷார்ட்டா கூப்பிட்டா”.

என்ன கூப்பிடுவா மாமாவா, டார்லிங்கா ஈஷ்வர் நினைக்க.

“மகி.. ம்ம்.. மகி ஓகேவா”. நிலா மகின்னு சொன்னவுடனே அவளை பார்த்தான்.
“என்ன மகி நல்லாயில்லையா.ஷார்டா இரண்டு எழுத்து நிலா மாதிரி மகி சூப்பர்யில்ல.”

“சரி . ஆமாம் நீ இப்படித்தான் பேசிட்டே இருப்பியா, வள வளன்னு ,எனக்கு தலை வலிக்குது புரியுதா”.

”அது மகி பேசிட்டே இருந்தா தான் நான் நார்மலா இருக்கேன், இல்ல ஸ்ட்ரஸ் ஆயிடுவேன். எனக்கு அவ்வளவா பிரண்ட்ஸ் இல்ல. நான் ஒருத்திதான் இங்க பாரு உனக்கு பவன்.விக்கியெல்லாம் இருக்காங்க.”

எல்லோரும் எப்ப எழுந்துப்பாங்க மகி, ரோட்டின் ஓர்க் சொல்லு.

“நீ அவங்களுக்காக மாற வேண்டாம். நீ நீயா இரு”
”இல்ல, நான் மாற மாட்டேன் . என்னை எப்படி அட்ஜஸ்ட் செய்வாங்க” .

அவளை முறைக்க , ஐயோ எனக்கு தூக்கம் வருது.
“கீழ படுத்துக்கிறீயா நிலா”.

“ஏன் நான் உங்களை ஒண்ணு செய்ய மாட்டேன் . இங்க தான் தூங்குவேன். எனக்கு உன் மேல நம்பிக்கையிருக்கு”, சொல்லிட்டு படுத்தாள் நிலா.

சிறிது நேரத்தில் காலிங் பெல் அடிக்க, கீழே இறங்கி கதவை திறந்தான் ஈஷ்வர். விக்கி வெளியே நிற்க என்னடா மணி 11.30 ஆகுது எங்க போனே.

அண்ணா சினிமாவுக்கு , சாரிண்ணா தலையை குனிய,ச்சே இன்னிக்கு அண்ணாவுக்கு முதல் நைட் டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.
ஈஷ்வர் திரும்ப வந்து படுத்தான் தூக்கம் வர கண்ணசைந்தான்.
ஏதோ மேலே விழுந்த மாதிரி இருக்க கண்ணை திறந்து பார்த்தான்.

ஓ இந்த வாயாடி வேலையா இது, ஈஷ்வர் மேல் காலை போட்டிருந்தாள் நிலா. எப்படி எதுவுமே நடக்காத மாதிரி தூங்கறா, காலையெடுத்து விட்டான். கொஞ்சநேரத்தில் தோப்பேன காலை போட்டாள்.

ஐயோ ஜஸ்ட் மிஸ், நான் தூங்கன மாதிரி தான் இன்னிக்கு. சிறிது நேரத்தில் தூக்கத்தில் பினற்ற ஆரம்பித்தாள், அப்பா அழாத நான் கட்டிக்கிறேன், எங்கடா ஹோம் வர்க், நவின் பார்மலா சொ....
முழுச்சிட்டு இருந்தாலும் பேசறா, தூங்கனாலும் பேசறா ஈஷ்வர் ரொம்ப கஷ்டம்டா. நடுவில் தலையனை வைத்து படுத்தான்.
காலையில் ஐந்து மணிக்கே எழுந்து குளித்துவிட்டு விளக்கேற்றினாள் ,
கமலாவுக்கு உதவி செய்தாள். பின்பு மகி காப்பி சொல்லி ஈஷ்வரை எழுப்பினாள். குட் மார்னிங் மகி... சொல்ல.
“ம்ம் குட் மார்னிங், நானே கீழ வந்து காபியை குடிச்சிக்கிறேன் இந்த கணவனக்காக கடமை செய்யனும் அவசியமில்ல”.

“ஹோ இந்த நினைப்பு வேற இருக்கா மகி.நான் எல்லோருக்கும காபியை கொடுத்தேன் உனக்கு மட்டுமில்ல.”

“சரி குளிச்சிட்டு கீழே சாப்பிட வாங்க ,காலையில எழுந்து பார்த்தா என் மேல கால போட்டிருக்கீங்க. நம்பிதான உங்க பக்கத்தில படுத்தேன்”.

“அடிங்க நைட் எங்கடி தூங்க விட்ட என் மேல காலை போட்டுட்டு நான் போட்டேன் சொல்லுற இனிமே என் பக்கத்தில படுக்க கூடாது.போயிடு இங்கிருந்து”.

“ஐய்யோ தெரியாம கால போட்டிருப்பேன் அதுக்கு இப்படியா சண்டைக்கு வருவீங்க. உங்களுக்கு டிரஸ் எடுத்து வச்சிருக்கேன் குளிச்சிட்டு வாங்க.”

“அந்த வேலையெல்லாம் நீ செய்ய தேவையில்ல, என்ன ஓய்ப்ன்னு காமிக்கிறீயா”.

எதையும் காதில் வாங்காமல் சென்றாள் நிலா. எல்லோரும் டைனிங் டெபிளில் உட்கார்ந்திருந்தனர். “கல்யாணம் ஆகி முதல் நாள் அதான் எல்லோரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிடுறோம் அப்படிதானம்மா பார்த்தி ஆரம்பிக்க”.

“மாமா எப்பவும் காலையில சேர்ந்துதான் சாப்பிடுறோம் மாமா. ஆங் மகி வந்தாச்சு. அண்ணி அண்ணாவ என்ன சொன்னீங்க , பவன் கேட்க”.

பவன் ஷார்டா வைச்சேன் எப்படியிருக்கு புருவத்தை உயர்த்திக் கேட்க. அம்மா நிலா உன் மாமியார் சாந்தி அப்படிதான் ஈஷ்வர கூப்பிடுவா செல்லமா.

அப்படியா, எந்த ஒரு ரியாக்ஷனும் கொடுக்காமல் அப்படியே உட்கார்ந்திருந்தான் ஈஷ்வர். இட்லி , பூரி வைக்க, ராம் சாப்பிடாமல் உட்கார்ந்திருந்தார். கமலாம்மா சாம்பார், சட்னி எடுத்து வந்தார்.
ராம் சாப்பிடு என்ன யோசனை, பார்த்தி கேட்க, அது அது என்று தயங்க..

நிலா ராம் பக்கத்தில் வந்தாள். தன் கையால் இட்லி பிட்டு நிலாவுக்கு ஊட்டினார். எல்லோரும் இவன்களை பார்க்க, அது பார்த்தி நிலா, ஒரே பொண்ணுயில்லப்பா , சின்ன வயதிலே அவளுக்கு ஒரு வாய் ஊட்டிய பிறகு தான் சாப்பிடுவேன்.

மூன்று பிள்ளைகளும் பார்த்தியை முறைக்க, ஏய் அவர் ஒண்ணை பெத்திருக்காரு நான்..

நிலா பவன் அருகில் சென்று ஒரு வாய் பூரியை ஊட்டினாள். கண்கள் கலங்க தன் தாயாக நிலாவை பார்த்தான். சிறியவன் தன் தாய் இறக்குமபோது எட்டாம் வகுப்பு படிக்கும் பையன். இவனை தேத்தவே ரொம்ப பாடுப்பட்டார் பார்த்தி.

தேங்கஸ் அண்ணி..நிலா பவன் தலையை வருடினாள்.அய்யோ இங்க வானத்தை போல, பாசமலர் படங்கள் ஓட்டுறாங்களே விக்கி நொந்து போக.

சரவணா எங்கே என்று பார்த்தி கேட்க, ஆங் மாமா,மகி உங்க இரண்டுபேருக்கும் சொல்லனும் நினைச்சேன் . நான் சரவனாவ வேலைக்கு வேணாம் சொல்லிட்டேன். சரியா சமைக்க மாட்டறாரு. பாதி நாள் பவன் ஸ்கூல்ல சாப்பிடவே மாட்டான் மாமா. அதுவும் எனக்கு ஜென்ஸ் சமையலில் இருந்தால் ஒத்து வராது.

சரிம்மா உன் இஷ்டம் .பவன் இந்தா லன்ச் எடுத்திட்டு போ.லேமன் , உருளை வறுவல் உனக்கு பிடிக்குமே.

ஆமாம் அண்ணி. விக்கி உனக்கும் லன்ச் எடுத்து வச்சிருக்கேன் கமலாம்மா ரெடியா கொண்டுவாங்க

எனக்கு வேணாம் நான் என்ன சின்ன பையன்னா கேன்டின்ல்ல சாப்பிடுவேன். எதுக்கு வெளியே சாப்பிடுற நான் செஞ்சி வச்சிட்டேன்ல்ல எடுத்திட்டு போ. உனக்கு பிடிச்சா சாப்பிடு இல்ல யாருக்காவது கொடு.

வந்தவுடனே இவங்க தொல்லை தாங்க முடியில என்று முனகினான். அதை கேட்டுக்கொண்டே இருந்தான் ஈஷ்வர்.அப்பறம் ஈவனிங் 6.00 மணிக்கெல்லாம் இங்க வந்திடனும் .

எனக்கு கிளாஸ் இருக்கு, இது ஸ்கூல் இல்ல நீங்க ரூல்ஸ் போட...

நேத்து எத்தனை மணிக்கு வந்தே 12 மணிக்கு, வீடுன்னு தெரியும் ,ஸ்கூல்லா இருந்தா வெளியெ நிக்க வச்சிருப்பேன். கிளாஸ் இருந்தா போன் பண்ணிச்சொல்லு. இல்ல உங்க ப்ரோபஸரை நான் போன் பண்ணி கேட்கட்டும்மா.

வரேன் ,முறைத்துக்கொண்டே சென்றான் விக்கி.
நீங்களும் தான் ஆபிஸ் முடிந்தவுடன் நேரா வீட்டுக்கு வந்திடுங்க மகி. நிலா ரூமுக்கு கொஞ்சம் வறீயா-ஈஷ்வர்.
கையை கழுவிக்கொண்டு மேலே சென்றான்.

“டேய் பவன் என்னடா உன் அண்ணன் அமைதியா போறான். நேத்துதான் கல்யாணம் ஆயிருக்கு பாவம்டா உங்க அண்ணி”, கதவு டமால் என்று சாத்த.

“அப்பா எங்க மூன பத்தி உனக்கு தெரியாது , பாவம் அண்ணா”.
“சத்தம் போடுவான்டா ,ராம் என்ன நினைப்பான் மனசு கஷ்டமா இருக்குடா”.

“கொஞ்ச நேரம் வையிட் பண்ணி பாருங்க எனக்கு ஸ்கூல் டைம் ஆயிடுச்சு , நான் கிளம்புறேன்”.
------- நிலாவை பிடித்தேன்.
 
Top